Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு,கிழக்கு இணைக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது - வடக்கும் தெற்கும் இணையவேண்டும் என்கிறது ஜே.வி.பி.

Featured Replies

55-43bface6e439e9789ae4adbe4ad2f5cd3a03f43c.jpg
தமிழ் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு முன்­வைக்­கப்­படும் அர­சியல் தீர்­வா­னது வடக்­கையும் தெற்­கையும் இணைக்கும் இன ஒற்­று­மையைக் கட்­டி­யெ­ழுப்­பக்­கூ­டிய தீர்­வாக இருக்க வேண்­டுமே தவிர வடக்கு, -கிழக்கை இணைக்கும் இன­வாதத் தீர்­வாக அமை­யக்­கூ­டாது என ஜே.வி.பி.தெரி­வித்­துள்­ளது.

வடக்கு, கிழக்கை இணைக்கும் தீர்­வுக்கு கடு­மை­யாக எதிர்ப்பை வெளிப்ப­டுத்­து­வ­தா­கவும் அக்­கட்சி சுட்­டிக்­காட்­டி­யது.

புதிய அர­சியலமைப்பு தொடர்பில் மக் கள் விடு­தலை முன்­ன­ணியின் நிலைப்­பாட்டை  வின­வி­ய­போதே கட்­சியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறு­கையில்,

இலங்­கையின் இனப்­பி­ரச்­சினை மற்றும் நீண்­ட­கால அர­சியல் பொரு­ளா­தார பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு பெற்­றுக்­கொள்ள புதிய  அர­சி­ய­லமைப்புத் தேவை என முன்­வைக்கும் கருத்­துக்கு மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கு மாற்றுக் கருத்துக் கிடை­யாது. 1978 ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட சர்­வா­தி­கார அர­சியல் அமைப்பை மாற்­று­வ­தற்கே மக்கள் இந்த நல்­லாட்சி அர­சுக்கு ஆணை அதி­கா­ரங்­களை வழங்­கினர்.  

அதேபோல் அர­சி­ய­ல­மைப்பை மாற்றும் ஒரு பகு­தி­யா­கத்தான் 19ஆவது திருத்தச் சட்­ட­மூ­லமும் கொண்டு வ­ரப்­பட்டது. எனினும் 19 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு அப்பால் சென்று புதிய அர­சியல் அமைப்பை விரை­வாக கொண்டு வர­வேண்­டிய தேவை இப்­போது சக­ல­ராலும் உண­ரப்­பட்டு அதற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

குறிப்­பாக தேசிய பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு மற்றும் தேர்தல் முறை­மையில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வது உள்­ளிட்ட சிக்­க­லான விட­யங்­களை புதிய அர­சியல் அமைப்பில் ஏற்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும் என்­பதே அனை­வ­ரதும் முயற்­சி­யாகும். மக்கள் விடு­தலை முன்­னணி தீர்வு விட­யத்தில் ஆத­ரவை பெற்­றுத்­தரும். எனினும் நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைக்­கான தீர்வு எனும் விட­யத்தில் அர­சியல் தீர்­வா­னது முழு நாட்­டுக்கும் ஏற்ற வகையில் முழு மக்­க­ளுக்கும் ஒரு சிறந்த தீர்­வாக அமைய வேண்டும் என்­பதே எமது விருப்­ப­மாகும். தற்­போது உள்ள பிரச்­சி­னை­களை தீர்ப்­பது என்ற பெயரில் நாட்டில் புதிய பிரச்­சி­னை­களை உரு­வாக்கும் தீர்­வாக அது அமைந்­து­வி­டக்­கூ­டாது. சர்­வ­தேச தலை­யீ­டுகள் அல்­லது புலம்­பெயர் நபர்கள் அல்­லது எவ­ரையும் திருப்­திப்­ப­டுத்தும் தீர்­வு­களை ஏற்­ப­டுத்­தி­வி­டக்­கூ­டாது.

அர­சியல் தீர்வில் வடக்கு, - கிழக்கு இணைப்பு என்­பதை ஒரு­போதும் எம்மால் ஏற்க முடி­யாது. வடக்கு, - கிழக்கை இணைப்­ப­தை­விட வடக்­கையும் தெற்­கையும் இணைப்­பதே இன்­றைய தேவை­யாக உள்­ளது. சிங்­கள, -தமிழ் மக்கள் மத்­தியில் புரிந்­து­ணர்­வையும் ஒற்­று­மை­யையும் ஏற்­ப­டுத்­தி­யாக வேண்டும். அதி­லேயே உண்­மை­யான நல்­லி­ணக்கம் உரு­வாக்­கப்­படும். இப்­ப­டி­யான ஓர் அர­சியல் தீர்­வுதான் இந்த நாட்­டுக்குத் தேவை. இனங்­க­ளி­டையே ஒற்­று­மையைக் கட்­டி­யெ­ழுப்­பாது அவர்­க­ளி­டையே இணைப்பை ஏற்­ப­டுத்­தாது வெறும் இடங்­களை மாத்­திரம் இணைப்­பது இருக்­கின்ற பிரச்­சி­னையை மேலும் அதி­க­ரிப்­ப­தா­கவே அமையும். வடக்கு, கிழக்கு இணைப்பு என்­பது இன­வா­தத்தை பலப்­ப­டுத்தும். அதேபோல் பிரி­வி­னை­வாத கொள்­கைக்கு தீனி போடும் செயற்­பா­டாக அமைந்­து­விடும். ஆகவே வடக்கு, கிழக்கு இணைப்புக்கு மக்கள் விடு­தலை முன்­னணி ஆத­ரவை வழங்­காது.

 நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையில் இனி இலங்­கையில் ஜனா­தி­பதி தேர்தல் நடத்­தப்­படக் கூடாது. இதற்கு முன்னர் எல்லா ஜனா­தி­பதித் தேர்­த­ல்களிலும் நிறை­வேற்று அதி­கா­ர­மிக்க ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கே மக்கள் வாக்­க­ளித்­தனர். ஆனால் வெற்றி பெற்­றதும் ஜனா­தி­ப­திமார் மக்­களின் அந்த ஆணையை மீறி நடந்­த­துதான் இது­வரை காலமும் நடந்­துள்­ளது. நிறை­வேற்று அதி­கா­ர­மிக்க ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­தொ­ழிப்­பார்கள் என்று நம்பி முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான சந்­தி­ரி­கா­வுக்கும், மஹிந்­த­வுக்கும் ஆத­ரவு வழங்­கப்­பட்­டது.

ஆனால் அவர்கள் அந்த வாக்­கு­று­தியைக் காப்­பாற்­ற­வில்லை. இறு­தி­யாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் ஆத­ரவு வழங்கி அவரை வெற்­றி­பெற வைத்தோம். நிறை­வேற்று அதி­கா­ர­மிக்க ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­கான சில வேலை­களை நாம் செய்தோம். எவ்­வாறு இருப்­பினும் புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக நிறை­வேற்று அதி­கா­ர­மிக்க ஜனா­தி­பதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும்.நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதித் தேர்தல் இனி நடத்தப்படக்கூடாது.

அத்துடன் சகல கட்சிகளும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் தேர்தல் முறைமை மாற்றம் அமையப்பெற வேண்டும். பிரதான இரண்டு கட்சிகளும் தங்களை பலப்படுத்திக்கொண்டு சிறிய கட்சிகளை அழிக்கும் தேர்தல் முறைமைக்கு நாம் ஆதரவு வழங்கமாட்டோம். எனினும் தற்போது முன்வைக்கும் தேர்தல் முறைமை சகல கட்சிகளின் ஒத்துழைப்புடனும் கையாளப்பட்டு வருகின்றது என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-26#page-2

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு தான் சொல்வது... தமிழருக்கான தீர்வு என்ன என்பதை சர்வஜன வாக்கெடுப்பே தீர்மானிக்க வேண்டும்.

இந்த போக்கிலி அரசியல்வாதிகள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:
தமிழ் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு முன்­வைக்­கப்­படும் அர­சியல் தீர்­வா­னது வடக்­கையும் தெற்­கையும் இணைக்கும் இன ஒற்­று­மையைக் கட்­டி­யெ­ழுப்­பக்­கூ­டிய தீர்­வாக இருக்க வேண்­டுமே தவிர வடக்கு, -கிழக்கை இணைக்கும் இன­வாதத் தீர்­வாக அமை­யக்­கூ­டாது என ஜே.வி.பி.தெரி­வித்­துள்­ளது.

அதாவது

தமிழர்கள் இணைந்தால் ஆபத்து

சிங்களவர்களுடன் இணைந்தால் இன்பம்...

  • தொடங்கியவர்
3 hours ago, போல் said:

வடக்கு, கிழக்கு இணைப்பு என்­பது இன­வா­தத்தை பலப்­ப­டுத்தும்.

இலங்கையில் ஒன்றில் சிங்களம் இருக்க வேண்டும் அல்லது பௌத்தம் இருக்க வேண்டும். இரண்டும் இருந்தால் இனமதவெறிப் பயங்கரவாதமே தலைவிரித்தாடும்!

எனவே புதிய அரசியலமைப்பில் இரண்டில் ஒன்றை நாட்டைவிட்டு முழுமையாக அகற்றும் நடைமுறை இருக்க வேண்டும்! 

  • கருத்துக்கள உறவுகள்

போரின் போது புலிகளை பயங்கரவாதிகள் ஆக்கிக் கொண்டு எங்கள் பிரச்சனையில் மூக்கை நுழைத்த சர்வதேச சட்டாம்பிகள்.. போரின் பின் மெளனமாகி... தங்கட வியாபாரத்தை மட்டும் பார்க்கினம். அதனாலும்.. தான் நமக்குப் பிரச்சனை. அவயளை இதுக்க இழுத்து விட்டால் அன்றி.. சிங்களவனிடம்.. மயிலே மயிலே இறகு போடேன்னு.. கேட்டுப் பெற யாராலும் முடியாது. சிங்கள மயில் தமிழருக்கு இறகு என்ன எச்சமும் போடாது. tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

பாலா அண்ணை சொன்னதை அனுரகுமாரவுக்கு நினைவு படுத்த வேண்டும். சிங்களவரிடம் இருந்து தீர்வு பெறுவது  பிக்குவிடம் சீப்பு கேட்பது போல் என்றார்.tw_yum:tw_blush:

வடக்கு கிழக்கு இணைந்து தான் இருந்தது. அப்போ இனவாதம் இருந்ததாம். அது பிரிக்கப்பட்டதால் இனவாதம் போய்விட்டதாம். மீண்டும் இணைப்பதால் இனவாதம் வந்து விடுமாம்.

வடக்கையும் தெற்கையும் இணைப்பதில் தமிழர்கள் எப்போ எதிர்ப்பை தெரிவித்தார்கள்.?  புலிகளுக்கு முதல் இனச்சங்காரம் செய்தீர்கள். புலிகள் காலத்திலும் அதனையே இன்னும் கூடவாக செய்தீர்கள். இப்போ புத்தர் சிலைவைப்பு குடியேற்றம் இராணுவ முகாம்களை தமிழர் நிலத்தை அபகரித்து நிறுவுதல் என அசுரவேகத்தில் செய்கிறீர்கள்.  இப்போ யார் இனவாதிகள்? யார் வடக்கு தெற்கு இணைப்பை தடுக்கிறார்கள்? சந்தர்ப்பவாத அநுரகுமார திசநாயக்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.