Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

Featured Replies

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

ராஜினாமாவை திரும்பப் பெறும் கட்டாயச் சூழல் ஏற்பட்டால் திரும்பப் பெறுவதாகவும், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

 
 
 
 
சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
 
சென்னை:

பதவி விலகிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்து பின்னர் அளித்த பேட்டி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறிய அவர், 75 நாட்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றும் ஒரு முறை கூட ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்திக்கவே இல்லை என்றும் கூறினார்.

இதுதவிர தற்போதைய தலைமை மீதுள்ள தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர் தன் மனதில் உள்ள விஷயங்களில் நூற்றில் 10 சதவீதம் தான் வெளியே சொல்லி இருப்பதாக கூறினார். இந்த பேட்டியை அடுத்து அவர் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று அவரது இல்லத்தில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.விக்கு எந்த நிலையிலும் நான் துரோகம் செய்யவில்லை. பன்னீர்செல்வம் துரோகம் செய்துவிட்டான் என ஒருபோதும் ஏற்பட்டதில்லை. ராஜினாமாவை திரும்பப் பெறும் கட்டாயச் சூழல் ஏற்பட்டால் திரும்பப் பெறுவேன். ஆளுநர் சென்னை வந்ததும் அவரை சந்திப்பேன்.

சட்டமன்றம் கூடும்போது எனக்கான ஆதரவு தெரியவரும். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன். அ.தி.மு.க.வுக்கு சோதனை ஏற்பட்ட காலத்தில் 2 முறை முதல்வராக இருந்துள்ளேன்.  என் மீதான குற்றச்சாட்டுக்கு காலம் பதில் சொல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/08110050/1067004/I-will-prove-majority-in-the-Assembly-OPS-says.vpf

ஜெயலலிதா மரணம்: விசாரணை கமிஷன் அமைக்க ஓபிஎஸ் உறுதி

 

 
 
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்
 
 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என தமிழக பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இன்றைய (புதன்கிழமை) செய்தியாளர்கள் சந்திப்பின்போது அதிமுக எம்.பி., மைத்ரேயன் உடன் இருந்தார். கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும். ராஜினாமாவை திரும்பப்பெற வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டால் நிச்சயமாக வாபஸ் பெறுவேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

முன்னதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் திடீர் தியானப் புரட்சி செய்த ஓ.பன்னீர்செல்வம், ''என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன். அதிமுகவுக்கு சிறப்பான தலைமை தேவை. தற்போது கட்சியில் நடைபெறும் நிகழ்வுகளால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். மக்களுக்காக தன்னந்தனியாக போராடத் தயாராக இருக்கிறேன்" என்று அதிரடியாக கூறினார்.

இதனையடுத்து பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்ட நிலையில் இன்று காலை சென்னையில் அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், "பன்னீர்செல்வம் துரோகம் செய்தார் என்ற அவப்பெயர் எப்போதும் வந்ததில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சுவடுகளை நான் பின்பற்றுகிறேன். அவரது விருப்பத்துக்கு மாறாக எப்போதும் செயல்படமாட்டேன்.

கட்சியின் சட்டத்திட்டங்களின் அடிப்படையில்தான், கட்சி பொதுச் செயலாளரை தொண்டர்களே தேர்வு செய்ய வேண்டும். அதுவும் முறைப்படி தேர்தல் நடத்தி பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும். விரைவில், அதிமுக பொதுக்குழுவை கூட்டி கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படுவார்.

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களை சந்திக்கப் போகிறேன். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் முன்வந்து ஆதரவு தெரிவித்தால் அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்.

ராஜினாமாவை திரும்பப்பெற வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டால் நிச்சயமாக வாபஸ் பெறுவேன். ஆளுநர் வந்தவுடன் அவரை சந்திப்பேன். விரைவில் சட்டப்பேரவையை கூட்டுமாறு அவரிடம் அனுமதி கோருவேன். சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் எனக்கான ஆதரவை தெரிவிப்பார்கள். சட்டப்பேரவையில் எனது பலம் தெரியும்.

பாரதிய ஜனதா கட்சி என்னை இயக்குவதாக குற்றஞ்சாட்டுவது வடிகட்டிய பொய்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும். உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு எனக்கு இருக்கிறது. அவர்கள் என்னை தொடர்பு கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். சட்டப்பேரவையில் எனது பலத்தை நிரூபிப்பேன் " என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/ஜெயலலிதா-மரணம்-விசாரணை-கமிஷன்-அமைக்க-ஓபிஎஸ்-உறுதி/article9528392.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஓ.பி.எஸ்-க்கே ஆதரவு!' - மாநிலங்களவை எம்.பி மைத்ரேயன் பரபரப்பு பேட்டி

Maitreyan

ஜெயலலிதா நினைவிடத்தில் மௌன அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து பகீர் தகவல்களை வெளியிட்டார். அதன்பின், அவர் கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, பன்னீர் செல்வத்துக்கு ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார் மைத்ரேயன்.

இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்தப் பின் மைத்ரேயன், 'மக்களின் ஆதரவும் தொண்டர்களின் ஆதரவும் பன்னீர் செல்வத்துக்கே இருக்கிறது. அதனால்தான், அவர் முதல்வராக நீடிக்க வேண்டும் என்கிறேன். பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பன்னீர் செல்வத்துக்குதான் இருக்கிறது. அவரை பொருளாளர் பதவியில் இருந்து நீக்கியதால் எந்த பாதிப்பு இல்லை. அவர் மெரினாவில் செய்தியாளர்களைச் சந்தித்து இன்னும் 12 மணி நேரம் கூட ஆகவில்லை. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆதரவு இனி பெருகும். சசிகலாவை முதல்வராக பதவியேற்க விடமாட்டோம்.' என்று பேசியுள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/80106-i-am-with-opanneer-selvam-says-mp-maitreyan.art

  • தொடங்கியவர்
தீபாவுக்கு பன்னீர் அழைப்பு

 

சென்னை: பத்திரிகையாளர்களை சந்தித்த பன்னீர் செல்வம் கூறியதாவது:
*ஜெ., அண்ணன் மகள் என்ற முறையில் அவரை மதிக்கிறேன்


*என்னுடன் இணைந்து செயல்பட தீபாவக்கு அழைப்பு விடுக்கிறேன்.


*சட்டசபையில் உறுதியாக எனது பலத்தை நிருபிப்பேன்.
*தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்திக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1706946

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்

ஓ.பன்னீர்செல்வத்தின் மெரினா புரட்சியும்...அந்த 16 மணிநேரமும்..! #VikatanInfographic

#OPSvsSasikala

http://www.vikatan.com/news/tamilnadu/80145-timeline-of-tamilnadu-cm-opaneerselvams-outburst-in-marina.art

  • தொடங்கியவர்

நத்தம் விஸ்வநாதன், நடிகர் பாக்யராஜ்..! நீளும் பன்னீர்செல்வம் ஆதரவுப் பட்டியல்

Actor Bhagyaraj, Natham Viswanathan

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். நடிகர் பாக்யராஜும் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவைத் தெரியப்படுத்தியுள்ளார்.

O Paneerselvam

முன்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மதுசூதனன் எம்.பி, முன்னாள் எம்.எல்.ஏ பரிதிஇளம் வழுதி ஆகியோர் பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/tamilnadu/80143-actor-bhagyaraj-and-natham-viswanathan-supports--o-panneselvam.art

  • தொடங்கியவர்

அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எனக்கு ஆதரவு அளிக்கும் சூழல் உருவாகும்: ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

பதிவு: பிப்ரவரி 08, 2017 14:06

 
 

அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தனக்கு ஆதரவு அளிக்கும் சூழல் உருவாகும் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 
 
 
 
அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எனக்கு ஆதரவு அளிக்கும் சூழல் உருவாகும்: ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை
 
சென்னை:

பதவி விலகிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்சி தலைமை மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பின்னர் இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்றார். மேலும், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கு பதிலடியாக அ.தி.மு.க. தலைமை கூட்டிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பெருவாரியான எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். எனினும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி வருமாறு:-

அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எனக்கு ஆதரவு தெரிவிக்கும் சூழல் உருவாகும். எனக்கு ஆதரவு தெரிவிக்க எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் பேசி வருகிறார்கள். ஜெயலலிதாவின மனசாட்சிப்படி அனைத்து எம்.எல்.ஏ.க்களும் செயல்படுவார்கள் என நம்புகிறேன். யாருடன் இருக்கவேண்டும், யாருடன் இருக்கக்கூடாது என ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்த மருத்துவர்களின் பதிலில் மக்களுக்கு திருப்தி இல்லை. எனவே, உண்மை தெரியவேண்டும் என்பதற்காக விசாரணைக் கமிஷன் பற்றி கூறினேன். மக்களின் சந்தேகத்தைப் போக்கும் பொறுப்பில் நான் இருக்கிறேன். ஜெயலலிதாவின் கொள்கையை நிறைவேற்றும் வகையில் எனது பணி இருக்கும்.

ஜெயலலிதா என் மீது தனிப்பாசம் கொண்டவர். அதன் காரணமாக என்னை முதல்வராக ஆக்கினார். ஒருமுறை என்னிடம் பேசும்போது, நீங்களாவது விசுவாசமாக இருங்கள் என அவர் கூறியபோது எனக்கு கண்ணீர் வந்தது. கட்சிக்கு நான் 200 சதவீதம் விசுவாசமாக இருந்தேன். தற்போது, கட்சியில் விரிசல் உருவாக நான் காரணம் இல்லை. முதல்வர் பதவி பற்றி பேசி அமைச்சர்கள்தான் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். ஜெயலலிதா தனது அரசியல் வாரிசாக யாரையும் அடையாளம் காட்டவில்லை.

சசிகலா பதவியேற்புக்கு தாமதம் ஆவது பற்றி ஆளுநர்தான் பதில் தரவேண்டும். தற்போதைய சூழ்நிலையில், மும்பை சென்று ஆளுநரை சந்திக்கும் திட்டம் இல்லை. அவர் சென்னை வந்தால் சந்திப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/08140650/1067062/OPS-hopes-that-all-mlas-to-supports-him.vpf

  • தொடங்கியவர்

' எம்.எல்.ஏக்கள் எங்கும் நகர வேண்டாம்!' -ஆளுநர் புறக்கணிப்பும் சசிகலா கொதிப்பும்

சசிகலா

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்திக்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார் சசிகலா. ' அரசியலமைப்புச் சட்டப்படி செயல்பட மறுக்கிறார் ஆளுநர். எம்.எல்.ஏக்களுக்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சசிகலா முதல்வர் ஆவது உறுதி' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதலமைச்சர் பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள அ.தி.மு.கவின் முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.பிக்கள் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். அ.தி.மு.க எம்.பி. மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட கட்சியின் சீனியர்களும் ஓ.பி.எஸ் பக்கம் திரண்டுள்ளனர். இந்நிலையில், இன்று காலை எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டினார் சசிகலா. ' துரோகிகள் பின்னால் யாரும் சென்றுவிட வேண்டாம்' என எச்சரித்தார் சசிகலா. அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன் கட்டுப்பாட்டில் எம்.எல்.ஏக்களை ஒப்படைத்திருக்கிறார் சசிகலா. அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு உள்ளிட்டவர்களும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

தனியரசுதனியரசு எம்.எல்.ஏவிடம் பேசினோம். " நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். 131 எம்.எல்.ஏக்களும் சின்னம்மாவுக்கு ஆதரவாக இருக்கின்றனர். 'எம்.எல்.ஏக்கள் வெளியில் சென்றுவிட வேண்டாம்' எனக் கூறியுள்ளனர். வெளியில் டீ குடிக்கப் போனாலும், காணாமல் போய்விட்டதாக வதந்தி பரப்பிவிடுவார்கள் என்பதால்தான் இப்படியொரு ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள். அனைவரும் தலைமைக் கழகத்தில் இருக்கிறோம். ஆளுநர் சென்னை வருவார் என்று எதிர்பார்த்தோம். அதற்கான சூழல்கள் இல்லாவிட்டால், நாளை காலை டெல்லிக்குச் செல்ல இருக்கிறோம். இரண்டொருவர்தான் எதிரணிப் பக்கம் சென்றுள்ளனர். தொண்டர்கள் மத்தியிலும் எந்தவிதக் குழப்பமும் இல்லை" என்றார் நிதானமாக. 

" தமிழகத்தில் நடக்கும் சூழல்களை உலகமே கவனித்துக்கொண்டிருக்கிறது. இதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் மும்பையில் இருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். ஜல்லிக்கட்டுப் போராட்டம் தீவிரமடைந்தபோதும், இதே அலட்சியத்துடன்தான் செயல்பட்டார். கடந்த 5-ம் தேதி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், சட்டசபைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. அரசியமைப்புச் சட்டத்தின்படி, தேர்வு செய்யப்பட்ட ஒருவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் என்ன தவறு நேர்ந்துவிடப் போகிறது? வழக்கு நிலுவையில் இருப்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. பன்னீர்செல்வத்தை முன்னிறுத்திக் கட்சியை, தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் முடிவில் மத்திய அரசு உள்ளது. அதையொட்டித்தான் ஆளுநரின் செயல்பாட்டைப் பார்க்கிறோம். இதனால், கடும் கோபத்தில் இருக்கிறார் சசிகலா. ' தமிழகத்தில் நடப்பவை குறித்து, குடியரசுத் தலைவரிடம் முறையிடுவோம்' எனக் கூறிவிட்டார்.

மீனம்பாக்கம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் அனைத்து எம்.எல்.ஏக்களும் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். நாளை குடியரசுத் தலைவர் முன்பு எம்.எல்.ஏக்கள் அணிவகுப்பு நடத்தப்பட இருக்கிறது. தலைமைக்கு எதிராக நடக்கும் சூழல்களைக் கவனித்துக் கொண்டு வருகிறோம். அ.தி.மு.கவில் நடக்கும் குழப்ப சூழல்களைப் பயன்படுத்திக்கொள்கிறது தி.மு.க. 2021-ம் ஆண்டு வரையில் அ.தி.மு.கதான் ஆட்சியில் இருக்கப் போகிறது. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி முதல்வராகவும் பதவியில் அமர்வார் சசிகலா. அதற்குள் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை அறிவித்துவிடக் கூடாது என்ற பதற்றம்தான் நிர்வாகிகள் மத்தியில் உள்ளது" என்கிறார் கார்டன் நிர்வாகி ஒருவர். 

' எம்.எல்.ஏக்கள் என் பக்கம் வருவார்கள்' என்கிறார் ஓ.பன்னீர்செல்வம். குடியரசுத் தலைவரிடம் மனு கொடுக்கக் கிளம்புகிறார் சசிகலா. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவகாசம் கொடுப்பதைப் பற்றி ஆலோசித்து வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். ' குடியரசுத் தலைவர் என்ன செய்யப் போகிறார்?' என ஆவலோடு கவனித்து வருகின்றனர் அரசியல் கட்சித் தலைவர்கள். 

http://www.vikatan.com/news/tamilnadu/80154-mlas-should-not-leave-chennai-orders-sasikala.art

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

சென்னை நட்சத்திர ஹோட்டலில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள்! ஊட்டி செல்லத்திட்டம்?

MLAs_bus_17107.jpg

சென்னை விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் தற்பாேது தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஊட்டி, பெங்களூரு, புதுச்சேரிக்கு அழைத்துச் செல்ல அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

MLAs_bus_1_17439.jpg

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றிரவு அளித்த பேட்டி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அவர் அளித்த பேட்டியில், "சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத்தயார். எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு ஆதரவு என்பதை பொறுத்திருந்து பாருங்கள்" என்று கூறி மேலும் பரபரப்பை உண்டாக்கினார்.

MLAs_bus_2_17034.jpg

இந்நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா இன்று கூட்டினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், "நம்மை பிரித்தாளும் சக்தி யாருக்கும் இல்லை. அ.தி.மு.க என்னும் மாபெரும் சக்தியை யாராலும் தடுக்க முடியாது. அ.தி.மு.க. ஒரே குடும்பமாக ஒற்றுமையாக செயல்படுகிறது. யார் பின்பும் செல்லாமல், அனைத்து உறுப்பினர்களும் இறுதிவரை ஒற்றுமையாக இருக்க வேண்டும்" என்று பேசினார்.

MLAs_bus_3_17254.jpg

இதனிடையே, ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து மூன்று பேருந்துகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 131 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் சென்னை விமானநிலையம் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

mlas_bus_4_17489.jpg

''சென்னையில் இருக்கக்கூடாது. ஆளுநர் தமிழகம் வரும் வரை அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்'' என்று எம்.எல்.ஏ.க்களுக்கு தலைமை உத்தரவிட்டுள்ளதாம். இதனால் அங்கிருந்து புதுச்சேரி, ஊட்டி, பெங்களூரு அழைத்துச் செல்லத்திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு பேருந்துக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/80161-sasikala-transported-admk-mla’s-to-a-5-star-hotel.art

  • தொடங்கியவர்

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு!

O-Panneerselvam_n_20587.jpg
 

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்கெனவே 4 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், மேலும் ஒரு எம்.எல்.ஏ ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஶ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சண்முகநாதன், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திடீரென தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கம்,  ஊத்தங்கரை எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம், கவுண்டன்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரன் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனால், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்துள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/80189-srivaikuntam-mla-shanmughanathan-supports-o-panneerselvam.art

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராக வேண்டும்: கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன்

நான் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நண்பனும் அல்ல. எதிரியும் அல்ல. அவர் திறமையற்றவர் அல்ல. ஜல்லிக்கட்டு விஷயத்தில் அவர் திறமையாக செயல்பட்டு வெற்றி கண்டுள்ளார். அவர் மீண்டும் முதல்வராகி ஆட்சி நடத்த வேண்டும். ஜனநாயக ரீதியான என்னுடைய விருப்பமும் இதுதான்.

சசிகலாவின் தகுதி பற்றி எனக்கு தெரியாது. அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் செய்தது இல்லை. ஜெயலலிதாவுடன் பல ஆண்டுகள் உடன் இருந்தார் என்பதை அரசியல் தகுதியாக கருத முடியாது. சட்டத்துக்கு முன்பாக அனைவரும் சமம் என ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். 

http://www.vikatan.com

சென்னை வெள்ள விவகாரத்தில் பன்னீர் கமலை பார்த்து கருத்து கந்தசாமி என்று கூறி அறிக்கை விட்ட பின்னரும் நீதியாக தன் கருத்தை தெரிவித்துளார்.

  • தொடங்கியவர்

கட்சியின் வங்கிக் கணக்கை முடக்க ஓ.பி.எஸ் கடிதம் #OPSVsSasikala #Ops

ஓ.பி.எஸ், வங்கிக்கு கடிதம்

 

தமிழக முதலமைச்சராக நீடிக்கும் ஓ.பன்னீர்செல்வம் கட்சித் தலைமை மீது நேற்று இரவு கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் அ.தி.மு.க-வின் பொருளாளர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில் "யாரும் என்னை நீக்க முடியாது" என்று தெரிவித்திருந்தார் ஓ.பன்னீர்செல்வம். இந்நிலையில் கட்சி வங்கிக் கணக்கை முடக்கி வைக்க கோரியுள்ளார். இதில் கட்சி கணக்கு வைத்துள்ள வங்கி கிளைகளான மயிலாப்பூர் உள்ள கரூர் வைஸ்யா மற்றும் போங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கி கிளைகளுக்கு கணக்கை முடக்க கோரி வங்கிக் கிளைகளுக்கு கடிதம் அளித்துள்ளார்.

அக்கடிதத்தில், "அ.தி.மு.க-வின் விதி எண் 20, துணைப்பிரிவு 2-ன் படி, கட்சியின் முக்கியத் தலைவர்கள், பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புரட்சித்தலைவி அம்மாவின் மறைவிற்குப் பிறகு, கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வெற்றிடமாகத்தான் உள்ளது. இந்த விதியின் படி, இனிதான் பொதுச்செயலாளர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வெற்றிடமாக உள்ளதால், விதி எண் 20, துணைப்பிரிவு 5-ன் படி, மத்திய நிர்வாகிகள் குழுவின் உறுப்பினர்கள், துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோர் புதிய பொதுச்செயலாளர் நியமிக்கப்படும் வரை, கட்சியின் நிர்வாகத்தை கவனித்துக்கொள்ள முடியும். புரட்சித்தலைவி அம்மா அவர்களால் நியமிக்கப்பட்டு, இன்னும் நான் பொருளாளராக நீடிப்பதால், எனது உத்தரவின்றி வங்கிக் கணக்கில் எந்த பணப் பரிமாற்றமும் மேற்கொள்ளக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/news/politics/80196-ops-requests-aiadmk-bankers-to-freeze-the-bank-accounts.art

சசிகலா உருவ பொம்மை எரிப்பு: போலீஸார் தடியடி

_%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0

அரியலூரில் சசிகலாவின் உருவ பொம்மையை அ.தி.மு.க.வினர் எரிக்க முயன்றபோது போலீஸார் தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிரான முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடியான நடவடிக்கையால், தமிழகம் முழுவதும் சசிகலாவின் ஆதரவாளர்கள், ஓ.பன்னீர்செல்வத்தின் உருவ பொம்மையை எரித்து வருகிறார்கள். இதைக் கண்டித்து, தீபா பேரவையை ஆரம்பித்த இளவழகன் தலைமையில், அரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்து, இன்று சசிகலாவின் உருவ பொம்மையை இழுத்து வந்ததோடு, "அந்நிய சக்தி சசிகலா ஒருபோதும் முதல்வர் நாற்காலியில் அமரக்கூடாது" என்று முழக்கங்களை எழுப்பினர்.

_%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0

மேலும், ஆர்ப்பாட்டத்தின்போது, சசிகலாவின் உருவ பொம்மையை அவர்கள் எரிக்க முயன்றபோது சசிகலா ஆதரவாளர்கள், அவர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கினர். இதனால், பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து விரைந்து வந்த போலீஸார், தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால், இரு தரப்பினரும் தெறித்து ஓடியதால், அந்த இடமே போர்க்களம்போல் காட்சி அளித்தது.

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்றுவது பற்றி தீபா அளித்த பதில் இதுதான்!

Deepa

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா செய்தியாளர்கள் சந்திப்பில், ‘ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்பட அழைப்புவிடுத்தது ஊடகங்களில்தான் பார்த்தேன். நேரடியாக எந்த அழைப்பும் பெறவில்லை. அவருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பின்னர் அறிவிப்பேன். தற்போதைய சூழலில் நான் ஏதும் கருத்து கூற விரும்பவில்லை. என்னைப் பற்றி வரும் செய்திகளை நம்பவேண்டாம்’ எனத் தெரிவித்தார். 

http://www.vikatan.com/news/tamilnadu/80159-deepas-statement-about-current-political-scenario.art

எங்களை எங்கேயோ கொண்டு செல்கிறார்கள்: அதிமுக எம்எல்ஏக்கள் கதறல்
 
தமிழ்நாட்டில் முதல் அமைச்சராக உள்ள ஒ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை இரவு, என்னை நிர்பந்தப்படுத்தி முதல் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்றும், முதல் அமைச்சராக சசிகலாதான் வர வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தியதாக அதன் மூலமாக தனக்கு ஏற்பட்ட மனவேதனைகளை ஜெ. நினைவிடத்தில் மவுன அஞ்சலி செலுத்திவிட்டு பத்திரிகையாளர்களிடம் மனம் திறந்து பேசுவதாக தெரிவித்தார். 
 
இதன் தொடர்ச்சியாக அதிமுகவின் பொருளாளராக உள்ள முதல்வர் பன்னீர்செல்வத்தை நீக்கியதாக சசிகலா அறிவிப்பு செய்தார். இந்த நிலையில் இன்று காலை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் நடைபெற்றதாக கூறப்பட்டது. இதற்கு நேற்று இரவே பல்வேறு விடுதிகளில் தங்கியிருந்த அதிமுக எம்எல்ஏக்களை போயஸ் கார்டன் இல்லத்திற்கு கொண்டுசென்ற படலமும் நடந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களை தனியார் பேருந்துகளில் அழைத்துச் சென்று ராயப்பேட்டை கட்சி அலுவலகத்திற்கு கூட்டி சென்றனர். பிறகு அதிமுக எம்எல்ஏக்கள் 131 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் அதில் சசிகலாவை முதல் அமைச்சராக முன்மொழிந்ததாகவும் செய்திகள் அதிமுக மத்தியில் இருந்து வெளியிடப்பட்டது. 
 
busss.jpg
 
இந்த சூழலுக்கிடையில் அதிமுக எம்எல்ஏக்களான எல்லோரையும் ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் தங்க வைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் எம்எல்ஏக்கள், எம்எல்ஏக்களாக உள்ள முன்னாள் அமைச்சர்கள் சில அமைச்சர்கள், அனைவரும் தனியார் விடுதிக்கு கொண்டு செல்லாமல் வேறு எங்கோ கூட்டுச் சென்றுள்ளனர். இது சம்மந்தமாக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமாக உள்ள மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் நம்மை தொலைபேசியில் அழைத்து பின்வருமாறு கூறினார்.
 
வணக்கம். நாங்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய அமைச்சரவையில் சட்டமன்றத்தில் பிரதிநிதியாக இருந்தோம். இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எங்களை பேசவிடவில்லை. அதிகபட்சம் 10 நிமிடங்கள்தான் கூட்டம் நடைபெற்றது. அந்த 10 நிமிடங்களில் கையெழுத்து போடும் படலம்தான் நடந்தது. அதனைத் தொடர்ந்து சில நிமிடங்கள் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா எழுதி வைத்த பேப்பரை படித்தார்.
 
கட்சியின் சீனியர் நிர்வாகிகள் உடனிருந்தபோது எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் கூட்டம் முடியும்போது, நீங்கள் எல்லோரும் இன்னும் 10 நாட்களுக்கு கவனமாக இருக்க வேண்டியுள்ளது. நீங்கள் உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அதிமுக தலைமை செய்யும் என கூறிய சசிகலா, இப்போது நீங்கள் செல்லும் இடம் யாருக்கும் தெரியக் கூடாது என கூறி எங்களை அனுப்பி வைத்தார். இன்று இரவு 11.20 மணிக்கு இந்த பேருந்தில் செல்கிறோம். ஆனால் இந்த பேருந்து எங்கு செல்கிறது என எங்களுக்கு தெரியாது. இருப்பினும் விடியற்காலைக்குள் எங்களை பத்திரமாக கொண்டு செல்வதாக கூறியுள்ளனர். எங்களுக்கு உள்ள பயம் எங்களை சுதந்திரமாக வெளியே விட்டால்போதும். ஆனால் நாங்கள் இப்போது சசிகலாவிடம் ஒரு கைதியாக சிக்கிக்கொண்டோம். இந்த நிலையில் நாங்கள் வேறு எதையும் பேசுவதற்கு இல்லை என கூறினார் முன்னாள் அமைச்சரான தற்போதைய எம்எல்ஏ.
 
இப்போது கொண்டு செல்லக்கூடிய எம்எல்ஏக்கள் அநேகமாக கொடநாடு அல்லது வேறு மாநிலமாக இருக்கும் என்றும் உடன் சென்ற எம்எல்ஏக்கள் பேசிக்கொண்டதாகவும் தெரிவித்தார். 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=183942

  • கருத்துக்கள உறவுகள்

16508240_973987902700904_642614064143637

1 minute ago, இசைக்கலைஞன் said:

 

உண்மையை சொல்லுங்கோ இசை
இதை நீங்கள் ஜாலியா ரசிக்கல்லை.:grin:

எனக்கு எதோ ஒரு (முடிவு தெரிந்த) விறுவிறுப்பான ஒரு படம் பாக்கிறமாதிரியே ஒரு பீலிங் :grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்

மக்களன் நலன்பேணாக் கட்சியரசியலால் விளையும் பாதகமானதொருநிலை. மத்திய அரசும் தமிழகத்தின் அரசியல் பலவீனத்தில் சவாரிசெய்யத் துடிக்கிறது. ஆனால் தமிழகம் கட்சிகளின் காட்சிகளின் பின்னால் இழுபடுமா? அல்லது மத்தியின் சதியை வென்று தமிழகம் புதிய தமிழகமாய் நிமிருமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  C4KSGKZWIAEMvLV.jpg

  • தொடங்கியவர்
சசிகலாவுக்கு எதிராக முதல்வர் பன்னீர்செல்வம்...விஸ்வரூபம்!: ஏவலாட்களாக மாறிய பேராசை புள்ளிகள் பதவி பறிப்பு: கட்சி பதவியும் பறிபோகும் அபாயத்தில் மந்திரிகள்: தாக்குப்பிடிக்க முடியாமல் மன்னார்குடி கும்பல் கலக்கம்
 
 
 
Tamil_News_large_1707074_318_219.jpg
 

ஆட்சியிலும், கட்சியிலும் கலகத்தையும், களங்கத்தையும் ஏற்படுத்தியவர்களை, முதல்வர் பன்னீர்செல்வம் களை எடுப்பதில் உறுதியாக உள்ளார். அதே நேரம், தன்னைப் போல, சூழ்நிலைக் கைதிகளாக, மிரட்டி பணிய வைக்கப்பட்டவர்களை அரவணைக்கவும் தயாராக உள்ளார்.

தற்காலிக பொதுச் செயலராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதில் கட்சி விதிகள் பின்பற்றப்படவில்லை என, தலைமை தேர்தல் கமிஷன் கூறியுள்ள நிலையில், முதல்வர் பன்னீர்செல்வத்தின் அடுத்தடுத்த செயல்பாடுகள், மன்னார்குடி குடும்பத்தை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் தகவலே தெரிவிக்காமல், பன்னீர்செல்வத்தை வரவழைத்த சசிகலா உறவினர்கள், அவரிடம் கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் ராஜினாமா கடிதம் வாங்கிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முதல்வராக பதவி வகிக்கும் பன்னீர்செல்வத்தை மிரட்டிய சசிகலா குடும்பத்தினர், அதே பாணியில், அமைச்சர்கள் மற்றும் கட்சி எம்.எல்.ஏ.,க்களையும் மிரட்டி பணியவைத்ததும் அம்பலத்துக்கு வந்துள்ளது.

வளமான வருங்காலம் என்ற பேராசையில், சசிகலா குடும்பத்தினரின் ஏவலை செயல்படுத்திய அமைச்சர்களின் செயல்பாடுகளே, ஆட்சியிலும், கட்சியிலும் கலக்கத்தை ஏற்படுத்தியது என்பதை, பன்னீர்செல்வம் பகிரங்கப்படுத்தி உள்ளார். சொந்த ஆதாயத்துக்காக, சசிகலாவின் ஏவலாட்களாக செயல்பட்டவர்களை, களை எடுப்பதில், பன்னீர்செல்வம் உறுதியாக இருப்பதாக, அவருக்கு நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது:

சசிகலா தரப்பு, தன்னை அவமானப்படுத்தும் வகையில், அடுத்தடுத்து காய்களை நகர்த்திய போதும், 'ஜெ., கட்டிக்காத்து வந்த கட்சிக்கும், அவரால் அமைக்கப்பட்ட அரசுக்கும் உள்ள நற்பெயர் கெட்டுவிடக்கூடாது' என்ற காரணத்துக்காகவே, முதல்வர் பன்னீர்செல்வம் அனைத்தையும் பொறுத்துக் கொண்டிருந்தார்.

சசிகலாவின் செயல்பாடுகள் குறித்து, தன்னிடம் மனக்குமுறல்களை கொட்டியவர்களை, மிரட்டி பணியவைத்து, தனக்கு எதிராக பேச வைத்த போதும் அவர் பொறுமை காத்தார்.
கட்சியின் அடிமட்டத்தில் இருந்து, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்கள் வரையிலும், சசிகலாவுக்கு எதிரான மனப்போக்கு இருந்தாலும், அவரது உறவினர்களின் ஆதிக்கத்தாலும், பன்னீர் செல்வம் காத்து வந்த அமைதி காரணமாகவும், அதை வெளிப்படுத்த முடியாத நிலை இருந்தது.

தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கிய சசிகலா குடும்பத்தால், கட்சிக்கு மட்டுமின்றி, ஆட்சிக்கும், தமிழகத்தின் எதிர்காலத்துக்கும் ஏற்பட உள்ள விபரீதத்தை உணர்ந்த பன்னீர்செல்வம் மனப்புழுக்கத்தில் இருந்தார். இனியும் பொறுமை காத்தால், எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும், எல்லா தவறுகளுக்கும் தன்னையே காரணமாக்கி விடுவர் என்ற, மனசாட்சி உறுத்தலால் தான், ஜெ., நினைவிடத்தில், இதுவரை நடந்த உண்மைகளை பகிரங்கப்படுத்தினார்.

சசிகலா தரப்பினரின் செயல்பாடுகளால், தொகுதியில் கட்சி நிர்வாகிகளையும், பொது மக்களையும் எதிர்கொள்வதில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் தயக்கம் இருக்கிறது. சசிகலா குடும்பத்தின் அடாவடியால் முடங்கியிருந்த, அ.தி.மு.க.,வினர் மத்தியில், பன்னீர்செல்வத்தின் பரபரப்பு நடவடிக்கை மறுமலர்ச்சி ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சியின் பல்வேறு மட்டத்திலான நிர்வாகிகள், முதல்வர் பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டு, தங்களின் தார்மீக ஆதரவை தெரிவித்தனர்.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக உள்ள, எம்.எல்.ஏ.,க்களும், சசிகலா நடத்திய கூட்டத்தில் பங்கேற்றனர். அந்த குடும்பத்தினரின் அடுத்த கட்ட நகர்வுகளை தெரிந்து கொள்வதற்காகத்தான் அதில் கலந்து கொண்டனர்.

தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலை காரணமாக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை, கவர்னர் வித்யாசாகர் ராவ் தனித்தனியாக சந்தித்து, அவர்களிடம் கருத்து கேட்கவும், யாருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் என்பது குறித்து கேட்டறியவும், வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒரு சிலரை தவிர, பெரும்பாலானோர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிப்பர்.

தனக்கு எதிராக நிர்பந்தித்து பணிய வைக்கப்பட்டவர்களை, அரவணைத்துக் கொள்ள பன்னீர்செல்வம் தயாராகவே உள்ளார். அதே போன்று, கட்சியை வலுப்படுத்துவதிலும், பன்னீர்செல்வம் ஆர்வம் காட்டுகிறார். இதன் வெளிப்பாடாகத்தான், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

அதே நேரம், சுய ஆதாயம் மற்றும் பேராசை காரணமாக, தன்னை குறிவைத்து தாக்கியவர்களை, ஆட்சிப் பொறுப்பில் இருந்து களையெடுப்பதிலும், முதல்வர் என்ற நிலையில், பன்னீர்செல்வம் உறுதியாக உள்ளார். குறிப்பாக, எடப்பாடி பழனிச்சாமி, உதயகுமார், செல்லுார் ராஜு போன்றவர்கள், அமைச்சர் பதவியில் நீடிக்க வாய்ப்பே இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்நிலையில், அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது, கட்சி விதிகளை பின்பற்றியதாக இல்லை என்று, தேர்தல் கமிஷன் கருத்து தெரிவித் துள்ளது. இதனால், பேராசை காரணமாக, சசிகலாவுடன் கைகோர்த்தவர்கள், கட்சிப் பதவியும் பறிபோகுமோ என, கலக்கம் அடைந்துள்ளனர்.

- --நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1707074

  • தொடங்கியவர்
முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு
ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு
 
 
 

முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, நேற்று மாலை வரை, ஒரு பெண் எம்.எல்.ஏ., உட்பட, ஐந்து, எம்.எல்.ஏ.,க்கள், ஆதரவு தெரிவித்துள்ள னர். இன்று, மேலும் பல, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவிக்கலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.

 

Tamil_News_large_170707720170208235902_318_219.jpg

'சசி குடும்பத்தினரின் கட்டாயத்தில் தான், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன்' என, முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் அதிரடியாக பேட்டி அளித்தார்.

இது, தமிழக அரசியலில், அதிர்வலைகளை ஏற் படுத்தி உள்ளது. பன்னீர்செல்வத்தின், துணிச் சல் முடிவுக்கு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதனால், பன்னீர்செல்வம் பக்கம், எம்.எல்.ஏ.,க் கள் போய்விடக்கூடாது என்பதற்காக, நேற்று, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை, சசிகலா கூட்டினார். இதில், டி.டி.வி.தினகரனும் பங்கேற்றார். கூட்டத்தில், 131 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றதாக, சசிகலா தரப்பில் கூறப்பட்டா லும், 92 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே பங்கேற்ற தகவல் வெளியாகி உள்ளது.

அவர்களும், பன்னீர்செல்வம் பக்கம் சென்று விடக்கூடாது என்பதற்காக, கட்சி அலுவலகத்தி லேயே, சுடச்சுட மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவல் என, மதிய உணவு வழங்கப்பட்டது. பின், இரண்டு சொகுசு பஸ்களில், அவர்களை

ஏற்றி, விமான நிலையம் அருகேயுள்ள, நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்று தங்கவைத்தனர். மாலை, எம்.எல்.ஏ.,க்கள் விடுதிக்கு அழைத்து வரப்பட்டனர். இரவு, கிழக்கு கடற் கரை சாலையில் உள்ள, பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றதாக, தகவல் வெளியானது.
 

ஐந்து பேர் ஆதரவு


சோழவந்தான் - மாணிக்கம்;
ஊத்தங்கரை - மனோரஞ்சிதம்;
வாசுதேவ நல்லுார் - மனோகரன்;
கவுண்டம்பாளையம் - ஆறுகுட்டி;
ஸ்ரீவைகுண்டம் - சண்முகநாதன்

என, ஐந்து எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பன்னீர்செல்வத்தை நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.மேலும், ஏராளமான, எம்.எல்.ஏ.,க்கள், அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல், எம்.பி.,க் களில், 30 பேர், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஏராளமானோர், அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன், முன்னாள் அமைச் சர்கள், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன்; முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், அசோக், முத்துராம லிங்கம், நீலகண்டன், மாலா என, பலர் நேற்று அவரை சந்தித்தனர்.

பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறுகையில், 'விரைவில் கட்சியின் மாநில நிர்வாகிகள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் பன்னீர்செல்வம் பக்கம் வருவர்'என்றனர்.
 

'என்னை யாரும்அழைக்கவில்லை':தீபா


முதல்வர் பன்னீர்செல்வம் அவருடன் சேர்ந்து பணியாற்ற எனக்கு அழைப்பு விடுத்ததாக ஊடகங்கள் மூலம் அறிந்தேன். என்னை நேரடி யாக யாரும் அழைக்கவில்லை. யாரும் எதிர் பார்க்காத சூழலில் அதிர்ச்சி தரும் செயல் நடந் துள்ளது.

 

திட்டமிட்டபடி வரும் 24ல் என் பணிகளை துவக்குவேன், எனறார்.

பன்னீர்செல்வம் வீட்டில் திரண்ட தொண்டர்கள்


முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து, அவரின் வீட்டில், அ.தி.மு.க.,வினர் குவிந்து வருகின்றனர்.

சென்னை, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு, முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று முன்தினம், இரவு சென்றார். அங்கு, சசிகலா வின் சதித் திட்டங்கள் குறித்து, செய்தியாளர் களிடம் தெரிவித்தார். அதைதொடர்ந்து, கிரீன் வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு சென்ற அவரை,அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், தொண்டர்கள், நள்ளிரவிலும் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

வீட்டில் இருந்த அவரை, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள், சென்னை, கோவை, திருச்சி, தேனி என, பல மாவட்டங்களை சேர்ந்த, அ.தி.மு.க., வினர் வந்து சந்தித்து, வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக, மகளிரணியினர் அதிகளவில் வந்தனர். அவர்கள் அனைவரும் சசிகலாவுக்கு எதிராகவும், பன்னீர்செல்வத்தை வாழ்த்தியும், கோஷங்களை எழுப்பினர். கட்சியினருக்கு, பன்னீர்செல்வத்தின் வீட்டில், டீ, காபி, சாப்பாடு வழங்கப்பட்டது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1707077

3 minutes ago, நவீனன் said:

ஸ்ரீவைகுண்டம் - சண்முகநாதன்

பதிவு செய்த நாள் : 8, பிப்ரவரி 2017 (20:46 IST) 
மாற்றம் செய்த நாள் :8, பிப்ரவரி 2017 (20:46 IST)

 
பேருந்தில் சென்ற சண்முகநாதன்
 ஓபிஎஸ் வீட்டிற்கு ஓடிவந்த கதை!
 
sp%20sanmuganathan.jpg
 
சென்னையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிந்ததும் எம்.எல்.ஏக்களை சொகுசு பேருந்தில் வைத்து, நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்துவிடுவது என்று சசிகலா தரப்பு முடிவுசெய்து அதை செயல்படுத்திக்கொண்டிருந்தது.  
 
எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிக்க விடாமல் அவர்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்.  இந்த இக்கட்டான நிலையில், எம்.ஏக்களை அடைத்த சொகுசு பேருந்து  3 மணி நேரமாக மெரினா கடற்கரையிலேயே சுற்றிக்கொண்டிருந்தது.   பின்னர் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டு கிரீன்வேஸ் சாலைக்கு சென்றது சொகுசு பேருந்து.  கிரீன்வேஸ் சாலையில்தான் முதல்வர் ஓபிஎஸ் இல்லமும் உள்ளது. 
 
பேருந்தில் இருந்து இறங்கி எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்குள் சென்றபோது, யாருக்கும் தெரியாமல் நைசாக ஓடிச்சென்று ஓபிஎஸ் வீட்டிற்குள் நுழைந்துவிட்டார் சண்முகநாதன்.  அங்கே ஓபிஎஸ்சை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
 
ஓபிஎஸ்சை சந்திக்க விடுவதற்காக சொகுசு பேருந்தில் இத்தனை ஜாக்கிரதையாக சண்முகநாதனை அழைத்துவந்தோம் என்று நொந்து போயிருக்கிறது சசிகலா கோஷ்டி.

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=183932

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகளை வாசிக்க "ஒரு கைதியின் டைரி " படம் பார்க்கிற மாதிரி இருக்கு ....!  tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, நவீனன் said:

 

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

 

13 hours ago, நவீனன் said:

 

தீபாவுக்கு பன்னீர் அழைப்பு

 

 

10 hours ago, நவீனன் said:

நத்தம் விஸ்வநாதன், நடிகர் பாக்யராஜ்..! நீளும் பன்னீர்செல்வம் ஆதரவுப் பட்டியல்

18 minutes ago, நவீனன் said:
முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு
ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு
34 minutes ago, நவீனன் said:

 

சசிகலாவுக்கு எதிராக முதல்வர் பன்னீர்செல்வம்...விஸ்வரூபம்!: ஏவலாட்களாக மாறிய பேராசை புள்ளிகள் பதவி பறிப்பு: கட்சி பதவியும் பறிபோகும் அபாயத்தில் மந்திரிகள்: தாக்குப்பிடிக்க முடியாமல் மன்னார்குடி கும்பல் கலக்கம்
1 hour ago, ஜீவன் சிவா said:

எங்களை எங்கேயோ கொண்டு செல்கிறார்கள்: அதிமுக எம்எல்ஏக்கள் கதறல்

 

  • தொடங்கியவர்
ஓ.பி.எஸ்., வெற்றி பெறுவார்: மைத்ரேயன் நம்பிக்கை

 

சென்னை: ''எம்.எல்.ஏ.,க்கள் எங்கும் இருக்கலாம்; விமானத்திலும் பறக்கலாம். சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தால், முதல்வர் பன்னீர்செல்வம் வெற்றி பெறுவார்,'' என, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் கூறினார்.


முதல்வர் பன்னீர்செல்வத்தை, அவரது வீட்டில் சந்தித்து ஆதரவு அளித்த பின், அவர் அளித்த பேட்டி: முதல்வர் பன்னீர்செல்வம், தன் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்து விட்டார். அவருக்கு என்ன நடந்தது என்பதற்கு, அவரே சாட்சி; அதை கூறி விட்டார். அ.தி.மு.க., ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட கட்சி. நாங்கள் எல்லாம் இந்த இடத்தில் இருக்கிறோம் என்றால், அது அவர் அளித்த பிச்சை. கட்சிக் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டியது எங்கள் கடமை. பன்னீர்செல்வம் மூலம், தமிழக அரசியல் சூழல் மாறி வருகிறது. தமிழக மக்கள் அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அ.தி.மு.க., தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவு அவருக்கு கிடைத்து வருகிறது. சட்டசபையில், பெரும்பான்மையை பன்னீர்செல்வம் நிரூபிப்பது குறித்து, கவர்னர் தான் முடிவு எடுக்க வேண்டும். கட்டாயப்படுத்தி, ராஜினாமா கடிதம் பெற்றுள்ளனர்.

 

அதனால், ராஜினாமா கடிதத்தை பன்னீர்செல்வம் வாபஸ் பெறுவார்; அதை, கவர்னர் ஏற்றுக் கொள்வார் என, நம்புகிறோம். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தற்போது, எங்கேயும் இருக்கலாம்; சொகுசு பஸ்களில் செல்லலாம்; சொகுசு ஓட்டல்களில் தங்கலாம்; தனி விமானத்தில் பறக்கலாம். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க, சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்தும் போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எங்களை ஆதரிப்பர். பிரதமராக இருந்த வாஜ்பாய், 1999ல், பார்லிமென்டில், நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரினார். விவாதத்தில், பகுஜன் சமாஜ் - எம்.பி.,க்கள், வாஜ்பாயை ஆதரித்து பேசினர். ஆனால், எதிராக ஓட்டளித்தனர். ஒரு ஓட்டில், வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது.

 

எனவே, ஓட்டெடுப்பு நடத்தும் போது தான், ஆதரவு யாருக்கு என்ற, இறுதி முடிவு தெரிய வரும். பன்னீர்செல்வத்தின் நிலை நேற்று வேறு மாதிரி இருந்தது. 24 மணி நேரத்தில், மக்கள் ஆதரவு, தொண்டர்கள் ஆதரவு பெருகிவிட்டது. இதுதான் அரசியல் மாற்றம். அடுத்த, 24 மணி நேரத்தில், பன்னீர்செல்வத்திற்கு சாதகமான மாற்றங்கள் உருவாகும். ஜனாதிபதியை சந்தித்தால் மட்டும் ஆட்சி அமைத்து விட முடியாது. சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை ஓட்டெடுப்பே முக்கியம். தீபாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆறுகுட்டி, மாணிக்கம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளித்துள்ளனர்; மற்ற எம்.எல்.ஏ.,க்களும் வருவர்.

இவ்வாறு மைத்ரேயன் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1706986

  • தொடங்கியவர்

பன்னீர் செல்வம் நினைத்தாலும் ராஜினாமாவை திரும்ப பெற முடியாது: சோலி சொரப்ஜி

முதலமைச்சர் பன்னீர் செல்வத்தால் தன்னுடைய ராஜினாமாவை திரும்ப பெற முடியாது என்று முன்னாள் அட்டார்னி ஜெனரல் சோலி சொரப்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

 
பன்னீர் செல்வம் நினைத்தாலும் ராஜினாமாவை திரும்ப பெற முடியாது: சோலி சொரப்ஜி
 
புதுடெல்லி:
 
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து முன்னாள் அட்டார்னி ஜெனரல் சோலி சொரப்ஜி பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார். 
 
அதில், முதலமைச்சர் பன்னீர் செல்வத்தால் தன்னுடைய ராஜினாமாவை திரும்ப பெற முடியாது என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும் சோலி சொராப்ஜி கூறியதாவது:-
 
தமிழகத்தில் தற்போது வினோதமான அரசியல் சூழல் நிலவி வருகிறது. சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடுத்த வாரம் வரவுள்ள நிலையில் ஆளுநர் காத்திருப்பதில் தவறில்லை. 
 
தீர்ப்பு வருவதற்கு வாரங்களோ, மாதங்களோ இல்லை. வெள்ளி அல்லது திங்களன்று தீர்ப்பு வரவிருப்பதால் காத்திருக்கலாம். நல்ல காரணங்களுக்காக ஆளுநர் பதவியேற்பை ஒத்தி வைக்கலாம். 
 
முதலமைச்சர் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டார். அதனை ஆளுநரும் ஏற்றுக்கொண்டு விட்டார். இதன் பின்னர் ராஜினாமாவை திரும்ப பெற முடியாது. 
 
இவ்வாறு தெரிவித்தார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/09003842/1067156/Cant-Get-back-OPannerselvams-Resignation-Soli-Sorabjee.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.