Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமணம் முடித்து 6 நாள் ; விபத்தில் கணவன் பலி, மனைவி படுகாயம் - யாழில் சம்பவம் (வீடியோ இணைப்பு)

Featured Replies

திருமணம் முடித்து 6 நாள் ; விபத்தில் கணவன் பலி, மனைவி படுகாயம் - யாழில் சம்பவம் (வீடியோ இணைப்பு)

 

 

யாழ்ப்பாணம், வேலணை பகுதியில்  இடம்பெற்ற டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் திருமணம் முடித்து 6 நாட்களான இளம்குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

jaffna.jpg

குறித்த இச் சம்பமானது இன்று காலை 11 மணியளவில் வேலணை அராலி சந்தியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

fsa.jpg

வேலணையில் இருந்து ஊர்காவற்றுறை பிரதான வீதியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கிச் சென்ற டிப்பர் வாகனமும் மோதியுள்ளது. இதன்போது டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளை சிறிது தூரம் இழுத்துச் சென்று கடலில் பாய்ந்துள்ளது.

C39lXR4XUAAIteE.jpg

இவ் விபத்தில் சம்பவ இடத்திலேயே 28 வயதுடைய பிரபாகரன் என்பவர் உயிரிழந்ததுடன் அவரது மனைவியான நிறெஞ்சனா என்பவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமைந்த குறித்த பெண் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

C39lQhbWAAAVBvg.jpg

இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து 6 நாட்கள் எனவும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இதேவேளை டிப்பர் வாகனத்தின் சாரதியை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 

http://www.virakesari.lk/article/16283

2 hours ago, நவீனன் said:

திருமணம் முடித்து 6 நாள் ; விபத்தில் கணவன் பலி, மனைவி படுகாயம் - யாழில் சம்பவம் (வீடியோ இணைப்பு)

 

http://www.virakesari.lk/article/16283

சொற்பதங்கள் தவறாக இருக்கலாம் - ஆனால் - மனிதம் இன்றும் யாழில் வாழ்கின்றது.

மனையியையாவது காப்பாற்றினார்கள்

ஆனாலும் இந்த டிப்பர் சாரதிகள் ஓட்டம் மோசம் என்பதை மறுப்பதிற்கில்லை - இந்த ஓட்டுநரைப்பற்றி எனக்கு தெரியாது. இலங்கையில் வீதியில் டிப்பரைக் கண்டால் யமனைக் கண்டதுபோல மற்றவர்கள் நடுங்குவது உண்மையே!

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஜீவன் சிவா said:

சொற்பதங்கள் தவறாக இருக்கலாம் - ஆனால் - மனிதம் இன்றும் யாழில் வாழ்கின்றது.

மனையியையாவது காப்பாற்றினார்கள்

ஆனாலும் இந்த டிப்பர் சாரதிகள் ஓட்டம் மோசம் என்பதை மறுப்பதிற்கில்லை - இந்த ஓட்டுநரைப்பற்றி எனக்கு தெரியாது. இலங்கையில் வீதியில் டிப்பரைக் கண்டால் யமனைக் கண்டதுபோல மற்றவர்கள் நடுங்குவது உண்மையே!

இந்த வாகனத்தை கிழக்கில் ஆள் அடியன் என்பது வழமை அதை சொன்னால் தான் கனபேருக்கு புரியும்  ஏனென்றால் இதில் அகப்பட்டவர்கள்  கனபேர் இறந்த செய்தியாகதான் கேட்டு இருக்கிறேன் 

ஆழ்ந்த அனுதாபங்கள்  

  • தொடங்கியவர்
திருமணம் முடித்து ஆறு நாட்களேயான நிலயில் கணவன்விபத்தில் உயிரிழப்பு மனைவி படுகாயம்
திருமணம் முடித்து ஆறு நாட்களேயான நிலயில் கணவன்விபத்தில் உயிரிழப்பு மனைவி படுகாயம்
யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் திருமணம் முடித்து ஆறுநாட்களேயான  இளம்
குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன் அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார்.
 
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
வேலணை அராலி சந்தியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
 
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த  பிரபாகரன் (28 வயது) என்ற இளம் குடும்பஸ்தர் உயிரிழந்ததுடன் அவரது மனைவியான நிறஞ்சனா காயமடைந்துள்ளார்.காயமடைந்த பெண் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
வேலணையில் இருந்து ஊர்காவற்றுறை பிரதான வீதியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி சென்ற டிப்பர் வாகனமும் மோதியுள்ளது.
 
இதன்போது டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளை சிறிது தூரம் இழுத்து சென்று கடலில் பாய்ந்துள்ளது.

 


டிப்பர் வாகனத்தின் சாரதியை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
 

http://www.onlineuthayan.com/news/23567

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.