Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் இணைகிறார் அனுரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் இணைகிறார் அனுரா

[வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2007, 02:25 ஈழம்] [காவலூர் சங்கீதன்]

இன்று வியாழக்கிழமை தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்ற, அமைச்சிலிருந்து பலாத்காரமாக நீக்கப்பட்ட அனுரா பண்டாரநாயக்க, நேற்றுக்காலை 11:30 மணியளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தபோது, மீண்டும் அமைச்சரவையில் இணைவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

தினேஸ் குணவர்த்தன, அலவி மௌலானா போன்றவர்களின் விசேட சந்திப்புக்களைத் தொடர்ந்து, ஜனாதிபதியை நேரில் சந்தித்த அனுரா, மீண்டும் தனது தேசிய பாரம்பரிய அமைச்சுப் பதவியை ஏற்பதற்கு இணங்கியுள்ளார்.

பிறிதொரு தகுதிவாய்ந்த அமைச்சரவை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், முன்னர் வகித்த அமைச்சை ஏற்பதற்கு அனுரா இறங்கி வந்துள்ளார்.

முன்னதாக, பதவியிலிருந்து விலத்தப்பட்ட பின்னர் பிபிசி ஊடகத்திற்கு தகவல் வழங்கியிருந்த அனுரா பண்டாரநாயக்க, பிசாசுகள் குடியிருக்கும் மகிந்த அமைச்சில் அங்கம் வகிப்பதைவிட, வெளியில் சுதந்திரமாக இருப்பது சிறந்தது என்று கருத்து வெளியிட்டிருந்தார். ஒரு சில நாட்களில் மீண்டும் அந்த பிசாசுக் கூட்டத்துடன் இணைகிறார் என்று கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், அமைச்சுப் பறிப்பின் பின்னர், நாடாளுமன்றத்தில் அரசுக்கெதிராகவும் ஜனாதிபதிக்கு எதிராகவும் அனுரா முன்வைத்த குற்றச்சாட்டுக்களை மீளப் பெற்றுக்கொள்வதாக எழுத்தில் அனுரா பண்டாரநாயக்க உறுதி வழங்க வேண்டுமென்று மாகாணசபைகளுக்கான அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் கோரிக்கை விடுத்ததார். இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டுமென, அமைச்சரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

http://www.eelampage.com/?cn=30795

தூ இது எல்லாம் ஒரு பிழைப்பு, :D:D

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சுப் பதவி என்றால் பிசாசும் வாய்திறக்கும் என்று சொல்லுங்கோ

ஏன் அப்படி தூற்றுறியல் அவன் அவன் அனுபவிச்சவனுக்குத்தான் தெரியும் வெளியேறினா ஒட்டுமொத்தமா உண்மையான எதிரியிலும் பார்க்க அந்த சண்டையில குளிர்கார வார ஆட்களால் தான் பெரும் பிரச்சனை எண்டு.

எதிரியோட பதவி சண்டை, கட்சியில உள்ள இருந்து தகவல் கொடுக்கிறவையிட வாயை அடக்க, அக்கா வர சனத்திட்ட

வாக்கு எடுக்க வேன்டி வந்தா பதவி இருந்தாத்தானே சனமும் மதிக்கும்.

ஆகவே கெட்டிக்காரன் எதற்கு இடம் கொடுக்காம தன் எதிகால அரசியல் கப்பல் கவிழ்ந்தமாதிரி கவிந்திட்டா என்ன செய்யிறது என்ற எதிர் கால திட்டங்களுடன், ஏதோ ஒரு நோக்கத்தோடு, வெருண்ட நாய் போல வாலிச்சுருட்டிக்கொண்டு அதுக்குப்பிறகு போறமாதிரி உள்ள போயிட்டார் என்றா அரசியல் சாணக்கியம் தெரிந்த கெட்டிக்காரன் தானே!!. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கை ஒரு கோதாரிவிழுந்த அரசியல் தந்திரம் கிந்திரம் ஒண்டுமில்லை.இந்த காதலர் தினத்திலை சும்மா ஓடிப்புடிச்சு விளையாடுறங்களப்பா

அமைச்சுப் பதவி என்றால் பிக்குவும் வாய்திறக்கும் என்று சொல்லுங்கோ
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 15-02-2007 13:14 மணி தமிழீழம் [செந்தமிழ்]

அனுராவுக்கு அமைச்சு

நேற்று அனுரா பண்டாரநாயக்காவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவருக்கு மீண்டும் அமைச்சு பதவியினை வழங்க மகிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்திருந்தார்

முகிந்த ராஜபக்சவின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான சிறப்பு பிரதிநிதியாக அனுரா பண்டாரநாயக்கா செயல்படுவார் என்றும் அதேவேளை முக்கிய அமைச்சு பதவி ஒன்று அவருகக்கு வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

இதனை அடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்ட ஸ்ரீபதி சூரியராட்சியும் அரசாங்கத்தில் மீண்டும் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது

எனினும் மங்கள சமரவீரவிற்கு அமைச்சு பதவியை வழங்க மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை என அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன

இன்று நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீபதி சூரியாராட்சி கலந்து கொள்வது சந்தேகமே என மங்கள சமரவீரவின் தரப்பினர் தெரிவித்துள்ளனர்

http://www.pathivu.com

anura-magin-l.jpg

அநுரா பண்டாரநாயக்க நேற்று புதன்கிழமை காலை அலரிமாளிகைக்கு சென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை சந்தித்தார். சந்திப்பின்போது மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா உற்சாகமாக ஏதோ கூறுவதைக் இங்கு காண்கிறீர்கள். ...

எப்படித்தான் சிரிக்கிறாங்களோ பாவிகள் :rolleyes::rolleyes:

சமரச முயற்சியில் முன்னேற்றம் மீண்டும் அமைச்சராகிறார் அநுரா -மங்கள, ஸ்ரீபதி கட்சிக்குள் இருந்து போராடப் போவதாக அறிவிப்பு

அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான அநுரா பண்டாரநாயக்கா, மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகிய மூவரையும் மீண்டும் இணைத்துக் கொள்வதற்கான சமரச முயற்சிகளில் முன்னேற்றம் காணப்பட்டதன் ஓரங்கமாக அடுத்த சில தினங்களில் அநுரா பண்டாரநாயக்காவுக்கு முக்கிய அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படவிருக்கும் அதேசமயம், மற்றைய இருவரும் தாங்கள் அரச தலைமைத்துவத்துடன் பேசப்போவதில்லையென்றும் கட்சிக்குள்ளிருந்து கொண்டே நியாயம் கோரி போராடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரும் மக்கள் ஐக்கிய முன்னணித் தலைவருமான தினேஷ் குணவர்த்தனா, மேல் மாகாண ஆளுநர் அலவிமௌலானா ஆகியோர் சமரச முயற்சியை மேற்கொண்டு நேற்றுக் காலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அநுரா பண்டாரநாயக்காவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

அரசாங்கத்திற்குள் தற்போது ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள், 3 பேரின் அமைச்சர் பதவி நீக்கம் தொடர்பாக தாங்கள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்ததுடன் அநுரா மீண்டும் முக்கிய அமைச்சுப் பதவியை பொறுப்பேற்பார் என்றும் கூறினார்.

அத்துடன், அநுரா பண்டாரநாயக்காவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே தனியாக சந்திப்பு இடம்பெற்றதையும் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஊர்ஜிதப்படுத்தினார்.

அத்துடன், மற்றைய இருவர் தொடர்பாக எந்த விதமான கருத்துகளும் தெரிவிக்கப்படவில்லையெனவும் ஆனாலும், எதிர்காலத்தில் இதற்கு சுமூக முடிவு ஏற்படும் என்றும் தினேஷ் குணவர்தன நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை, அநுராவுக்கு துறைமுக, கப்பல்துறை அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படவிருப்பதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

இது இவ்வாறிருக்க, ஜனாதிபதியுடன் சமரசப் பேச்சுக்கு தாங்கள் தயாராகவில்லையெனவும் அமைச்சுப் பொறுப்பை ஏற்கமாட்டோம் என்றும் மங்கள சமரவீரவும் ஸ்ரீபதி சூரியாராச்சியும் நேற்று தெரிவித்ததாக அறியவருகிறது.

அதேவேளை, அநுராவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பேச்சுவார்த்தையும் அமைச்சர் பதவியை அநுரா மீண்டும் பெற்றுக் கொள்ளவிருப்பதும் அவரின் தனிப்பட்ட விருப்பமென்றும் அது தொடர்பாக தாங்கள் தலையிடப் போவதில்லையென்றும் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

ஆனால் எக்காரணம் கொண்டும் கட்சியிலிருந்து வெளியேறப்போவதில்லையென்றும் உள்ளிருந்தே கட்சி ஜனநாயகப்போராட்டம் நடத்தப்போவதாகவும் மங்கள தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐ.தே.க., ஜே.வி.பி., தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போன்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட தீர்மானிக்கவில்லையென்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜே.வி.பி.யுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாகவோ அல்லது வேறெந்த விடயங்கள் தொடர்பிலோ பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை. நட்பு ரீதியில் அக்கட்சியினர் எம்மை வந்து சந்தித்துச் சென்றனரென்றும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்

http://www.thinakkural.com/news/2007/2/15/...s_page21353.htm

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ இந்த உசிலமணியிண்ட லொள்ளு தாங்க முடியல்லைடா சாமி. பிசாசுகள் இருக்கிற கட்சிக்குள் இருக்கிறதைவிட வெளியில் இருப்பது பெட்டர் எண்டு அறிக்கைவிட்ட உசிலமணி திரும்ப பிசாசுகள் கட்சிக்கயே சேர்ந்துட்டுதா? :angry: :angry: சிலது பிக் பிறதர் நிகழ்ச்சி பார்த்திருக்குமோ இந்த உசில மணி. :angry:

:rolleyes: அது சரி யாராவது இந்த படத்தை சேவ் பண்ணி ரொட்டெட் பண்ணி போடமுடியுமா?பண்டாவை மட்டும். அசல் செத்த பிணம் சிரிப்பது போல் இல்லையா? அவற்ற வண்டியிட பருமனுக்கு மவன் உடற்(???) பயிற்சி( ஏதாவது மெசின் இருந்தா சரி) ஒண்டும் செய்யாது, மக்களுக்கும் ஒண்டும் செய்யாது, இப்படி அந்த சியாரில இருந்து தூங்கிறது பின் அப்பப்ப எழும்பேக்க ஏதாவது பேப்பரில பார்த்துவிட்டு என்னைபோல இசகு, பிசகாய் வாயத்துறக்கிறது. பின்பு அதுக்கு வியாக்கினம்மா சொல்லுறது சிங்கம் தூங்கும் ஆனா விழிச்சா வேட்டைக்கு போற மாதிரி கர்ச்சிக்கும் எண்டு. யோவ் தவக்கை நீ நினைக்கிறாய் கர்ச்சிக்கிறாய் எண்டு ரோசம் கெட்டவனே உன் உடம்பில் ஓடுவது பழைய பண்டாவின் இரத்தம் தானா? உவன் மகின்டாவின் சிரிப்பின் அர்த்தத்தை புரியாத மடையனே. நீ யாருக்கோ பிறந்திருக்கிறாய் இலாட்டி நீ எப்பவோ பிரதம மந்திரியா வந்திருப்பாய் பின்னால் அங்கையும் இங்கையும் ஓடுற சொறனையே இலாத மாடாய் பிறந்திருப்ப்பாயா. உன் நிலையைப்பார்த்து மகிந்தாவே மனதிற்குள் நினச்சிருப்பார். அசல் வெருளி மாதிரி ரைய் வேற கட்டியிருக்கிறாய் எண்டு. :rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

கோதாரி விழுந்தது உதுகள நம்பி மங்களவும் மங்களம் பாடிட்டார் இனி அரோகரா தான்...மனோ எம்பி சொன்து சரியா தான் இருக்கு இந்தாள போஸ்ட்ல கட்டி தொங்க விடாதிங்கோ போஸ்ட் வளைஞ்சிடும் எண்டு...

ஊடகவியலாளர்களை சந்திக்கிறார் மங்கள- மகிந்தவுடன் சிறீபதி சந்திப்பு\

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர நாட்டில் தற்போது தோன்றியுள்ள அசாதாரண அரசியல் சூழ்நிலைகள் குறித்து விளக்கமளிக்கும் பொருட்டு இன்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்திக்க உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் பதவி நீக்கப்பட்ட மற்றுமொரு அமைச்சரான சிறீபதி சூரியாராச்சி, மகிந்த ராஜபக்சாவை இன்று சந்திப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மகிந்தவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறீபதி சூரியாராச்சியுடன் ஒரு இணக்கப்பாட்டிற்கு வரும்படி களனி ராஜமகா விகாரையின் பிரதம மதகுருவான கொல்லுப்பிட்டிய சங்கரகித தேரர் மகிந்தவை கேட்டுக்கொண்டதற்கு அமையவே இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

நேற்றுக் காலை மகிந்தவை சங்கரகித தேரர் சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடியதாகவும் அதன் பின்னர் இன்று மாலை 4.00 மணிக்கு சிறீபதி சூரியாராச்சியை சந்திக்க மகிந்த சம்மதித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே மங்கள சமரவீர, ஐந்து பக்கங்கள் நீளமுள்ள ஒரு நீண்ட கடிதத்தை மகிந்தவிற்கு அனுப்பியுள்ளார். அதில் அவர் மீண்டும் அமைச்சரவையில் இணைந்து கொள்வதற்கு 10 நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் இது தொடர்பாக இன்று காலை 10.00 மணிக்கு கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள ஆடம்பர விடுதியில் நடைபெறும் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மங்கள சமரவீர மற்றும் சிறீபதி சூரியாராச்சி ஆகியோரை இன்று சந்திக்கும் அமைச்சர் டி.எம். ஜெயரட்ன அவர்களின் கருத்துக்களை நாளை மகிந்தவை சந்தித்து தெரிவிக்கவுள்ளார்.

http://www.eelampage.com/?cn=30797

அநுராவின் பல கிலோ எடை உள்ள உடலை பாதுகாக்கவேண்டியது இப்போது மகிந்தனின் கடமையாகிவிட்டது.

தனது காலையே தான் பார்க்கமுடியாத அநுரா பாதை மாறி மகிந்தவிடம் வந்துவிட்டார் போல் தெரிகிறது.

தன் பாதுகாப்பு தளர்த்தப்பட்டுவிட்டது தான் அவருக்கு பெரிய பிரச்சினை. அத்துடன் மகிந்தவின் வட்டத்துக்கு

வெளியில் இருந்தால் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உண்டு என்பதைக் காரணமாக வைத்து மீண்டும் போய்

மகிந்தவுடன் சேர்ந்துவிட்டார். அநுராவின் கணக்குத் தப்பு என்பது அவருக்கு புரிய அதிக காலம் எடுக்காது.

இவர்கள் எல்லாம் ஒரு அரச தலைவர் ஒரு மந்திரி, நாட்டையா ஆளுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்.

anura-magin-l.jpg

வீட்டில் புருசன், பெண்சாதிக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும். இன்று இணைவார்கள், சேர்ந்து இருப்பார்கள். நாளை பிரிவார்கள்! இதுகளையெல்லாம் நாம் கண்டுக்கப்படாது!

படத்திலுள்ள மூவரினதும் வாயை உற்றுக் கவனியுங்கள்! 100 லீட்டர் எச்சில் ஒழுகுகின்றது. இப்படியானவர்களைத்தான் ஆங்கிலத்தில் கே(GAY) என்று சொல்லுவார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

அடங்கினார் அனுரா; மஹிந்தவிடம் சரணாகதி!நேரில் சந்தித்துச் சமாளிப்பு; திரிசங்கு நிலையில் மங்கள

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது தலைமையிலான அரசுக்கும் எதிராகத் துள்ளிக் குதித்துச் சீறிய அனுரா பண்டாரநாயக்கா, அதனால் தமது அமைச்சர் பதவி பறிபோன நிலையில் ஐந்து நாட்களுக்குள்ளேயே சீறிய வேகத்தில் அடங்கிப்போனார்.

நேற்று அலரி மாளிகைக்குச் சென்று ஜனாதிபதியைக் கண்ணீர் மல்கக் கட்டித் தழுவிச் சமாளித்துத் தமது அமைச்சர் பதவியை உறுதிப்படுத்தியதோடு அவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான "லடாய்' ஊடல் இப்போதைக்கு முடிவுக்கு வந்திருப்பதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பெரும்பாலும் எதிர்வரும் திங்கட் கிழமையன்று மீண்டும் தமது பழைய அமைச்சுப் பதவியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து அனுரா ஏற்றுக்கொள்வார் என்றும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதிக்கும், அனுரா பண்டார நாயக்காவுக்கும் இடையில் கடந்த காலங் களில் நிலவிவந்த முறுகல் இம்மாத முற் பகுதியில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தோடு உச்சக்கட்டத்தை அடைந்தது.

கடந்தவாரம் அனுராவின் வீட்டுக்குத் தொலைபேசி அழைப்பு ஊடாக விடப் பட்டதாகக் கூறப்படும் மிரட்டலை அடுத்து, அதுபற்றி அனுரா பண்டாரநாயக்கா நாடாளு மன்றத்தில் குமுறினார். ஜனாதிபதியைச் சூழவுள்ள ஒரு கும்பலே தம்மை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முயற்சிப்பதாக நாடாளுமன்றத்தில் அவர் பொரிந்து தள்ளினார்.

இதையடுத்து அனுரா பண்டாரநாயக்கா வினதும், அவரோடு அணி சேர்ந்து இயங்கிய மங்கள சமரவீர மற்றும் ஸ்ரீபதி சூரியாராய்ச்சி ஆகியோரினதும் அமைச்சுப் பதவி களைக் கடந்த 9 ஆம் திகதி மாலை ஜனாதிபதி பறித்தார்.

இந்தச் சூழ்நிலையில் ஆளும் தரப்புக் குள் இந்த மூவர் அணி தனியாக இயங்கி, ஜனாதிபதி தலைமையிலான அரசுத் தலை மைக்குப் பெரும் தலையிடி கொடுக்கப் போகின்றது, பெரிய அரசியல் நகர்வுகளைக் கொண்டுவரப்போகிறது. அதுபற்றி இன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் மாநாட்டில் அக்குழு அறிவிக்கும் என்றெல்லாம் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்த எதிர்பார்ப்பெல்லாம் நேற்று அனுரா பண்டாரநாயக்கா திடீரென அலரிமாளிகைக்குச் சென்று ஜனாதிபதி யைச் சந்தித்து சமாளித்ததோடு திடீரென அடங்கிப்போயிருக்கின்றது.

அமைச்சர் தினேஷ் குணவர்த்தனாவே நேற்றுக் காலை 9. 30 மணி அளவில் அனுரா பண்டாரநாயக்காவை அழைத்துக்கொண்டு அலரி மாளிகைக்குச் சென்றார் எனக் கூறப் படுகின்றது.

அங்கு கண்களில் கண்ணீர் மல்க, ஜனாதிபதியை அனுரா ஆரத்தழுவி, அன்பை வெளிப்படுத்திச் சமாளித்தார் எனக் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தாமும் பழையவற்றை மறந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் என்ற முறையில் ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருக்கின்றார் எனக் கூறியதோடு, இழந்த அதே மரபுரிமை அமைச்சுப் பதவியை மீள ஏற்றுக் கொள்ளுமாறு அனுராவை வேண்டினார் எனத் தெரிகின்றது.

எனினும், இம்மாத இறுதியில் தாம் சீனா செல்வதற்கு முன்னர் வேறு சில பொறுப்புகளையும் அனுராவுக்கு வழங்கு வதற்கு ஜனாதிபதி இணங்கினார் என்றும் கூறப்பட்டது.

இன்று அனுரா பண்டாரநாயக்காவின் 58ஆவது பிறந்த தினமாகும். இதனை ஒட டித் தமது கொழும்பு இல்லத்தில் நடை பெறும் பிறந்த தின நிகழ்வில் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு கோரி நேற்றைய சந்திப்பின்போது அனுரா பண்டாரநாயக்கா விடுத்த அழைப்பை ஜனாதிபதி புன்னகையோடு ஏற்றுக்கொண்டார் எனவும் அறியவந்தது.

http://www.sooriyan.com/index.php?option=c...985&Itemid=

அப்ப உவர் தன் காலையே பார்க்க முடியாட்டி எப்படி குனிந்து சப்பாத்துக்கு லேஸ் கட்டுவார்? வண்டி விடாதே? ஆக நான் நினக்கிறன் இவர் மவன் தைரியமா பாதுகாப்பில்லாம போகலாம் ஒரு தரும் டச் பண்ண விரும்ம்பமாட்டார்கள். ஏனெண்டா உவரே தனக்கு அவரிட கூட்டாளிகள் மூலமா கொலைப்பயமுறுத்தல் கொடுத்துப்போட்டு பொலீஸில வேறு கம்பிளைன் கொடுத்தவர். பொலீஸ் கூட அதைக் கன்டு பிடிக்கும் அளவுக்கு கச்சிதமா செய்யாம மவன் சும்மா பந்து இரண்டு சுவருகளுக்கிடையே அடிபட்டு தெறிப்பது போல அங்கயும் இங்கையும் திரிகிறார். அட இவனோட தானே கருனாவும் சிங்கபூருக்கு போனவர். பிலேனில தண்ணிஅடிச்சுப்போட்டு எவ்வளவு லொல்ளு கருனாவுக்கு வெற பண்ணியிருப்பார். ஆள் ஒரு ஆண் இனசேர்கை வேறு. கருணா என்ன ஆனாரோ. பேசாம களத்திற்கே திரும்பி வந்து தலைவரிட்ட ஏச்சை வேன்டிக்கொண்டு திருந்தியிருக்கலாம். பாவம் கருனா இப்படி எல்லாம் அரசியல் களிசடைகளோடு பிளேனில போக வேண்டி வந்துட்டுதே எண்டு வேற கவலைப்பட்டிருக்கும்.இனியாவத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தச்செய்தியில் தமிழீழம் பற்றி என்ன இருக்கிறது? உலகச்செய்திகளிலல்லவா போட்டிருக்க வேண்டும்? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசில் இணைவதற்கு மகிந்தவுக்கு மங்கள விதித்த 10 நிபந்தனைகள்

[வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2007, 14:16 ஈழம்] [க.திருக்குமார்]

பதவி நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, அமைச்சரவையை 35 ஆக குறைப்பது, மனித உரிமை மீறல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது உட்பட 10 நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் ஊடகவியலாளர்களை சந்தித்த மங்கள, சமரவீர, இந்த நிபந்தனைகள் அடங்கிய 19 பக்கங்கள் நீளமான கடிதம் ஒன்றையும் மகிந்த ராஜபக்சவிற்கு அனுப்பவுள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

"அரச தலைவர், உலக சாதனைக்குரிய பெரிய அமைச்சரவையை அமைத்துள்ள போதும், முக்கிய முடிவுகள் அரசியல்வாதிகள் அல்லாத சிலராலேயே எடுக்கப்படுகின்றன. இது உண்மையானது. உலகிலேயே மிகப்பெரிய அமைச்சரவையையும், உலகிலேயே முடிவுகள் எடுக்கும் சிறிய அமைச்சரவையையும் அனைத்துலக சமூகம் சிறிலங்காவில் காணலாம்.

நாட்டின் வருடாந்த பொருளாதாரத் திட்டத்தில் 60 விகிதமான அபிவிருத்தி செலவீனங்களுக்கு பொறுப்பான அமைச்சர்களை அரச தலைவர் சடப்பொருளாக்கியுள்ளார். நாட்டின் வருடாந்த செலவீனம் 1,319 பில்லியன் ரூபாய்கள். அரச தலைவரின் அதிகாரத்தில் உள்ள அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடு 766 பில்லியன் ரூபாய்கள், அதாவது ஏனைய அமைச்சர்களுக்கு 553 பில்லியன் ரூபாய்களே ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி, கிராமிய பொருளாதார அபிவிருத்தி, சமுர்த்தி, பிராந்திய அபிவிருத்தி ஆகியனவும் அரச தலைவரின் அதிகாரத்திலேயே உள்ளது. இவை மட்டுமல்லாது பல நிறுவனங்கள், பல மில்லியன் ரூபாய் செயல்திட்டங்கள் எல்லாம் அமைச்சரவை மறுசீரமைப்பின் போது விளம்பரப்படுத்தப்பட்ட வர்த்தமாணி அறிவித்தல் மூலம் அரச தலைவர் தன்வசமாக்கியுள்ளார்.

இவற்றில் காணி மறுசீரமைப்பு ஆணையகம், தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழு, ஜெமஜடிறியா, கமநெகும, பிஇஆர்சி ஆகியனவும் அடங்கும். சமுர்த்தி அமைச்சை தன்வசப்படுத்தும் போது அனைத்துலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு வேறு அமைச்சு பொறுப்பை ஒதுக்குவதாக அரச தலைவர் தெரிவித்திருந்தார்.

முன்னர் நாம், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் சஜித் பிரேமதாச இந்த திட்டத்தை முன்னெடுக்கவில்லை என குற்றம் சுமத்தியிருந்தோம். ஆனால் தற்போது அரசு அதனை செய்கின்றது.

நாட்டில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன. மக்கள் கடத்தப்படுவது, ஊடகவியலாளர்கள் மிரட்டப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. இந்த நிலை மாறவேண்டும் அல்லது அனைத்துலக சமூகத்தில் இருந்து நாம் தனிமைப்படுத்தப்படுவோம். நாட்டின் தற்போதைய மனித உரிமை மீறல்களால் விடுதலைப் புலிகள் அனைத்துலகத்தில் நற்பெயரை ஈட்டுகின்றனர்.

ஐரோப்பிய ஓன்றியம், விடுதலைப் புலிகளை தடை செய்வதற்கு நான் கடுமையாக செயலாற்றினேன். அந்த சமயத்தில் ஆறு உறுப்பு நாடுகள் தடை விதிக்கப்படுவதை எதிர்த்திருந்தன. நான் அந்த நாடுகளுக்கு சென்று அதன் வெளிவிவகார அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களை சந்தித்து இந்த தடையை அமுல்படுத்த பாடுபட்டேன்.

மாலைதீவில் இருந்து கொண்டு அரச தலைவர், உள்நாட்டு விவகாரங்களை விவாதித்துள்ளார். ஒரு அந்நிய மண்ணில் இருந்து எமது நாட்டு பிரச்சனையை விவாதிப்பது முறையற்றது. மாலைதீவில் உரையாற்றிய அரச தலைவர், ஐரோப்பிய ஒன்றியத்தை சாடியதும் வருந்தத்தக்கது. இது நாட்டின் வெளியுறவுக் கொள்கையை பாதிக்கும் செயல்.

பயங்கரவாதத்தை இராணுவத்தால் முறியடிக்கும் சமயம் தேசியப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வும் காணப்பட வேண்டும். நாம் அப்பாவித் தமிழ் மக்களை விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுவிப்பதற்கு ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும். அப்போது அனைத்துலக சமூகம் எமக்கு அண்மையில் வரும்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, 62 உறுப்பினர்கள் கொண்ட தனது கட்சியின் ஆதரவை இரண்டு வருடங்களுக்கு அரசுக்கு வழங்குவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் அரச தலைவர் ஐக்கிய தேசியக் கட்சியின் 18 உறுப்பினர்களை உள்வாங்கியதன் மூலம் அந்த வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.

பலவாறான அறிக்கைகளை வெளியிட்டாலும் ஜே.வி.பி. அரசை கவிழ்க்க முயலாது. எனவே ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்புடன் நாம் ஆட்சியை நடத்தினால் நாம் நுரைச்சோலை, வீரவில போன்ற பெரும் அபிவிருத்திகளை அடையலாம். அதன் மூலம் துணிவுடன் 2009 அல்லது 2010 இல் நடைபெறும் தேர்தலையும் எதிர்கொள்ளலாம்.

அரச தலைவர், ஐக்கிய தேசியக் கட்சியை கொள்கை அற்றவர்கள் என குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் தற்போது நாம் அவர்களை அப்படிக் கூறமுடியாது. சிறீபதி சூரியாரச்சி தனது பாதுகாப்புக்கு அரச தலைவர் தான் பொறுப்பு என தெரிவித்திருந்தார். ஆனால் அவரது பாதுகாப்பு தற்போது விலக்கப்பட்டுள்ளது.

நாம் தற்போது விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலில் உள்ளோம். குறிப்பாக, அனைத்தலுகத்தில் இருந்து விடுதலைப் புலிகளை அன்னியப்படுத்தியதால் எனக்கு பெரும் ஆபத்து. பிரபாகரன் மன்னிக்கும் மனிதரல்ல. இது தவிர தென்னிலங்கையில் உள்ள பிரபாகரன்களாலும் எனக்கு ஆபத்து உள்ளது. எனவே அவர்களிடம் இருந்து நாம் தான் எம்மை பாதுகாக்க வேண்டும்.

வெள்ளை வானில் மக்கள் கடத்தப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன, தற்போது வெள்ளை வான் பீதி எனக்கும் வந்துள்ளது.

அரச தலைவர், நாட்டை ஆட்சி செய்வதற்காக மக்களின் ஆணையை பெற்றவர். ஆனால் அது தற்போது அப்படியான மக்களின் ஆணையை பெறாதவர்களால் நடத்தப்படுகின்றது. அரசியல் ஞானம் கூட அவர்களுக்கு இல்லை.

அவர்களின் விருப்பத்திற்குரிய வேலையோ இல்லை எதிரானதே எதை செய்தாலும் கடந்த ஓகஸ்ட் அல்லது செப்ரம்பரில் இருந்து எனது பணிகளுக்கு சிலர் இடையூறு விளைவித்த வண்ணம் இருந்தனர். இந்த நிலைமைகளில் ஆசியாவில் பழைய அரசியல் முறையான சர்வாதிகாரப் போக்கு அரச தலைவரால் பின்பற்றப்படுவதாக உணர்கிறேன்.

இந்த முடிவு சமகால நிகழ்வுகளின் தாக்கமல்ல. பல காலமாக எடுத்த முடிவு. எனது பணிகளில் தலையிடுவதன் மூலம் என்னை விரக்தியடையச் செய்து நானாக பதவிவிலக வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் நாட்டின் நன்மைக்காக நான் அவற்றை பொறுத்துக்கொண்டேன். நாங்கள் பதவி விலகவில்லை ஆனால் துரத்தப்பட்டோம்.

நான் இந்த அரசில் இனிமேல் அமைச்சராக இணைய மாட்டேன் ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இணைந்து ஜனநாயகத்தை பலப்படுத்துவேன்" என்றார் அவர்.

puthinam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.