Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக முதல்வராகிறார் சசிகலா: அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராகவும் தேர்வு

Featured Replies

  • தொடங்கியவர்
ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் பதவி சசிகலா முடிவால் மந்திரிகள் பலர் கலக்கம்

 

 

சசிகலா முதல்வராக பதவியேற்கும் போது, தற்போதைய அமைச்சர்களில், சிலரின் பதவியை பறித்து, அவர்களுக்குப் பதிலாக தன் ஆதரவாளர்களை அமைச்சராக்க திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இது, தற்போதைய, மந்திரிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ., அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்களே, பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்ற போது, அவரது அமைச்சரவையில் இடம் பெற்றனர். ஜெ., அமைச்சரவை பட்டியலை மாற்ற, அவர் விரும்பவில்லை.

இந்நிலையில், சசியின் நெருக்கடி காரணமாக, அவர் தன் முதல்வர் பதவியை துறந்துள்ளார்; புதிய முதல்வராக சசிகலா பொறுப்பேற்க உள்ளார். அவர், ஏற்கனவே அமைச்சர்களாக உள்ள சிலரை கழற்றி விட்டு, தன் ஆதரவாளர்களை அமைச்சர்களாக்க திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

அ.தி.மு.க., பொதுச் செயலராக மற்றும் முதல்வராக, தனக்கு ஆதரவு அளித்த, செங்கோட்டையன், ரெங்கசாமி, தங்கதமிழ்செல்வன், இன்பதுரை, செந்தில் பாலாஜி போன்றவர்களை அமைச்சர்களாக்க, சசிகலா முடிவு செய்துள்ளார்.

முதல்வர் பதவியை துறந்துள்ள பன்னீர்செல்வத்திற்கு, துணை முதல்வர் அல்லது சபாநாயகர் பதவி வழங்குவது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது. தற்போதைய அமைச்சர்களில், பாஸ்கரன், துரைக்கண்ணு, கருப்பண்ணன் போன்றவர்கள் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1704978

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

C35oRbzWYAAfJQ7.jpg:large

கமல்ஹாசன் எனும் தீர்க்கதரிசி....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன்டா சசிகலா-வை முதலமைச்சரா ஆக்குறீங்க? :grin:

 

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

ஜனநாயகத்துக்கு எதிரானது! சசிகலாவை எதிர்க்கும் காங்கிரஸ்

M Kharge

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, தமிழக முதல்வர் பதவிக்கு தேர்வானதை பற்றி கருத்து தெரிவித்துள்ள மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘சசிகலா நடராஜன் அதிமுக கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட இல்லாதவர். இவர்களை போன்றவர்கள் ஆட்சி அமைப்பது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது’ என வேதனை தெரிவித்துள்ளார். 

http://www.vikatan.com/news/india/79895-sasikala-natarajan-isnt-primary-member-of-her-party--m-kharge-congress.art

  • தொடங்கியவர்

சின்னம்மா முதல்வரானால்..? - இனி என்னலாம் நடக்கும் தெரியுமா?

'விரைவில் சசிகலா நடராஜன் என்கிற சின்னம்மா  தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ளார்'ங்கிற நியூஸைக் கேட்டதும் அப்டியே ஷாக் ஆகிட்டேன். படிச்சுப் பாருங்க உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும்...

சின்னம்மா

எப்படியும் சசிகலா முதல்வர் ஆனதை வாழ்த்தி ரத்தத்தின் ரத்தங்கள் லட்சகணக்கில் பேனர் அடித்து ஆலந்தூரில் இருந்து அம்பத்தூர் வரைக்கும் வரிசையாக மாட்டிவிடுவார்கள். அதை டிராஃபிக் ராமசாமி போன்றோர் கிழித்துவிடாத வகையில் பேனருக்கு ஒரு போலீஸ் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்.

வாழ்த்தி ஒட்டப்படும் போஸ்டர்களின் மேல் சிலர் நாட்டு மாட்டினம் போடும் ஏ1 வகை சாணத்தை அடித்து அசிங்கப்படுத்தவும், ஆடுகளை வைத்து போஸ்டர்களை தின்ன வைக்கவும் வாய்ப்புகள் இருப்பதால்,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெயலலிதா ஆட்சியில் வழங்கப்பட்ட ஆநிரைகள் மீண்டும் தற்போதைய அரசால் கைப்பற்றப்படும்.

டெல்லி நாடாளுமன்றத்தில் காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு கண்டிப்பாக 'தேர் இஸ் எ சாங் அபவுட் அவர் சிஎம் இன் சக்கரைக்கட்டி - சோ ச்வீட் மூவி. சின்னம்மா சிலக்கம்மா நில்லு நில்லு நில்லு... ஒன்ஸ் அகைன் ஐ ரிப்பீட்..சின்னம்மா சிலக்கம்மா...' என பாடுவார் 'காஷ்மீர்' நவநீதகிருஷ்ணன். 

ஜெயா நியூசில்  பேட்டி கொடுப்பவர்கள் இனிமேல் ' மாண்புமிகு, சின்ன தங்கத்தாரகை, சின்ன இதயதெய்வம், சின்ன புரட்சி தலைவி, கழகத்தின் பொதுச்செயலாளர், அம்மாவின் சகோதரி, தமிழக முதல்வர் சின்னம்மா அவர்கள்' என்று தான் பேச ஆரம்பிப்பார்கள். அவ்வ்வ்...

sasi_12322.jpg

ஜெயா நியூசில் இனி 'அம்மா நினைவிடத்திற்கு வந்த பார்வையிட்ட மங்கோலிய நாட்டு மக்கள், ரஷ்யா நாட்டின் ரோஷால் நகரத்திற்கு அருகில் உள்ள குக்கிராமத்தில் மழை பெய்து சாலைகளில் தண்ணீர் தேங்கியிருக்கிறது' போன்ற நியூஸ்கள் ஓரங்கட்டபட்டு 'சின்னம்மா இன்று காரம் கம்மியாக காலி ஃபிளவர் பக்கோடா சாப்பிட்டார்' போன்ற செய்திகள் வர ஆரம்பித்துவிடும்.

'ஒட்டு சிட்டு ஓணா முட்ட லைக் பண்ணலைனா டொம்மு, மென்டோஸ் மாமா, தில் இருக்குற ஆம்பளைங்க லைக் பண்ணாதீங்க' போன்ற முகநூல் பக்கங்களில் சின்னம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்து மீம்ஸ் போடப்பட்டது' போன்ற செய்திகளையும் இனி அதிகம் காணலாம்.

அம்மா உணவகம், அம்மா கேபிள் வரிசையில் சின்னம்மா சிடி கடை வர வாய்ப்புள்ளது. 'இது அருமையான ஒரு திட்டம். இதனால், பல சிடி விற்பனையாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்' என விஷாலே ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ போடுவார்.

இனி ' தலைவன்' பாஸ்  மாதத்திற்கு நான்கு படங்கள் நடித்து விமலின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கலாம். சின்னம்மாவின் உத்தரவால் மழை பொழிந்தது, டொனால்டு டிரம்புக்கே முன்மாதிரியாக திகழ்கிறார், சின்னம்மா நினைத்தால் சீனாவுக்கே அதிபராகலாம்' என அடிக்கடி பேசி, யாராவது இனி பதறவைப்பார்கள்.

http://www.vikatan.com/news/politics/79904-what-might-happen-next-as-sasikala-becomes-next-cm-of-tn.art

  • தொடங்கியவர்

“என்னை முட்டாள் என்பீர்கள்... சசிகலாவும் ஒரு நாள் முதல்வர் ஆவார்!” - 20 ஆண்டுகளுக்கு முந்தைய குரல்

ஜெயலலிதா

பிரபல ஜோதிடர் அவர். எம்.ஜி.ஆர் உள்ளிட்ட தமிழகத்தின் பல பிரபலங்களுக்கும் எதிர்காலத்தை கணித்துச்சொன்னவர்.  திரைத்துறையில் ஈடுபட்டு பெரிய நடிகரான எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்து பெரிய அளவில் பொருளாதார ஏற்றம் கண்ட அவர் பின்னாளில் சில படங்களில் கையை சுட்டுக்கொண்டார்.

சினிமாத்துறையில் எல்லோருக்கும் அதிர்ச்சி. பலரது எதிர்காலத்தை சரியாக கணித்துச் சொன்னவர், தனது எதிர்காலத்தை கணிப்பதில் கோட்டை விட்டது ஏன்... இந்த கேள்வியை அவரது சக தயாரிப்பாளர் ஒருவர் மனம் கேட்காமல் அவரிடமே ஒருநாள் கேட்டுவிட்டார். பெருமூச்சை இழுத்து விட்டபடி இப்படி சொன்னார் தயாரிப்பாளர். “ஜோதிடம், ஜாதகம் என்பதெல்லாம் ஒரு கட்டம் வரைக்கும்தான் பலிக்கும். ஏதோ பெரிய நட்டத்தில் இருந்து சுதாரித்துக்கொள்ளலாமே தவிர...எல்லாவற்றையும் தவிர்த்துக்கொள்ளமுடியாது. எவ்வளவுதான் எச்சரிக்கை உணர்வோடு நீங்கள் நடந்துகொண்டாலும் ஒரு மனிதனுக்கு கெட்டநேரம் என்று வந்துவிட்டால் காலம் அவனது கண்ணைக் கட்டி நடுத்தெருவுக்கு கொண்டுவந்து நிறுத்திவிடும்” என்றார் வேதனையான குரலில்.

அவர் சொன்னது நிஜம்தான் என்பது தமிழக அரசியல் நிலவரம் நமக்கு இன்று புரியவைக்கிறது. தமிழகத்தின் கண்களை காலம் கட்டிவிட்டு சில சம்பவங்களை அரங்கேற்றத்துவங்கியிருக்கிறது இப்போது. சசிகலா இன்னும் சில தினங்களில் கோட்டையில் குடியேற இருக்கிறார்.!

தமிழகம் சந்திக்கப்போகும் இந்த அபாயத்தை ஜோதிடங்களை கற்றுத்தேர்ந்த நிபுணர்களும், ஜாதக பலாபலன்களை ஆய்ந்து அதில் ஜல்லிக்கட்டு விளையாடும் பண்டிதர்களே கூட நேற்றுவரை சொல்ல முடியாத நிலையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே வலம்புரிஜான் அழுத்தந்திருத்தமாக பதிவு செய்திருக்கிறார் என்பது ஆச்சர்யமான விஷயம். வார்த்தைச் சித்தரான வலம்புரிஜான் தமிழக மெத்தப் படித்த மேதைகளின் வரிசையில் இடம்பெறத் தகுதிபெற்றவர். ஜெயலலிதாவுக்கு அவரது அரசியலின் ஆரம்பநாளில் நெருங்கிய நண்பர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சசிகலா இவர்களுக்கிடையேயான மூன்று முடிச்சுகளை அவிழ்க்கும் விதமாக பல கட்டுரைகளை 90 களின் மத்தியில் விறுவிறுப்பாக எழுதியவர்.

சசிகலா

சசிகலா, ஜெயலலிதாவின் தோழி என்ற பிம்பத்தில் மட்டுமே தமிழக மக்களால் பார்க்கப்பட்டுவந்த 90 களின் மத்தியில் பிரபல வார இதழ் ஒன்றில் அவர் எழுதிய கட்டுரையில் இப்படி சொல்லியிருந்தார் வலம்புரிஜான். “ஒரு நடிகையாக இருந்து தனது சக குருவின் அரசியல் வாழ்வில் இணைந்து ஜெயலலிதா இன்று தமிழகத்தின் முதல்வராக ஆனதையே நம்மால் ஜீரணித்துக்கொள்ளமுடியாமல் இருக்கிறோம். ஆனால் ஜெயலலிதா முதல்வரானது கூட அதிக ஆச்சர்யம் அடையவேண்டிய விஷயமில்லை. திறமையான நிர்வாகி, படிப்பாளி, ஒரு கட்சியில் பெருந்தலைகளுடன் போராடி இந்த இடத்திற்கு வந்தார். ஆனால் இதையெல்லாம் விட ஒரு ஆச்சர்யமும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் ஒன்று. இன்று இல்லையென்றாலும் என்றேனும் ஒருநாள் நடந்தே தீரும். அது சசிகலா முதல்வராகும் நாள்!...

நான் இதை சொல்வதால் என்னை பைத்தியக்காரன் என்று கூட சொல்லலாம். ஆனால் தனது பலஹீனங்களை எல்லாம் பலமாக்கிக்கொண்டு ஜெயலலிதா ஒருநாள் முதல்வரானதுபோல் அவருடைய நிழலாகவே இருக்கிற சசிகலாவும் ஒருநாள் முதல்வராவார். அதற்கான பால பாடங்களை ஜெயலலிதாவிடமிருந்தே அவர் கற்றுக்கொண்டிருக்கிறார். சசிகலா முதல்வராவதற்கு இன்று ஜெயலலிதாவால் விரட்டி விரட்டி அடிக்கப்படும் நடராஜனே முக்கிய பங்கு வகிப்பார். தமிழகம் இந்த துயரையும் சந்தித்துத்தான் தீரவேண்டும். அப்படி ஒருநாள் வரும்போது என்னை நினைத்துப் பார்ப்பார்கள் தமிழர்கள்” - 'கல்லறைகள் பிளக்கும் நாற்காலிகள் நடுங்கும்' என்ற தலைப்பில் அந்த வார இதழில் தனது அரசியல் பயணத்தையும் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வின் ஏற்ற இறக்கங்களையும் எழுதிய தொடரில்தான் இப்படி பதிவு செய்திருந்தார் வலம்புரிஜான்.

சசிகலா

 

வலம்புரிஜான் அன்று சொன்னது அச்சு பிசகாமல் கிட்டதட்ட 20 வருடங்களுக்குப்பின் நடந்தேறியதை பார்க்கிறபோது வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் உண்மையிலேயே தீர்க்கதரிசி என்றே சொல்லத்தோன்றுகிறது. ஆனால் ஒரே குழப்பம், வலம்புரிஜான் இப்படி கணித்தது, சசிகலாவின் சாதுர்யத்தை அடிப்படையாக கொண்டா...அல்லது, தமிழகத்தின் விதி இப்படித்தான் இருக்கும் என கடந்தகாலத்தை கணக்குப்போட்டா என்று தீர்க்கதரிசி வலம்புரிஜானுக்கு மட்டுமே வெளிச்சம்!

http://www.vikatan.com/news/tamilnadu/79925-sasikala-will-become-chief-minister-in-future-this-man-said-20-years-ago.art

  • தொடங்கியவர்

சசிகலா முதல்வராகக்கூடாது! உச்சநீதிமன்றத்தில் மனு

   சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒரு வாரத்தில் வர உள்ளதால் சசிகலா, முதல்வராகக்கூடாது என்று சட்ட பஞ்சாயத்து இயக்க பொதுச் செயலாளர் செந்தில்ஆறுமுகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  

 

சசிகலா

 

 ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். அடுத்து ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் முதல்வராக சசிசலா தேர்வு செய்யப்பட்டார். இதனால், ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தமிழக முதல்வராக சசிகலா, நாளை பதவி ஏற்க உள்ளார். இதற்கான பணிகள் துரிதமாக சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடந்து வருகின்றன. 
 முதல்வராக சசிகலாவை அறிவித்தவுடன் நிலுவையில் இருந்த சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒரு வாரத்துக்குள் அறிவிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது சசிகலா தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் தீர்ப்பு குறித்து சசிகலா தரப்பு கார்டனில் ஆலோசனை நடத்தி வருகிறது. 
 இந்நிலையில் சசிகலா, பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் சென்னையில் நடத்தப்பட்டது. அடுத்து சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்யப்பட்டது. தற்போது தமிழக முதல்வராக சசிகலா அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்யப்பட்டுள்ளது. 

 இதுகுறித்து சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் கூறுகையில், "தமிழகத்தில் ஊழற்ற ஆட்சி நடைபெற வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். ஆனால் சொத்துக்குவிப்பு, ஊழல் விவகாரத்தில் சிக்கிய சசிகலா தமிழக முதல்வர் என்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால்தான் அவர், அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரானதும் எங்களது எதிர்ப்பை தெரிவித்தோம். தற்போது முதல்வராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. கர்நாடக உச்ச நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு ஒருவாரத்தில் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு சசிகலா தரப்புக்கு பாதகமாக வரும்பட்சத்தில் அவர் முதல்வராகியிருந்தால் தமிழகத்துக்கு மீண்டும் அவமானம் ஏற்பட நேரிடும். எனவே, தீர்ப்பு வரும் வரை சசிகலா, முதல்வராகக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளோம். இந்த வழக்ககை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளோம். தற்போது தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை, குடிநீர் தட்டுப்பாடு, வறட்சி உள்ளிட்ட மக்களின் பிரச்னைகளில் அக்கறை செலுத்தாமல் பதவிகளை பெறுவதிலேயே ஆளுங்கட்சியினர் அக்கறை செலுத்தி வருவது வேதனைக்குரியதாக உள்ளது"என்றார். 

http://www.vikatan.com/news/tamilnadu/79945-sasikala-should-not-become-chief-minister-petition-filed-in-court.art

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

தமிழக முதல்வராகிறார் சசிகலா
 

 

 
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • தொடங்கியவர்

ஆளுநருடன் பொன்.ராதாகிருஷ்னன் திடீர் சந்திப்பு!

pon_radhakrishnan-_TN_Governnor_vidyasag

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, சட்டசபைத் தலைவராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின்  ராஜினாமாவை இன்று ஆளுநர் ஏற்றுக் கொண்டதாக அதிகாரபூர்வமாக அறிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நாளை காலை பதவி ஏற்பார் என்று தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், டெல்லியில் ஆளுநர் வித்யாசாகர் ராவை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் இன்று திடீரென சந்தித்து பேசினார். தமிழக அரசியல் சூழ்நிலைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக டெல்லி வட்டராங்கள் தெரிவிக்கின்றன.

http://www.vikatan.com/news/india/79970-ponradhakrishnan-meets-governor.art

  • தொடங்கியவர்

சசிகலா பதவியேற்பு தள்ளிப்போகிறது?

சசிகலா

மிழக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா பிப்ரவரி 7 அல்லது 9-ம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்பார் என கூறப்பட்டுவந்தது. 

இந்நிலையில் ஊட்டியில் குடும்பத்துடன் தங்கியிருந்த தமிழக கவர்னர்(பொறுப்பு) வித்யாசாகர் ராவ், நாளை கோவையில் தான் கலந்துகொள்ள விருந்த பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு, தனியார் மருத்துவமனை நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, இன்று மாலை 6.45 மணிக்கு டெல்லி சென்றுவிட்டார்.

கவர்னர் வித்யாசாகர் ராவ், வரும் பிப்ரவரி 9-ம் தேதி வரை பல மாநிலங்களிலும் அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டிருக்கிறார். அத்துடன் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும், அடுத்த முதல்வர் மற்றும் அமைச்சரவை பதவியேற்கும் வரை தற்போது இருக்கும் அமைச்சரவையே பதவியில் நீடிக்கும் எனவும் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் சசிகலா முதல்வராக பதவியேற்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகிறது. ஆனால் இதுவரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் தரப்பில் இருந்து, பதவியேற்பு விழா எப்போது நடத்தப்படும் என்பது பற்றி உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.  இதில் சசிகலா தரப்பு  அதிருப்தியில் இருப்பதாக போயஸ் கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே சசிகலா முதல்வராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

http://www.vikatan.com/news/tamilnadu/79982-shashikala-sworn-going-away.art

  • தொடங்கியவர்

சசிகலா தேர்வு : பிரபலங்களின் அதிருப்தி ட்வீட்கள்

 
 

தமிழக சட்டமன்ற குழுத் தலைவராக நேற்றைய தினம் (ஞாயிறு) அ.தி.மு.கவின் பொது செயலாளாரான சசிகலா நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தமிழகத்தை சேர்ந்த பல பிரபலங்களும் தங்களுடைய அதிருப்தியை நேரடியாகவும், மறைமுகமாகவும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

சசிகலாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

சசிகலா தேர்வு குறித்து இணையத்தில் பிரபலமாகும் மீம்களின் தொகுப்பு

காமராஜர் மற்றும் அண்ணா அமர்ந்த நற்காலி

தங்களுடைய தலைவரை தேர்வு செய்யும் உரிமை அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இருப்பதைப்போல், அவர் முதல்வர் பதவிக்கு தகுதியானவர் தானா என்பதை கேள்வி கேட்கும் உரிமை பொதுமக்களுக்கு இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம்படத்தின் காப்புரிமைTWITTER

மேலும், காமராஜர் மற்று அண்ணா போன்றோர் அமர்ந்த முதல்வர் நாற்காலியை பெருமையுடன் திரும்பிப்பார்ப்பதாகவும், அ.தி.மு.க மற்றும் தமிழகத்தில் உள்ள மக்கள் எதிர்திசையில் பயணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின் என்ற குறளை மட்டும் கமல் ஹாசன் ட்விட்டரில் பதிந்துள்ளார். வலியறிதல் என்ற அதிகாரத்தில் வருகிறது இக்குறள்.

கமல் ஹாசன்படத்தின் காப்புரிமைTWITTER

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும் என்பது குறள் விளக்கம்.

ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு விரோதமான சம்பவம்

மக்களுடைய விருப்பத்திற்கு எதிராகவும், அதேபோல அம்மையார் ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு விரோதமாகவும் ஒரு சம்பவம் இன்றைக்கு அரங்கேறி இருக்கின்றது என்ற தி.மு.கவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்படத்தின் காப்புரிமைFACEBOOK

பேரழிவிற்கு பின்பே புதிய அத்தியாயம்

ஒவ்வொரு பேரழிவிற்கு பின்பே புதிய அத்தியாயம் பிறக்கிறது என்று தமிழ் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

234 வேலை வாய்ப்புகள்

தமிழகத்தில் உள்ள எல்லா இளைஞர்களுக்கும், 234 வேலைவாய்ப்புகள் கூடிய விரைவில் திறக்கப்பட உள்ளது என்று கிரிக்கெட் நட்சத்திரமான அஷ்வின் ட்வீட் ஒன்றை தட்டினார். அது மிகவும் அதிகமாக பகிரப்பட்ட நிலையில், இரண்டு மணி நேரம் கழித்து அந்த ட்வீட் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்திற்காக போடப்பட்டது என்று விளக்கம் அளித்தார் அவர்.

அஷ்வின் ட்வீட்படத்தின் காப்புரிமைTWITTER Image captionஅஷ்வின் ட்வீட்

வேட்பாளர் தகுதியின் அவசியத்தை புரிந்து கொள்ளுங்கள்

பன்னீர் செல்வமாக இருப்பதற்கு ஒரு தனி மனநிலை வேண்டும் என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி, இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சுயமாக, தமிழக நலனுக்காக சிந்திப்பார்கள் என்றா மக்கள் வாக்களித்தார்கள் வேறென்ன எதிர்பார்க்க முடியும் என்றும், அதிமுகவின் ஜனநாயகமற்ற, சுயமரியாதையற்ற சர்வாதிகார செயல்பாடுகளை ஜெ., இருந்தபோது கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டதன் விளைவு இது என்றும் கூறியுள்ளார்.

ஜோதிமணிபடத்தின் காப்புரிமைFACEBOOK

மேலும், நமது தொகுதியின் வேட்பாளர் தகுதியைப் பற்றி கவலைப்படாமல் ஒற்றைத் தலைவருக்காக வாக்களிப்பதன் அபத்தத்தை இப்பொழுதாவது நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

முழுமையான பேரழிவு

இது ஒரு முழுமையான பேரழிவு என்றும், நம்மை அழிவு எதிர்நோக்குகிறது என்று அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

குஷ்புபடத்தின் காப்புரிமைTWITTER

மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்

சசிகலா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தன் அதிருப்தியை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ்படத்தின் காப்புரிமைTWITTER

மேலும், சசிகலா படத்தை கிழித்தவரை அடித்து உதைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பழைய தொழில் மறந்து விடக் கூடாது என பயிற்சி எடுத்திருப்பார் என்றும் கிண்டல் செய்து பதிவு போட்டுள்ளார்.

http://www.bbc.com/tamil/india-38879539

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டுக்கு இனி மேல் நல்ல காலம் ஆரம்பமாயிட்டு...எதிர் வரும் காலங்களில் இளம் தலைமுறையினரின் கையில் தமிழ்நாடு வந்து விடும்

  • தொடங்கியவர்
ஜெ., வீட்டில் வேலை செய்த
சசிகலாவை எப்படி ஏற்றுக்கொள்வர்?
அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் முனுசாமி ஆவேசம்
 
 
 

கிருஷ்ணகிரி:''ஜெயலலிதா வீட்டில் வேலை செய்த சசிகலாவை, மக்கள் எப்படி முதல்வராக ஏற்று கொள்வர்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tamil_News_large_170564620170206231543_318_219.jpg

 

காவேரிப்பட்டணத்தில் அவர் அளித்த பேட்டி:


அ.தி.மு.க., சட்டசபை உறுப்பினர்கள், சட்டசபை குழு தலைவராக சசிகலாவை தேர்ந்தெடுத்துள்ளனர். 'ஜெயலலிதா இல்லத்தில் வேலை செய்கிறேன்' என்ற போர்வையில், சசிகலாவும் நடராஜனும் ஜெயலலிதாவின் பதவியை கைப்பற்ற திட்டம் தீட்டி வந்துள்ளது நன்றாகவே புலப்படுகிறது.

ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமென்றால், அவர்கள் பிராயச்சித்தம் தேடியே ஆக வேண்டும். அதற்கு, சட்டசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்த, அந்த பதவியே வேண்டாம் என்று வெளியே வர வேண்டும்.
 

ஜெ.,க்கு துரோகம்


அப்படி நீங்கள், பதவியை ராஜினாமா செய்ய வில்லை என்றால், நீங்கள் ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்திருக்கிறீர்கள். அப்படி துரோகம் செய்த நீங்கள், ஜெயலலிதாவின் இல்லத்தில் இருப்பதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. உடனடியாக அந்த இல்லத்தை விட்டு வெளியேற வேண்டும். திராவிட இயக்க வரலாற்றில், இந்த இயக்கத்தை உருவாக்கி, அண்ணாதுரை முதல்வர் ஆனார். எம்.ஜி.ஆர்., மக்களை நேசித்து, தியாகம் செய்து, உழைத்து முதல்வர் ஆனார்.

ஜெயலலிதா மக்களை நேசித்து, தியாகம் செய்து முதல்வர் ஆனார். தி.மு.க., தலைவர் கருணாநிதியும் உழைத்து, மக்களை நேசித்து முதல்வர் ஆனார். இது, திராவிட இயக்கத்தின் வரலாறு. ஆனால், எந்தவித அரசியல் தியாக மும் செய்யாமல், எந்தவித அரசியல் வரலா றும் இல்லாமல், சதி கும்பலின் தலைவராக இருந்து சதி செய்து, ஜெயலலிதா மறைந்த,

60 நாட்களுக்குள், பின்புற வாசல் வழியாக, சசிகலா இந்த பதவியை ஏற்க உள்ளார்.

திராவிட அரசியல் வரலாற்றில், இந்த பதவி யேற்பு என்ற வைபவம், ஒரு கருப்பு சரித்திர மாகவே மாறும். தயவு செய்து, வரலாற்றில் கரும்புள்ளியை ஏற்படுத்த வேண்டாம். முதல்வராக இருந்த பன்னீர் செல்வத்திற்கு, ஒரு கருத்தை சொல்ல விரும்பு கிறேன். காரணம், இந்த குடும்பத் தின் வாயிலாக அவர் அரசியலுக்கு வந்துஇருந்தாலும் கூட, இரண்டு முறைஜெயலலிதா, முதல்வர் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்து இருக்கிறார்.

நடந்தது என்ன?


ஜெயலலிதா கொடுத்த பொறுப்பை, நீங்கள் ஏன் சசிகலாவுக்கு விட்டு கொடுத்தீர்கள். உங்களுக்கு என்ன நிர்பந்தம் வந்தது?நேற்று வரை, நல்ல முறையில் செயல்பட்ட முதல்வர், மக்கள் மத்தி யில் செல்வாக்குடன் வளர்ந்து வந்த முதல்வர், சசிகலா வீட்டுக்கு சென்றதும், இரண்டு மணி நேரத் திற்குள்ளாக ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளீர்கள் என்றால் அந்த வீட்டில் என்ன நடந்தது?

முதல்வர் பொறுப்பு, ஜெயலலிதா உங்களுக்கு கொடுத்தது. அந்த பொறுப்பை, அந்த வீட்டில், இரண்டு மணி நேரத்திற்குள்ளாக சசிகலா, தினகரன், நடராஜன், டாக்டர் வெங்கடேசனிடம் அடகு வைத்து வந்துள்ளீர்கள்.எவ்வளவு பெரிய துரோகத்தை, நீங் கள் ஜெயலலிதாவிற்கு செய்திருக்கிறீர்கள். இதற்கு நீங்கள் விளக்கம் அளித்தாக வேண்டும்.

ஜெயலலிதா வீட்டில் பணி செய்து கொண்டிருந்த சசிகலாவை, அ.தி.மு.க., தொண்டர்கள் எப்படி ஏற்றுக் கொள்வர்; மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வர். அ.தி.மு.க., சட்டசபை உறுப்பினர்கள் அத்தனை பேருக்கும் அன்பான வேண்டுகோள். இன்று, உங்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவை, ஒரு தொண்டனும் ஏற்றுக் கொள்ளவில்லை; ஒரு வாக்காளரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

தொண்டர்களால், பொதுமக்களால் ஏற்று கொள்ளப்படாத சசிகலாவை, சட்டசபைஉறுப்பினர் களான நீங்கள் ஏன் ஏற்றுக் கொண்டீர்கள்.
 

தீவிர விசுவாசி


ஆகவே, நீங்கள் மறுபரிசீலனை செய்து, ஜெய லலிதாவிற்கு துரோகம் செய்த சசிகலா குடும் பத்தை வெளியேற்ற உறுதுணையாக இருங்கள். சதி செய்கின்ற இந்த கூட்டத்தை வெளியேற்றிவிட்டு, ஒரு புதிய முதல்வரை நீங்கள் உருவாக்க வேண்டும்.நான், தி.மு.க., - பா.ஜ., துாண்டு தலின் பேரில் இவ்வாறு பேசிவருகிறேன் என

 

கூறுகின்றனர். நான் எப்போதும், அ.தி.மு.க., வின் தீவிர விசுவாசி. இவ்வாறு அவர் கூறினார்.
 

நடராஜன் மீது சந்தேகம்


முன்னாள் அமைச்சர் முனுசாமி கூறியதாவது:

நேற்று முன்தினம், திடீரென உடல்நலம் சரியில்லை என, அப்பல்லோ மருத்துவமனை யில் நடராஜன் சேர்ந்துள்ளார். ஆனால் நேற்று, அதே மருத்துவமனையில் மறைந்த ஜெய லலிதாவின் மருத்துவ அறிக்கையை, அந்த நிர்வாகம் வெளியிடுகிறது.

இந்த மருத்துவ அறிக்கையை, நிர்வாகம் எப்படி வெளியிடு கிறது என்பதை கண்காணிப்பதற்கா வும், அதில் தங்களுக்கு எந்தவித சிக்கலும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், இவர் மருத்துவ மனையில் போய் தங்கிஇருக்கிறார் என்ற சந்தேகம், மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இதற்கு அப்பல்லோ மருத்துவமனை விளக்கம் அளிக்க வேண்டும்.

ஏனென்றால், ஒரு நாட்டின் தலைவரை நாங்கள் இழந்திருக்கிறோம். ஒரு நாட்டின் தலைவரை, 75 நாட்களாக சசிகலா உத்தரவின் படி, யாருக்கும் நீங்கள் காட்டவில்லை.ஒரு தொண்டனில் இருந்து முதல்வராக பொறுப்பு வகித்த பன்னீர்செல்வம் வரை, யாருக்கும் காட்டவில்லை. சசிகலா சொன்னார் என்பதற் காக யாருக்கும் காட்டவில்லை. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை, அறிக்கையாக இந்த மருத்துவ மனை குழு அளிக்க இருக்கிறது.

லண்டனில் இருந்து டாக்டர் வந்திருக்கிறார் என்று சொன்னால், இதில் ஏதாவது தவறு நடக்கிறது என்று சொன்னால், அதற்கு இந்த நிர்வாகமும், நடராஜனும் தான் பொறுப்பேற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1705646

சசிகலா  முதல்வர் ஆகும்  விடயத்தில்  ஏன் இவ்வளவு குழப்பங்கள், அவர் தனது கட்சி சார்பாக முதல்வராக முன்மொழிய பட்டுள்ளார்,  சட்டசபையில் தனது பெரும்பாண்மையை நிரூபித்து, ஏதோ ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் ..... எல்லாம் ஜனநாயக (?) முறைப் படி சரியாகத் தானே நடக்கிறது. இது வரை ஜெயலலிதவை சசிகலா குடும்பம் தான் பின்னால் இருந்து இயக்குகிறார்கள்... என சொன்னார்கள் அப்படியாயின் இப்போது சசிகலாவே நேரடியாக முதல்வர் ஆனால்..... அவரும் ஜெயலலிதாவின் ஆட்சியை போல் ஒரு ஆட்சியைத் தானே தருவார்...  ஜெயலலிதாவின் ஆட்சியை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இதிலென்ன பிரச்சினை? 
இவர் முதல்வர் ஆனால் தமிழ்நாடு சிறப்பாக முன்னேறும் என யாரையாவது சுட்டிக்காட்ட முடியுமா..? எல்லாரும் கள்ளப் பயல்கள் தான்,
உண்மையிலேயே சீமான் மிகச் சிறப்பாகவே தனது கருத்துகளை முன் வைத்தார் , அவரது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதவர்கள் , அவரை தனிப்ப்ட்ட ரீதியில் தூற்றினார்கள்....., கம்னியூஸ்ட்கள் இப்போது உள்ளவர்களை விட மிகவும் சிறப்பாக செயற்படக் கூடியவர்கள்.... ஆனால் அவர்களுக்கும் இடமில்லை.... 
இந்நிலையில் , ஜெயலலிதா எனும் பிசாசு போய் , சசிகலா எனும் பேய் வந்தால் என்ன , தி.மு.க எனும் அரக்கர் கூட்டம் வந்தாலென்ன....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 5.2.2017 at 11:10 AM, ராசவன்னியன் said:

21BUTTONPINS16-blog225-v16.jpg

மன்னிக்கவும் ராசவன்னியன்.
தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவிலேயே(இலங்கை உட்பட) ஒரு சுத்தமான அரசியல்வாதியை சொல்லிவிட்டு இந்த கல்வெட்டை சரித்து வையுங்கள்.

சசிகலா முதல்வராக வருவதை எதிர்ப்பவர்கள் எந்தளவிற்கு யோக்கியர்கள்?
கருணாநிதி,ராமச்சந்திரன் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும் சுத்தமானவர்களா?
அனைவரும் அரசியல் அனுபவம் பெற்றா ஆட்சி செய்தார்கள்?
பாடசாலை, பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்றா ஆட்சியமைத்தார்கள்?

ஆயாவாக இருந்தவரை எதிர்ப்பவர்கள் ஏன் தேனீர் ஆத்திய மோடியை எதிர்க்கவில்லை? தேனீர்க்கடை பன்னீரை எதிர்க்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

மன்னிக்கவும் ராசவன்னியன்.
தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவிலேயே(இலங்கை உட்பட) ஒரு சுத்தமான அரசியல்வாதியை சொல்லிவிட்டு இந்த கல்வெட்டை சரித்து வையுங்கள்.

சசிகலா முதல்வராக வருவதை எதிர்ப்பவர்கள் எந்தளவிற்கு யோக்கியர்கள்?
கருணாநிதி,ராமச்சந்திரன் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும் சுத்தமானவர்களா?
அனைவரும் அரசியல் அனுபவம் பெற்றா ஆட்சி செய்தார்கள்?
பாடசாலை, பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்றா ஆட்சியமைத்தார்கள்?

ஆயாவாக இருந்தவரை எதிர்ப்பவர்கள் ஏன் தேனீர் ஆத்திய மோடியை எதிர்க்கவில்லை? தேனீர்க்கடை பன்னீரை எதிர்க்கவில்லை?

வணக்கம் திரு.குமாரசாமி..

அரசியலில் யாரும் பரிசுத்தமானவர்களோ, யோக்கியர்களோ இல்லை.. உண்மைதான்!

ஆனால் வெகுசன மக்களின் முன் தன்னைப்பற்றி உருவகப்படுத்துதல் மிக முக்கியமானது.. அது நாட்டைப்பற்றிய தொலைதூரப் பார்வை, முன்னெடுக்கப்போகும் செயல்திட்டங்கள், அரசியல் அனுபவம், நிலையான அரசியல் கொள்கை, குறைவான குற்றச்சாட்டுகள், ஆளுமையாற்றல், மேடைப் பேச்சால் வசீகரிப்பது என பன்முகத் தன்மை கொண்டவரையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்..

இவற்றில் ஏதாவது திருமதி.சசிகலாவிடம் உண்டா என்பதே எதிர்பார்ப்பு.

திரு.பிரபாகரன் எதனால் தமிழர்களை வசீகரித்தார்..?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ராசவன்னியன் said:

வணக்கம் திரு.குமாரசாமி..

அரசியலில் யாரும் பரிசுத்தமானவர்களோ, யோக்கியர்களோ இல்லை.. உண்மைதான்!

ஆனால் வெகுசன மக்களின் முன் தன்னைப்பற்றி உருவகப்படுத்துதல் மிக முக்கியமானது.. அது நாட்டைப்பற்றிய தொலைதூரப் பார்வை, முன்னெடுக்கப்போகும் செயல்திட்டங்கள், அரசியல் அனுபவம், நிலையான அரசியல் கொள்கை, குறைவான குற்றச்சாட்டுகள், ஆளுமையாற்றல், மேடைப் பேச்சால் வசீகரிப்பது என பன்முகத் தன்மை கொண்டவரையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்..

இவற்றில் ஏதாவது திருமதி.சசிகலாவிடம் உண்டா என்பதே எதிர்பார்ப்பு.

திரு.பிரபாகரன் எதனால் தமிழர்களை வசீகரித்தார்..?

சசிகலாவில்  பல்வேறு  விமர்சனங்கள் இருந்தாலும், 
அவர் தனது உறவுகளான... தினகரன், திவாகரன், இளவரசி  போன்றோரை... ஒதுக்கி வைத்து விட்டு,
கணவர் நடராஜனின் ஆலோசனைப் படி..  நடப்பாரேயானால், அவரால் தமிழகத்துக்கு... யாரும் எதிர்பார்க்காத நல்லாட் சியை தரமுடியும்.  

இதனை எப்படி உறுதியாக சொல்கின்றேன் என்றால்... 
திரு நடராஜன்... நல்ல நிர்வாகத் திறமையும், அரசியல் நெளிவு, சுழிவுகளையும் அறிந்தவர் மட்டுமல்ல, சிறந்த தமிழ் பற்றாளர். அவருக்கு.... ஜெயலலிதாவே, பயந்து... சந்தர்ப்பம் கொடுக்காமல், தூரத்தில் வைத்துக் கொண்டவர்.  நடராஜனை அருகில் வைத்திருந்தால்... தனக்கு கிடைக்கும் புகழை எல்லாம், இவர் தட்டிக் கொண்டு போய்விடுவார் என்பதை... ஜெயலலிதா நன்கே அறிந்து இருந்தா படியால்தான்  அவரை கிட்ட நெருங்க விடவில்லை.

இப்போ.... கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை.  சசிகலாவும், நடராஜனும் சேர்ந்து... தமிழ் மக்களுக்கு  நன்கு  பயன்படுத்த   வேண்டும் என்பதே... என் ஆசை. 

  • கருத்துக்கள உறவுகள்

##############################################################

வீட்டு வேலைக்காரி நாட்டுக்கு முதல்வர் ஆகலாமா? ஏன் ஆகக்கூடாது?
திருட்டு ரயில் ஏறிவந்தவன் திராவிட வேசம்போட்டு நாட்டை ஆளலாம்,
தாசிவீடே தவம் என்று கிடந்தவன் மாபெரும் தலைவன் ஆகலாம்.
வேசம் இட்டு நடித்தவன் தமிழர் தேசம் ஆளலாம்.
முன்னாள் முதல்வரின் ஒரிஜினல் பொண்டாட்டி ஒருமுறை முதல்வர் ஆகலாம், அவரின் கள்ளப்பொண்டாட்டி ஐந்துமுறை முதல்வர் ஆகலாம்,
இதுவெல்லாம் உங்களுக்கு மானக்கேடு இல்லை சசிகலா முதல்வர் ஆவதுதான் மானக்கேடோ? அவர் என்ன ஜெயா வீட்டில் தரையா துடைத்துக்கொண்டிருந்தார்? அத்தனை மானங்கெட்ட தமிழனும் பதவிக்காய் ஜெ காலில் விழுந்து கும்பிட்டுக்கொண்டிருந்தபோது ஜெவுடன் சரி நிகர் சமனாய் நிமிர்ந்து நடந்தவர் சசி
எதற்கும் வளைந்துகொடுக்காத வீரத் தமிழச்சி V.k.சசிகலா தமிழ்நாடு இனித்தான் தலை நிமிரும்.

முகப் புத்தகத்தில்... ஒரு அன்பர் எழுதியது.

##############################################################

அம்மா கூப்பிட்டதும்...  காலுக்கு கீழ வந்து நின்னு,  சொல்லுங்க அக்கா.. அப்டீன்னு நின்ற பழைய சசிகலான்னு நினைச்சிங்களாடே..... அம்மாவையே.... அப்பல்லோவுக்கு அனுப்பின சின்னம்மாடா
"பழகிப்பார் பாசம் தெரியும், பகைச்சுப்பார் பரலோகம் தெரியும்.."
திராவிடப் பருப்பெல்லாம்.... இனி தமிழ்நாட்டு தண்ணில அவியாதுலே....

#############################################################

:grin: :grin:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

பிரதமருக்கு சசிகலா புஷ்பா எழுதிய முக்கிய கடிதம்!

Sasikala Pushpa's letter

அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா, 'சசிகலா நடராஜன் மீது குற்ற பின்னணி இருப்பதால், அவரை தமிழகத்தின் முதல்வராக தேர்ந்தெடுப்பது கண்டனத்துத்துக்குரியது' என்று கூறி பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில், 'குற்ற பின்னணியுள்ள சசிகலா நடராஜனை தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்ந்தெடுப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.

அவர் மீது இருக்கும் அனைத்து குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன. நீதிமன்றத்தாலும் அவரது குற்றங்கள் நீருபிக்கப்பட்டுள்ளன. இது அரசியல் சட்ட சாசனத்தை மீறும் செயலாகும்.

இதனால், அவர் பதவி ஏற்பது என்பது அரசியல் அமைப்புக்கே அவப்பெயரை உண்டாக்கிவிடும்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/80013-sasikala-pushpa-writes-letter-to-pmo-regarding-sasikala.art

  • தொடங்கியவர்

அம்மம்மா சின்னம்மா திட்டங்கள் - ஒரு மினி ட்ரெய்லர்!

எங்கெங்கு காணினும் சின்னம்மா மயம். 'நின்னைச் சரணடைந்தேன் சின்னம்மான்னு' அமைச்சர்கள் கிடக்க, 'கேரளா போறதுக்கு எல்லாம் பாஸ்போர்ட் கேக்கமாட்டாங்கதானே' என தமிழ் மக்கள் யோசிக்க, மொத்த இந்தியாவும் முத்துக்கள் கொட்டும் சின்னம்மாவோட சொற்பொழிவுக்குத்தான் காத்துட்டு இருக்கு. நடந்தது நடந்து போச்சு, இனி நடக்கப்போறத பாப்போம்ன்னு வழக்கம்போல மனச தேத்திக்கிட்டு, வருங்காலத்துல சின்னம்மாவின் திட்டங்கள் எப்படி இருக்கும்னு ஒரு சின்ன சாம்பிள் பார்ப்போமா மக்களே..

சின்னம்மா

* முதலும் முக்கியமுமாக படம் ரிலீஸாகும்போதே வி.சி.டிக்களும் வெளியிடப்படவேண்டும் என கட்டாயச் சட்டம் பிறப்பிக்கப்படும். தமிழ்  ராக்கர்ஸ் தளத்திற்கு அரசு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. அனைவருக்கும் அரிசி பருப்புடன் சேர்த்து வி.சி.டிக்களும் நியாய விலை கடைகளில் வழங்கப்படும். அதை வாங்குபவர்களே உண்மையான தமிழர்கள் எனப் போற்றப்படுவர். 200 மதுக்கடைகள் மூடப்பட்டு அங்கு நவீன டி.வி.டி கடைகள் திறக்கப்படும்.
 
* தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் யோகாசனப் பயிற்சி கட்டாயமாக்கப்படும். முக்கியமாக எப்படி குனிஞ்சு   வணக்கம் வைக்க வேண்டும் என்பது அந்தந்த ஏரியா அமைச்சர்களின் அடிப்பொடிகள் மூலம் கற்றுத் தரப்படும்.
  
* நாற்பது வயதுக்கு மேலான, குனிஞ்சே நடக்கத் தெரிந்த, நன்கு நடிக்க வரும் நபர்களுக்கு சின்னம்மா வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ்    வேலை போட்டுத் தரப்படும். 45 டிகிரிக்கும் குறைவாக குனிபவர்களுக்கு உயர்பதவி கன்பார்ம்.
 
* சோசியல் மீடியாக்களுக்கென்றே தனியாக இலாகா மற்றும் அமைச்சர் நிர்ணயிக்கப்படுவார். சின்னம்மாவாகிய எனது பேஜ்ஜை  யாரேனும் லைக்கிடவில்லை என்றால் தமிழ்நாட்டை விட்டு நாடு கடத்தப்படுவார்கள் என்பதுதான் முதல் ஸ்டேட்டஸாக இருக்கும்.
  
* ‘தலைவன் பாஸ்’ இனி வருடத்திற்கு பன்னிரண்டு படங்கள் மட்டும் நடித்து பயமுறுத்துவார். அனைத்திற்கும் வரியே கிடையாது.    சென்ஸார் படம் பார்க்காமலேயே யூ சர்டிபிகேட் வழங்கும். இவர் படத்தை அனைவரும் கட்டாயம் குடும்பத்தோடு திரையரங்குகளில்  பார்த்தே தீர வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
  
* மாவட்டம்தோறும் அப்பல்லோ மருத்துவமனைகள் திறக்கப்படும். அவற்றில் பணிபுரியும் மருத்துவர்களின் சின்சியாரிட்டியைப் பாராட்டி அரசே அவர்களுக்கு ஓய்வூதியம், படிக்காசு முதலிய அனைத்து சலுகைகளையும் வழங்கும்.
    
* கலவர காலங்களில் 'சிறப்பாக' செயல்படுவது எப்படி என காவல்துறைக்கு பயிற்சிகள் வழங்கப்படும். பைக், ஆட்டோ, குடிசை என  சக்திகேற்ப கொளுத்துபவர்களுக்கு ஸ்பெஷல் அலவன்ஸ் தரப்படும். கேள்வி கேட்கவிடாமல் விரட்டி விரட்டி அடிப்பவர்களுக்கு சிங்கம்  படத்தின் தீம் மியூசிக் டெடிகேட் செய்யப்படும். கலவரத்தில் சிறப்பாக செயல்பட்ட போலீஸாரில் ஒருவரை தேர்ந்தெடுத்து நேரடியாக  ஐஜி பதவியில் உட்கார வைப்பார்கள்.

* 'என்னுடைய சோழர் கால சிறப்புமிக்க கழக ஆட்சியில் இலவசமாய்க் கொடுக்கும் மாடுகள் எல்லாம் 'சின்னம்மா' என்றுதான் கத்த  வேண்டும். 'சின்னம்மா' என்று கத்தாத காளைகள் ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்பட மாட்டாது' என மாண்புமிகு இளைய புரட்சித் தலைவி  சார்பில் அறிவிப்பு வெளியாகும்.
  
* பிறந்த குழந்தை அம்மா என்று கத்தாமல் சின்னம்மா என்று கத்துவதை வீடியோ எடுத்து அனுப்பினால் அந்தக் குழந்தையின் கல்விச்  செலவு முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும். இதுபோக போஸ்டரை கிழிப்பவர்கள், 'சிறப்புப்' பொருட்களால் அபிஷேகம்  செய்பவர்கள் போன்றவர்களை தடுக்கவும் தண்டிக்கவும் சிறப்புப் படை உருவாக்குவது, இலவச ஸ்மார்ட் போன்கள் வழங்கி அதில்  சின்னம்மா ஆப் இன்ஸ்டால் செய்து தருவது என தமிழ்நாட்டை வல்லரசாக்கும் ஏராளமான திட்டங்கள் ஸ்டாக்கில் இருக்கின்றன. இருந்தாலும் மூச்சுவாங்குவதால் முடித்துக் கொள்கிறேன். நன்றி நமக்கம்.

http://www.vikatan.com/news/miscellaneous/80009-a-satirical-article-on-chinnamma-schemes.art

  • தொடங்கியவர்

சசிகலா முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது: செங்கோட்டையன்

 

 
 
செங்கோட்டையன் (இடது) ; பண்ருட்டி.ராமச்சந்திரன் (வலது) | படம்: எல்.சீனிவாசன்.
செங்கோட்டையன் (இடது) ; பண்ருட்டி.ராமச்சந்திரன் (வலது) | படம்: எல்.சீனிவாசன்.
 
 

அதிமுக எஃகு கோட்டை. சசிகலா முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், செங்கோட்டையன் ஆகியோர் கூட்டாகப் பேட்டி அளித்தனர்.

அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது:

''ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்டுப்பாட்டுடன் இயங்கி வருகிறது. தேவையில்லாமல் வேண்டுமென்றே சிலர் வதந்திகளை பரப்புகின்றனர். மக்களிடம் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

பி.ஹெச்.பாண்டியன் சொன்ன கருத்துகள் உண்மைக்கு மாறானவை. சசிகலா முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுகவினரும், நிர்வாகிகளும் இயங்கி வருகின்றனர். ஆட்சிப் பொறுப்பை ஏற்பதாக சசிகலா கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து பரிசோதித்த மருத்துவர்கள் அளிக்கும் விளக்கத்தை நம்ப வேண்டும் ' என்றார்.

செங்கோட்டையன் பேசியதாவது:

''ஓர் இயக்கம் சிந்தாமல், சிதறாமல் இயங்க வேண்டுமென்றால் அதற்கு அமைதி காப்பது அவசியம். பதவி பெரிதா, கட்சி பெரிதா என்று பார்த்தால் கட்சிதான் பெரிது.

முன்னாள் சட்டப்பேரவை தலைவர் பி.எச்.பாண்டியன் சில கருத்துகளைக் கூறியுள்ளார். அதற்குரிய விளக்கம் தர வேண்டியது எங்கள் கடமை.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்தது. அப்போது ஜானகி ராமச்சந்திரன் முதல்வராகி 23 நாட்கள் பதவியில் இருந்தார். அதற்குப் பிறகு இரண்டாகப் பிரிந்த அதிமுக மீண்டும் இணைந்தது. ஆனால், முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க அதிமுக நிர்வாகிகள் முயற்சி செய்தோம். அப்போது பி.எச்.பாண்டியன் முடக்கப்பட்ட சின்னத்தைப் பெறுவதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.அவர் சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.

திருநாவுக்கரசர் அணியிலே பி.எச்.பாண்டியன் செயல்பட்டார். திமுக ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்டார்.

ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்கக் காரணமாக இருந்தவர் பி.எச்.பாண்டியன். உச்ச நீதிமன்றம் வரை சென்று ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு தேவையில்லை என்றார். இவர் தற்போது குழப்பத்தை விளைவிக்கும் கும்பலோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அதிமுக எஃகு கோட்டை. ஆட்சிக் கட்டிலில் சசிகலா அமர்வதை யாராலும் தடுக்க முடியாது'' என்று செங்கோட்டையன் கூறினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/சசிகலா-முதல்வராவதை-யாராலும்-தடுக்க-முடியாது-செங்கோட்டையன்/article9526448.ece?homepage=true

  • தொடங்கியவர்

சசிகலா பதவிப் பிரமாணத்தை ஆளுநர் தவிர்க்க முடியுமா? சட்ட வல்லுநர் கருத்து

7_17324.jpg

 தமிழக சட்டப்பேரவையின் அ.தி.மு.க. தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் ஆளுநரின் அழைப்பு இல்லாததால் அவர் முதல்வராகுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு சட்டம் என்ன சொல்கிறது என்று வழக்கறிஞர் டி.ஏ.சி. ஜெனிதா விளக்கம் அளித்தார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 
 
ஆளுநர் வருகை தொடர்ந்து தாமதமானால் அதற்கு சட்டரீதியாக என்ன தீர்வு இருக்கிறது?

 தமிழக சட்டப்பேரவை அ.தி.மு.க. தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு சசிகலா பரிந்துரைக்க வேண்டும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் தமிழகத்துக்கு ஆளுநர் (பொறுப்பு) நியமிக்கப்பட்டு இருப்பதால் அவர் இங்கு இல்லை. இதனால் முதல்வர் பதவி ஏற்பு விழாவுக்கான நடைமுறைகளில் காலதாமதம் Advocate_jenitha_17075.jpgஏற்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநர், குறிப்பிட்ட நாளுக்குள் சட்டம், முதல்வர் தேர்வு உள்ளிட்டவைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. 

கடந்த 1983ல் சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டு அதன்பரிந்துரையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநருக்கு முதல்வரை தேர்வு செய்வது, சட்டங்களை இயற்றுவது தொடர்பான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. எனவே, ஆளுநருக்கு இதுபோன்ற அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டதோடு அதை அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அதற்கு நடவடிக்கை இல்லை. 

 ஆளுநர் மீதான புகார் மற்றும் நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் யாரிடம் இருக்கிறது? 

 இந்திய குடியரசுத் தலைவருக்கு உள்ளது. சில விதிமுறைகளுக்குட்பட்டு நீதிமன்றங்களுக்கும் இருக்கிறது. மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டால் இந்திய குடியரசுத் தலைவர் தலையிடலாம். ஆளுநரை நீக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே இருக்கிறது.

இருமாநிலங்களுக்கு ஒரே ஆளுநர் நியமிக்கப்படலாமா?

 இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பிரிவு 153ல் குறிப்பிட்டுள்ளபடி இருமாநிலங்களுக்கு ஒரே ஆளுநரை நியமிக்கலாம்.  

முதல்வராக தேர்ந்தெடுக்கப்படும் ஒருவரை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா?

கவுன்சில் ஆப் மினிஸ்டர்ஸ் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வர் குறித்து ஆராய்ந்த பிறகு ஆட்சி அமைக்க சம்மதம் தெரிவிக்கப்படும். முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவோர் மீது ஆதாரத்துடன் ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவரை நிராகரித்து குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. 

 எப்போது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356ஐ ஆளுநர் பயன்படுத்துவார்?

 கடந்த 1994-ல் எஸ்.ஆர்.பொம்மை Vs யூனியன் ஆப் இந்தியா என்ற வழக்கில் எந்தமாதிரியான அசாதாரண சூழ்நிலை உருவாகினால் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356ஐ பிரகடனப்படுத்த வேண்டும் என்பதை  ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு அளித்தத்  தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.  மாநில ஆட்சியில் அசாதாரண சூழ்நிலை உருவாகினால் அதற்கான ஆதாரத்துடன் 356ஐ  (ஆட்சி கலைப்பு) பிரகடனப்படுத்த குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க வேண்டும். அவரது ஒப்புதலின் பேரில் ஆட்சி கலைக்கப்படும். 

-எஸ்.மகேஷ் 

http://www.vikatan.com/news/tamilnadu/80053-can-the-governor-avoid-sasikalas-swearing-in-ceremony.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.