Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொது மக்களை காரணமின்றி கொன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்- சந்திரிக்கா(காணொளி)

Featured Replies

யாழுக்கு சந்திரிகா விஜயம்
 

article_1490421029-chandrika%20kumaratunஎஸ்.நிதர்ஸன்

யாழ்ப்பாணத்துக்கு இன்று (25) வருகைதரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, நான்கு பிரதேச செயலகங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொள்ளவுள்ளார்.

ஐனாதிபதி தேசிய ஒருமைப்பாட்டுக்கும்; நல்லிணக்கத்துக்குமான பணியகத்தினால் தெல்லிப்பளை சங்கானை கரவெட்டி மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகங்களின் ஊடாக நடமுறைப்படுத்தப்படும் செயற்றிட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காகவே, அவர் இங்கு வருகைதருகின்றார்.

வருகைதரும் அவர் தெல்லிப்பழை பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட பளை வீமன்காமம் பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைக்கவுள்ளார். மேலும். தெல்லிப்பழை கிழக்கில் அமையவிருக்கும் மாம்பழக் கிராமம் தொடர்பிலான நிகழ்விலும் அவர் பங்குகொள்ளவுள்ளார்.

இந்நிகழ்வுகளை முடித்துக் கொண்டு சங்காணை பகுதிக்குச் செல்லும் அவர், அங்கும் பல திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார். மேலும், கரவெட்டி மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுகளுக்கும் செல்லும் அவர், நீர் வழங்கும் திட்டங்களையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

குறிப்பாக உடுப்பிட்டிப் பகுதியில் நீர் தாங்கி, பொலிகண்டியில் கிராமிய சுகாதார நிலையம் மற்றும் கிராமத்துக்கான நிர் விநியோகம், பருத்தித்துறையில் சூரிய மின்பிறப்பாக்கி (சோலர்) திட்டங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- See more at: http://www.tamilmirror.lk/193674/ய-ழ-க-க-சந-த-ர-க-வ-ஜயம-#sthash.QvjbYtPF.dpuf
  • தொடங்கியவர்
'இரண்டு வருடங்களில் பெருமளவு காணிகள் விடுவிப்பு'
 

article_1490443527-IMG_2566.jpg

எஸ்.நிதர்ஸன்

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருக்கின்ற காணிகளை விடுவித்து தங்களை மீளக்குடியமர்த்துமாறு, யாழ். வந்திருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் வலிகாமம் வடக்கிலிருந்த இடம்பெயரந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தினால் யாழில் அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக முன்னாள் ஜனாதிபதியும் மேற்படி பணியகத்தின் தலைவியுமான சந்திரிகா, யாழுக்கு இன்று (25) வருகை தந்திருந்தார்.

இதன்போது தெல்லிப்பழை வீமன்காமம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்து அங்கிருந்த மக்களைச் சந்தித்தும் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போதே, அங்கிருந்த மக்கள், முன்னாள் ஜனாதிபதியிடம் மேற்படி கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
யுத்தம் காரணமாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நாங்கள் எங்கள் சொந்தக் காணிகளிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களிலும் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றோம். யுத்தம் முடிவடைந்து எட்ட வருடங்கள் நிறைவுறும் நிலையிலும் தற்போதும் எங்கள் காணிகளில் படையினர் நிலை கொண்டுள்ளனர்.

இந்நிலையில், எங்கள் காணிகளை விடுவித்து எங்களை எங்கள் சொந்தக் காணியில் மீள்குடியமர்த்துமாறு நாங்கள் தொடர்ச்சியாக கோரி வருகின்றோம். இங்கு வந்த எம்மைச் சந்தித்திருந்த ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறுமாதகாலத்துக்குள் காணிகளை விடுவித்து எங்களைக் குடியேற்றுவதாக வாக்குறுதியளித்திருந்தார்.

ஜனாதிபதி வாக்குறுதி வழங்கி 2 வருடங்கள் முடிவடைந்திருக்கின்ற நிலையிலும் எங்கள் காணிகள் விடுவிக்கப்படவில்லை. இதனால் நாம் மிகுந்த ஏமாற்றமடைந்திருக்கின்றோம். ஆகவே, எமது காணிகளில் இருக்கின்ற படையினரை வெளியேற்றி எங்கள் நிலஙகளை எங்களிடமே மீட்டுத் தந்து எம்மை மிள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் சந்திரிகாவிடம் கோரினர்.

இதற்குப் பதிலளித்த சந்திரிகா, "கடந்த இரண்டு வருடத்தில் நாங்கள் பெருமளவு காணிகளை விடுவித்திருக்கின்றோம். ஆனாலும், சுமார் ஆறாயிரம் ஏக்கர் தனியார் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் இருக்கின்றது. அவற்றையும் விடுவிக்க நாங்கள் முயற்சிகளை எடுப்போம்" என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/193704/-இரண-ட-வர-டங-கள-ல-ப-ர-மளவ-க-ண-கள-வ-ட-வ-ப-ப-#sthash.nvMJomjE.dpuf

 

 

 

சந்திரிகாவின் தெல்லிப்பழை விஜயம்...
 

article_1490442385-IMG_2551.jpg

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, இன்று சனிக்கிழமை (25) யாழ்ப்பாணத்துக்கு விஐயம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுக்குபட்பட்ட வீமன்காமம் பகுதியில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இதன்பின்னர், வலிகாமம் வடக்கு மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்தினால் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.

(படப்பிடிப்பு: எஸ்.நிதர்ஸன்)

article_1490442402-IMG_2556.jpgarticle_1490442418-IMG_2590.jpgarticle_1490442432-IMG_2670.jpgarticle_1490442447-IMG_2693.jpg

- See more at: http://www.tamilmirror.lk/193703/சந-த-ர-க-வ-ன-த-ல-ல-ப-பழ-வ-ஜயம-#sthash.KIqOtYTf.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பயங்கரவாதத்தை ஒழித்த இராணுவ வீரர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டனை வழங்கமாட்டோம்

Heding01-1f1e1fee2b6c065607ac401f1a0b78ba26528eb0.jpg

 

எம்.நியூட்டன், ரி.விரூஷன்

யாழில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

நாட்டில் பயங்­க­ர­வா­தத்தை ஒழித்து நாட்டைப் பாது­காத்த எந்­த­வொரு இரா­ணுவ வீர­ரை யும் சட்­டத்தின் முன் நிறுத்த போவ­தில்லை என தெரி­வித்­துள்ள நல்­லி­ணக்­கத்­துக்கும் தேசிய ஒரு­மைப்­பாட்­டுக்கும் பொறுப்­பான முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க, காணாமல் போன­வர்கள் எவ்­வாறு காணாமல் போனார்கள் என்ற காரணத்­தை

அறியவே அவர்­க­ளது உற­வி­னர்கள் எதிர்­பார்த்­துள்­ளார்களே தவிர அதற்குக் கார­ண­மா­ன­வர்­க­ளுக்கு தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் எனக் கோரவில்லை எனவும் தெரி­வித்­ துள்ளார். வடக்கில் கடந்த வரு டம் தேசிய ஒரு­மைப்­பாட்­டுக் கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான அமைச்சின் கீழ் ஆரம்­பிக்­கப்­ பட்ட வேலைத்­திட்­டங்­களில் பூர்த்­தி­யா­ன­வற்றை  திறந்து வைப்­ப­தற்கும், இந்த வரு­டத்தில் இவ் அமைச்­சி­னூ­டாக புதி­தாக நட­மு­றைப்­ப­டுத்­த­வுள்ள புதிய நிகழ்ச்சி திட்­டங்­களை ஆரம்­பித்து வைப்­ப­தற்­கா­கவும், நேற்­றைய தினம் முன்னாள் ஜனா­தி­ப­தியும் குறித்த அமைச்சின் தலை­வி­யு­மான சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க யாழ்ப்­பா­ணத்­திற்­கான விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்தார். 

தெல்­லிப்­பளை பிர­தேச செய­ல­கத்தில் இடம்­பெற்ற நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்ட கருத்தை குறிப்­பிட்­டி­ருந்தார். இந்­நி­லையில் இந்­நி­கழ்வில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

கடந்த வருடம் நான் இரண்டு தட­வைகள் யாழ்ப்­பா­ணத்­திற்கு வந்­தி­ருந்தேன். இம் முறை நான் யாழ்ப்­பாணம் வரும் போது மகிழ்ச்­சி­யுடன் வந்­தி­ருக்­கிறேன். நாம் வடக்கை அபி­வி­ருத்தி செய்­வது தொடர்­பாக பல திட்­டங்­களை வகுத்­துள்ளோம். அந்­த­வ­கையில் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்­வ­தற்கு தேவை­யான உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்­ள­வுள்ளோம்.

வடக்கில் குறிப்­பாக போருக்கு பின்­ன­ரான அபி­வி­ருத்­தி­யா­னது ஒன்­றுக்­கொன்று முர­ணாக காணப்­பட்­டி­ருந்­தது. அவ் முரண்­பா­டு­களை நீக்கி சிறப்­பான அபி­வி­ருத்­தியை மேற்­கொள்­வதே எமது இவ் அமைச்­சி­னூ­டான நோக்­கங்­களில் ஒன்­றா­க­வுள்­ளது. கடந்த முப்­பது வருட போர் தொடர்­பாக தற்­போ­தைய அர­சாங்கம் கவ­லை­ய­டைந்­துள்­ளது. இந்­நி­லையில் தற்­போது நாம் ஆற்ற வேண்­டிய பல விட­யங்கள் தொடர்­பாக முத­ல­மைச்சர் குறிப்­பிட்­டி­ருந்தார். அவர் கூறி­ய­வற்றில் நாம் பெரும்­பா­ல­ன­வற்றை நிறைவு செய்ய வேண்­டி­யுள்­ளது.

குறிப்­பாக காணாமல் போனோ­ருக்கு என்ன நடந்­தது என்­பதை அறிந்­து­கொள்ள வேண்­டிய தேவை­யுள்­ளது. அதே­போன்று இரா­ணுவம் போரின் போது கைப்­பற்­றிய மக்­க­ளது காணி­களை மீள மக்­க­ளிடம் கைய­ளிக்க வேண்­டி­யுள்­ளது. அந்­த­வ­கையில் காணாமல் போனோர் தொடர்­பாக தீர்க்­க­மான செயல்­திறன் மிக்க தீர்­வொன்றை முன்­வைப்­ப­தற்கு அர­சாங்கம் மக்­க­ளுக்கும் சர்­வ­தே­சத்­திற்கும் வாக்­கு­று­தியை கொடுத்­துள்­ளது. இதற்­க­மைய பாது­காப்பு அமைச்சு, இரா­ணுவம் பொலிஸ் ஆகி­யோ­ருடன் பேசி ஒரு திட்­டத்தை தயா­ரித்­துள்ளோம்.

இதன்­படி யார் யார் காணமல் போனார்கள் என்­பது தொடர்­பான பட்­டியல் ஒன்றை உரு­வாக்கி இதற்­கான சட்­டங்­களை பாரா­ளு­மன்றம் ஊடாக நிறை­வேற்­றி­யுள்ளோம். தற்­போது அச் சட்­ட­மா­னது ஜனா­தி­ப­தியின் கையொப்­பத்­துடன் சட்­ட­மாக நட­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. ஆனால் இது இல­கு­வான காரி­ய­மாக அமை­ய­வில்லை. காரணம் முன்னாள் ஜனா­தி­பதி ஒருவர் வர­லாற்றில் முதன்­மு­றை­யாக நாட்டின் ஒற்­று­மையை குழப்­பிக்­கொண்­டி­ருக்­கிறார். இவர் இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் தூண்டி போராட்­டங்­களை நடாத்­திக்­கொண்­டி­ருக்­கிறார். இப்­ப­டி­யான நிலை­யிலும் கூட நாம் இச் சட்­டத்தை நிறை­வேற்­றி­யி­ருந்தோம்.

ஆனால் நாம் இச்­சட்­டங்­களை நிறை­வேற்­றி­ய­த­னூ­டாக இரா­ணு­வத்தை குற்­ற­வா­ளி­க­ளாக இனங்­கண்டு அவர்­களை தண்­டிக்கப் போவ­தில்லை. உண்­மையில் காணாமல் போன­வர்கள் தொடர்­பாக அவர்­க­ளது உற­வி­னர்கள் கோரு­வது காணாமல் போன­வர்கள் எவ்­வாறு காணாமல் போனார்கள் என்ற தக­வலை மட்­டுமே இரா­ணு­வத்­திற்கு தண்­டனை வழங்க வேண்டும் என கோர­வில்லை.

போர்க்­கா­லத்தை தவிர்த்து மக்­களை கொன்­ற­வர்­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­படும். மேலும் இந் நாட்டில் பயங்­க­ர­வா­தத்தை ஒழித்து நாட்டை பாது­காத்த இரா­ணுவ வீரர்­களை குற்­ற­வா­ளி­க­ளாக்கி தண்­ட­னையை நாம் வழங்க மாட்டோம். நாட்டில் யுத்தம் நடந்த போது நாட்டில் இல்­லாது வெளி­நா­டு­களில் வாழ்ந்த புலம்­பெ­யர்ந்த மக்கள், புலம்­பெயர் அமைப்­புக்கள் அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் கூறு­வது போன்று நாம் எத­னையும் செய்­து­விட முடி­யாது.

இதே­போன்று மக்­களின் மற்­றொரு பிரச்­ச­னை­யான இரா­ணுவம் கைய­கப்­ப­டுத்தி வைத்­துள்ள பொது­மக்­க­ளது காணி­களை மீள அவர்­க­ளிடம் கைய­ளிப்­ப­தாகும். அந்­த­வ­கையில் தற்­போது யாழ்ப்­பா­ணத்தில் இரா­ணு­வத்தின் வசம் 5 ஆயி­ரத்து 300 ஏக்கர் காணி­களே உள்­ளன. இதில் 4 ஆய­ரத்து 300 ஏக்கர் காணி­களே தனி­யா­ருக்கு சொந்­த­மா­னவை. 1000 ஏக்கர் காணி அர­சுக்கு சொந்­த­மா­னது. இவ்­வாறு இரா­ணு­வத்தின் வச­முள்ள பொது­மக்­க­ளது காணி­களில் சில குறிப்­பி­டத்­தக்­க­ள­வான காணி­களை மீள மக்­க­ளிடம் கைய­ளிக்க முடி­யாது என இரா­ணுவம் கூறு­கின்­றது. குறிப்­பாக காங­கே­சன்­துறை, பலாலி மற்றும் பருத்­தித்­துறை பகு­தியில் இரா­ணு­வத்தின் முகாம்கள் அமைந்­துள்­ள­தாக இரா­ணுவம் குறிப்­பி­டு­கின்­றது. இக் காணி­களில் மக்­க­ளிடம் மீள கைய­ளிக்க முடி­யாத காணி­க­ளுக்கு பதி­லாக குறித்த மக்­க­ளுக்கு மாற்­றுக்­கா­ணி­களும் நஷ்ட ஈடு­களும் வழங்­கப்­படும்.

இதே­போன்று முல்­லை­தீவில் 9ஆயிரம் ஏக்கர் காணி­களும், வவு­னி­யாவில் 7ஆயி­ரத்து 500ஏக்கர் காணிகளும், எனைய மாவட்டங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரிற்கும் குறைவான காணிகளே இன்னமும் இராணுவத்திடம் உள்ளது. இவ்வாறு இராணுவத்திடம் உள்ள காணிகள் அனைத்தும் மீளவும் அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.

மேலும் இந்நாட்டில் அத்தியாவசியமாக புதியதொரு அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் இவ் அரசியல் யாப்பு உருவாக்கப்படுவதன் ஊடாகவே நாட்டில் அனைத்து இனங்களும் சமவுரிமையுடன் வாழக்கூடிய ஒர் ஊழல் உருவாகும் அதற்காக நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒன்றினைத்து செயற்பட வேண்டும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-03-26#page-1

  • கருத்துக்கள உறவுகள்

பொது மக்களை காரணமின்றி கொன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்- சந்திரிக்கா(காணொளி)

 

 

33-1-300x200.jpg

பொது மக்களை காரணமின்றி கொன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

காணாமல் போனவர்கள் கண்டறியப்பட வேண்டும் எனவும், அவர்களின் விபரங்கள் கண்டறியப்பட்டு, நஸ்ட ஈடு வழங்கப்பட வேண்டும், அதற்கான வர்த்தகமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையொப்பம் இட்டுள்ளார். எனவே இதற்காக இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு தண்டனை வழங்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் இராணுவத்திடமுள்ள பொதுமக்களின் காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் தேசிய நல்லிணக்கத்திற்கும் ஒருமைப்பாட்டிற்குமான அலுவலகத்தினால் இவ் வருடம் வடக்கில் 180 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காக திட்டங்கள் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாகவும்,

இத்திட்டத்தில் சுகாதாரம், கல்வி, குடிநீர், கால்வாய் புனரமைப்பு, ஆகிய திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

 

http://www.kuriyeedu.com/?p=55368

முதலில் அம்மணி சரணையவேண்டுமே!

  • கருத்துக்கள உறவுகள்

 

பொது மக்களை காரணமின்றி கொன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்- சந்திரிக்கா

vs

பயங்கரவாதத்தை ஒழித்த இராணுவ வீரர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டனை வழங்கமாட்டோம்

செம்மணி புதை குழியின் சூத்திரதாரி சொல்கிறார் கேளூங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் இலங்கையின் ஆட்சியாளர்களின் இந்த பேச்சுகள் எனக்கு புரிவதே இல்லை.
இராணுவத்தை தண்டிப்பது என்பது அவர்கள் பணிக்கப்பட்ட வேலையை செய்யாது போனால் அல்லது வழங்கப்பட்ட கட்டளையை மீறி தங்கள் இஸ்ட்டத்துக்கு  நடந்திருந்தால் மட்டுமே சாத்தியம். உயர்மட்டத்திலிருந்து விடுக்கப்படும் கட்டளைக்கு அணிபணிந்து நிறைவேற்றுவதுதான் அடிமட்ட வீரர்களின் பணி. அப்படியிருக்க இலங்கையில் நிகழ்ந்து முடிந்த போர்குற்றங்களை  இராணுவ தலைமையும் ஆட்சியாளர்களுமே வழிநடத்தியிருக்க முடியும். அதற்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் அவர்களேயொழிய வேறெவருமில்லை.

"பயங்கரவாதத்தை ஒழித்த இராணுவ வீரர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டனை வழங்கமாட்டோம்" என்பது முற்றிலும் பிழையான வாதம்.
இங்கு இராணுவ வீரர்கள் கட்டளையை நிறைவேற்றியவர்களாகவே இருக்கமுடியும். கட்டளையை வழங்கியவர்களைத்தான் தண்டிக்கவேண்டும்.
இது தான் சர்வதேச விதியும் கூட. போர்குற்றங்களை பரந்துபட்ட எண்ணிக்கையுள்ள அடிமட்ட இராணுவ வீரர்களிடம் தள்ளிவிட்டு
சர்வதேசத்தின் கேள்வியை உருக்குலைப்பதையும் நீர்த்துப்போகவைப்பதையும் விட்டுவிட்டு குற்றவாளிகளை சந்திரிகா தங்கள்
அணிக்குள்தான் தேடவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vanangaamudi said:

தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் இலங்கையின் ஆட்சியாளர்களின் இந்த பேச்சுகள் எனக்கு புரிவதே இல்லை.
இராணுவத்தை தண்டிப்பது என்பது அவர்கள் பணிக்கப்பட்ட வேலையை செய்யாது போனால் அல்லது வழங்கப்பட்ட கட்டளையை மீறி தங்கள் இஸ்ட்டத்துக்கு  நடந்திருந்தால் மட்டுமே சாத்தியம். உயர்மட்டத்திலிருந்து விடுக்கப்படும் கட்டளைக்கு அணிபணிந்து நிறைவேற்றுவதுதான் அடிமட்ட வீரர்களின் பணி. அப்படியிருக்க இலங்கையில் நிகழ்ந்து முடிந்த போர்குற்றங்களை  இராணுவ தலைமையும் ஆட்சியாளர்களுமே வழிநடத்தியிருக்க முடியும். அதற்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் அவர்களேயொழிய வேறெவருமில்லை.

"பயங்கரவாதத்தை ஒழித்த இராணுவ வீரர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டனை வழங்கமாட்டோம்" என்பது முற்றிலும் பிழையான வாதம்.
இங்கு இராணுவ வீரர்கள் கட்டளையை நிறைவேற்றியவர்களாகவே இருக்கமுடியும். கட்டளையை வழங்கியவர்களைத்தான் தண்டிக்கவேண்டும்.
இது தான் சர்வதேச விதியும் கூட. போர்குற்றங்களை பரந்துபட்ட எண்ணிக்கையுள்ள அடிமட்ட இராணுவ வீரர்களிடம் தள்ளிவிட்டு
சர்வதேசத்தின் கேள்வியை உருக்குலைப்பதையும் நீர்த்துப்போகவைப்பதையும் விட்டுவிட்டு குற்றவாளிகளை சந்திரிகா தங்கள்
அணிக்குள்தான் தேடவேண்டும்.

தங்கள் அணிக்குள் தேடுவதோடு, அவர்களோடு இணைந்து தானும் சரணடைவதே சரியானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.