Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: வெற்றியை குவித்த விஷால் அணியினர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: வெற்றியை குவித்த விஷால் அணியினர்!

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் அணி சார்பாக துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ் வெற்றி பெற்றனர்.

Vishal team

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் அணி சார்பாக செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஞானவேல்ராஜா வெற்றி பெற்றார். ஆனால், விஷால் அணி சார்பாக செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட மற்றொரு வேட்பாளர் மிஷ்கின் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட, கேயார் அணியின் கதிரேசன் வெற்றி பெற்றார்.

விஷால்  அணி சார்பில் தயாரிப்பாளர் சங்க பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட, எஸ்.ஆர். பிரபு வெற்றி பெற்றார்.

SR Prabhu

Vishal

வெற்றி பெற்ற பின் விஷால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர். 'எனக்கு வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. மாற்றம் வர வேண்டும் என்றால், அதை யாராலும் தடுக்க முடியாது. இரண்டு ஆண்டுகளில், தயாரிப்பாளர் சங்கம் வரலாறு காணாத முன்னேற்றம் அடையும். விவசாயிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். குற்றசாட்டுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பேன். திருட்டு வி.சி.டி எதிரிகள் தயாராக இருங்கள்' என்றார்.

தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி பெற்றார். அவர் 143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். விஷால் 478 வாக்குகள், ராதாகிருஷ்ணன் 335 வாக்குகள், கேயார் 224 வாக்குகள் பெற்றுள்ளனர். 22 வாக்குகள் செல்லாதவை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரது வெற்றியை வெடி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

Vishal

Vishal

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலில் எட்டு சுற்றுகள் முடிவில் விஷால் 114 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். விஷால் 362 வாக்குகள், ராதாகிருஷ்ணன் 248 வாக்குகள், கேயார் 173 வாக்குகள் பெற்றுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் போது, ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக, அவரது அணியினர் கோஷமிட்டனர். ஆனால், அப்போது, முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 

இதையடுத்து, விஷால் வெற்றி பெற்றதாக, அவரது நம்ம அணியினரும் கோஷமிட்டனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

நீதியரசர் ராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம், 'இதுவரை எந்த வித அசம்பாவிதமின்றி தேர்தலை நடத்தியுள்ளோம். நேர்மையாக நடத்தியுள்ளோம். சரியாக 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும். முதலில் தலைவர் உள்பட 4 முக்கியப் பதவிகளுக்கான எண்ணிக்கை 4 அறைகளில் எண்ணப்படும். இந்த முடிவுகள் மாலை 6.30 மணிக்கு தெரிந்து விடும். இந்த வாக்கு எண்ணிக்கையின் போது, போட்டியிடும் 5 பேர், ஏஜெண்டுகள் 5 பேர் அனுமதிக்கப்படுவர்.

17776790_625204521011252_270880995_o_173

இதனையடுத்து, மற்ற பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை துவங்கும். அது அனைவரின் முன்னிலையில் நடத்தப்படும். அதை யார் வேண்டுமானால் காணலாம்' என்றார்.

நம்ம அணி சார்பாக போட்டியிடும் விஷால் செய்தியாளர்களிடம், 'மாற்றத்தை விரும்பியே 1,059 பேர் வாக்களித்துள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகள் சினிமாவிற்கு பொற்காலமாக அமையும்.  வாக்களித்தவர்கள் மற்றும் நீதியரசர் ராஜேஸ்வரன் ஆகியோருக்கு நன்றி' என்றார்.

Vishal

ஆர். ராதாகிருஷ்ணன்  செய்தியாளர்களிடம், 'சிறு தயாரிப்பாளர்களின் ஆதரவு எங்களுக்குதான் அதிகம் உள்ளது. அவர்கள் எங்களுக்குதான் வாக்களித்துள்ளனர். வெற்றியுடன் வந்து சந்திக்கிறோம்' என்றார்.

RadhaKrishnan

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மொத்தம் உள்ள 1,211 வாக்குகளில் 1,059 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது.

நடிகர் ஶ்ரீகாந்த் வாக்களித்தார்.

Srikanth

17693043_625177577680613_585835602_o_153

தமிழக தயாரிப்பு சங்கத் தேர்தலில் இதுவரை ஆயிரம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்நிலையில் ”மாலை 4.10 மணி வரை மட்டுமே வாக்களிக்க முடியும். அதற்கு மேல் கேட் மூடப்படும். அந்நேரத்தில் உள்ளே உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் ”, என்று தேர்தல் அதிகாரியான நிதியரசர் எஸ்.ராஜேஷ்வரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் தலைமையில் நடக்கும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக திரைப் பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கைக்கு அந்தந்த அணியின் ஏஜெண்ட்டுகள் 5 பேர், அணியின் சார்பில் 5 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் எஸ்.ராஜேஷ்வரன் அறிவித்துள்ளார். 
 

நடிகர் அர்ஜுன், இயக்குனர் பாலா ஆகியோர் தற்போது வாக்களித்தனர்.

Arjun

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மொத்தம் 1211 வாக்காளர்கள் உள்ளனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி 770 வாக்குகள் பதிவாகி உள்ளன. காலையில் வாக்குப் பதிவு தொடங்கியதும், முதல் ஆளாக வந்து நடிகை சுகாசினி மணிரத்தினம் வாக்களித்தார். இதனையடுத்து காலை 9 மணி நிலவரப்படி 129 வாக்குகள் பதிவானது. 

பெரும்பாலான தயாரிப்பாளர்கள் பதவி மாற்றத்தை விரும்பியே வாக்களித்துள்ளதாக கூறிவருகிறார்கள். இதனால் விஷால் தலைமையிலான ’நம்ம அணி’ வெற்றிப் பெறும் என்று கூறப்படுகிறது. 

Rajinikanth

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. மதியம் 12 மணி நிலவரப்படி 750-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் கந்தசாமி கல்லூரி முன்பு தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி தலைமையில், சுமார் 50-க்கும் மேற்பட்டோர திரண்டு, தமிழர் அல்லாத விஷால், பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இதுவரை 700 வாக்குகள் பதிவாகி உள்ள நிலையில், மேலும் 300 வாக்குகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், செயலாளர்,பொருளாளர் என 27 பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், முக்கியமான பதவிகளுக்கான முடிவுகள் இன்று இரவு 8 மணிக்கும் தெரிந்துவிடும். தேர்தல் முடிவுகள் குறித்து முழு பட்டியல் இன்று இரவு 10 மணிக்கு மேல் வெளியிடப்படலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார்.

Kamal

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஐஷ்வர்யா தனுஷ், நடிகர் ஆர்யா ஆகியோர் வாக்களித்தனர்.

Actor Arya

Aishwarya Dhanush

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், நடிகர் ரஜினிகாந்த், ராதிகா உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

 

Radhika

சென்னையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், செயலாளர்,பொருளாளர் என 27 பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. 

 

Producers council election

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் இதுவரை 135 பேர் வாக்களித்தனர்.  ஓட்டுப்பதிவு  பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது..

 

Producers council election

சுகாசினி, சௌத்ரி, பாக்யராஜ் பூர்ணிமா, சசிகுமார்,  அருண்பாண்டியன், மன்சூர் அலிகான். முருகதாஸ், வாக்களித்தனர்.

Tamil producers council election

-ரா.வளன், முத்து பகவத், மா. பாண்டியராஜன்

படங்கள்: தி.குமரகுருபரன்

http://www.vikatan.com/news/tamilnadu/85188-tamil-film-producers-council-elections-latest-photos.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்ச தமிழனுக்கு எங்கேயோ/ஏதோ ஒரு நரம்பு அறுந்து விட்டது இல்லை வேலை செய்யவில்லை என நினைக்கின்றேன். அது தான் அந்த ரோசம் மானத்தை விழிப்படையச்செய்யும் நரம்பு......

ஒளிப்பதிவு இணைப்பிற்கு நன்றி இசைக்கலைஞன்.tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்

கன்னட விஷாலின் வெற்றியை பார்க்க.... மனது வலிக்கின்றது. tw_angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.