Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் வருகிறது நோக்கியா 3310

Featured Replies

மீண்டும் வருகிறது நோக்கியா 3310


மீண்டும் வருகிறது நோக்கியா 3310
 

அனைவராலும் அதிகம் விரும்பப்பட்ட செல்பேசியான 3310 இனை மீண்டும் வெளியிட நோக்கியா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

செல்பேசி வரலாற்றில் நெகிழ்திறன் கொண்ட செல்பேசியாக நோக்கியா 3310 திகழ்கிறது.

2000 ஆம் ஆண்டில் முதன்முதலில் இந்த செல்பேசி மாடல் வெளியானது.

இதன் நீடித்த பேட்டரி பாவனை மற்றும் எளிதில் உடையாத வடிவம் காரணமாக மக்கள் இதனைப் பெரிதும் விரும்பியதுடன், இன்றும் நினைவில் வைத்துள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் வெளியாகவுள்ள இந்த செல்பேசியினை 59 யூரோக்களுக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வழமைபோல், கடிகாரம், கால்குலேட்டர், ரிமைன்டர் ஆகிய வசதிகளுடன் நான்கு விளையாட்டுக்களும் இந்த செல்பேசியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

புதியரக ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதில் தோல்வியைத் தழுவிய நோக்கியா நிறுவனம், தமது பழைய மாடல்களை மீண்டும் களமிறக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது.

http://newsfirst.lk/tamil/2017/02/மீண்டும்-வருகிறது-நோக்கி/

 

 

 

ரீ-என்ட்ரி ஆகிறது நோக்கியா 3310!

நோக்கியாவின் க்ளாசிக் மாடலான 3310 ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளது. மெகா பேட்டரி லைஃப், ஸ்நேக் கேம் என சக்கை போடு போட்ட நோக்கியா 3310 மாடலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். வருகின்ற 26-ம் தேதி, ஸ்பெயினில் நடைபெறும் நோக்கியாவின் சர்வதேச மொபைல் மாநாட்டில் இந்த போனின் மாடர்ன் வெர்ஷன் அறிமுகமாகிறது. 

Nokia 3310 

இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,200க்கு விற்பனைக்கு வருகிறது. மேலும், அன்றைய தினமே நோக்கியாவின் மூன்று ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களும் உலகுக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. பழைய 3310 போனின் பாசிட்டிவ் அம்சங்கள் புதிய மாடலிலும் இருக்கும் என்கிறார்கள் டெக் நபர்கள். 

http://www.vikatan.com/news/viral-corner/80807-nokias-3310-model-all-set-for-relaunch.html

  • தொடங்கியவர்
 

நோக்கியா 3310-ன் கம்பேக்..! அதன் வசதிகள் நினைவிருக்கிறதா?

12 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனையான நோக்கியா நிறுவனத்தின் மிக வெற்றிகரமான மொபைல்களில் ஒன்றான “நோக்கியா 3310”, இம்மாத இறுதியில் பார்சிலோனாவில் நடைபெறவிருக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில், கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியிடப்படுகிறது.

நோக்கியா 3310

எத்தனை புதிய வசதிகளுடன் கூடிய ஆப்பிளின் ஐபோன்கள், கூகுளின் பிக்ஸல் மொபைல்கள், சாம்சங்னின் காலக்ஸிகள், சோனியின் எக்ஸ்பீரியாக்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களின் மொபைல்கள் சந்தையில் அறிமுகமானாலும் நோக்கியா மொபைல்களில் கிடைத்த எந்த சூழ்நிலையையும் தாங்கும் வடிவமைப்பும், பல நாட்கள் நீடித்துழைக்கும் பேட்டரியும், அதற்கும் மேலாக அளிக்கும் பணத்திற்கு நிறைவான திருப்தியும், முதன்முதலாக விளையாடிய ‘சினேக்’ கேமையும் எவராலும் மறக்கவியலாது எனலாம்.

பின்லாந்து நாட்டை சேர்ந்த நிறுவனமான நோக்கியா, மொபைல் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் அதாவது 1987-லேயே தனது முதல் மொபைல் போனை வெளியிட்டு சந்தையில் நுழைந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் புதுப்புது மொபைல்களை வெளியிட்ட நோக்கியா தனது 3310, 1100, 6600, N73 உள்ளிட்ட பல வெற்றிகரமான போன்களை வெளியிட்டது. ஆனால் 2008-ல் வெளியிடப்பட்டு பின்பு மெதுவாக மொபைல் சந்தையை தன்னை நோக்கி இழுக்க ஆரம்பித்த ஆண்ட்ராய்டின் முன்பு நோக்கியாவின் முயற்சிகள் எடுபடாமல் போனது. அப்போது தொடங்கிய நோக்கியாவின் வீழ்ச்சி 2011-ல் மைக்ரோசாப்ட்டுடன் இணைந்து பணியாற்றியபோதும் தொடர்ந்தது.

இந்நிலையில் கடுமையான விற்பனை வீழ்ச்சியின் காரணமாக திணறிய நோக்கியாவை மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 2013ல் $7.6 பில்லியன் டாலருக்கு கையகப்படுத்தியது. அதன் பிறகு லுமினா என்ற பெயரில் மைக்ரோசாப்ட் வெளியிட்ட மொபைல்களும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை எனலாம். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு நோக்கியா நிறுவனம் பின்லாந்தை சேர்ந்த HMD Global என்னும் நிறுவனத்திற்கு தனது பெயரையும், மொபைல் தயாரிப்பு உரிமங்களையும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பயன்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு மக்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியாவின் முதல் ஆண்ட்ராய்டு மொபைல் கடந்த மாதம் சீனாவில் மட்டும் இதுவரை விற்பனைக்கு வந்து மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில், கிட்டத்தட்ட வெளியிடப்பட்டு 16 வருடங்கள் ஆனாலும் மக்களிடையே நீங்கா இடத்தை பிடித்த 3310 மாடல் மொபைலை மீண்டும் இம்மாத இறுதியில் பார்சிலோனாவில் நடைபெறவிருக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் வெளியிடவிருப்பதாக HMD Global நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோக்கியா 3310

நோக்கியாவின் வடிவமைப்பாலும், சிறப்பசங்கள் மற்றும் பேட்டரி திறனாலும் கவரப்பட்டவர்கள், நோக்கியா அதன் அதிகாரப்பூர்வ தயாரிப்பை நிறுத்திய சூழலிலும், அதிகாரபூர்வமற்ற நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்யும் 1100, 3310 மொபைல்களை வாங்குவோர் இன்றும் உள்ள நிலையில் HMD Global நிறுவனத்தின் இந்த அறிவிப்பு இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாட்டு மக்களினாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

நோக்கியா 1100 மற்றும் ஐபோன் ஒப்பீடு எப்போதும் பிரபலமான ஒன்று. அதேபோல் நோக்கியா 3310-ன் வசதிகள் மற்றும் தற்போதைய ஐபோன் 7 இடையேயான ஒப்பீடு இதோ...       

 
சிறப்பம்சங்கள்     

நோக்கியா 3310   

ஐபோன் 7
எடை   133 கிராம்     138 கிராம் 
தாங்கும் திறன் 10 அடி தூரத்திலிருந்து தூக்கியடித்தாலும் தாங்கும்!

பாக்கெட்டிலிருந்து கீழே விழுந்தாலே திரை உடையும் வாய்ப்பு உண்டு.

விலை

 ரூ. 3500 (எதிர்பார்க்கப்படும் விலை)

ரூ. 60000
கேமரா இல்லை.   12MP
சிறந்த கேம்     சினேக்           போக்கிமேன் கோ

http://www.vikatan.com/news/information-technology/81030-nokia-3310-to-be-relaunched-in-upcoming-mobile-world-congress.html

எல்லோருக்கும் ஐபோனை தவிர மற்றதுகள் தெரிவதில்லை HTC10 நோக்கியவுடன் சண்டைக்கு நிக்குது இதுவரை என் தெரிவு அதுதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, நவீனன் said:
 
சிறப்பம்சங்கள்     

நோக்கியா 3310   

ஐபோன் 7
எடை   133 கிராம்     138 கிராம் 
தாங்கும் திறன் 10 அடி தூரத்திலிருந்து தூக்கியடித்தாலும் தாங்கும்!

பாக்கெட்டிலிருந்து கீழே விழுந்தாலே திரை உடையும் வாய்ப்பு உண்டு.

விலை

 ரூ. 3500 (எதிர்பார்க்கப்படும் விலை)

ரூ. 60000
கேமரா இல்லை.   12MP
சிறந்த கேம்     சினேக்           போக்கிமேன் கோ

http://www.vikatan.com/news/information-technology/81030-nokia-3310-to-be-relaunched-in-upcoming-mobile-world-congress.html

இந்தக்காலத்திலை கமரா இல்லாத ரெலிபோனும் ஒரு ரெலிபோனே? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

இந்தக்காலத்திலை கமரா இல்லாத ரெலிபோனும் ஒரு ரெலிபோனே? :cool:

அதானே குழந்தை முதல் குமர் வரைக்கும்  பாட்டி முதல் தாத்தா வரைக்கும்  தடவி திரியுறாங்க கமறா போணை tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, முனிவர் ஜீ said:

அதானே குழந்தை முதல் குமர் வரைக்கும்  பாட்டி முதல் தாத்தா வரைக்கும்  தடவி திரியுறாங்க கமறா போணை tw_blush:

காதுக்கை ரெலிபோனை வைச்சு கதைச்சுக்கொண்டே பக்கத்திலை இருக்குற குமரை படம்புடிச்சு பேஸ்புக்கிலை ஏத்தி அழகு பாக்கிறாங்களப்பா.....tw_astonished:

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

காதுக்கை ரெலிபோனை வைச்சு கதைச்சுக்கொண்டே பக்கத்திலை இருக்குற குமரை படம்புடிச்சு பேஸ்புக்கிலை ஏத்தி அழகு பாக்கிறாங்களப்பா.....tw_astonished:

நமக்கும் அதுக்கும் ரொம்ப தூரம் அண்ண tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

வீழ்ச்சியில் இருந்து மீண்டெழுவது நோக்கி.. மைக்குரா சாவ்ட்.. நொக்கியா விடும் கதை போலவே தெரிகிறது. tw_blush::rolleyes:

  • 2 months later...
  • தொடங்கியவர்

பழசு, ஆனா புதுசு! மீண்டும் கலக்க வருகிறது நோக்கியா 3310

பல நாள் காத்திருப்புக்குப் பின்னர், நோக்கியாவின் 3310 மாடல் மொபைல் போன்கள் விரைவில் சந்தைகளில் கலக்க வருகிறது.

நோக்கியா

நோக்கியாவின் பழைய 3310 மாடலை மீண்டும் விற்பனைக்குக் கொண்டுவர இருப்பதாக, மொபைல் வேர்ல்டு காங்கிரஸில் அறிவித்திருந்தது நோக்கியா. மொபைல் வேர்ல்டு காங்கிரஸில் அறிமுகம்செய்யப்பட்ட மற்ற மொபைல்களைவிடவும் அதிக கவனம் ஈர்த்தது, இந்த மொபைல்தான். ஆனால், எப்போது விற்பனைக்கு வரும் என்ற விவரங்களை நோக்கியா நிறுவனம் அறிவிக்கவில்லை. இந்த நிலையில், நேற்று இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அந்த நிறுவனம், '17 வருட காத்திருப்பு முடிந்துவிட்டது. மொபைல்களை சந்தைக்கு அனுப்பும் பணிகள் துவங்கிவிட்டன' என ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. 

மேலும், இது எப்போது கிடைக்கும் என கமென்ட்டில் கேட்ட ரசிகர்களுக்கு, 'இன்னும் சில மாதங்களில் எங்கள் போன்களை வெளியிடுவோம். மே மற்றும் ஜூன் மாதங்களில் எங்கள் தயாரிப்புகள் வெளியிடப்படும். மேலும் தகவல்களுக்கு, எங்களோடு இணைந்திருங்கள்' எனப் பதில் அளித்துள்ளது நோக்கியா. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.