Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவில் இன்று சிறீலங்கா தொடர்பான விவாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நாவில் இன்று சிறீலங்கா தொடர்பான விவாதம்

சிறுவர்களும், ஆயுதமோதல்களுக்குமான ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதியான அலன் றொக் கடந்த ஆண்டு சிறீலங்காவிற்கு மேற்கொண்ட 10 நாள் விஜயம் தொடர்பான அறிக்கையை இன்று ஐ.நா பாதுகாப்புச் சபையின் செயற்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

றொக்கின் சிறீலங்கா விஜயத்தின் போது சிறீலங்கா அரசின் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் படைக்கு சிறுவர்களை சேர்ப்பதாகவும். அதற்கு அரசு ஆதரவு வழங்கிவருவதாகவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளது எனவும் தெரிவித்திருந்தார். சிலசமயங்களில் அரச படைகள் கருணா குழுவினருக்கான சிறார்படை சேர்ப்பில் நேரடியாக பங்குபற்றியதாகவும் அவர் கூறியிருந்தார்.

சிறீலங்காவில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதில் உள்ள தடைகளை நீக்குதல், போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான உறுதிப்பாடுகளை சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் இருந்து கோருதல் அல்லது குறிப்பிட்ட தரப்புக்கள் மீது சில தடைகளை கொண்டுவர சிபார்சு செய்தல் என்பன இந்த அறிக்கையில் இருக்கலாம் என பாதுகாப்புச் சபைத் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.

எனினும் றொக்கின் அறிக்கை ஐ.நா பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்கப்படும் வாரத்தில் சிறீலங்கா அரசு ஏனைய 60 நாடுகளுடன் இணைந்து சிறுவர் படைச்சேர்ப்பை முடிவுக்கு கொண்டுவருதல் மற்றும் படைகளில் உள்ள சிறுவர்களை விடுவித்தல் என்னும் ஆவணத்தை பிரான்ஸ் இல் நடைபெற உள்ள கூட்டத்தில் தயாரிக்க உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறுவர்களும், ஆயுதமோதல்களுக்குமான ஐ.நாவின் அமைப்பு மற்றும் யுனிசெப்ஃ ஆகியவற்றை அண்மையில் தொடர்பு கொண்ட கருணா தாம் தமது படைகளில் சிறுவர்களை சேர்ப்பதை நிறுத்துவதாகவும், படைகளில் உள்ள சிறுவர்களை விடுவிக்கப்போவதாகவும் தெரிவித்ததாக ஐ.நா செயலாளர் நாயகத்தின் கீழ் சிறுவர்களும், ஆயுதமோதல்களுக்குமான ஐ.நா அமைப்பில் பணிபுரியும் ராதிகா குமாரசாமி தெரிவித்துள்ளார்

-புதினம்

ஐ.நாவில் விவாதிக்கப்படும் இலங்கை தொடர்பான அலன்றொக்கின் அறிக்கை.

சிறுவர்களும், ஆயுதமோதல்களுக்குமான ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதியான அலன் றொக் கடந்த ஆண்டு சிறிலங்காவிற்கு மேற்கொண்ட 10 நாள் விஜயம் தொடர்பான அறிக்கையை இன்று ஐ.நா பாதுகாப்புச் சபையின் செயற்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

றொக்கின் சிறிலங்கா விஜயத்தின் போது சிறிலங்கா அரசின் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் படைக்கு சிறுவர்களை சேர்ப்பதாகவும். அதற்கு அரசு ஆதரவு வழங்கிவருவதாகவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளது எனவும் தெரிவித்திருந்தார். சிலசமயங்களில் அரச படைகள் கருணா குழுவினருக்கான சிறார்படை சேர்ப்பில் நேரடியாக பங்குபற்றியதாகவும் அவர் கூறியிருந்தார்.

சிறிலங்காவில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதில் உள்ள தடைகளை நீக்குதல், போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான உறுதிப்பாடுகளை சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் இருந்து கோருதல் அல்லது குறிப்பிட்ட தரப்புக்கள் மீது சில தடைகளை கொண்டுவர சிபார்சு செய்தல் என்பன இந்த அறிக்கையில் இருக்கலாம் என பாதுகாப்புச் சபைத் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.

எனினும் றொக்கின் அறிக்கை ஐ.நா பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்கப்படும் வாரத்தில் சிறிலங்கா அரசு ஏனைய 60 நாடுகளுடன் இணைந்து சிறுவர் படைச்சேர்ப்பை முடிவுக்கு கொண்டுவருதல் மற்றும் படைகளில் உள்ள சிறுவர்களை விடுவித்தல் என்னும் ஆவணத்தை பிரான்ஸ் இல் நடைபெற உள்ள கூட்டத்தில் தயாரிக்க உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறுவர்களும், ஆயுதமோதல்களுக்குமான ஐ.நாவின் அமைப்பு மற்றும் யுனிசெப் ஆகியவற்றை அண்மையில் தொடர்பு கொண்ட கருணா தாம் தமது படைகளில் சிறுவர்களை சேர்ப்பதை நிறுத்துவதாகவும், படைகளில் உள்ள சிறுவர்களை விடுவிக்கப்போவதாகவும் தெரிவித்ததாக ஐ.நா செயலாளர் நாயகத்தின் கீழ் சிறுவர்களும், ஆயுதமோதல்களுக்குமான ஐ.நா அமைப்பில் பணிபுரியும் ராதிகா குமாரசாமி தெரிவித்துள்ளார்.

-Sankathi-

இதிலை ஒன்றும் சொல்ல மாட்டங்கள்

அலென் றொக்கின் அறிக்கை கடந்தகாலத்தில் HRW ஆல் வெளியிடப்பட்ட Funding the “Final War” போன்று மிக முக்கியமானது. அந்த அறிக்கை பற்றி நான் விபரமாக எழுதியபோது களத்துத்தில் சில கனவாங்கள் என்னை அரசின் கைகூலியென சொன்னார்கள். அவர்கள் இந்த அறிக்கைபற்றியும் மெளனமாகவே இருப்பார்கள்.

கடந்தகாலத்தில் புலிகள் யுத்தத்தை இன்னும் ஏன் தொடங்கவில்லையென கருத்தெழுதிய போர் குரல்கள் இன்று சமாதானம் - அரசியல் தீர்வு என்று குரல் மாற்றி ஒலிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

அப்படியான ஒரு நண்பர் அண்மையில் எனக்கு அனுப்பிய கடிதம் ஒன்று கீழ் உள்ளது

Sri_Lanka_Special_Envoy_1_.pdf

Edited by SAMATHAANAM

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு நியாயமான தீர்வு கிடைத்தால் தமிழ் சமாதானம் வேண்டாம் என்று எப்போது சொன்னவர்கள். அதனால் தான் பல தடவை பேச்சுமேசைக்கு வந்தார்கள். காலத்தை இழுத்தடிக்கும் நிகழ்வுக்குப் பெயர் சமாதானம் கிடையாது மகனே! மேலும் நீர் எப்போது பார்த்தாலும் தமிழன் யுத்த விரும்பி மாதிரிக் கருத்து எழுதும் போக்கிரித்தனத்தைத் தானே செய்கின்றீர்.

இப்போது எழுதிய கருத்து கூட அந்த எண்ணத்தை நிருபிப்பதற்கே!

ஒரு விவாதத்திற்கு உமது கருத்தான போர் செய்தால் மட்டுமே நியாயமான தீர்வு கிடைக்கும் என்றால் எப்போது? எப்படி? இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுத்து? அப்படி இன்னும் பலி கொடுக்க வட கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தயாரா? எத்தனை பேர் தயார்? இன்னும் எத்தனை காலத்துக்கு?

அரசியல் தீர்வு குறித்து தமிழர் உடன் முடிவு எடுக்காவிடில் வரப்போகும் போரில் அனைத்தையும் இழப்போம். (வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு அப்பவும் பொழுதுபோக்க இன்னொரு விடயம் இருக்கும்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்தகாலத்தில் புலிகள் யுத்தத்தை இன்னும் ஏன் தொடங்கவில்லையென கருத்தெழுதிய போர் குரல்கள் இன்று சமாதானம் - அரசியல் தீர்வு என்று குரல் மாற்றி ஒலிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

யுத்தம் எம்மீது திணிக்கப்படும் போது, நாம் சமாதானம் பேசுவதென்பது deadly யானது, எதிரியிடம் மண்டியிடுவதற்குச்சமனானது.

சமாதானத்துக்குக் குரல் கொடுப்போர் புலிகள் ஆயுதங்களை கீழே வைப்பதை ஆதரிக்கின்றீர்களா? (கடைசியாக மஹிந்த சொன்னது அதுதான், ஆயுதத்தை வைத்துவிட்டு வந்தால் பேசலாம் என்று.)

புலிகள் ஆயுதத்தை கீழே வைத்த அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை கற்பனை செய்வது அவ்வளவு கடினமானதா?

சா மா தா,

தமிழரின் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பது தான் இங்க முக்கியமே ஒழிய, உந் ஆறிக்கைகள் அல்ல.

மகிந்தர் மிகத் தெளிவாக பிபிசிக்கு வழங்கிய பேட்டியில் நாங்கள் வழங்குவதை நீங்கள் ஏற்க வேண்டும் இல்லாது விடின் இராணுவ நடவடிக்கை எண்டு கூறி உள்ளார்.அதோடு ஆயுதங்களையும் களையுங்கள் என்று கூறி உள்ளார்.அதனைத் தான் நீர் இங்கு எமக்குப் பிரரேரிகிறீரா?

இங்கே இராணுவத் தீர்வை முன் வைப்பது சிறிலங்கா .இன்றைய கார்டியனில் தெளிவா எழுதிக் கிடக்கு.உம்மைப் போன்ற கைகூலிகள் தான் இன்னும் சிறிலாங்காவுக்கும் டக்கிளசுக்கும் வக்காலத்து வாங்குதுகள்.உலகம் உண்மையை இப்போது கொஞ்சம் கொஞ்சமாப் புரிய ஆரம்பிச்சிருக்கு.உங்கட பிரச்சாரங்கள் இனி எடுபடுவது கஸ்ட்டம்.

1) ஆயுதத்தை கைவிட்டால் அவன் தருவதைதான் ஏற்கவேண்டும்.

2) அதனால் ஆயுதத்துடனேயே பேசுவோம், ஏனென்றால் பலமான நிலையில் பேசினால்தான் கேட்டது கிடைக்கும்.

3) பலமாக இருப்பதை நிருபிக்க போர் வெற்றிகள் வேண்டும்.

4) வெற்றிகள் என்றுமே தோல்விகள் மற்றும் அழிவுகளுடனேயே கிடைக்கின்றது.

5) தோல்வி வெற்றி தோல்வி வெற்றி என்று மாறி மாறி வந்து இருவரும் ஒருவரை ஒருவர் முற்றாக வெல்லமுடியாத கட்டத்தில் மீண்டும் பேசுவோம்.

6) நீண்டகாலம் பேசியதில் பழைய தோல்விகளும் வெற்றிகளும் மறந்துபோய்விடும்.

go to line 3 again.

result - error (end less loop)

Edited by saanakiyan

அப்ப சாணாக்கியன் நீங்கள் நல்ல கெட்டிக்காரர் போல அப்ப என்னண்டு இந்த என்ட்லஸ் லூப்புக்குள்ளால வெளியில வாறது எண்டு சொல்லுங்கோ பாப்பம். நீங்களும் ஆயுதங்களைக் கீழ போட்டுட்டு தாறதைக் கேட்டுக் கொண்டு போங்கோ எண்டோ சொல்லுறியள்?

நல்லது ,அப்படியே செய்வம்.பிறகு தமிழருக்கு ஒரு பொரச்சினையும் இருக்காது தானே. நீங்கள் எல்லாத்துக்கும் கரண்டி குடிப்பியள் தானே? மகிந்தரும் டக்கிளசும் நீங்கலும் சமாதனாமும் இருகிறியள் தானே.ஏன் இந்த மோட்டுச் சனம் உங்களை நம்பாமல் ,புலியள நம்பி இருக்குது எண்டு தான் விளங்கேல்ல?

நாரதர் ஐயா,

எனக்கு அந்த end less loop கால எப்படி வெளியால வாரதெண்டு தெரிந்தால், coding ஐ சரியாக எழுதியிருக்க மாட்டேனா? பெரியவை நீங்கள் தான் சொல்ல வேணும்!

அது சரி சமாதானம் வந்தால்தான் உங்களை இந்தப்பக்கம் காணக்கிடைக்குது? ஒரே வாகனத்திலயே வாறனீங்கள்? :icon_idea:

Edited by saanakiyan

  • கருத்துக்கள உறவுகள்

"The Tigers must take up our solution and must lay down their arms and negotiate with us," he said.

"If they don't attack us, if they don't kill anybody - then we may have peace, but if they do that we have to react for self-defence." - இது ஜனாதிபதி மகிந்த

இந்த போல்டில உள்ளதைத்தான் இரு தரப்பும் மாறி மாறிச் சொல்லிக் கொண்டு 60,000 பேரைக் கொண்டு 15 இலட்சத்தை நாடு கடத்திட்டாங்க. ஆனா இன்னும் தமிழீழத்தையும் காணேல்ல. ஐக்கிய இலங்கையையும் காணேல்ல..!

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6346509.stm

உமக்கும் கோட் எழுதத் தெரியேல்ல அல்லோ பிறகேன் சும்மா அலம்பிக் கொண்டு இருக்கிறீர்?

கோடை எழுதிறவை டிபக் பண்ணுவினம்.எரருகளைச் சொல்லுறது இலகு, டிபக் பண்ணுறது தான் கஸ்டம்,கோட் எழுதினாத் தான் எறருகள் வரும்,ஒண்டுமே செய்யாம இருந்தா எரருகள் வராது.இங்க நீங்க செய்யிறது ஒண்டுமே செய்யாம மற்றவன் எழுதிற கோடில வாற எரருஐப் பற்றி பந்தி பந்தியா எழுதிறது.

அதால் தான் வேற பிரயோசினமான வழிகளில எனது நேரம் செலவழியிது.இடைக்கிடை இப்படி சமாதானம் கிமாதானம் எண்டு வாறதுகளிண்ட தொல்லை அளவு மீறிப் போகேக்க வந்து எழுதச் சொல்லுது.

இங்க எழுதி ஒண்டும் ஆகப் போறேல்ல எண்டு தெரியும் ஆன என்ன செய்ய?உங்களை மாதிரி எல்லாம் தெரின்ச்ச ஏகம்பரங்களின் சாணாக்கியத்தைப்பாத்தா எழுதச் சொல்லுது.

கோட் எழுதினாத் தான் எறருகள் வரும்,ஒண்டுமே செய்யாம இருந்தா எரருகள் வராது
ஆகா...... நாரதர் நீங்க சமாதானத்திற்கும் மேல!.... அந்தாள் எண்டாலும் சண்டை மட்டும்தான் வேண்டாம் எண்டு சொல்லுது. நீங்களோ இரண்டுமே வேண்டாம் எண்டுரியள்.

சீ.... இது மட்டும் அந்த பிழை பிழையா புரோகிறாம் எழுதுறவை உணர்ந்து நடந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.

இங்க நீங்க செய்யிறது ஒண்டுமே செய்யாம மற்றவன் எழுதிற கோடில வாற எரருஐப் பற்றி பந்தி பந்தியா எழுதிறது.

நாங்க செய்யிற வேலை தான் QA. அதுக்கு நீங்கதான் எங்களுக்கு நன்றி சொல்ல வேணும்.

உங்களை மாதிரி எல்லாம் தெரின்ச்ச ஏகம்பரங்களின் சாணாக்கியத்தைப்பாத்தா...

ஐயோ....கூச்சமாயிருக்கு ரொம்ப புகழாதீங்கப்பா.....! :icon_idea:

Edited by saanakiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1) ஆயுதத்தை கைவிட்டால் அவன் தருவதைதான் ஏற்கவேண்டும்.

2) அதனால் ஆயுதத்துடனேயே பேசுவோம், ஏனென்றால் பலமான நிலையில் பேசினால்தான் கேட்டது கிடைக்கும்.

3) பலமாக இருப்பதை நிருபிக்க போர் வெற்றிகள் வேண்டும்.

4) வெற்றிகள் என்றுமே தோல்விகள் மற்றும் அழிவுகளுடனேயே கிடைக்கின்றது.

5) தோல்வி வெற்றி தோல்வி வெற்றி என்று மாறி மாறி வந்து இருவரும் ஒருவரை ஒருவர் முற்றாக வெல்லமுடியாத கட்டத்தில் மீண்டும் பேசுவோம்.

6) நீண்டகாலம் பேசியதில் பழைய தோல்விகளும் வெற்றிகளும் மறந்துபோய்விடும்.

go to line 3 again.

result - error (end less loop)

சிறு திருத்தங்களுடன்

1) ஆயுதத்தை கைவிட்டால் அவன் தருவதைதான் ஏற்கவேண்டும்.

2) அதனால் ஆயுதத்துடனேயே பேசுவோம், ஏனென்றால் பலமான நிலையில் பேசினால்தான் கேட்டது கிடைக்கும்.

3) பலமாக இருப்பதை நிருபிக்க போர் வெற்றிகள் வேண்டும் (வெற்றிகள் என்றுமே தோல்விகள் மற்றும் அழிவுகளுடனேயே கிடைக்கின்றது.)

4) பலமாயிருக்கும்போது பேசுவோம்

5) பேசும்போது போருக்குத்தயாராகி எம்மை பலமாக்குவோம் (எதிரியும் தன்னை பலமாக்குவான்).

6) எதிரிக்கு தான் போரில் வெற்றி கொள்ளலாம் என்ற எண்ணம் வரும் (மற்றும் அரசியல் லாபங்களுக்காக போர் செய்ய வெரும்புவான்).

7) இது இறுதிப் போரா? (ஆம் எனில் (8) க்குச் செல்லவும் இல்லை எனில் (3) க்குச் செல்லவும்)

8) எதிரியின் போரிடும் வலிமையைத் துடைத்தெறிவோம். தனியரசை அமைப்போம்

*6) நீண்டகாலம் பேசியதில் பழைய தோல்விகளும் வெற்றிகளும் எதிரிக்கு மறந்து போகலாம் எமக்கு மறந்துபோய்விடுமா?

*5) தோல்வி வெற்றி தோல்வி வெற்றி என்று மாறி மாறி வந்து இருவரும் ஒருவரை ஒருவர் முற்றாக வெல்லமுடியாத கட்டத்தில் மீண்டும் பேசுவோம்.

- இது தவறானது. வரலாற்றைப் புரட்டிப்பார்க்கவும். நாம் வென்று பலமாயுள்ளபோது மட்டுமே பேசுவோம்.

எனக்கு அந்த end less loop கால எப்படி வெளியால வாரதெண்டு தெரிந்தால், coding ஐ சரியாக எழுதியிருக்க மாட்டேனா? பெரியவை நீங்கள் தான் சொல்ல வேணும்!

end less loop இல் இருந்து வெளியே வந்தே ஆக வேண்டும்.

முயற்சி செய்தால் முடியும். முடிவில்லா சுழற்சி என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கோழைத்தனம்.

ஆகா...... நாரதர் நீங்க சமாதானத்திற்கும் மேல!.... அந்தாள் எண்டாலும் சண்டை மட்டும்தான் வேண்டாம் எண்டு சொல்லுது. நீங்களோ இரண்டுமே வேண்டாம் எண்டுரியள்.

சீ.... இது மட்டும் அந்த பிழை பிழையா புரோகிறாம் எழுதுறவை உணர்ந்து நடந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.

நாங்க செய்யிற வேலை தான் QA. அதுக்கு நீங்கதான் எங்களுக்கு நன்றி சொல்ல வேணும்.

ஐயோ....கூச்சமாயிருக்கு ரொம்ப புகழாதீங்கப்பா.....! :unsure:

சண்டை ,சமாதானம் பேச்சுவார்த்தை எல்லாம் தமிழருக்கான தீர்வுக்காகத் தான்.போரும் சமாதனாமும் வெறு வேறானவை இல்லை. பேச்சுவார்த்தையிலா இல்லை களத்திலா தமிழருக்கான அரசியற் தீர்வைத் தீர்மானிப்பது என்பதை சிறிலங்கா அரசு தான் முடிவு செய்துள்ளது.

ப்ரோகிராம் எழுதத் தெரியாத நீங்கள் எல்லாம் உங்களை நீங்களே QA எண்டு சொல்லி கொண்டு இங்க எழுதுவது தான் யாழ்க் களத்தின்ர சோகம்.ப்ரோகிராம் எழுதத் தெரின்சவன் தான் QA இல வேலை செய்யலாம்.சும்மா இருந்து பொழுது போக்கிற உங்களுக்கு பெரிய நினைப்புத் தான் போங்க.ரொம்பவும் கூச்சப் படாதையுங்கோ.உங்களை நீங்களே சாணாக்கியன் எண்டு பெயரளவில சொல்லித் தான இங்க எழுதலாம்.

பிழைவிடாம ப்ரோகிராம் எழுதிறவன் இந்த உலகத்தில் இல்லை.எழுதிறவனுக்கு பிழை கண்டு பிடிச்சுத் திருத்தத் தெரியும்.ஏனெண்டா அதுக்கு அவன் அவன்ர உயிரையும் குடுக்கத் தயார். அவன் எழுதிறது தமிழரின்ர தலைவிதியை மாத்த.உங்களை மாதிரி சும்மா இருந்து சோம்பல் முறிச்சுக் கொண்டு சுய தம்பட்டம் அடிச்சுக் கொண்டு சாணாக்கியன் எண்டு , ஐயோ எனக்குத் தெரியாது எண்டு சொல்லிக் கொண்டு இருக்க இல்லை.

நீங்கள் இங்க அடிக்கிற ஸ்டண்ட் காணுமப்பு, இன்னும் காலையில சாப்பிடாமலேயே இருக்கிறீர்? இல்லாட்டி இன்னும் டயட்டிங்கோ?

தமிழ் மக்கள் தானிங்க QA,CEO எல்லாம்.அவை நினைச்சா ப்ரோகிராமரை மாத்துவினம்.ஆன அவை இன்னும் இந்தப் ப்ரோகிராமரைத் தான் நம்பிக்கொண்டிருக்கினம். நம்பினவையை இந்தப் ப்ரோகிராமரர் கைவிட்டதில்லை.எண்டைக்கும் ப்ரோகிராமின் நோக்கத்தைக் கைவிட்டதில்லை.இனியும் கைவிட மாட்டினம்.

கோடிங் செய்யத் தெரியாத உங்களுக்குத் தான் எல்லாம் எரரையும் லூப்பாயும் தெரியும், கோடிங் தெரின்ச்சவனுக்குத் தான் பிரோகிராமின்ர லொஜிக் தெரியும். :unsure::unsure::unsure::unsure:

ஒரு விவாதத்திற்கு உமது கருத்தான போர் செய்தால் மட்டுமே நியாயமான தீர்வு கிடைக்கும் என்றால் எப்போது? எப்படி? இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுத்து? அப்படி இன்னும் பலி கொடுக்க வட கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தயாரா? எத்தனை பேர் தயார்? இன்னும் எத்தனை காலத்துக்கு?

அரசியல் தீர்வு குறித்து தமிழர் உடன் முடிவு எடுக்காவிடில் வரப்போகும் போரில் அனைத்தையும் இழப்போம். (வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு அப்பவும் பொழுதுபோக்க இன்னொரு விடயம் இருக்கும்)

போர் எப்போதோ ஆரம்பிச்சாச்சு....! ஆரம்பித்த போரால் யாருக்கு பின்னடைவு என்பது எல்லாம் வெளிப்பார்வையில் இல்லை... இண்றைக்கு இலங்கையின் செலவீனங்கள் தலைக்கு 20.5% மாக அதிகரிச்சாச்சு... இதுதான் எங்களவரால் ஆரம்பிக்க பட்ட போர் முறையின் ஆரம்பம்... ஒரு கட்டத்தில் ஒடுக்க புறப்பட்டவர்கள் ஒடுக்க முடியாது ஒடுங்கி இருக்க வேண்டிய தேவையை உணர்ந்து கொள்வர்... இதுதான் எரித்திரியாவிலும், கிழக்கு திமோருக்கும் நடந்ததின் அடித்தளம்...! தொடந்து போர் செய்ய கடன் வாங்க வேண்டிய நிலை சிறிய இலங்கைக்கும் கட்டுப்படி ஆகாது...!

பலமான எதிரி என்பது கடன் வாங்கி அடிப்பதில் இல்லை... எவ்வளவு கடனோடும் அடிக்கிறான் என்பதிலும் இல்லை...! பிடித்த பிரதேசங்களை பாதுகாக்க கடன் வேண்டுவதிலும் இல்லை...! பலமான பொருளாதாரத்தில் இருக்கிறது...! புலிகளை தோற்கடிக்க முடியாது என்பதை அரசாங்கம் ஒத்துக்கொள்ள வேண்டி வரலாம்... அப்படி ஒத்து கொள்ள இல்லை எண்றாலும் சர்வதேசம் நம்பிக்கை இளந்து போகும் நிலைமட்டும்தான் இருக்கிறது...!

Edited by Thala

மன்னிக்க வேண்டும்.ராதிகா குமாரசுவாமிக்கும் யாழ்தேவியில் தானோ நேர்முகப்பரீட்சை நடந்தது?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விவாதத்திற்கு உமது கருத்தான போர் செய்தால் மட்டுமே நியாயமான தீர்வு கிடைக்கும் என்றால் எப்போது? எப்படி? இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுத்து? அப்படி இன்னும் பலி கொடுக்க வட கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தயாரா? எத்தனை பேர் தயார்? இன்னும் எத்தனை காலத்துக்கு?

அரசியல் தீர்வு குறித்து தமிழர் உடன் முடிவு எடுக்காவிடில் வரப்போகும் போரில் அனைத்தையும் இழப்போம். (வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு அப்பவும் பொழுதுபோக்க இன்னொரு விடயம் இருக்கும்)

இங்கே பாருங்கோ என்றைக்குமே தமிழ் சமூகம் அரசியல் தீர்வு வேண்டாம் என்று சொல்லவில்லையே! தந்தை செல்வநாயகம் அகிம்சைவழியில் அரசியல் தீர்வுக்கு போராடினார்.கிடைக்கவில்லை என்ற பின்னர் தானே ஆயுதப் போராட்டம் தொடங்கியது. தமிழர் தரப்பும் இதைத் தான் சொல்கின்கின்றது. நியாயமான வழியில் அரசியல்தீர்வு தாருங்கள். வருகின்றோம் என்று. இதனால் தான் வெற்றிகள் பெற்று சிங்கள அரசின் முதுகெலும்பு உடைக்கப்பட்ட நிலையிலும் சமாதான பேச்சுவார்த்தையை நம்பி வந்தனர்.

சந்திரிக்காவின் ஆட்சியின் போது, பொருளாதாரம் மறையில் -8க்கு பணவீக்கம் தாழ்ந்திருந்தது. அதை நிலையைப் பாவித்து ரணில் வந்து தனது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்திக் கொண்டாரே, தவிர தமிழனுக்கான தீர்வினைத் தராமல் இழுத்தடித்தார். இந்தப் பொருளாதரா உயர்ச்சியை வைத்துக் கொண்டு தான் சிங்கள அரசு, இராணுவ முன்னெடுப்பை மேற்கொள்கின்றது. ஆக, தனது பொருளாதாரம் உயர்வாகும்போது, தமிழனை அழிக்க வேண்டும் என்று சிங்கள அரசு நினைக்கின்றது.

இது வெறுமனே யுத்ததால் மட்டுமல்ல, 83ம் ஆண்டு போராட்டம் உச்சியடைய முன்பே யாழ்நூலகத்தை எரித்து தமிழரின் அடையாளங்களை அழித்தது. அவ்வாறே நில ஆக்கிரமிப்புக்கள், நீர்கொழும்புத் தமிழர்களை உள்வாங்குவதற்காக பாடசாலைகளைச் சிங்களமூலமாக்கியது. இதை விட போராட்டத்தில் சம்பந்தமில்லாத மலையக பெண்களுக்கு கன்னிப் பருவத்திலேயே கருதத்தடை செய்ய ஊக்குவிக்கின்றது என்றால் சிங்கள பேரினவாதம் அடிப்படையில் இருந்தே தமிழர்களின் அடையாளங்களை அகற்ற வேண்டும் என்ற சிந்தனையில் இருக்கின்றது. இதைத் தடுக்க தமிழன் பலமானவான இருக்க வேண்டியதே கட்டாயம்.

போர் செய்வதால் நியாயம் கிடைக்கும் என்று நீர் சொல்வதற்கு மூதல், போரட்டத்தைத் தவிர வேறு எவ்வகையான வழிகளையும் சிங்கள அரசு விட்டு வைக்கவில்லை என்று சொல்வதே சரியானது. உம் கருத்துப்படி வருகின்றேன். சமாதானம் என்று வந்தால் எவ்வகை நியாயத் தீர்வை சிங்கள அரசு தரும் எண்டு சொல்லுங்கள்். போராட்டத்தை விட்டு விடலாம்.

அதன் பின்னர், போராட்டம் எத்தனை காலத்துக்கு, எப்படி தீர்வு கிடைக்கும் என்பதைப் பற்றி சொல்லலாம். தமிழர் ஒன்றிணைய வேண்டியது அவசியம். அது தமிழனுக்கு நியாயமான தீர்வினைப் பெறுவதற்கான போரில் வெற்றி பெறுவதற்கான எந்த முயற்சிலும் ஆகும்.

புலத்தில் இருப்பவர்கள் வெறுமனே எல்லோரும் ஏதோ சுகத்தில் வாழ்பவர்கள் அல்ல. இங்கே கள உறவுகளின் சகோதரங்கள் போராளியாக இருக்கின்றனர். பலரின் குடும்பங்கள் தாயகத்தில் இருக்கின்றனர். வெறுமனே யுத்தத்தில் அவர்களை இழக்க வேண்டும் என்ற ஆசை யாருக்கும் கிடையாது. வெறுமனே உம் சிங்கள ஆதரிப்புக் கருத்துக்களை நியாயப்படுத்துவதற்காக ஏழுத வேண்டாம்.

நன்றி பண்டிதர்,

நிபந்தனை(Condition) ஒன்றை போட்டு மீளாசுழற்சியினுள்(Endless Loop) இருந்து மீட்சிக்கு வழி காட்டியுள்ளீர்கள்!

ஆனால் அந்த 8, 3 ஆம் வரிகள் சில உபவரிகளையும், நிபந்தனைகளையும் கொண்டுள்ளன.

1) ஆயுதத்தை கைவிட்டால் அவன் தருவதைதான் ஏற்கவேண்டும்.

2) அதனால் ஆயுதத்துடனேயே பேசுவோம், ஏனென்றால் பலமான நிலையில் பேசினால்தான் கேட்டது கிடைக்கும்.

3) பலமாக இருப்பதை நிருபிக்க போர் வெற்றிகள் வேண்டும் (வெற்றிகள் என்றுமே தோல்விகள் மற்றும் அழிவுகளுடனேயே கிடைக்கின்றது.)

3.1) கால வரையறை இன்றிய நீண்ட போர்(சுமாராக 7 வருடங்கள்)

3.2) எஞ்சிய 4% மக்கள் தொகை உயிரிழப்பினாலும் இடப்பெயர்வு/புலப்பெயர்வினாலும் மேலும் அழிவுறும்

3.3) ஏற்கனவே ஏனைய சமுகங்களை விட பலமடங்கு பின்தங்கியுள்ள தமிழ்ச் சமுகம் கல்வியறிவின்மை, போசாக்கின்மை, தொழில் வசதியின்மை என்பவற்றால் மேலும் பின்னடைந்து மீட்க முடியாத நிலைக்கு செல்லும். மீண்டும் வளர்ந்து வரும் ஏனைய சமுகங்களுடன் சம நிலையை அடைய பல சந்ததிகள் காலம் தேவைப்படும்.(இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில்)

3.4) தமிழ்ச் சமுகம் சர்வதேசத்தின் கவனம், ஆதரவு, உதவிகள் என்பவற்றை இழக்கும் (ஏற்கனவே படிப்படியாக இது இழக்கப்பட்டு வரும் நிலையில் எட்டாப்பழம் புளிக்கும் என்ற நிலைப்பாடு பலரில் காணப்படுகின்றது. ஆனால் சர்வதேச ஆதரவு என்பது எந்த ஒரு சமுகத்தின் வளர்ச்சிக்கும் மிகவும் அவசியம்)

4) பலமாயிருக்கும்போது பேசுவோம்

5) பேசும்போது போருக்குத்தயாராகி எம்மை பலமாக்குவோம் (எதிரியும் தன்னை பலமாக்குவான்).

6) எதிரிக்கு தான் போரில் வெற்றி கொள்ளலாம் என்ற எண்ணம் வரும் (மற்றும் அரசியல் லாபங்களுக்காக போர் செய்ய வெரும்புவான்).

7) இது இறுதிப் போரா? (ஆம் எனில் (8) க்குச் செல்லவும் இல்லை எனில் (3) க்குச் செல்லவும்)

8) எதிரியின் போரிடும் வலிமையைத் துடைத்தெறிவோம். தனியரசை அமைப்போம்

8.1) எதிரியின் போரிடும் வலிமையைத் துடைத்தெறியும் வலிமை எம்மிடம் உள்ளதா? ( if not break;)

8.2) இறுதிப் போரில் எதிரியின் சார்பில் களத்தில் இறங்கும் வல்லரசுகளை சமாளிக்கும் திறன் எம்மிடம் உள்ளதா? ( if not break;)

8.3) பெற்ற வெற்றியை தக்கவைக்க சர்வதேச மற்றும் வல்லரசு நாடுகள் எவற்றினதாவது ஆதரவுகள் உள்ளதா? ( if not break;)

8.4) தற்போது பூச்சியத்திலிருக்கும் சுயபொருளாதாரத்தை குறுகிய காலத்தில் தேவையான அளவு கட்டியெழுப்ப வசதிகளும் வாய்ப்புகளும் உண்டா? ( if not break;)

9) சுபீட்சமான தமிழீழம். (Country Code: TE Dialing Code: 997 http://en.wikipedia.org/wiki/List_of_country_calling_codes )

அடடா, புலிகள் இதையெல்லாம் யோசிக்காமல் களத்தில் இறங்கி விட்டார்களே.

யாராவது தமிழ்ச்செல்வனின் ஈமெயில் தெரிந்தால் சொல்லுங்கள், இந்த விடயங்களை அவருக்குத் தெரியப் படுத்த வேண்டும்.

அடடா...லிசா உமக்கும் தெரியாதா?......நான் நினைத்தேன் ஏதோ எனக்கு மட்டும் தான் தெரியாதென்று!

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா நேற்று விவாதம் நடக்கும்னு சொன்னாங்க அதுக்கப்புறம் ஒரு செய்தியையும் கானோமே....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாணக்கியரே,

ஈழவிடுதலை அல்கோரிதத்தை (algorithm – தமிழ் என்ன?) மிக நன்றாக விருத்திசெய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

உங்களின் கேள்விகளுக்கு எனது பதில்கள்:

3.1) கால வரையறை இன்றிய நீண்ட போர்(சுமாராக 7 வருடங்கள்)

ஆம் எமது சுதந்திரப்போராட்டம் 1505ம் ஆண்டு போர்த்துக்கீசரின் வருகையுடன் தொடங்கியது. சுதந்திரம் பெறும்வரை அது தொடரும்.

3.2) எஞ்சிய 4% மக்கள் தொகை உயிரிழப்பினாலும் இடப்பெயர்வு/புலப்பெயர்வினாலும் மேலும் அழிவுறும்

சிங்களவனின் கீழிருந்தால் 4% என்ன 100% மும் அழிவுறும்.

3.3) ஏற்கனவே ஏனைய சமுகங்களை விட பலமடங்கு பின்தங்கியுள்ள தமிழ்ச் சமுகம் கல்வியறிவின்மை, போசாக்கின்மை, தொழில் வசதியின்மை என்பவற்றால் மேலும் பின்னடைந்து மீட்க முடியாத நிலைக்கு செல்லும். மீண்டும் வளர்ந்து வரும் ஏனைய சமுகங்களுடன் சம நிலையை அடைய பல சந்ததிகள் காலம் தேவைப்படும்.(இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில்)

மேலையத்தேய நாடுகளுக்குப் புலம்பெயரும் மக்கள் (தற்போது 1 மில்லியன்) இவையனைத்திலுமே நிறைவடைவார்கள். இவர்களின் சுதந்திதர தாகம் மட்டும் வற்றிப் போகும். அதனை வற்றாது பார்துக்கொள்வது நம் போன்றவர்களின் கடமை.

3.4) தமிழ்ச் சமுகம் சர்வதேசத்தின் கவனம், ஆதரவு, உதவிகள் என்பவற்றை இழக்கும் (ஏற்கனவே படிப்படியாக இது இழக்கப்பட்டு வரும் நிலையில் எட்டாப்பழம் புளிக்கும் என்ற நிலைப்பாடு பலரில் காணப்படுகின்றது. ஆனால் சர்வதேச ஆதரவு என்பது எந்த ஒரு சமுகத்தின் வளர்ச்சிக்கும் மிகவும் அவசியம்)

நாம் “இறமை” யடைந்தால் அது வரும். அதை தக்க வைப்பதும் வளர்ப்பதும் எமது எதிர்கால அரசியலில் தங்கி இருக்கும்.

8.1) எதிரியின் போரிடும் வலிமையைத் துடைத்தெறியும் வலிமை எம்மிடம் உள்ளதா? ( if not break;)

இந்தக்கேள்விக்கு, எமது தலைவரிடம் பதில் உள்ளது. தலைவரிடத்தில் எமக்கு நம்பிக்கை உள்ளது.

8.2) இறுதிப் போரில் எதிரியின் சார்பில் களத்தில் இறங்கும் வல்லரசுகளை சமாளிக்கும் திறன் எம்மிடம் உள்ளதா? ( if not break;)

அனேகமாக புலம்வாழ் மக்களின் கைகளிலேயே இது உள்ளது.

8.3) பெற்ற வெற்றியை தக்கவைக்க சர்வதேச மற்றும் வல்லரசு நாடுகள் எவற்றினதாவது ஆதரவுகள் உள்ளதா? ( if not break;)

இதுவும் புலம்வாழ் மக்களின் கைகளிலேயே இது உள்ளது.

8.4) தற்போது பூச்சியத்திலிருக்கும் சுயபொருளாதாரத்தை குறுகிய காலத்தில் தேவையான அளவு கட்டியெழுப்ப வசதிகளும் வாய்ப்புகளும் உண்டா? ( if not break;)

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பின்வரும் மூன்று காரணிகளே முக்கியமானவை:

1) ஊழலற்ற நிர்வாகம்

2) ஊழலற்ற நிர்வாகம்

3) ஊழலற்ற நிர்வாகம்

புலிகளிடம் அது இருக்கிறது. அது போதும் நாம் விட்ட இடத்தைப்பிடிக்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.