Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

வணக்கம்!! 

எனக்கு ஒரு சந்தேகம்.  

க் + அ = க (ka) மெய்யும் உயிரும் இணையும் போது பிறக்கும் புதிய ஒலி.  மிகச் சரியாக ஒலிக்கிறது.

ஆனால்  ச்  + அ = ச (sa) என்ற சத்தம் எப்படி வரும்?  சேர்த்து  சொல்லும் போது cha என்ற சத்தம் வருகிறது. பழைய திரையிசை பாடல்களில் ச (cha) என்ற சத்தம் வரும் உச்சரிப்புக்கள் காணப்படுகின்றன. எ.கா. சின்னம் சிறு கிளியே.. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் சிவயோகி விஸ்வா வாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம், விஸ்வா!

கேள்விகளை நாங்கள் கேட்கிறோம்...விடைகளை நீங்கள் கூறுங்கள்!

Posted

நல்வரவு விஸ்வயோகி விஸ்வா..!

ச் என்கிற ஒலி முன்னின்ற மெய்யில் வராது என்பதுதான் என் எண்ணம். ஆனால் பெருவாரியாக தமிழகத்தில் இப்படி ஒலிக்கச் செய்கிறார்கள். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் விஸ்வா... வாருங்கள் உங்களது சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படும். தங்களது கோப்பு வாத்தியாரின் மேசைக்கு நகர்த்தப் படுகிறது....! tw_blush:

தமிழில் ஒரு "ச"  தான் இருப்பது நாம் செய்த புண்ணியம். அப்படியே அந்த "ல"வும் ஒன்றே இருந்திருக்கலாம். சமஸ்கிருதம் , சிங்களத்தில் 3 ...4 சா கிடந்து மனுஷனை சாவடிக்குது....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26.2.2017 at 7:11 AM, சிவயோகி விஸ்வா said:

வணக்கம்!! 

எனக்கு ஒரு சந்தேகம்.  

க் + அ = க (ka) மெய்யும் உயிரும் இணையும் போது பிறக்கும் புதிய ஒலி.  மிகச் சரியாக ஒலிக்கிறது.

ஆனால்  ச்  + அ = ச (sa) என்ற சத்தம் எப்படி வரும்?  சேர்த்து  சொல்லும் போது cha என்ற சத்தம் வருகிறது. பழைய திரையிசை பாடல்களில் ச (cha) என்ற சத்தம் வரும் உச்சரிப்புக்கள் காணப்படுகின்றன. எ.கா. சின்னம் சிறு கிளியே.. 

நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப
எழுமணுத் திரளுரங் கண்ட முச்சி
மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின்
வெவ்வே றெழுத்தொலி யால்வரல் பிறப்பே.

இது எழுத்துக்களின் பிறப்பிற்கான பொது விதி.

நிறை உயிர் முயற்சியின் -
ஒலி எழுத்தாகிய காரியத்திற்கு வேண்டும் காரணங்களில் குறைவின்றி நிறைந்த உயிரினது முயற்சியால்  

உள் வளி துரப்ப எழும் அணுத்திரள் -
உள்ளே நின்ற ' உதானன் ' என்னும் காற்றானது எழுப்ப எழுகின்ற செவிப்புலனாம் அணுக்கூட்டம்
 உரம் , கண்டம் உச்சி மூக்கு உற்று -
மார்பும் கழுத்தும் தலையும் நாசியுமாகிய நான்கு இடத்தையும் பொருந்தி:
இதழ் , நாப்பல் அணத்தொழிலின் -
உதடும் நாக்கும் பல்லும் மேல் வாயும் ஆகிய நான்கனுடைய முயற்சிகளால் ,
வெவ்வேறு எழுத்து ஒலி ஆய்வரல் -
வேறு வேறு எழுத்தாகிய ஓசைகளாய்த் தோன்றுதல் ,
பிறப்பு -
அவற்றின் பிறப்பாம்

    க, ங - முதல்நா அண்ணத்தைத் தொடப் பிறக்கும்.
    ச, ஞ - இடைநா அண்ணத்தைத் தொடப் பிளக்கும்.
    ட, ண - நுனிநா அண்ணத்தைத் தொடப் பிறக்கும்.

இவை ஆறும் ஒருவகைப் பிறப்பு.

    த, ந - நாநுனி அண்ணமும் பல்லும் பொருந்துமிடத்தில் விரிந்து ஒற்றப் பிறக்கும்.
    ற, ன - நுனிநா மேலெழுந்து அண்ணத்தை ஒற்றப் பிறக்கும்.
    ர, ழ - நுனிநா மேலெழுந்து அண்ணத்தை வருடப் பிறக்கும்.
    ல - நாவிளிம்பு வீங்கி அண்பல்-முதலைத் தொடுகையில் அண்ணத்தை ஒற்றப் பிறக்கும்.
    ள - நாவிளிம்பு வீங்கி அண்பல்-முதலைத் தொடுகையில் அண்ணத்தை வருடப் பிறக்கும்.
    ப, ம - இதழோடு இதழ் பொருந்தப் பிறக்கும்.
    வ - பல்லும் இதழும் இயையப் பிறக்கும்.
    ய - மிடற்றில் எழுந்த ஒலி அண்ணத்தில் அடைபடும்போது பிறக்கும்.

மெல்லின எழுத்து ஆறும் மூக்கில் இசைக்கும்.

அந்த அந்த எழுத்துக்களை அந்த வகையில் உச்சரித்தால் பிழையின்றி ஒலியை உணரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, வாத்தியார் said:

வாத்தியார் அழகான விளக்கங்கள். 
நீங்கள் உண்மையில் தமிழ் பண்டிதர் தானா?

எனக்கு முழுவதுமாக விளங்கவில்லை (காரணம் நான் படித்த ஆரம்ப பள்ளி ஓரு முஸ்லீம் "பள்ளி")
அங்கு நிலைமை இப்படித்தான் இருக்கும்:
செல் என்ற செல்லுக்கு செல்ர  செல் செல்...
நான்  படித்தது  "திமில்"..
ஆனால் பிடித்தது  என்னவோ "தமிழ்" தான். :14_relaxed:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27.2.2017 at 10:14 PM, Sasi_varnam said:

வாத்தியார் அழகான விளக்கங்கள். 
நீங்கள் உண்மையில் தமிழ் பண்டிதர் தானா?

எனக்கு முழுவதுமாக விளங்கவில்லை (காரணம் நான் படித்த ஆரம்ப பள்ளி ஓரு முஸ்லீம் "பள்ளி")
அங்கு நிலைமை இப்படித்தான் இருக்கும்:
செல் என்ற செல்லுக்கு செல்ர  செல் செல்...
நான்  படித்தது  "திமில்"..
ஆனால் பிடித்தது  என்னவோ "தமிழ்" தான். :14_relaxed:

இல்லை சசி
ஆனால் தமிழில் எனக்கு ஆர்வம் அதிகம்
தெரியாததையும் தேடி அறிந்து கொள்வேன்.

பண்டிதர் சான்றிதழ் என்னிடம் இல்லை
பத்தாம் வகுப்புச் சான்றிதழ் மட்டுமே என்னிடம் உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.