Jump to content

புதுவருடமே. .........?


Recommended Posts

பதியப்பட்டது

புதுவருடமே. .........?

புது வருடமே நீ  வருகிறாய். ..

தீராத வலி  சுமக்கும்  எமக்கு 

என்ன  தரப்போகிறாய்? 

எங்கே என் தம்பி. .?

எங்கே எம்டன் இருந்த உறவுகள் எங்கே? 

யாரிடம்  கேட்பது?--....... பதில் 

காலத்தை  கேட்பதா  - இல்லை 

கடவுளை  கேட்பதா ?

தமிழனின் வாழ்க்கை இது என்று 

வாழ்வதா? 

 

வாழ்ந்தோம்  வாழ்ந்தோம்

சொந்த  ஊரில் வாழ்ந்தோம்

இழந்தோம் இழந்தோம்-- இன்று   

எல்லாம் இழந்தோம்.

கனவுகள் கலைந்து 

நினைவுகள் சிதைந்து 

காலோடு  கால்  தடுமாறி கொண்டு  தெருவோரம் நடக்கின்ற குடிகாரன் போல்  இருக்கின்ற  இன்றைய வாழ்வில். ...

புதுவருடமே வந்து என்ன செய்வசெய்வாய். ......?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவிதை இதயத்தைக் கனக்க வைக்கிறது.tw_bawling:


சித்திரையில் புத்திரன் பிறவாதிருக்க ஆடிக்கு அழைக்கும் வழக்கம் கொண்ட தமிழன்...!

சித்தரையில் புதுவருடம் பிறக்க எப்படி அனுமதித்தான்....?

மறைமலை அடிகளார் போன்றோரின் ஆய்வின்படி...

தை முதல் நாளில் வருடம் பிறந்ததைக் கொண்டாடிவந்த காலம்வரை.....

தமிழன் இழப்பின்றி உலகத்துக்கே உதாரணமாக வாழ்ந்திருந்தானோ...?? :innocent:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழக  திராவிட கட்சிகள்... செய்த துரோங்களில்...
புது வருடம்  எப்போ...   என்று, கலண்டரை  கண்டபடி மாத்தி,
மக்களை குழப்பிய... துரோகத்துக்கு... இரண்டு  தலைவர்களும், 
இந்த... உலகத்தில், இருந்தும்... இல்லை என்பதற்கு இது நல்ல படிப்பினை.

வாரிசுகள்... இந்த, உலக உணர்வு  விடயத்தில்.... கவனமாக இருக்கா விட்டால்,
உங்க.. அப்பன், வெட்டிய... கிணறு, உப்புத் தண்ணீர்  என்றாலும்.....
அதனைக் குடித்தே... சாவீர்கள். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
இன்று கிறீக் நாட்டைச்சேர்ந்த நண்பர் ஒருவருடன் கதைத்த வேளையில் எங்கள் நாட்டில் இன்றுதான் புதுவருடம் கொண்டாடப்படுவதாகச் சொன்னேன். தங்கள் முன்னோரும் சித்திரையில்தான் கொண்டாடினார்கள் இடையில் வந்தவர்கள் குழப்பிவிட்டார்கள் என்று கவலைப்பட்டார்.
 
தமிழர் மட்டுமல்ல உலகமே குழம்பித்தான் போயுள்ளதுபோல் தெரிகிறது.  யாரை நோவது. :( :(
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்ப சித்திரை வருடப் பிறப்பு என்பது நானும் இருக்கிறேன் என்கிற ரீதியில் வந்துட்டு போகுது....! 

நல்ல கவிதை சகோதரி....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13.4.2017 at 3:27 PM, yakavi said:

 

 

வாழ்ந்தோம்  வாழ்ந்தோம்

சொந்த  ஊரில் வாழ்ந்தோம்

இழந்தோம் இழந்தோம்-- இன்று   

எல்லாம் இழந்தோம்.

என்ன செய்வது என்பதா? விதியென்பதா? எதையுமே புரியாத சூழலில் தமிழினம். படைப்புக்குப் பாராட்டுகள்.

Posted
16 hours ago, suvy said:

இப்ப சித்திரை வருடப் பிறப்பு என்பது நானும் இருக்கிறேன் என்கிற ரீதியில் வந்துட்டு போகுது....! 

நல்ல கவிதை சகோதரி....!

உண்மைதான் .

தண்ணீரில் தாமரையை போல. 

14 hours ago, nochchi said:

என்ன செய்வது என்பதா? விதியென்பதா? எதையுமே புரியாத சூழலில் தமிழினம். படைப்புக்குப் பாராட்டுகள்.

நன்றி. .நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/04/2017 at 3:27 PM, yakavi said:

புதுவருடமே. .........?

புது வருடமே நீ  வருகிறாய். ..

தீராத வலி  சுமக்கும்  எமக்கு 

என்ன  தரப்போகிறாய்? 

எங்கே என் தம்பி. .?

எங்கே எம்டன் இருந்த உறவுகள் எங்கே? 

யாரிடம்  கேட்பது?--....... பதில் 

காலத்தை  கேட்பதா  - இல்லை 

கடவுளை  கேட்பதா ?

தமிழனின் வாழ்க்கை இது என்று 

வாழ்வதா? 

 

வாழ்ந்தோம்  வாழ்ந்தோம்

சொந்த  ஊரில் வாழ்ந்தோம்

இழந்தோம் இழந்தோம்-- இன்று   

எல்லாம் இழந்தோம்.

கனவுகள் கலைந்து 

நினைவுகள் சிதைந்து 

காலோடு  கால்  தடுமாறி கொண்டு  தெருவோரம் நடக்கின்ற குடிகாரன் போல்  இருக்கின்ற  இன்றைய வாழ்வில். ...

புதுவருடமே வந்து என்ன செய்வசெய்வாய். ......?

வந்தவரையெல்லாம் வாழவைத்தவன்

இன்று

கொன்றவனிடமே ஆளைக்கேட்டு

பிச்சை கேட்டு

நியாயம் கேட்டு??

 

நன்றி  கவிதைக்கும் நேரத்துக்கும்...

தொடருங்கள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.