Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதி ஓவரில் மலிங்க கூறியது என்ன? : “எனது மகன் திறமையானவர் என நினைக்கவில்லை” அசேலவின் தாய், தந்தை உருக்கம்

Featured Replies

இறுதி ஓவரில் மலிங்க கூறியது என்ன? : “எனது மகன் திறமையானவர் என நினைக்கவில்லை” அசேலவின் தாய், தந்தை உருக்கம்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியின் போது இலங்கை அணியின் அசேல குணவர்தன துடுப்பெடுத்தாடிய விதம் தொடர்பில் பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். 

இந்நிலையில் அசேல தொடர்பில் அவரின் தாய், தந்தை உருக்கமான கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

asfasfasf1.jpg

அதுமாத்திரமின்றி இறுதி தருணத்தில் மலிங்க தனக்கு எவ்வாறான ஆலோசனைகளையும், உற்சாகத்தையும் வழங்கினார் என அசேலவும் மனந்திறந்துள்ளார்.

அசேல குணவர்தன தொடர்பில் அவரது தாய், தந்தை தெரிவிக்கையில்,

தாய்,

“நேற்றுமுன்தினம் போட்டியில் வெற்றிபெற்றமையானது சொல்ல முடியாதளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது மகனை நினைத்து நான் மிகவும் சந்தோஷப்படுகின்றேன். யுத்தக்காலத்தில் நாம் போகவேண்டாம் என்று கூறியும் அவர் யுத்தத்துக்கு சென்றார். இன்று போட்டியை வெற்றிக்கொண்டு நாட்டுக்கு ராஜாவை போல் ஆகியுள்ளார்.”

தந்தை,

எனது மகன் இவ்வளவு பெரிய திறமைக்கொண்டவர் என நான் நினைக்கவில்லை.. சந்தோஷத்தை எப்படி விவரிப்பது என எனக்கு தெரியவில்லை... வீதிக்கு செல்லும் போது மக்கள் “ நாட்டுக்கு ஒரு பிள்ளையை பெற்றுள்ளீர்கள், நேற்று துடுப்பெடுத்தாய விதத்தை பாருங்கள்” என்று கூறும்போது எனது மகிழ்ச்சிக்கே அளவில்லை என்றார்.

அசேல குணவர்தன கருத்து தெரிவிக்கையில்,

போட்டியின் போது எமது அணி விக்கட்டுகளை அடுத்தடுத்து இழந்துக்கொண்டிருந்தது. 

இதன்போது நானும் சாமர கபுகெதரவும் களத்தில் நின்றோம். நாம் இன்னும் 10 ஓவர்களுக்கு ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாட வேண்டும் என்று திட்டமிட்டோம். எனினும் சாமர துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் 5 பந்துகளுக்கு 14 ஓட்டங்களை பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்போது களத்துக்கு வந்த மலிங்க என்னை உற்சாகப்படுத்தினார். எனக்கு முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

ஓட்டங்களை ஓடி பெற வேண்டாம் என்றும் தனியாளாக உன்னால் ஓட்டங்களை பெறமுடியும் என்றார்.

அதுமாத்திரமின்றி ஒவ்வொரு பந்தின்போதும் என்னை உற்சாகப்படுத்தினார். இறுதியில் 3 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில், உன்னால் அடிக்க முடியும், ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாட வேண்டும், நீ ஆட்டமிழந்தால் உன்னால் முடியாது என்று ரசிகர்கள் நினைப்பார்கள் என உற்சாகப்படுத்தியதாக” அசேல தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/16916

  • கருத்துக்கள உறவுகள்

அசேல ஆமியில் இருந்தாரா?

  • தொடங்கியவர்
4 minutes ago, ரதி said:

அசேல ஆமியில் இருந்தாரா?

Full name Downdegedara Asela Sampath Gunaratne

Born January 8, 1986, Kandy

Current age 31 years 44 days

Major teams Sri Lanka, Mohammedan Sporting Club, Sri Lanka Army Sports Club

Playing role Batsman

Batting style Right-hand bat

Bowling style Right-arm medium-fast

Height 5 ft 10 in

Education Rahula College

http://www.espncricinfo.com/srilanka/content/player/360456.html

  • கருத்துக்கள உறவுகள்

//“நேற்றுமுன்தினம் போட்டியில் வெற்றிபெற்றமையானது சொல்ல முடியாதளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது மகனை நினைத்து நான் மிகவும் சந்தோஷப்படுகின்றேன். யுத்தக்காலத்தில் நாம் போகவேண்டாம் என்று கூறியும் அவர் யுத்தத்துக்கு சென்றார். இன்று போட்டியை வெற்றிக்கொண்டு நாட்டுக்கு ராஜாவை போல் ஆகியுள்ளார்.”

இதற்கு என்ன அர்த்தம் நவீனன்

  • தொடங்கியவர்
1 minute ago, ரதி said:

Sri Lanka Army Sports Club

இந்த கிளப்பில் விளையாடி உள்ளபடியால் அவர் இருந்திருக்கத்தான் வேணும்.

இப்ப விளையாடும் புதிய வீரர்கள் பற்றிய விபரங்கள் எனக்கு தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

எதுவாக இருந்தாலும் நன்றாக விளையாடுகிறார்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

அசேல ஆமியில் இருந்தாரா?

ஓம்  அக்கோய் ....அவர் ஆர்மியில் இருந்தவர் தான்
அதுசரி முகப்புத்தகம் ,யூ டியூப் என்று சகட்டுமேனிக்கு புழுகித்தள்ளுமளவுக்கு அப்படி என்ன செய்துவிட்டார்
ஒரு சிறந்த  Finishing ,ஒரே ஒருமுறை நடந்திருக்கிறது .அதிலும் அவர் ஆமியில் இருந்ததை சொருகி போர் வெற்றியை அதனுள் நுழைத்து ..அதுக்குள்ளே இந்த நாட்டுக்கே ராஜாவாகி விட்டார் என்பதெல்லாம் ஓவர் அலப்பறை. இவரை விட ஒருகாலத்தில் ரசல் அர்னோல்ட் செய்த பினிசிங் எல்லாம் என்ன  ரகம், .
இவரே  இப்படியென்றால் அப்போ தோணி/கோலி லெவல் என்ன...?  
உலககோப்பை வென்ற போதே இந்திய அணி இந்த அளவுக்கு களேபரம் செய்யவில்லை...
அதுசரி நிறை குடம் தளும்பாது  

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

அசேல ஆமியில் இருந்தால் என்ன,புலியில் இருந்தால் என்ன<_< உந்த மட்ச்யில் விளையாடினது பிடிச்சிருக்கு...அவ்வளவு தான்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

அசேல ஆமியில் இருந்தால் என்ன,புலியில் இருந்தால் என்ன<_< உந்த மட்ச்யில் விளையாடினது பிடிச்சிருக்கு...அவ்வளவு தான்

அக்கோய் மேலே கேட்ட கேள்விகள்  எல்லாம் உங்களிடம் கேட்ட கேள்விகள் இல்லை 
அப்படியொரு விம்பம் உருவாகியிருந்தால் மன்னித்துகொள்ளுங்கோ 
இது எனக்கு தானாக தோன்றிய கேள்விகள் ......

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

அசேல ஆமியில் இருந்தால் என்ன,புலியில் இருந்தால் என்ன<_< உந்த மட்ச்யில் விளையாடினது பிடிச்சிருக்கு...அவ்வளவு தான்

பார்ரா ரதியை

ம் சரி விளையாட்டை விளையாட்டைப்பார்க்க வேணும் என்ன ரதி அப்படித்தானே

7 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அக்கோய் மேலே கேட்ட கேள்விகள்  எல்லாம் உங்களிடம் கேட்ட கேள்விகள் இல்லை 
அப்படியொரு விம்பம் உருவாகியிருந்தால் மன்னித்துகொள்ளுங்கோ 
இது எனக்கு தானாக தோன்றிய கேள்விகள் ......

நீங்கள் எதிர்த்து களமாடுவியள் என்று பார்த்தால்  பந்து வர முதலிலேயே ஓடுறியளே சீ ச் சீ 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, முனிவர் ஜீ said:

பார்ரா ரதியை

ம் சரி விளையாட்டை விளையாட்டைப்பார்க்க வேணும் என்ன ரதி அப்படித்தானே

நீங்கள் எதிர்த்து களமாடுவியள் என்று பார்த்தால்  பந்து வர முதலிலேயே ஓடுறியளே சீ ச் சீ 

எதிர்த்து களமாட இங்கே என்ன இருக்கு ஜீ ....எனது கேள்விகள் பொதுவானவை அது ரதி அக்காவுக்கல்ல ...கேள்விகளுக்கு தகுந்த பதில்களோடு யாரும் வரட்டும் எதிர்த்து களமாடலாம் ....

  • தொடங்கியவர்
On 21.2.2017 at 9:37 PM, ரதி said:

அசேல ஆமியில் இருந்தாரா?

இராணு உடையில் பிரகாசிக்கும் அசேல குணரத்ன, சீகுகே பிரசன்ன (படங்கள்)

இலங்கை கிரிக்கெட் அணி விரர்களான அசேல குணரத்ன மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் இராணுவ உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

sekkasela_01.jpg

கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கெதிரான கிரிக்கெட் தொடர்களில்  அசேல குணரத்ன மற்றும் சீக்குகே பிரசன்ன சிறப்பாக செயற்பட்டிருந்தனர்.

sekkasela_02.jpg

இதனடிப்படையில் குறித்த இருவருக்கும் இராணுவத்தால் பதவி உயர்வுகள் இன்று வழங்கப்பட்டன.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றன.

sekkasela_03.jpg

sekkasela_04.jpg

sekkasela_05.jpg

http://www.virakesari.lk/

அசேல குணவர்தன, சீக்குகே பிரசன்ன ஆகியோருக்கு பதவி உயர்வு

இலங்கை கிரிக்கெட் அணி விரர்களான அசேல குணவர்தன மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோருக்கு இராணுவத்தில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

Asela-Gunaratne.jpg

அதன்படி சீக்குகே பிரசன்னவுக்கு ஆணைப்பத்திரம் வழங்கும் அதிகாரி தரம் I , அசேல குணவர்தனவுக்கு ஆணைப்பத்திரம் வழங்கும் அதிகாரி தரம் II , ஆகிய பதவி உயர்வுகள் இராணுவத்தில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/17208

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகேடியராய் வர வாழ்த்துக்கள் loltw_dissapointed:

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்கா கிரிக்கெட் அணி உலக அரங்கில் கிரிக்கெட் விளையாடத் தகுதியற்ற அணி என்பதையே சொறீலங்கா இராணுவத்தின்.. இந்த இழிசெயல் இனங்காட்டுகிறது. உலகில் எந்த நாட்டிலும்.. இராணுவம் விளையாட்டில் தலையீடு செய்வதில்லை. சொறீலங்கா.. என்பது 2009 க்குப் பின் சொறீலங்கா சிங்கள இராணுவக் காடைகளின் கையில் தான் சிக்கிக் கிடக்கிறது. 

உலக அரங்கில்.. மோசமான மனித இனப்படுகொலைக் குற்றச்சாட்டை சுமக்கும் சொறீலங்கா இராணுவத்தைச் சேர்ந்தோரைக் கொண்ட சொறீலங்கா கிரிக்கெட் அணி உலக கிரிக்கெட்டில் விளையாட தடைவிதிக்க வேண்டும். 

இந்த புகைப்படங்களே அதற்கு போதிய சான்றாகும். 

ஈழத்தில் மட்டுமன்றி கெயிட்டி உட்பட பல நாடுகளிலும் சொறீலங்கா இராணுவம் பாலியல் துஷ்பிரயோகம் உட்பட மனித இனத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.