Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'பிரபாகரன் இருந்திருந்தால் பிரதமராகியிருப்பாா்'

Featured Replies


'பிரபாகரன் இருந்திருந்தால் பிரதமராகியிருப்பாா்'
 
 

article_1482912208-1.jpg-எஸ்.என்.நிபோஜன்

“விடுதலை புலிகளின் தலைவா் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று அவா்  பிரதமராகியிருப்பாா்”என சிறுவா், பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த செப்டெம்பா் மாதம் தீயினால் எரிந்து அழிந்துபோன கிளிநொச்சி பொதுச் சந்தை வியாபாரிகளுக்கு  நட்டஈடு இன்றைய தினம், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

- See more at: http://www.tamilmirror.lk/188764/-ப-ரக-ரன-இர-ந-த-ர-ந-த-ல-ப-ரதமர-க-ய-ர-ப-ப-#sthash.T2ee9sUe.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

"பிரகாரன் இருந்திருந்தால் பிரதமராகியிருப்பாா்"

விடுதலை புலிகளின் தலைவா் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று அவா்  பிரதமராகியிருப்பாா்”என சிறுவா், பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். 

IMG_0189.JPG

கடந்த செப்டெம்பா் மாதம் தீயினால் எரிந்து அழிந்துபோன கிளிநொச்சி பொதுச் சந்தை வியாபாரிகளுக்கு  நட்டஈடு இன்றைய தினம், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

பிரதமா் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைத்த அழிவை மகிந்த ராஜபக்ஷ முடித்து வைத்ததாக இங்கு சில அரசியல் வாதிகள் பேசுகின்றனா். ஆனால் அவ்வாறு இனவாதம் பேசுவதனால் நமக்கு கிடைப்பதும் கிடைக்காது போய்விடும். இப்படி இனவாதம் பேசாது இந்த நல்லாட்சி அரசின் மூலம் எதை பெற்றுக்கொள்ள முடியும் எதை பெற்றுக்கொள்ள முடியாது என்பதை அறிந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தாா்.

தெற்கிலும் சரி வடக்கிலும் சரி இனவாதம் பேசுவதனால் எமது சந்ததிதான்  பாதிப்படைகிறது. எமது நல்லாட்சியில் மக்களுக்கான நல்ல விடயங்களே இடம்பெற்று வருகிறது. எனவும் குறிப்பிட்டாா்

http://www.virakesari.lk/article/14840

 

 

 

 

கிளிநொச்சி சந்தையில் தீயினால் எரிந்த 122 வியாபாரிகளுக்கு 71 மில்லியன் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது

IMG_0206.jpg

கடந்த செம்ரெம்பா் மாதம் தீயினால் எரிந்து அழிந்துபோன கிளிநொச்சி பொதுச் சந்தை வியாபாரிகளுக்கு இன்று 28-12-2016 நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றம், புனா்வாழ்வு,  சிறைசாலைகள் மறுசீரமைப்பு,  இந்து சமய  விவகார அமைச்சா் டிஎம் சுவாமிநாதனினால் 122  சந்தை வியாபாரிகளுக்கு 71 மில்லியன் ரூபாக்கள் நட்டஈடாக  வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை  பத்து முப்பது  மணிக்கு  கிளிநொச்சி மாவட்டச் செலயகத்திறகு சென்ற  அவா் அங்கு மாவட்டச் செயலாளா் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போதே  தீயினால் எரிந்த சந்தை வியாபாரிகளுக்கு நட்டஈட்டை வழங்கி வைத்துள்ளாா்.
IMG_0126.jpg
அந்த வகையில்  44 ஆடம்பரப்பொருள் விற்பனைக் கடைகளுக்கும், 53 புடவை கடைகளுக்கும்,22 பழக் கடைகளுக்கும்,2 தையல் கடைகளுக்கும், 01 தேனீா் கடைக்கும்  நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது. இதில் 15  இலட்சம் ரூபா  வீதம்நட்டஈடு 19 வியாபாரிகளுக்கும், பத்து இலட்சம் ரூபா வீதம் 13 பேருக்கும்,  ஜந்து இலட்சம் ரூபா வீதம் நட்டஈடு 40 வியாபாரிகளுக்கும், வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு ஏனைய வியாபாரிகளுக்கு மூன்று இலட்சம், இரண்டு இலட்சத்து ஜம்பதாயிரம், ஒரு இலட்சம் என வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
IMG_0167.jpg

இந்த நிகழ்வில் அமைச்சருடன் வட மாகாண ஆளுநா் றெஜினோல்ட் குரே,   இராஜாங்க  அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினா் சி. சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் மு. சந்திரகுமாா்,  அரச அதிபா் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரச அதிபா் சத்தியசீலன்,   கரைச்சி  பிரதேச செயலாளா் கோ. நாகேஸ்வரன்,  உள்ளுராட்சி உதவி ஆணையாளா் பிரபாகரன், கரைச்சி பிரதேச  செயலாளா் க.கம்சநாதன்,வியாபாரிகள் என பலா் கலந்துகொண்டனா்.

IMG_0131.jpgIMG_0189.jpgIMG_0199.jpg

http://globaltamilnews.net/archives/11946

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

பிரதமா் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைத்த அழிவை மகிந்த ராஜபக்ஷ முடித்து வைத்ததாக இங்கு சில அரசியல் வாதிகள் பேசுகின்றனா். ஆனால் அவ்வாறு இனவாதம் பேசுவதனால் நமக்கு கிடைப்பதும் கிடைக்காது போய்விடும். இப்படி இனவாதம் பேசாது இந்த நல்லாட்சி அரசின் மூலம் எதை பெற்றுக்கொள்ள முடியும் எதை பெற்றுக்கொள்ள முடியாது என்பதை அறிந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தாா்.

தெற்கிலும் சரி வடக்கிலும் சரி இனவாதம் பேசுவதனால் எமது சந்ததிதான்  பாதிப்படைகிறது. எமது நல்லாட்சியில் மக்களுக்கான நல்ல விடயங்களே இடம்பெற்று வருகிறது. எனவும் குறிப்பிட்டாா்

http://www.virakesari.lk/article/14840   

 

மக்களின் வரிப்பணம் அல்லது அரசபணம் அல்லது வெளிநாட்டுகடன் போன்ற ஏதோவொன்றை வைத்தே இவை நடக்கிறது. அம்மணி ஏதோ வீட்டுப்பணத்திலை நிவாரணம் கொடுப்பதுபோலவும் தமிழர்களின் பகுதியில் தேனும் பாலும் ஓடுவதுபோலவும் ஆலோசனை சொல்கின்றார். மக்களின் வரிப்பணம் அல்லது அரசபணம் அல்லது வெளிநாட்டுகடன் போன்ற ஏதோவொன்றை வைத்தே இவை நடக்கிறது. அம்மணி ஏதோ வீட்டுப்பணத்திலை நிவாரணம் கொடுப்பதுபோலவும் தமிழர்களின் பகுதியில் தேனும் பாலும் ஓடுவதுபோலவும் ஆலோசனை சொல்கின்றார். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நவீனன் said:

விடுதலை புலிகளின் தலைவா் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று அவா்  பிரதமராகியிருப்பாா்”என சிறுவா், பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். 

போனமாம் தேத்தண்ணிக்கடையை திறந்தமாம் தேத்தண்ணியை குடிச்சமாம் வந்தமாம் எண்டு இருங்கோ தாயே......

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:



'பிரபாகரன் இருந்திருந்தால் பிரதமராகியிருப்பாா்'
 

உங்களுக்கும் பிரபாகரனுக்குமான  வித்தியாசத்தையே உங்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை அம்மணி

நாடகங்களை தொடருங்கள்

ஆனால் நிஐம் அவர் ஒன்று தான்

கடந்த 7 வருடங்களாக அவரது நிழலைக்கூட செயல்களால்  உங்களால் தொடமுடியவில்லை

 

Edited by விசுகு

  • தொடங்கியவர்

விஜயகலா முன்வைத்த கருத்து ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடா? 

Published by Pradhap on 2016-12-29 15:59:56

 

(ஆர்.யசி )

பிரபாகரனை நியாயப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முன்வைத்த கருத்து ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடா? பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தாக கருதமுடியுமா என விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரிவினைவாத நிலைப்பாட்டுக்கும் அப்பால்சென்ற ஒரு பிரிவினைவாத நிலைப்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

asdad1.jpg

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இன்று நிதிக் குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவின் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் விஜயகலா மகேஸ்வரன் முன்வைத்த கருத்து தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

தனிப்­பட்ட கூற்­றையே விஜ­ய­கலா விடுத்­துள்ளார்

 

தேர்­தலை இலக்­கு­ வைத்­த­தாக இருக்­கலாம் என்­கி­றது ஐ.தே.க.  
(பா.ருத்­ர­குமார்)

இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் பிர­பா­கரன் தொடர்பில் கூறிய கருத்து அவ­ரது தனிப்­பட்ட கருத்­தாகும். அது கட்­சியின் நிலைப்­பா­டா­காது. அவர் கூறிய கருத்து தேர்­தலை இலக்கு வைத்­த­தாகக் கூட இருக்­கலாம் என ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நலின் பண்­டார தெரி­வித்தார். 

மேலும் பிர­பா­கரன் எவ்­வா­றா­ன­வ­ரென்­பது தொடர்பில் இந்­நாட்டு மக்­க­ளுக்கு கூறி விளக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. எனவே இவ்­வா­றான தனிப்­பட்ட கருத்­துக்­களை விடுத்து தற்­போது ஐக்­கி­யத்­துடன் வாழும் தமிழ் சிங்­கள முஸ்லிம் மக்­களின் நல­னுக்­காக போராட வேண்­டு­மெ­னவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மைக்­கா­ரி­யா­ல­யத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­ளாளர் மாநாட்டில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­ய­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில்,

பிர­பா­கரன் தற்­போது இருந்­தி­ருந்தால் பிர­த­ம­ராக இருப்பார் என .இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா தெரி­வித்­தி­ருந்தார். ஆனால் பிர­பா­கரன் என்ன செய்தார் அவர் எவ்­வா­றா­னவர் என்­பது நம் அனை­வ­ருக்கும் தெரியும். அவர் பிர­த­ராக இருப்­பாரா அல்­லது இருக்­க­மாட்­டாரா என்­பது தற்­போது பிரச்­சினை இல்லை. மக்­களின் ஐக்­கி­யத்­துக்­காக செயற்­பட வேண்­டிய செயற்­பா­டு­களே தற்­போது முக்­கி­ய­மாகும்.

தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புக்கும் தமிழ் மக்­க­ளுக்கும் தேவை­யா­னதை நாம் அடை­யா­ளப்­டுத்தி வரு­கின்றோம். இவ்­வா­றான நிலையில் பிர­பா­கரன் பிர­த­ம­ராக இருப்பார் என்ற விடயம் எங்­க­ளுக்கு தேவை­யில்­லாத கூற்­றாகும். தனிப்­பட்ட வகையில் அவர் அந்த கருத்தை கூறி­யி­ருக்­கின்றார். அக்­கூற்று தொடர்பில் கருத்து தெரி­விக்க நாம் விரும்­ப­வில்லை.

தேர்தலை இலக்குவைத்து நடத்தப்பட்ட நாடகமாகவே நாம் இதனை கருதுகின்றோம். கட்சியின் நிலைப்பாடு இதுவல்ல. வடக்கு மக்களை தேர்தல் இலக்கு வைத்து கூறிய கருத்தே இதுவாகும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-30#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.