Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரம்பரிய உளவுத் தகவல்களும் தொழில் நுட்பமும் - 1

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் அண்மையில் நடைபெற்ற இரு சம்பவங்கள் எமது தேசத்தின் இறுக்கமான புலனாய்வுக் கட்டமைப்புடன் தொடர்புபட்டவை.

ஒன்று தமிழீழ தேசிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்வை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் அண்மையில் ஆரம்பித்து வைத்திருந்தார்.

தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் இந்த அடையாள அட்டைகள் தேசத்தின் பாதுகாப்புக்கு மிக முக்கியமானவை.

சிறிலங்காவின் சாதாரண அடையாள அட்டைகளை போலதல்லாது சர்வதேச தரத்திற்கு இணையாக தயாரிக்கப்பட்ட இந்த அட்டைகள் ஒரு மனிதனின் சரித்திரத்தை ஒரு சில நிமிடங்களில் கணணித்திரையில் தரவல்லவை.

இரண்டாவது 'மிகப்பெரும் தாக்குதலுக்கு கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் தயாராகி வருகின்றனர், தென்னிலைங்கையின் நிலமையைப் பொறுத்து அவர்களின் தாக்குதல்கள் ஆரம்பமாகலம்" என கண்காணிப்புக்குழு தகவல் தெரிவித்திருந்தது.

இந்த தகவல் கண்காணிப்புக்குழுவின் நம்பகத்தன்மை தொடர்பான சந்தேகத்தை தமிழ் மக்களிடம் மேலும் வலுவடையச் செய்துள்ளது.

சிறிலங்கா அரசின் வலிந்த தாக்குதல்களையோ அல்லது அதனால் ஏற்படும் பொதுமக்களின் இழப்புக்களையோ தடுப்பதற்கோ அல்லது பூரணமாக வெளிக்கொண்டு வருவதற்கோ திரணியற்ற நிலையில் உள்ள கண்காணிப்புக்குழுவின் இந்த செயற்பாடு தற்போது அது அரசுக்கு உளவு சொல்லும் அமைப்பாக செயற்பட முனைவதாகவே கொள்ளமுடியும்.

ஏனெனில் அரசினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய படைநடவடிக்கைகளான வாகரை ஆக்கிரமிப்பு, சம்பூர் ஆக்கிரமிப்பு, ஒக்டோபர் 11 ஆம் நாள் முகமாலையில் நிகழ்ந்த பெரும் சமர் என்பவற்றிற்கு முன்னர் 'அரச படையினர் பாரிய தாக்குதல்களுக்கு தயாராகி வருகின்றனர்" என கண்காணிப்புக்குழு அறிக்கைகளை வெளியிட்டதில்லை. அப்படி வெளியிட்டு இருந்தாலும் சிங்கள இனவாதிகளும், அவர்களின் காட்டுமிராண்டித்தனமான அரசியல் கொள்கைகளும் அவர்களை சும்மா விட்டிருக்க மாட்டாது.

தாக்குதல், தாக்குதல் முன்னேற்பாடுகள் அல்லது எதிர்த்தரப்பின் களநிலமை இவை தொடர்பான தெரிவிக்கப்படும் செய்திகள் மிகவும் பெறுமதி வாய்ந்தவை.

சிறிலங்கா அரசிடம் உள்ள வேவு விமானங்கள், அண்டைய ஆசிய நாடுகளின் செய்மதித் தகவல்கள் மூலம் பெறப்படாத தகவல்களையா கண்காணிப்புக்குழுவோ அல்லது ஒற்றர்களோ சொல்லி விடுவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம்.

செய்மதி தகவல்களையோ அல்லது உளவு விமானங்களின் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களையோ விட களத்தில் நின்று எதிரிக்கு வழங்கப்படும் தகவல்கள் மிகவும் முக்கியமானவை.

இதனை விரிவாக ஆராய்வதற்கு சமகாலத்தில் உலகத்தில் நடைபெற்றதும், நடைபெறுவதுமான சமர்களில் தொழில்நுட்ப உளவுத்துறைக்கும், பாரம்பரிய உளவுத்துறைக்கும் (வுசயனவைழையெட ஐவெநடடபைநnஉந) உள்ள வேறுபாட்டையும் அதன் அனுகூலங்களையும், பிரதிகூலங்களையும் சிறிது ஆய்வு செய்வது பயனுள்ளது.

உயர் தொழில்நுட்பத்தினால் மட்டும் சேகரிக்கப்படும் உளவுத் தகவல்கள் போதுமானவையான இருந்திருந்தால் அமெரிக்காவினால் தேடப்படும் ஒசாமா பின்லேடன் தற்போது தூக்கில் தொங்கியிருப்பார். மேலும் அண்மையில் தூக்கில் போடப்பட்ட முன்னாள் ஈராக்கிய ஜனாதிபதி சதாம் உசேன் கூட ஒரு தனி மனிதர் வழங்கிய தகவலைக் கொண்டே கைது செய்யப்பட்டிருந்தார்.

அமெரிக்காவின் உயர் தொழில்நுட்ப செய்மதியினாலோ அல்லது உளவு விமானத்தினாலோ சதாமை காட்டிக்கொடுக்க முடியவில்லை. எனினும் ஒரு தகவல் கிடைத்தால் அதை உறுதிப்படுத்துவதற்கு இந்த தொழில் நுட்பங்கள் மிகவும் பயனுள்ளவை என்பதுடன் அறியப்பட்ட ஒரு பிரதேசத்தையோ, ஒரு இராணுவ கேந்திர நிலையங்களையோ அல்லது ஒரு நபர் தொடர்பான தகவல்களையோ திரட்டுவதற்கு நவீன தொழில்நுட்பம் மிகச்சிறந்தது என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

இதற்கு சிறந்த உதாரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஈராக்கில் கொல்லப்பட்ட அல்கைடாவின் இராக் பிரிவு தலைவர் அபு முசாப் அல் சர்ஹாவியின் மரணத்தை குறிப்பிடலாம்.

2003 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து இவர் அமெரிக்காவினால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்தவர். இந்த தேடுதலுக்கு அமெரிக்கா தனது உயர் தொழில்நுட்ப வேவு சாதனங்களை முடுக்கி விட்டதுடன் அவரது தலைக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசையும் அறிவித்திருந்தது.

இறுதியாக அமெரிக்காவின் உயர் தொழில்நுட்ப வேவு சாதனங்களால் கண்டுபிடிக்க முடியாத அல் சர்ஹாவியின் மறைவிடம் அந்தப்பகுதி மக்களுடன் கலந்திருந்த அமெரிக்க சார்பு ஈராக்கிய உளவுப்பிரிவினரால் அமெரிக்காவிற்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அமெரிக்கப்படைகள் தமது உயர் தொழில்நுட்ப செய்மதிகளையும், உளவு விமானங்களையும் அந்தப்பகுதியை நோக்கி ஒன்று குவித்தன. அவற்றின் மூலம் திரட்டப்பட்ட தகவல்கள் தாக்குதல் விமானங்களுக்கு வழங்கப்பட்டது.

இரு கு-16ஊ போர் விமானங்கள் தாக்குதலுக்கு தயாராகின. அதிக வேகத்தில் சென்ற விமானங்களில் ஒன்று இரு 250 கிலோ குண்டுகளை வீசியது. குறி தப்பவில்லை தப்பவும் முடியாது ஏனெனில் வீசப்பட்டவை உயர்ந்த இலக்குகளை அழிக்க பயன்படுத்தப்படும் குண்டுகள்.

ஓன்று லேசர் மூலம் வழிநடத்தப்படும் குண்டு (டயளநச-பரனைநன) மற்றயது ஜி.பி.எஸ் தொழில் நுட்பத்தால் (புPளு-பரனைநன) வழி நடத்தப்படும் குண்டு. அல் சர்ஹாவியின் கதை முடிந்து போனது. இங்கு அவதானிக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில் இந்த தாக்குதலுக்கு பாரம்பரிய உளவுமுறையும், நவீன தொழில்நுட்பங்களும் இணைந்தே பயன்படுத்தப்பட்டிருந்தன.

ஆனால் சதாமோ, அல் சர்ஹாவியோ ஒரு தனி மனிதராக அல்லது ஒரு சிறு குழுவாகவே இறுதிக்காலங்களில் நடமாடியவர்கள். அதே போலவே ஒசாமா பின்லேடனும் ஒரு சிலருடன் மறைந்து வாழ்பவர்.

எனவே இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் உளவு விமானங்களினதும், செய்மதிகளினதும் செயற்பாடானது ஒரு வைக்கோற் கும்பத்துக்குள் (வைக்கோல் கட்டு) ஊசியை தேடுவது போலதல்லாது, வைக்கோல் கும்பத்துக்குள் ஒரு வைக்கோலை தேடுவது போன்றது தான்.

எனினும் 1998 இல் இந்தியா மேற்கொண்ட அணுக்குண்டு சோதனையை இந்தியா அறிவிக்கும் வரை அறியமுடியாத உலகமும். அண்மையில் வடகொரியா மேற்கொண்ட அணுக்குண்டு வெடிப்பை முன்கூட்டியே அறியமுடியாத உலகமும் எமக்கு ஒரு செய்தியை விட்டுச் செல்கின்றன.

நவீன தொழில்நுட்பங்கள் போரிலும், புலனாய்வுப் பணியிலும் ஏற்படுத்திய மாற்றங்கள் அளப்பரியன. ஆனால் அதன் மீதுள்ள மக்களின் அதீத கற்பனைக்கு அவை ஈடுகொடுப்பவை அல்ல.

அதாவது உயர் தொழில்நுட்பத்திலும் பல குறைபாடுகள் உள்ளன. இதனைத் தான் ஈராக்கில் இழுபடும் அமெரிக்கா இராணுவமும், லெபனான் போரில் வெல்ல முடியாது போன இஸ்ரேலின் தொழில் நுட்பமும் சொல்லும் பாடங்கள்.

பொதுவாக உளவுமுறைகளை பொறுத்த வரையில் சோவியத்தின் உளவு முறைகளுக்கும், அமெரிக்காவின் உளவு முறைகளுக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புக்கள் முழுக்க முழுக்க சோவியத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதமாகவே 1990-களின் முற்பகுதி வரை அமைக்கப்பட்டு இருந்தன.

பனிப்போர் காலத்தில் சோவியத்தின் பாதுகாப்பு வலயங்களுக்குள் மனிதர்கள் ஊடுருவுவது இலகுவானதாக இருக்கவில்லை. எனவே தான் அதனை இரும்புத்திரை நாடு என்று முன்பு அழைப்பதுண்டு. சோவியத்தின் இரகசியங்களை அறிவதற்கு அமெரிக்கா தனது தொழில்நுட்பங்களை தான் பெரிதும் நம்பியிருந்தது. அன்று வானில் இருந்தே பெருமளவான புலனாய்வுத் தகவல்கள் திரட்டப்படடன.

ஒரு விதத்தில் இதுவே அமெரிக்காவின் தொழில்நுட்பம் வளர்வதற்கு மிகப்பெரும் மைல் கல்லாக அமைந்தது என்றாலும் அது மிகையாகாது.

ஆனால் வானில் இருந்து சேகரிக்கப்படும் தகவல்கள் களத்தின் முழுமையான கதையை சொல்வதில்லை. ஏனெனில் மனித மனங்களையும் போர்க்கள உத்திகளையும் அறியும் ஆற்றல் புகைப்படங்களுக்கு கிடையாது. இதனால் தான் 'ஒரு வார்த்தை ஆயிரம் புகைப்படங்களை விட மேலானது" என சொல்வதுண்டு.

வானில் இருந்து புலனாய்வுத் தகவல்கள் திரட்டப்பட வேண்டுமாயின் புகைப்படங்களை எடுப்பதும், ஒலிச்சமிக்கைகளை ஒட்டுக்கேட்பதும் தான் அதற்கு முக்கியமானவை.

வானில் இருந்து புகைப்படங்களை எடுக்கும் திறமை பெரிய பறவைகள் (டீபை டிசைனள) என அழைக்கப்படும் செய்மதிகளுக்கும், உளவு விமானங்களுக்கும் உண்டு. ஆனால் சாதாரண மக்கள் எதிர்பார்ப்பது போல அவற்றின் செயற்பாடுகள் அதீதமாக இருப்பதில்லை. பொதுவாக செய்மதிகளில் கபிள் ஸ்பேஸ் தொலைநோக்கிகள் இணைக்கப்பட்டிருக்கும் (ர்ரடிடிடந ளுpயஉந வுநடநளஉழிநள). இந்த தொலை நோக்கிகள் கறுப்பு வெள்ளை புகைப்படங்களையே (ளுவடைட ஐஅயபநள) எடுக்ககூடியன. எடுக்கப்படும் புகைப்படங்களின் அதிகூடிய துலக்கம் (சுநளழடரவழைn) 10 உஅ பிக்சல்கள் (10 உஅ pநச Piஒநட) ஆகும்.

இங்கு குறிப்பிடப்படும் பிக்சல் என்னும் சொற்களை நீங்கள் தற்போது பிரபலமாகியுள்ள டிஜிற்ரல் கமராக்களில் (னுபைவையட ஊயஅநசயள) கண்டிருப்பீர்கள். அதில் 3.0, 3.5, 4.5, 5.0 மில்லியன் பிக்சல் என குறிப்பிடப்பட்டிருக்கும்.

டிஜிட்டல் படங்களின் அடிப்படை அலகே பிக்சல் எனப்படுகின்றது. இது படங்களுக்கான மூலக்கூறு (Piஉவரசந நுடநஅநவெ) என்ற சொல்லில் இருந்து தோன்றியது. பொதுவாக Piஒநட pநச inஉh என்னும் அலகால் குறிக்கப்படுவதுண்டு. அதாவது இது 1 அங்குல நீள அகலமுடைய படத்தில் உள்ள பிக்சல்களின் எண்ணிக்கையாகும். சுருக்கமாக கூறின் பிக்சல்களின் எண்ணிக்கை அதிகரிக்க படத்தின் துலக்கம் அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரிந்தவிடயம்.

செய்மதிகளினால் வானில் இருந்து எடுக்கப்படும் 10 உஅ pநச Piஒநட என்னும் துலக்கமுள்ள படங்களைக் கொண்டு ஒரு மனிதனை அவர் ஆணா அல்லது பெண்ணா என்றோ அல்லது பொதுமகனா அல்லது படைவீரனா என்றோ அறியமுடியாது.

மேலும் பெரும்பாலான ழுpவiஉயட செய்மதிகள் இரவில் தொழிற்பட முடியாதவை. எனினும் கடந்த ஊதா (ஐகெசயசநன ஊயஅநசயள) ஒளிப்படக்கருவிகள் பொருத்தப்பட்ட சில செய்மதிகள் இதற்கு விதிவிலகாகும். தற்போது வடிவமைக்கப்பட்ட ளுலவொநவiஉ யுpநசவரசந சுயனயச (ளுயுசு) எனப்படும் செய்மதிகள் இரவிலும் பாதகமான காலநிலையிலும் தொழிற்படக்கூடியவை. ஆனால் அதில் உள்ள குறைபாடு என்ன என்றால் அதன் படங்களின் துலக்கம் 1 மீற்றர் (1அ pநச Piஒநட) ஆகும். இந்த படத்தில் மனிதர்களை அவதானிக்கவே முடியாது.

2003 ஆம் ஆண்டளவில் அமெரிக்காவினால் மிகநுண்ணிய ஒளிப்படக் கருவிகளை கொண்ட (ர்லிநச ளுpநஉவசயட ஊயஅநசய) செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கை;க கோள்கள் அடர்ந்த மரங்களின் இலைகளையும் ஊடுருவிப் படமெடுக்க கூடியவை.

மேலும் பொருட்களையும் வேறுபடுத்தி அறியும் ஆற்றல் உடையவை. உதாரணமாக நிஜமான டாங்கிகளை பலகைகளினால் வடிவமைக்கப்பட்ட போலியான டாங்கிகளில் (Pடலறழழன னரஅஅநல வயமெ) இருந்து இலகுவாக இனம் காணக்கூடியது. ஆனால் அதன் படங்களின் துலக்கம் 8 மீற்றர் (8 அ pநச Piஒநட) ஆக இருப்பது பிரதிகூலமானது.

எனினும் பல வர்த்தக செய்மதிகள் ஓரளவு தரமான படங்களை தரவல்லன. ஆனால் படங்களை எடுப்பதற்கும் அதனை ஆராய்வதற்கும் நீண்டகாலம் எடுக்கும். உதாரணமாக செயற்கைக் கோள் ஒன்று இலங்கைக்கு மேலே ஒரு நாளில் 2-3 நிமிடங்கள் மட்டுமே பயணிக்கும் இந்த இடைவெளியில் எடுக்கப்படும் படங்களின் அளவு மிகச்சிறியது. 10 செ.மீ துலக்கமான படங்களை கணணி மூலம் ஆராய்வதற்கும் மிக நீண்டகாலம் எடுக்கும். அதாவது ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவு பிரதேசத்தை தான் ஒரு தடவையில் ஆராய முடியும்.

ஓளிப்பட செய்மதிகளை விடுத்து தகவல் பரிமாற்ற செய்மதிகளை கருதினால் அதன் தொழில்நுட்பத்தினால் செலூலர் தொலைபேசி அழைப்புக்களை அல்லது சாதாரண தொலைபேசி அழைப்புக்களை கொண்டு இலக்குகளை இனம் காண முடியும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் தான் செச்சென்ய போராளிகளின் தளபதியான ஜெனரல் டூடேவ் சோவியத்தினால் வேட்டையாடப்பட்டார். ஆனால் தொலைபேசிகளை மாற்றினாலோ அல்லது பயன்படுத்தாது விட்டாலோ இவற்றால் ஒன்றுமே செய்ய முடியாது.

மேலும் இந்த செய்மதிகளின் நடமாட்டங்களை அதிகளவான மக்கள் தெரிந்து வைத்திருப்பதுடன். சில இணையத்தளங்களின் மூலம் எந்த செய்மதி எப்போது எங்களை கடந்து போகப்போகின்றது என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளவும் முடியும். இந்த தகவல்களை கொண்டு தான் 1998 இல் இந்தியாவினால் மேற்கொள்ளப்பட்ட அணுகுண்டு சோதனைக்கான தயாரிப்பு வேலைகளை உலகின் கண்களில் இருந்து இந்தியா மறைத்திருந்தது. அதே முறை தான் தற்போது வட கொரியாவினாலும் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்மதிகளை விட உலகின் ஆயுதப்படைகள் தமது புலனாய்வுத் தகவல்களுக்கு மிகவும் நம்பியிருப்பது ஆளில்லாத உளவு விமானங்களைத் (ருயுஏ) தான்.

http://www.tamilnaatham.com/articles/2007/feb/arush/10.htm

ஆக மொத்தத்தில் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரின் புலனாய்வு நடவடிக்கை பற்றி கண்ணுக்குள் எண்ணை ஊற்றிக் கொண்டு இருக்க வேண்டும் எனச் சொல்கிறீர்கள். இவர்களை நம்ப முடியாதுதான். தமது உளவாளிகளையே சர்வதேச புலனாய்வு அமைப்புக்கள் இவ்வாறு வேசங்கள் போட்டு அனுப்பி வைப்பதற்கு நிறையவே சந்தர்ப்பங்கள் உள்ளது. :icon_idea:

இந்த ஆய்வுகட்டுரையை வாசித்து என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை

எதுக்கும் யாழ் இக்பால் அகாஸியும் ஆட்டுபால் அகாஸியும் வந்து தங்கள் எதிர் ஆய்வுகளை சொன்ன பின் தான் தெளிவு கிடைக்கும்.

அதுவரை கண்ட படி கருத்து எழுதி பன்னாடை , முட்டாள்கள் என்ற புகழ்பெற்ற பட்டங்களை வாங்க வேண்டாம்........

பன்னாடைக்கும் முட்டாளுக்கும் 'பன்னாடை' 'முட்டாள்' எண்டு பட்டம் குடுகிற பன்னாடையும் முட்டாளும் இங்க ஆர்..? :icon_idea::lol:

இரண்டாவது 'மிகப்பெரும் தாக்குதலுக்கு கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் தயாராகி வருகின்றனர், தென்னிலைங்கையின் நிலமையைப் பொறுத்து அவர்களின் தாக்குதல்கள் ஆரம்பமாகலம்" என கண்காணிப்புக்குழு தகவல் தெரிவித்திருந்தது.

இந்த தகவல் கண்காணிப்புக்குழுவின் நம்பகத்தன்மை தொடர்பான சந்தேகத்தை தமிழ் மக்களிடம் மேலும் வலுவடையச் செய்துள்ளது.

கண்காணிப்புக் குழுவினரின் புலிகள் பற்றிய தவறான அறிக்கைக்கான விளக்கத்தைக் கோரியிருக்கிறோம் என்று ஒரு கட்டத்தில் புலிகளின் இராணுவப் பேச்சாளர் தெரிவித்ததாக புதினத்தில் செய்தி வந்து இப்போது பல நாட்கள் ஆகிவிட்டது.

கண்காணிப்புக் குழுவிடமிருந்து உத்தியோக பூர்வமாக ஏதாவது பதில் கிடைத்ததா - யாராவது இதுபற்றி அறிந்தவர்கள் களத்தில் விபரம் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பன்னாடைக்கும் முட்டாளுக்கும் 'பன்னாடை' 'முட்டாள்' எண்டு பட்டம் குடுகிற பன்னாடையும் முட்டாளும் இங்க ஆர்..? :icon_idea::lol:

பொறுங்கோ வருவினம் கிழிச்ச கோவனத்தை கட்டி கொண்டு குறுக்கலையும் நெடுக்காலையும் சனிபிடிச்சு சாணக்கியம் பேசி கொண்டு.

சில நேரம் பெடியல் ஆலேட் ஆகிட்டார்கள் என்று இந்த பக்கம் வராம பின் வழியாக வந்து போவார்கள். :P

கண்காணிப்புக் குழுவினரின் புலிகள் பற்றிய தவறான அறிக்கைக்கான விளக்கத்தைக் கோரியிருக்கிறோம் என்று ஒரு கட்டத்தில் புலிகளின் இராணுவப் பேச்சாளர் தெரிவித்ததாக புதினத்தில் செய்தி வந்து இப்போது பல நாட்கள் ஆகிவிட்டது.

கண்காணிப்புக் குழுவிடமிருந்து உத்தியோக பூர்வமாக ஏதாவது பதில் கிடைத்ததா - யாராவது இதுபற்றி அறிந்தவர்கள் களத்தில் விபரம் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

கேடதுக்கு பதில் தெளிவாக கிடைத்து இருக்கும் அதாவது கண்காணிப்பு குழு( என்னதை கண்காணிப்பது என்ற பிரச்சனைவேறு) நாங்கள் என்னத்துக்காக வந்தோம்மோ அதை வடிவாக செய்கிறோம் என்று.

அதுவரை கண்ட படி கருத்து எழுதி பன்னாடை , முட்டாள்கள் என்ற புகழ்பெற்ற பட்டங்களை வாங்க வேண்டாம்........
பன்னாடைக்கும் முட்டாளுக்கும் 'பன்னாடை' 'முட்டாள்' எண்டு பட்டம் குடுகிற பன்னாடையும் முட்டாளும் இங்க ஆர்..?

:icon_idea::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனினும் 1998 இல் இந்தியா மேற்கொண்ட அணுக்குண்டு சோதனையை இந்தியா அறிவிக்கும் வரை அறியமுடியாத உலகமும். அண்மையில் வடகொரியா மேற்கொண்ட அணுக்குண்டு வெடிப்பை முன்கூட்டியே அறியமுடியாத உலகமும் எமக்கு ஒரு செய்தியை விட்டுச் செல்கின்றன.

வடகொரியாவின் சோதனை பற்றி அது நடக்க முன்னரே பல ஊடகங்களில் பிரதான செய்தியாக வரத்தொடங்கி இருந்தது. செய்மதி மூலம் வாகன நடமாட்டங்களை அவதானித்து ஒரு சோதனை நடக்கப்போவதாக எழுதி இருந்தார்கள்.

அமெரிக்கா இஸ்ரேல் போன்ற நாடுகள் தங்கள் இரணுவ தேவைக்காக உருவாக்கும் இந்த தொழில்நுட்பங்களின் எவ்வளவு பகுதி இலங்கை அரசுக்குக் கிடைக்கும்?

வர்த்தகச்செய்மதிகள் மூலமான படங்களை இலங்கை அரசு எடுக்க முடியுமென்றால் புலிகளாலும் அது முடியும் தானே?

புலிகள் பெரும் போருக்கு தயாராவதாகக் கூறியது போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் போக்கிரித்தனத்தையே காட்டுகிறது. உண்மையில் என்ன நடந்தது என்றால், அன்றைய செய்தியாளர் மகாநாட்டில், முதல் நாள் கிளிநொச்சியில் பாலப்பம் தின்ற மயக்கத்தில், தாங்கள் உண்மையில் நடுநிலையாளராக நடிக்கிறோம் என்பதை மறந்து உளறிவிட்டார்கள். வழமையாக அமெரிக்காவிற்குப் போட்டுக்கொடுப்பது மட்டும் தான் அவர்களது வேலை. பாலப்பம் எல்லாவற்றையும் கெடுத்து விட்டது.

என்றாலும் இவர்களின் குட்டு அம்பலமனது நன்மைக்கே!

வர்த்தக செய்மதி நடத்துவோரிடம் இலகுவில் படங்களை பெற்றுவிட முடியாது. அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் தமது உயர்பாதுகாப்பு வலையங்களை அனுமதி இன்றி விற்க வேண்டாம் என்று அறிவுறுத்துவார்கள். அப்படி உயர்பாதுகாப்பு வலயம் ஒன்றின் செய்மதிப்படம் கல்வித்துறை ஆராச்சி போன்ற தேவைகளிற்கு தேவை என்றாலும் காலம் தாழ்த்தப்பட்ட (சில மாதங்கள் வருடங்கள்) பழய படங்களை மட்டுப்படுத்தப்பட்ட துல்லியத்தோடு அனுமதிப்பார்கள். ஏன் என்றால் உளவுத் தகவல்கள் என்பதற்கு காலத்தோடுத் நெருக்கமாக பிணைந்த பெறுமதி இருக்கிறது.

அதாவது non-state actors பணத்தை வைத்து உளவு தகவல் ரீதியில் உண்மையில் பெறுமதியான செய்மதிப்படங்களை பெறுவது ஒரு முடியுமா என்பது சந்தேகமே. செய்மதிப்படம் எல்லாத்திற்கும் உளவுப் பெறுமதி இருக்கு என்று வாதிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.

வர்த்தக செய்மதிகள், உளவிற்கு என்று அனுப்பப்படாத ஏனைய தொடர்பாடல் செய்மதிகள் எப்போ எந்தப் பிரதேசத்திற்கு மேல் வருகிறது என்பதை இலகுவாகப் பெறலாம், இணையத்திலும் பெறலாம். அந்தத் தகவல்கள் உரிமையாளர்களாலேயே தமது சேவைகளை சந்தைப்படுத்த வடிக்கையாளர்களை கவர தேவைகருதி விடப்படும் தகவல்கள். ஆனால் உளவிற்கு என்று அனுப்பியதை எப்போ எங்கு வருகிறது என்று வெளிப்படைய அறிவிக்கிறதுக்கு அவன் உளவுக்கு மினக்கெட்டு செய்மதியை அனுப்பாமலே இருக்கலாம். அப்படி உளவு செய்மதியின் schedules காலப் போக்கில் தெரிய வரும் என்று தெரிந்துதான் முன்ஏற்பாடாக அவ்வப்போது reschedule பண்ணுவார்கள்.

உண்மையான human intel asset மிகவும் பெறுமதியானது. ஆனால் அந்த asset உண்மை சொல்லுதா பொய் சொல்லுதா double agent ஆ என்ற குழப்பங்கள் இருக்கு. தொழிநுட்பத்தில் அந்தப் பிரச்சனை இல்லை ஆனா வேறு குழப்பங்கள். எல்லா வழிகளாலும் வரும் தகவல்களை இணைத்து பகுப்பாய்வு செய்து முடிவுகளை படிப்படியாக எடுத்து புதிருக்கான தீர்வை நோக்கிச் செல்வது தான் புலநாய்வு. அந்த integrated analysis process இற்கு feed பண்ணும் வழிகள் எல்லாத்தையும் முடிந்த அளவில் முடக்க வேண்டும் இறுக்க வேண்டும். இதற்கு புலம் பெயர்ந்தவர்களும் உதவலாம்:

-1- தாயகத்தில் இருந்து உத்தியோகப்பற்றற்ற முறையில் தனிநபர்கள் மூலம் ஆர்வத்தினால் அங்கலாய்ப்பினால் எடுக்கப்படும் மனித அவலங்கள் இழப்புகள் அற்ற தகவல்கள். அப்படி எடுத்தவற்றை செய்தியாக கண்ணோட்டமாக ஆய்வாகப் போடுவதும் பரப்புவதும்.

-2- தாயகத்தில் யுத்தகளத்தில் வாழும் மக்களிற்கு என்ற நோக்கில் வெளியடப்படும் செய்திகள், தற்போதய நிகழ்வுகள் பற்றிய கண்ணோட்டங்கள் ஆய்வுகளை நாமாக தாயகத்துக்கு வெளியில் ஊடகங்களின் பெயரால் எடுத்து எதிரிக்கும் துரோகிக்கும் சுடச் சுடக் கொடுப்பது. அதனால் பலனடையும் எதிரி தனது புலநாய்வு வளங்களை இன்னமும் பெறுமதிவாய்ந்த தகவல்களை பெறுவதற்கு ஒதுக்க உதவுவது.

ஐயா குறுக்ஸ் உம் ஏதாவது உளவு ஏஜெண்டாகத் தான் வேலை செய்யுதோ? உந்த செய்திகளையும், ஆராய்ச்சியாளர்களையும் பார்க்க நமக்கு வயிற்றக் கலக்குதப்பா! :unsure::unsure::unsure:

google earth பற்றி அறிந்திருப்பீர்கள்.

இது 50 cm/pixel அளவு தரமான படங்களைக் காணலாம். பாதுகாப்புக் காரணங்களுக்காக இப் படங்களின் தரம் குறைக்கப்பட்டுள்ளது. இராணுவம் பாவிக்கும் விமானத்திலிருந்து எடுக்கப்படும் படங்கள் இதைவிட பல மடங்கு தரமானவை. இதன் மூலம் சிப்பாய் ஆணா பெண்ணா என்று முட்டாள்தனமாக ஆராயத்தேவயில்லை. எதிரியின் நிலைகளயும் நடமாட்டங்களையும் துல்லியமாகப் பார்த்தாலே போதுமானது.

தவிர, இதற்குத் தேவயான தொழில்நுட்பத்தை உலகெங்கிலும் தனியார் நிறுவனங்களிடம் பெற்றுக் கொள்ளலாம். படம் பிடிப்பதற்கு விமானமும் பணமும் தேவை.

இந்தக் கட்டுரை, ஆதிவாசிக்கு (யாழ் ஆதிவாசி அல்ல !) துப்பாக்கியைப் பற்றிக் கூறுவதுபோல் உள்ளது.

google earth இல் உள்ள படங்கள் எந்த ஒரு நாட்டின் அனுமதியையும் பெறாமல் அமெரிக்க சட்டலைட்டுகளும் விமானங்களும் எடுத்த படங்கள். இவர்கள் ஆரம்பத்தில் பல பிரச்சனைகளிக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. சில நாட்டு அரசாங்கங்கள் தமது அணு மின் நிலையங்களை படங்களில் அழித்துவிடுமாறு google ஐ கேட்டிருந்தது.

Edited by lisa01

இன்றுள்ள நிலையில் தற்போது களத்தின் நிலைப்பாடுகள் ஊடகங்களினாலும்

தொலைபேசி உரையாடல்கள் ஏனைய தனிநபர் தகவல்கள் மூலமே உளவுத்

தகவல்கள் பெறப்படுகின்றன. அது உண்மை பொய் என்ற வகையினை ஆராய்

வதற்கு உயர் தொழில்நுட்பங்களின் உதவிகள் பெறப்படுகின்றன. அதனாற்றான்

இன்று களத்திலிருந்து செய்திகள் வெளிவருவது மிகமிகக் குறைவாகவுள்ளது.

கண்காணிப்புக்குழுவிற்கும் இதேபிரச்சினைதான். உள்ளே இருந்து கொண்டும்

தகவல்களைப் பெறமுடியாதுள்ளதே என்ற வருத்தம். அதைத் தீர்த்துக்

கொள்வதற்குத்தான் பெருந்தாக்குதலுக்குத் தயாராகின்றார்கள் என்ற அறிவிப்பு.

அது பெறப்பட்ட உண்மையான தகவலல்ல. விடுதலைப்புலிகள் என்ன செய்கிறார்கள்

என்பதை அறிவதற்காக அவர்களின் வாயைக்கிளறுவதற்கு சொல்லப்பட்ட செய்தி.

உண்மையைச் சொல்லப்போனால் களத்தில் உள்ள மக்களுக்கே என்ன நடக்கிறது

என்பதில் சரியாகத் தெரியாது.

உண்மையான human intel asset மிகவும் பெறுமதியானது. ஆனால் அந்த asset உண்மை சொல்லுதா பொய் சொல்லுதா double agent ஆ என்ற குழப்பங்கள் இருக்கு. தொழிநுட்பத்தில் அந்தப் பிரச்சனை இல்லை ஆனா வேறு குழப்பங்கள். எல்லா வழிகளாலும் வரும் தகவல்களை இணைத்து பகுப்பாய்வு செய்து முடிவுகளை படிப்படியாக எடுத்து புதிருக்கான தீர்வை நோக்கிச் செல்வது தான் புலநாய்வு. அந்த integrated analysis process இற்கு feed பண்ணும் வழிகள் எல்லாத்தையும் முடிந்த அளவில் முடக்க வேண்டும் இறுக்க வேண்டும். இதற்கு புலம் பெயர்ந்தவர்களும் உதவலாம்:

-1- தாயகத்தில் இருந்து உத்தியோகப்பற்றற்ற முறையில் தனிநபர்கள் மூலம் ஆர்வத்தினால் அங்கலாய்ப்பினால் எடுக்கப்படும் மனித அவலங்கள் இழப்புகள் அற்ற தகவல்கள். அப்படி எடுத்தவற்றை செய்தியாக கண்ணோட்டமாக ஆய்வாகப் போடுவதும் பரப்புவதும்.

புலநாய்வு வளிகளில் தேவை அற்ற தகவல்களை மிகைப்படுத்தி வளங்கி குழப்புவதும் புலநாய்வு நடவடிக்கைகளிக்குள்த்தான் வருகிறது...

இரட்டை முகவர் என்பவர் எங்களுக்கு வேலை செய்கிறார் என்பதை அறியாது எதிரிக்கு வேலை செய்தால், நம்பகத்தன்மையை வேண்டி அவர்களுக்கு (எதிரிக்கு) ஓரளவாவது பொறுமதியான தகவல்களை வளங்க வேணும் என்பதை ஒத்துக்கொள்வீர்கள் எண்றால், மிக முக்கியனாமன தகவகள் எதிரியின் காதுகளுக்கு கொடுக்கப்படுகின்றன... அதுக்கான மாற்றீடுகள் இளப்புக்கள் அளவிடப்படாமல் செய்யப்படுவதில்லை என்பதையும் கொஞ்சம் உணர்ந்து கொள்ளலாமே..??

google earth இல் உள்ள படங்கள் எந்த ஒரு நாட்டின் அனுமதியையும் பெறாமல் அமெரிக்க சட்டலைட்டுகளும் விமானங்களும் எடுத்த படங்கள். இவர்கள் ஆரம்பத்தில் பல பிரச்சனைகளிக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. சில நாட்டு அரசாங்கங்கள் தமது அணு மின் நிலையங்களை படங்களில் அழித்துவிடுமாறு google ஐ கேட்டிருந்தது.

கூகிள் ஏத் எடுத்த படங்கள் பலதும் பழய படங்கள் என்பது அந்த படங்களின் மேல் மௌஸ் அம்புக்குறியை வைத்தீர்களானால் கடைசியாக எடுக்கப்பட்டதாக திகதி ஒண்றைச்சொல்லும் ...!

இந்தியாவும் அண்மையில் Google இணைய அதிகாரிகளை சந்தித்து சில உயர் பாதுகாப்பு வலய படங்களை தெளிவற்றதாக்க கோரிக்கை விடுத்துள்ளது.

Google Earth prompts Indian fears

Google is in talks with India about sensitive sites viewable via the Google Earth service.

Citing security worries the Indian government has asked Google to reduce the detail in a selection of images.

The government is drawing up a list of places it considers sensitive, which is expected to include military bases and government buildings.

Many other areas in Google Earth have been blurred by governments keen to stop people seeing sensitive sites.

The talks about blurring some locations viewable via Google Earth came out of a meeting between science and technology ministers from the Indian government and the search firm.

In a report in the Times of India, the Indian government said that detailed plans of buildings and accurate maps could prove a boon to extremists. India's fears were first aired in 2005 - soon after the service launched.

In a statement the search giant said: "Google has been talking and will continue to talk to the Indian government about any security concerns it may have regarding Google Earth.

"We are pleased to have initiated dialogue with the Indian government, the discussions have been substantive and constructive, but no agreements have been made."

It added: "We have committed to continue the dialogue".

The images used to create Google Earth are often taken by governments and other agencies which often blur or censor what can be seen. Sites obscured in this way have included nuclear power plants, official buildings and the offices of security services.

In "exceptional" circumstances Google said it too would blur images making up the virtual Earth.

This has prompted many people to scour Google's virtual Earth looking for the places where this blurring has occurred.

As its name implies Google Earth is a downloadable program that gives users access to a database of satellite photographs that have been stitched together to form a vast composite image of the planet. Image resolutions vary from 15m to 15cm.

Google has also started annotating parts of some images with 3D representations of important buildings and places.

http://news.bbc.co.uk/2/hi/technology/6331033.stm

புலநாய்வு வளிகளில் தேவை அற்ற தகவல்களை மிகைப்படுத்தி வளங்கி குழப்புவதும் புலநாய்வு நடவடிக்கைகளிக்குள்த்தான் வருகிறது...

இரட்டை முகவர் என்பவர் எங்களுக்கு வேலை செய்கிறார் என்பதை அறியாது எதிரிக்கு வேலை செய்தால், நம்பகத்தன்மையை வேண்டி அவர்களுக்கு (எதிரிக்கு) ஓரளவாவது பொறுமதியான தகவல்களை வளங்க வேணும் என்பதை ஒத்துக்கொள்வீர்கள் எண்றால், மிக முக்கியனாமன தகவகள் எதிரியின் காதுகளுக்கு கொடுக்கப்படுகின்றன... அதுக்கான மாற்றீடுகள் இளப்புக்கள் அளவிடப்படாமல் செய்யப்படுவதில்லை என்பதையும் கொஞ்சம் உணர்ந்து கொள்ளலாமே..??

நாம் எல்லாம் அனுபவம் நிறைந்த field officers/handlers மாதிரி Human intel asset அய் எப்படி நிர்வகிக்கிறது என்ற சிறுபிள்ளைத்தனமான வியாக்கியானம் ஏன்? :huh:

அருஸ் இன் கட்டுரையின் சாரமான தொழிநுட்பத்தில் கிடைக்கும் உளவுத் தகவலை விட களத்தில் உள்ள மனிதரால் வழங்கப்படுவது மேல் என்ற வாதத்திற்கு நடை முறையில் இன்னெரு பக்கமும் இருக்கு என்பது தான் நான் சொன்னது. மற்றும் படி கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் பற்றிய சந்தேகங்கள் நியாயமானவை. இது போன்ற விழிப்புணர்வுகளை நம் மக்கள் பெற வேண்டும். அது பற்றி எழுதியது மிகவும் வரவேற்கத்தக்கது. அமெரிக்கா பனிப்போர் காலத்தில் உளவிற்கு தெழில்நுட்பத்தையும் பணத்தால் வாங்கப்பட்டம் எதிர்த்தரப்பையும் பெருமளவில் நம்பியிருந்ததற்கு காரணம் அமெரிக்காவும் அதன் ஆதரவு மேற்குலகமும் பனிப்போரில் இயங்கிய கொள்கையும் அது பிரதிநிதித்துவப்படுத்திய வாழ்வு முறையும் தான். அதாவது capitalism இல் தனிமனிதர் ஒரு பொது நன்மைக்கா அர்பணித்து போராட வேண்டும் என்ற போதனை இருக்கவில்லை. மாறாக இற்கு எதிரான அமெரிக்காவின் பிரச்சாரங்கள் தனிமனிதர்கள் பொது நன்மை என்ற மாயைக்கு மூளைச்சலவை செய்கிறார்கள் என்றதாக இருந்தது. இந்த போதனைகளிற்கு முரணாக அமெரிக்காவோ அதன் ஏனை மேற்குலக ஆதரவு சக்திகளோ தனது உளவாளிகளை அர்பணிப்போடு களம் இறங்க வைக்கிறது இலகுவான விடையம் அல்ல.

சோவியத் பனிப்போரில் இயங்கிய கொள்கையும் அது பிரதிநிதித்துவப்படுத்திய வாழ்வு முறையும் பாரம்பரிய உளவு வேலைக்குரிய மனித வளங்களை தயார்ப்படுத்த களமிறக்க பொருத்தமானது. அமெரிக்காவிற்கு அந்த வசதியில்லததால் தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்து அதன் மூலம் குறைந்த இழப்புகளோடு எட்ட இருந்து பார்த்தது. சேவியத்தின் பாரம்பரிய உளவு என்பது தனிமனிதர்களின் அர்ப்புணிப்பினால் வந்தது அதலும் பல இழப்புகளை தொழிநுட்பத்தால் குறைத்திருக்கலாம். இஸ்ரேலைப் பொறுத்தவரை மனிதவளங்கள் அர்பணிப்போடு களமிறங்க தயாரானவர்கள் அவர்களை மேலும் பலப்படுத்த தொழிநுட்பமும் இருக்கிறது. அதாவது பனிப்போரில் சோவியத்திடம் இருந்த பலமும் அமெரிக்காவின் பலமும் கிட்டத்தட்ட இஸ்ரேலிடம் ஒருமித்து இருக்கிறது. இஸ்ரேலின் பலவீனம் அவர்களின் எதிரிகளின் desperation. அவர்களது எதிரிகளைப் பெறுத்தவரை இழக்க ஒன்றும் இனி இல்லை என்ற நிலையில் இருப்பதால் உருவாகும் அர்பணிப்பையும் உறுதியையும் எந்த தொழிநுட்பமும் முழுக்க தடுத்து நிறுத்த முடியாது. இதை நன்கு உணர்ந்தவர் இஸ்ரேலின் தற்போதை துணைப் பிரதமமந்திரியும் அடுத்த ஜனாதிபதியாவதற்கான சந்தர்பம் உள்ளவராகக் கருதப்படும் சிமோன் பெரஸ்.

தொழில்நுட்ப பலத்தில் இருக்கும் அதீத நம்பிக்கையால் சிலர் ஏமாற்றங்களை இழப்புகளை சந்திக்கிறார்கள் என்றால் அது அவர்களது judgement இல் உள்ள பிழையே அன்றி தொழில்நுட்பத்தில் அல்ல. அதை இழக்க இனி ஒன்றும் இல்லை என்று இருப்பவர்கள் செய்பவற்றேடு ஒப்பிட்டு தொழிநுட்பத்தைக் கொண்டவர்கள் பலவீனமாக இருக்கிறார்கள் என்று வியாக்கியானப்படுத்துவதை :huh:

தொழில் நுட்ப வசதிகளும் வாய்ப்புக்களும் உளவுதகவல்களில் நம்பகத்தன்மையின் விகித அளவில் மிக குறுகிய அளவே தொழில் நுட்பம் எண்று நீங்கள் சொல்லும் விடயங்களில் முக்கியமானதான செய்மதி பகலில் மட்டுமே தெளிவான படம்ங்களை அனுப்பும் தீறன் வாய்ந்தது இரவு நேர தகவல்கள் என்பது வேறுவிதமான கருவிகளை நாடவேண்டிய தேவைகுடுக்கும்...! ஆனால் பாரம்பரிய முறையை கொண்ட உளவாளி என்பவன் இரவு பகல் எந்த வேளையானாலும் அவனதோ/ அவளதோ நிலைகளை கொண்டு தகவல்களை பெற வசதி படைத்தவர்கள்... மிகவும் தேர்ச்சியாவனர்களால் ஒரு நாள் முழுவதும் பார்க்கும் விடயங்களை குறித்து கொள்ளவும் வரை படங்களை பதியவும் மனவளவில் நினைவாற்றல் கொண்டவர்கள்...

உளவு வேலைகளில் மிகவும் முக்கியமானதில் இன்னும் ஒண்று தொலை தொடர்பு சாதனங்களை ஒட்டு கேட்டல்... சாதாரனமானவர்களால் செய்ய முடியாத வேலை இது... சங்கேத சொற்களை உடைத்து ஒரு அட்டவளையை தயாரிப்பதுக்குள் எதிரி வேறு ஒரு அட்டவளையை தயாரித்து விடுவான்... அதவிட வெளிப்படையான சம்பாசனைகள் என்பது மிக குறைவான அளவில் இருப்பவை... அதில் சொல்லப்படும் சொற்களுக்கு அர்த்தம் கண்டு பிடிப்பது என்பது மிகவும் சிக்கலான விடயம்...

உதாரணமாக:- குறுக்கால போவானை மணலாற்றில் போடவும்... எண்று ஒரு செய்தி அனுப்ப பட்டால் இதை எப்படி அர்த்த படுத்தி கொள்ள முடியும்...?குறுக்காலபோவானை மணலாற்றில் மண்டையில் போடப்போகிறார்களா.? இல்லை பொறுப்பாக போடப்போகிறார்களா.. அதுக்கு விடை வேண்டி காத்திருக்க மட்டும்தான் முடியும்... ஆனால் இதுவே ஒரு உளவாளியினால் சொல்லப்படும் தகவல்கள் ஒரு முடிவை மட்டும் தான் குடுக்கும்... ( அவர் இரட்டை முகவர் என்பதை அறியாதவரை)

உண்மை தான்... துர நிண்டு சுட்டா துல்லியம் குறையும் கிட்ட நிண்டு சுட்டால் செல்லி விழுத்தலாம். சுட்டா சத்தம் கேட்டு மற்றவங்கள் அலேட்டாயிடுவங்கள். குண்டெறிஞ்சா செல் குத்தினால் இன்னும் தூரக் கேக்கும். தூர இருந்து உதவியளும் வரும் வில்லங்கம். ஒவ்வொருதார பதுங்கிப் போய் கத்தியாலை வெட்டியும் குத்தியும் கதையை முடிப்பம். பாரம்பரியமாக குறைந்த தொழிநுட்பத்தின்ரை உதவியில்லாமல் செய்யிறது தான் திறமையான விடையம் எங்கடை புதுத் தந்திரம். Sun Tuz இன் Art of War பிறகு கண்டு பிடிக்கப்பட்ட மாபெரும் போரியல் தந்திரம் இது தான். :wacko:

ஓம் ஓம் ஆமி கூகாரில அட்டவணை போட்டுத்தான் கதைக்கிறான். உள்ளுக்கு வாற LRRP காரங்களும் அட்டவணைப் படி சரிகம பதனி தான் படிக்கிறாங்கள். நீங்கள் பாரம்பரிய முறையில சிங் சக் போடு மத்தளத்தை தட்டி கண்டு பிடிப்பியளாம்.

:huh:

கேக்கிறவன் கேணையன் எண்டா எருமை மாடும் ஏரேப் பிளேன் ஓடுமாம்

�#8220;ம் �#8220;ம் ஆமி கூகாரில அட்டவணை போட்டுத்தான் கதைக்கிறான். உள்ளுக்கு வாற LRRP காரங்களும் அட்டவணைப் படி சரிகம பதனி தான் படிக்கிறாங்கள். நீங்கள் பாரம்பரிய முறையில சிங் சக் போடு மத்தளத்தை தட்டி கண்டு பிடிப்பியளாம்.

:huh:

கேக்கிறவன் கேணையன் எண்டா எருமை மாடும் ஏரேப் பிளேன் �#8220;டுமாம்

LRRP காறன்களை கண்டு பிடிப்பதில் எந்த பிரதேசங்களை கடக்க முயல்வார்கள் என்பதை அண்ணளவாக சம்பாசனைகளை ஒட்டு கேட்ப்பதின் மூலம் சொல்லி விடலாம்... அந்த பிரதேசம் குறைந்தது 20 கிலோ மீற்றர் சுற்றலவானதாக இருக்கலாம்...

ஒட்டு கேட்பதின் இலகுவான வளி ஒண்றை உதாரணமாக சொல்லலாம்:- உதாரணமாக குறுக்கால போவன் என்பவரின் பெயர் (அல்லது குறியீட்டு பெயர்) தொலைத்தொடர்பில் அடிக்கடி அடிபடும் இடங்களில் அதிகமான ஊடுருவல்கள் நிகள்வதாக அவதானிக்க முடிந்தால்... அது LRRP யின் செயற்பாடாக கொள்ள முடியும். அப்படியானால் குறுக்காலபோவன் LRRP யின் ஒரு இளநிலை அதிகாரியாகவோ இல்லை ஒரு பிளட்டூண் லீடராகவோ இருக்கலாம்... இப்படியான சில அதிகாரிகளின் ஆனேகர்களின் பெயர்களை சேகரித்து வைத்து இருந்தால் போது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை வைத்து சொல்லாம் அவர்களின் நடவடிக்கை என்னவாக அமையும் எண்று... அதோடு அவர்களின் உரையாடல் இல்லை எண்றால் அவர்கள் நடவடிக்கைக்காக வெளி வந்தாச்சு என்பதையும் சொல்ல முடியும், (ஆனால் எங்கு தாக்குதல் என்ன வகையான இலக்கு என்பது எல்லாம் வெறும் பகற்கனவு கண்டால் மட்டும்தான் கண்டு பிடிக்க முடியும்... )அதில் எந்த சிக்கலும் இல்லை... ஆனால் மறைவிடங்கள் அதிகமான ஒரு பிரதேசங்களில் இரவு நேரங்களில் நகரும் அவர்கள் எங்கு நிலை எடுத்து இருக்கிறார்கள் எங்கே நகர்ந்து உள்ளார்கள் என்பதை வேவு வீரர்களால் மட்டுமோ, அல்லது LP( Listeing position) ,OP (Observation position) அவதான நிலயங்களால் மட்டும்தான் அவதானிக்க முடியும்... அதுவும் Manuval ஆக...

மற்றது ஊடுருவி தாக்குதல் என்பது பழைய போர் முறைகளில் இல்லை... புதிய பரிணாமம்... பழைய போர் முறைகளான நானும் வாறன் நீயும் வா எண்டு தூரத்தில் இருந்து கட்டை உறுட்டி செண்று காரைநகர் முகாமை தகர்த்த செய்தியை கேள்வி பட்டுத்தானே இருப்பியள்...! மற்றது கத்தி என்பது இராணுவ வீரனுக்கு Silence kill மிகவும் உகர்ந்த ஆயுதம்... சென்றி மடக்குதல் எண்றும் சொல்வார்கள் அது போர் முறைகளில் ஒண்றுதான்...! அது நக்கல் அடிக்க ஒண்டுமே இல்லை கொஞ்சம் விசயம் இருக்கிறவைகூட செய்ய மாட்டார்கள்...

மற்றது Cord sheet பாவனையில் இல்லை என்பதையும் கூகரில், பவலோ( Buffalo and Cougar ) வில் தான் எல்லாரும் (பேசுகிறார்கள்) பாவிக்கிறார்கள் என்பதையும் எப்படி அடித்து சொல்லுறீயள்...?? அனுபவமோ..??

Edited by Thala

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.