Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐபிஎல் 2017 சீசன்!

Featured Replies

  • தொடங்கியவர்

#KXIPvKKR பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா பஞ்சாப்? கொல்கத்தாவுக்கு 168 ரன்கள் டார்கெட்..!

 

ஐபிஎல் 10-வது சீசனில், மொஹாலியில் இன்று நடக்கும் போட்டியில் கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 

Punjab

கொல்கத்தா அணி ஏற்கெனவே கெத்தாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும், என்ற கட்டாயத்துடன் களமிறங்கியுள்ளது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பெளலிங், செய்தது. இதையடுத்து, முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி சற்று நிதானமாக ஆடியது.


மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில், கேப்டன் மேக்ஸ்வெல் மற்றும் சாஹா அதிரடி காட்டினர்.  சாஹா 38, மேக்ஸ்வெல் 44 ரன்கள் எடுத்து, பெவிலியன் திரும்பினர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் வோக்ஸ், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

 


இதைத்தொடர்ந்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி சற்று நேரத்தில் களமிறங்க உள்ளது. 12 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா, அவற்றில் 8-ல் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. 11 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 5-ல் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

http://www.vikatan.com/news/sports/88905-punjab-fixed-168-runs-target-for-kolkata.html

Kolkata Knight Riders 35/0 (3.2/20 ov)

  • Replies 368
  • Views 44.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., லீக் சுற்று: கோல்கட்டாவை வீழ்த்தியது பஞ்சாப்
  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: கடைசி ஓவரில் 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி

 

ஐ.பி.எல். போட்டியின் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய பஞ்சாப் அணி கடைசி ஓவரில் 14 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

 
ஐ.பி.எல்: கடைசி ஓவரில் 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி
 
மொகாலி:

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி மொகாலியில் நடைபெற்றது. பிளேஆ-ப் சுற்றுக்கு தகுதி பெற கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.  

சொந்த மைதானத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் களம் இறங்கிய பஞ்சாப் அணி சார்பில் மார்ட்டின் கப்தில், வோரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

வோரா 16 பந்தில் 25 ரன்கள் எடுத்த நிலையிலும், கப்தில் 16 பந்தில் 12 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த ஷேன் மார்ஷ் 11 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். 4-வது வீரராக களம் இறங்கிய சகா 38 ரன்களும், அடுத்து வந்த மேக்ஸ்வெல் 25 பந்தில் 44 ரன்களும் எடுக்க, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.
201705092343508575_punjab._L_styvpf.gif
இதைத் தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. துவக்க வீரர்களான எஸ்.பி நரெய்ன் 18 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். பின் கவுதம் காம்பீர் 8 ரன்களையும், உத்தப்பா ரன் ஏதும் குவிக்காமலும் ஆட்டமிழந்தார்.

ஒருபக்கம் விக்கெட்கள் சரிந்தாலும் மற்றொரு துவக்க வீரரான சி.ஏ. லின் அதிரடியாக விளையாடி 84 ரன்களை குவித்தார். மற்ற வீரர்கள் ரன்களை குவிக்க திணறியதை தொடர்ந்து கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 153 ரன்களை மட்டுமே குவித்தது. பஞ்சாப் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய திவேதியா, எம்.எம். ஷர்மா தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர்.

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றுள்ள பஞ்சாப் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெரும் பட்சத்தில் பஞ்சாப் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.   

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/09234347/1084478/Kings-Eleven-Punjab-beat-Kolkatta-by-14-runs.vpf

  • தொடங்கியவர்

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கெயில்!

 

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பெங்களூர் அணியின் அதிரடி வீரர் கெயில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

கெயில்

ஐபிஎல் போட்டிகள் நிறைவடையும் நிலைக்கு வந்து விட்டது. மும்பை, புனே, ஹைதராபாத் என கோப்பையை வெல்ல அணிகள் போட்டி போட்டுக்கொண்டிருக்கையில், பெங்களூர் அணி பரிதாபமான நிலையில் உள்ளது. இதுவரை நடந்த போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றிப்பெற்று கடைசி இடத்தில் உள்ளது பெங்களூர். கெயில், கோலி, டி வில்லியர்ஸ் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தும் பெங்களூர் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

 

இதனிடையே பெங்களூர் அணி வீரர் கிரிஸ் கெயில் பெங்களூர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து இன்று பேசிய அவர்,' ரசிகர்களிடம் எனது மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன். தொடர் தோல்விகளுக்கு பின்னும் அவர்கள் மைதானத்துக்கு வருவது ஆச்சர்யமளிக்கிறது. அடுத்த தொடரில் சிறப்பாக விளையாடுவோம்' எனக் கூறியுள்ளார். அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போன கெயில் இந்த தொடரில் 8 போட்டிகளில் 152 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்.

http://www.vikatan.com/news/sports/88899-gayle-apologize-to-fans-of-rcb.html

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணிக்கு பதிலடி கொடுக்குமா குஜராத்?

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் 8 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கும் குஜராத் அணி, 7 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ள டெல்லி அணியுடன் மோதுகிறது.

 
ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணிக்கு பதிலடி கொடுக்குமா குஜராத்?
 
குஜராத் லயன்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 8 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கிறது. குஜராத் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி அளித்து இருந்தது. பேட்ஸ்மேன்கள் நல்ல நிலையில் இருந்தாலும் குஜராத் அணியின் பந்து வீச்சு சற்று பலவீனமாகவே உள்ளது. அந்த அணியின் வெற்றிகரமான பந்து வீச்சாளராக விளங்கிய ஆண்ட்ரூ டை, அதிரடி ஆட்டக்காரர் பிரன்டன் மெக்கல்லம் ஆகியோர் காயம் காரணமாக விலகி இருப்பது அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரவீந்திர ஜடேஜா ஜொலிக்காததும் அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி, மும்பை அணியை வீழ்த்தியதன் மூலம் டெல்லி அணிக்கு லேசாக இருந்த அடுத்த சுற்று வாய்ப்பு பொசுங்கி போனது. டெல்லி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 66 ரன்னில் சுருண்டு வலுவான மும்பை அணியிடம் மண்டியிட்டது.

201705100918524827_Gujarat-Lions-vs-Delh

இரண்டு அணிகளும் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை இழந்து விட்டதால் இந்த ஆட்டத்தை சம்பிரதாய மோதல் எனலாம். இருப்பினும் புள்ளி பட்டியலில் ஏற்றம் கண்டு கவுரவம் தேடிக்கொள்ள இரு அணிகளும் ஆர்வம் காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

இரு அணிகளுக்கும் இடையிலான முந்தைய லீக் ஆட்டத்தில் சொந்த மண்ணில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை சாய்த்து இருந்தது. அந்த ஆட்டத்தில் ரிஷாப் பான்ட் (97 ரன்கள்), சஞ்சு சாம்சன் (61 ரன்கள்) அதிரடியாக ஆடி டெல்லி அணிக்கு எளிதான வெற்றியை தேடிக்கொடுத்தனர். முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க குஜராத் அணி முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/10091848/1084501/ipl-cricket-Gujarat-Lions-vs-Delhi-Daredevils-match.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்.: டெல்லி அணிக்கு 196 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது குஜராத் லயன்ஸ்

 

10-வது ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆரோன் பிஞ்ச் மற்றும் தினேஷ் கார்த்திக் அதிரடியால் குஜராத் லயன்ஸ் 195 ரன்கள் குவித்தது.

 
 
ஐ.பி.எல்.: டெல்லி அணிக்கு 196 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது குஜராத் லயன்ஸ்
 
கான்பூர்:

கான்பூரில் இன்று நடைபெற்று வரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் - குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுமித் - இஷான் கிஷான் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்தே டெல்லி அணி பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். முகமது ஷமி வீசிய 4-வது ஓவரில் சுமித் 8 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சுரேஷ் ரெய்னாவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் இஷான் கிஷானுடன் - தினேஷ் கார்த்திக் நிதனாமாக விளையாடி அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினர். குஜராத் அணியின் ஸ்கோர் 56 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது, அமித் மிஸ்ரா வீசிய 7-வது ஓவரில் இஷான் கிஷான் அவுட் ஆனார். அவர் 25 பந்தில் 34 ரன்கள் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார்.

201705102208237519__X4D6015._L_styvpf.gi

அடுத்து களமிறங்கிய பிஞ்ச் - தினேஷ் கார்த்திக்குடன் சேர்ந்து அதிரடியாக விளையாடினர். குஜராத் அணி 17-வது ஓவரில் 148 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தினேஷ் கார்த்திக் 40 ரன்னில் பிராத்வெயிட் பந்தில் அவுட் ஆனார். அடுத்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். இதே ஓவரின் அடுத்த பந்தில் ஆரோன் பிஞ்ச் சிக்சர் அடித்து அரை சதம் அடித்தார்.

டெல்லி அணி வீசிய 18-வது ஓவரில் பிஞ்ச் அடுத்தடுத்து பவுண்டரி அடிக்க குஜராத் அணி அந்த ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. முகமது ஷமி வீசிய 19-வது ஓவரில் ஆரோன் பிஞ்ச் ஆட்டமிழந்தார். அவர் 39 பந்தில் 69 ரன்கள் (6 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார்.

201705102208237519_ROY87722._L_styvpf.gi

20 ஓவர் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடி வருகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/10220818/1084641/IPL-2017-GL-196-runs-target-to-delhi.vpf

Gujarat Lions 195/5 (20/20 ov)
Delhi Daredevils 121/5 (13.4/20 ov)
Delhi Daredevils require another 75 runs with 5 wickets and 38 balls remaining
  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., கிரிக்கெட்: டில்லி அணி வெற்றி (2 விக்கெட் வித்தியாசம்)
  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

 

10-வது ஐ.பி.எல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 
 
ஐ.பி.எல்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
 
கான்பூர்:

கான்பூரில் இன்று நடைபெற்ற ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் - குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுமித் - இஷான் கிஷான் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்தே டெல்லி அணி பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். முகமது ஷமி வீசிய 4-வது ஓவரில் சுமித் 8 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சுரேஷ் ரெய்னாவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
201705102355534416_GL._L_styvpf.gif
பின்னர் இஷான் கிஷானுடன் - தினேஷ் கார்த்திக் நிதனாமாக விளையாடி அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினர். குஜராத் அணியின் ஸ்கோர் 56 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது, அமித் மிஸ்ரா வீசிய 7-வது ஓவரில் இஷான் கிஷான் அவுட் ஆனார். அவர் 25 பந்தில் 34 ரன்கள் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார்.

அடுத்து களமிறங்கிய பிஞ்ச் - தினேஷ் கார்த்திக்குடன் சேர்ந்து அதிரடியாக விளையாடினர். குஜராத் அணி 17-வது ஓவரில் 148 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தினேஷ் கார்த்திக் 40 ரன்னில் பிராத்வெயிட் பந்தில் அவுட் ஆனார். அடுத்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். இதே ஓவரின் அடுத்த பந்தில் ஆரோன் பிஞ்ச் சிக்சர் அடித்து அரை சதம் அடித்தார்.

20 ஓவர் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. துவக்க வீரர்களான எஸ்.வி. சாம்சன் (10), கே.கே. நாயர் (30) ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். பின் களமிறங்கிய ஆர்.ஆர். பேண்ட் 4 ரன்களில் ஆட்டமிழக்க எஸ்.எஸ். ஐயர் களமிறங்கினார்.

துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய எஸ்.எஸ். ஐயர் 57 பந்துகளில் 96 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஷமி 4 ரன்களுடனும், அமித் மிஸ்ரா 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். டெல்லி டேர்டெவில்ஸ் அணி 19.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/10235548/1084645/Delhi-Daredevils-beat-Gujarat-Lions-by-2-wickets.vpf

  • தொடங்கியவர்

கோலி, கெய்ல், தோனியை வீழ்த்திய பேசில் தம்ப்பி வெகு வேகமாக வளர்ந்து வருகிறார்’

 

 
 
பேசில் தம்ப்பி.
பேசில் தம்ப்பி.
 
 

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் சற்றும் எதிர்பார்க்காத அளவில் சிறப்பாக ஆடும் வீரர்களில் குறிப்பாக கேரள வேகப்பந்து வீச்சாளர் பேசில் தம்ப்பி அனைவரையும் கவர்ந்துள்ளார்.

கேரள கிரிக்கெட் சங்கத்தில் இயக்குநராக இருந்த இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சந்திரகாந்த் பண்டிட் முதன் முதலில் பேசில் தம்ப்பியின் பந்து வீச்சை பார்த்து அதிசயித்ததாக தெரிவித்தார்.

வயநாடில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மைதானத்தில் வலுவான சுருட்டைத் தலை இளம் வீரர் ஒருவர் வீசுவதைப் பாருங்கள் என்று சந்திரகாந்த் பண்டிட்டுக்கு அறிவுறுத்தப்பட்டது. அப்போது தம்ப்பி இன்னும் முதல் தர கிரிக்கெட்டுக்குள் நுழையாத காலம். அப்போது சந்திரகாந்த் பண்டிட்டை கவர்ந்தது தம்ப்பி வீசிய வேகம்.

ஆனால் தெற்குமண்டல டி20 கிரிக்கெட் தொடரில்தான் முதன் முதலாக பாசில் தம்ப்பியின் வேகப்பந்து வீச்சின் தரம் பற்றி தெரியவந்தது. சீராக 140-145 கிமீ வேகத்தில் அவர் வீசுவதைப் பார்த்து பலரும் ஆச்சரியமடைந்தனர்.

இதனையடுத்து இந்திய அணி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக புனேயில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது வலைப்பயிற்சியில் இந்திய டெஸ்ட் பேட்ஸ்மென்களுக்கு வீச தம்ப்பி அழைக்கப்பட்டார்.

இவர் இந்திய டெஸ்ட் பேட்ஸ்மென்களுக்கு வீசிக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில்தான் பெங்களூருவில் ஐபிஎல் ஏலத்தில் குஜராத் லயன்ஸ் இவரை ரூ.85 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இவர் வீசும் வேகம், லெந்த், பந்தின் எழுச்சி, இவரது யார்க்கர்கள் ஸ்டீவ் ஸ்மித் போன்ற பெரிய பேட்ஸ்மென்களையே மிரட்டியது. முதன் முதலாக ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடும் போதே ஜாம்பவான்களான கோலி, கெய்ல், தோனி ஆகியோரை வீழ்த்தினார். கெய்ல் ஒரு போட்டியில் இவரை எதிர்கொள்ள முடியாமல் திணறியது கண்கூடு.

இந்நிலையில் த இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “கடந்த ஒரு மாதம் எனக்கு அருமையாக அமைந்தது. கிரேட் பேட்ஸ்மென்களுக்கு வீசுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுகிறேன் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை” என்றார்.

இவரது முதல் விக்கெட் கிறிஸ் கெய்ல். இது குறித்து அவர் கூறும்போது, “இதை விட பெரிய விக்கெட்டை நான் எதிர்பார்க்க முடியாது, யார்க்கரில் இவரை எல்.பி. ஆக்கியதை என்னால் மறக்க முடியாது. மேலும் கோலி, தோனி, மணிஷ் பாண்டே, கெய்ரன் பொலார்ட் விக்கெட்டுகளையும் என்னால் மறக்க முடியாது.

கேப்டன் ரெய்னா, பயிற்சியாளர் பிராட் ஹாட்ஜ், பவுலிங் பயிற்சியாளர் ஹீத் ஸ்ட்ரீக், சக வீச்சாளர்கள் முனாஃப் படேல், பிரவீண் குமார் ஆகியோர் மிக பெரிய அளவில் எனக்கு உதவி புரிந்தனர்.

பிரெண்டன் மெக்கல்லம், டிவைன் பிராவோ, டிவைன் ஸ்மித், பிஞ்ச், ஜேசன் ராய், ஜேம்ஸ் பாக்னர், ஜடேஜா ஆகியோருடன் ஓய்வறையைப் பகிர்ந்து கொள்வது எனக்குக் கிடைத்த பேறு.

தற்போது மேலும் கூடுதல் ஸ்விங் மற்றும் ரிவர்ஸ் ஸ்விங் ஆகியவற்றைப் பயிற்சி செய்து வருகிறேன். ஆனால் என் பந்து வீச்சு வேகத்தில் சமரசம் செய்து கொள்ளப்போவதில்லை” என்று கூறும் தம்ப்பி விரைவில் இந்திய அணிக்காக ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

http://tamil.thehindu.com/sports/கோலி-கெய்ல்-தோனியை-வீழ்த்திய-பேசில்-தம்ப்பி-வெகு-வேகமாக-வளர்ந்து-வருகிறார்/article9690367.ece

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். கிரிக்கெட்: நெருக்கடிக்கு மத்தியில் மும்பையை சந்திக்கும் பஞ்சாப் அணி

 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.

 
 
ஐ.பி.எல். கிரிக்கெட்: நெருக்கடிக்கு மத்தியில் மும்பையை சந்திக்கும் பஞ்சாப் அணி
 
மும்பை இந்தியன்ஸ் அணி 12 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 3 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருப்பதுடன் அடுத்த சுற்று வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்து விட்டது. 2 முறை சாம்பியனான மும்பை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா தவிர வேறு யாரும் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. மும்பை அணியின் பந்து வீச்சும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அந்த ஆட்டத்தில் அமையவில்லை. அந்த தோல்வியில் இருந்து மீள மும்பை அணி முயற்சிக்கும். வான்கடே மைதானத்தில் மும்பை அணி இந்த சீசனில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே (புனே அணிக்கு எதிராக) தோல்வி கண்டது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 12 ஆட்டத்தில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது. தனது எஞ்சிய 2 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டும் தான் அடுத்த சுற்று வாய்ப்பு குறித்து நினைத்து கூட பார்க்க முடியும் என்ற நெருக்கடியான நிலையில் பஞ்சாப் அணி இருக்கிறது. எனவே இன்றைய ஆட்டம் பஞ்சாப் அணிக்கு வாழ்வா-சாவா? போட்டியாகும்.

201705111000506863_maz._L_styvpf.gif

குஜராத் அணியிடம் வீழ்ந்ததால் அடுத்த சுற்று வாய்ப்பில் தொய்வை சந்தித்த பஞ்சாப் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் கேப்டன் மேக்ஸ்வெல் (44 ரன்), விருத்திமான் சஹா (38 ரன்கள்) ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டது. பந்து வீச்சில் மொகித் ஷர்மா, ராகுல் திவேதியா, மேட் ஹென்றி ஆகியோர் நேர்த்தியாக செயல்பட்டனர். அத்துடன் அபாரமான பீல்டிங்கும் எதிரணியின் ரன்குவிப்புக்கு முட்டுக்கட்டை போட்டது.

இந்தூரில் நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் தோல்வி கண்டு இருந்தது. அதற்கு பதிலடி கொடுப்பதுடன் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க எல்லா வகையிலும் பஞ்சாப் அணி போராடும். புள்ளி பட்டியலில் முதலிடத்தில் தொடர மும்பை அணி தனது முழு பலத்தையும் காட்டும். இரு அணியிலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்தக்கூடிய வீரர்கள் அதிகம் இருப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/11100045/1084679/Mumbai-Indians-vs-Kings-XI-Punjab-match-on-today.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் ‘நக்குல்’ பந்து பேஸ்பாலில் இருந்து வந்தது: காம்பீர் சொல்கிறார்

 

 
 

ஐ.பி.எல். தொடரில் முன்னணி பந்து வீச்சாளர்கள் ‘நக்குல்’ பந்து மூலம் பேட்ஸ்மேன்களை திணறடித்து விடுகிறார்கள். இந்த வகை பந்துவீச்சு பேஸ்பால் விளையாட்டில் பயன்படுத்தப்படுகிறது என்று காம்பீர் கூறியுள்ளார்.

 
 
 
 
ஐ.பி.எல். பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் ‘நக்குல்’ பந்து பேஸ்பாலில் இருந்து வந்தது: காம்பீர் சொல்கிறார்
 
ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 167 ரன்கள் சேர்த்தது. பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் கிறிஸ் லின் 52 பந்தில் 84 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொதப்பியதால் கொல்கத்தா அணி தோல்வியடைந்தது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மோகித் சர்மா 3 ஓவரில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த தொடர் முழுவதும் பந்து வீச்சாளர்கள் ‘நக்குல்’ என்ற ஒருவகை பந்துவீச்சை வெளிப்படுத்திவருகிறார்கள். வேகமாக ஓடிவந்து பந்தை மெதுவாக வீசும் இந்த வகை பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறுகிறார்கள். கொல்கத்தா பேட்ஸ்மேன்களை இந்த வகை பந்துவீச்சால்தான் மோகித் சர்மா திணறடித்தார்.

மோகித் சர்மாவைத் தவிர ஐதராபாத் அணியின் புவனேஸ்வர் குமார், புனே அணியின் ஜெய்தேவ் உனத்கட் ஆகியோரும் இந்த வகை பந்துவீச்சில் அசத்தி வருகிறார்.

201705111651559429_kuckleball-s._L_styvp

இதுகுறித்து காம்பீர் கூறுகையில் ‘‘நக்குல் பந்துவீச்சு முறையானது கிரிக்கெட்டிற்கு பேஸ்பால் விளையாட்டில் இருந்து வந்ததாகும். இந்த வகை பந்துகளை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக உள்ளது. பேஸ்பால் விளையாட்டில் நிலையான ஒருவகை பந்துகளை வீசுவதற்குப் பதிலாக மாறுபாடாக ‘நக்குல்’ பந்து வீசுகிறார்கள். வேகமான ஓடிவந்து இதுபோன்று மாறுபட்ட முறையில் கிரிக்கெட் போட்டியில் பந்து வீசுவதற்கு மோகித் சர்மா தகுதியானவர்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/11165150/1084782/IPL-2017-Gambhir-Says-Knuckle-Ball-Borrowed-from-Baseball.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்.: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக மும்பை டாஸ் வென்று பீல்டிங் தேர்வு

மும்பையில் வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது.

 
 
ஐ.பி.எல்.: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக மும்பை டாஸ் வென்று பீல்டிங் தேர்வு
 
மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.

மும்பை அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஸ்வாப்னில் சிங் நீக்கப்பட்டு இசாந்த சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:-

1. மார்ட்டின் கப்தில், 2. வோரா, 3. ஷேன் மார்ஷ், 4. மேக்ஸ்வெல், 5. சகா, 6. அக்சார் பட்டேல், 7. டெவாட்டியா, 8. மோகித் ஷர்மா, 9. சந்தீப் ஷர்மா, 10. இசாந்த் ஷர்மா, 11. ஹென்றி.

மும்பை இந்தியன்ஸ் அணி:-

1. லென்டில் சிம்மன்ஸ், 2. பார்தீவ் பட்டேல், 3. ரோகித் சர்மா, 4. ஹர்திக் பாண்டியா, 5. பொல்லார்டு, 6. கர்ண் சர்மா, 7. ஹர்பஜன் சிங், 8. மெக்கிளெனகன், 9. பும்ப்ரா, 10. மலிங்கா, 11. ராணா.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/11194631/1084806/IPL-Mumbai-won-toss-select-Fielding-against-punjab.vpf

Kings XI Punjab 85/1 (7/20 ov)

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: 230-ஐ விரட்டிய மும்பை, 7 ரன்னில் தப்பி பிழைத்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்

 

மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 230 ரன்களை குவித்த பஞ்சாப் அணி பரபரப்பான போட்டில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
ஐ.பி.எல்: 230-ஐ விரட்டிய மும்பை, 7 ரன்னில் தப்பி பிழைத்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்
 
மும்பை:

மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார்.

பஞ்சாப் சார்பில் மார்ட்டின் கப்தில், சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கப்தில் 18 பந்தில் 36 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் அசுர வேகத்தில் ரன் குவித்தார்.
201705120016350039_PBB._L_styvpf.gif
ஒருபுறம் முக்கியமான இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் மறுமுனையில் சகா தொடர்ந்து அதிரடி காட்டினார். அவருக்குத் துணையாக ஷேன் மார்ஷ் 16 பந்தில் 25 ரன்களும், அக்சார் பட்டேல் அவுட்டாகாமல் 13 பந்தில் 19 ரன்களும் சேர்த்தனர்.  சகா 55 பந்தில் 11 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 93 ரன்கள் குவித்து ஆட்மிழக்காமல் குவிக்க, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது. மும்பை அணி சார்பில் மெக்கிளெனகன் 4 ஓவரில் 54 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

பின்னர் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ன இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்தது. கடின இலக்கை துரத்திய மும்பை அணியின் துவக்க வீரர்களான சிம்மன்ஸ் மற்றும் பி.ஏ. படேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிம்மன்ஸ் 32 பந்துகளில் 59 ரன்களில் ஆட்டமிழக்க பி.ஏ. படேல் 23 பந்துகளில் 38 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

பின் களமிறங்கிய ரானா 12 ரன்களுடனும், ரோகித் ஷர்மா 5 ரன் எடுத்து ஆட்டமிழக்க, பொல்லார்டு, ஹர்பஜன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் பொல்லார்டு ஆட்டத்தை தொடர்ந்தார்.

கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளில் ஒரு சிக்சர் மட்டும் விளாசிய பொல்லார்டு, அடுத்தடுத்த பந்துகளில் ரன்களை குவிக்க தடுமாறினார். இதைத் தொடர்ந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/12001629/1084827/Kings-Eleven-Punjab-beat-Mumbai-Indians-by-7-Runs.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். கிரிக்கெட்: அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் புனே அணி

 

ஐ.பி.எல். போட்டியின் இன்றைய ஆட்டத்தில் 16 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கும் புனே அணி, 10 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ள டெல்லி அணியுடன் மோதுகிறது.

 
 
 
 
ஐ.பி.எல். கிரிக்கெட்: அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் புனே அணி
 
புனே அணி இதுவரை 12 ஆட்டத்தில் விளையாடி 8 வெற்றி, 4 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது. கடந்த 8 ஆட்டங்களில் 7-ல் வெற்றி பெற்று தொடர்ச்சியாக வலுப்பெற்று வரும் புனே அணி தனது கடைசி 4 லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டு வருகிறது. முந்தைய லீக் ஆட்டத்தில் புனே அணி 12 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்துக்கு அதிர்ச்சி அளித்தது.

அந்த ஆட்டத்தில் புனே அணியின் பேட்டிங் எடுபடாவிட்டாலும், நேர்த்தியான பந்து வீச்சு மூலம் 149 ரன் இலக்கை எட்டவிடாமல் ஐதராபாத் அணிக்கு அணை போட்டது. வேகப்பந்து வீச்சாளர் உனட்கட் ‘ஹாட்ரிக்’ உள்பட 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அவர் இந்த சீசனில் இதுவரை 17 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். அந்த அணியின் மற்றொரு வீரரான இம்ரான் தாஹிர் 18 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். அடுத்த சுற்று வாய்ப்பின் விளிம்பில் நிற்கும் புனே அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து விடும்.

201705120914581862_Delhi-vs-Pune-team._L

டெல்லி அணி 12 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. மும்பை அணியிடம் 146 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்த டெல்லி அணி அதில் இருந்து மீண்டு கடைசி லீக் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை சாய்த்தது. ஸ்ரேயாஸ் அய்யரின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணிக்கு இந்த வெற்றி கிடைத்தது. நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டெல்லி அணி எப்பொழுது எழுச்சி பெறும் என்பதை கணிக்க முடியாது.

டெல்லிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் சொந்த மண்ணில் புனே அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க புனே அணி முழு பலத்தையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் அடுத்த சுற்று வாய்ப்பு பறிபோய் விட்டதால் டெல்லி அணி நெருக்கடி இல்லாமல் விளையாடும். எனவே இந்த ஆட்டத்தில் அதிரடிக்கு குறைவு இருக்காது.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/12091451/1084850/Delhi-vs-Pune-team-match-on-today.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 100 பேரை அவுட்டாக்கி டோனி சாதனை

 

டெல்லி அணிக்கெதிராக ஷ்ரேயாஸ் அய்யரை கேட்ச் பிடித்து அவுட்டாக்கியதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 100 பேரை அவுட்டாக்கி டோனி சாதனைப் படைத்துள்ளார்.

 
 
ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 100 பேரை அவுட்டாக்கி டோனி சாதனை
 
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் 2008-ம் ஆண்டு துவங்கப்பட்டது இந்தியன் பிரிமீயர் லீக் (ஐ.பி.எல்.). ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற இந்த டி20 லீக் தொடர் தற்போது 10-வது ஆண்டை எட்டியுள்ளது.

10-வது சீசன் தொடரின் 52-வது போட்டி டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. புனே அணிக்கெதிராக டெல்லி முதலில் பேட்டிங் செய்தது.

201705122128557617_dhonicatch1-s._L_styv

அந்த அணியின் 3-வது வீரராக களம் இறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் 3 ரன்கள் எடுத்த நிலையில் உனத்கட் பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

டோனி இந்த கேட்ச்-ஐ பிடித்ததன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 10 பேரை கேட்ச், ஸ்டம்பிங் மற்றும் ரன்அவுட் மூலம் அவுட்டாக்கி சாதனைப் படைத்துள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/12212848/1084993/Dhoni-100-dismissed-in-IPL-History.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: புனே அணி்க்கு எதிரான போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி

 

ஐ.பி.எல். தொடரின் இன்றைய ஆட்டத்தில் புனே அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 
 
ஐ.பி.எல்: புனே அணி்க்கு எதிரான போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி
 
புதுடெல்லி:

ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்கெதிராக டெல்லி டேர்டெவில்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

சஞ்சு சாம்சன், கருண் நாயர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சஞ்சு சாம்சன் 2 ரன்கள் எடுத்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 3 ரன்னில் வெளியேற, டெல்லி அணி 9 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய இரண்டு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

201705130019335631_sugmjuud._L_styvpf.gi

3-வது விக்கெட்டுக்கு கருண் நாயருடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. ரிஷப் பந்த் 22 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்ஸ் உடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சாமுவேல்ஸ் 27 ரன்கள் சேர்த்தார். கருண் நாயர் 45 பந்தில் 9 பவுண்டரியுடன் 64 ரன்கள் அடித்து 19-வது ஓவரில் அவுட்டாக டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.

பின் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி பேட்டிங் செய்தது. துவக்க ஆட்டக்காரர்களான ரகானே டக் அவுட்டாக, திரிபாதி 7 ரன்களில் ஆட்டமிழக்க பின் களமிறங்கிய சுமித் 38 ரன்களை சேர்த்தார், இவருடன் ஜோடி சேர்ந்த மனோஜ் திவாரி 60 ரன்களை குவித்தார்.

201705130019335631_o6y9jkz2._L_styvpf.gi

ஒருபக்கம் விக்கெட்கள் சரிந்த நிலையில் புனே அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 161 ரன்களை மட்டும் குவித்து தோல்வியை தழுவியது. டெல்லி அணி சார்பில் ஜாகீர்கான், மொகமது ஷமி தலா இரண்டு விக்கெட்களையும், நதீம் மற்றும் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்களையும் கைப்பற்றினர்

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/13001926/1085005/Delhi-Daredevils-beat-Pune-super-Giant-by-7-runs.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணிக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா?

 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் 4 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்றுள்ள மும்பை அணியுடன், 5 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ள கொல்கத்தா அணி மோதுகிறது.

 
 
ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணிக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா?
 
மும்பை அணி 13 ஆட்டத்தில் ஆடி 9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் அடுத்த சுற்று வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்து விட்டது. மும்பை அணி கடைசி 2 லீக் ஆட்டங்களில் முறையே 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்திடமும், 7 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடமும் தோல்வி கண்டது.

கொல்கத்தா அணி 13 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 5 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளது. கொல்கத்தா அணி தனது கடைசி 4 லீக் ஆட்டங்களில் 3-ல் தோல்வியை சந்தித்துள்ளது. லீக் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேற இரண்டு வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும்.

201705130921410371_Mumbai-team-vs-Kolkat

கொல்கத்தா அணிக்கு எதிராக மும்பை அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த ஆண்டு அந்த அணிக்கு எதிராக மும்பை அணி 2 ஆட்டத்திலும் வெற்றி கண்டது. இந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

அந்த தோல்விக்கு சொந்த மண்ணில் பதிலடி கொடுக்க கொல்கத்தா அணி முயற்சிக்கும். இரு அணியிலும் அதிரடி ஆட்டக்காரர்கள் அதிகம் இடம் பெற்று இருப்பதால் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/13092142/1085031/ipl-cricket-Mumbai-team-vs-Kolkata-match-on-today.vpf

  • தொடங்கியவர்

குஜராத் அணியுடன் இன்று மோதல் வெற்றி நெருக்கடியில் ஹைதராபாத்

 

 
 
டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்
 
 

ஐபிஎல் தொடரில் இன்று மாலை 4 மணிக்கு கான்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் லயன்ஸ் அணியுடன் மோதுகிறது.

டேவிட் வார்னர் தலைமை யிலான ஹைதராபாத் அணி 13 ஆட்டத்தில் விளையாடி 7 வெற்றி, 5 தோல்வி, ஒரு ஆட்டம் முடிவில்லாத நிலையில் 15 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் ஹைதராபாத் அணிக்கு இதுதான் கடைசி லீக் ஆட்டம்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியில் உள்ளது ஹைதராபாத் அணி. டெல்லி, புனே அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த ஹைதராபாத் அணி தனது கடைசி ஆட்டத்தில் வலுவான மும்பை அணியை வீழ்த்தியி ருந்தது.

இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணி தோல்வியை சந்தித்தால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப் புக்காக, புனே-பஞ்சாப் அணிகள் இடையிலான ஆட்டத்தின் முடிவுக்கு காத்திருக்க வேண்டும்.

14 புள்ளிகள் பெற்றுள்ள பஞ்சாப் அணி தனது கடைசி ஆட்டத்தில் நாளை புனேவை எதிர்த்து விளையாடுகிறது. இந்த ஆட்டத்தில் புனே அணி பஞ்சாப் அணியை வீழ்த்தினால் மட்டுமே ஹைதராபாத் அணியால் பிளே ஆப் சுற்றில் கால்பதிக்க முடியும்.

குஜராத் அணியுடன் ஒப்பிடும் போது ஹைதராபாத் அணி பேட்டிங், பந்து வீச்சில் பலமாகவே உள்ளது. வார்னர் 535 ரன்களும், ஷிகர் தவண் 450 ரன்களும் குவித்து இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளனர்.

இதேபோல் பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் 23 விக்கெட்கள் கைப்பற்றி முதலிடம் வகிக்கிறார். இவருக்கு உறுதுணையாக செயல்பட்டு வரும் சித்தார்த் கவுல் 15 விக்கெட்களும், ரஷித் கான் 14 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளனர்.

குஜராத் அணிக்கும் இதுதான் கடைசி லீக் ஆட்டம். அந்த அணி 13 ஆட்டத்தில் 4 வெற்றி, 9 தோல்விகளுடன் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை எப்போதோ இழந்துவிட்ட அந்த அணி ஆறுதல் வெற்றியுடன் இந்த சீசனை முடிக்க முயற்சிக்கக்கூடும்.

வலுவான பேட்டிங் வரிசையுடன் பெரிய அளவில் ரன்களை குவித்தும் மோசமான பந்து வீச்சால் பல ஆட்டங்களில் குஜராத் அணி தோல்வியை சந்தித்தது. பாசில் தம்பி மட்டுமே பந்து வீச்சில் நம்பிக்கை அளிப்பவராக உள்ளார். ஆல்ரவுண்டர்களான ஜடேஜா, பாக்னர் ஆகியோர் இந்த சீசனில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த தவறினர். இன்றைய ஆட்டத்தில் ரெய்னா, ஆரோன் பின்ச், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அதிரடியில் மிரட்டக்கூடும்.

அணிகள் விவரம்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்:

டேவிட் வார்னர் (கேப்டன்), தன்மே அகர்வால், வில்லியம்சன், யுவராஜ் சிங், ரிக்கி புயி, பிபுல் சர்மா, பென் கட்டிங், ஷிகர் தவண், திவேதி, மொயிசஸ் ஹென்ரிக்ஸ், தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டான், சித்தார்த் கவுல், புவனேஷ்வர் குமார், பென் லாக்லின், அபிமன்யு மிதுன், முகமது நபி, முகமது சிராஜ், முஸ்டாபிஜூர் ரஹ்மான், ஆஷிஸ் நெஹ்ரா, நமன் ஓஜா, ரஷித் கான், விஜய் சங்கர், பரிந்தர் ஷரன், பிரவீண் தாம்பே.

குஜராத் லயன்ஸ்:

சுரேஷ் ரெய்னா (கேப்டன்), பிரண்டன் மெக்கலம், டுவைன் ஸ்மித், ஆகாஷ்தீப் நாத், சுபர் அகர்வால், பாசில் தம்பி, சிராக் சூரி, ஜேம்ஸ் பாக்னர், ஆரோன் பின்ச், மன்பிரித் கோனி, இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ஷதாப் ஜகதி, தினேஷ் கார்த்திக், ஷிவில் கவுசிக், தவால் குல்கர்னி, பிரவீன் குமார், முனாப் படேல், பிரதாம் சிங், ஜேசன் ராய், பிரதீப் சங்வான், ஜெயதேவ் ஷா, ஷேல்லே சவுர்யா, நது சிங், தேஜாஸ் பரோகா.

இடம்: கான்பூர்

நேரம்: மாலை 4

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

http://tamil.thehindu.com/sports/குஜராத்-அணியுடன்-இன்று-மோதல்-வெற்றி-நெருக்கடியில்-ஹைதராபாத்/article9696287.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

2017 ஐ.பி.எல்-ன் 11 கெத்து பசங்க இவங்கதான்!

 

ஐ.பி.எல் பொழுபோக்குக்கான தொடர் மட்டுமல்ல; இளம் வீரர்களைக் கண்டெடுத்து அவர்களை உலகறியச் செய்யும் தொடரும்கூட. பல வருட உழைப்புக்கு, ஒரே ஒரு ஓவரில்கூட இங்கே அங்கீகாரம் கிடைத்துவிடும். அந்த வகையில் இந்த ஐபிஎல்-லில் அசத்தலாக ஆடி  ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் சிங்கங்களிலிருந்து பதினொரு பேரைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். எப்பேர்ப்பட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள்கொண்ட அணியாக இருந்தாலும், இந்த இளம் அணி அவர்களுக்கு நிச்சயம் சவால்விடும் என்பதில் சந்தேகமில்லை. 

ராகுல் திரிபாதி

1. ராகுல் திரிபாதி: 

தோனி மாநிலமான ஜார்கண்டிலிருந்து வந்தவர். 26 வயதாகும் ராகுல் திரிபாதி, இந்த சீஸனில் புனே அணிக்காக விளையாடிவருகிறார். ஆரம்பப் போட்டிகளில் அணியில் இடம் கிடைக்கவில்லை. ரஹானேவுடன் களமிறங்கி வந்த மயங்க் அகர்வால் சொதப்பல் ஆட்டம் ஆடவே, இவருக்கு சான்ஸ் கிடைத்தது. முதல் போட்டியிலேயே முத்திரை பதித்தார். பயமின்றி இவர் அடித்த ஷாட்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. புனே அணியின் பயிற்சியாளர் ஃபிளெமிங் இவரைப் பட்டைத்தீட்ட, அடுத்தடுத்த போட்டிகளில் திரிபாதியைச் சமாளிப்பதற்குள் படாதபாடுபட்டனர் எதிர் அணி பெளலர்கள். 

இதுவரை பத்து போட்டிகளில் ஆடியிருக்கிறார். அதில் இரண்டு போட்டிகளைத் தவிர மற்ற ஆட்டங்களில் அதிரடி சரவெடிதான். `ராகுல் திரிபாதியை அனுப்பினால் முப்பது ரன்கள் நிச்சயம்' என ரிலாக்ஸாக அமர்ந்தார் ஸ்டீவன் ஸ்மித். இந்த சீஸனில் எட்டு போட்டிகளில் முப்பது ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறார் ராகுல். இரண்டு போட்டிகளில் அரை சதம் அடித்திருக்கிறார். கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியொன்றில் இவர் ஆடிய ஆட்டம் 'தி பெஸ்ட் இன்னிங்ஸ்'. 

158 ரன்களைத் துரத்திய புனே அணி, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவைக் காலிசெய்தது. மற்ற வீரர்கள் எல்லாம் ஒற்றை ரன்களில் நடையைகட்ட, பென் ஸ்டோக்ஸ் மட்டும் 15 ரன்கள் எடுத்தார். இதுதான் புனே அணி பேட்ஸ்மேன்களின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். 

ராகுல் அடித்த ரன்கள் எவ்வளவு தெரியுமா? 93. ராகுல் சந்தித்த 52 பந்துகளில் ஒன்பது பந்துகள் ஃபீல்டர்களுக்குத் தண்ணி காண்பித்து எல்லைக்கோட்டைத் தொட்டன. ஏழு பந்துகளை மைதானத்துக்கு வந்த பார்வையாளர்கள் கேட்ச் பிடித்து மைதானத்துக்குள் தூக்கி எறிந்தார்கள். இப்போது சொல்லுங்கள்... இவரைவிட இந்த இளம் படைக்கு யார் சிறந்த ஓப்பனர்? 

சஞ்சு சாம்சன்

2. சஞ்சு சாம்சன்:

'அட... எதுக்குப்பா பயந்து பயந்து பெளண்டரி அடிச்சுக்கிட்டு, நேரடியா சிக்ஸர் அடிச்சிரலாம்ல!' இதுதான் சாம்சனின் பாலிசி. சார் பெளலர்களை டீல் செய்வதெல்லாம் சிக்ஸர்களில்தான்.

'டெல்லி பேட்டிங்கை குலைக்கணும்னா மொதல்ல சாம்சன் விக்கெட்டை எடுக்கணும்' - எதிர் அணிகளின் பெளலர்களுக்கு  ஐபிஎல் அணியின் கேப்டன் சொல்லும் டிப்ஸ் இதுதான். 

அபாயகரமான தொடக்க வீரராக ஆடிவருகிறார் சாம்சன். சேட்டன்தான் இந்த வருடம் டெல்லி அணியின் டாப் ஸ்கோரர். இப்போதைக்கு தொடரில் ஆறாவது டாப் ஸ்கோரரும் இவர்தான். 12 போட்டிகளில் 384 ரன்கள் குவித்திருக்கிறார். இந்த சீஸனில் முதல் சதத்தை விளாசியதும் சாம்சன்தான். இவரைத் தவிர இதுவரை சதம் அடித்தவர்கள் மூன்றே பேர்தான். ஒருவர் ஆம்லா, இன்னொருவர் வார்னர், மற்றொருவர் பென் ஸ்டோக்ஸ். திரிபாதியுடன் இணைந்து இவர் தொடக்கம் கொடுத்தால் பவர்பிளேவில் காத்திருக்கிறது ரன் விருந்து. 

நிதிஷ் ராணா

3. நிதிஷ் ராணா:

செம ஸ்டைலிஷ் ஆட்டம் ராணாவுடையது. வேகப்பந்து வீச்சாளர்களைப்  போட்டுப் பொளப்பது நிதிஷுக்கு  ஜாலி வேலை. ராணா, பந்துகளை அலேக்காக சிக்ஸருக்குத் தூக்கும் வீடியோக்களைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.  டெல்லியைச் சேர்ந்த ராணாவுக்கு வயது 23-தான். மும்பையைச் சேர்ந்த அதிரடி வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் டெல்லி டெர்டெவில்ஸுக்கு ஆட, இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆடிக்கொண்டிருக்கிறார். 

ராணா  களத்தில் இருந்தால், தனி ஒருவனாகவே மேட்சை மாற்றிவிடுவார். அணியின் சூழ்நிலைக்கு  ஏற்ப பொறுப்பாகவும் ஆடுகிறார்; அதிரடியாகவும் ஆடுகிறார். சேஸிங் என்றால், ராணா குஷியாகிவிடுகிறார். இடதுகை வீரரான ராணா, விரைவில் இந்திய அணியில் யுவராஜின் இடத்தைப் பிடிக்கப் போட்டிபோடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இளம் அணியில், மூன்றாவது நிலையில் களமிறங்க தரமான வீரர் மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த நிதிஷ். 

ஷ்ரேயாஸ் அய்யர்:

4. ஷ்ரேயாஸ் ஐயர்:

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் செம ஃபார்மில் இருந்தார் ஷ்ரேயாஸ். ஆனால், அதன் பிறகு காயங்கள், ஃபார்ம் அவுட் எனத் தொடர்ச்சியாக சோகக் காலம். இப்போது மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியிருக்கிறார். ஷ்ரேயாஸின் பல ஷாட்கள் துல்லியமாக இருக்கும். அவரது சில டிரைவ்கள் விராட் கோலியை நினைவுபடுத்தும். அபாயகரமான பந்துகளைக்கூட லாகவமாகத் தள்ளிவிட்டு,  ஃபீல்டிங்கில் நிற்கும் வீரர்களுக்கு இடையேயான இடைவெளியில் 'நச்' பெளண்டரி விளாசுவது ஷ்ரேயாஸின் வழக்கம். 

இந்த சீஸனில் ஷ்ரேயாஸ் அதிகமான பந்துகளைச் சந்திக்கும் வாய்ப்புகள் சரிவர அமையவில்லை. ஒருசில வாய்ப்புகளைக் கோட்டைவிட்டாலும், சீராக பேட்டிங் செய்து நல்ல சராசரி வைத்திருக்கிறார். இதுவரை ஆடிய 10 போட்டிகளில் 37.88 சராசரியுடன் 303 ரன்களைக் குவித்திருக்கிறார். விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதிலும் கவனம் செலுத்தக்கூடியவர் ஷ்ரேயாஸ். நான்காவது நிலையில் களமிறங்க பொருத்தமானவர். 

ரிஷப் பன்ட்

5.  ரிஷப் பன்ட்:

இந்த இளம் அணிக்கு மிக எளிதான தேர்வு ரிஷப் பன்ட். வயது 19-தான். ஆனால், டைனமைட் பேட்ஸ்மேன்.  துடிப்பான விக்கெட் கீப்பர். இந்த ஐபிஎல்-லில்  பெளண்டரி சிக்ஸர் விகிதம் கிட்டத்தட்ட சமமாக இருப்பது ரிஷப்புக்குத்தான். இதுவரை 21 பெளண்டரிகள் அடித்திருக்கிறார். 20 சிக்ஸர்கள் விளாசியிருக்கிறார். வீரேந்திர சேவாக் போலவே, சந்திக்கும் முதல் பந்திலிருந்தே போட்டுப் பொளப்பவர். இவர் எவ்வளவு நேரம் களத்தில் நிற்கிறாரோ, அந்த அளவுக்கு எதிரணியின் வெற்றி வாய்ப்புத் தாறுமாறாகக் குறையும். மற்றவர்கள் எல்லாம் செட்டிலாகிவிட்டு சிக்ஸர் அடித்தால், இவர் சிக்ஸர் அடித்துவிட்டுத்தான் கிரீஸில் செட்டிலாவார். சில முறை இந்த உத்தி பலன் அளிக்கவில்லை என்றாலும்கூட, அதை மாற்றிக்கொள்ளவில்லை ரிஷப். 

`ஏனப்பா?' எனக் கேட்டால், `என் ஸ்டைல் இதுதான் சார்' என்கிறார். குஜராத்துக்கு எதிராக இவர் ஆடிய ஓர் ஆட்டம், பார்வையாளர்களை மலைக்கவைத்தது. சச்சின் டெண்டுல்கர், `ஐபிஎல் வரலாற்றிலேயே நான் பார்த்த மிகச்சிறந்த இன்னிங்ஸ் இது' எனப் புகழ்ந்தார். `நான் பேட்டிங் பிடிக்க நின்றுகொண்டிருக்கும்போது, பெளலர் பந்து வீசினால் அது சிக்ஸர் விளாசத் தகுதியான பந்து என்றால், கவலையேபடாமல் சிக்ஸர் அடிப்பேன். அவர் வீசும் அடுத்த பந்தும் அப்படியே என்றால் மீண்டும் சிக்ஸர்தான்' இப்படி ஓப்பனாகவே பேசியிருக்கிறார் ரிஷப். பயமறியாத இந்த இளங்கன்று, நிச்சயம் இந்திய அணியில் விக்கெட் கீப்பராகப் புகும். இந்த இளம் அணிக்கும் இவர்தான் தகுதியான தரம்வாய்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். 

க்ரூனால் பாண்டியா

6. க்ரூனால் பாண்டியா:

டி வில்லியர்ஸ்க்கு  இதுவரை நான்கு போட்டிகளில் பந்து வீசியிருக்கிறார் க்ரூனால் பாண்டியா. இதில் மூன்று முறை அவரை வீழ்த்தியிருக்கிறார். புத்திசாலித்தனமான பந்து வீச்சும், பவர் ஹீட்டிங் பேட்டிங்கும் க்ரூனால் பாண்டியாவின் அடையாளங்கள். மும்பை இந்தியன்ஸ் அணி இவரை வெகுவாக நம்பியிருந்தது. தம்பி ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து இந்த சீஸன் முழுவதும் கலக்கல் ஆட்டம் ஆடினார். கடைசி இரண்டு போட்டிகளில் மும்பை அணி தோல்வி அடைந்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணங்களுள் க்ரூனால் பாண்டியாவும் ஒருவர். ஏனெனில், அவர் இந்த இரண்டு போட்டிகளிலும் காயம் காரணமாக விலகியிருந்தார். சுழற்பந்துக்கும் கைகொடுப்பார்... பேட்டிங்கிலும் முத்திரை பதிப்பார் என்பதால், இவரே இளம் அணிக்கு ஃபினீஷர் ரோலையும் பொறுப்பேற்கிறார். 

பவன் நெகி

7.  பவன் நெகி:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவில் இந்த சீஸனில் உருப்படியாக ஆடிய ஒரே  வீரர் நெகி  மட்டும்தான். கடந்த சீஸனில்  டெல்லி அணிக்காக ஆடியபோது சொதப்பிய நெகி, இந்த முறை பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் கலக்குகிறார். 

இந்த சீஸனில்  ஒன்பது சிக்ஸர்களை விளாசியிருக்கிறார். 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 11 போட்டிகளில் ஆடியுள்ள பவன் நெகி, மிகவும் சிக்கனமாக ரன்களை விட்டுத்தந்திருக்கிறார். சிக்கன பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இப்போதைக்கு நான்காவது இடம் நெகிக்குத்தான். இவருக்கு மேலே இருக்கும் மூவரும் தலா இரண்டு போட்டிகள் மட்டுமே ஆடியிருக்கிறார்கள். அந்த வகையில் நெகிதான் சூப்பர் பெளலர். லோயர் ஆர்டரில் அதிரடியாக ஆடக்கூடியவர் என்பதால், ஏழாவது இடத்தில் இறங்குவதற்கு தகுதியான நபர். 

வாஷிங்டன் சுந்தர்

8. வாஷிங்டன் சுந்தர்:

தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தருக்கு வயது 17-தான். புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்காக ஆடிவரும் சுந்தர், இதுவரை ஏழு போட்டிகளில் நான்கு விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். `அட.. இவ்வளவுதானா!' என அலட்சியப்படுத்திவிடாதீர்கள். கடைசிக்கு முந்தைய இடத்துக்கு போட்டிபோடும் நிலைமையில் இருந்த புனே அணி, வாஷிங்டன் சுந்தர் வரவால்தான் இன்று டாப் இரண்டு இடங்களுக்குப் போட்டிபோடும் அணியாக மாறியிருக்கிறது. ஓவருக்கு வெறும் ஏழு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த சிக்கனமான பெளலர் . இம்ரான் தாகீர் உடன் இணைந்து கலக்கல் ஆட்டம் ஆடும் இவர், ஆல்ரவுண்டரும்கூட. புனே அணியில் பேட்டிங் செய்வதற்கு  இவருக்குச் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இளம் அணிக்கு பெளலிங், பேட்டிங் இரண்டிலும் வலிமை சேர்ப்பார் சுந்தர். 

சித்தார்த் கவுல்

9. சித்தார்த் கவுல்:

ஹைதராபாத் அணிக்கு இந்த முறை ஆஷிஷ் நெஹ்ரா கைகொடுக்கவில்லை. காயம் காரணமாக பல போட்டிகளில் வெளியிலேயே உட்கார்ந்திருந்தார் நெஹ்ரா . அந்தச் சமயத்தில் அணியில் அவரின் இடத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் கவுல். 

சன் ரைஸர்ஸ் அணிக்கு  புவனேஷ்வர் குமாருக்குப் பக்கபலமாக பந்து வீசிவருகிறார் சித்தார்த். புனே அணிக்கு எதிராக இவர் நான்கு ஓவரில் 29 ரன் விட்டுக்கொடுத்தது, நான்கு  அள்ளியது இவரின் இந்த சீஸனின் சிறந்த பந்துவீச்சு. இதுவரை எட்டு போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் கவுல். 

ஜெயதேவ் உனத்கட்

10. ஜெயதேவ் உனத்கட்:

சீரற்ற பெர்ஃபாமன்ஸ் காரணமாக பல வருடங்களாக அவதிப்பட்ட ஜெயதேவ், இந்த சீஸனில் புனே அணியின் நட்சத்திர பெளலராக உருவெடுத்திருக்கிறார். இந்த சீஸனில்  எட்டு போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். ஹைதராபாத் அணிக்காக ஒரே போட்டியில்  இவர்  ஐந்து விக்கெட்களை அள்ளிய நிகழ்வை மறந்துவிட முடியாது. 

வாசிம் அக்ரம் இவரது பந்துவீச்சை வானளாவப் புகழ்ந்திருக்கிறார். ''இரண்டுவிதமாக ஸ்விங் செய்யும் திறன்பெற்ற ஜெயதேவ், விரைவில் கிரிக்கெட் உலகில் புகழ்பெறுவார்" எனப் பாராட்டியிருக்கிறார். ஜெயதேவ் பெளலிங்கில் மட்டுமல்ல, படிப்பிலும் கெட்டிக்காரர். பத்தாவது வகுப்பிலும் சரி, பன்னிரெண்டாவது வகுப்பிலும் சரி இவர்தான் நம்பர் 1 மாணவர். கடைசி ஓவரில் மெய்டன் ஹாட்ரிக் எடுத்த உனத்கட் யங் அணியில் கெத்து பெளலர்.

ஐபிஎல்லில்  சந்தீப் ஷர்மா

11. சந்தீப் ஷர்மா:

செம ஃபார்மில் இருக்கிறார் சந்தீப் ஷர்மா. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கிட்டத்தட்ட பிரதான வேகப்பந்து வீச்சாளர், இன்னும் இந்திய அணிக்குள் பெரிய அளவில் தலைகாட்டாத சந்தீப்தான். கெயில், கோலி, டி வில்லியர்ஸ் மூன்று பேரையும் ஒரே மேட்சில் வீழ்த்திக்காட்டிய கெட்டிக்காரர். 

வலுவான டெல்லி அணியை, தனது துல்லியமான பந்துகளால் துளைத்தெடுத்தார். இவரது  பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் நசுங்கியது டெல்லி  டேர்டெவில்ஸ். இந்த சீஸனில் இதுவரை 12 போட்டிகளில் ஆடி, 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

12-வது வீரர்:

 

பல இளைஞர்கள் தொடர்ந்து சாதித்துவருகிறார்கள். பேசில் தம்ப்பி, இஷான் கிஷன் இருவரும் முக்கியமானவர்கள். இந்த அணியில் 12-வது வீரராக பேட்ஸ்மேனான இஷான் கிஷன் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

http://www.vikatan.com/news/sports/89163-young-eleven-of-ipl-2017.html

  • தொடங்கியவர்

சன்ரைசர்ஸ் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது குஜராத் லயன்ஸ்

 

கான்பூரில் நடைபெற்று வரும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 155 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது குஜராத் லயன்ஸ்.

 
 
சன்ரைசர்ஸ் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது குஜராத் லயன்ஸ்
 
ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் அணிக்கெதிராக ஐதராபாத் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி குஜராத் லயன்ஸ் அணியின் வெயின் ஸ்மித், இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் ஓவருக்கு சராசரியாக 10 ரன்கள் வந்துக் கொண்டிருந்தது. பவர் பிளே-ஆன முதல் 6 ஓவரில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 27 பந்தில் தலா நான்கு பவுண்டரி, சிக்சருடன் அரை சதமும், ஸ்மித் 31 பந்தில் அரைசதம் அடிக்க குஜராத் அணி 9.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

அந்த அணியின் ஸ்கோர் 10.5 ஓவரில் 111 ரன்னாக இருக்கும்போது ஸ்மித் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

13-வது ஓவரை மொகமது சிரஜ் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் இஷான் கிஷன் 61 ரன்னில் அவுட் ஆனார். இது ஓவரின் கடைசி பந்தில் ரெய்னா அவுட் ஆனார். அத்துடன் அடுத்த ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் தினேஷ் கார்த்திக் அவுட் ஆனார். 120 ரன்னில் மூன்று விக்கெட்டுக்களை இழந்த குஜராத் அணியின் ஸ்கோர் அப்படியே சரிய ஆரம்பித்தது.

இந்த விக்கெட்டுக்கள் இழப்பால் நிலைகுலைந்த குஜராத் அணியை ஐதராபாத் பந்து வீச்சாளர்கள் மீளவிடவில்லை. தொடர்ந்து தாக்குதல் நடத்தி, 19.2 ஓவரில் 154 ரன்னில் குஜராத்தை ஆல்அவுட் ஆக்கினார்கள். ஜடேஜா 8 ரன்னுடன் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். நான்கு பேர் டக்அவுட்டில் வெளியேறினார்கள். ஐதராபாத் அணி சார்பில் மொகமது சிரஜ் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/13180830/1085143/Gujara-Lion-155-runs-targets-to-sunrisers.vpf

  • தொடங்கியவர்

குஜராத்தை வீழ்த்தி தொடரின் அடுத்தக்கட்டத்துக்கு தெரிவாகியது ஹைதராபாத்!

ஐ.பி.எல். தொடரில் இன்றைய தினம் குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்று அடுத்தக்கட்டத்துக்கு தெரிவாகியுள்ளது.

262992.jpg

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணியின் ஆரம்ப ஜோடியான ஸ்மித் மற்றும் இசான் கிசன் ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 111 ஓட்டங்களை குவித்தனர்.

எனினும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க குஜராத் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 154 ஓட்டஙக்ளை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

குஜராத் அணி சார்பில் இசான் கிசான் 61 ஓட்டங்களையும், ஸ்மித் 54 ஓட்டங்களையும் குவித்தனர்.

பந்துவீச்சில் மொஹமட் சிராஜ் 32 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 158 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

ஹைதராபாத் அணி சார்பில் வோர்னர் 69 ஓட்டங்களையும், விஜய் சங்கர் 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஹைதராபாத் அணியின் மொஹமட் சிராஜ் தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை புள்ளிப்பட்டியலில் 17 புள்ளிகளை பெற்று ஹைதராபாத் அணி 2வது இடத்தை பிடித்துள்ளதுடன், தொடரின் அடுத்தக்கட்டத்துக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/19968

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., லீக் போட்டி: கோல்கட்டாவை வீழ்த்தியது மும்பை
  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 
ஐ.பி.எல்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
 
கொல்கத்தா:

ஐ.பி.எல் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக திவாரி மற்றும் சிம்மன்ஸ் களமிறங்கினர். 5 பந்துகள் சந்தித்த நிலையில் ரன்கள் ஏதும் எடுக்காமல் சிம்மன்ஸ் ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ரோகித் ஷர்மா ஓரளவு சமாளித்து ஆடினார்.
201705140024322120_KKRr._L_styvpf.gif
8-வது ஓவரில் ரோகித் ஷர்மா 27 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து களமிறங்கிய அம்பாதி ராயுடு அதிரடியாக விளையாடி கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். தொடக்க நாயகன் திவாரி 52 ரன்களில் ரன் அவுட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் பொல்லார்டு 13 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.

20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ராயுடு 37 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். கொல்கத்தா தரப்பில் போல்ட் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர் நரைன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார், இவருடன் களமிறங்கிய லின் 14 பந்துகளில் 26 ரன்களை குவித்தார். பின் களமிறங்கிய காம்பீர் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ராபின் உத்தப்பா 2 ரன்களுக்கும், பாண்டே 33 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய யூசப் பதான் 20 ரன்களும், கிராண்ட்ஹோமி 29 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்த நிலையில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை மட்டும் எடுத்தது.

கொல்கத்தா அணி சார்பில் ஹர்திக் பாண்டியா 1 ரன்னுடனும், குர்னல் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/14002431/1085162/Mumbai-Indians-beat-Kolkata-Knight-Riders-by-9-runs.vpf

#IPL10 - டாப்பில் மும்பை... கொல்கத்தா ப்ளே ஆஃப் செல்வதில் சிக்கல் ஏற்படுமா?

 

Mum_2_400_00448.jpg

இன்னும் ஒரேயொரு நாள். இரண்டே போட்டிகள்தான் பாக்கி. நாளையுடன் முடிவுக்கு வருகிறது ஐபிஎல் 10-வது சீசனின் லீக் போட்டிகள். ஆனால், மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத் அணிகளைத் தவிர எந்தெந்த அணிகள் ப்ளே ஆஃப் சுற்றில் விளையாடும் என்று இன்னும் முடிவாகவில்லை. வேறெந்த ஐபிஎல் சீசனிலும் இல்லாத விறுவிறுப்பு இந்த சீசனின் முதலில் இருந்தே தொற்றிக்கொண்டு இருக்கிறது.

இன்றைய போட்டியும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமலேயே இருந்தது. புள்ளிப் பட்டியலின் டாப்பர் மும்பை அணி, போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் ஸ்பாட்டை உறுதிசெய்ய முடியும் என்ற களத்தில் இருந்த கொல்கத்தா அணி ஆகிய இரு அணணிகளும் மோதின. ஈடன் கார்டன்ஸில் போட்டிக்கான டாஸை வென்றது கொல்கத்தா. கேப்டன் கம்பீர் பவுலிங் செய்ய தீர்மானித்தார். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மும்பை. மும்பையின் தொடக்க வீரர்களில் ஒருவரான சவுரப் திவாரி அரை சதம் அடித்தார். விளையாடிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ராயுடுவும் 37 பந்துகளில் 63 ரன்கள் விளாசியதில், 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது மும்பை.

வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்னும் நோக்கில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்தது கொல்கத்தா. வழக்கமாக அதிரடி ஆட்டத்தை முதலில் இருந்தே கடைபிடிக்கும் கொல்கத்தா அணியில், மணிஷ் பாண்டேவை தவிர வேறு எந்த பேட்ஸ்மேன்களும் 30 ரன்களை தாண்டவில்லை. சொற்ப ரன்களுக்கு ஒவ்வொருவரும் அவுட்டாகி வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தனது டாப் அந்தஸ்தையும் நிலைநிறுத்திக்கொண்டது.

 

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தாலும், புள்ளிகள் பட்டியலில் 16 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறது கொல்கத்தா. நாளை பஞ்சாப் - புனே அணிகள் விளையாடும் போட்டியைப் பொறுத்து, கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் செல்வதில் சிக்கல் வருமா... அதிர்ஷ்டம் இருக்குமா என்பது தெரியவரும். 

http://www.vikatan.com/news/sports/89278-mumbai-won-the-match-number-54-of-ipl-10-against-kolkatta.html

  • தொடங்கியவர்

ஆறுதல் வெற்றி யாருக்கு?: டெல்லி - பெங்களூரு இன்று மோதல்

 

 
 
படம்.| சந்தீப் சக்சேனா.
படம்.| சந்தீப் சக்சேனா.
 
 

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடை பெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ் சர்ஸ் பெங்களூரு- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டதால் தொடரை வெற்றியுடன் முடிக்க முயற்சிக்கக்கூடும். மேலும் இந்த சீசனில் ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டமாகவும் இது அமைந்துள்ளது.

பெங்களூரு அணி இந்த சீசனில் படுமோசமாக விளையாடி வருகிறது. அந்த அணி 13 ஆட்டத்தில் 10 தோல்விகளை சந்தித்துள்ளது. இன்றைய ஆட்டத் தில் வெற்றி பெற்றாலும் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்துடனேயே தொடரை நிறைவு செய்யும். பெங்களூரு அணி தனது கடைசி ஆட்டத் தில் கொல்கத்தாவிடம் தோல்வி யடைந்திருந்தது.

கடந்த சீசனில் 973 ரன்கள் குவித்து சாதனை படைத்த கேப்டன் விராட் கோலி, இந்த சீசனில் 250 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த தொடர் தனிப்பட்ட வகையில் அவருக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

காயம் காரணமாக முதல் 3 ஆட்டங்களில் விளையாடாத அவர் அதன் பின்னர் அணிக்கு திரும்பியும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதிரடி வீரர்கள் என தம்பட்டம் அடிக்கப்பட்ட கிறிஸ் கெய்ல், டி வில்லியர்ஸ், வாட்சன் ஆகியோருக்கும் இந்த சீசன் மோசமாகவே அமைந்துள்ளது.

இளம் வீரர்களை உள்ளடக்கிய டெல்லி அணி இந்த சீசனில் நிலை யான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியது. அந்த அணி 13 ஆட்டத்தில் 6 வெற்றி, 7 தோல்வி களை பதிவு செய்துள்ளது. தனது கடைசி ஆட்டத்தில் புனே அணிக்கு எதிராக 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இளம் வீரர்களான ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஸ்ரேயஸ் ஐயர், கருண் நாயர் ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

அணிகள் விவரம்:

டெல்லி டேர்டேவில்ஸ்:

ஜாகீர் கான் (கேப்டன்), முகமது ஷமி, சபாஷ் நதீம், ஸ்ரேயஸ் ஐயர், ஜெயந்த் யாதவ், அமித் மிஸ்ரா, கார்லோஸ் பிராத்வெயிட், ஷமா மிலிந்த், கிறிஸ் மோரிஸ், கருண் நாயர், பிரதியுஸ் சிங், ரிஷப் பந்த், சேம் பில்லிங்ஸ், சஞ்சு சேம்சன், ஆதித்யா தாரே, சயத் ஹலீத்அகமது, கோரே ஆண்டர்சன், மேத்யூஸ், ரபாடா, முருகன் அஸ்வின், பாட்கம்மின்ஸ், நவ்தீப் ஷைனி, அங்கீத் பாவ்னே, ஷசாங்க் சிங்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்க ளூரு:

விராட் கோலி (கேப்டன்), டிவில்லியர்ஸ், ஷான் வாட்சன், கிறிஸ் கெய்ல், நாத் அர்விந்த், அவேஷ் கான், சாமுவேல் பத்ரி, ஸ்டூவர்ட் பின்னி, யுவேந்திரா சாஹல், அனிகெட் சவுத்ரி, பிரவீன் துபே, டிரெவிஸ் ஹெட், இக்பால் அப்துல்லா, கேதார் ஜாதவ், சர்ப்ராஸ் கான், மன்தீப் சிங், டைமல் மில்ஸ், ஆடம் மில்னே, பவன் நெகி, ஹர்ஷால் படேல், சச்சின் பேபி, தப்ராசி ஷம்சி, பில்லி ஸ்டான்லேக்.

நேரம்: இரவு 8

இடம்: டெல்லி

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

http://tamil.thehindu.com/sports/ஆறுதல்-வெற்றி-யாருக்கு-டெல்லி-பெங்களூரு-இன்று-மோதல்/article9697513.ece?homepage=true

  • தொடங்கியவர்

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது யார்? பஞ்சாப் - புனே இன்று பலப்பரீட்சை

 

 
ஸ்டீவ் ஸ்மித்
ஸ்டீவ் ஸ்மித்
 
 

ஐபிஎல் தொடரில் இன்று மாலை 4 மணிக்கு புனேவில் நடைபெறும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளுக்குமே இதுதான் கடைசி லீக் ஆட்டம். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இதனால் வெற்றிக்காக இரு அணிகளுமே வரிந்துகட்டும்.

புனே அணி 13 ஆட்டத்தில் 8 வெற்றி, 5 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் -0.083 ஆக உள்ளது. அதேவேளையில் பஞ்சாப் அணி 7 வெற்றி, 6 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு சாதகமான விஷயமாக நெட் ரன் ரேட்(+0.296) உள்ளது.

இதனால் இன்றைய ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தினாலே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துவிட முடியும். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் அணியை, நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணி (17 புள்ளிகள்) வீழ்த்தி உள்ளதால், இன்றைய ஆட்டத்தில் புனே அணி கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றில் கால்பதிக்க முடியும் என்ற நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த சீசனில் 405 ரன்கள் சேர்த்துள்ள கேப்டன் ஸ்மித், 316 ரன்களுடன் 12 விக்கெட்கள் கைப்பற்றி உள்ள பென் ஸ்டோக்ஸ், 360 ரன்கள் விளாசி உள்ள இளம் வீரரான ராகுல் திரிபாதி, 240 ரன்கள் சேர்த்துள்ள தோனி ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் பேட்டிங்கில் வலுசேர்த்தால் வெற்றியை வசப்படுத்தலாம்.

பென் ஸ்டோக்ஸ் அணிக்கு அனைத்து வகையிலும் பலம் சேர்க்கிறார். பேட்டிங்கில் அதிரடி யாக விளையாடும் அவர், பந்து வீச்சில் யார்க்கர்கள் வீசி எதிரணியின் ரன்குவிப்பை கட்டுப் படுத்தும் திறன் கொண்டவராகவும் திகழ்கிறார்.

ரூ.14.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட அவர் இந்த சீசனில் பங்கேற்கும் கடைசி ஆட்டம் இதுதான். இதன் பின்னர் அவர் தேசிய அணிக்காக (இங்கிலாந்து) விளையாட தாயகம் செல்கிறார். இதனால் ஸ்டோக்ஸிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

பஞ்சாப் அணி இந்த சீசனில் கடுமையான போராட்ட குணத்துடன் விளையாடி வருகிறது. கடைசி இரு ஆட்டங்களிலும் வலுவான கொல்கத்தா, மும்பை அணிகளை வீழ்த்தி உள்ளது. அதிலும் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 230 ரன்களை குவித்தும் போராடியே வெற்றியை வசப்படுத்த முடிந்தது.

பந்து வீச்சில் சந்தீப் சர்மா, மோஹித் சர்மா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சந்தீப் சர்மா 19-வது ஓவரையும் மோஹித் சர்மா 20-வது ஓவரையும் நேர்த்தியாக வீசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். அதிலும் கடைசி ஓவரில் அதிரடி வீரரான பெலார்டுக்கு எதிராக மோஹித் சர்மா 4 டாட் பந்துகளை (ரன் சேர்க்கப்படாத பந்துகள்) வீசி மிரளச் செய்தார்.

பேட்டிங்கில் ஹசிம் ஆம்லாவின் இடத்தை மார்ட்டின் கப்தில் நிரப்பி வருகிறார். ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோர் தங்களது டி20 அனுபவத்தால் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர். விருத்திமான் சாஹாவும் பேட்டிங் கில் கைகொடுத்து வருகிறார். ஆல்ரவுண்டராக அக் ஷர் படேல் மீண்டும் அசத்த காத்திருக்கிறார்.

அணிகள் விவரம்:

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

கிளென் மேக்ஸ்வெல்(கேப்டன்), டேவிட் மில்லர், மனன் வோரா, அக் ஷர் படேல், குர்கீரத் சிங், அனுரீத் சிங், சந்தீப் சர்மா, ஷான் மார்ஷ், விருத்திமான் சாஹா, நிகில் நாயக், மோகித் சர்மா, மார்க்ஸ் ஸ்டோனிஸ், கே.சி.கரியப்பா, அர்மான் ஜாபர், பிரதீப் ஷாகு, ஸ்வப்னில் சிங், ஹசிம் ஆம்லா, மோர்கன், ராகுவல் டிவாட்டியா, நடராஜன், மேட்ஹென்றி, வருண் ஆரோன், மார்ட்டின் குப்தில், டேரன் சமி, ரிங்கு சிங்.

புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்:

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), தோனி, டுபிளெஸ்ஸிஸ், ஆடம் ஸம்பா, உஸ்மான் கவாஜா, அஜிங்க்ய ரஹானே, அசோக் திண்டா, அங்குஷ் பெய்ன்ஸ், ரஜத் பாட்டியா, அங்கித் சர்மா, ஈஸ்வர் பாண்டே, ஜஸ்கரன் சிங், பாபா அபராஜித், தீபக் ஷகர், மயங்க்அகர்வால், பென் ஸ்டோக்ஸ், டேனியல் கிறிஸ்டியன், பெர்குசன், ஜெயதேவ் உனத்கட், ராகுல் ஷகர், சவுரப் குமார், மிலிந்த் தாண்டன், ராகுல் திரிபாதி, மனோஜ் திவாரி, ஷர்துல் தாக்குர், இம்ரன் தகிர்.

இடம்: புனே

நேரம்: மாலை 4

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

 

http://tamil.thehindu.com/sports/பிளே-ஆப்-சுற்றுக்கு-முன்னேறுவது-யார்-பஞ்சாப்-புனே-இன்று-பலப்பரீட்சை/article9697499.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.