Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐபிஎல் 2017 சீசன்!

Featured Replies

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: பரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் குஜராத்தை வீழ்த்தியது மும்பை

மும்பை - குஜராத் இடையேயான போட்டி சமனில் முடிவடைந்ததால் சூப்பர் ஓவர் முறையில் குஜராத் அணியை மும்பை வீழ்த்தியது.

 
ஐ.பி.எல்: பரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் குஜராத்தை வீழ்த்தியது மும்பை
 
ராஜ்கோட்:

ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் லயண்ஸ் அணிகள் பலப்பரிட்ச்சை நடத்தின. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஸன், மெக்கல்லம் ஆகியோர் களமிறங்கினர்.

அதிரடி ஆட்டக்காரர் மெக்கல்லம் 6 ரன்களில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார். ஆனால், மற்றொரு தொடக்க வீரரான இஷான் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். பின்வரிசை வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பினர். குறிப்பாக குஜராத் அணியின் கேப்டன் ரெய்னா 1 ரன்கள் மட்டுமே எடுத்து கேட்ச் ஆனார்.

சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தாலும் ஜடேஜா, பல்க்னர், டை ஆகியோரின் போதிய பங்களிப்பால் குஜராத் அணி கவுரமான ரன்களை எட்டியது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்களை அந்த அணி எடுத்தது. மும்பை அணி சார்பின் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும், மலிங்கா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பார்தீவ் படேல் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். 44 பந்துகளுக்கு 9 பவுண்டரிகளும், 1 சிக்சருடன் 70 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு பொறுமையை சோதித்தனர். மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா 5 ரன்களில் வெளியேறி இந்த முறையும் சொதப்பினார்.

பொல்லார்டு மற்றும் பாண்டியா சிறிது சிறிதாக ரன்கள் சேர்க்க அணியின் ஸ்கோர் மந்தமாக உயர்ந்தது. குஜராத் அணியின் இறுதி கட்ட நேர்த்தியான பந்து வீச்சால் மும்பை அணியின் பேட்டிங் வரிசை சிதறியது. 20 ஓவர்களின் முடிவில் 153 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் ஆட்டம் சமனில் முடிவடைந்தது.
201704300026273645_iplsss4._L_styvpf.gif

ஆட்டத்தின் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இம்முறை மும்பை அணியில் பொல்லார்டு மற்றும் பட்லர் களமிறங்கினர். குஜராத் அனியின் பல்க்னர் பந்து வீசினார். முதல் பந்தில் பட்லர் ஒரு ரன்களை எடுத்தார். இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய பொல்லார்டு, மூன்றாவது பந்தை சிக்சருக்கு தூக்கினார். நான்காவது பந்தில் பொல்லார்டு கேட்ச் ஆக, ஐந்தாவது பந்தில் பட்லர் கேட்ச் ஆனார். இதனால், மும்பை அணி சூப்பர் ஓவரில் 11 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.

12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள் பின்ச், மெக்கல்லம் களமிறங்கினர். மும்பை அணியின் பும்ரா பந்து வீசினார். முதல் பந்தை பும்ரா நோ-பாலாக வீச குஜராத் அணிக்கு ப்ரீ ஹிட் பால் கிடைத்தது. ஆனால், அந்த பந்தில் பின்ச் ஒரு ரன்களை மட்டுமே எடுத்தார். இரண்டாவது பந்தை வைடாக பும்ரா வீச, குஜராத் ரசிகர்கள் உற்சாகமானார்கள்.

பின்னர், அடுத்தடுத்த பந்துகளை பும்ரா மெதுவாக வீசியதால் குஜராத் வீரர்கள் ரன்கள் எடுக்க திணறினர். இறுதி பந்தில் 7 ரன்கள் எடுத்தால் என்ற நிலையில் மெக்கல்லம்-ஆல் ஒரு ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், பரபரப்பான இப்போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/30002624/1082785/mumbai-won-against-gujrath-in-super-over.vpf

  • Replies 368
  • Views 44.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இப்படி ஆடிவிட்டு எப்படிப் பேசுவது? : தோல்வியில் விராட் கோலி விரக்தி

 
கோலி விரக்தி. | படம்.| ஏ.எஃப்.பி.
கோலி விரக்தி. | படம்.| ஏ.எஃப்.பி.
 
 

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விட்ட நிலையில் புனே அணிக்கு எதிரான தோல்வி குறித்தும் ஒட்டுமொத்தமாக அணியின் ஆட்டம் குறித்தும் பெங்களூரு கேப்டன் விராட் கோலி கடும் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஜெயண்ட் அணியின் 157 ரன்கள் இலக்கை விரட்டும் போது ஆர்சிபி 96/9 என்று முடிந்தது, இதில் கோலி 55 ரன்கள்.

இந்நிலையில் ஆட்டம் முடிந்து பேசிய விராட் கோலியின் பேச்சில் விரக்தி தொனித்தது

என்ன நடந்தது என்பதை அனைவரும் பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு ஆட்டத்தை ஆடிவிட்டு இங்கு நின்று பேசுவது கடினமாக இருக்கிறது.

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் ரேசில் நாங்கள் இல்லை. மீதியுள்ள 4 ஆட்டங்களையும் முடிவுகள் பற்றி கவலைப்படாமல் மகிழ்வுடன் ஆட வேண்டியதுதான்.

நாங்கள்தான் போட்டியைத் தோற்றோமே தவிர அவர்கள் வெல்லவில்லை, இது போன்ற அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டு அடுத்தக் கட்டத்துக்கு நகர வேண்டும்.

அணியின் மோசமான ஆட்டத்துக்கு சில காரணங்கள் இருக்கலம். கடந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய சிறந்த பேட்டின் அணி என்றே எங்களை ரசிகர்கள் நோக்கினர். தோல்விக்கு குறிப்பிட்ட காரணத்தை சுட்ட முடியவில்லை, அவுட் ஆவதற்கு தயக்கமாக இருக்கலாம் ரன்கள் எடுக்க தயக்கமாக இருக்கலாம்.

இவ்வாறு கூறினர் விராட் கோலி

http://tamil.thehindu.com/sports/இப்படி-ஆடிவிட்டு-எப்படிப்-பேசுவது-தோல்வியில்-விராட்-கோலி-விரக்தி/article9674488.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

பஞ்சாப் அணிக்கெதிராக டெல்லி பேட்டிங்: ஜாகீர்கான் இல்லை; கருண் நாயர் கேப்டன்

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிராக பஞ்சாப் அணி கேப்டன் மேக்ஸ்வெல் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளார். ஜாகீர் கான் இடம்பெறாததால் கருண் நாயர் கேப்டனாக செயல்படுகிறார்.

 
பஞ்சாப் அணிக்கெதிராக டெல்லி பேட்டிங்: ஜாகீர்கான் இல்லை; கருண் நாயர் கேப்டன்
 
ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. மொகாலியில் நடைபெறும் முதல் போட்டி மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி அணிக்கெதிராக பஞ்சாப் அணி கேப்டன் மேக்ஸ்வெல் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.

டெல்லி அணியில் ஜாகீர்கான் இடம்பெறாததால் கருண் நாயர் கேப்டனாக செயல்படுகிறார். இவர் இதற்கு முன் இரண்டு முறை மட்டுமே ரஞ்சி டிராபி போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

பஞ்சாப் அணியில் அம்லா, நடராஜன், வருண் ஆரோன் சேர்க்கப்பட்டுள்ளனர். டெல்லி அணியில் சாம் பில்லிங்ஸ், நதீம், ஷமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெல்லி அணி: 1. சாம்சன், 2. பில்லிங்ஸ், 3. கருண் நாயர், 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. ரிஷப் பந்த், 6. கிறிஸ் மோரிஸ், 7. ஆண்டர்சன், 8. ரபாடா, 9. மிஸ்ரா, 10. ஷமி, 11. நதீம்.

பஞ்சாப் அணி:-

1. அம்லா, 2. வோரா, 3. ஷேன் மார்ஷ், 4. மேக்ஸ்வெல், 5. கப்தில், 6. சகா, 7. அக்சார் பட்டேல், 8. மோகித் சர்மா, 9. வருண் ஆரோன், 10. சந்தீப் ஷர்மா, 11. நடராஜன்.

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். போட்டி: கொல்கத்தா அதிரடியை ஐதராபாத் இன்று சமாளிக்குமா?

ஐ.பி.எல். போட்டியில் இன்றைய ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

 
ஐ.பி.எல். போட்டி: கொல்கத்தா அதிரடியை ஐதராபாத் இன்று சமாளிக்குமா?
 
மொகாலி:

ஐ.பி.எல். போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது.

மாலை 4 மணிக்கு மொகாலியில் நடைபெறும் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ஜாகீர்கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் அணி 3 வெற்றி, 5 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி முதலில் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. பின்னர் தொடர்ச்சியான 4 ஆட்டங்களில் தோற்றது. குஜராத்தை வீழ்த்தி தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கடந்த ஆட்டத்தில் ஐதராபாத்திடம் தோற்று இருந்தது.

பஞ்சாப் அணி ஏற்கனவே டெல்லியிடம் 51 ரன்னில் தோல்வி அடைந்து இருந்தது. அதற்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுத்து 4-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
201704301237252536_caob87x3._L_styvpf.gi
டெல்லி அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் பெங்களூரிடம் தோற்றது. அதன்பிறகு புனே, பஞ்சாப்பை வீழ்த்தியது. அடுத்து 4 ஆட்டங்களில் தொடர்ந்து தோற்றது.

தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்து 3-வது வெற்றிக்காக டெல்லி அணி காத்திருக்கிறது. இரு அணிகள் மோதிய போட்டியில் பஞ்சாப் 10 ஆட்டத்திலும், டெல்லி 9 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

ஐதராபாத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான ஐதராபாத் அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. கொல்கத்தாவிடம் 17 ரன்னில் அந்த அணி ஏற்கனவே தோற்று இருந்தது.

இதற்கு ஐதராபாத் அணி பதிலடி கொடுத்து 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் கேப்டன் வார்னர், தவான், யுவராஜ்சிங், வில்லியம்சன் போன்ற சிறந்த அதிரடி வீரர்கள் உள்ளனர்.

2 முறை சாம்பியனான கொல்கத்தா அணி 7 வெற்றி, 2 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. ஐதராபாத்தை மீண்டும் வீழ்த்தி ‘பிளேஆப்’ சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது.

கொல்கத்தா அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது. கேப்டன் காம்பீர், உத்தப்பா, மனிஷ் பாண்டே, யூசுப் பதான், சுனில்நரீன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இரு அணிகளும் பலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகள் மோதிய போட்டியில் கொல்கத்தா 7 ஆட்டத்திலும், ஐதராபாத் 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
 
  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., லீக் போட்டி: டில்லி அணி 67 ரன்களில் சுருண்டது
  • தொடங்கியவர்

#IPl10: 10 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய பஞ்சாப்!

 
 

இன்று ஐபிஎல் தொடரின் 36-வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. 68 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய பஞ்சாப் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

பஞ்சாப்

ஐபிஎல் தொடரின் 36-வது போட்டி இன்று மொஹாலியில் நடந்தது. டெல்லி, பஞ்சாப் அணிகள் மோதும் இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 17.1 ஓவர்களின் முடிவில் 67 ரன்களுக்கு சுருண்டது. பஞ்சாப் தரப்பில் சந்தீப் ஷர்மா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து 68 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 7.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக மார்டின் கப்தில் 27 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். ஹஷிம் அம்லா 16 ரன்கள் குவித்தார். 4 விக்கெட்டுகள் வீழ்த்திய சந்தீப் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.     

இதையடுத்து, இன்று இரவு ஹைதராபாத்தில் நடக்கும் மற்றொரு போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மொதுகின்றன.

Photo Courtesy: IPLT20

http://www.vikatan.com/news/sports/88035-ipl10-punjab-beats-delhi-daredevils-by-10-wicket.html

  • தொடங்கியவர்

மொகாலியில் நடைபெற்ற போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

 

மொகாலியில் நடைபெற்ற போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் 73 பந்துகள் மீதமுள்ள நிலையில் டெல்லி அணியை வீழ்த்திய கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

 
 
மொகாலியில் நடைபெற்ற போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
 
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மொகாலியில் நடைபெற்றது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் மேக்ஸ்வெல் பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி சந்தீப் ஷர்மாவின் அபார பந்து வீச்சால் 67 ரன்னில் சுருண்டது. பின்னர் 68 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது.

மார்ட்டின் கப்தில், ஹசிம் அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அம்லா நிதானமாக விளையாட மார்ட்டின் கப்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பஞ்சாப் அணி 7.5 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மார்ட்டின் கப்தில் 27 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தும், அம்லா 20 பந்தில் 16 ரன்கள் எடுத்தும் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்திய சந்தீப் ஷர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 9 போட்டிகளில் நான்கு வெற்றிகள் மூலம் 5-வது இடத்தில் உள்ளது. டெல்லி 8 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/30184202/1082864/IPL-Kings-XI-Punjab-beats-delhi-daredeivls.vpf

  • தொடங்கியவர்

டேவிட் வார்னர் அதிரடி சதம்!

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி சதம் அடித்து மிரட்டினார்

 
Bild könnte enthalten: eine oder mehrere Personen
  • தொடங்கியவர்

வார்னரின் அதிரடி சதத்தால் ஐதராபாத் 209 ரன்கள் குவிப்பு: சேஸிங் செய்யுமா பெங்களூரு?

வார்னரின் அதிரடி சதத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 210 ரன்கள் குவித்துள்ளது. இவ்வளவு பெரிய ஸ்கோரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சேஸிங் செய்யுமா?.

 
 
வார்னரின் அதிரடி சதத்தால் ஐதராபாத் 209 ரன்கள் குவிப்பு: சேஸிங் செய்யுமா பெங்களூரு?
 
ஐ.பி.எல். தொடரில் இன்றைய 2-வது ஆட்டம் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஐதராபாத் அணியின் வார்னர், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

தவான் ஒருபுறம் நிதானமாக விளையாட மறுபுறம் வார்னர் ருத்ரதாண்டவம் ஆடினார். 2-வது ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் 10 ரன்கள் குவித்த வார்னர், கிறிஸ் வோக்ஸ் வீசிய 3-வது ஓவரில் தலா ஒரு சிக்ஸ், பவுண்டரி மூலம் 11 ரன்கள் சேர்த்தார். யூசுப் பதான் வீசிய 4-வது ஓவுரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் உடன் 17 ரன்கள் சேர்த்தார்.

5-வது ஓவரை சுனில் நரைன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் வார்னர் இமாலய சிக்சர் விளாசி 25 பந்தில் அரைசதம் அடித்தார். அப்போது ஐதராபாத் அணி 4.1 ஓவரில் 58 ரன்கள் சேர்த்திருந்தது. தவான் 8 ரன்கள் அடித்திருந்தார். இந்த ஓவரில் வார்னர் 13 ரன்கள் சேர்த்தார்.

6-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் தவான் கொடுத்த ஸ்டம்பிங் வாய்ப்பை உத்தப்பா சரியாக பயன்படுத்தவில்லை. இந்த ஓவரில் ஐதராபாத் அணி 12 ரன்கள் சேர்க்க பவர் பிளேயான முதல் 6 ஓவரில் 79 ரன்கள் குவித்தது.

குல்தீப் யாதவ் வீசிய 10-வது ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசி 98 ரன்னைத் தொட்டார் வார்னர். 11-வது ஓவரின் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து சதத்தை பதிவு செய்தார். வார்னர். 43 பந்தில் 7 பவுண்டரி, 8 சிக்சருடன் சதம் அடித்தார்.

மறுமுனையில் விளையாடிய தவான் 30 பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். அப்போது ஐதராபாத் அணி 13 ஓவரில் 139 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். சுனில் நரைன் வீசிய 16-வது ஓவரில் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் அடித்த வார்னர், 17-வது ஓவரில் அவுட் ஆனார். அவர் 59 பந்தில் 10 பவுண்டரி, 8 சிக்சர் உடன் 126 ரன்கள் சேர்த்தார்.

கேன் வில்லியம்சன் அதிரடியாக விளையாட சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது.

பின்னர் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/30220307/1082879/warner-century-Sunraisers-209-runs-against-KKR.vpf

Sunrisers Hyderabad 209/3 (20/20 ov)
Kolkata Knight Riders 55/2 (7.3/20 ov)
Kolkata Knight Riders require another 155 runs with 8 wickets and 12.3 overs remaining
  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: கொல்கத்தாவை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்

ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் வார்னரின் அதிரடி சதத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீழ்த்தியது.

 
ஐ.பி.எல்: கொல்கத்தாவை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்
 
ஐதராபாத்:

ஐ.பி.எல். தொடரில் இன்றைய 2-வது ஆட்டம் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஐதராபாத் அணியின் வார்னர், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

தவான் ஒருபுறம் நிதானமாக விளையாட மறுபுறம் வார்னர் ருத்ரதாண்டவம் ஆடினார். 2-வது ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் 10 ரன்கள் குவித்த வார்னர், கிறிஸ் வோக்ஸ் வீசிய 3-வது ஓவரில் தலா ஒரு சிக்ஸ், பவுண்டரி மூலம் 11 ரன்கள் சேர்த்தார். யூசுப் பதான் வீசிய 4-வது ஓவுரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் உடன் 17 ரன்கள் சேர்த்தார்.

6-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் தவான் கொடுத்த ஸ்டம்பிங் வாய்ப்பை உத்தப்பா சரியாக பயன்படுத்தவில்லை. இந்த ஓவரில் ஐதராபாத் அணி 12 ரன்கள் சேர்க்க பவர் பிளேயான முதல் 6 ஓவரில் 79 ரன்கள் குவித்தது.

குல்தீப் யாதவ் வீசிய 10-வது ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசி 98 ரன்னைத் தொட்டார் வார்னர். 11-வது ஓவரின் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து சதத்தை பதிவு செய்தார். வார்னர். 43 பந்தில் 7 பவுண்டரி, 8 சிக்சருடன் சதம் அடித்தார்.
201705010057311997_ipl2sss._L_styvpf.gif
மறுமுனையில் விளையாடிய தவான் 30 பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். அப்போது ஐதராபாத் அணி 13 ஓவரில் 139 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். சுனில் நரைன் வீசிய 16-வது ஓவரில் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் அடித்த வார்னர், 17-வது ஓவரில் அவுட் ஆனார். அவர் 59 பந்தில் 10 பவுண்டரி, 8 சிக்சர் உடன் 126 ரன்கள் சேர்த்தார்.

கேன் வில்லியம்சன் அதிரடியாக விளையாட சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது.

பின்னர் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுணில் நரைன் மற்றும் காம்பீர் பேட்டிங் செய்தனர். 1 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் நரைன் கேட்ச் ஆனார். அந்த அணியின் கேட்பன் காம்பீர் 11 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

இதனையடுத்து களமிறங்கிய உத்தப்பா அதிரடியாகவும், பொறுப்புடனும் செயல்பட்டு ஆடினார். 28 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் 7-வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. பின்னர், மழை நின்றதும் கொல்கத்தா அணியினர் பேட்டிங்கை தொடர்ந்தனர்.
201705010057311997_ipl33sss._L_styvpf.gi
வெற்றி இலக்கு அதிகமாக இருந்தாலும் அதிரடி வீரர்கள் சீக்கிரமே ஆட்டமிழந்ததால் பின்வரிசை வீரர்கள் ரன்களை எடுக்க மிகவும் சிரமப்பட்டனர். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஐதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், முகம்மது சிராஜ், கவுல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனால், 48 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிரடி சதமடித்த கேப்னர் வார்னர் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/01005730/1082888/hydrabad-won-against-kolkatta-by-48-runs.vpf

  • தொடங்கியவர்

தோனியின் பேட்டிங், கீப்பிங், ஸ்டம்பிங்...! - பிரமித்த ஸ்டீவ் ஸ்மித்

 
 

Dho_400_10378.jpg

ஐபிஎல் 10-வது சீசன் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மாதம் காலம் ஆகிவிட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் புள்ளிகள் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது. அதே வேலையில், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான புனே அணி நான்காவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் புனே அணியின் வீரருமான தோனியின் பேட்டிங், கீப்பிங் போன்றவற்றைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

இது பற்றி ஸ்மித் கூறுகையில், 'தோனியுடன் எனக்கு ஒரு அருமையான நட்பு இருக்கிறது. அவர் புனே அணிக்கு மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். பந்தை அவர் அடிக்கும் விதம் மிக அருமையாக இருக்கிறது. இனி வரும் ஐபிஎல் போட்டிகளிலும் அவர் தொடர்ச்சியாக இதைப் போன்றே சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறேன். அவர் விக்கெட் கீப்பிங் மின்னல் வேகத்தில் இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் அவர் செய்த சில ஸ்டம்பிங்குகள் அசாத்தியமானவை' என்று தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 10-வது சீசனில், புனே அணி விளையாடிய ஆரம்ப போட்டிகளில் தோனி தொடர்ந்து சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வந்தார். இதையடுத்து, அவர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு சரியில்லை என்று பலர் கருத்து கூறினர். தோனியும், விமர்சனங்களுக்கு ஏற்றார் போல், 10-வது சீசனில் தான் விளையாடிய முதல் ஐந்து போட்டிகளில் 173 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து, ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் 34 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து, அசத்தலான கம்-பேக் கொடுத்தார். அவர் பேட்டிங் ஃபார்முக்கு திரும்பியது புனே அணிக்கு நல்ல செய்தியாக அமைந்தது.  

http://www.vikatan.com/news/sports/88062-steven-smith-praises-ms-dhoni.html

  • தொடங்கியவர்

இளம் பவுலர் சித்தார்த் கவுலை பதற்றமடையச் செய்ய முழங்கையால் இடித்த ராபின் உத்தப்பா

 

 
 
ராபின் உத்தப்பாவிடம் பேசும் யுவராஜ் சிங்.| படம்.| கே.ஆர்.தீபக்.
ராபின் உத்தப்பாவிடம் பேசும் யுவராஜ் சிங்.| படம்.| கே.ஆர்.தீபக்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியடைந்த போட்டியில் கொல்கத்தா வீரர் ராபின் உத்தப்பா இளம் பவுலர் கவுலை பதற்றமடையச் செய்ய கையாண்ட உத்தி கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கு எதிரானது என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

வார்னர் புரட்டி எடுத்து 210 ரன்களை சன் ரைசர்ஸ் இலக்காக நிர்ணையித்த பிறகு கொல்கத்தா இறங்கி நரைன், கம்பீரை விரைவில் இழந்தது. இன்னிங்ஸின் 3-வது ஓவரை கவுல் வீசினார், இந்த ஓவரில் கம்பீரை அவர் வீழ்த்தியிருந்தார்.

இதே ஓவரின் கடைசி பந்தை ராபின் உத்தப்பா பவுண்டரி விளாசினார். ஆனால் பிட்சில் கவுலை கடக்கும் போது உத்தப்பா தேவையில்லாமல் முழங்கையால் கவுலை ஒரு இடி இடித்தார். அதாவது இளம் வேகப்பந்து வீச்சாளரை இதன் மூலம் பதற்றமடையச் செய்வதே உத்தப்பாவின் நோக்கம்.

ஆனால் இதனைப் பார்த்துக் கொண்டிருந்த யுவராஜ் கொஞ்சம் ஏமாற்றமடைந்தார். அவர் தனது எண்ணத்தை உத்தப்பாவுக்குத் தெரியப்படுத்தினார்.

ஹைதராபாத் கேப்டன் வார்னரும் உத்தப்பாவின் இந்தச் செய்கையினால் கோபமடைந்தார்.

ஆனால் இது பெரிய விஷயமாகவில்லை, யுவராஜ் பிறகு உத்தப்பாவிடம் நட்பு பாராட்டும் விதமாக அவரது தோளின் மீது கையைப் போட்டபடி பேசிச்சென்றார்.

கவுல் இதனானெல்லாம் பதற்றமடையாமல் அருமையாக வீசி 4 ஓவர்களில் 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

http://tamil.thehindu.com/sports/இளம்-பவுலர்-சித்தார்த்-கவுலை-பதற்றமடையச்-செய்ய-முழங்கையால்-இடித்த-ராபின்-உத்தப்பா/article9675233.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

மும்பை வான்கடே மைதானத்தில் 4 மணிக்கு தொடங்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

 
 
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
 
ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நான்கு மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

பெங்களூரு அணியில் வாட்சன், மந்தீப் சிங், அனிகெட் சவுதரி சேர்க்கப்பட்டுள்ளனர். பத்ரி, சச்சின் பேபி, பின்னி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்பஜன் சிங்கிற்குப் பதிலாக கர்ண் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார். ஹர்பஜன் சிங்கிற்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:- 1. விராட் கோலி, 2. மந்தீப் சிங், 3. டி வில்லியர்ஸ், 4. கேதர் ஜாதவ், 5. டிராவிஸ் ஹெட், 6. வாட்சன், 7. நெகி, 8. மில்னே, 9. அரவிந்த், 10. சவுதரி, 11. சாஹல்.

மும்பை இந்தியன்ஸ் அணி: 1. பார்தீவ் பட்டேல், 2. பட்லர், 3. ராணா, 4. ரோகித் சர்மா, 5. பொல்லார்டு, 6. ஹர்திக் பாண்டியா, 7. குருணால் பாண்டியா, 8. கர்ண் ஷர்மான, 9. மலிங்கா, 10. பும்ப்ரா, 11. மெக்கிளெனகன்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/01154655/1082938/RCB-won-the-toss-select-bat-against-mumbai-indians.vpf

RCB 40/1 (5/20 ov)
  • தொடங்கியவர்

ஐ.பி.எல். போட்டியில் தொடக்க வீரர்களாக களம் இறங்குவீர்களா?: ரசிகர் கேள்விக்கு அஸ்வினின் பதில்

 

ஐ.பி.எல். தொடரில் உங்கள் அணிக்காக தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்குவீர்களா? என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அஸ்வின் என்ன பதில் அளித்துள்ளார் என்பதை பார்ப்போம்.

 
 
 
 
ஐ.பி.எல். போட்டியில் தொடக்க வீரர்களாக களம் இறங்குவீர்களா?: ரசிகர் கேள்விக்கு அஸ்வினின் பதில்
 
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். காயம் காரணமாக அவர் இந்த ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அஸ்வின் பேட்டிங்கில் அசத்தி வருகிறார். அஸ்வினிடம் பேட்டிங் திறமை அதிக அளவில் உள்ளது.

கொல்கத்தா அணியில் இடம்பிடித்துள்ள சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன், அந்த அணி கேப்டன் காம்பீர் திடீரென தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறக்கினார். ஒன்றிரண்டு போட்டிகளில் சொதப்பினாலும், மற்ற போட்டிகளில் குறைந்த பந்தில் அதிக ரன்கள் குவித்து விடுகிறார். இவரது அதிரடி ஆட்டம் கொல்கத்தா அணிக்கு உதவிகரமாக இருக்கிறது.

201705011646476388_ashwin1-s._L_styvpf.g

இதனால் டுவிட்டரில் ஒரு ரசிகர், சுனில் நரைனை போல் நீங்களும் அடுத்த வருடம் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் தொடக்க வீரராக களம் இறங்குவீர்களா? என்று கேட்டார்.

இதற்கு அஸ்வின், ‘‘நான் விரும்புவது ஒன்று. ஆனால் அணியின் கேப்டன், நான் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்குவதை விரும்ப வேண்டும்’’ என்று பதில் அளித்துள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/01164645/1082945/IPL-2017-R-Ashwin-gives-a-perfect-reply-after-being.vpf

  • தொடங்கியவர்

மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.

 
 
மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
 
மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி விராட் கோலி, மந்தீப் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மந்தீப் சிங் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். விராட் கோலி 20 ரன்கள் சேர்த்தார்.

அடுத்து வந்த டிராவிஸ் ஹெட் 12 ரன்னில் வெளியேற, டி வில்லியர்ஸ் 27 பந்தில் 43 ரன்கள் குவித்தார். கேதர் ஜாதவ், 28 ரன்னும், நெஹி 35 ரன்களும் எடுத்து கடைசி ஓவரில் வெளியேற, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை அணி சார்பில் மெக்கிளெனகன் 3 விக்கெட்டும், குருணால் பாண்டியா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடி வருகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/01175643/1082956/RCB-163-runs-target-to-mumbai-indian-win-IPL-2017.vpf

  • தொடங்கியவர்

மும்பையிடம் வீழ்ந்தது பெங்களூரு: 8 தோல்விகளுடன் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது

 

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 
 
 
 
மும்பையிடம் வீழ்ந்தது பெங்களூரு: 8 தோல்விகளுடன் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது
 
மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் பார்தீவ் பட்டேல், ஜோஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை சவுதரி வீசினார். முதல் பந்திலேயே பார்தீவ் பட்டேல் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.

அடுத்து பட்லர் உடன் ராணா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்தது. பட்லர் 33 ரன்னிலும், ராணா 27 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். பின்னர் வந்த ரோகித் சர்மா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த, பொல்லார்டு 17 ரன்னிலும், கரண் சர்மா 9 ரன்னிலும் வெளியேறினார்கள். குருணால் பாண்டியா 2 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் பெவிலியன் திரும்பினார்.

மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரின் 3-வது பந்தில் ரோகித் சர்மா சிக்ஸ் விளாசினார். இதனால் கடைசி ஒவரில் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. முதல் நான்கு பந்திலும் தலா ஒரு ரன்கள் அடிக்க, ஐந்தாவது பந்தை ரோகித் சர்மா பவுண்டரிக்கு விரட்ட மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/01200359/1082959/Mumbai-beats-royal-challengers-bengalore-by-5-wickets.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: ஸ்டோக்சின் அதிரடி சதத்தால் குஜராத் அணியை வீழ்த்தியது புனே

ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பென் ஸ்டோக்சின் அதிரடி சதத்தால் புனே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
ஐ.பி.எல்: ஸ்டோக்சின் அதிரடி சதத்தால் குஜராத் அணியை வீழ்த்தியது புனே
 
புனே:

ஐ.பி.எல் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் குஜராத் மற்றும் புனே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. புனேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற புனே அணியின் கேப்டன் ஸ்மித் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். குஜராத் அணியின் இஷான் கிஷான், மெக்கல்லம் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர்.

6-வது ஓவரில் இந்த ஜோடி பிரிந்தது. 24 பந்துகளில் 31 ரன்களை எடுத்த இஷான் ஆட்டமிழந்தார். பின்னர் பேட்டிங் செய்ய வந்த கேப்டன் ரெய்னா 8 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதிரடி வீரர் பின்ச் சொற்ப ரன்களில் வெளியேறினார். பின் வரிசை வீரர்களில் தினேஷ் கார்த்திக் மற்றும் ஜடேஜா ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர்.

19.5 ஓவர்களில் குஜராத் அணி 161 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. புனே அணியின் உனத்கண்ட் மற்றும் இம்ரான் தாகிர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
201705020019478033_iplsss1._L_styvpf.gif
162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புனே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே, திருப்பதி களமிறங்கினர். ஆனால், குஜராத் வீரர் சங்கவானின் சிறப்பான பந்துவீச்சால் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து புனே அணி தடுமாறியது.

தொடர்ந்து குஜராத் பவுலர்களின் நேர்த்தியான பந்துவீச்சில் புனே அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. 42 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து அந்த அனி தடுமாறிய போது பென் ஸ்டோக்ஸ் நிலைத்து நின்று விளையாடி புனே அணியை வெற்றிப் பாதையில் கொண்டு சென்றார். பின்னர் அதிரடியாக விளையாடிய அவர் சிக்சர்களும், பவுண்டரிகளும் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

அவருக்கு பக்கபலமாக நின்று தோனியும் ரன்களை சேர்க்க புனே அணி வெற்றி இலக்கை நோக்கி சீராக பயணித்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்டோக்ஸ் 63 பந்துகளில் 7 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் சதமடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
201705020019478033_pl3ss._L_styvpf.gif
19.5 ஓவர்களில் புனே அணி 167 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது. குஜராத் அணி சார்பில் சங்வான் மற்றும் பாசில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
  • தொடங்கியவர்

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி டேர்டெவில்ஸ் ஐதராபாத் அணியை சமாளிக்குமா?

 

 
 

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நடப்பு சாம்பியன் ஐதராபாத் அணி 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி அணியுடன் மோதுகிறது.

 
 
 
 
ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி டேர்டெவில்ஸ் ஐதராபாத் அணியை சமாளிக்குமா?
 
நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்வியுடன் (பெங்களூருவுக்கு எதிரான லீக் ஆட்டம் முடிவு இல்லாமல் போனது) 13 புள்ளிகள் பெற்றுள்ளது.

கடைசி லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி வலுவான கொல்கத்தா அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் கேப்டன் டேவிட் வார்னரின் (126 ரன்கள்) அசத்தலால் ஐதராபாத் அணி 209 ரன்கள் குவித்தது. அந்த அணியில் கனே வில்லியம்சன், யுவராஜ்சிங் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார் 20 விக்கெட்டுகள் வீழ்த்தி வலுவான நிலையில் விளங்கி வருகிறார். நெஹரா பந்து வீச்சில் நல்ல பங்களிப்பை அளித்து வருகிறார். டெல்லி அணி 8 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதுடன், அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியுமா? என்ற கேள்விக்குறியுடன் உள்ளது.

201705021009512929_ipsl-today._L_styvpf.

டெல்லி அணி தனது கடைசி 5 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது. கடைசியாக நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 67 ரன்னில் சுருண்ட டெல்லி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை கண்டது.

டெல்லி அணியின் பேட்டிங் பலவீனமானதாக இருந்து வருகிறது. கடந்த லீக் ஆட்டத்தில் காயம் காரணமாக கேப்டன் ஜாகீர்கான் களம் இறங்கவில்லை. அவருக்கு பதிலாக கருண் நாயர் கேப்டன் பொறுப்பை கவனித்தார். இந்த ஆட்டத்தில் ஜாகீர்கான் ஆடுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

ஆட்டத்துக்கு ஆட்டம் ஏற்றம் கண்டு வரும் ஐதராபாத் அணியை, சறுக்கலை சந்தித்து தடுமாறும் டெல்லி அணி சமாளிக்குமா? என்பது சந்தேகம் தான். இந்த சீசனில் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சொந்த மண்ணில் ஐதராபாத் அணி 15 ரன் வித்தியாசத்தில் வென்று இருந்தது. அந்த வெற்றியை இன்றைய ஆட்டத்திலும் தொடர ஐதராபாத் அணி முயற்சிக்கும்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/02100948/1083002/ipl-cricket-ipl-Hyderabad-Daredevils-vs-Hyderabad.vpf

  • தொடங்கியவர்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி டேர்டெவில்ஸ் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற இருக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி டெர்டெவில்ஸ் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது.

 
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி டேர்டெவில்ஸ் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு
 
ஐ.பி.எல். 2017 தொடரின் 40-வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டெல்லி அணியில் காயம் காரணமாக ஜாகீர்கான் விளையாடாததால் கருண் நாயர் கேப்டனாக செயல்படுகிறார். இவர் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளார். பில்லிங்ஸ், நதீம் நீக்கப்பட்டு மேத்யூஸ் மற்றும் ஜயந்த் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:

1. வார்னர், 2. தவான், 3. வில்லியம்சன், 4. ஹென்றிக்ஸ், 5. யுவராஜ் சிங், 6. ஹுடா, 7. நமன் ஓஜா, 8. புவனேஸ்வர் குமார், 9. ரஷித் கான், 10. கவுர், 11. மொகமது சிராஜ்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி:

1. சஞ்சு சாம்சன், 2. ஷ்ரேயாஸ் அய்யர், 3. கருண் நாயர், 4. மேத்யூஸ், 5. ரிஷப் பந்த், 6. கிறிஸ் மோரிஸ்,7. கோரி ஆண்டர்சன், 8. ஜயந்த் யாதவ், 9. ரபாடா, 10. அமித் மிஸ்ரா, 11. மொகமது ஷமி.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/02195648/1083145/delhi-daredevils-win-the-toss-will-bowl-first-against.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 186 ரன்களை சேஸ் செய்து டெல்லி அசத்தல் வெற்றி

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி அதிரடி பேட்டிங்கால் 186 ரன்களை சேசிங் செய்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 
 
 
 
ஐ.பி.எல்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 186 ரன்களை சேஸ் செய்து டெல்லி அசத்தல் வெற்றி
 
புதுடெல்லி:

ஐ.பி.எல். 2017 தொடரில் 40-வது ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வார்னர், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வார்னர் 30 ரன்னிலும், தவான் 28 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 24 பந்தில் 24 ரன்கள் சேர்த்தார்.

4-வது வீரராக களம் இறங்கிய யுவராஜ் சிங் 41 பந்தில் 70 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இவருடன் ஹென்றிக்ஸ் 18 பந்தில் 25 ரன்கள் அடிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்துள்ளது. டெல்லி அணி சார்பில் ரபாடா 4 ஓவரில் 59 ரன்கள் வாரி வழங்கினார்.
201705022357567082_ipss._L_styvpf.gif
பின்னர், 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், கருண் நாயர் பேட்டிங் செய்தனர். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி இருவரும் ரன்களை குவித்தனர். ஐதராபாத் அணி வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்த இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
201705022357567082_ipl33._L_styvpf.gif
24 ரன்களில் சாம்சனும் 29 ரன்களில் கருண் நாயரும் அவுட் ஆக, பின்னர் களமிறங்கிய ரிஷி பாந்த், ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் 19.1 ஓவர்களில் டெல்லி அணி 189 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/02235753/1083162/Delhi-Daredevils-won-by-6-wickets.vpf

  • தொடங்கியவர்

ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா - புனே இன்று பலப்பரீட்சை

 

 
பந்தை சிக்ஸருக்கு விளாசிய பென் ஸ்டோக்ஸ் | படம்:ஏஎப்பி
பந்தை சிக்ஸருக்கு விளாசிய பென் ஸ்டோக்ஸ் | படம்:ஏஎப்பி
 
 

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இருமுறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மறுஎழுச்சி கண்டுள்ள ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதுகின்றன.

கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி இந்த சீசனில் 10 ஆட்டத்தில், 7 வெற்றி, 3 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. தொடர் வெற்றிகளை குவித்த இந்த அணி கடைசியாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 48 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய அளவிலான தோல்வியை சந்தித்தது.

இந்த தோல்வியால், ஹாட்ரிக் வெற்றி பெற்று மும்பை அணி யைவிட இரு புள்ளிகள் கூடுதலாக பெற்றிருந்த கொல்கத்தா அணியின் தொடர்ச்சியான வெற்றிகளை ஹைதராபாத் அணி தடுத்து நிறுத்தியது.

மும்பை அணி 8 வெற்றிகளை குவித்து 16 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே ஆப் சுற்றை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளதால் தற்போது கொல்கத்தா அணிக்கு சற்று நெருக்கடி உருவாகி உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி வசப்படும் பட்சத்தில் கொல்கத்தா அணியும் பிளேப் சுற்றில் கால்பதிப்பதில் எந்தவித சிக்கலும் இருக்காது என கருதப்படுகிறது.

பெரிய அளவிலான இலக்கை அசால்ட்டாக எட்டும் கொல்கத்தா அணி, ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 210 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் போனது அந்த அணிக்கு பின்னடைவாகவே கருதப் படுகிறது. இந்த ஆட்டத்தில் கொல் கத்தா அணியை 161 ரன்களுக் குள் ஹைதராபாத் அணி கட்டுப் படுத்தியது.

ராபின் உத்தப்பா மட்டுமே 53 ரன்கள் சேர்த்து போராடினார். மற்ற பேட்ஸ்மேன்கள் எந்த ஒரு வகையிலும் எதிரணிக்கு சவால் கொடுக்கும் வகையில் முழுத்திற னையும் வெளிப்படுத்த தவறினர். ஒரு சில ஆட்டங்களில் அதிரடி தொடக்கம் கொடுத்த சுனில் நரேன் தற்போது தடுமாறி வருகிறார்.

காம்பீர், உத்தப்பா மட்டுமே அணியை சிறப்பாக முன்னெடுத்துச் செல்கின்றனர். மணீஷ் பாண்டே, யூசுப் பதான் ஆகியோரிடம் இருந்து எதிர்பார்த்த அளவில் பெரிய அளவி லான ரன்குவிப்புகள் நிகழவில்லை. சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட ஷெல்டன் ஜாக்சனும் பேட்டிங்கில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. இதனால் இன்றைய ஆட்டத்தில் இஷாங்க் ஜக்கிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

மேலும் நியூஸிலாந்தை சேர்ந்த ஆல்ரவுண்டரான காலின் கிராண்ட்ஹோமும் எதிர்பார்த்த அளவுக்கு சிறந்த திறனை வெளிப்படுத்தவில்லை. இதனால் அவருக்கு பதிலாக வங்கதேச ஆல்ரவுண்டரான ஷாகிப் அல்-ஹசன் களமிறக்கப்படக்கூடும்.

புனே அணி 10 ஆட்டத்தில், 6 வெற்றி, 4 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. கடைசி இரு ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்துள்ள அந்த அணி சரியான கட்டத்தில் பார்முக்கு திரும்பி உள்ளது.

ரூ.14.5 கோடிக்கு ஏலம் எடுக்கப் பட்ட இங்கிலாந்து ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், குஜராத் அணிக்கு எதிராக 63 பந்துகளில் சதம் விளாசி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இறுதிப் போட்டிக்கு 3 வாரங்களே உள்ள நிலையில் ஸ்டோக்ஸின் பார்மும் அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத் துள்ளது. குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனியொரு வீரராக அபார திறனை வெளிப்படுத்தி சதம் விளாசிய ஸ்டோக்ஸ், அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார்.

இந்த ஆட்டத்தில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரஹானே 4, ஸ்மித் 4, ராகுல் திரிபாதி 6, மனோஜ் திவாரி 0 ரன்களில் வெளியேற 42 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து கடும் நெருக்கடியை சந்தித்த நிலையில் தோனியுடன் இணைந்து ஸ்டோக்ஸ் வெற்றிக் கான பாதையை சரியாக வடிவமைத்தார்.

தோனி 33 பந்துகளில் 26 ரன்களே சேர்த்த போதும் சூழ்நிலைக்கு தகுந்தபடி பேட் செய்தது, ஆட்டத்தை எந்த அளவுக்கு அவர் கற்றறிந்து வைத்துள்ளார் என்ப தையே உணர்த்தியது. 4-வது விக்கெட்டுக்கு அவர், ஸ்டோக் ஸூடன் இணைந்து 76 ரன்கள் சேர்த்தார். அணியின் வெற்றியில் இது முக்கிய பங்குவகித்தது. இந்த ஜோடி இன்றும் மிரட்ட தயாராக உள்ளது.

அணிகள் விவரம்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

கவுதம் காம்பீர் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டேரன் பிராவோ, பியூஸ் சாவ்லா, நாதன் கவுல்டர் நைல், ரிஷி தவண், சயன் கோஷ், செஷல்டன் ஜேக்சன், இஷாங்க் ஜக்கி, குல்தீப் யாதவ், சுனில் நரேன், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ரோவ்மான் பொவல், அங்கித் ராஜ்புத், சஞ்ஜெய் யாதவ், ஷாகிப் அல் ஹசன், ராபின் உத்தப்பா, கிறிஸ் வோக்ஸ், சூர்ய குமார் யாதவ், உமேஷ் யாதவ்.

புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்:

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), தோனி, டுபிளெஸ் ஸிஸ், ஆடம் ஸம்பா, உஸ்மான் கவாஜா, அஜிங்க்ய ரஹானே, அசோக் திண்டா, அங்குஷ் பெய்ன்ஸ், ரஜத் பாட்டியா, அங்கித் சர்மா, ஈஸ்வர் பாண்டே, ஜஸ்கரன் சிங், பாபா அபராஜித், தீபக் ஷகர், மயங்க்அகர்வால், பென் ஸ்டோக்ஸ், டேனியல் கிறிஸ்டியன், பெர்குசன், ஜெயதேவ் உனத்கட், ராகுல் ஷகர், சவுரப் குமார், மிலிந்த் தாண்டன், ராகுல்திரிபாதி, மனோஜ் திவாரி, ஷர்துல் தாக்குர், இம்ரன் தகிர்.

இடம்: கொல்கத்தா

நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

http://tamil.thehindu.com/sports/ஈடன்-கார்டன்-மைதானத்தில்-கொல்கத்தா-புனே-இன்று-பலப்பரீட்சை/article9677903.ece

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் புனே 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் புனே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
 
ஐ.பி.எல்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் புனே 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 
கொல்கத்தா:

ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற புனே அணி கேப்டன் ஸ்மித் முதலில் பந்து வீச தீர்மானித்தார். இதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் நரேன் முதல் ஓவரின் 6 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் அதிரடியாக விளையாட முற்பட்ட கம்பீர் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். காம்பீரை தொடர்ந்து ஜாக்சன்(10), யூசப் பதான்(4) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இருப்பினும், மணிஷ் பாண்டே 37 (32), டி கிரண்ட் ஹோம் 36 (19), சூர்ய யாதவ் 30 (16) சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் சேர்த்தது.

புனே அணி தரப்பில் உனகண்ட் 2 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். அதேபோல், வாஷிங்டன் சுந்தரும் 2 ஓவர்கள் மட்டும் வீசி 2 விக்கெட்டுகளை  கைப்பற்றினார்.
201705032352585073_iss._L_styvpf.gif
இதனையடுத்து 156 என்ற இலக்குடன் களமிறங்கிய புனே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக திருப்பதி மற்றும் ரஹானே பேட்டிங் செய்தனர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய திருப்பதி பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசினார். இவரை கட்டுப்படுத்த கொல்கத்தா பவுலர்கள் திணறினர். 11 ரன்களில் ரஹானே வெளியேறினாலும் திருப்பதி நின்று ரன்களை குவித்தார்.

கேப்டன் ஸ்மித் 9 ரன்களுடனும், மனோஜ் திவாரி 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடந்த போட்டியில் சதமடித்த ஸ்டோக்ஸ் 14 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றினார். பின்னர் களமிறங்கிய தோனி 5 ரன்களில் வெளியேறி இம்முறையும் சொதப்பினார். பின் வரிசை வீரர்கள் திருப்பதிக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்க, 19.2 ஓவர்களில் புனே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
201705032352585073_ipl3s1._L_styvpf.gif
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திருப்பதி 52 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களில் வோக்ஸ் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், சுனில் நரைன், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/03235254/1083370/pune-won-against-kolkatta-by-4-wickets.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஐ.பி.எல். தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி டேர்டேவில்ஸ் அணி 214 ரன்களை அதிரடியாக குவித்து வெற்றி பெற்றது.

 
 
 
 
ஐ.பி.எல்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 
புதுடெல்லி:

ஐ.பி.எல். தொடரின் இன்றையை லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டேவில்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியில் தொடக்க வீரர்களாக களமிறன்கிய சுமித்(9), மெக்கல்லம்(1) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 10 ரன்களுக்குள் 2 குஜராத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ரெய்னாவும், தினேஷ் கார்த்திக்கும் ஜோடி சேர்ந்தனர்.

201705042357402372_d._L_styvpf.gif

ரெய்னா தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாசினார். முதலில் நிதானமாக விளையாடிய தினேஷ் கார்த்திக் பின்னர் அதிரடி காட்டினார். இதனால் குஜராத் அணியின் ரன் வேகம் கிடுகிடுவென உயர்ந்தது.

குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. பின்ச் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி 2 பந்துகளில் சிக்ஸர் விளாசிய ஜடேஜா 7 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணியில் ரபாடா, கம்மிங் தலா 2 விக்கெட்டுக்களை எடுத்தனர். இதனையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

201705042357402372_dd%201._L_styvpf.gif

கடின இலக்கை துரத்திய டெல்லி அணி நிதானமாகி விளையாடி வந்தது. டெல்லி அணியின் துவக்க வீரரான சாம்சன் 31 பந்துகளில் 61 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார், இவருடன் களமிறங்கிய கே.கே. நாயர் 12 ரன்களுடன் ஆட்டமிழந்தார், பின் களமிறங்கிய ஆர்.ஆர். பேண்ட் அதிரிடியாக விளையாடி 43 பந்துகளில் 97 ரன்களை குவித்தார்.

டெல்லி அணியின் ஆன்டெர்சன் 18 ரன்களுடனும் எஸ்.எஸ் ஐயர் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். டெல்லி அணி 17.3 ஓவர்களில் 214 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/04235735/1083575/Delhi-Daredevils-beat-Gujarat-Lions-by-7-wickets.vpf

  • தொடங்கியவர்

சதத்தை விட வெற்றியே முக்கியம்: புனே வீரர் திரிபாதி பேட்டி

 

சதத்தை விட வெற்றியே முக்கியம் என்று கொல்கத்தாவுக்கு எதிராக 93 ரன்கள் விளாசிய புனே வீரர் 26 வயதான ராகுல் திரிபாதி கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

 
சதத்தை விட வெற்றியே முக்கியம்: புனே வீரர் திரிபாதி பேட்டி
 
கொல்கத்தா :

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் அரங்கேறிய லீக் ஆட்டத்தில் புனே சூப்பர் ஜெயன்ட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்தது. இதில் கொல்கத்தா நிர்ணயித்த 156 ரன்கள் இலக்கை புனே அணி 19.2 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. கொல்கத்தாவின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் ஈடன்கார்டனில் அவர்களின் பந்து வீச்சை வெளுத்து வாங்கிய புனே தொடக்க வீரர் ராகுல் திரிபாதி 93 ரன்கள் (52 பந்து, 9 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி மிரள வைத்தார்.

ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட திரிபாதி மராட்டியத்தை சேர்ந்த முதல்தர கிரிக்கெட் வீரர் ஆவார். ராணுவ வீரரின் மகனான இவர் ஏலத்தில் ரூ.10 லட்சத்திற்கு மட்டுமே எடுக்கப்பட்டார். ஐ.பி.எல்.-க்கு முன்பு வரை யார் என்றே தெரியாத அவர் இப்போது குறுகிய காலத்தில் பிரபலமாகி விட்டார். நடப்பு தொடரில் 9 ஆட்டங்களில் 2 அரைசதம், 16 சிக்சர் உள்பட 352 ரன்கள் சேர்த்துள்ளார்.

புனே அணியின் 7-வது வெற்றிக்கு பிறகு 26 வயதான ராகுல் திரிபாதி கூறியதாவது:-

201705050957078920_Rahul-Tripathi._L_sty

இன்றைய நாளில் பேட்டிங்கில் அனுபவித்து விளையாடினேன். ஏதாவது திட்டம் வகுத்து களம் இறங்கி இருந்தால் நிச்சயம் கைகொடுத்து இருக்காது. ஏனெனில் கொல்கத்தா பந்து வீச்சில் வலுவான அணி. எனவே பந்து எப்படி வருகிறது என்பதை மட்டும் கவனித்து அதற்கு ஏற்ப அடித்து நொறுக்கினேன். எதை பற்றியும் நினைக்காமல், எனது உள்உணர்வு உணர்த்தியபடி விளையாடினேன். அதனால் தான் என்னால் சிறப்பாக செயல்பட முடிந்தது.

அணிக்கு வெற்றியை தேடித்தந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றி தான் எப்போதும் முக்கியமானது. நாங்கள் வெற்றி பெறுகிறோம் என்றால், சதத்தை தவற விட்டாலும் பரவாயில்லை.

சிக்சர்களை உற்சாகமாக அடித்தேன். பந்தும் அதற்கு ஏதுவாக வந்தது. சமீபத்தில் உள்ளூர் போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை இரண்டு முறை அடித்து இருக்கிறேன். இதே போல் தொடர்ந்து அதிரடி காட்டுவேன் என்று நம்புகிறேன்.

ஓய்வறையில் சர்வதேச வீரர்களுடன் பழகுவது மூலம் நிறைய நம்பிக்கையை பெற முடிகிறது. இதில் கிடைக்கும் அனுபவங்கள் எனக்கு கனவு போன்று உள்ளது. டோனி, ஒரு ஜாம்பவான். அவருடன் இணைந்து ஆடியது மறக்க முடியாத தருணம். அவருடன் சேர்ந்து பேட்டிங் செய்த போது இரண்டு முறை நான் நாட்-அவுட்டாக இருந்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.

இவ்வாறு திரிபாதி கூறினார்.

201705050957078920_Rahul-Tripathi._L_sty

கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் கூறுகையில், ‘இது 155 ரன்கள் எடுக்கக்கூடிய ஆடுகளம் அல்ல. இங்கு 180 ரன்களுக்கு மேல் நாங்கள் எடுத்திருக்க வேண்டும். நிறைய பந்துகளை ரன் எடுக்காமல் (டாட்பால்) வீணடித்து விட்டோம். பந்துகளை விரயம் செய்து, விக்கெட்டுகளையும் இழக்கும் போது அணியை முன்னெடுத்து செல்ல முடியாது. இதை சரி செய்ய வேண்டியது அவசியமாகும். முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் எங்களிடம் இருந்து வெற்றிக்கனியை பறித்தார் என்றால், இந்த ஆட்டத்தில் திரிபாதி வெற்றி வாய்ப்பை தடுத்து விட்டார்.

எங்களுக்கு பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு இன்னும் நிறைய வாய்ப்பு உள்ளது. இப்போது வாழ்வா-சாவா என்ற நிலையில் இல்லை. ஆனால் ஆட்டத்திறனில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்’ என்றார்.

புனே கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறுகையில், ‘எங்கள் அனைவரின் வெளிப்பாடாக திரிபாதியின் ஆட்டம் அமைந்தது. துரதிர்ஷ்டவசமாக சதம் அடிக்க முடியவில்லை. உண்மையில் சதம் அடிக்க அவர் தகுதியானவர்’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/05095702/1083602/Success-is-more-important-than-Century-Pune-Warriors.vpf

  • தொடங்கியவர்

இக்கட்டான சூழ்நிலையிலும் இளம் வீரரை தட்டிக்கொடுத்த ரெய்னா : மைதானத்தில் நெகிழ்ச்சி சம்பவம்! (காணொளி இணைப்பு)

 

 

ஐ.பி.எல்.தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி அணி குஜராத் அணியை 7 விக்கட்டுகளால் வீழ்த்தியது.

 

இந்த போட்டியில் டெல்லி அணியின் சார்பில் சிறப்பாக செயற்பட்ட ரிஷப் பாண்ட் 97 ஓட்டங்களில் விக்கட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இளம் வீரரான ரிஷப் பாண்ட் 97 ஓட்டங்களை பெற்றும், சதத்தினை பெறமுடியவில்லையே என்ற சோகத்தில் ஏமற்றமடைந்தார்.

எனினும் அதனை அவதானித்த இந்திய அணியின் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா ரிஷப் பாண்டின் கண்ணத்தை தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறினார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

தங்களது அணி தோல்வியடையும் கட்டத்தில் இருந்தும், இளம் வீரரை உற்சாகப்படுத்திய ரெய்னாவின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

http://www.virakesari.lk/article/19755

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.