Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கு: இன்று தீர்ப்பு

Featured Replies

நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கு: இன்று தீர்ப்பு
 
 

article_1491484839-gavel.jpg-எம்.றொசாந்த்

நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கு தொடர்பான தீர்ப்பு, இன்று வெள்ளிக்கிழமை (07) வழங்கப்படவுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 வயது சிறுமி வீட்டில் இருந்து நெடுந்தீவு சந்தைக்கு மீன் வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றார்.

இதன்போது, அச்சிறுமி கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர், கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். குறித்த கொலை சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்பவர், நெடுந்தீவு பொலிஸாரால் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் வழக்கு தொடர்பான சாட்சி பதிவுகள் யாழ்.மேல் நீதிமன்றில் வியாழக்கிழமை (06) இடம்பெற்றது.
இதன்போது, இவ்வழக்கு தொடர்பான இறுதித்தீர்ப்பு நாளை (இன்று) வெள்ளிக்கிழமை (07) வழங்கப்படும் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/194429/ந-ட-ந-த-வ-ச-ற-ம-க-ல-வழக-க-இன-ற-த-ர-ப-ப-



 
 
 
 
'வெளியில் வந்தவுடன் வெட்டுவேன்'
 
 

article_1491485015-jff.court.jpg-எம்.றொசாந்த்

நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர், யாழ். மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ள சம்பவம், நேற்று (06) இடம்பெற்றுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி சந்தைக்குச் சென்ற ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில், அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி ஜெகதீஸ்வரன் எனும் நபர் நெடுந்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வழக்கு தொடர்பான சாட்சி பதிவுகள் யாழ். மேல் நீதிமன்றில் வியாழக்கிழமை (06) இடம்பெற்றது.

சாட்சிப் பதிவுகளின் பின்னர் சந்தேக நபரை பொலிஸார் அழைத்து சென்ற போது, அங்கிருந்த ஊடகவியலாளர்களை நோக்கி கையிலிருந்த உணவுப்பொதியை வீசியெறிந்து, 'நான் வெளியில் வந்தவுடன் உங்களை வெட்டுவேன்' என தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பான இறுதித்தீர்ப்பு வெள்ளிக்கிழமை (07) வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/194430/-வ-ள-ய-ல-வந-தவ-டன-வ-ட-ட-வ-ன-

  • கருத்துக்கள உறவுகள்



நெடுந்தீவு சிறுமி கொலை: இன்று தீர்ப்பு
 
 

article_1491543347-Gvel%20300.jpg-எம்.றொசாந்த்

“எனக்கு கையளிக்கப்பட்ட சாரத்திலிருந்த இரத்த மாதிரிகள், எதிரியினுடைய இரத்த மாதிரியுடன் ஒத்துபோனது. இதேவேளை சிறுமியின் இரத்த மாதிரியுடனும் அச்சாரத்திலிருந்த இரத்த மாதிரிகள் ஒத்துபோனது” என, மரபணு பரிசோதனை அதிகாரி, யாழ். மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 வயது சிறுமி வீட்டில் இருந்து நெடுந்தீவு சந்தைக்கு மீன் வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்ற வேளை, கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

குறித்த கொலை சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி ஜெகதீஸ்வரன் எனும் நபர் நெடுந்தீவு பொலிஸாரால் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் வழக்கு தொடர்பான சாட்சி பதிவுகள் யாழ்.மேல் நீதிமன்றில் வியாழக்கிழமை (06) இடம்பெற்றன.

இதன்போது, மரபணு பரிசோதனை அதிகாரி யாழ் மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “என்னிடம் குறித்த வழக்கு தொடர்பில் 16 மாதிரி பொருட்கள் கையளிக்கப்பட்டன. சிறுமி மற்றும் எதிரியுடைய இரத்த மாதிரிகள், நீளமான காற்சட்டை, சிறுமியின் யோனியில் இருந்து எடுக்கப்பட்ட திரவம், 2 தலை முடி, பொலுத்தீன் பை போன்றன உள்ளடங்குகின்றன.

மரபணு பரிசோதனை மூலம் குற்றவாளி ஒருவரை கண்டறிய முடியும். இரட்டையர்கள் தவிர மற்றைய அனைவருக்கும் மரபணு நிச்சயம் வேறு வேறாகத்தான் இருக்கும். மரபணு மனிதருக்கு மனிதர் நிச்சயம் வேறுபடும்.

இந்நிலையில் எனக்கு கையளிக்கப்பட்ட சாரத்திலிருந்த இரத்த மாதிரி சந்தேக நபருடைய இரத்த மாதிரியுடன் ஒத்து போகின்றது. இதேவேளை, உயிரிழந்த சிறுமியினுடைய இரத்த மாதிரியும் சாரத்தில் காணப்பட்டது.

யோனியில் இருந்து பெறப்பட்ட திரவத்தில் விந்தை ஒத்த திரவம் காணப்பட்டது. ஆனால் அது தொடர்பில் தீர்க்கமான முடிவுக்கு வரமுடியவில்லை. அத்திரவத்தில் உயிரிழந்த சிறுமியின் கலங்களும் கலந்திருந்தமையால் அது தொடர்பில் பரிசோதனை முடிவுகளை தெளிவுபடுத்த முடியவில்லை. எனினும் சாரத்திலிருந்த இரத்த மாதிரி சந்தேக நபருடைய இரத்த மாதிரியுடன் ஒத்து போகின்றது என சாட்சியளித்தார்.

அடுத்தாக பல் நிபுணர் சாட்சியமளிக்கையில், “பல் அமைப்பு என்பது நிச்சயம் அனைவருக்கும் வேறு வேறாகவே காணப்படும். அது இரட்டையர்கள் ஆனாலும் வேறுபடும். சிறுமியினுடைய உடற்பகுதியில் இருந்து பெறப்பட்டு எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட பல் மாதிரியை சந்தேக நபரின் பல் மாதிரியுடன் ஒப்பிட்டு பரிசோதனை செய்த போது சந்தேக நபரின் பல் மாதிரியுடன் ஒத்து போகின்றது” என சாட்சியமளித்தார்.

இந்நிலையில் சந்தேகநபர் சாட்சியமளித்தார். இதன்போது, “சம்பவம் இடம்பெற்ற அன்று நான் இறைச்சி வாங்குவதற்கு சென்றபோது, சிறுமியை வீதியில் கண்டேன். அதன்பின்னர் இரவு 11 மணியளவில் வீட்டில் வைத்து நான் மது அருந்தியபோது, மக்கள் எனது வீட்டுக்கு வந்து என்னை அடித்து வீதிக்கு இழுத்து வந்தனர். அப்போது அங்கு வந்த பொலிஸார் என்னை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரி என்னை கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு வைத்து எனக்கு காற்சட்டையும் டீசேர்ட்டும் அணிய தந்துவிட்டு நான் அணிந்திருந்த ஆடைகளை வாங்கிக்கொண்டனர்.

அதனை கொண்டு சென்று உயிரிழந்த சிறுமியின் உடலில் போட்டு விட்டு பின்னர் எடுத்து கொண்டு வந்துள்ளனர். அவ்வாறே எனது சாரம் சிறுமியின் உடலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். குறித்த கொலைச்சம்பவத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என தெரிவித்தார்.

இதனையடுத்து, “சாரம் பொலிஸாரால் பெற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பில் இதுவரை இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின்போது எங்கேனும் தெரிவித்தீர்களா?” என, எழுப்பப்பட்ட கேள்விக்கு, “எனக்கு ஆதரவாக வாதாட சட்டத்தரணிகள் எவரும் முன்வரவில்லை. அத்துடன் நான் இதனை கூறுவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. எனவே நான் இதற்கு முன்னர் இதனை எங்கும் தெரிவிக்கவில்லை” என தெரிவித்தார்.

இதனையடுத்து, குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று  வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/194445/ந-ட-ந-த-வ-ச-ற-ம-க-ல-இன-ற-த-ர-ப-ப-#sthash.0j6FR4SC.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவு சிறுமி படுகொலை குற்றவாளிக்கு மரணதண்டனை

 

death.jpg

சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் , கல்லால் அடித்து கொலை செய்த குற்றசாட்டில் குற்றவாளிக்கு, மரணதண்டனை வழங்கி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி சந்தைக்கு சென்ற குறித்த சிறுமி நபர் ஒருவரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கல்லொன்றால் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார். 

அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று இன்றைய தினம் தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. குறித்த வழக்கில் நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த கந்தையா ஜெகதீஸ்வரன் என்பவரே குற்றவாளியாக காணப்பட்டு உள்ளார். 

குற்றவாளிக்கு மேல் நீதிபதி, பாலியல் குற்றசாட்டுக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் , 25 ஆயிரம் தண்டபணமும் அதனை கட்டதவறின் ஒரு வருட கடூழிய சிறைதண்டனையும், படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 10 இலட்ச ரூபாய் நஷ்டஈடும் அதனை கட்ட தவறின் 5 வருட கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

வழக்கின் பின்னணி.
 
கடந்த 2012ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 வயது சிறுமி வீட்டில் இருந்து நெடுந்தீவு சந்தைக்கு மீன் வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்ற வேளை , கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். 
nedu2.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

காலம் கடந்த நீதி எனினும், வரவேற்கப்படக் கூடிய நீதி!

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.

இந்த மனிதனுக்கு மிருகத்தை விடவும் கேவலமான எண்ணம் வருவதற்குக் காரணம் என்ன? பெற்றோரா? சமூகமா? இதனை ஆராய்ந்து அதனை மாற்றுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

இங்கு யேர்மனியில் நீதிமன்றில் 12 வயதுச் சிறுவனுக்கு எதிராக நடந்த ஒரு வழக்கைப் பார்க்கும் சந்தற்பம் கிடைத்தது. பொய், களவு, காமம் என அவனுக்கு எதிராகப் பல குற்றங்கள்..... பருவங்களில் அச் சிறுவனுக்கு ஏற்பட்ட ஆசைகள், விருப்பங்களை அறிந்து அதனை நல்லமுறையில் தீர்த்துவைக்க முயற்சிக்காத பெற்றோரை நீதிபதி எச்சரித்தார்.  

காலம் தாழ்த்தாமல் உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்படல் வேண்டும்.

போதை பொருள் வியாபாரிகளுக்கும் சிறுவர் மீதான பாலியல் வன்முறையாளர்களுக்கும் கொடுக்கப்படும் குறைந்த பட்ச தண்டனையாகவே மரண தண்டனையை பார்க்க வேண்டும்.

  • தொடங்கியவர்

12 வயது சிறுமி படு­கொலை வழக்கு குற்­ற­வா­ளிக்கு மரணதண்­டனை

p15-701cd74589c9e6edba7684be8e142bc8fa7e66fe.jpg

 

20 ஆண்டு கடூ­ழிய சிறை; 10 இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்­கு­மாறும்  யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழியன் உத்­த­ர­வு

 

(ரி.விரூஷன்)

யாழ்ப்­பாணம் நெடுந்தீவில் ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன்பு பாலியல் வன்கொ­டுமை செய்­யப்­பட்டு கொலை செய்­யப்­பட்ட பன்­னி­ரண்டு வயதுச் சிறுமி ஜேசுதாஸ் லக் சினியின் படு­கொலை வழக்கில் எதி­ரி­யான கந்­த­சாமி ஜெகதீஸ்வரனுக்கு மரண தண்­ட­னையும், 20 ஆண்­டு­கால கடூ­ழிய சிறைத்­தண்­ட­னையும் விதித்த யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழியன், 10 இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்­கு­மாறும் பணித்­துள்ளார். 

குறித்த வழக்­கா­னது யாழ்.மேல் நீதி­மன்றில் முக்­கி­ய­மா­ன­தொரு வழக்­காக விசா­ரிக்­கப்­பட்­ட­துடன் வழக்கில் கண்­கண்ட சாட்­சிகள் எதுவும் அற்ற நிலையில் சந்­தர்ப்ப சூழ்­நிலை சாட்­சி­க­ளுடன், மர­பணு விஞ்­ஞான மற்றும் பற்­கட்டு வைத்­திய அறிக்­கை­யூ­டாக குற்­ற­வாளி கண்­ட­றி­யப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

சம்­பவம்

நெடுந்­தீவில் பன்­னி­ரன்டு வயதுச் சிறு­மி­யான ஜேசு­தாஸன் லக்­சினி எனும் சிறுமி கடந்த 2012.03.03ஆம் திகதி பாலியல் வன்­பு­ணர்வு செய்­யப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்டார். இவ் சம்­பவம் தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொண்ட நெடுந்­தீவு பொலிஸார் இச் சம்­பவம் தொடர்பில் அதே இடத்தை சேர்ந்த கந்­த­சாமி ஜெக­தீஸ்­வரன் எனும் முன்னாள் ஈ.பி.டி.பி உறுப்­பி­னரை கைது செய்­தனர்.

வழக்கு விசா­ரணை

கைது செய்­யப்­பட்ட குறித்த நப­ருக்கு எதி­ரான வழக்கு விசா­ரணை ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்று வந்­தது. ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்ற வழக்கு விசா­ர­ணைகள் முடி­வ­டைந்த நிலையில் இந்த வழக்கின் குற்றப் பகிர்வு பத்­தி­ரத்தை சட்­டமா அதிபர் யாழ்.மேல் நீதி­மன்றில் தாக்கல் செய்தார்.

யாழ்.மேல் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட இவ் வழக்கு கடந்த திங்­கட்­கி­ழமை மற்றும் கடந்த வியா­ழக்­கி­ழமை ஆகிய நாட்கள் முழு­நே­ர­மாக சாட்சிப் பதி­விற்­காக எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. இதன்­போது வழக்கின் அர­ச­த­ரப்பு சாட்­சி­யத்தை அரச சட்­ட­வாதி நாக­ரட்ணம் நிஷாந் நெறிப்­ப­டுத்­தினார். இந்த வழக்கில் கண்­கண்ட சாட்­சி­யங்கள் எதுவும் இல்­லாத நிலையில் சந்­தர்ப்ப சூழ்­நிலை சாட்­சி­யங்­க­ளூ­டா­கவும், மர­பணு மற்றும் பற்­கட்டு வைத்­திய நிபு­ணத்­துவ சாட்­சி­யங்­க­ளூ­டா­கவும் மொத்தம் பன்­னி­ரன்டு அரச தரப்பு சாட்­சி­களை அரச சட்­ட­வா­தி­யான நாக­ரட்ணம் நிஷாந் மிக நுணுக்­க­மாக நெறிப்­ப­டுத்­தினார்.

இவ்­வாறு நெறிப்­ப­டுத்­தப்­பட்ட சாட்சி பதிவில் அரச தரப்பு சாட்­சியப் பதி­வுகள் நிறை­வ­டைந்து எதிரி தரப்பு சாட்­சியப் பதிவு இடம்­பெற்­றது. குறித்த வழக்கில் குற்றம் சாட்­டப்­பட்ட எதி­ரி­யான கந்­த­சாமி ஜெக­தீஸ்­வரன் சாட்சிக் கூண்டில் நின்று சாட்­சி­ய­ம­ளித்தார். இவ­ரது சாட்­சி­யத்தை அரச சட்­ட­வாதி குறிக்கு விசா­ரனை செய்­தி­ருந்தார். இவ்­வாறு நடாத்­தப்­பட்ட சாட்­சியப் பதி­வு­களில் அரச தரப்பு மற்றும் எதிரி தரப்பு சட்­டத்­த­ர­ணி­க­ளு­டைய தொகுப்­பு­ரை­க­ளுடன் வழக்கின் சாட்சிப் பதி­வுகள் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு நேற்­றுமுன் தினம் வழக்கின் தீர்ப்­புக்­காக திக­தி­யி­டப்­பட்­டது.

தீர்ப்­புக்­கான எடுகோள்.

குறித்த வழக்கில் எதி­ரி­யான கந்­த­சாமி ஜெக­தீஸ்­வ­ரனை குற்­ற­வா­ளி­யாக சாட்­சி­யங்­களின் அடிப்­ப­டையில் இனங்­கண்­டனர். அதா­வது குறித்த வழக்கில் சிவில் சாட்­சி­ய­மான இரண்டு சாட்­சி­யங்கள் சம்­பவ தினத்­தன்று காலை குறித்த சிறுமி செல்லும் போது அவ­ருக்கு பின்னால் பத்­தடி தூரத்தில் குறித்த எதிரி சென்­றி­ருந்தார் என சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்­தனர். அத்­துடன் இதன்­போது எதிரி நீல நிற சாறமும், மஞ்சள் நிற ரீ சேட்டும் அணிந்­தி­ருந்­த­தா­கவும் குறித்த சிறுமி கறுப்பு நிற பியாமா அணிந்­தி­ருந்­தா­கவும், கையில் நீல நிற சொப்பிங் பேக் வைத்­தி­ருந்­த­தா­கவும் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்­தனர்.

இதே­போன்று வழக்­கொன்றில் எதி­ரியின் வாக்­கு­மூ­லத்தின் அடிப்­ப­டையில் கைப்­பற்­றப்­ப­டு­கின்ற சான்று பொரு­ளா­னது முக்­கி­ய­மா­னது என்ற சட்ட ஏற்­பாட்டின் அடிப்­ப­டையில் பொலிஸ் அதி­காரி சாட்­சி­ய­ம­ளிக்­கையில், குறித்த எதி­ரியின் வாக்கு மூலத்தின் அடிப்­ப­டையில் கைப்­பற்­றப்­பட்­டா­தாக தெரி­விக்­கப்­படும் இரத்தம் படிந்த நீல நிற சாறத்தை மன்று முக்­கிய சாட்­சி­யாக கவ­னத்தில் கொள்­கின்­றது. இதே­போன்று பாலியல் வன்­பு­ணர்வு செய்­யப்­பட்டு கொல்­லப்­பட்ட நிலையில் இருந்த சிறு­மியின் உடலை பிரேத பரி­சோ­தனை செய்த சட்ட வைத்­திய அதி­காரி சின்­னையா சிவ­ரூபன் குறித்த சிறு­மியின் குதப் பகு­தி­யிலும் பிறப்­பு­றுப்பு பகு­தி­யிலும் வன்­பு­ணர்வு செய்­யப்­பட்டு தலையில் முருகைக் கல்லால் அடித்து கொலை செய்­யப்­பட்­டுள்ளார் என சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

குறித்த சிறு­மியின் கையில் முழங்­கைக்கு மேல் பக்­க­மாக கையின் பின் பக்­கத்தில் பற்­கடி காயம் ஒன்று இருந்­தா­கவும் அதனை பல் வைத்­திய நிபு­ண­ருக்கு பரி­சோ­த­னைக்­காக அனுப்­பி­யி­ருந்­த­தா­கவும் சட்ட வைத்­திய அதி­காரி சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார். இதன்­படி இவ் பற்­கடி காயம் தொடர்­பாக ஆய்வு செய்த பல் வைத்­திய நிபுணர் குறித்த கடி­கா­யத்தை ஏற்­ப­டுத்­தி­யது குறித்த எதி­ரியே என்றும் அவ­ரது பல்லின் மேற்­தா­டையின் இரண்டு பற்­க­ளுமே இவ் கடி காயத்தை ஏற்­ப­டுத்தி இருப்­ப­தா­கவும், அதில் ஒரு பல்லு உடைந்­தி­ருந்த நிலையில் அவ் உடைவும் குறித்த கடி காயத்­துடன் துல்­லி­ய­மாக பொருந்­து­வ­தா­கவும், உல­கத்தில் எந்­த­வொரு நப­ருக்­குமே ஒரே மாதி­ரி­யான பற்­கட்­ட­மைப்பு இருக்­காது என்ற தனது நிபு­ணத்­துவ சாட்­சி­யத்தை வழங்­கினார்.

இவ் வழக்கில் கொல்­லப்­பட்ட சிறு­மியின் யோனிப் பகு­தியில் எடுக்­கப்­பட்ட விந்­தணு திர­வத்தை ஆய்வு செய்த ஜீன்டெக் நிறு­வ­னத்தின் விஞ்­ஞானி மன்றில் சாட்­சி­ய­ம­ளிக்­கையில் குறித்த சிறு­மியின் யோனிக்குள் எடுக்­கப்­பட்ட திர­வத்தில் ஒர் ஆணி­ணது விந்­தணு காணப்­ப­டு­வ­தாக சாட்­சி­ய­ம­ளித்தார். அத்­துடன் குறித்த எதி­ரி­யி­னு­டை­யது என கூறப்­படும் நீல நிற சாறத்தில் இருந்த இரத்­தமும் குறித்த சிறு­மியின் இரத்தம், தலை­முடி, ஆகி­ய­வற்­றுடன் நூற்­றுக்கு நூறு வீதம் ஒத்­துப்­போ­கின்­றது என்­ப­தையும் தனது நிபு­ணத்­துவ சாட்­சி­யத்­தி­னூ­டாக மன்றில் சாட்­சி­ய­ம­ளித்தார்.

அந்­த­வ­கையில் கொல்­லப்­பட்ட சிறு­மியின் உடலில் இருந்த கடி காயம் எதி­ரி­யி­னு­டை­யது என்­பதும், எதி­ரியின் சாரத்தில் இருந்த இரத்த கறை கொல்­லப்­பட்ட சிறு­மி­யி­னு­டை­யது என்­பதும், நீல நிற சாரத்தை சம்­பவ தினத்­தன்று எதிரி அணிந்­தி­ருந்­த­மை­யையும் சிவி­லியன் சாட்­சி­யங்­களும் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்­தன. இத­ன­டிப்­ப­டையில் அரச தரப்பு சட்­டத்­த­ரணி முக்­கி­ய­மான கண்­கண்ட சாட்­சி­யங்கள் அற்ற இவ் வழக்கை விஞ்­ஞான ரீதி­யான பற்­கட்டு மற்றும் விந்­தணு சாட்­சி­யங்­க­ளு­டாக மிக நுணுக்­க­மாக நியா­ய­மான சந்­தே­கங்­க­ளுக்கு அப்பால் நிரூ­பித்­துள்ளார் என்­பதை இம் மன்று கவ­னத்தில் எடுத்­துத்­தி­ருந்­தது.

மேலும் பாலியல் பலாத்­காரக் குற்­றச்­சாட்டில் பெண்­கு­றி­யினுள் ஆண்­குறி உள்­நு­ழைந்­தி­ருக்க வேண்டும் என்ற சட்ட வரை­மு­றையை சட்­ட­வைத்­திய அதி­கா­ரி­யி­னு­டைய சட்ட வைத்­திய அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ள, குறித்த சிறு­மியின் குத வாச­லூ­டா­கவும், பிறப்­பு­றப்­பி­னூ­டா­கவும் ஆணு­றுப்பு உட் செலுத்­தப்­பட்டு பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்­டுள்ளார் என மருத்­துவ அறிக்கை குறித்த பாலியல் பலாத்­காரம் தொடர்­பான சட்ட வரை­மு­றையை பூர்த்தி செய்­துள்­ளது. எனவே

குறித்த சிறு­மியை மிக மோச­மாக சித்­தி­ர­வதை செய்து பிறப்­பு­றப்­பி­னூ­டா­கவும் குத வழி­யூ­டா­கவும் பாலியல் வன்­கொ­டுமை செய்து படு­கொலை செய்­தமை தொடர்பில் குறித்த எதி­ரியை மன்­றா­னது குற்­ற­வா­ளி­யாக தீர்ப்­ப­ளிக்­கின்­றது என நீதி­பதி குறிப்­பிட்டார்.

மன்றில் குற்­ற­வா­ளியின் இறுதி பேச்சு.

இதனை தொடர்ந்து குற்­ற­வா­ளி­யிடம் நீதி­பதி இறு­தி­யாக ஏதா­வது கூறப்­போ­கின்­றீர்­களா என வினா­வி­யி­ருந்தார். இதற்கு குறித்த குற்­ற­வாளி தாம் செய்­யாத குற்­றத்­திற்கு தண்­டனை வழங்­கப்­ப­டு­வ­தா­கவும், தாம் இந்த நீதி­மன்­றத்­துக்கு மேலான நீதி­மன்­றத்­தி­னூ­டாக விடு­தலை பெறுவேன் என தெரி­வித்தார்.

தீர்ப்பு.

இதனை தொடர்ந்து நீதி­பதி குறித்த வழக்கின் தீர்ப்பை திறந்த நீதி­மன்றில் வாசித்தார். அந்­த­வ­கையில் குறித்த வழக்கில் குறித்த எதி­ரி­யான கந்­த­சாமி ஜெக­தீஸ்­வ­ரனை குற்­ற­வா­ளி­யாக மன்று சாட்­சி­யங்­க­ளூ­டாக கருதி, சிறு­மியை பாலியல் பலாத்­காரம் செய்­தமை தொடர்­பான குற்­றத்­திற்கு 20ஆண்­டு­கால கடூ­ழிய சிறைத்­தண்­ட­னையும், 25ஆயிரம் ரூபா தண்­டப்­ப­ணமும், அதனை கட்­டத்­த­வறின் ஒராண்டு கடூ­ழிய சிறைத்­தண்­ட­னையும், சிறுமியை கொலை செய்தமைக்கு மரண தண்டனையும், கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு 10இலட்சம் ரூபா நஸ்ட ஈடும் வழங்க வேண்டும் என்றும் அவ்வாறு வழங்காவிடின் 5ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

இத் தீர்ப்பானது ஜனாதிபதி விரும்பும் நேரத்தில் விரும்பும் இடத்தில் வைத்து எதிரியின் கழுத்தில் சுருக்கு கயிறு இடப்பட்டு உடலில் இருந்து உயிர் பிரியும் வரை துக்கிலிட்டு அவரது உயிரை உடலில் இருந்து பிரிதெடுத்து தண்டனை நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதிக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் ஆணைபிறப்பித்திருந்தார்.

இதேவேளை குறித்த மரண தண்டனை தீர்ப்பானது வழங்கப்படும் போது நீதிமன்றத்தின் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு மரண தண்டனை எழுதிய பேனை உடைத்தெறியப்பட்டதுடன் நீதிமன்ற நடவடிக்கை சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-08#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.