Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐபிஎல் 2017 சீசன்!

Featured Replies

  • தொடங்கியவர்

பெங்களூரு - பஞ்சாப் இன்று மோதல்

 

 
கிளென் மேக்ஸ்வெல். | படம்: ஏ.எஃப்.பி.
கிளென் மேக்ஸ்வெல். | படம்: ஏ.எஃப்.பி.
 
 

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ் சர்ஸ் பெங்களூரு, கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு அணி 11 ஆட்டத்தில், 8 தோல்வி, 2 வெற்றிகளுடன் 5 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டதால் எஞ்சியுள்ள ஆட்டங்களில் ஆறுதல் வெற்றிகளை பெற பெங்களூரு அணி முயற்சிக்கும். இன்றைய ஆட்டத்தில் ஏற்கெனவே களமிறக்கப்படாத சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும்.

அதிரடி வீரர்கள் என தம்பட்டம் அடிக்கப்பட்ட விராட் கோலி, கிறிஸ் கெய்ல், டி வில்லியர்ஸ், கேதார் ஜாதவ் ஆகியோர் இந்த தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் ரன்கள் சேர்க்க தவறினர். இவர்களை நம்பியே ஒட்டுமொத்த பேட்டிங்கும் இருந்தது பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத் தியது.

இவர்களில் ஒரு சிலர் ஓரிரு ஆட்டங்களில் திறனை வெளிப் படுத்தினாலும் கூட்டாக சேர்ந்து அணியை முன்னெடுத்துச் செல்ல தவறினர். இந்திய வீரர்களான மன்தீப் சிங், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் செயல்படவில்லை.

பந்து வீச்சில் சாமுவேல் பத்ரி, யுவேந்திரா சாஹல், நாத் அர்விந்த் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எனினும் பேட்டிங்கில் குறைந்த அளவிலான இலக்கையே கொடுப்பதால் பந்து வீச்சாளர்களால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றிக்கு வழிகாண முடியாத நிலையே உள்ளது.

பஞ்சாப் அணி 9 ஆட்டத்தில் 4 வெற்றி, 5 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்றைய ஆட்டம் உட்பட 5 ஆட்டங்கள் எஞ்சியுள் ளது. இவற்றில் 4-ல் வெற்றியை பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

பஞ்சாப் அணி தனது கடைசி ஆட்டத்தில் டெல்லி அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. தோல்விகளால் துவண்டுள்ள பெங்களூரு அணியை வீழ்த்துவதற்கு பஞ்சாப் அணிக்கு தற்போது சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சீசனில் சதம் அடித்த ஹசிம் ஆம்லா 315 ரன்கள் சேர்த்து நல்ல பார்மில் உள்ளார்.

கடந்த ஆட்டத்தில் 27 பந்து களில் அரை சதம் அடித்த மார்ட்டின் கப்திலிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். 9 ஆட்டங்களில் 193 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ள கேப்டன் மேக்ஸ்வெல் இந்த சீசனில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.

ஒரு இன்னிங்ஸில் அவரது அதிகபட்ச ரன்குவிப்பு 44 ஆக உள்ளது. இதனால் சிறந்த திறனை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் அவர் உள்ளார். டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய சந்திப் சர்மா, வருண் ஆரோன், அக் ஷர் படேல் ஆகியோர் இன் றைய ஆட்டத்திலும் எதிர ணிக்கு நெருக்கடி கொடுக்க தயாராக உள்ளனர்.

அணிகள் விவரம்:

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

கிளென் மேக்ஸ்வெல்(கேப்டன்), டேவிட் மில்லர், மனன்வோரா, அக் ஷர் படேல், குர்கீரத் சிங், அனுரீத் சிங், சந்தீப் சர்மா, ஷான்மார்ஷ், விருத்திமான் சாஹா, நிகில் நாயக், மோகித் சர்மா, மார்க்ஸ்ஸ்டோனிஸ், கே.சி.கரியப்பா, அர்மான் ஜாபர், பிரதீப் ஷாகு, ஸ்வப்னில்சிங், ஹசிம் ஆம்லா, மோர்கன், ராகுவல் டிவாட்டியா, நடராஜன், மேட்ஹென்றி, வருண் ஆரோன், மார்ட்டின் குப்தில், டேரன் சமி, ரிங்கு சிங்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோலி (கேப்டன்), டிவில்லியர்ஸ், ஷான் வாட்சன், கிறிஸ் கெய்ல், அர்விந்த், அவேஷ் கான், சாமுவேல் பத்ரி, ஸ்டூவர்ட் பின்னி, யுவேந்திரா சாஹல், அனிகெட் சவுத்ரி, பிரவீன் துபே, டிரெவிஸ் ஹெட், இக்பால் அப்துல்லா, கேதார் ஜாதவ், சர்ப்ராஸ் கான், மன்தீப் சிங், டைமல் மில்ஸ், ஆடம் மில்னே, பவன் நெகி, ஹர்ஷால் படேல், சச்சின் பேபி, தப்ராசி ஷம்சி, பில்லி ஸ்டான்லேக்.

இடம்: பெங்களூரு

நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

http://tamil.thehindu.com/sports/பெங்களூரு-பஞ்சாப்-இன்று-மோதல்/article9681596.ece

  • Replies 368
  • Views 44.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

காயம் காரணமாக எஞ்சிய ஐ,பி.எல். போட்டிகளில் இருந்து மெக்கல்லம் விலகல்

 

குஜராத் லயன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள பிராண்டன் மெக்கல்லம் காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய மூன்று போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

 
காயம் காரணமாக எஞ்சிய ஐ,பி.எல். போட்டிகளில் இருந்து மெக்கல்லம் விலகல்
 
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரரும் ஆன பிராண்டன் மெக்கல்லம் ஐ.பி.எல். தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். நேற்று டெல்லி டேர்டெவில்ஸ் - குஜராத் லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. அப்போது பீல்டிங் செய்த பிராண்டன் மெக்கல்லத்திற்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதனால் அவர் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். தற்போது குஜராத் அணி 11 போட்டிகளில் விளையாடி 3-ல் மட்டுமே வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது.

மும்பைக்கெதிரான சூப்பர் ஓவர் உள்பட 12 இன்னிங்சில் விளையாடிய மெக்கல்லம் 320 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 72 ஆகும். இரண்டு அரைசதங்களும், 29 பவுண்டரிகளும், 18 சிக்சர்களம் விளாசியுள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/05213206/1083744/Brendon-McCullum-ruled-out-of-the-remainder-of-IPL.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். தொடரில் கடைசி போட்டிகளை வெற்றிகளோடு முடிக்க விரும்புகிறோம்: டி வில்லியர்ஸ் சொல்கிறார்

ஐ.பி.எல். தொடரில் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை வெற்றிகளோடு முடிக்க விரும்புகிறோம் என்று ஆர்.சி.பி. வீரர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

 
ஐ.பி.எல். தொடரில் கடைசி போட்டிகளை வெற்றிகளோடு முடிக்க விரும்புகிறோம்: டி வில்லியர்ஸ் சொல்கிறார்
 
ஐ.பி.எல். சீசன் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர் தோல்விகளை சந்தித்து, லீக் சுற்றோடு வெளியேற உள்ளது. 11 ஆட்டங்களில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிகள் மற்றும் ஒரு டிரா ஆகியவற்றின் மூலம் ஐந்து புள்ளிகள் பெற்று கடைசி இடம் வகிக்கிறது.

விராட் கோலி, டி வில்லியர்ஸ், கெய்ல் என நட்சத்திர வீரர்கள் பட்டாளம் நிறைந்த பெங்களூரு அணி படுதோல்வியை சந்தித்து இருப்பது அந்த அணியின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக, அந்த அணியின் நட்சத்திர வீரர் டி வில்லியர்ஸ், கடைசியாக உள்ள மூன்று போட்டிகளில், ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் விதத்தில் செயல்படுவோம் என தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் டி வில்லியர்ஸ் கூறியிருப்பதாவது:- “ஐ.பி.எல். தொடரை சில நல்ல முடிவுகளுடன் முடிக்க விரும்புகிறோம். இன்று இரவு சின்னசாமி மைதானத்தில் ரசிகர்களை நிச்சயம் உற்சாகப்படுத்துவோம் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூரு அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சந்திக்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/05193115/1083731/Looking-to-end-the-ipl-off-with-a-few-good-results.vpf

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., லீக் போட்டி: பெங்களூரு அணியை வீழ்த்தியது பஞ்சாப்
  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: பெங்களுரு அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி

ஐ.பி.எல் போட்டியின் 43-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி பெற்றுள்ளது.

 
 
ஐ.பி.எல்: பெங்களுரு அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி
 
பெங்களூர்:

10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 43-வது ‘லீக்’ ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு துவங்கியது.

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- மேக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டியில் முதலில் ஆடிய பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் ஏ.ஆர். படேல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 38 ரன்களை விளாசினார்.

201705052345477600_RCB._L_styvpf.gif

பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 138 ரன்களை குவித்தது. பின் 139 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பெங்களுரு சார்பில் மந்தீப் சிங் அதிரடியாக விளையாடி 46 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

19 ஓவர்கள் முடிவில் 119 ரன்களுக்கு பெங்களூரு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் பஞ்சாப் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணி சார்பில் ஏ.ஆர். படேல் மூன்று விக்கெட்களையும், சந்தீப் ஷர்மா 3 விக்கெட்களையும், எம்.எம். ஷர்மா மற்றும் ஜி.ஜெ. மாக்ஸ்வெல் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/05234541/1083751/IPL-Punjab-Beat-Royal-Challengers-Bangalore-by-19.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத்தின் கோட்டையை தகர்க்குமா புனே?

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சொந்த ஊரில் தோல்வியே சந்திக்காத ஐதராபாத் அணியை ஸ்டீவன் சுமித் (புனே அணி) படையினர் தகர்ப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 
 
 
 
ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத்தின் கோட்டையை தகர்க்குமா புனே?
 
11 ஆட்டங்களில் 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 13 புள்ளிகள் பெற்றுள்ள ஐதராபாத் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட முடியும். இந்த சீசனில் சொந்த ஊரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி ஐதராபாத் தான். இங்குள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடந்துள்ள 5 ஆட்டங்களிலும் அந்த அணியே வெற்றி பெற்றிருக்கிறது.

“ஒவ்வொரு அணியும் உள்ளூரிலும் முடிந்த வரை அதிக ஆட்டங்களில் வெற்றி பெற முயற்சிக்கும். அந்த வகையில் நாங்கள் இந்த மைதானத்தை எங்களது கோட்டையாக மாற்ற முயற்சிக்கிறோம்’ என்று ஐதராபாத் கேப்டன் வார்னர் கூறியிருக்கிறார்.

201705060840472185_Steve-Smith._L_styvpf

புனே அணி 11 ஆட்டங்களில் 7-ல் வெற்றி கண்டு 14 புள்ளிகளை சேகரித்துள்ளது. தொடக்கத்தில் தடுமாறினாலும் சரியான நேரத்தில் உச்சக்கட்ட பார்முக்கு வந்துள்ள புனே அணி கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களிலும் தோல்வி பக்கமே சென்றதில்லை. இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடினால் முதல் முறையாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்து விட முடியும்.

ஆனால் ஐதராபாத் அணியில் ரன் குவிப்பில் முதலிடத்தில் உள்ள டேவிட் வார்னர் (ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 489 ரன்), ஷிகர் தவான், வில்லியம்சன், யுவராஜ்சிங், ஹென்ரிக்ஸ் என்று அதிரடி சூரர்கள் அணிவகுத்து நிற்பதால், புனே பந்து வீச்சாளர்களுக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால் இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது. ஐதராபாத்தின் கோட்டையை ஸ்டீவன் சுமித் படையினர் தகர்ப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/06084047/1083773/ipl-cricket-Pune-vs-Hyderabad-team-today-clash.vpf

  • தொடங்கியவர்

இனிமேலும் சொல்வதற்கு என்ன இருக்கிறது: விரக்தியில் விராட் கோலி

 

 
 
விராட் கோலி
விராட் கோலி
 
 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக இன்னொரு குறைந்த வெற்றி இலக்கு போட்டியில் கோலி, கெய்ல், டிவில்லியர்ஸ் அடங்கிய சூப்பர் ஸ்டார்கள் அணியான ஆர்சிபி தோல்வி கண்டது.

தோல்வி குறித்து கோலி கூறியதாவது:

உண்மையில் சோர்வூட்டுவதாக இருக்கிறது. இத்தகைய தோல்விகள் குறித்து இனி கூறுவதற்கு என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. எங்கள் விருப்பத்திற்கு மாறாக இத்தகைய தோல்விகள் நிறைய முறை ஏற்பட்டுவிட்டன.

பேட்டிங்கில் எந்தவொரு முயற்சியும் கைகொடுக்கவில்லை., ஒட்டுமொத்த அணியும் அடித்து ஆட முயற்சி செய்தது, பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. விக்கெட்டுகள் விரைவு கதியில் சரிந்தது. நான் எந்த ஒன்றையும் சுட்டிக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை.

எங்கள் தயாரிப்புகள் கடந்த ஆண்டு போல்தான் இருக்கின்றன. நாங்களும் தன்னம்பிக்கையுடன் தான் ஆடுகிறோம். ஆனால் களத்தில் என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம். இங்குதான் நாங்கள் செய்ய விரும்பியதற்கு எதிராகச் செல்கிறது. மீண்டுமொருமுறை பேட்டிங்கில் எங்கள் வீழ்ச்சிக்கு நாங்களே காரணமாக இருந்திருக்கிறோம்.

ஒரே சீசனில் ஒரு பேட்டிங் வரிசை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைவதை நான் கண்டதில்லை. எந்த ஒரு குறிப்பிட்ட பவுலருக்கு எதிராகவும் குறிப்பிடத்தகுந்த திட்டம் எதையும் நாங்கள் தீட்டுவதில்லை. டிவில்லியர்ஸ் அவுட் ஆன பந்தையெல்லாம் அவர் ஊதித்தள்ளி வெளியே அடிப்பவர்தான். சந்தீப் சர்மா மிக நன்றாக பந்து வீசினார். பொதுவாக இம்மாதிரிக் காலக்கட்டங்களில் என்ன செய்வதென்றே புரியாமல்தான் போய் விடுகிறது. இவ்வாறு கடும் ஏமாற்றத்துடன் கூறினார் விராட் கோலி.

http://tamil.thehindu.com/sports/இனிமேலும்-சொல்வதற்கு-என்ன-இருக்கிறது-விரக்தியில்-விராட்-கோலி/article9683626.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

வலுவான மும்பை அணியுடன் இன்று மோதல்: ஹாட்ரிக் வெற்றி பெறுமா டெல்லி

 

 
ரிஷப் பந்த் | படம்:ஏஎப்பி
ரிஷப் பந்த் | படம்:ஏஎப்பி
 
 

ரிஷப் பந்த், சாஞ்சு சாம்சன் ஆகியோரால் புத்துணர்ச்சி பெற்றுள்ள டெல்லி டேர்டெல்லிஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள வலுவான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று மோதுகிறது.

பெரோஷா கோட்லா மைதானத் தில் அடுத்தடுத்து இரு ஆட்டங் களில் பெரிய அளவிலான இலக்கை வெற்றிகரமாக துரத்தி வெற்றி கண்டுள்ள டெல்லி அணி, திடீரென மற்ற அணிகளின் தோற்றத்தில் இருந்து மாறுப்பட்டுள்ளது.

இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றியின் தருணங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்குடன் விளையாடக் கூடும் என கருதப்படுகிறது. குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 209 ரன்கள் இலக்கை துரத்தி சாதனை படைத்ததில் ரிஷப் பந்த் பெரிய அளவில் உதவினார். இந்த ஆட்டத்தில் அவர் 43 பந்துகளில் 97 ரன்கள் விளாசி மிரட்டினார்.

அவர் தனது அதிரடி ஆட்டத்தால் ஒரே நாள் இரவில் இந்திய கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். இந்திய அணியின் அடுத்த நட்சத்திர வீரராக அவர் உருவெடுப்பார் என கருதப்படும் நிலையில் சச்சின், கங்குலி, சேவக் உள்ளிட்ட ஜாம்பவான்கள் ரிஷப் பந்த்தை வெகுவாக பாராட்டி உள்ளனர்.

ரிஷப் பந்த்தை பாராட்டும் அதே வேளையில் சஞ்சு சாம்சனையும் மறந்துவிட முடியாது. அவர் 31 பந்துகளில் 61 ரன்கள் விளாசி யதுடன் ரிஷப்புடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்து வெற்றிக்கான பாதை யையும் அமைத்துக் கொடுத்தார்.

இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி டாஸ் வெல்லும் பட்சத்தில் பீல்டிங்கையே தேர்வு செய்யும். ஏனெனில் அந்த அணி சொந்த மைதானத்தில் கடந்த இரு ஆட்டங்களிலும் முறையே 186, 209 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்தி வெற்றி கண்டுள்ளது.

டெல்லி அணியின் முன்பு கடும் சவால்கள் காத்திருக்கின்றன. 10 ஆட்டத்தில் 4 வெற்றி பெற்றுள்ள அந்த அணி இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சி உள்ள 4 ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றில் கால்பதிக்க முடியும். முழு உடல் தகுதியை பெறாததால் ஜாகீர்கான் களமிறங்குவது உறுதி செய்யப்படவில்லை.

பொறுப்பு கேப்டனாக செயல் படும் கருண் நாயர், மற்ற பேட்ஸ் மேன்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் முனைப்புடன் செயல்பட துடிப்பது அணிக்கு உத்வேகத்தை கொடுப்பதாக உள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி 10 ஆட்டத்தில், 8 வெற்றி, 2 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று ஏற்கெனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. எனினும் எஞ்சியுள்ள ஆட்டங்களிலும் அந்த அணி சிறந்த திறனை வெளிப்படுத்த முயற்சிக்கும்.

மும்பை அணியின் இரு தோல்விகளும் புனே அணிக்கு எதிரானவையே. முதல் கட்ட ஆட்டத்தில் மற்ற 6 அணிகளையும் மும்பை அணி பந்தாடியுள்ளது. எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்படுவதாலேயே அந்த அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ரோஹித் சர்மா கடந்த 3 ஆட்டங்களில் இரு அரை சதங்கள் அடித்துள்ளார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். இந்த சீசனில் 15 விக்கெட்கள் கைப்பற்றி உள்ள மெக்லீனகன், வேகப் பந்து வீச்சில் பலம் சேர்க்கிறார்.

முன்னணி வீரரான மலிங்கா, அதிக ரன்களை விட்டுக்கொடுக் கிறார். இந்த விஷயத்தில மட்டுமே அந்த அணி முன்னேற்றம் காண வேண்டிய நிலையில் உள்ளது. சுழற்பந்து வீச்சில் ஹர்பஜன் சிங் தனது அனுபவத்தால் எதிரணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்துபவராக உள்ளார். இந்த சீசனில் அவர் ஓவருக்கு சராசரியாக 5.86 ரன்கள் மட்டுமே வழங்கி இருக்கிறார்.

இடம்: டெல்லி

நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

http://tamil.thehindu.com/sports/வலுவான-மும்பை-அணியுடன்-இன்று-மோதல்-ஹாட்ரிக்-வெற்றி-பெறுமா-டெல்லி/article9683694.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

#IPL10: தோனி கடைசி கட்ட அதிரடி...148 ரன்கள் குவித்தது புனே

இன்று ஐபிஎல் 44-வது போட்டியில் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. முதலில் ஆடிய புனே 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்துள்ளது.

pune

ஐபிஎல் தொடரின் 44-வது போட்டி இன்று ஹைதராபாத்தில் நடக்கிறது. புனே - ஹைதராபாத் மோதும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய புனே அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது.புனே அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 34 ரன்களும் குவித்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய தோனி 2 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் விளாசி 31 ரன்கள் குவித்தார்.

சன்ரைசர்ஸ் தரப்பில் கவுல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரஷித் கான், பிபுல் ஷர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். புனே மற்றும் ஹைதராபாத் அணிகள் முறையே 3 மற்றும் 4-வது இடங்களில் இருப்பதால் இரு அணிகளுமே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. 

  • தொடங்கியவர்

ஐதராபாத்தை வீழ்த்தி 8-வது வெற்றியை ருசித்தது புனே: பிளேஆஃப் சுற்றை பிரகாசப்படுத்தியது

ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீ்ழ்த்தி ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது.

 
 
ஐதராபாத்தை வீழ்த்தி 8-வது வெற்றியை ருசித்தது புனே: பிளேஆஃப் சுற்றை பிரகாசப்படுத்தியது
 
ஐ.பி.எல். தொடரின் இன்றைய முதல் ஆட்டம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக ரகானேவும், திரிபாதியும் களம் இறங்கினார்கள். அதிரடி வீரர் திரிபாதி 1 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் மூலம் ஆட்டம் இழந்தார். அத்துடன் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் ரன்வேட்டையில் தொய்வு ஏற்பட்டது. பென் ஸ்டோக்ஸ் மட்டும் அதிரடியாக விளையாடி 25 பந்தில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 39 ரன்கள் எடுத்தார். ஸ்மித் 34 ரன்னும், ரகானே 22 ரன்னும் சேர்த்தனர். 5-வது வீரராக களம் இறங்கிய டோனி 21 பந்தில் 31 ரன்கள் சேர்க்க ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.

பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கியது. புனே அணி வீரர்கள் நேர்த்தியாக பந்து வீசினார்கள். இதனால் தொடக்க வீரர்களான தவான் மற்றும் வார்னர் ஆகியோரால் அதிரடியாக விளையாட முடியவில்லை. தவான் 12 பந்தில் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 4 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் பென் ஸ்டோக்ஸ் ஒரே ஓவரில் வீழ்த்தினார்.

அடுத்து வார்னர் உடன் யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்தார். 34 பந்தில் 40 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் வார்னர் ஆட்டம் இழந்தார். அத்துடன் ஐதராபாத் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. கடைசி மூன்று ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை உனத்கட் வீசினார். இந்த ஓவரில் யுவராஜ் சிங், நமன் ஓஜா ஆகியோரை வெளியேற்றினார்கள். 43 பந்தில் 47 ரன்கள் எடுத்த நிலையில் யுவராஜ் சிங் ஆட்டம் இழந்தனர்.

201705061949482461_SRH-1-s._L_styvpf.gif
இம்ரான் தாஹிர் பந்தில் ஹென்றிக்ஸ் போல்டாகிய காட்சி

கடைசி இரண்டு ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் வீசிய 19-வது ஓவரில் ஐதராபாத் அணி 9 ரன்கள் சேர்த்தது. இதனால் கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது, இந்த ஓவரை உனத்கட் வீசினார். 2வது, 3-வது மற்றும் 4-வது என தொடர்ச்சியாக மூன்று பந்தில் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனைப் படைத்தார்.

கடைசி இரண்டு பந்திலும் ரன் ஏதும் அடிக்காததால், ஐதராபாத் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புனே 8 வெற்றிகளுடன் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/06194947/1083905/rising-pune-supergian-beats-Hyderabad-and-secured.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: டெல்லி அணியை 66 ரன்களில் சுருட்டி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

 

மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பான பந்து வீச்சு மூலம் டெல்லி அணியை 66 ரன்களில் சுருட்டி 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 
 
ஐ.பி.எல்: டெல்லி அணியை 66 ரன்களில் சுருட்டி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி
 
புதுடெல்லி:

ஐ,பி.எல். தொடரின் இன்றைய 2-வது ஆட்டம் டெல்லியில் நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் லென்டில் சிம்மன்ஸ், பார்தீவ் பட்டேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

பார்தீவ் பட்டேல் நிதானமாக விளையாட சிம்மன்ஸ் அதிரடி காட்டினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.4 ஓவரில் 79 ரன்கள் குவித்தது. பார்தீவ் பட்டேல் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து அதிரடி வீரர் பொல்லார்டு களம் இறங்கினார். சிம்மன்ஸ் 43 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 66 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
201705062315596630_MI._L_styvpf.gif
பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிரடி ஆட்டம் காட்ட மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. பொல்லார்டு 35 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 63 ரன்கள் எடுத்தும், ஹர்திக் பாண்டியா 14 பந்தில் 1 பவுண்டரி, 3 சிக்சருடன் 29 ரன்கள் எடுத்தும் கடைசி வரை அவுட்டாகமல் இருந்தனர். டெல்லி அணியில் கம்மின்ஸ் அதிகபட்சமாக 4 ஓவரில் 59 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

பின் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி பேட்டிங் செய்தது. டெல்லி அணியின் துவக்க வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணி துவக்கம் முதலே விக்கெட்களை இழந்து திணறியது. டெல்லி அணி சார்பில் கே.கே. நாயர் 21 ரன்களை குவித்தார், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க டெல்லி அணி 13.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 66 ரன்களை மட்டும் சேர்த்தது.

146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி சார்பில் ஹர்பஜன் சிங் 3 விக்கெட்களையும், மலிங்கா மற்றும் கே.வி. ஷர்மா தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/06231558/1083920/Mumbai-Indians-Beat-delhi-Daredevils-by-66-runs.vpf

  • தொடங்கியவர்

பெங்களூருவுடன் இன்று மோதல்: வெற்றி முனைப்பில் கொல்கத்தா அணி

 

 

ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து இரு தோல்விகளை சந்தித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

இருமுறை சாம்பியனான கொல்கத்தா அணி, ஹைதராபாத், புனே அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்ததால் நெருக்கடியை சந்தித்துள்ளது. அந்த அணி 11 ஆட்டத்தில் 7 வெற்றி, 4 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சிய 3 ஆட்டங்களில் இரு வெற்றிகளை பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் கொல்கத்தா களமிறங்குகிறது.

இந்த சீசனின் முதல்கட்டத்தில் பெங்களூரு அணிக்கு 82 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றிருந்தது. ஈடன்கார்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 132 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் பெங்களூரு அணி 49 ரன்களில் சுருண்டு அவமானகரமான தோல்வியை சந்தித்திருந்தது.

மேலும் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த அணி என்ற மோசமான சாதனையையும் பெங்களூரு அணி நிகழ்த்தியது. கொல்கத்தா அணி மீண்டும் அதேபோன்றதொரு ஆதிக்க ஆட்டத்தை விளையாட முயற்சிக்கும்.

கொல்கத்தா அணி தனது கடைசி இரு ஆட்டங்களிலும் வலுவான மும்பை, எழுச்சி கண்டுள்ள பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இதில் மும்பை அணி ஏற்கெனவே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விட்டது. பஞ்சாப் அணி தனது கடைசி ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி உள்ளதால் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.

இதனால் கொல்கத்தா அணி, பலவீனமான பெங்களூரு அணிக்கு எதிராக இன்றைய ஆட்டத்தில் இழந்த பார்மை மீட்கக்கூடும் என கருதப்படுகிறது. கொல்கத்தா அணி தனது கடைசி ஆட்டத்தில், ராகுல் திரிபாதியின் அதிரடி ஆட்டத்தால் புனேவிடம் தோல்வி கண்டிருந்தது.

கொல்கத்தா அணி இந்த ஆட்டத்தில் 155 ரன்கள் மட்டுமே சேர்த்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சோபிக்க தவறினர். கிராண்ட் ஹோம், மணீஷ் பாண்டே ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் நம்பிக்கை அளித்தனர். காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் விளையாடாத ராபின் உத்தப்பா இன்று களமிறங்குவதால் அணியின் பேட்டிங் கூடுதல் வலுவடையும்.

சுனில் நரேன், கவுதம் காம்பீர் ஜோடி கடந்த இரு ஆட்டங்களில் சிறப்பான தொடக்கம் கொடுக்க தவறினர். இந்த ஜோடியிடம் இருந்து இன்று சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். யூசுப் பதான் இந்த சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை.

இதனால் அவர் பொறுப்புடன் விளையாட வேண்டிய கட்டத்தில் உள்ளார். சிறந்த திறனை வெளிப்படுத்த தவறிய ஷெல்டன் ஜாக்சனுக்கு பதிலாக ஜார்கண்டை சேர்ந்த இஷாங்க் ஜக்கிக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும் என தெரிகிறது.

பெங்களூரு அணிக்கு இந்த சீசன் கடும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. அந்த அணி 12 ஆட்டத்தில் விளையாடி 5 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மேலும் இந்த சீசனில் பெங்களூரு அணி 4 முறை எதிரணியினரால் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டுள்ளனர்.

அதிரடி வீரர்கள் என தம்பட்டம் அடிக்கப்பட்ட கிறிஸ் கெய்ல், டி வில்லியர்ஸ், விராட் கோலி, வாட்சன், கேதார் ஜாதவ் ஆகியோர் ஒட்டுமொத்த பேட்டிங்கில் சோடை போனதே பெங்களூரு அணியின் வீழ்ச்சிகளுக்கு காரணமாக அமைந்தது. தொடரை முடிக்கும் நிலையில் உள்ளதால் ரசிர்களை உற்சாகப்படுத்துவதற்காக இவர்கள் சிறப்பாக விளையாட முயற்சிக்கக்கூடும் என கருதப்படுகிறது.

அணிகள் விவரம்:

கொல்கத்தா: கவுதம் காம்பீர் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டேரன் பிராவோ, பியூஸ் சாவ்லா, நாதன் கவுல்டர் நைல், ரிஷி தவண், சயன் கோஷ், செஷல்டன் ஜேக்சன், இஷாங்க் ஜக்கி, குல்தீப் யாதவ், கிறிஸ் லைன், சுனில் நரேன், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ரோவ்மான் பொவல், அங்கித் ராஜ்புத், சஞ்ஜெய் யாதவ், ஷாகிப் அல் ஹசன், ராபின் உத்தப்பா, கிறிஸ் வோக்ஸ், சூர்ய குமார் யாதவ், உமேஷ் யாதவ்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி (கேப்டன்), டிவில்லியர்ஸ், ஷான் வாட்சன், கிறிஸ் கெய்ல், ஸ்ரீநாத் அர்விந்த், அவேஷ் கான், சாமுவேல் பத்ரி, ஸ்டூவர்ட் பின்னி, யுவேந்திரா சாஹல், அனிகெட் சவுத்ரி, பிரவீன் துபே, டிரெவிஸ் ஹெட், இக்பால் அப்துல்லா, கேதார் ஜாதவ், சர்ப்ராஸ் கான், மன்தீப் சிங், டைமல் மில்ஸ், ஆடம் மில்னே, பவன் நெகி, ஹர்ஷால் படேல், சச்சின் பேபி, தப்ராசி ஷம்சி, பில்லி ஸ்டான்லேக். நேரம்: மாலை 4

இடம்: பெங்களூரு

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

http://tamil.thehindu.com/sports/பெங்களூருவுடன்-இன்று-மோதல்-வெற்றி-முனைப்பில்-கொல்கத்தா-அணி/article9684766.ece

  • தொடங்கியவர்

ஹாட்ரிக் வெற்றி பெறுமா பஞ்சாப் அணி: குஜராத்துடன் இன்று பலப்பரீட்சை

 

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு மொகாலியில் நடைபெறும் ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் - குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன.

சொந்த மைதானத்தில் கடந்த வாரம் டெல்லி அணிக்கு எதிராக 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி, தனது கடைசி ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள பெங்களூரு அணியை நேற்று முன்தினம் பந்தாடியிருந்தது.

டெல்லி அணியை 67 ரன்களுக்குள் சுருட்டிய நிலையில், பெங்களூரு அணிக்கு எதிராக 138 ரன்கள் எடுத்த போதிலும் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்திய பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அக் ஷர் படேல் ஆல்ரவுண்டராக அசத்தினார். பேட்டிங்கில் 17 பந்துகளில் 38 ரன்கள் விளாசிய அவர், பந்து வீச்சில் 11 ரன்களுக்கு 3 விக்கெட்கள் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்குவகித்தார்.

இது வரை 10 ஆட்டங்களில் விளையாடி உள்ள பஞ்சாப் அணி தலா 5 வெற்றி, 5 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமால் 4 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் அந்த அணி உள்ளது.

மும்பைக்கு எதிராக சதம் அடித்த ஹசிம் ஆம்லா இந்த தொடரில் இதுவரை 316 ரன்கள் சேர்த்துள்ளார். எனினும் கடைசி இரு ஆட்டங்களில் அவரிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படவில்லை. மேக்ஸ்வெல், மார்ட்டின் கப்தில், ஷான் மார்ஷ், மனன் வோரா, விருத்திமான் சாஹா, அக் ஷர் படேல் ஆகியோர் தொடர்ச்சியாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுகின்றனர்.

இந்த விஷயத்தில் அந்த அணி முன்னேற்றம் காண வேண்டியது உள்ளது. பந்து வீச்சில் கடந்த இரு ஆட்டங்களாக வேகப் பந்து வீச்சாளரான சந்தீப் சர்மா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மோஹித் சர்மா, வருண் ஆரோன் ஆகியோரும் அவருக்கு உறுதுணையாக செயல்பட்டு வருகின்றனர். சுழலில் அக் ஷர் படேல் பலம் சேர்க்கிறார்.

11 ஆட்டத்தில் 3 வெற்றி, 8 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ள குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. எனினும் அந்த அணி ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கக்கூடும்.

கடந்த சீசனில் தகுதி சுற்றுவரை முன்னேறிய குஜராத் அணி இந்த சீசனில் பலவீனமான பந்து வீச்சால் பெரிய அளவில் ரன்குவித்தும் தோல்விகளை சந்தித்து வருகிறது. குஜராத் தனது கடைசி இரு ஆட்டங்களில் மும்பை அணிக்கு எதிராக சூப்பர் ஓவரிலும், டெல்லி அணிக்கு எதிராக ரிஷப் பந்த்தின் அதிரடி ஆட்டத்தாலும் தோல்வியை சந்தித்தது.

காயம் காரணமாக பிரண்டன் மெக்கலம் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து விலகி உள்ளார். எனினும் ரெய்னா, தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன், ஆரோன் பின்ச் ஆகியோர் நல்ல பார்மில் இருப்பதால் இவர்களிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

அணிகள் விவரம்:

குஜராத் லயன்ஸ்: சுரேஷ் ரெய்னா (கேப்டன்), பிரண்டன் மெக்கலம், டுவைன் ஸ்மித், ஆகாஷ்தீப் நாத், சுபர் அகர்வால், பாசில் தம்பி, டுவைன் பிராவோ, சிராக் சூரி, ஜேம்ஸ் பாக்னர், ஆரோன் பின்ச், மன்பிரித் கோனி, இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ஷதாப் ஜகதி, தினேஷ் கார்த்திக், ஷிவில் கவுசிக், தவால் குல்கர்னி, பிரவீன் குமார், முனாப் படேல், பிரதாம் சிங், ஜேசன் ராய், பிரதீப் சங்வான், ஜெயதேவ் ஷா, ஷேல்லே சவுர்யா, நது சிங், தேஜாஸ் பரோகா, ஆன்ட்ரூ டை.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: கிளென் மேக்ஸ்வெல்(கேப்டன்), டேவிட் மில்லர், மனன்வோரா, அக் ஷர் படேல், குர்கீரத் சிங், அனுரீத் சிங், சந்தீப் சர்மா, ஷான்மார்ஷ், விருத்திமான் சாஹா, நிகில் நாயக், மோகித் சர்மா, மார்க்ஸ்ஸ்டோனிஸ், கே.சி.கரியப்பா, அர்மான் ஜாபர், பிரதீப் ஷாகு, ஸ்வப்னில்சிங், ஹசிம் ஆம்லா, மோர்கன், ராகுவல் டிவாட்டியா, நடராஜன், மேட்ஹென்றி, வருண் ஆரோன், மார்ட்டின் குப்தில், டேரன் சமி, ரிங்கு சிங்.இடம்: மொகாலி

நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

http://tamil.thehindu.com/sports/ஹாட்ரிக்-வெற்றி-பெறுமா-பஞ்சாப்-அணி-குஜராத்துடன்-இன்று-பலப்பரீட்சை/article9684765.ece

  • தொடங்கியவர்

கோலி செய்ய வேண்டிய முதல் விஷயம் கண்ணாடியில் தன்னைத்தானே பார்க்க வேண்டும்: கவாஸ்கர் ஏன் இப்படி சொல்கிறார்?

கோலி செய்ய வேண்டிய முதல் விஷயம் கண்ணாடியில் தன்னைத்தானே பார்க்க வேண்டும். கவாஸ்கர் ஏன் இப்படி சொல்கிறார் என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.

 
கோலி செய்ய வேண்டிய முதல் விஷயம் கண்ணாடியில் தன்னைத்தானே பார்க்க வேண்டும்: கவாஸ்கர் ஏன் இப்படி சொல்கிறார்?
 
ஐ.பி.எல். தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. அந்த அணியில் கிறிஸ் கெய்ல், டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங், கேதர் ஜாதவ், வாட்சன், வேகப்பந்து வீச்சாளர் தைமல் மில்ஸ் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் உள்ளனர். இருந்தாலும் அந்த அணியால் அதிக ரன்கள் குவிக்க இயலவில்லை.

இதுவரை 12 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழைக்காரணமாக கைவிடப்பட்டது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக முதலில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி. 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் புனே அணிக்கெதிராக 161 ரன்களுக்கு எதிரான சேஸிங்கில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கொல்கத்தா அணிக்கெதிராக 49 ரன்னில் சுருண்டது. புனே அணிக்கெதிரான 2-வது போட்டியில் 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசியாக பஞ்சாப் அணிக்கெதிராக 119 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பேட்ஸ்மேன்களின் ஒட்டுமொத்த சொதப்பல் குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘இதுபோல் ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களும் சொதப்பிய அனுபவம் இதுதான் முதல்முறை. என்னதான் முயற்சி எடுத்தாலும், வெற்றிக்கான உத்வேகத்தை நாங்கள் பெறவில்லை’’ என்று கூறியிருந்தார்.

ஆனால், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டிவி வர்ணனையாளருமான கவாஸ்கர், சக பேட்ஸ்மேன்களை குறைகூறும் முன் கோலி செய்ய வேண்டிய முதல் வேலை, கண்ணாடியில் தன்னைத்தானே பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘முக்கியமான பேட்ஸ்மேன்கள் முறையான கிரிக்கெட் ஷாட்டுக்களை விளையாடுவதற்குப் பதிலாக கிளாமர் ஷாட்டுக்கள் விளையாடுகின்றனர். நீங்கள் ஹெிட் ஷாட்டுக்கு முயற்சி செய்யும்போது, பவுண்டரிக்கும், சிக்சருக்கும் இடையில் இரண்டு ரன்கள்தான் வித்தியாசம். ஏனென்றால், சிக்சருக்கு நீங்கள் பந்தை தூக்கி அடிக்க வேண்டும். இதனால் ஆபத்தின் சதவீதம் 100 சதவீதத்தை எட்டுகிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக சந்தீப் ஷர்மா பந்தில் கோலி அவுட்டான பந்து மிகவும் சிறந்த ஷாட் அல்ல. அதேபோல் கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியிலும் அவுட்டா ஷாட் மிகவும் சிறந்த ஷாட் அல்ல. இதனால் கோலி செய்ய வேண்டிய முதல் விஷயம் கண்ணாடியில் தன்னைத்தானே பார்க்க வேண்டும்.

கோலி கேப்டன் என்பதால் அவர் முதலில் நிலைத்து நின்று விளையாட வேண்டும். தற்போது அவர் சிறந்த பாஃர்மில் இல்லை. ஆகையால் சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடிய பின்னர், கிளாமரான ஷாட்டுக்களை அடிக்கலாம்’’ என்றார்.

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

#IPL10 : விஸ்வரூபம் எடுத்த சுனில் நரைன்... கொல்கத்தா அபார வெற்றி..!!

10-வது ஐபிஎல் சீசனில் இன்று நடந்த 46-வது போட்டியில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். அதிரடி காட்டிய சுனில் நரைன் 15 பந்துகளில் அரை சதம் விளாசினார்.

sunil narine

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் பெங்களூர்- கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்களூர் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 47 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா.

தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரைன், கிறிஸ் லின் களமிறங்கினர். எதிரணி பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த சுனில் நரைன் 15 பந்துகளில் அரைசதம் விளாசி ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களுக்கு ஆல்டைம் ட்ரீட் வைத்தார். நரைனின் சுழன்றடித்த பேட்டில் பட்டுத்தெறித்த பந்துகள் வாண வேடிக்கை காட்டின. இறுதியாக 17 பந்துகளில் 54 ரன்களுக்கு அனிகட் சவுத்ரி பந்தில் ஆட்டமிழந்தார். 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளை விளாசிய சுனில் நேரன், இந்த ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். மற்றொரு பக்கம் அதிரடி காட்டிய லின், 22 பந்துகளில் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியாக 15.1 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது கொல்கத்தா. 

http://www.vikatan.com/news/sports/88697-ipl10-kolkatta-knight-riders-beats-banglore-royal-challengers.html

  • தொடங்கியவர்

என் நாடுதான் முக்கியம்: ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்டின் டூ பிளிசிஸ்!

du_flesis

 

மும்பை: ஐ.பி.எல். தொடருக்கான ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியில் இடம் பிடித்திருந்த தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் டு பிளிசிஸ் அந்த அணியில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஐ.பி.எல். தொடருக்கான ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியில் டூ பிளிசிஸ் இடம்பிடித்திருந்தார். அந்த அணியில் ஐ.பி.எல் விதிகளின் படி ஸ்டீவன் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், டான் கிறிஸ்டியன், இம்ரான் தாஹிர் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடி வருகின்றனர். எனவே டு பிளிசிஸ்-க்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இரண்டு போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடி இருந்தார்.

இந்நிலையில் இங்கிலாந்தில் வரும் ஜுன் 1-ஆம் தேதி துவங்கி 18-ஆம் தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற உள்ளது. இதற்கு முன்னோட்டமாக தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.

இந்த ஒரு நாள் போட்டிகள் மே 4-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான பயிற்சி முகாமானது தற்போது தென்ஆப்பிரிக்காவில் துவங்கியுள்ளது. புனே அணியில் இடம் இல்லாதா காரணத்தால் தென்ஆப்பிரிக்கா தேசிய அணியில் இணைய டு பிளிசிஸ் முடிவு செய்துள்ளார். இதனால் புனே அணியில் இருந்து அவர் விலகியுள்ளார் என்று தகவலாக தெரிவிக்கின்றன.

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி குஜராத் லயன்ஸ் அபார வெற்றி

 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் - குஜராத் லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி குஜராத் லயன்ஸ் அபார வெற்றி பெற்றது.

 
ஐ.பி.எல்: 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி குஜராத் லயன்ஸ் அபார வெற்றி
 
மொகாலி:

கிங்ஸ் லெவன் பஞ்சாப் - குஜராத் லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மொகாலியில் நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங் தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் கப்தில், ஹசிம் அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

கப்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த ஷேன் மார்ஷ் அம்லாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மார்ஷ் 43 பந்தில் 58 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அம்லா 104 ரன்கள் (60 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்ஸ்) குவித்து கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்.

இந்த தொடரில் அம்லாவின் 2-வது சதம் இதுவாகும். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 125 ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 11 பந்தில் 20 ரன்கள் குவிக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது.
201705072343397975_amla._L_styvpf.gif
190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி பேட்டிங் செய்தது. டி.ஆர். ஸ்மித் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த கிஷான் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். டி.ஆர். ஸ்மித் 39 பந்துகளில் 74 ரன்களை குவித்து மேக்ஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார்.

பின் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 39 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்திக் ஜோடி நிதானமாக ரன்களை சேர்த்தது. குஜராத் அணி 2 பந்துகள் எஞ்சிய நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணி சார்பில் தினேஷ் கார்திக் ஆட்டமிழக்காமல் 35 ரன்களும், ஜடேஜா 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/07234338/1084046/Gujarat-Lions-Beat-Kings-Eleven-Punjab-by-wickets.vpf

  • தொடங்கியவர்

15 பந்துகளில் அரைச்சதம் அடித்து சாதனைப்படைத்த சுனில் நரைன் (காணொளி இணைப்பு)

 

 

ஐ.பி.எல். தொடரின் நேற்றைய முதல் போட்டியில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.

 

இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய சுனில் நரைன் ஐ.பி.எல். தொடரில் அதிவேகமாக அரைச்சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இவர் 15 பந்துகளில் அரைச்சதம் கடந்ததுடன், 4 ஆறு ஓட்டங்களையும், 6 நான்கு ஓட்டங்களையும் விளாசியுள்ளார்.

பந்துவீச்சளரான நரைன் அதிவேகமாக அரைச்சதம் கடந்துள்ளமை இரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு கொல்கத்தா அணியின் யூசுப் பத்தான் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் 15 பந்துகளில் அரைச்சதம் கடந்திருந்தமையே வேகமான அரைச்சதமாக காணப்பட்டது.

இதேவேளை இந்த போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/19817

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். கிரிக்கெட்: வெற்றிப்பாதைக்கு திரும்புமா ஐதராபாத்?

 

ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, 9 வெற்றிகளுடன் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்ட முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.

 
 
ஐ.பி.எல். கிரிக்கெட்: வெற்றிப்பாதைக்கு திரும்புமா ஐதராபாத்?
 
இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 13 புள்ளிகளை பெற்றுள்ள நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேற முடியும்.

எனவே ஐதராபாத் அணிக்கு இது வாழ்வா-சாவா ஆட்டமாகும். அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் தோல்வியை (டெல்லி, புனேக்கு எதிராக) தழுவியுள்ள ஐதராபாத் அணி சொந்த ஊரில் எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

201705080955431466_Mumbai-Indi._L_styvpf

அதே சமயம் 9 வெற்றிகளுடன் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்ட முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, தங்களது வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் முனைப்புடன் உள்ளது. ஏற்கனவே இவ்விரு அணிகளும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சந்தித்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி கண்டிருந்தது.

இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி மண்ணை கவ்வினால், 16 புள்ளிகளுடன் உள்ள கொல்கத்தா, புனே அணிகளின் பிளே-ஆப் சுற்று வாய்ப்பு அதிகாரபூர்வமாக உறுதியாகி விடும்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/08095540/1084081/ipl-cricket-Mumbai-Indians-vs-Hyderabad-Sunrisers.vpf

  • தொடங்கியவர்

கேட்ச்களை தவறவிட்டதால் பாதிப்பு: தோல்வி குறித்து மேக்ஸ்வெல் கருத்து

 

ஐ.பி.எல். தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 3 முக்கிய ‘கேட்ச்’களை தவறவிட்டது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது என்று கேப்டன் மேக்ஸ்வெல் தெரிவித்தார்.

 
 
கேட்ச்களை தவறவிட்டதால் பாதிப்பு: தோல்வி குறித்து மேக்ஸ்வெல் கருத்து
 
மொகாலி:

ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணியின் பிளே ஆப் சுற்று வாய்பை தடுக்கும் வகையில் குஜராத் லயன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மொகாலியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது. தொடக்க வீரர் ஹசிம் அம்லா சதம் அடித்தார். அவர் 60 பந்தில் 104 ரன்னும் (8 பவுண்டரி, 5 சிக்சர்), ஷான் மார்ஷ் 43 பந்தில் 58 ரன்னும் ( 6 பவுண்டரி) எடுத்தனர்.

பின்னர் விளையாடிய குஜராத் லயன்ஸ் 19.4 ஒவரில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுமித் 39 பந்தில் 74 ரன்னும் ( 8 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் ரெய்னா 25 பந்தில் 39 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 23 பந்தில் 35 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

குஜராத் லயன்ஸ் பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். அந்த அணி ஏற்கனவே ‘பிளே ஆப்’ சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. பஞ்சாப்பின் ‘பிளே ஆப்’ வாய்ப்பை பாதிக்கும் வகையில் இந்த வெற்றியை பெற்றது. பஞ்சாப் வீரர் அம்லாவின் சதம் எந்த பலனும் இல்லாமல் போனது.

இந்த வெற்றி குறித்து குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டன் ரெய்னா கூறியதாவது:-

201705081457489020_ROY85975A._L_styvpf.g

190 ரன் இலக்கை எடுக்க வேண்டும் என்றால் தொடக்கம் சிறப்பாக இருக்க வேண்டும். எங்கள் அணியின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது.

சுமித்தும், இஷான் கிஷானும் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினார். பின்னர் நானும், தினேஷ் கார்த்திக்கும் நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்தோம். எங்களது பந்து வீச்சு நன்றாகவே இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

பஞ்சாப் அணிக்கு 6-வது தோல்வி ஏற்பட்டது. இந்த தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் மேக்ஸ்வெல் கூறியதாவது:-

201705081457489020_ROY86275._L_styvpf.gi

189 ரன் குவித்தும் தோற்றத்தால் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம். பந்து வீச்சும், பீல்டிங்கும் மோசமாக இருந்தது. 3 முக்கிய ‘கேட்ச்’களை தவறவிட்டது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. நன்றாக விளையாடியும் தோற்றது அழகான பேரழிவை காட்டியது. இனி வரும் போட்டிகளில் வெற்றிக்காக போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/08145746/1084166/IPL-2017-Missing-catches-has-affected-the-match-Glenn.vpf

  • தொடங்கியவர்

#SRHvMI மும்பை சுமாரான பேட்டிங் : ஹைதராபாத்துக்கு 139 ரன்கள் இலக்கு..!

 
 

ஐபிஎல் 10-வது சீசனில் இன்று நடக்கும் போட்டியில் மும்பை, ஹைதராபாத் அணிகள் மோதி வருகின்றன. டாஸ்வென்ற மும்பை அணி, முதலில் பேட் செய்தது. அந்த அணியில் ரோஹித் சர்மாவைத் தவிர, மற்ற பேட்ஸ்மென்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். நிலைத்து நின்று ஆடிய ரோஹித் சர்மா 67 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

Mumbai
 

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு மும்பை அணி 138 ரன்கள் எடுத்தது. கவுல் மூன்று விக்கெட்டுகள், புவனேஷ்வர் குமார் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி சற்று நேரத்தில் களமிறங்க உள்ளது. 

 


11 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 9-ல் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 12 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 6-ல் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. 

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மும்பை அணியை வீழ்த்தியது

ஐ.பி.எல் இன்றைய போட்டியில் மோதிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.

 
 
ஐ.பி.எல்: ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மும்பை அணியை வீழ்த்தியது
 
ஐதராபாத்:

ஐ.பி.எல். தொடரில் இன்று 48-வது ஆட்டம் ஐதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இதில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் லென்டில் சிம்மன்ஸ், பார்த்தீவ் பட்டேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

சிம்மன்ஸ் 1 ரன் எடுத்த நிலையில் மொகமது நபி பந்தில் ஆட்டம் இழந்தார். பார்தீவ் பட்டேல் 23 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். 3-வது வீரராக களம் இறங்கிய கேப்டன் ரோகித் சர்மா நிலைத்து நின்று விளையாட, மற்ற வீரர்களான ஹர்திக் பாண்டியா (15), பொல்லார்டு (5), கரண் சர்மா (5) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ரோகித் சர்மா 67 ரன்கள் எடுத்து அவுட்டாக மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்துள்ளது. சன்ரைசர்ஸ் அணி சார்பில் கவுல் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18.2 ஓவர்களில் மூன்று விக்கெட்கள் இழப்பிற்கு 140 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.
201705082331094614_henriques._L_styvpf.g
சன்ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர் டி.ஏ. வாரனர் 6 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஹென்ரிக்ஸ் மற்றும் தவான் நிதானமாக விளையாடு ரன்களை சேர்த்தனர். ஷிகர் தவான் ஆட்டமிழக்காமல் 62 ரன்களையும், ஹென்ரிக்ஸ் 44 ரன்களையும் குவித்தனர். 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/08233106/1084265/Sunrisers-hyderadbad-beat-Mmbai-Indians-by-7-wickets.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். கிரிக்கெட்: நெருக்கடிக்கு மத்தியில் கொல்கத்தாவை சந்திக்கும் பஞ்சாப் அணி

 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி, 4 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணியுடன் மோதுகிறது.

 
 
ஐ.பி.எல். கிரிக்கெட்: நெருக்கடிக்கு மத்தியில் கொல்கத்தாவை சந்திக்கும் பஞ்சாப் அணி
 
பஞ்சாப் அணி இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து 2 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை நோக்கி பயணித்த பஞ்சாப் அணி கடைசி லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்திடம் தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் 189 ரன்கள் குவித்தும் வெற்றியை எட்ட முடியாமல் போனது பஞ்சாப் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பை சந்தேகத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பை எட்ட முடியும் என்ற நெருக்கடியான நிலையில் பஞ்சாப் அணி இருக்கிறது.

கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் 2-வது இடத்தில் இருப்பதுடன், ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்டது. தொடர்ச்சியாக 2 தோல்வியை சந்தித்த கொல்கத்தா அணி கடைசி லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை எளிதில் தோற்கடித்து விசுவரூபம் எடுத்து இருக்கிறது.

201705090923417617_Kolkata-team-vs-Punja

அந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி பவர் பிளேயில் (முதல் 6 ஓவரில்) 105 ரன்கள் திரட்டி புதிய சரித்திரம் படைத்தது. சுனில் நரின் 15 பந்துகளில் அரை சதம் கண்டு ஐ.பி.எல். போட்டியில் அதிவேக அரைசத சாதனையை யூசுப் பதானுடன் இணைந்து படைத்தார். அதிரடியாக அரை சதம் அடித்து கிறிஸ் லின்னும் அசத்தினார். முந்தைய ஆட்டத்தில் பெற்ற சிறப்பான வெற்றி உத்வேகத்துடன் கொல்கத்தா அணி களம் காணும்.

புள்ளி பட்டியலில் மேலும் ஏற்றம் காண கொல்கத்தா அணி தனது அதிரடி ஆட்டத்தை அரங்கேற்ற முயலும். அதேநேரத்தில் அடுத்த சுற்று வாய்ப்புக்காக பஞ்சாப் அணி எல்லா வகையிலும் கடுமையாக போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. முந்தைய லீக் ஆட்டத்தில் தனது சொந்த மண்ணில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பஞ்சர் செய்து இருந்தது என்பது நினைவிருக்கலாம்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/09092338/1084295/ipl-cricket-Kolkata-team-vs-Punjab-team-match-on-today.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். 2017 சீசனில் மோசமான ஆட்டம்: ஆர்.சி.பி. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விராட் கோலி

ஐ.பி.எல். தொடர் 2017-ல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் விராட் கோலி.

 
ஐ.பி.எல். 2017 சீசனில் மோசமான ஆட்டம்: ஆர்.சி.பி. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விராட் கோலி
 
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. பிளேஆஃப் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் தோல்வியடைந்தது.

ஆனால் தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2017 சீசனில் மிகமிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சொதப்பியது. இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணிக்கெதிராக 49 ரன்னில் சுருண்டு மிகவும் மோசமான சாதனையை பதிவு செய்தது.

201705091659217994_Kohli2-s._L_styvpf.gi

14-ந்தேதி (வருகிற ஞாயிற்றுக்கிழமை) டெல்லி அணிக்கெதிராக விளையாட இருக்கிறது. இதில் வெற்றி பெற்றாலும் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை. புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக அணியின் கேப்டன் என்ற முறையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்களிடம் விராட் கோலி மன்னிப்பு கேட்டுள்ளார்.

201705091659217994_ViratKohli-s._L_styvp

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘எந்தவொரு நிபந்தனையும் இல்லாத அன்பையும், ஆதரவையும் அளித்த ரசிகர்களுக்கு நன்றி. மன்னிக்கவும், நம்முடைய தரத்திற்கு ஏற்ற வகையில் தரமான கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

201705091659217994_abdevilliers._L_styvp

அதேபோல் ஆர்.சி.பி. அணியின் முன்னணி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் தனது டுவிட்டரில் ‘‘ஐ.பி.எல். 2017 ஏமாற்றம். சில கடினமான பாடங்களை கற்றுக்கொண்டு, அதை அடுத்த சீசனுக்கு எடுத்துச் செல்வோம். சாம்பியன்ஸ் தொடருக்கு முன் எனது அணி வீரர்களுடன் இணைவது மகிழ்ச்சி’’ என்று தெரிவித்துள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/09165918/1084419/IPL-2017-Sorry-Virat-Kohli-issues-apology-to-RCB-fans.vpf

  • தொடங்கியவர்

நாடு திரும்பிய தென்ஆப்பிரிக்க வீரர்கள்: பஞ்சாப், புனே அணிக்கு பெரிய பாதிப்பு

தென்ஆப்பிரிக்க வீரர்கள் சொந்த நாடு திரும்பியுள்ளதால் ஐ.பி.எல். தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 
 
நாடு திரும்பிய தென்ஆப்பிரிக்க வீரர்கள்: பஞ்சாப், புனே அணிக்கு பெரிய பாதிப்பு
 
இந்திய பிரிமீயர் லீக் (ஐ.பி.எல். சீசன்-10) டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்காவின் 8 வீரர்கள் இந்த ஐ.பி.எல். தொடரில் பங்கேற்று வந்தனர். அம்லா, டேவிட் மில்லர் பஞ்சாப் அணியிலும், கிறிஸ் மோரிஸ், காகிசோ ரபாடா டெல்லி அணியிலும், டு பிளிசிஸ், இம்ரான் தாஹிர் புனே அணியிலும், டி வில்லியர்ஸ், ஷம்சி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலும் இடம்பிடித்திருந்தனர்.

அம்லா, இம்ரான் தாஹிர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அம்லா இரண்டு சதங்களும், தாஹிர் 12 போட்டியில் 18 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்தில் வருகிற 1-ந்தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தென்ஆப்பிரிக்கா அணி தயாராகிறது. இதனால் இந்த 8 பேரையும் வரவழைத்துள்ளது. மீதமுள்ள போட்டியில் விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்ட போதிலும், தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

பஞ்சாப் அணி இனி விளையாட இருக்கும் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் அம்லா இல்லாதது அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல் புனே அணியின் வெற்றிக்கு தாஹிர் முதுகெலும்பாக இருந்தார். அவர் இல்லாதது புனே அணிக்கு பெரிய பாதிப்பாகும்.

201705092012594908_tahir-s._L_styvpf.gif

தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி மே 24-ந்தேதியும், 2-வது போட்டி 27-ந்தேதியும், 3-வது போட்டி 29-ந்தேதியும் நடக்கிறது.

இதற்கு முன் மே 19 மற்றும் 21 ஆகிய நாட்களில் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/09201255/1084457/Proteas-head-home-from-IPL-to-prep-for-England.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.