Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றம் எவையும் இழைக்கப்படவில்லை அதனால் போர்க்குற்ற விசாரணை தேவையில்லை : ராஜித்த

Featured Replies

போர்க்குற்றம் எவையும் இழைக்கப்படவில்லை அதனால் போர்க்குற்ற விசாரணை தேவையில்லை : ராஜித்த

 

 

யுத்தக் குற்றங்கள் எவையும் இழைக்கப்படவில்லை அதனால் யுத்தக் குற்ற விசாரணைகளும் தேவையில்லை என சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று தெரிவித்துள்ளார்.

1362891604rajithas5.jpg

அவ்வாறான யுத்தக் குற்ற விசாரணைகள் என்கின்ற போது தமிழீழ விடுதலைப் புலிகளினால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் யார் விசாரணைகளை மேற்கொள்வது என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

 

வடக்கிற்கு இரண்டு நாள் விஐயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்தின இன்று காலை வடமாகாண ஆளுநர் அலுவலகத்திலி விசேட சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். அச் சந்திப்பின் முடிவில் ஊடகவியியலாளர்களுக்கு  அமைச்சர் கருத்து தெரிவித்திருந்தார்.

 

இதன் போது போர்க்குற்ற விசாரணையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்த ஊடகவியியலாளர்களால் எழுப்பப்ட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலையே ராஜித சேனாரத்தின மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

 

யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லை அவ்வாறு குற்றங்கள் இடம்பெற்றதென்பதையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகையினால் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளும் தேவையற்றது. இருந்தும் யுத்தக் குற்ற விசாரணைகள் என்கின்ற போது புலிகளின் குற்றங்களை விசாரிப்பது யார் என்றும் அவர்களில் யாரை விசாரிப்பது அவர்களின் தலைவர்கள் இருக்கின்றனரா என்றும் கேள்வியெழுப்பியிருந்தார்.

 

மேலும் புலிகளின் ஊடக இணைப்பாளராக முன்னர் இருந்த தயாமாஸ்ரர் அருகில் இருக்கின்றார். ஆகவே நாம் யாரை யார் விசாரிப்பதென்பதற்கப்பால் இந்த நாட்டில் மீளவும் கடந்த கால நிலைமைகள் ஏற்படாத வகையில் அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழக்கூடிய வகையில் அரசியற் தீர்வொன்றை முன்வைக்கவும் அதிகாரங்களைப் பகிரவும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

 

மேலும் இந்த நாட்டிலுள்ள சிங்கள மக்களுக்கு இருக்கின்ற அனைத்து உரிமைகளும் தமிழ் இமுஸ்லிம் உள்ளிட்ட அனைத்து இன மக்களுக்கும் இருக்கின்ற வகையிலான தீர்வொன்றையும் உருவாக்க இருக்கின்றோம். அத்தோடு மாகாண சபைகளுக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்த வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/18652

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஏன் வெளியே சொல்றீங்க.காதும் காதும் வைத்த மாதிரி சம்பந்தனுடனும் சுமந்திரனிடமும் கதைத்தால் போச்சு.

  • தொடங்கியவர்

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வேலணை, தெல்லிப்பளை வைத்தியசாலைகளுக்கு விஜயம்


சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வேலணை, தெல்லிப்பளை வைத்தியசாலைகளுக்கு விஜயம்
 

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று யாழ். வேலணை மற்றும் தெல்லிப்பளை வைத்தியசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

வேலணை பிரதேச வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் புதிய கட்டிடம் இன்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, வடமாகாணத்தைச் சேர்ந்த வைத்தியர்களையும் ஊழியர்களையும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன யாழ். தெல்லிப்பளை வைத்தியசாலையில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுகாதார வைத்திய அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் வடமாகாண சுகாதாரத்துறை அதிகாரிகள் பலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதேவேளை, சுகாதார அமைச்சர் இராஜித சேனாரத்னவை தாம் சந்திக்க வேண்டும் என வட மாகாண சுகாதாரத் தொண்டர்கள் கோரிக்கை விடுத்த போதிலும் அதற்கான அனுமதி அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாகாண சுகாதாரத் தொண்டர்கள், ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஆளுநருடனான சந்திப்பையடுத்து சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

இதன்போது அவர் தெரிவித்ததாவது,

யுத்த குற்றங்கள் தொடர்பில் நாம் இணக்கம் தெரிவிக்கவில்லை. அவ்வாறென்றால், எல்.ரீ.ரீ.ஈ இனர் மேற்கொண்ட யுத்த குற்றங்களை யார் ஆராய்வது? அவர்களின் தலைவர்கள் இருக்கிறார்களா? தயா மாஸ்டர் மாத்திரமே உள்ளார். சிறந்ததொரு தீர்வுக்கே நாம் செல்கின்றோம். இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் சம உரிமையை வழங்க வேண்டும். மாகாண சபைகளுக்குப் போதுமான அதிகாரத்தை வழங்க வேண்டும். அத்துடன், இந்த பகுதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டும். சிங்கள மக்களுக்குள்ள அனைத்து உரிமைகளும் தமிழ், முஸ்லிம், பேகர் உள்ளிட்ட அனைத்து இன மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அதுவே எமது இலக்காகும்.

என்றார்.

 

http://newsfirst.lk/tamil/2017/04/சுகாதார-அமைச்சர்-ராஜித-ச/

  • கருத்துக்கள உறவுகள்
போர்க்குற்றமே நடைபெறவில்லை! பிறகு ஏன் படையினரிடம் விசாரணை? தேவையில்லை என்கிறார் ராஜித
 
14037.jpg
நாட்டில் போர்க்குற்றமே நடைபெறவில்லை. ஆகவே போர்க்குற்ற விசாரணையும் தேவையில்லை என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவ்வாறு போர்க்குற்ற விசாரணை செய்யப்பட வேண்டும் என்றால் தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்களை யார் விசாரணை செய்வது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.  
 
வடக்கு மாகாணத்திற்கு நேற்று முன் தினம் இரண்டு நாள் விஜயமாக வருகை தந்துள்ள சுகாதார அமைச்சர், நேற்றைய தினம் காலை பத்து மணியளவில் யாழில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில், 
 
ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி, ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். 
 
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த சுகாதார அமைச்சரிடம், இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிபதிகளை ஏற்க தயாரா? என ஊடகவியலா ளர்களினால் கேட்கப்பட்ட வினாவிற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் அங்கு கூறுகையில்,
 
இலங்கையில் போர்க்குற்றம் என்று ஒன்றும் நடைபெறவில்லை. போர்க்குற்றம் என்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அவ்வாறு என்றால் யார் குற்ற மிழைத்தது? தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்க் குற்றத்தை யார் விசாரணை செய்வது? 
 
ஆகவே இவற்றை விடுத்து நாங்கள் நல்லதொரு தீர்வுக்கு செல்லவுள்ளோம். இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமமான உரிமையை பெற்றுக் கொடுக்கவுள்ளோம். இந்த சம உரிமை எப்போதுமே நிலைத்திருக்கும்.
 
மாகாண சபைகளுக்கும் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கவுள்ளோம், போரால் பாதிக்கப்பட்ட இடங்களை அபிவிருத்திகளை முன்னெடுத்து மக்களுடைய வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவுள்ளோம். நாட்டில் சிங்கள மக்களுக்கு இருக்கின்ற அனைத்து உரிமைகளும் தமிழ், முஸ்லிம் மற்றும் அனைத்து இனங்களுக்கும் வழங்கி வருகிறோம்.
 
இதன்மூலம் அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை கொண்டுள்ளார்கள். இதுதான் எங்களுடைய சாதனை, கடந்த காலங்களை நாங்கள் நினைவு படுத்தவில்லை என அமைச்சர் ராஜித பதில ளித்துள்ளார்.
                          

தமிழீழத் தனிநாடு தான் தமிழர்களுக்கு ஒரே தீர்வு என்கிறார்!

நம்பியிருந்தார் தலையில் மண்ணைக் கொட்டுதல் முறையோ!

 

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் கால அவகாசத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை அரசு இப்போது எப்படி நடந்து கொள்கிறது என்பதை வெளிப்படையாகக் காணமுடிகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் கூட்டம் கூட்டி இலங்கை அரசுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியது.

கால அவகாசம் கொடுத்தால் தமிழ் மக்களின் கதி அந்தோ என்றாகிவிடும் என தமிழ் மக்கள் பேரவை, தமிழ் சிவில் சமூகம் உள்ளிட்ட பல அமைப்புக்கள் கோரிக்கை விட்டிருந்தும் அதுபற்றி இம்மியும் கவனம் செலுத்தாமல் கால அவகாசம் வழங்குவது என்ற தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறைவேற்றியிருந்தது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இரண்டு வருட கால அவகாசத்தைப் பெற்றுக் கொண்ட இலங்கை அரசு இப்போது தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் தமிழ் மக்களிடையே கொதிப்பை - எதிர்ப்பை ஏற்படுத்தும் தோரணையில் நடந்து கொள்கிறது.

நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்தில் போர்க்குற்றம் எதுவும் நடைபெறவில்லை, பின்பு எதற்காக படையினரிடம் விசாரணை நடத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

படையினர் மீது போர்க்குற்ற விசாரணை செய்யப்பட வேண்டும் என்றால் தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த போர்க்குற்றத்தை யார் விசாரணை செய்வது என்பதும் அவரின் கேள்வியில் உள்ளடங்கியுள்ளது.

சிங்கள அரசியல்வாதிகளில் ஒரு நல்ல மனிதர் என்று தமிழ் மக்கள் நம்பியிருந்த அமைச்சர் ராஜித சேனாரத்ன இப்படியாக மாறுவார் என்று எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

நியாயம் உணர்ந்தவர் என்று கருதப்பட்ட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, மிகப் பெரிய கருநாகம் போல நஞ்சைக் கக்கி விட்டுச் சென்றுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் உடல், உள, சமூக, ஆன்மிக நிலைகளில் மிகவும் ஆரோக்கியம் குன்றியுள்ளனர்.

இந்நிலையில் போர்க்குற்றம் நடக்கவில்லை.  குற்றம் இழைக்காத படையினரை எவ்வாறு விசாரிப்பது என்றெல்லாம் கேள்வி எழுப்பி தமிழ் மக்களின் மனங்களை ரணமாக்கி விட்டுச் சென்றுள்ளார்.

ஒரு சுகாதார அமைச்சர், நல்லவர் என்று தமிழ் மக்கள் நம்பியிருந்த ஒருவர் இப்படி நடந்தது மிகப்பெரிய அநீதி. தமிழ் மக்கள்  ஜீரணிக்க முடியாத கருத்து.

விடுதலைப் புலிகள் இழைத்த போர்க் குற்றம் தொடர்பில் யார் விசாரிப்பது? என்று கேட்பது எந்தவகையில் நியாயமாகும். 

வன்னிப் போரில் விடுதலைப் புலிகளின் அமைப்பை அதன் தலைமையை, கட்டமைப்பை அழித்த பின்பு அவர்கள் செய்த போர்க் குற்றத்தை யார் விசாரிப்பது எனக் கேட்டால் நாங்கள் சொல்லக்கூடிய பதில்,
தமிழ் மக்கள் மீது போர்க்குற்றம் இழைத்தவர்கள் அழிந்திருந்தால்; அதைச் செய்த ஆட்சியாளர்கள் மாண்டிருந்தால் நாங்களும் போர்க்குற்ற விசாரணை தேவை என்று கேட்டிருக்கமாட்டோம் என்பதாகவே இருக்கும்.

எதுஎவ்வாறாயினும் கால அவகாசத்தை கொடுக்க வேண்டும் என்று கூறி நம் அரசியல் தலைமை நமக்கு வினையாக இருக்கும் போது மற்றவர்கள் என்ன கதைத்தாலும் அமைதியாய் கேட்பதைத் தவிர வேறுவழி ஏதுமில்லை. 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=14055&ctype=news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.