Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐபிஎல் 2017 சீசன்!

Featured Replies

  • தொடங்கியவர்

மும்பைக்கு எதிராக கொல்கத்தா தோல்வி ஏன்? - ஒரு பார்வை

 

 
கம்பீர். | படம்| அகிலேஷ் குமார்.
கம்பீர். | படம்| அகிலேஷ் குமார்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி எடுத்த 173 ரன்களுக்கு எதிராக கொல்கத்தா அணி 164 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.

இதனால் மும்பை முதலிடத்திலும் கொல்கத்தா 2-ம் இடத்திலும் முடிந்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

நேற்றைய போட்டியில் கொல்கத்தா தோற்றதற்கான காரணங்களில் சில:

மணீஷ் பாண்டே மந்தம்:

யூசுப் பத்தான் (20) நேற்று 3 சிக்சர்களை அடித்து மும்பையை பிரச்சினை செய்து கொண்டிருந்த போது வினய் குமாரிடம் வீழ்ந்தார். கொலின் டி கிராண்ட்ஹோம் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்தார். ஆனால் இவரும் ஹர்திக் பாண்டியாவின் பந்தில் 29 ரன்களுக்கு பவுல்டு ஆகி வெளியேறினார். ஸ்கோர் 128/6. நினைத்தால் 6 ஓவர்களில் 46 ரன்கள் என்பது ஒன்றுமில்லை. ஆனால் மணீஷ் பாண்டே 33 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 33 ரன்ளை மட்டுமே எடுத்தது சிக்கலானது. இவர் கொஞ்சம் அடித்து ஆடியிருந்தால் மும்பைக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கும்.

விக்கெட்டுகளை வரிசையாக இழந்தது

கிறிஸ் லின், சுனில் நரைனின் அதிரடி தொடக்கம் கொல்கத்தாவின் பெரும்பாலான வெற்றிக்கு வித்திட்டது அல்லது கம்பீர், லின் ஆகியோர் பார்ட்னர்ஷிப் என்று கூறலாம். ஆனால் நேற்று சுனில் நரைனை சவுதி காலி செய்தார். கம்பீர், லின் 4.3 ஓவர்களில் 43 ரன்கள் விளாசினர்.

ஆனால் 43/1 என்ற நிலையிலிருந்து கம்பீர், உத்தப்பா, லின் ஆகியோர் வரிசையாக ஆட்டமிழந்து 6.2 ஓவர்களில் 53/4 என்று ஆனதால் மீள முடியவில்லை.

அருமையாக வீசிய அன்கிட் ராஜ்புத் ஓவர்களை முடிக்கவில்லை:

அன்கிட் ராஜ்புத் இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் குறிப்பிடத்தகுந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார். அவர் நேற்று 3 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து ரோஹித் சர்மாவை 27 ரன்களில் எல்.பி. செய்தார். ஆனால் கம்பீர் இவருக்கு முழு ஓவரைக் கொடுக்கவில்லை. இவருக்கு இன்னொரு ஓவர் கொடுத்துப் பார்த்திருக்கலாம், ஓருவேளை 1 விக்கெட் அல்லது இறுக்கமான ஓவரை வீசியிருந்தால் மும்பை ரன் எண்ணிக்கை குறைந்திருக்கலாம்.

அதே போல் குல்தீப் யாதவ் 3 ஓவர்களில் 25 ரன்களைக் கொடுத்து அம்பாத்தி ராயுடு (63) விக்கெட்டைக் கைப்பற்றினார். குல்தீப் யாதவ்வை திவாரி, ராயுடு பேட் செய்த போது கம்பீர் பயன்படுத்தவில்லை என்பதும் தோல்விக்கு ஒரு காரணம்

ராபின் உத்தப்பா கோட்டை விட்ட கேட்ச்:

அம்பாத்தி ராயுடு நேற்று 37 பந்துகளில் 63 ரன்கள் விளாசியது மும்பை இன்னிங்ஸில் மிகப்பெரிய பங்களிப்பாக அமைந்தது. ஆனால் ராபின் உத்தப்பா இவர் 10 ரன்களில் இருந்த போது கேட்சை விட்டார்.

சுனில் நரைன் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பேடில் பட்டு விக்கெட் கீப்பர் உத்தப்பாவிடம் வந்தது. ஆனால் இவர் கேட்சை விட்டதால் ராயுடுவுக்கு உத்வேகம் கிடைத்து முக்கியமான இன்னின்ஸை ஆடிவிட்டார்.

இந்தத் தவறுகளை கம்பீர் செய்யாதிருந்தால் ஒருவேளை மும்பையை கொல்கத்தா வீழ்த்தியிருக்கலாம்.

http://tamil.thehindu.com/sports/மும்பைக்கு-எதிராக-கொல்கத்தா-தோல்வி-ஏன்-ஒரு-பார்வை/article9697642.ece?homepage=true

  • Replies 368
  • Views 44.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

2017 ஐ.பி.எல்: ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது யார் யார்?

 

பத்தாவது ஐ.பி.எல் சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் சில வீரர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக விளையாடினர். சிலர் ஏமாற்றமளித்தனர். இந்த நிலையில் ப்ளே ஆஃபில் நுழையப்போகும் அணிகள் எது எது என்று பார்த்தால், 14 போட்டிகள் விளையாடி 10 போட்டிகளில் வென்று முதல் இடத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ். கொல்கத்தா அணி 8 போட்டிகளில் வென்று இரண்டாவது இடத்தில் இருந்தது. இந்நிலையில், மூன்றாவது இடத்திற்கும் நான்காம் இடத்திற்கும் கடும் போட்டி நிலவி வந்தது.

ஐ.பி.எல் - மும்பை இந்தியன்ஸ்

நேற்று நடந்த போட்டியில் ஹைதராபாத் அணி குஜராத் அணியை வீழ்த்தி கொல்கத்தாவை பின்தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி ப்ளே ஆஃப் கனவை நனவாக்கியது. ஆக, முந்தைய போட்டியில் டிராவிட்டின் படையாகிய டெல்லியை அணியை வென்றிருந்தால் புனே எந்தவித பதட்டமும் இல்லாமல் ப்ளே ஆஃபிற்கு தகுதி பெற்றிருக்கும். ஆனால், டெல்லி, புனேவை வீழ்த்தியதால் புனே மட்டுமல்லாமல் ஐ.பி.எல் ரசிகர்கள் அனைவருக்கும் ப்ளே ஆஃபிற்குள் நுழையப்போகும் அணி யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.

தோனி சொல்லும்படி இந்த சீசனில் ஆடவில்லை என்றாலும் தோனியின் ரசிகர்களை புனே தன் வசப்படுத்தி உள்ளது. இந்த சூழலில், இன்று நடக்கவிருக்கும் போட்டிதான் நான்காம் இடத்தை பிடிக்கும்  அணி எதுவென்று தீர்மானிக்கும். புனேவும் பஞ்சாப்பும் நல்ல ஃபார்மில் உள்ளதாலும் இதில் வெற்றி பெறுபவர் ப்ளே ஆஃபில் இடம் பெறுவார்கள் என்பதாலும் இந்த போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. புனே அணியைப் பொருத்தவரையில், ``நம்பிக்கை அதானே எல்லாம்`` என்று திரிபாதி மேல் ஸ்மித்தும் ஃபிளமிங்கும் நம்பிக்கை வைத்துள்ளனர். அவரும் ஒவ்வொரு மேட்சும் 30 ரன்களுக்குக் குறையாமல் ரன்கள் குவித்து  எழுச்சி கண்டுள்ளதால் புனே அணிக்கு ஓபனிங்கில் பிரச்னை வராது. ஸ்மித் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் செயல்படுவதில் குறை சொல்ல முடியாது. ``யார்ரா யார்ரா இவன் பேர கேட்டா தெரியும்`` என பென் ஸ்டோக்ஸ் ஆல் ரவுண்டராக ஜொலிப்பதால் எடுத்த தொகைக்கு மிகச்சரியாக ஆடுகிறார் என்கிறது கிரிக்கெட் வட்டாரம்.

மனோஜ் திவாரி கடந்த சில ஆட்டங்களில் நன்றாக ஆடி வருகிறார். டேனியல் கிரிஸ்டெயினும் அணியில் அவ்வப்போது சிக்ஸர்கள் கொடுத்து எதிரணிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். தோனி இந்த போட்டியில் அடிப்பாரா அடுத்த போட்டியில் அடிப்பாரா என்று ரசிகர்கள் ஏக்கம் அதிகமாகி இருக்கிறது. ஆனால், தோனியின் மீது ரசிகர்களின் இருக்கும் நம்பிக்கை அதீத தன்மையானது. இந்த விறுவிறுப்பான போட்டியிலாவது கேப்டன் கூல் தன் ஹெலிகாப்டர் ஷாட் ஆடி விருந்தளிப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

பௌலிங்கில் தாகிர் தன் சுழலில் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அணிக்கு வலு சேர்க்கிறார். ஆனால், தென் ஆப்ரிக்கா வீரர்கள் அணியில் இல்லாததால் தாகிரை இழக்கிறது புனே. திடீரென்று வீறுகொண்ட உனத்கட் இந்த போட்டியில் அசத்துவார் என நம்பிக்கை புனே ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி நிற்கிறது. தாஹிர் இல்லாத இடத்தை ஆடம் ஜம்பாவை வைத்து போட்டியை புனே அணி எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது.

ஐ.பி.எல்

பஞ்சாப் அணி ஆரம்பத்தில் சொதப்பினாலும் கடந்த போட்டிகளில் வெற்றியை பதித்து வருகிறது. பேட்டிங் ஆர்டரை மாற்றிய பஞ்சாப் அணி, சிறப்பாக விளையாடி வருகிறது. அம்லாவின் அதிரடியால் துவண்டு இருந்த அணிக்கு பலம் கிடைத்தது. கப்டில் அணியில் இருப்பது எதிரணிக்கு மிரட்டல் தான். ``மேக்ஸ்வெல்லின் சிக்ஸர்களை பார்த்து ரொம்ப நாள் ஆச்சுப்பா!!!`` என்றவர்களுக்கு இந்த சீசனில் விருந்தளித்தது மேக்ஸ்வெல்லின் மேக்ஸிமம்..``இந்த வாய்ப்புக்கு தான்யா இவ்ளோ காத்திட்டு இருந்தேன்`` என்று ஓபனிங் பேட்ஸ்மனாக இறங்கி பவுண்டரிக்கு பந்தை பறக்கவிடுகிறார். மனன் வோஹ்ரா இது வரை சொல்லும் படி ஆடவில்லை. ஆனால், அவர் மேல் உள்ள நம்பிக்கையில் அணியில் இவருக்கு ஒரு இடம் இருந்து வருகிறது. அந்த இடத்தை கொடுத்தது சரிதான் என்று சேவாக் எண்ணும் வகையில் இன்றைய போட்டியில் இவரது ஆட்டம் இருக்குமா என்று பார்ப்போம். ``நெருக்கடியான நிலைமையில் தான் நான் உங்களுக்கு தெரியுவேனே..`` என்று ஆல்ரவுண்டராக ஜொலிக்க பந்துடனும் பேட்டுடனும் இருக்கிறாராம் அக்சர் படேல்.

ஐ.பி.எல்

 

மோஹித் சர்மா மும்பைக்கு எதிரான போட்டியில் இறுதியில் ரன்களை கட்டுபடுத்தி ப்ரீத்தி ஜிந்தாவை கூல் ஆக்கினார். இஷாந்த் சற்று எழுச்சி கண்டால் நல்லது. சந்தீப் சர்மா பஞ்சாபின் செல்ல பிள்ளை. இவரது மிரட்டலான பௌலிங் எதிரணி வீரர்களுக்கு சேலஞ்ச். ஆக, இரண்டு அணிகளுமே சரிசமமான வெற்றி வாய்ப்பை கொண்டிருக்கிறது. புனே அணி 16 புள்ளிகளுடன் உள்ளது ஆனால், ரன்ரேட் மைனஸில் உள்ளது பலவீனம். பஞ்சாப் அணி 14 புள்ளிகள் பெற்றுள்ளது. இதன் ரன்ரேட் புனேவை விட அதிகம். இன்றைய போட்டியில் புனே வென்றால் 18 புள்ளிகள் எடுத்து ப்ளே ஆஃபில் என்ட்ரி கொடுக்கும். பஞ்சாப் வென்றால், 16 புள்ளிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப் உள்ளே சென்றுவிடும். இரண்டு அணிகளுக்குமே இது வாழ்வா சாவா போட்டியாக அமைந்திருப்பதால் இந்த போட்டியின் போது சுவாரஸ்யத்திற்கு குறை இருக்காது. இந்தப் போட்டியை காண ரெடி ஆகிட்டிங்களா?

http://www.vikatan.com/news/sports/89303-ipl-playoff-roundup.html

  • தொடங்கியவர்

#IPL10: பஞ்சாப்பை பந்தாடியது புனே... பிளே ஆஃப் சுற்றுக்கும் தகுதி!

 
 

இன்று ஐபிஎல் தொடரின் 55-வது போட்டி புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் இடையே நடைபெற்றது. முதலில் ஆடிய பஞ்சாப் 73 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஆடிய புனே 78 ரன்கள் குவித்து வெற்றிப் பெற்றுள்ளது.

புனே

ஐபிஎல் 55-வது போட்டி இன்று புனேவில் நடைபெற்றது. புனே - பஞ்சாப் அணிகள் மோதும் இப்போட்டியில் டாஸ் வென்ற புனே பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் 15.5 ஓவர்களின் முடிவில் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 22 ரன்கள் குவித்தார். 

இதையடுத்து 74 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது புனே சூப்பர் ஜெயன்ட்ஸ். 12 ஓவர்களின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் குவித்து புனே வெற்றிப் பெற்றுள்ளது. புனே அணியில் அதிகபட்சமாக ரஹானே 34 ரன்களும் திரிபாதி 28 ரன்களும் குவித்தனர். இதையடுத்து 18 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய புனே, பிளே ஆஃப் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது.

அதேபோல், கொல்கத்தா அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தற்போதுவரை, மும்பை, கொல்கத்தா, புனே ஆகிய மூன்று அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

Photo Courtesy: IPLT20

http://www.vikatan.com/news/sports/89321-pune-won-the-match-against-punjab.html

  • தொடங்கியவர்

பிளேஆஃப்: முதல் குவாலிபையரில் மும்பை-புனே; எலிமினேட்டரில் ஐதராபாத்- கொல்கத்தா

 

ஐ.பி.எல். தொடரில் பிளேஆஃப் சுற்றின் முதல் குவாலிபையரில் மும்பை - புனே அணிகளும், எலிமினேட்டரில் ஐதராபாத் - கொல்கத்தா அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 
 
பிளேஆஃப்: முதல் குவாலிபையரில் மும்பை-புனே; எலிமினேட்டரில் ஐதராபாத்- கொல்கத்தா
 
‘ஐ.பி.எல். சீசன் 10’ டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. சுமார் 40 நாட்களாக நடைபெற்ற லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது. 8 மணிக்கு தொடங்கும் இந்த தொடரின் 56-வது ஆட்டமும், கடைசி லீக் போட்டியுமான டெல்லி - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதனால் இதை கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை.

4 மணிக்கு தொடங்கிய போட்டியில் புனே - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் வெற்றிபெறும் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இரு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? போட்டியாக அமைந்தது. ஆனால் பஞ்சாப் அணி 73 ரன்னில் சுருண்டு தோல்வியை போட்டியின்றி ஒப்புக்கொண்டது.

இதனால் புனே அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தற்போது மும்பை இந்தியன்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட், சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளன.

லீக் போட்டிகள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 14 போட்டிகளில் 10 வெற்றி, நான்கு தோல்விகளுடன் 20 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 வெற்றி, 1 டிராவுடன் 17 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தையும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும் பிடித்துள்ளது.

ஐ.பி.எல். தொடர் விதிப்படி முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் குவாலிபையர் 1-ல் மோத வேண்டும். அதன்படி 16-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

3-வது மற்றும் 4-வது இடங்களை பெறும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். அந்த வகையில் 17-ந்தேதி பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

குவாலிபையர் 1-ல் தோற்கும் அணியும், எலிமினேட்டரில் வெற்றிபெறும் அணியும் குவாலி பையர் 2-ல் மோத வேண்டும். இந்த போட்டி 19-ந்தேதி பெங்களூருவில் நடக்கிறது.

குவாலிபையர் 1-ல் வெற்றி பெறும் அணியும், குவாலிபையர் 2-ல் வெற்றி பெறும் அணியும் 21-ந்தேதி ஐதராபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/14192540/1085243/PlayOffs-MumbaivsPune-2st-Qualifier-HyderabadvKolkata.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி

ஐ.பி.எல். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 
ஐ.பி.எல்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி
 
புதுடெல்லி:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை குவித்தது. பெங்களூரு சார்பில் துவக்க வீரரான கிரிஸ் கெயில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஐந்தாவது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்த நிலையில் விராட் கோலி மற்றும் கிரிஸ் கெயில் இணைந்து அணியின் ஸ்கோரை அதிகரித்தனர். பெங்களூரு அணி 12 ஓவர்கள் முடிவில் 90 ரன்கள் எடுத்திருந்தது.
201705142354121066_RCc._L_styvpf.gif
பெங்களூரு அணி சார்பில் கிரிஸ் கெயில் அதிகபட்சமாக 48 ரன்களும், விராட் கோலி 58 ரன்களையும் குவித்திருந்தனர். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை குவித்தது. 162 ரன்களை எடுத்தால் வெற்றி என நிலையில் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் எஸ்.வி. சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் இரண்டாவது பந்திலேயே பெவிலியன் திரும்பினார்.

இவருடன் களமிறங்கிய மற்றொரு துவக்க வீரரான கே.கே. நாயர் 26 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, எஸ்.எஸ். ஐயர் 32 ரன் மற்றும் ஆர்.ஆர். பண்ட் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மொகமது ஷமி ஸ்டம்பிங் முறையில் தனது விக்கெட்டை இழந்தார். பின் கடைசி பந்தில் நதீம் கேட்ச் அவட் ஆக, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 151 ரன்களை மட்டுமே குவித்தது. பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/14235410/1085266/Bengaluru-Royal-Challengers-beat-Delhi-Daredevils.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். டிராபியுடன் ஈடன் கார்டன் திரும்புவோம்: உறுதியளித்த ஷாருக் கான்

பிளேஆஃப் சுற்றுகளில் வெற்றி பெற்று சாம்பியன் டிராபியுடன் கொல்கத்தா ஈடன் கார்டன் திரும்புவோம் என்று ஷாருக் கான் உறுதியளித்துள்ளார்.

 
ஐ.பி.எல். டிராபியுடன் ஈடன் கார்டன் திரும்புவோம்: உறுதியளித்த ஷாருக் கான்
 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய கடைசி லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணியின் உரிமையாளராக ஷாருக் கான் இருந்து வருகிறார். தற்போது அவர் சினிமா பட ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால் பெரும்பாலான போட்டிகளை நேரில் வந்து பார்க்கவில்லை.

கொல்கத்தாவின் கடைசி லீக் போட்டி என்பதால் நேற்று மைதானத்திற்கு வந்திருந்தார். அவர் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

போட்டி முடிந்த பின்னர் ஷாருக்கான், கொல்கத்தா அணி கோப்பையுடன் ஈடன்கார்டன் திரும்பும் என்று ரசிகர்களுக்க உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து ஷாருக் கான் கூறுகையில் ‘‘ஒவ்வொரு போட்டிக்கும் ரசிகர்கள் எங்களுக்கு கொடுத்து வந்துள்ள ஆதரவை பார்க்கையில், நாங்கள் எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, கோப்பையுடன் ஈடன் கார்டன் வர முயற்சிப்போம்.

நாங்கள் சில போட்டிகளில் வெற்றியை நெருங்கி வந்து தோல்வியடைந்தோம். தற்போது இது கடினமாக இருந்தாலும், தொடரில் நல்ல நிலையில்தான் உள்ளோம்.

கோப்பையை வெல்ல நாங்கள் இன்னும் மூன்று போட்டிகளில் வெற்றி பெற வேண்டியுள்ளது. கொல்கத்தாவில் இது எங்களுக்கு கடைசி போட்டி. சற்று அதிர்ஷ்டம் இல்லாமல் போனது.

இந்த சீசனில் இனிமேல் ஈடன்கார்டன் வரப்போவதில்லை. ஆனால், போட்டியில் விளையாட இங்கே வராவிட்டாலும், கடவுள் கிருபையால் டிராபி கோப்பையுடன் திரும்புவோம்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/14182623/1085234/IPL-2017-Will-return-to-Eden-Gardens-with-trophy-promises.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். தொடரின் அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் நான்கு அணிகள்? : இதோ!

 

 

இந்த வருட ஐ.பி.எல். தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்டத்துக்கு நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன.

asfasfasf.jpg

இந்த தொடரின் லீக் போட்டிகளின் 10 போட்டிகளில் வெற்றிபெற்று  20 புள்ளிகளுடன் மும்பை அணி பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளதுடன், 18 புள்ளிகளுடன் பூனே அணி இரண்டாவது இடத்திலும், 17 புள்ளிகளுடன் ஹைதராபாத் அணி மூன்றாவது இடத்தை தக்கவைத்துள்ளதுடன், கொல்கத்தா அணி 16 புள்ளிகளுடன் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.

இதன் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட நான்கு அணிகளும் அடுத்தக்கட்டத்துக்கு முன்னேறியுள்ளன.

இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு அணியை தெரிவுசெய்யும் முதலாவது போட்டி நாளை மும்பையில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள மும்பை மற்றும் பூனே அணிகள் மோதவுள்ளன.

இதேவேளை அரையிறுதிக்கு தகுதிபெறும் அணியை தெரிவுசெய்யும் போட்டி நாளை மறுதினம் பெங்களூரில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி மும்பை மற்றும் பூனே அணிகளுக்கிடையிலான போட்டியில் தோல்வியடையும் அணியுடன் மோதி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/19994

  • தொடங்கியவர்

கோப்பை லட்சியம்... ப்ளே ஆஃப் நிச்சயம்... ஐ.பி.எல் புள்ளிப்பட்டியலை எப்படி மாற்றினார் தோனி?

 

‘சொல்லுங்க...சொல்லுங்க...சொல்லுங்க... இதுக்கு முன்னாடி சென்னைல என்ன பண்ணிட்டு இருந்தீங்க’னு பாட்ஷா ஸ்டைல்ல கேட்காதது மட்டும்தான் பாக்கி. ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்துல இருந்த புனே அணியை 2வது இடத்துக்குக் கொண்டு வந்தது நம்ம தல தோனி தான்னு சொன்னா நம்புவீங்களா? ஆமா பாஸ் ஒவ்வொரு டீமோட ஐபிஎல்- 10 கடந்து வந்த பாதையை டைம் மெஷின்ல போய் பார்த்தா வாவ் சொல்ல வைக்கிறது புனே அணி.

தோனி

தல தோனி:

என்ன தான் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்னு சொன்னாலும்...கிங் மேக்கரா க்ரவுண்ட்ல கெத்து காட்டுறாரு தோனி...அணி உரிமையாளரே தோனிய ட்விட்டரில் கலாய்க்க செம மாஸ் என்ட்ரி மூலமா வந்துட்டேன்னு சொல்லு...திரும்ப வந்திட்டேன்னு சொல்லுனு தெறிக்க விட்டார் தோனி...அடுத்த அணி கேப்டனான வார்னரே என்ன அடி...தலைவா யூ ஆர் க்ரேட்  என்ற ஸ்டைலில் ட்வீட் தட்டும் அளவுக்கு மாஸ் இன்னிங்ஸ் ஆடி விஸ்வரூபம் எடுத்தார் தோனி. அதன் பிறகு புனேயின் க்ராப் வேகமெடுக்கத் தொடங்கியது. இதுவரைக்கும் 8வது இடத்துலதானே புனே டீம பாத்துருக்க ப்ளே ஆஃப்க்குள்ள போய் பார்த்ததில்லையேனு கெத்து காட்டியது புனே. பேட்டிங் மாஸ்...கீப்பங் க்ளாஸ்...என அறிவிக்கப்படாத கேப்டனாக அணியை வழிநடத்தினார் தோனி. முடிவு...வழக்கம் போல ப்ளே ஆஃப்...தோனி டீம் ப்ளே ஆஃப் போகுறதெல்லாம் சகஜம் தானப்பானு ரசிகர்கள உற்சாகத்தில் ஆழ்த்தினார். வாவ் வாட் எ மேன்

கோலி

கோலி vs ரோஹித்

இந்திய அணியின் மூன்று வடிவிலான போட்டியிலும் கேப்டனாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட விராட் கோலி தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக ஏதோ ஓர் இடத்தில் திருப்திபடுத்தாமலே இருக்கிறார். இந்திய அணிக்காக ஆடும்போது தோனியின் உதவியை நாடும் இவருக்கு பெங்களூரில் கெயில், டிவில்லியர்ஸ், வாட்சன் என்று ஸ்டார் ப்ளேயர்கள் இருந்தும் கோலியால் இவர்களை வைத்து வெற்றியைத் தனதாக்க முடியவில்லை. வழக்கமாக எண்டர்டெயினர் என்ற போர்வையில் இருக்கும் ஆர்சிபி. இந்த முறையும் ஒரு முறை 200 ரன்களுக்கு மேல், ஒரு முறை 49 ரன்னுக்கு ஆல் அவுட் என மக்களை மகிழ்வித்தது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. 

ஆனால், இதில் சிக்கல் கோலிக்குத்தான். இன்னொருபுறம் விறுவிறு ரேஸில் ரோஹித் ஷர்மா முதலிடம் வகிக்கிறார். ஏற்கெனவே 2 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். இந்த முறை லீக் சுற்றில் முதலிடம். இப்பொழுதே  ஏன் டி-20க்கு ரோஹித்தை கேப்டனாக்ககூடாது என்ற சலசலப்புகள் துவங்கிவிட்டன. வெல்டன் ரோஹித்...பி கேர்ஃபுல் கோலி...

வார்னர்

வாவ் வார்னர்... க்ரேட் கம்பீர்

வார்னர் ஹைதராபாத்தையும், கம்பீர் கொல்கத்தாவையும் ஆரம்பத்திலிருந்தே சரியாக வழிநடத்தி வந்தனர். வார்னரின் அபார ஆட்டம் அந்த அணியை முதல் 3 இடங்களுக்குள்ளாகவே இறுதி வரை வைத்திருக்க உதவியது. கம்பீரின் அதிரடி முடிவுகள் அணியை கெத்தாக முதல் மூன்று இடங்களில் வைத்திருந்தன. கடைசியில் புனேயின் எழுச்சி கொல்கத்தா அணியை 4வது இடத்துக்குத் தள்ளியது. சுனில் நரேனை ஓப்பனராக்கியதெல்லாம் வேற லெவல் பாஸ்.

 

 

 

http://www.vikatan.com/news/sports/89387-teams-travel-in-ipl-2017.html

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்.-ஐ தவிர்த்து ஸ்டோக்ஸ், பட்லர் பீர் குடிக்க செல்கிறார்கள்: பீட்டர்சன்

ஐ.பி.எல். பிளேஆஃப் சுற்றில் விளையாடாமல் ஸ்பெயின் நாட்டில் டிரைனிங் சீசனுக்கு செல்வது பீர் குடிக்கவே என்று பீட்டர்சன் சாடியுள்ளார்.

 
ஐ.பி.எல்.-ஐ தவிர்த்து ஸ்டோக்ஸ், பட்லர் பீர் குடிக்க செல்கிறார்கள்: பீட்டர்சன்
 
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐ.பி.எல். தொடர் உலகளவில் மிகப்பெரிய தொடராக கருதப்படுகிறது. பணம் அதிக அளவில் கொட்டிக்கிடப்பதால் வெளிநாட்டு வீரர்கள் அதிக அளவில் இந்த தொடரில் கலந்து கொள்ள விரும்புகிறார்கள்.

தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்காகவும், பட்லர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார்கள்.

லீக் ஆட்டங்கள் முடிவில் புனே மற்றும் மும்பை அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நாளை குவாலிபையர் 1-ல் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

இந்நிலையில் இருவரையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திரும்ப அழைத்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து செல்வது புனே அணிக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணி ஜூன் 1-ந்தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னோட்டமாக தென்ஆப்பிரிக்காவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிகளில் மே 24, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

இந்த தொடருக்கு முன்னோட்டமாக இங்கிலாந்து அணி ஸ்பெயின் சென்று பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட இருக்கிறது. இதன்காரணமாக இருவரையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திரும்ப அழைத்துள்ளது.

முக்கியமான கட்டத்தில் இருவரையும் திரும்ப அழைத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு, முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கெவின் பீட்டர்சன் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘‘இது முற்றிலும் பரிதாபத்திற்குரியது. ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்குப் பதிலாக, இருவரும் பீர் குடிக்க ஸ்பெயின் செல்ல வேண்டியிருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் ஒரு சதம் உள்பட 300 ரன்கள் எடுத்ததுடன், 10-க்கும் மேற்பட்ட விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/15192427/1085404/Kevin-Pietersen-Blasts-Ben-Stokes-Jos-Buttler-for.vpf

  • தொடங்கியவர்

இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவது யார்? - மும்பை - புனே அணிகள் இன்று பலப்பரீட்சை: பென் ஸ்டோக்ஸ் இல்லாததால் நெருக்கடியில் ஸ்மித்

 

 
ரோஹித் சர்மா | ஸ்டீவ் ஸ்மித்
ரோஹித் சர்மா | ஸ்டீவ் ஸ்மித்
 
 

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். மாறாக தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்.

8 அணிகள் கலந்து கொண் டுள்ள ஐபிஎல் 10-வது சீசனின் லீக் ஆட்டங்கள் அனைத்தும் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ் (20), 2-வது இடம் பிடித்த ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் (18), 3-வது இடம் பிடித்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (17), 4-வது இடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (16) ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளன.

பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் இரு முறை சாம்பியனான மும்பை அணி, எழுச்சி கண்டுள்ள புனே அணியுடன் மோதுகிறது. மும்பை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவை பந்தாடியிருந்தது.

இந்த ஆட்டத்தில் முன்னணி வீரர்கள் பலருக்கு ஓய்வு கொடுத்து அணியில் உள்ள மற்ற வீரர்களின் திறனை மும்பை அணி சோதித்து பார்த்தது. இதில் பேட்டிங்கில் கிடைத்த வாய்ப்பை சவுரவ் திவாரி (52), அம்பாட்டி ராயுடு (63) ஆகியோர் சரியாக பயன் படுத்தினர். மேலும் பந்து வீச்சில் வினய் குமார் (2), டிம் சவுத்தி (2) ஆகியோரும் சிறந்த பங்களிப்பை வழங்கினர்.

மும்பை அணி இந்த சீசன் முழுவதுமே பேட்டிங்கில் அசத்தி வருகிறது. சிம்மன்ஸ், பார்த்தீவ் படேல், கேப்டன் ரோஹித் சர்மா, பொலார்டு, நித்திஷ் ராணா ஆகியோரை கொண்ட அதிரடி பேட்டிங் வரிசை, எந்த வகையிலான பந்து வீச்சையும் துவம்சம் செய்யக் கூடியதாக உள்ளது. இந்த அதிரடி பட்டாளத்துக்கு புனே அணியும் விதிவிலக்காக இருக்காது என கருதப்படுகிறது.

சகோதரர்களான ஹர்திக் பாண்டியா, கிருனல் பாண்டியா ஆகியோர் ஆல்ரவுண்டர்களாக அணியின் தேவையை அறிந்து இந்த சீசன் முழுவதுமே பிரமாதமாக செயல்பட்டு வருகின்றனர். இத னால் மும்பையின் பேட்டிங் ஒட்டு மொத்தமாக மிரட்ட காத்திருக்கிறது.

வான்கடே மைதானம் இந்த சீசனில் ரன்குவிப்புக்கு சாதகமா கவே இருந்து வருகிறது. இதனால் மீண்டும் ஒரு முறை ரன்மழை பொழியக்கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது. இன்றைய ஆட்டத்தில் சிம்மன்ஸ் உடன் மீண்டும் பார்த்தீவ் படேல் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார்.

இந்த ஜோடி வழக்கம் போல் அதிரடி தொடக்கம் கொடுக்க முயற்சிக்கும். கடந்த சில ஆட்டங் களாக நித்திஷ் ராணா சோபிக்க தவறினார். இதனால் அவரது இடத்தில் அம்பாட்டி ராயுடு களமிறங்க வாய்ப்புள்ளது. பந்து வீச்சில் கடைசியாக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத் தில் மும்பை பந்து வீச்சாளர்கள் 230 ரன்களை வாரி வழங்கினர்.இதனால் அந்த அணி பந்து வீச்சில் மேலும் முன்னேற்றம் காண வேண்டியது உள்ளது.

ஜஸ்பிரித் பும்ரா, கடைசி கட்ட ஓவர்களில் நேர்த்தியாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஹர்திக் பாண்டியாவும் உறுதுணை யாக உள்ளார். மலிங்கா, மெக்லீனகன் ஆகியோரும் சிறப் பாக செயல்படும் பட்சத்தில் புனே அணிக்கு நெருக்கடி கொடுக்க லாம். புனே அணி முதன் முறை யாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. கடந்த சீசனில் அறிமுகமான அந்த அணி 7-வது இடத்தையே பிடித்திருந்தது. இந்த சீசனில் முதற்கட்ட போட்டிகளில் கடும் விமர்சனங்களை சந்தித்த போதும், தொடரின் 2-வது கட்டத்தில் சிறப்பான வெற்றிகளை குவித்து பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியான நிலையில் தனது கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. இதனால் புனே அணியின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்களான ஜெயதேவ் உனத்கட், ஷர்துல் தாக்குர், டேனியல் கிறிஸ்டியன் ஆகியோர் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தனர். இவர்களுக்கு உறுதுணையாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆடம் ஸம்பாவும் சிறப்பாக செயல்பட்டார்.

உனத்கட் இந்த சீசனில் 21 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள் ளார். இன்றைய ஆட்டத்திலும் அவர் மும்பை அணிக்கு சவால் தரக் கூடும்.

பேட்டிங்கில் 388 ரன்கள் குவித் துள்ள ராகுல் திரிபாதி நம்பிக்கை அளிப்பவராக உள்ளார். தொடக்க வீரராக அவருடன் களமிறங்கும் ரஹானே சீரான ஆட்டத்தை வெளிப் படுத்த தவறுகிறார். அவரும் சிறந்த பங்களிப்பை வழங்கினால் அணியின் பேட்டிங் மேலும் வலுப்பெறும்.

ரூ.14.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், தேசிய அணிக் கான (இங்கிலாந்து) பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக தாயகம் சென்றுள்ளார். அவர் இல்லாதது புனே அணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

ஸ்டோக்ஸ் இல்லாததால் பேட்டிங்கில் ஸ்மித், தோனி, மனோஜ் திவாரி ஆகியோருக்கு கூடுதல் சுமை ஏற்படக்கூடும். ஸ்டோக்ஸூக்கு பதிலாக நியூஸி லாந்தின் பெர்குசன் அல்லது ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா களமிறக்கப்பட வாய்ப் புள்ளது. இவர்களில் ஒருவரை தேர்வு செய்வதை தவிர புனே அணிக்கு வேறு வழியில்லை.

இந்த சீசனில் லீக் ஆட்டங்களில் ஆதிக்கம் செலுத்திய மும்பை அணியை இரு முறை வீழ்த்தி யுள்ள ஒரே அணி புனே தான். இந்த நம்பிக்கையுடன் புனே அணி இன்றைய ஆட்டத்தை எதிர்கொள் கிறது. அதேவேளையில் லீக் ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் மும்பை அணி களமிறங்குகிறது.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 21-ம் தேதி ஹைதரா பாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். தோல்வியை தழுவும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது. அதாவது தகுதி சுற்றில் 1-ல் தோல்வியடையும் அணி மே 19-ம் தேதி நடைபெறும் தகுதி சுற்று 2-ல் விளையாடும்.

இதில் அந்த அணி 17-ம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் (ஹைதரபாத் - கொல்கத்தா) வெற்றி பெறும் அணியுடம் மோதும். இதில் வெற்றி பெறும் அணி, 2-வது அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழையும்.

புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்:

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), தோனி, ஆடம் ஸம்பா, உஸ்மான் கவாஜா, அஜிங்க்ய ரஹானே, அசோக் திண்டா, அங்குஷ் பெய்ன்ஸ், ரஜத் பாட்டியா, அங்கித் சர்மா, ஈஸ்வர் பாண்டே, ஜஸ்கரன் சிங், பாபா அபராஜித், மயங்க் அகர்வால், டேனியல் கிறிஸ்டியன், பெர்குசன், ஜெயதேவ் உனத்கட், ராகுல் ஷகர், சவுரப் குமார், மிலிந்த் தாண்டன், ராகுல் திரிபாதி, மனோஜ் திவாரி, ஷர்துல் தாக்குர்.

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா(கேப்டன்), ஜாஸ் பட்லர், பார்த்தீவ் படேல், நிக்கோலஸ் பூரன், கிருஷ்ணப்பா கவுதம், அம்பாட்டி ராயுடு, சிம்மன்ஸ், ஹெஜ்ரோலியா, கரண் சர்மா, சவுரப் திவாரி, அசெலா குணரத்னே, ஜான்சன், ஹர்பஜன் சிங், மிட்செல் மெக்லீனகன், ஸ்ரேயஸ் கோபால், சித்தேஷ் லாடு, வினய் குமார், கெய்ரோன் பொலார்டு, கிருனல் பாண்டியா, டிம் சவுத்தி, மலிங்கா, நித்திஷ் ரானா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா,

பென் ஸ்டோக்ஸ்

புனே அணியால் ரூ.14.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இங்கிலாந்து ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் இந்த சீசனில், 12 ஆட்டங்களில் விளை யாடி தலா ஒரு சதம், அரை சதத்துடன் 316 ரன்கள் எடுத்துள்ளார். 22 பவுண்டரிகள், 15 சிக்ஸர்கள் அடித் துள்ளார். பந்து வீச்சில் 12 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.

நேரம்: இரவு 8
இடம்: மும்பை
நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

2,074 ஓவர்கள்

55 லீக் ஆட்டங்களில் 2,074 ஓவர்கள் வீசப்பட்டுள்ளன. அதிக பட்சமாக மும்பை 270, புனே 269, கொல்கத்தா 266 ஓவர்கள் வீசி உள்ளன. ஹைதராபாத்தின் ரஷித் கான் அதிகபட்சமாக 52 ஓவர்கள் வீசி உள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக புவனேஷ்வர் குமார் 51, சுனில் நரேன் 51 ஓவர்கள் வீசி உள்ளனர்.

671 சிக்ஸர்கள்

லீக் ஆட்டங்களின் முடிவில் 671 சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ளன. மும்பை அணி 104, குஜராத் 92, பஞ்சாப் 88 சிக்ஸர்கள் அடித்துள்ளன. அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் பஞ்சாப் வீரர் மேக்ஸ்வெல் (26) முதலிடத்தில் உள்ளார். வார்னர் 24, ரிஷப் பந்த் 24 அடுத்த இடங்களில் உள்னர்.

1,544 பவுண்டரிகள்

1,544 புவுண்டரிகள் இதுவரை அடிக்கப்பட்டுள்ளன. அதிகபட்ச மாக கொல்கத்தா 218 பவுண் டரிகள் அடித்துள்ளது. அடுத்த இடங்களில் குஜராத் (218), ஹைத ராபாத் (211) அணிகள் உள்ளன.

5 சதங்கள்

இந்த சீசனில் 5 சதங்கள் அடிக் கப்பட்டுள்ளன. பஞ்சாப் வீரர் ஹசிம் ஆம்லா இரு சதங்கள் அடித்துள்ளார். டெல்லியின் சஞ்சு சாம்சன், புனேவின் பென் ஸ்டோக்ஸ், ஹைதராபாத்தின் டேவிட் வார்னர் ஆகியோர் தலா ஒரு சதம் அடித்துள்ளனர்.

91 அரை சதங்கள்

இந்த சீசனில் 91 அரை சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் கொல்கத்தா வீரர் ராபின் உத்தப்பா 5 அரை சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். வார்னர், விராட் கோலி ஆகியோர் தலா 4 அரை சதங்களுடன் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

விக்கெட்டில் டாப்

ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இந்த சீசனில் 25 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட்கள் கைப்பற்றியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். புனே வீரான ஜெயதேவ் உனத்கட் (21), மும்பை வீரர் மெக்லீனகன் (18) அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.

ரன்குவிப்பில் டாப்

ரன்குவிப்பில் வார்னர் முதலிடத் தில் உள்ளார். அவர் 13 ஆட்டங் களில், ஒரு சதம், 4 அரை சதங் களுடன் 604 ரன்கள் குவித்துள் ளார். ஷிகர் தவண் 468, காம்பீர் 454 ரன்கள் குவித்து அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.

பிளே ஆப் சுற்று அட்டவணை

தகுதி சுற்று 1
மே 16 மும்பை - புனே

எலிமினேட்டர்
மே 17 ஹைதராபாத் - கொல்கத்தா

தகுதி சுற்று 2
மே 19 தகுதி சுற்று 1-ல் தோல்வி - எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணி

http://tamil.thehindu.com/sports/இறுதிப்-போட்டிக்கு-நேரடியாக-தகுதி-பெறுவது-யார்-மும்பை-புனே-அணிகள்-இன்று-பலப்பரீட்சை-பென்-ஸ்டோக்ஸ்-இல்லாததால்-நெருக்கடியில்-ஸ்மித்/article9700176.ece?homepage=true

  • தொடங்கியவர்

டுவிட்டரில் மோதிக்கொண்ட பாண்டியா சகோதரர்கள் : அதிர்ச்சியில் மும்பை! (படங்கள்)

 

 

இவ்வருட ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடிவரும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இரு சகோதரர்களான ஹர்த்திக் பாண்டியா மற்றும் குர்னல் பாண்டியா ஆகியோர் டுவிட்டரில் மோதிக்கொண்டுள்ளமை தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

ஹர்த்திக் பாண்டியா தனது டுவிட்டர் தளத்தில் “வாழ்க்கையில் உங்களோடு நெருக்கமாக இருப்பவர்கள் சில நேரங்களில் ஏமாற்றிவிடுவார்கள், இது அவ்வளவு சரியானது அல்ல சகோதரா" என பதிவிட்டுள்ளார்.

Capture.JPG

ஹர்த்திக் பாண்டியா டுவிட்டரில் இட்ட பதிவினை பார்த்த ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

எனினும் குறித்த பதிவுக்கு குர்னல் பாண்டியா பதிலளித்துள்ளதானால், இது சகோதரர்களுக்கிடையிலான மோதல் என ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஹர்த்திக் இட்ட பதிவுக்கு குர்னல் பாண்டியா “ பொது இடத்தில் இவ்வாறு இடம்பெற்றிருக்கக்கூடாது, எவ்வாறாயினும் நான்  உன் அண்ணன், இதனால் இதனை பெரிது படுத்த வேண்டாம்“ என பதிவிட்டுள்ளனர்.

_uuo_.JPG

எனினும் குறித்த டுவிட்டை பார்த்த செவாக் இவர்களை கேலி செய்து டுவிட் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

uuu_pu_p__.JPG

இதேவேளை குறித்த இருவரின் மோதலினால் மும்பை அணி அதிர்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20063

  • தொடங்கியவர்

தோனியை கேப்டன்சியிலிருந்து நீக்க நான் காரணமா?- ஸ்டீபன் பிளெமிங் மறுப்பு

 
பிளெமிங், தோனி. | கோப்புப் படம்.| அகிலேஷ் குமார்.
பிளெமிங், தோனி. | கோப்புப் படம்.| அகிலேஷ் குமார்.
 
 

ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனியை அகற்றுவதில் தனக்கு பங்கிருப்பதாக எழுந்த செய்திகளை ஸ்டீபன் பிளெமிங் கண்டிப்புடன் மறுத்துள்ளார்.

முன்னதாக தோனி கேப்டன்சியிலிருந்து அகற்றப்பட்ட போது, “2016 ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளை மிகவும் நெருக்கமாக வந்து தோற்றோம். தோனியால் ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்க இயலவில்லை, அதனால்தான் அவரை கேப்டன்சியிலிருந்து நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது” என்று பிளெமிங் கூறியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால் பிளெமிங் தற்போது தான் கூறியதாக வெளிவந்த இந்த மேற்கோள் ஜோடிக்கப்பட்ட ஒன்று என்று மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில், “இது மிகவும் முட்டாள்தனமான செய்தி. ஆட்டத்தின் மிகப்பெரிய பினிஷர் மீது அழுத்தம் ஏற்படுத்தக்கூடியதாகும், இது ஜோடிக்கப்பட்ட மேற்கோள்” என்றார்.

ஆனால் அனைத்து யூகங்களையும் முறியடிக்கும் விதமாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், தனக்கு தோனி பலவிதங்களிலும் உதவிவருகிறார் என்று குறிப்பிட்டதும் நினைவுகூரத் தக்கது. ஆட்டத்தின் முக்கியக் கட்டங்களில் தோனி களவியூகம், பந்து வீச்சு மாற்றம் குறித்து ஸ்மித்துக்கு ஆலோசனை வழங்குவதும் அது உடனே செய்யப்பட்டு அதனால் புனே அணி சில வெற்றிகளைப் பெற்றதும் புனே போட்டிகளைப் பார்த்த ரசிகர்களுக்குப் புரிந்த ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/தோனியை-கேப்டன்சியிலிருந்து-நீக்க-நான்-காரணமா-ஸ்டீபன்-பிளெமிங்-மறுப்பு/article9701504.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஸ்டோக்ஸ் இல்லை, தாஹீர் இல்லை... மும்பையை வெல்லுமா ஸ்மித் அணி? #MIvsRPSG #MatchPreview

 
 

ஐபிஎல் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இன்னும் நான்கே போட்டிகளில், ஆறே தினங்களில் கோப்பையை முத்தமிடப்போகும் அணி எது என்பது தெரிந்து விடும். சுமார் ஒன்றரை மாத டி20 கிரிக்கெட் திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவடைய இருக்கிறது. புனே, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத் என நான்கு அணிகள் பிளே ஆஃபுக்கு தகுதிப் பெற்றுள்ளன. 

இன்று இரவு எட்டு மணிக்கு நடக்கும் போட்டி குவாலிபயர் 1. இந்த போட்டியில் வெல்லும் அணி நேரடியாக ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும். தோற்கும் அணிக்கு மீண்டும்  இறுதிப்போட்டி செல்ல மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்கும் நடக்கும் இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறப்போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். லீக் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை இரண்டு முறையும் புரட்டி எடுத்தது புனே அணி. இந்த சீசனில் மும்பை அணி 14 போட்டிகளில் நான்கில் மட்டும்தான் தோற்றது. அந்த நான்கில் இரண்டு போட்டிகள் புனே அணிக்கு எதிராக என்பது கவனிக்கத்தக்கது. 

மும்பை Vs புனே

கடந்த வருடம் நடந்த இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை ஜெயித்தன. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 3-1 என வலுவான சாதனையைச் செய்திருக்கிறது புனே. அத்தனை அணிகளையும் கலங்கடிக்கும் மும்பை இந்தியன்ஸ் புனே அணிக்கு எதிராக மட்டும் திணறுவதற்கு காரணங்கள் உண்டு.

ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணிக்கு மிகச் சவாலான அணி சென்னை சூப்பர் கிங்ஸ். மும்பை Vs தோனி என்பது ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆரோக்கியமான போட்டி. மும்பையின் வியூகங்களை முறியடிப்பதில் தோனி வல்லவர். அதே சமயம் இன்னொரு பக்கமும் கவனிக்க வேண்டும். மற்ற அணிகளுடன் எல்லாம் கெத்தாக ஜெயித்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகத்தான் அதிக முறை தோல்வி அடைந்திருக்கிறது. அப்படிப்பார்த்தால் தோனிக்கு வலுவான சவால் அளிக்கக் கூடிய அணி மும்பை என்பது தெளிவு. 

இந்த சீசனில் புனே அணிக்குத் தோனி கேப்டன் கிடையாது. ஸ்டீவன் ஸ்மித் தான் கேப்டன். அவர் தலைமையில்தான் புனே அணி இரண்டு முறையும் மும்பை அணியை வென்றது. புனேயின் அணித்தலைவராக அவர் எடுத்த முடிவுகள் அணிக்குச் சாதகமாக அமைந்தன. எனினும் தோனியின் பங்களிப்பை இதில் மறந்து விடக்கூடாது. இந்த சீசனில் மும்பை வான்கடேவில் நடந்த மும்பை - புனே இடையேயான போட்டியில், மூன்று ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது புனே. அந்த மேட்சில் கடைசி கட்ட ஓவர்களில் தோனியின் வியூகங்களும், அனுபவமும் கேப்டன் ஸ்மித்துக்கு கைகொடுத்தன.

தான் கேப்டனாக இருந்த சமயத்தில் எட்டு முறை பிளேஆஃப் தகுதி பெற்றபோது, ஆறு முறை அணியை ஃபைனலுக்கு அழைத்துச் சென்றவர் தோனி. ஆகவே அவரின் அனுபவம் இந்த போட்டியில் மிகமுக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஸ்டீவன் ஸ்மித்தும் இந்த சீசனில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். ஐபிஎல் கோப்பையை வெல்வது என்பது, அவருக்கு சாம்பியன்ஸ் டிராஃபியில் ஆஸ்திரேலியாவை வழிநடத்தும் போது, மனதளவில் பெரும் நம்பிக்கையைத்தரும்.தோனி - ஸ்மித் இணையை இப்போது மும்பை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பதே பெரிய கேள்வி. 

மும்பை வான்கடே மைதானத்தைப் பொறுத்தவரையில் அது பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி. இரவு நேரங்களில் லேசான பனிப்பொழிவு இருக்கும் என்பதால், சேஸிங் செய்யும் அணிக்குச் சாதகமான அனுகூலங்கள் உண்டு. எனவே, இந்த போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த சீசனில் மும்பையை முதலில் பேட்டிங் செய்த போதும் சரி, இரண்டாவதாக பேட்டிங் செய்த போதும் சரி புனே அபாரமாக ஆடி தோற்கடித்தது. ஆகவே, மனதளவில் தன்னம்பிக்கையுடன் இப்போட்டியை எதிர்கொள்ளும் புனே.

அதே சமயம், மும்பை அணி புனே அணியை ஜெயித்தே ஆக வேண்டிய லேசான நெருக்கடியில் இருக்கிறது. ஆகவே, அணியில் சில மாற்றங்களை மும்பை அணி மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம். குறிப்பாக நிதிஷ் ராணா, கார்ன் ஷர்மா ஆகியோர் நீக்கப்பட்டு அம்பட்டி ராயுடு, க்ரூனால் பாண்டியா ஆகியோர் களமிறங்க அதிக வாய்ப்பு இருக்கிறது. விக்கெட் கீப்பர் பணியைப் பார்த்தீவ் படேல் மேற்கொள்ளக்கூடும். ரோஹித் ஷர்மா இன்றைய தினம் ஒன் டவுன் இடத்தில் களமிறங்கக்கூடும். மெக்லாகன், பும்ரா, மலிங்கா இணை வேகப்பந்து தாக்குதல்களால் புனேவை திணறடிக்கும் என நம்பலாம். பொல்லார்டு மற்றும் ஹர்டிக் பாண்டியா செமத்தியான ஃபார்மில் இருக்கிறார்கள். பஞ்சாப் அணிக்கு எதிராக பொல்லார்டு மிக அபாயகரமான வீரராக ஆடினார். ஹர்டிக் பாண்டியா சமீபத்திய போட்டிகளில் கவலைப்படாமல் சிக்ஸர் விளாசுகிறார்.

மும்பை Vs புனே

புனே அணியில் ஸ்டோக்ஸ், தாஹீர் ஆகியோர் இல்லை என்பதால் பந்துவீச்சு துறை சற்றே வலிமை குறைந்திருக்கிறது. குறிப்பாக தாஹீர் இல்லை என்பது வலது ஆட்டக்காரர்கள் நிறைந்த மும்பை அணிக்குச் சாதகமான அம்சம். ஆகவே, சேஸிங்கில் பேட்ஸ்மேன்களின் திடீர் சொதப்பல்கள் எதுவும் நடக்கவில்லையெனில் மும்பையின் வெற்றியைத் தடுப்பது புனேவுக்குச் சாதாரணமான விஷயம் அல்ல.  

ஸ்டோக்ஸ்க்கு பதிலாக ஃபெர்குசான்  அல்லது உஸ்மான் கவாஜா ஆகியோரில் ஒருவர் இடம்பெறக்கூடும். கவாஜா இந்த சீசனில் இன்னும் ஒரு போட்டி கூட ஆடவில்லை. ஃபெர்குசான் இரண்டு போட்டிகளில் புனே அணிக்காக ஆடினார். பெங்களூருவுக்கு எதிரான ஒரு போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி வெறும் ஏழு ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பவுன்சர் வீசுவதில் வல்லவரான ஃபெர்குசானைத்தான் ஸ்டீவன் ஸ்மித் இந்தப் போட்டிக்கு டிக் அடிப்பார்  எனத் தோன்றுகிறது. ஒருவேளை புனே சேஸிங் செய்ய வேண்டியிருக்கும் பட்சத்தில் கவாஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். டிண்டாவை வைத்துக்கொண்டு ஆரம்பபோட்டிகளில் பவுலிங்கில் சொதப்பிய புனே அணி, அதன் பின்னர் உனத்கட், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் வரவால் பவுலிங்கிலும் கிடுக்கிப்பிடி போடுகிறது. பஞ்சாபை சுருட்டி எறிந்த தன்னம்பிக்கையோடு இந்தப் போட்டியில் புனே பவுலர்கள் களமிறங்குவார்கள். 

இரண்டு அணிகளுமே வலுவானவை என்பதால், இன்று ரசிகர்களுக்கு ஒரு தரமான போட்டி காத்திருக்கிறது. ரோஹித் ஷர்மா ஏற்கெனவே இரண்டு ஐபிஎல் கோப்பைகளைத் தூக்கியவர். இப்போது மூன்றாவது முறையாக கோப்பையை தூக்க ஆவலுடன் இருக்கிறார். மும்பை அவரது மண். சிங்கத்தை அதன் குகையில் ஸ்மித் வீழ்த்துவாரா என்பதை அறிய இன்னும் சில மணி நேரங்கள் காத்திருப்போம்.

ஆடும் லெவன் - கணிப்பு 

புனே  :-

அஜிங்கியா ரஹானே, ராகுல் திரிபாதி, ஸ்டீவன் ஸ்மித், மகேந்திர சிங் தோனி, டேனியல் கிறிஸ்டியன், மனோஜ் திவாரி, ஃபெர்குசான், வாஷிங்டன் சுந்தர், ஆடம் ஜாம்பா, ஜெயதேவ் உனத்கட், ஷர்துல் தாகூர் 

மும்பை இந்தியன்ஸ் : -

லெண்டில் சிம்மன்ஸ், பார்த்தீவ் படேல், ரோஹித் ஷர்மா, அம்பட்டி ராயுடு, பொல்லார்டு, க்ரூனால் பாண்டியா, ஹர்டிக் பாண்டியா, ஹர்பஜன் சிங், மிச்சேல் மெக்லாகன், லசித் மலிங்கா, ஜஸ்ப்ரிட் பும்ரா.

http://www.vikatan.com/news/sports/89472-without-stokes-and-tahir-can-pune-win-mumbai-today.html

Rising Pune Supergiant 13/2 (2.3/20 ov)

  • தொடங்கியவர்

கடைசி 2 ஓவரில் 41 ரன்கள் குவிப்பு: மும்பை வெற்றிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது புனே

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் குவாலிபையர் 1-ல் மும்பை அணியின் வெற்றிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது புனே.

 
 
 
 
கடைசி 2 ஓவரில் 41 ரன்கள் குவிப்பு: மும்பை வெற்றிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது புனே
 
ஐ.பி.எல். தொடரின் லீக் ஆட்டத்திற்குப் பிறகு புள்ளிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இடத்தையும், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் 2-வது இடத்தையும் பிடித்தது. இரு அணிகளுக்கு இடையிலான குவாலிபையர்-1 ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் ரகானே, திரிபாதி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தொடக்கமே புனே அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரின் கடைசி பந்தில் திரிபாதி டக்அவுட் ஆனார். 2-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஸ்மித் 1 ரன்னில் ஆட்டம் இழந்தனர். இதனால் 9 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்து புனே தத்தளித்தது.

201705162205103604_dhoni03-s._L_styvpf.g
போல்டாகிய திரிபாதி

3-வது விக்கெட்டுக்கு ரகானேவுடன் மனோஜ் திவாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். ரகானே 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது. அடுத்து திவாரியுடன் டோனி ஜோடி சேர்ந்தார்.

டோனி முதலில் நிதானமாக விளையாடினார். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் இணைந்து அதிரடி காட்ட, ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

டோனி 26 பந்தில் 5 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். திவாரி 48 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ரன்அவுட் ஆனார். 19-வது ஓவரை மெக்கிளெனகன் வீசினார். இந்த ஓவரில் டோனி 2 சிக்ஸரும், திவாரி ஒரு சிக்ஸும், பவுண்டரியும் அடித்தனர். இதனால் 26 ரன்கள் கிடைத்தது.

201705162205103604_dhoni01-s._L_styvpf.g
புனே அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்த டோனி, திவாரி

பும்ப்ரா வீசிய கடைசி ஓவரில் டோனி இரண்டு சிக்ஸ் விளாசினார். இந்த ஒவரில் 15 ரன்கள் சேர்த்தனர். கடைசி இரண்டு ஓவரில் மட்டும் 41 ரன்கள் சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/16220509/1085613/IPL-pune-163-runs-targets-to-mumbai-indians-win.vpf

  • தொடங்கியவர்
பத்தாவது ஐ.பி.எல்.,: பைனலுக்கு முன்னேறியது புனே
  • தொடங்கியவர்

மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்

 

மும்பை இந்தியன்ஸை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் அணி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

 
மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்
 
ஐ.பி.எல். சீசன் 10-ன் முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய புனே அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 162 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்டசமாக மனோஜ் திவாரி 58 (48) ரன்களும், ரஹானே 56 (43) ரன்களும், தோணி 40 (26) ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சிம்மன்ஸ் - பார்த்திவ் படேல் முதலில் அதிரடி காட்டினர். இந்த ஜோடி 35 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ஆட்டத்தின் 4வது ஓவரின் போது தாகூர் வீசிய ஓவரில் அவரிடமே ரன் அவுட்டாகி வெளியேறினார் சிம்மன்ஸ் 5 (13).
201705162354103147_rps1._L_styvpf.gif
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரோகித் சர்மா 1 (2), ராயுடு 0 (3), பொல்லார்டு 7 (10) ஆகிய மூன்று முக்கிய வீரர்களை தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் வீழத்த அணியின் போக்கே மாறியது. அடுத்த வந்த ஹர்திக் பாண்டியா 14 (10) ரன்களும், குரூனல் பாண்டியா 15 (11) ரன்களும் எடுத்து வெளியேறினர்.

மறுமுனையில் தனது அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோரை உயர்த்திய பார்த்திவ் படேல் 40 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 52 ரன்களை சேர்த்திருந்த போது தாகூர் பந்தில் கிறிஸ்டியனிடம் கேட்ச் கொடுத்து வெளியேற மும்பை அணியின் தோல்வி உறுதியானது.
201705162354103147_rps3._L_styvpf.gif
இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து புனே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றது.

நாளை கொல்கத்தா - ஐதராபாத் இடையே எலிமினேட்டர் ஆட்டம் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி வருகிற 19-ஆம்தேதி மும்பையுடன் தகுதிச்சுற்றுப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வருகிற 21-ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் புனேவை சந்திக்கும்.
  • தொடங்கியவர்

5 சிக்சர்களுடன் தோனி அதிரடி; வாஷிங்டன் சுந்தர் அபாரம்: இறுதியில் புனே

 

 
 
ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி | படம்: விவேக் பந்த்ரே
ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி | படம்: விவேக் பந்த்ரே
 
 

மும்பை அணியை வீழ்த்தி ஐபிஎல் முதல் பிளே ஆப் போட்டியில் வெற்றி பெற்ற ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

முதலில் பேட் செய்த புனே அணி மனோஜ் திவாரி தோனி ஆகியோரது அபாரமான ஆட்டத்தினால் 162 ரன்கள் எடுத்தது, தொடர்ந்து ஆடிய மும்பை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து தோல்வி தழுவியது. இதனையடுத்து மும்பை அணிக்கு இன்னொரு பிளே ஆப் வாய்ப்பு உள்ளது, அதில் வென்றால் மீண்டும் புனே அணியை இறுதியில் சந்திக்கலாம்.

கடைசி 2 ஓவர்களில் தோனி அதிரடியினால் 41 ரன்களை விளாசியது புனே சூப்பர் ஜெயண்ட்ஸ், இதுவே மும்பை தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

நடுவர் பிழையால் ரோஹித் சர்மா அவுட்:

கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ந்து ஸ்பின் பந்து வீச்சில் ஆட்டமிழப்பது வாடிக்கையாகியுள்ளது. ஆனால் நேற்று ஆஃப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று லெந்த்தை தவறாகக் கணித்து ஸ்வீப் ஆடினார், ஆனால் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு சென்றது. புனே அணி, வாஷிங்டன் சுந்தர் அப்பீல் செய்ய நடுவர் கையை உயர்த்தினார், தவறான தீர்ப்பு மும்பையின் தோல்விக்கு இட்டுச் சென்றுள்ளது என்றால் மிகையாகாது.

ஆனால், பார்த்திவ் படேல் அருமையாக ஆடி வந்த போது, ஸ்கோரும் இலக்கை எட்டுவதற்கு இணங்கவே சென்று கொண்டிருந்த போது இத்தகைய தருணத்தில் ரோஹித் சர்மாவின் ஷாட் தேர்வு கடும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. ஆனால் பொதுவாகவே ஐபிஎல் கிரிக்கெட்டில் சில ஷாட் தேர்வுகள், சில மோசமான பந்துவீச்சுகள், சில மோசமான களவியூகங்கள் பற்றி சந்தேகங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. இம்முறை இன்சைடு எட்ஜில் ரோஹித் சர்மா அவுட் கொடுக்கப்பட்டாலும், அந்தத் தருணத்தில் அத்தகைய ஷாட் தேர்வு ஏன் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

ரோஹித்திற்கு நடுவரின் மோசமான தீர்ப்பினால் இவர் ஆட்டமிழந்த அதே ஓவரில் அம்பாத்தி ராயுடு ரன் எடுக்காமல் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார், இன்னொரு முக்கியத் திருப்பமாக வாஷிங்டன் சுந்தர், கெய்ரன் பொலார்டை வீழ்த்தினார். அதன் பிறகு மும்பையின் வாய்ப்பு பற்றி பேச ஒன்றுமில்லை. 162 ரன்களை புனே அணி மிகவும் சவுகரியமாகவே வெற்றியாக மாற்றிக் கொண்டது என்றே கூற வேண்டும்.

குட் லெந்த்தையும் தாண்டிய ஃபுல் லெந்த் பந்துகளை ஸ்டம்புக்கு நேராக வீசிய வாஷிங்டன் சுந்தரின் பந்து வீச்சு பிட்சின் மந்தமான தன்மையினால் ஆடுவதற்கு மேலும் கடினமாக அமைந்தது. மேலும் அவர் பந்துகள் சற்றே வேகம் கூடுதலாக அமைந்ததால் பேட்ஸ்மென்கள் தூக்கி அடிக்க முடியவில்லை. இதனையடுத்து அவர் 4 ஓவர்களில் 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

ரஹானே, திவாரி, தோனி அபாரம்:

மும்பையினால் பேட் செய்ய அழைக்கப்பட்ட புனே அணிக்கு வழக்கமான தொடக்கம் கிடைக்கவில்லை. ராகுல் திரிபாதி ரன் எடுக்காமல் பிளிக் ஆட முயன்று மெக்லெனகன் பந்தில் பவுல்டு ஆனார்.

ஹர்திக் பாண்டியா பந்தில் முன் விளிம்பில் பட கேட்ச் கொடுத்து 1 ரன்னில் வெளியேறினார் ஸ்மித்.

அதன் பிறகு ரன் வருவது மிகவும் கடினமாக அமைந்தது. 10 பந்துகளில் 3 ரன்கள் என்று புனே அணி திணறியது. ஆனால் ரஹானே, திவாரி விக்கெட்டுகளை விடாமல் பொறுப்புடன் நிதானமாகவும் அதே வேளையில் பந்தை அடிக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் அடித்தும் ஆடினர். கரண் சர்மா, குருணால் பாண்டியாவை அடிப்பது மிகக் கடினமாக அமைந்தது.

ரஹானே திணறினாலும் 43 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 56 ரன்கள் எடுக்க, திவாரியும், ரஹானேயும் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 80 ரன்களைச் சேர்த்த போது ரஹானே கரண் சர்மாவிடம் எல்.பி. ஆகி வெளியேறினார். 12.4 ஓவர்களில் 89/3 என்று இருந்தது. அதன் பிறகு தோனி இறங்கினார், முதலில் ஒரு அபாரமான சிக்சரை அடித்தார், ஆனால் அதன் பிறகு ரன்கள் வரத்து குறைவாகவே இருந்தது. 18 ஓவர்கள் முடிவில் 121/3 என்று இருந்தது.

19-வது ஓவரில் மெக்லெனகன் பந்துகளை மனோஜ் திவாரி, தோனி பதம் பார்த்தனர், முதலில் பீமர் நோ-பால் பவுண்டரி ஆனது. இது திவாரியின் அரைசதமாகவும் அமைந்தது. பிறகு நேராக ஒரு சிக்சர். சிங்கிள் எடுத்து தோனியிடம் ஸ்ட்ரைக்கைக் கொடுக்க தோனி கிரீசிற்குள் நன்றாக உள்ளே நின்ற படி மிட்விக்கெட் மீது ஒரே தூக்கு தூக்கினார் பந்து சிக்ஸ். அதன் பிறகு 2 வைடுகள், பிறகு கடைசி பந்தில் தோனி மீண்டும் ஒரு சிக்சர் அடிக்க இந்த ஓவரில் 26 ரன்கள் விளாசல். 3 ஓவர்களில் 20 ரன்கள் என்றிருந்த மெக்லனகன் கடைசியில் 4 ஓவர்களில் 46 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

20-வது ஓவரில் பும்ரா வீச தோனி பும்ராவுக்கு எதிராக தன் முதல் சிக்சரை விளாசினார். மீண்டும் நேராக ஒரு சிக்ஸ். கடைசி பந்தில் திவாரி ரன் அவுட் ஆனார். கடைசி 2 ஓவர்களில் 41 ரன்கள் வர புனே அணி 162 ரன்கள் எடுத்தது. மனோஜ் திவாரி 48 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 58 ரன்களை எடுக்க, தோனி 26 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 40 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

இந்தப் பிட்சில் அது தடுக்கக் கூடிய ஸ்கோர் அல்ல என்றாலும் புனே அணி அபார வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் லெண்டில் சிம்மன்ஸ் 5 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். பார்த்திவ் படேல் அற்புதமாக ஆடினார். முதலில் வாஷிங்டன் சுந்தரை மிட்விக்கெட்டில் சிக்ஸ் தூக்கினார். உனட்கட் வீசிய மார்புயர பவுன்சரை டீப் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸ் அடித்தார். பெர்குசனை லெக் திசையில் அடித்த சிக்ஸ் ஆடம் கில்கிறிஸ்டின் துல்லியத்தை நினைவூட்டியது.

பார்த்திவ் படேல் 40 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 52 ரன்கள் எடுத்து 7-வது விக்கெட்டாக ஸ்கோர் 103 ஆக இருந்த போது வெளியேறினார். மெக்லெனகன், குருணால் பாண்டியாவை தாக்குர் வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா 1 பவுண்டரி 1 சிக்சருடன் 14 ரன்களில் வெளியேறினார். கடைசியில் பும்ரா 11 ரன்கள் எடுக்க மலிங்கா 7 ரன்கள் எடுக்க 20 ஒவர்களில் 142/9 என்று மும்பை முடிந்தது.

ஆட்ட நாயகன் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், தாக்குர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

http://tamil.thehindu.com/sports/5-சிக்சர்களுடன்-தோனி-அதிரடி-வாஷிங்டன்-சுந்தர்-அபாரம்-இறுதியில்-புனே/article9702769.ece

  • தொடங்கியவர்

பிளே ஆப் தகுதி சுற்றில் நுழைவது யார்? - கொல்கத்தா - ஹைதராபாத் இன்று மோதல்

 

 
கவுதம் காம்பீர், டேவிட் வார்னர்
கவுதம் காம்பீர், டேவிட் வார்னர்
 
 

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் இருமுறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் தோல்வியடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி தகுதி சுற்று 2-ல் விளையாட தகுதி பெறும்.

கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி லீக் ஆட்டங்களின் முதற்கட்டத்தில் அதிரடி வெற்றிகளை குவித்தது. ஆனால் பிற்பாதியில் 7 ஆட்டங்களில் 4-ல் தோல்வியை சந்தித்தது.

காயம் குணமடைந்த நிலையில் அணிக்கு திரும்பி உள்ள அதிரடி வீரரான கிறிஸ் லின் கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களில் இரு அரை சதங்கள் அடித்துள்ளார். அதிலும் பெங்களூரு அணிக்கு எதிராக 22 பந்துகளில் 50 ரன்களும், பஞ்சாப் அணிக்கு எதிராக 52 பந்துகளில் 84 ரன்களும் விளாசியிருந்தார்.

விதிவிலக்கான தொடக்கத்தை அளிக்கும் சுனில் நரேன் கடந்த சில ஆட்டங்களில் கைகொடுக்க தவறினார். பெங்களூரு மைதானத் தில் அவர், 15 பந்துகளில் அரை சதம் அடித்து ஏற்கெனவே சாதனை படைத்துள்ளார். இதனால் சுனில் நரேன் மீண்டும் அசத்த வாய்ப்புள்ளது.

காம்பீர் இந்த சீசனில் 454 ரன்கள் குவித்துள்ளார். அதிக ரன் குவித்துள்ளவர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும் என கருதப்படுகிறது. பேட்டிங்கில் 5 அரை சதங்கள் அடித்துள்ள ராபின் உத்தப்பாவும் பலம் சேர்ப்பவராக உள்ளார். இந்த சீசனில் அவர் 386 ரன்கள் சேர்த்துள்ளார்.

பேட்டிங்கில் அவர் சிறப்பாக செயல்பட்டாலும் விக்கெட் கீப்பிங்கில் சில சமயங்களில் சோடை போகிறார். மும்பை அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் நல்ல பார்மில் இருந்த அம்பாட்டி ராயடுவின் கேட்ச்சை உத்தப்பா தவறவிட்டார். இதனால் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

மணீஷ் பாண்டே இந்த சீசனில் 396 ரன்கள் சேர்த்துள்ள போதும் ஒரு சில ஆட்டங்களிலேயே அவர் அதிரடியாக விளையாடினார். அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டிய சில ஆட்டங்களில் மணீஷ் பாண்டே பந்துகளுக்கு நிகராக ரன் சேர்த்து கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தினார்.

இதனால் கொல்கத்தா அணி சில சமயங்களில் தோல்விகளை சந்திக்க நேரிட்டது. தற்போது முக்கியமான கட்டத்தில் கொல்கத்தா அணி உள்ள தால் மணீஷ் பாண்டே பொறுப்புடன் செயல்படக்கூடும். அதிரடி வீரரான யூசுப் பதானுக்கு இந்த சீசன் சிறப் பானதாக அமையவில்லை.

இந்த சீசனில் அவர் 14 ஆட்டங்களில் ஒரு அரைசதத்துடன் வெறும் 143 ரன்களே சேர்த்துள்ளார். இதனால் ரன்கள் சேர்க்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார் யூசுப் பதான். பந்து வீச்சில் 17 விக்கெட்கள் வீழ்த்தி உள்ள கிறிஸ் வோக்ஸ், 14 விக்கெட்கள் கைப்பற்றி உள்ள உமேஷ் யாதவ் ஆகியோர் எதிரணிக்கு நெருக்கடி தரக்கூடும்.

நடப்பு சாம்பியனான டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதரா பாத் அணி 14 லீக் ஆட்டங்களில் விளையாடி 17 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்திருந்தது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியிருந்தது.

இந்த சீசனில் 604 ரன்கள் குவித்துள்ள வார்னர், 468 ரன்கள் சேர்த்துள்ள ஷிகர் தவண் ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும் என கருதப்படுகிறது.

கடந்த சீசனில் அணி பட்டம் வென்றதில் முக்கிய பங்கு வகித்த வார்னர், இந்த சீசனிலும் அணியை திறம்பட வழிநடத்தி வருகிறார். பேட்டிங்கை வலுப்படுத்தும் விதமாக இன்றைய ஆட்டத்தில் முகமது நபி நீக்கப்பட்டு வில்லியம்சன் களமிறக்கப்படக்கூடும்.

ஹென்ரிக்ஸ், விஜய் சங்கர் ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர். கடந்த ஆட்டத்தில் காயம் காரணமாக களமிறங்காத யுவராஜ் சிங் இன்று களமிறங்கக்கூடும். யுவராஜ் சிங் இந்த சீசனில் 11 ஆட்டத்தில் 2 அரை சதங்களுடன் 243 ரன்கள் சேர்த்துள் ளார்.

பேட்டிங்கை விடவும் அணியின் பந்து வீச்சு அபார பலத்துடன் உள்ளது. 13 ஆட்டத்தில் 25 விக்கெட்கள் வேட்டையாடி உள்ள புவனேஷ்வர் குமார் வெற்றி தேடிக்கொடுப்பவராக திகழ்கிறார். அவருக்கு உறுதுணையாக இளம் வீரர்களான முகமது சிராஜ், சித்தார்த் கவுல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முகமது சிராஜ் 4 விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். சித்தார்த் கவுல் இந்த சீசனில் 16 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளார். சுழற்பந்து வீச்சில் 17 விக்கெட்கள் கைப்பற்றி உள்ள ரஷித் கானும் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க தயாராக உள்ளார்.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தகுதி சுற்று 2-ல் விளையாட தகுதி பெறும். அதாவது எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி 19-ம் தேதி நடைபெறும் தகுதி சுற்று 2-ல், முதல் தகுதி சுற்றில் தோல்வியடைந்த அணியுடன் பலப்பரீட்சை நடத்தும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்குள் 2-வது அணியாக நுழையும்.

அணிகள் விவரம்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

கவுதம் காம்பீர் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டேரன் பிராவோ, பியூஸ் சாவ்லா, நாதன் கவுல்டர் நைல், ரிஷி தவண், சயன் கோஷ், ஷெல்டன் ஜேக்சன், இஷாங்க் ஜக்கி, குல்தீப் யாதவ், கிறிஸ் லின், சுனில் நரேன், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ரோவ்மான் பொவல், அங்கித் ராஜ்புத், சஞ்ஜெய் யாதவ், ஷாகிப் அல் ஹசன், ராபின் உத்தப்பா, கிறிஸ் வோக்ஸ், சூர்ய குமார் யாதவ், உமேஷ் யாதவ்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்:

டேவிட் வார்னர் (கேப்டன்), தன்மே அகர்வால், வில்லியம்சன், யுவராஜ் சிங், ரிக்கி புயி, பிபுல் சர்மா, பென் கட்டிங், ஷிகர் தவண், திவேதி, மொயிசஸ் ஹென்ரிக்ஸ், தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டான், சித்தார்த் கவுல், புவனேஷ்வர் குமார், பென் லாக்லின், அபிமன்யு மிதுன், முகமது நபி, முகமது சிராஜ், முஸ்டாபிஜூர் ரஹ்மான், ஆஷிஸ் நெஹ்ரா, நமன் ஓஜா, ரஷித் கான், விஜய் சங்கர், பரிந்தர் ஷரன், பிரவீண் தாம்பே.

நேரம்: இரவு 8, இடம்: பெங்களூரு

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

http://tamil.thehindu.com/sports/பிளே-ஆப்-தகுதி-சுற்றில்-நுழைவது-யார்-கொல்கத்தா-ஹைதராபாத்-இன்று-மோதல்/article9703146.ece

  • தொடங்கியவர்
 

அந்த 5 சிக்ஸர்கள்... வான்கடேவில் 'வாவ்' தோனி! #MSDhoni #IPLFinal

 
 

எல்லோருக்கும் கரியரில் வீழ்ச்சிவரும். `இனி அவ்வளவுதான், ஒதுங்குங்க ப்ளீஸ்!' என ஒரு பெருங்கூட்டம் கத்தினாலும், அத்தனை அழுத்தங்களையும் மீறி, மீண்டும் வெற்றியாளராக நிற்பது, சாதாரண விஷயம் அல்ல. அப்படி நிற்பவர்கள், சாதாரண வீரர்கள் அல்ல... சாம்பியன்கள். ஆனால் தோனி, சாம்பியன்களின் சாம்பியன்! 

`எத்தனை போட்டிகளில் ரன்கள் குவிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல. எந்தப் போட்டியில், எந்தச் சமயத்தில் அணிக்குத் தேவையான ரன்களைக் கச்சிதமாக எடுக்கிறோம் என்பதுதான் முக்கியம்' - இதுதான் தோனியின் வெற்றி ரகசியம். ரன்களோ, சராசரியோ, ஸ்ட்ரைக் ரேட்டோ, சதங்களோ, அரைச் சதங்களோ எப்போதும் வரலாற்றில் பேசப்பட்டுக்கொண்டே இருக்காது. ஆனால், வெற்றி என்பது பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும். 

இந்த சீஸனில் தோனியின் ஆட்டம் அப்படி ஒன்றும் மெச்சத்தக்கதாக இல்லைதான். அவரைவிட இளம் வீரர்கள் மைதானங்களில் பொளந்துகட்டுகிறார்கள். ரிஷப் பன்ட், ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன் வெளுக்கும் சிக்ஸர்கள், இந்தியாவுக்கு நம்பகமான வீரர்கள் கிடைக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன. ஆனால், தோனிக்கும் மற்ற இளம் வீரர்களுக்கும் இடையேயான ஒரு சிறிய வித்தியாசம், அவர்கள் சாதனையாளர்கள். தோனி சாதனை புரிவதில் சாதனையாளர். அனுபவம் வாய்ந்த டீம் பிளேயர்.

தோனி

இந்தியா, கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து 85 ஆண்டுகள் ஆகின்றன. ஒருநாள் கிரிக்கெட்டில் கால் பதித்து 43 ஆண்டுகள் ஆகின்றன. கண் மூடி திறப்பதற்குள் ஐபிஎல் ஆரம்பித்துப் பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன. தான் சார்ந்த அணிக்காக அதிக முறை முக்கியமான தொடர்களில் அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில் ஆடிய ஒரே வீரர் தோனி மட்டும்தான். உலகிலேயே  டி20 லீக் தொடர்களில் ஓர் அணி தொடர்ச்சியாக எட்டு முறை பிளே ஆஃப் சென்றுள்ளது எனச் சொன்னால், இன்னமும் கிரிக்கெட் உலகம் நம்பமுடியாமல் மிரள்கிறது. அந்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ். அந்த அணியின் தலைவன் மகேந்திர சிங் தோனி.

பொதுவாக, `தோனிக்கு அதிர்ஷ்டம் உண்டு. அதனால் அவர் ஜெயிக்கிறார்' எனச் சிலர் பேசுவதுண்டு. இருக்கலாம். ஆனால், ஒரு மனிதனுக்குத் தொடர்ச்சியாக அதிர்ஷ்டம் அடித்துக்கொண்டே இருக்காது. ஒருவனின் கடும் உழைப்பில் கிடைத்த வெற்றியை அதிர்ஷ்டம் எனச் சொல்லி கடந்துபோவதைப் போன்ற அபத்தம் உலகில் வேறு எதுவுமே இல்லை. 

தனது அணியை எட்டு முறை பிளே ஆஃப் சுற்றுக்கும், ஆறு முறை ஃபைனலுக்கும் அழைத்துச் சென்று சரித்திரம் படைத்த தோனி, நேற்று மற்றுமொரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். ஐபிஎல் வரலாற்றிலேயே ஏழாவது முறையாக ஃபைனலில் ஆடப்போகும் ஒரே வீரர் தோனிதான். இந்த சீஸனில் புனே அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றது ஸ்டீவன் ஸ்மித்தான். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. குறிப்பாக, நேற்றைய ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித்தின் ஃபீல்டிங் வியூகங்களும் பெளலர்களைப் பயன்படுத்திய விதமும் அருமை.

அதே சமயம், நேற்று தோனி ஆடிய இன்னிங்ஸ் க்ளாஸ்! மும்பை வான்கடே மைதானம் பேட்டிங் டிராக். ஆனால், மும்பையில் காற்றில் தொடர்ச்சியாக ஈரப்பதம் அதிகமாக இருந்ததாலும், லேசான பனிப்பொழிவு இருந்ததாலும் சற்றே ஸ்லோ பிட்சாக மாறியது. இதனால் பந்துவீச்சாளர்கள் எந்த வேகத்தில் வீசுகிறார்கள் என்பதைக் கணித்து அதற்கேற்ப மட்டையைச் சுழற்றுவது அத்தனை பேட்ஸ்மேன்களுக்கும் கடினமாக இருந்தது. புனே பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, ஸ்கோர் 140-ஐ தொடுமா என்றே சந்தேகம் இருந்தது. மும்பை, சேஸிங்கில் சிறந்த அணி. 180-க்கு மேற்பட்ட இலக்கு என்றால்தான் சமாளிக்க முடியும் என்ற நிலை. ஆனால், பேட்டில் பட்டால் கேட்ச், விட்டால் விக்கெட்டுகள் தெறிக்கும் என்ற நிலையில் 13-வது ஓவரில் களத்தில் காலடி எடுத்துவைத்தார் தோனி. பந்துகள் கனெக்ட் ஆகவில்லை. பெளண்டரிகள் விளாச ஆசைப்பட்ட தோனி, விரக்தி அடைந்தார். ஆனால் நம்பிக்கை இழக்கவில்லை. தான் இறுதி ஓவர்களில் களத்தில் நின்றால், நிச்சயம் எதிர் அணி பெளலர்கள் தவறு செய்யக்கூடும் என்பதைப் புரிந்துவைத்திருந்தார். 

18 ஓவர்கள் முடிவில் புனே அணியின் ஸ்கோர் 121/3. இது தாக்குதலுக்கான நேரம் என்பதை உணர்ந்த தோனி, தடாலடியாக முதல் கியரிலிருந்து ஐந்தாவது கியருக்கு மாற்றினார். 17 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த தோனி அடுத்தடுத்த பந்துகளில் வெடித்தார். 19-வது ஓவரின் முதல் பந்தை மெக்லாகன் தவறாக ஃபுல் டாஸாக வீச, அப்போது ஸ்ட்ரைக்கில் இருந்த மனோஜ் திவாரி அட்டகாசமாக ஒரு பெளண்டரி அடித்தார். ப்ரீஹிட்டில் ஒரு சிக்ஸர் விளாசினார். இரண்டாவது  பந்தில் ஒரு ரன் ஓடினார். மூன்றாவது  பந்தை தோனி சந்தித்தார். ஜஸ்ட் மிஸ். 

தோனி

நான்காவது பந்தை லெங்த் பாலாக வீசினார் மெக்லாகன். பின்காலில் முழு சக்தியைத் திரட்டி நின்று, செம சிக்ஸர் ஆடினார். தோனி அதிரடி மூடுக்கு வந்துவிட்டதைத் தெரிந்துகொண்ட மெக்லாகன், அடுத்த இரண்டு பந்துகளைப்  பதற்றத்தில்  வைடாக வீசினார். ஆறாவது பந்தை அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப்  பகுதியில் வீசினார் மெக்லாகன். பொதுவாக கவர் டிரைவ், தேர்ட் மேன் போன்ற பகுதிகளில் அதிகமாக சிக்ஸர் அடிக்க மாட்டார் தோனி. ஆகவே, அது தோனியைக் கட்டுப்படுத்தும்வண்ணம் வீசப்பட்ட அற்புதமான பந்து. ஆனால், இறுதி ஓவர்கள் என்றால் தோனி அற்புதமான பிளேயர் ஆயிற்றே. சும்மா இருப்பாரா?  நேராக  அட்டகாசமான ஒரு ஷாட் ஆடினார். லாங் ஆஃபில் இருந்த ரோஹித் ஷர்மாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படியொரு பந்தில் நேராக சிக்ஸர் அடிக்க தோனியால் மட்டுமே முடியும். அடுத்தடுத்த இரண்டு சிக்ஸர்களால் மைதானத்தில் ரசிகர்கள் உற்சாகமானார்கள். 

சொந்த மண்ணில், சொந்த அணிக்கு எதிராக எதிர் அணி வீரர் சிக்ஸர் விளாசுவதைக் கண்டு அவர்கள் மெளனமாகவில்லை. மாறாக, `தோனி... தோனி...தோனி...' என முழங்கி ஊக்கமூட்டினர். இது மும்பை மைதானமா அல்லது சென்னை மைதானமா எனத் தெரியாத அளவுக்கு தோனி கோஷம் விண்ணைப் பிளந்தது. சச்சினும் சரி, மும்பை அணியும் சரி, சற்றே அதிர்ச்சி ஆனார்கள். இறுதி ஓவரை பும்ரா வீச வந்தார். முந்தைய போட்டியில் பும்ராவின்  பந்தை தோனி சந்தித்தபோது ஸ்டம்புகள் தெறித்தன. ஆனால், இந்தப் போட்டியில் பந்துகள் பறந்தன. காரணம், தோனியின் பவர் ஹிட்டிங்! 

தோனி

20-வது ஓவரின் இரண்டாவது பந்தை தோனி சந்தித்தார். நல்ல லெங்த், நல்ல வேகத்துடன் அற்புதமான ஒரு பந்தை வீசினார் பும்ரா. நிச்சயம் அது சிக்ஸருக்கு அனுப்பவேண்டிய பந்து அல்ல. ஆனால், அந்தப் பந்து கவர் திசையில் எல்லைக்கோட்டைத் தாண்டி விழுந்தது. காரணம் தோனி. முந்தைய மூன்று சிக்ஸர்களைவிடவும் இது செம ஷாட். அடுத்த பந்தில் நம்பவே முடியாத வகையில் இரண்டு ரன்கள் எடுத்தார். அடுத்த பந்தை தோனியின் நெஞ்சுக்கு குறிவைத்தார் பும்ரா. இந்த முறை நேர் திசையில் ஒரு மாஸ்டர் சிக்ஸ். அதற்கு அடுத்த இரண்டு பந்துகளை பும்ரா யார்க்கரில் மடக்கினார். ஹெலிகாப்டர் ஷாட் கிங்கை கடைசி இரண்டு பந்துகளில் கட்டுப்படுத்தியது அபாரம். வெல்டன் பும்ரா. 

 

இப்போதைக்கு அந்த ஐந்து சிக்ஸர்களை மறப்பது கடினம். ஏனெனில், எல்லாமே 'வாவ்' ஷாட். 

http://www.vikatan.com/news/sports/89561-dhoni-power-hit-makes-way-for-pune-into-final.html

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். எலிமினேட்டர் சுற்று: கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 129 ரன்கள் இலக்கு வைத்தது ஐதராபாத்

 

பெங்களூரில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

 
 
ஐ.பி.எல். எலிமினேட்டர் சுற்று: கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 129 ரன்கள் இலக்கு வைத்தது ஐதராபாத்
 
பெங்களூரு:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) ஆட்டம் பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில், லீக் போட்டிகளின் முடிவில், புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஐதராபாத் சன் ரைசர்ஸ், 4-வது இடம் பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதனால் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பெங்களூருவில் 19-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் விளையாடும். தோற்கும் அணி போட்டியை விட்டு வெளியேற வேண்டும் என்பதால், ஐதராபாத் அணி கவனமாக ஆடியது.

துவக்க வீரர்களாக கேப்டன் வார்னர்- ஷிகர் தவான் களமிறங்கினர். இந்த ஜோடி 25 ரன்கள் சேர்த்த நிலையில், முதல் விக்கெட் விழுந்தது. 11 ரன்கள் எடுத்த ஷிகர் தவான், உமேஷ் யாதவ் பந்தில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் வில்லியம்சன் 26 பந்துகளில் 24 ரன்களிலும், வார்னர் 35 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தும் ஆட்டமிழந்தனர். 10 ஓவர்களைக் கடந்தபிறகும் அடித்து ஆடாததால் ரன்ரேட் குறைந்தது.

201705172209509184_sdhbfj._L_styvpf.gif

காயத்துடன் ஆடிய யுவராஜ் சிங், 9 பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 9 ரன்கள் மட்டுமே அடித்தார். தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் 17 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 22 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார், ஜோர்டான் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஓஜா 16 ரன்கள் சேர்த்த நிலையில், கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் சேர்த்தது.

கொல்கத்தா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் நாதன் கோல்ட்டர் நீல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், போல்ட், சாவ்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/17220949/1085772/Kolkata-Knight-Riders-set-129-runs-target-against.vpf

ஐ.பி.எல்., கிரிக்கெட்: மழையால் ஆட்டம் பாதிப்பு

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., எலிமினேட்டர்: கோல்கட்டா வெற்றி (7 விக்கெட் வித்தியாசம்)
  • தொடங்கியவர்

ஐ.பி.எல். கிரிக்கெட் வெளியேற்றுதல் சுற்றில் கொல்கத்தா அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா அணி ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை வென்றது.

 
 
 
 
ஐ.பி.எல். கிரிக்கெட் வெளியேற்றுதல் சுற்றில் கொல்கத்தா அணி வெற்றி
 
பெங்களூரு:

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா அணி  ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை வென்றது.

10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில், லீக் ஆட்டம் முடிவில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஐதராபாத் சன் ரைசர்ஸ், 4-வது இடம் பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

கொல்கத்தா அணியில் மனிஷ் பாண்டே காயம் காரணமாக இடம் பெறவில்லை. குல்தீப் யாதவ் நீக்கப்பட்டார். சூர்யகுமார் யாதவ், நாதன் கவுல்டர் நிலே, பியுஷ் சாவ்லா, இஷாங் ஜக்கி அணியில் சேர்க்கப்பட்டனர். ஐதராபாத் அணியில் ஹென்ரிக்ஸ், முகமது நபி, முகமது சிராஜ்க்கு பதிலாக யுவராஜ்சிங், கனே வில்லியம்சன், கிறிஸ் ஜோர்டான், பிபுல் ஷர்மா ஆகியோர் இடம் பெற்றனர்.
201705180405010114_t6g05u5t._L_styvpf.gi
டாஸ் ஜெயித்த கொல்கத்தா அணி கேப்டன் கம்பீர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் ஆடிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டேவிட் வார்னர், ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தனர்.  

அணியின் ஸ்கோர் 4.2 ஓவர்களில் 25 ரன்னாக இருந்த போது தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் (11 ரன், 13 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) உமேஷ்யாதவ் பந்து வீச்சை அடித்து ஆடினார். பந்து பேட்டில் பட்டு மேல் நோக்கி கிளம்பி விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பா கையில் தஞ்சம் அடைந்தது.

அடுத்து கனே வில்லியம்சன், டேவிட் வார்னருடன் இணைந்தார். இருவரும் நிதானமாகவும், அதேநேரத்தில் நேர்த்தியாகவும் ஆடினார்கள். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) ஐதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் சேர்த்தது. 9.2 ஓவர்களில் ஐதராபாத் அணி 50 ரன்னை எட்டியது. அணியின் ஸ்கோர் 12 ஓவர்களில் 75 ரன்னை எட்டுகையில், கனே வில்லியம்சன் (24 ரன்கள், 26 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) நாதன் கவுல்டர் நிலே பந்து வீச்சில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்த ஓவரில் கேப்டன் டேவிட் வார்னர் (37 ரன்கள், 35 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன்) பியுஷ்சாவ்லா பந்து வீச்சில் போல்டு ஆகி ஏமாற்றம் அளித்தார். முன்னதாக டேவிட் வார்னர் 23 ரன்னை தொட்ட போது ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் 4 ஆயிரம் ரன்களை (114-வது ஆட்டங்களில்) கடந்த 5-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். ஏற்கனவே சுரேஷ்ரெய்னா (சென்னை, குஜராத்),   விராட்கோலி (பெங்களூரு), ரோகித் சர்மா (டெக்கான், மும்பை), கம்பீர் (டெல்லி, கொல்கத்தா) ஆகியோர் 4 ஆயிரம் ரன்களை கடந்து இருக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து விஜய் சங்கர், யுவராஜ்சிங்குடன் ஜோடி சேர்ந்தார். யுவராஜ்சிங் 9 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 9 ரன் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்து வீச்சில் பியுஷ் சாவ்லாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 15.3 ஓவர்களில் 99 ரன்னாக இருந்தது.

இதனை அடுத்து நமன் ஓஜா, விஜய் சங்கருடன் ஜோடி சேர்ந்தார். 15.4 ஓவர்களில் ஐதராபாத் அணி 100 ரன்னை தொட்டது. விஜய் சங்கர் 17 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 22 ரன்கள் எடுத்த நிலையில் நாதன் கவுல்டர் நிலே பந்து வீச்சில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அதே ஓவரில் கிறிஸ் ஜோர்டான் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். கடைசி ஓவரின் கடைசி பந்தில் நமன் ஓஜா (16 ரன்கள், 16 பந்துகளில் ஒரு சிக்சருடன்) டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் கிறிஸ் லின்னிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். கடைசி 2 பந்துகள் மீதம் இருக்கையில் மழை பெய்தாலும் ஆட்டம் தொடர்ந்து நடந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது.   பிபுல் ஷர்மா 2 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கொல்கத்தா அணி தரப்பில் நாதன் கவுல்டர் நிலே 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட், பியுஷ் சாவ்லா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.  

இந்நிலையில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி பேட்டிங் முடித்த நேரத்தில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால் சுமார் 3 மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மைதானத்தின் தன்மையையும், மழையையும் கருத்தில் கொண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 ஓவர்களில் 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று அறிவிக்கப்பட்டது.
201705180405010114_Copy%20of%2091fbiqr2.
இதனால் 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. இந்த அணி 5.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.    

எலிமினேட்டர் சுற்றில் வென்றதை அடுத்து கொல்கத்தா அணி இரண்டாவது குவாலிபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோத உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் புனே அணியுடன் களம் காணும் என்பது குறிப்பிடத்தக்கது. 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/18040459/1085782/Kolkata-Knight-Riders-won-by-7-wickets.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்.லில் 5-வது வீரர்: டேவிட் வார்னர் 4 ஆயிரம் ரன்

 

ஐ.பி.எல். குவாலிபையர் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக டேவிட் வார்னர் 37 ரன்கள் எடுத்ததன் மூலம், ஐ.பி.எல். போட்டிகளில் 4 ஆயிரம் ரன்னை எடுத்த 5-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

 
 
ஐ.பி.எல்.லில் 5-வது வீரர்: டேவிட் வார்னர் 4 ஆயிரம் ரன்
 
கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் கேப்டன் வார்னர் 37 ரன்கள் எடுத்தார். 23-வது ரன்னை எடுத்தப் போது வார்னர் ஐ.பி.எல். போட்டியில் 4 ஆயிரம் ரன்னை தொட்டார். அவர் 114 ஆட்டத்தில் விளையாடி 4014 ரன் எடுத்துள்ளார். சராசரி 40.54 ஆகும். அதிக பட்சமாக 126 ரன் குவித்து உள்ளார். 3 சதமும், 36 அரை சதமும் அடித்துள்ளார். ஸ்டிரைக்ரேட் 142.13 ஆகும்.

ஐ.பி.எல். போட்டிகளில் 4 ஆயிரம் ரன்னை எடுத்த 5-வது வீரர் வார்னர் ஆவார். இந்த ஐ.பி.எல். சீசனில் அவர் 641 ரன்களை குவித்து முதல் இடத்தில் உள்ளார்.

ஐ.பி.எல். போட்டியில் 4 ஆயிரம் ரன்னுக்கு மேல் எடுத்த வீரர்கள் வருமாறு:

201705181140292210_Untitled-1._L_styvpf.
 
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/18114026/1085825/David-Warner-reaches-landmark-of-4000-IPL-runs-during.vpf

  • தொடங்கியவர்

ஆடுகளம் குறித்து வார்னர் அதிருப்தி: பந்து வீச்சாளர்களுக்கு காம்பீர் பாராட்டு

 

ஐ.பி.எல். தொடரில் குவாலிபையர் போட்டி குறித்து ஐதராபாத்து அணி கேப்டன் டேவிட் வார்னர், அனைத்து ஐ.பி.எல். சீசனிலும் இந்த ஆடுகளம் உகந்ததாக இல்லை என தெரிவித்தார். கொல்கத்தா அணி கேப்டன் காம்பீர் பந்துவீச்சாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

 
 
ஆடுகளம் குறித்து வார்னர் அதிருப்தி: பந்து வீச்சாளர்களுக்கு காம்பீர் பாராட்டு
 
கொல்கத்தா அணியின் வெற்றி குறித்து அந்த அணி கேப்டன் காம்பீர் கூறியதாவது:-

201705181104473869_GB._L_styvpf.gif

பந்து வீச்சாளர்களின் பணி மிகவும் சிறப்பாக இருந்தது. 128 ரன்னுக்குள் ஐதராபாத் அணியை கட்டுப்படுத்தியது அற்புதமானது. பவுலர்களுக்குத்தான் பாராட்டு எல்லாம் சேரும். நம்ப முடியாத வகையில் மிகவும் அபாரமாக வீசினார்கள். இதனால் ஆட்டத்தை எங்கள் பக்கம் கொண்டு வர முடிந்தது.

இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது சவாலாக இருந்தது. 160 ரன் குவித்து இருந்தால் சிறந்த ஸ்கோராக இருந்து இருக்கும். சிறிய இலக்கில் 3 விக்கெட் போனது சிறிய ஏமாற்றம். ஆனாலும் பொறுப்புடன் ஆடி இருக்கிறோம்.

கடந்த ஐ.பி.எல். போட்டியில் எலிமினேட்டரில் நாங்கள் ஐதராபாத்திடம் தோற்றோம். இதற்கு தற்போது பதிலடி கொடுத்து வெளியேற்றி இருக்கிறோம். மும்பை இந்தியன்சுடன் இதே ஆடுகளத்தில் ‘குவாலிபையர்-2’ ஆட்டத்தில் நாளை சந்திக்கிறோம். அந்த அணிக்கு எதிராக எங்களது சாதனைகள் சிறப்பாக இருந்தது இல்லை. ஆனாலும் மும்பைக்கு எதிராக நன்றாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது குறித்து ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் கூறியதாவது:-

201705181104473869_dav%20war._L_styvpf.g

நாங்கள் 30 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது எளிது அல்ல. இந்த ஆடுகளம் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. அனைத்து ஐ.பி.எல். சீசனிலும் இந்த ஆடுகளம் உகந்ததாக இல்லை. மழையால் போட்டி பாதிக்கப்பட்டு 6 ஓவருக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 6 ஓவரை வைத்து வெற்றி பெறுவது என்பது மிகப்பெரிய சவாலே. கொல்கத்தாவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.

ஐதராபாத் அணிக்கு ஆதரவு கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/18110445/1085821/IPL-2017-KKR-skipper-gambhir-praise-to-bowlers-after.vpf

  • தொடங்கியவர்

#Eliminator1 தோல்விக்கு என்ன காரணம்... மனம் திறந்த ஹைதராபாத் பயிற்சியாளர் முரளிதரன்

 

முத்தையா முரளிதரன்

ஐபிஎல் 10-வது சீசனின் இரண்டாவது ப்ளே ஆஃப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஹைதராபாத், கொல்கத்தா அணியிடம் நேற்று மோசமாக தோல்வியடைந்தது. பெங்களூருவில் நடந்த இந்தப் போட்டியில், வலுவான பேட்டிங் ஆர்டர் கொண்ட கொல்கத்தா அணியை எதிர்கொண்டது ஹைதராபாத்.

போட்டிக்கான டாஸை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கம்பீர், மழை பெய்யும் என்று முன்பே கணித்திருந்ததால், பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய ஆரமபித்தது ஹைதராபாத். பவர் ப்ளே முடிவில், 30 ரன்கள் எடுத்து 1 விக்கெட் மட்டுமே இழந்து, ஹைதராபாத் அணிக்கு நல்ல தொடக்கத்துடனேயே போட்டி சென்று கொண்டிருந்தது. ஆனால், வழக்கமான பெங்களூரு மைதான விக்கெட் இல்லை என்று ஹைதராபாத் அணி பேட்ஸ்மேன்களுக்கு புரிய ஆரம்பித்தது. இதனால், 150 ரன் ஸ்கோரை நோக்கி அந்த அணி முன்னேறி கொண்டிருந்தது. கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் வில்லியம்சன் ஆகியோர் இடையில் 50 ரன்கள் பார்டனர்ஷிப்பால், 150 ரன் இலக்கை ஹைதராபாத் எட்டும் என்றே எண்ணப்பட்டது. ஆனால், மலமலவென விக்கெட்டுகள் விழுந்ததால், 20 ஓவர்கள் முடிவில் வெறும் 128 ரன்களுக்கு அந்த அணி சுருண்டது. இதையடுத்து, மழை குருக்கிட்டது. பின்னர், 6 ஓவர்களுக்கு போட்டி சுருக்கப்பட்டது. சுருக்கப்பட்ட போட்டியின் குறைந்த டார்கெட்டை கொல்கத்தா அணி எளிதாக எட்டியது. 

இந்நிலையில்தான் ஹைதராபாத் அணியின் பவுலிங் பயிற்சியாளரான முத்தையா முரளிதரன், தங்கள் அணியின் தோல்வி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

அவர், 'வழக்கமாக விளையாடும் பெங்களூரு ஆடுகளம் நேற்று இல்லை. அடித்து ஆடுவது மிகவும் கடினமாக இருந்தது. நாங்கள் அதிரடி காட்ட முயன்றிருந்தால், 70-80 ரன்களுக்கே சுருண்டிருப்போம். நாங்கள் ஒரு கட்டத்தில் 140 ரன்கள் எடுத்தால் போதும் என்று நினைத்தோம். ஆனால், அவர்கள் நன்றாக பந்து வீசியதால் 128 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அவர்களும் 20 ஓவர்கள் பேட்டிங் செய்திருந்திருந்தால், கண்டிப்பாக வெற்றி அடைந்திருப்போம். ஆனால், மழை வந்தது மிகவும் துரதிர்ஷ்டமானது. ஆனால், அதை ஒரு காரணமாகச் சொல்ல முடியாது. எங்கள் அனைவருக்குமே அடுத்தப் போட்டிக்கு முன்னேற முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. ஆனால், இந்த சீசனில் நாங்கள் விளையாடிய முறை பற்றி சந்தோஷப்படுகிறோம். எல்லா தடவையும் வெற்றி பெற முடியாதே' என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டார் முரளிதரன்.

http://www.vikatan.com/news/sports/89696-muralitharan-points-out-reasons-for-losing-eliminator-1-match-of-ipl-10.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.