Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பொலிஸார் இலஞ்சம் பெறுவதாக எவரும் முறையிடுவதில்லை-பொலிஸ் அத்தியட்சகர் கணேசராஜா

Featured Replies

யாழில் பொலிஸார் இலஞ்சம் பெறுவதாக எவரும் முறையிடுவதில்லை-பொலிஸ் அத்தியட்சகர் கணேசராஜா
 
 
யாழில்  பொலிஸார் இலஞ்சம் பெறுவதாக எவரும் முறையிடுவதில்லை-பொலிஸ் அத்தியட்சகர் கணேசராஜா
பொலிஸார் இலஞ்சம் பெறுகின்றார்கள் என அனேகர் கூறுகின்ற போதிலும் அது தொடர்பிலான முறைப்பாடுகள் யாழில் கிடை க்கப்பெறுவதில்லை என யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசராஜா தெரிவித்தார்.
 
யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டம் நேற்று யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இதன்போது வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  கணேசநாதன்  மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கை யில்
 
யாழில் கடமையிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்சம் பெறுவதாக மக்கள் கூறி வருகின்ற போதிலும் யாழில் இவை தொடர்பில் ஒரு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. மக்களின் ஒத்துழைப்பின்றி பொலிஸாரால் செயற்பட முடியாது. இளவாலையில் சமீபத்தில் இடம்பெற்ற குற்றச்சம்பவத்தின் போது பொதுமகன் ஒருவர் தனது தொலைபேசியில் எடுத்த வீடியோவாலேயே குற்றவாளிகள் பிடிபட்டனர் இதேபோல் நான் கொழும்பில் சேவையில் ஈடுபட்டிருந்த சமயம் 119 இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இதில் போக்குவரத்து துறை பொலிஸார் இலஞ்சம் பெறுவதாக தெரிவித்தனர்.
 
நாம் உடனடியாக குறித்த பொலிஸாரை அழைத்து சோதனையிட்டோம்  இதில் அவர்கள் தமது சப்பாத்தின் சொக்சினுள் இல ஞ்சப்பணங்களை ஒழித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவர் 11 ஆயிரம் ருபாயும் , மற்றவர் 9 ஆயிரம் ருபாயும் வைத்தி ருந்தனர். 
 
அவர்களில் ஒருவருடைய கைப்பைக்குள் இருந்து ஆண் உறையும் மீட்கப்பட்டது. பின்னர் இரு பொலிஸாரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
 
பொலிஸ் உத்தியோகத்தர் கடமைக்காக பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறும் போது எவ்வளவு பணம் கொண்டு செல்கின்ற னர் என பதிவேட்டில் பதிவு செய்யப்படும். எனவே அவர்கள் இலஞ்சம் பெற்றால் பரிசோதனை செய்வதன் மூலம் கண்டு பிடித்துவிட முடியும் எனவே பொலிஸாரின் மீறல்கள் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்தால் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

http://www.onlineuthayan.com/news/22534

  • கருத்துக்கள உறவுகள்

 

" பின்னர் இரு பொலிஸாரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்"

விளக்கமறியல் சும்மா பம்மாத்து-அப்புறமா நடந்த கதையை சொல்லுங்கசார். என்ன ஒரு 10 வருடம் சிறைத்தண்டனை - சரி விடுவம் ஒரு 2 வருடம்?

"பொலிஸ் உத்தியோகத்தர் கடமைக்காக பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறும் போது எவ்வளவு பணம் கொண்டு செல்கின்ற னர் என பதிவேட்டில் பதிவு செய்யப்படும். எனவே அவர்கள் இலஞ்சம் பெற்றால் பரிசோதனை செய்வதன் மூலம் கண்டு பிடித்துவிட முடியும் எனவே பொலிஸாரின் மீறல்கள் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்தால் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்."

ஐயோ இந்தப் பகிடிக்கு தரையில் விழுந்து புரண்டு சிரிக்கவேணும் போல் இருக்கு.!!!

 

இலஞ்சம் பெறுவதைப் பற்றி அந்த இலஞ்சம் பெறும் கும்பலிடமே யாராவது போய் முறைப்பாடு செய்வார்களா?

கொலை செய்த கும்பலிடம் சென்று இந்த கும்பலைச் சேர்ந்த இன்னார், இன்னார் தான் கொலை செய்தார்கள் என்று யாராவது முறைப்பாடு செய்வார்களா?

கணேசராஜாவின் மானம்கெட்ட பிழைப்பு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.