Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண் வீடு

Featured Replies

  • தொடங்கியவர்

அமுக்கப்பட்ட மண்கற்கள் மழையில் இலகுவாகக் கரைந்து விடாது.  இவற்றின் மேற்பரப்பு இறுக்கமாகவும் நேர்த்தியாகவும் இருப்பதால் நீர் இலகுவாக உள்ளே நுளைய முடியாது. ஆபிரிக்காவில் இவற்றைக் கொண்டு வெளி மதில்கள் அமைக்கப்படுகின்றன. 

இவற்றின் திணிவு சீமெந்துக் கற்களை விட அதிகமாக இருப்பதுடன் கட்டப்படும் சுவர்கள் அதிகம் தடிப்பாகவும் இருப்பதால் சிறந்த ஒலித் தடுப்பாற்றலையும் வெப்பத் தடுப்பாற்றலையும் கொண்டுள்ளதுடன் உடைப்பதும் கடினமானதாக இருக்கும்.

சுவரை அமைக்கும்போது கீழுள்ள முறையில் கற்களை அடுக்கி தடிப்பான சுவரை அமைக்க வேண்டும். சிலர் இரண்டு கற்களாக அடுக்குவதற்குப் பதிலாக மூன்று கற்களாகவும் அடுக்குவார்கள். வெளிப்புறத்தில் வரும் மூன்றாவது அடுக்கினை இவ்வாறு அழகாக அடுக்கிக் கொள்ளலாம்.
mur5-boutisse.jpg

இக் கற்களை அரிந்து கொள்வதற்குக் கையால் இயக்கப்படும் இயந்திரத்தை ஐரோப்பிய நாடுகளில் சுமார் 800 முதல் 5000 யூரோக்களுக்கு வாங்க முடியும். விலைக்கேற்றவாறு இயந்திரங்களின் திறனும் மேறுபடும். கீழுள்ள இந்த இயந்திரத்தை 3 பேர் சேர்ந்து - ஒருவர் மண்ணை நிரப்பவும் இன்னொருவர் அமுக்கம் செய்யவும் மூன்றாமவர் கற்களை அடுக்கவும் ஒரு நாளில் 400 கற்களை உருவாக்கிக் கொள்ளலாம். 
https://www.youtube.com/watch?v=QtlFTwKnzdA
சிலர் மண்ணுடன் 5 வீதம் சீமெந்தையும் சேர்த்துக் கொள்கின்றனர்.

இந்தக் காணொலியில் மின்சார இயந்திரம் இலகுவாகவும் விரைவாகவும் கற்களை உருவாக்குவதைப் பார்க்கலாம். இவ்வகை இயந்திரம் ஒன்றின் விலை ஏறத்தாள 7000 முதல் 15000 யூரோக்கள் ஆகும்.
https://www.youtube.com/watch?v=mSWx21P6xZg

இக் கற்கள் வர்த்தக முறையில் தயாரிக்கப்பட்டு அதிக விலைக்கு ஐரோப்பாவில் விற்கப்படுகின்றன. 

எனது தெரிவு 100 வீதம் இயற்கையானதும் இலவசமானதுமான Adobe கற்களே. இன்று யாழ்ப்பாணத்தில் கட்டப்படும் மாடி அற்ற சாதாரணமான விசாலமான வீடொன்றைக் கட்டிக்கொள்ள Adobe கற்கள் பொருத்தமானவை. 

அடுத்ததாகச் சுவருக்கு அழகையும் பாதுகாப்பையும் தரும் பூச்சுக்களைப் பார்ப்போம்.

- தொடரும்

  • Replies 59
  • Views 20.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
On 6 février 2017 at 6:21 PM, ஜீவன் சிவா said:

பதிலுக்கு நன்றி இணையவன் 

முயற்சியில் உள்ளேன் - தேவைப்படும்போது உங்களிடமும் தொழில்நுட்ப உதவி கோருவேன்.

வெற்றிபெற்றால் பகிருவேன்.

உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.
எனக்குத் தெரிந்த அளவு நிச்சயமாக உதவுகிறேன்.

வெற்றியோ இல்லையோ உங்கள் அனுபவத்தைப் பகிருங்கள், யாருக்காவது பயனுள்ளதாக இருக்கும்.

  • 9 months later...
  • தொடங்கியவர்

நீண்ட இடைவேளைக்குப் பின் எனது சிறு அனுபவத்துடன் மீண்டும் தொடர்கிறேன். :11_blush:

தொடர்வதற்கு முன் இது இன்னொரு உதாரணம். சீனாவில் அமைக்கப்பட்ட மண் வீடு. இதில் 5 வீதம் சீமெந்து பாவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
china-house.jpg

சில வருடங்களுக்கு முன்னர் மண் கட்டுமாண முறைகளைப் பற்றி அறிய முற்பட்டபோது நானும் அதனைச் செய்து பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது. புதிதான வீடு கட்டும் அளவுக்கு வசதியும் நேரமும் இல்லை. ஆகவே ஒரு சுவர் மட்டும் கட்டிப் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.:11_blush:

அறை ஒன்றில் ஏற்கனவே உள்ள சீமெந்துச் சுவருக்கு உட் பக்கமாக இன்னொரு சுவரை மண்ணால் கட்டுவதற்குத் தீர்மானித்தேன். ஒன்றுக்கும் பயனில்லாமல் அறைக்குள் இருக்கும் சுவருக்கு மேல் இன்னொரு சுவர் கட்டுவது பைத்தியக்காரத் தனம் என்று நீங்கள் கருதலாம். இதோ விளக்கம்.

மண்ணானது வெப்பத்தை உறிஞ்சி மெதுமெதுவாக வெளிவிடும் ஆற்றல் உள்ளதாகப் பார்த்தோம். inertie thermique என்று பிரெஞ்சு மொழியில் சொல்வார்கள். குளிர்காலத்தில் இந்த உட்சுவரை மெதுவாகச் சூடாக்கினால் அதன் வெப்பம் இந்த அறையை வெப்பமாக வைத்திருக்கும். வீட்டைச் சூடாக்கும் ரேடியேற்றர்கள் பிரதானமாக இரண்டு விதமாக இயங்கும். 

1 - Convection - றேடியேற்றர் சூடாகி அதன் அருகிலுள்ள வளியைச் சூடாக்க, சூடான காற்று மேல் எழ, குளிரான காற்று றேடியேற்றரை நோக்கி நகரும். இது சுழற்சியாக நடக்கும்.

2 - Radiation - றேடியேற்றரின் வெப்பமான மேற்பகுதியிலிருந்து வெப்பக் கதிர்வீச்சு தெறித்து அக் கதிர் தொடும் பொருளைச் சூடாக்கும். 

மேலதிகத் தகவல்களுக்கு நன்றி இசைக்கலைஞன் 

 

Convection மூலம் சூடாக்குவதற்கு ரேடியேற்றரை அதிக வெப்பமாகச் சூடாக்க வேண்டும். வெப்பத்தைக் குறைக்க வேண்டுமானால் றேடியேற்றரின் அளவைப் பெரிதாக்க வேண்டும். இப்படியே றேடியேற்றரின் அளவைப் பெரிதாக்கியபடி வெப்பத்தைக் குறைத்துக் கொண்டு சென்றால் ஒரு கட்டத்தில் றேடியேற்றர் காற்றை வெப்பமாக்கும் திறனை இழந்துவிடும். கதிர்வீச்சு மூலம் மட்டும்தான் வெப்பமாக்கும். அறையின் ஒரு சுவர் அளவில் ஒரு றேடியேற்றர் உள்ளதாகக் கற்பனை செய்து பாருங்கள். அதனை சுமார் 25 - 28 °C ற்குச் சூடாக்கினால் போதுமானது.

Convection மூலம் அறை ஒன்றின் வெப்பநிலையை ஏறத்தாள 19°C யில் வைத்துக் கொள்வோம். கதிர்வீச்சு மூலம் அதே அறையை 15 °C யில் வைத்திருந்தால் போதுமானது. ஏனென்றால் அறைக்குள் இருப்பவர் மீது வெப்பக் கதிர் படும்போது வெப்பத்தை உணர்ந்து கொள்வார்.

அடுத்து, செய்முறையைப் பார்ப்போம்.

- தொடரும்

  • தொடங்கியவர்

இதுதான் திட்டம்.
ஏற்கனவே இருந்த வெப்பத் தடுப்பை மேலும் இன்னொரு வெப்பத் தடுப்பை அமைப்பதன் மூலம் வெப்பம் விரயமாதலைத் தடுத்தல். அதன்மேல் அலுமினியத் தாள்களால் ஆன தடுப்பொன்றை அமைத்தல். இந்தத் தாள்கள் பளபளப்பாக இருப்பதால் மண்சுவரிலிருந்து வெளியாகும் வெப்பக் கதிர்களைத் தெறிக்க வைத்து மீண்டும் அறைப் பக்கமே திருப்பிவிடும். அதன்மேல் நீர்க் குழாய் ஒன்றை வளைவுகளாகப் பதித்து மண்ணினால் மூடுவது.

 

mur-detail.png

அறை வீட்டின் கூரைப் பகுதியில் இருந்ததால் சுவரின் ஒரு பகுதி சரிவாக உள்ளது. அடுத்து சூடாக்கப்பட வேண்டிய சுவர், ஜன்னலைப் பார்க்கும் படி இருக்கக் கூடாது. ஜன்னல் கண்ணாடியூடாக வெப்பக் கதிர்வீச்சு வெளியேறும் என்பதால் ஜன்னல் இருக்கும் சுவரையே தேர்ந்தெடுக்க வேண்டி வந்தது. அத்துடன் மாடியில் அமைந்திருந்ததால் சுவரைத் தாங்கும் பலம் உள்ளதா என்றும் கவனிக்க வேண்டும். இந்த அறையின் தரைப்பகுதியானது இச் சுவருக்குக் குறுக்காக தீராந்திகள் அடுக்கப்பட்டு சீமெந்தினால் கட்டப்பட்டதால் பிரச்சனை இல்லை. சுவரின் நிறையான சுமார் 1400 kg இனைத் தாங்கும். தரையின் தீராந்திகள் சுவரின் நீளப்பாட்டுக்கு வத்துக் கட்டப்பட்டிருந்தான் தாங்குவது கடினம்.

chauffage_mur_01.jpg

இதோ துளைகள் போடப்பட்டிருக்கும் இந்தச் சுவர்தான், வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பயனுள்ள விடங்கள் இதுவைக்கும் இந்த திரியை நான் கவனிக்கவில்லை ....... நன்றிகள் இணையவன். 

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஊரில் உள்ள கணிமண் கால போக்கில் 
மழை நீரில் கரைவதுண்டு ...
எப்படி கரையாமல் தடுப்பது ? 

  • தொடங்கியவர்
On 16 décembre 2017 at 7:35 AM, Maruthankerny said:

எமது ஊரில் உள்ள கணிமண் கால போக்கில் 
மழை நீரில் கரைவதுண்டு ...
எப்படி கரையாமல் தடுப்பது ? 

சுவரில் நேரடியாக மழைநீர் படாமல் கூரையை வடிவமைக்க வேண்டும். அல்லது நீர் படும் இடங்களில் மட்டும் களிமண்ணுடன் நீமெந்தையும் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம். சிலர் இயற்கையில் கிடைக்கும் கற்களையும் சேர்த்துக் கட்டுவார்கள்.

சீனப் பெருஞ்சுவரின் பெரும் பகுதி ஆரம்பத்தில் களிமண்ணால் அமைக்கப்பட்டது. சில வருடங்களின் பின்னர்தான் செங்கல் பாவிக்க ஆரம்பித்தார்கள்.

  • தொடங்கியவர்

வெப்பத் தடுப்பைத் தாண்டி சீமெந்துச் சுவரில் துளையிட்டு புரியுள்ள நீளக் கம்பிகள் பொருத்தப்பட்டன. 

chauffage_mur_04.jpg

ஏற்கனவே என்னிடம் மேலதிகமான வெப்பத் தடுப்புகள் இருந்ததால் அவற்றைப் பாவித்துள்ளேன். 

chauffage_mur_06.jpg

அதன்மேல் அலுமினியத் தாள்களால் மூடப்பட்டது. மிகக் குறைந்த விலையுள்ள தாள்களைப் பயன்படுத்தலாம். 1 சதுர மீற்றர் 2.5 யூரோவிற்குக் கிடைக்கும். சுமார் 10 சதுர மீற்றர்கள் தேவைப்பட்டன.  

chauffage_mur_07.jpg

இதன்மேல் சுவரில் பொருத்திய கம்பிகளை இணைத்து உலோகப் பட்டைகள் பொருத்தப்பட்டன.  இது அவசியமற்றது. என்னிடம் இது இருந்ததால் பாவித்தேன். இல்லையேல் கட்டடங்களில் பாவிக்கப்படும் சாதாரண இரும்புக் கம்பி வலை அல்லது சிறிய பலகைகளைப் பொருத்தலாம். 

chauffage_mur_10.jpg

சுண்ணாம்புத் தகடுகளும் என்னிடம் இருந்தபடியால அவற்றை உலோகப் பட்டைகளில் வைத்துச் சிறிய ஆணிகளால் பொருத்தப்பட்டது. இதுவும் தேவையில்லாதது.

chauffage_mur_12.jpg

சுண்ணாம்புத் தகட்டின் மேல் சுடுநீர்க் குழாய் வளைவாகப் பொருத்தப்பட்டது. இக் குழாய்களின் உட்புறமும் வெளிப்புறமும் பிளாஸ்டிக்கால் ஆனது. இடையில் அனுமினியம் உள்ளது. ஆகவே குளாயை இலகுவாக வளைக்கலாம். வளைத்தபின் குழாய் நேராகாமல் அப்படியே வளைவுடன் இருக்கும். 16 மில்லிமீற்றர் விட்டமுள்ள 50 மீற்றர் நீளமான குழாய் 40 யூரோக்களுக்கு வாங்கலாம். இதனைச் சுவற்றுடன் இணைக்கும் சிறு தகடுகளும் ஆணியும் 4 யூரோக்கள். சுண்ணாம்புத் தகடு பதிக்காவிட்டால் நேரடியாகக் கம்பி வலையில் அல்லது பலகையில் வைத்துக் கம்பியால் அல்லது நூலினால் கட்டலாம்.

chauffage_mur_14.jpg

chauffage_mur_15.jpg

தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

மேலுக்கு சுண்ணாம்பு பூச்சு பூசினால் நீண்ட காலத்துக்கு பாதிப்பு வராது....!

Image associée

  • 2 years later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/10/2017 at 2:13 PM, இணையவன் said:

எனது மிகச் சிறிய அனுபவம் ஒன்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என்றோ ஒரு நாள் 100 வீதம் இயற்கையான பொருட்களைக் கொண்டு நானே ஒரு வீடு கட்டிக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையையும் ஆவலையும் இந்த அனுபவம் தந்துள்ளது.

சார் கட்டத்தொடங்கின வீடு கட்டி முடிஞ்சுதா?
பால் காய்ச்சியாச்சா? 😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.