Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டு. அரசியல்வாதிகளோ சொகுசு பங்களாக்குள், மக்களோ பாம்பு புற்றுக்குள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப்பகுதி யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். இப்பிரதேசத்து மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, இறுதியாக 2017ஆம் ஆண்டு அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டனர்.

இடம்பெயர்ந்து, அகதிமுகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் தங்கியிருந்து பல நெருங்கடிகளையும் சந்தித்து, சொந்த இடங்களுக்கு குடியமர்த்தும் போது, ஏற்கனவே இருந்த வீடுகளும் உடைக்கப்பட்டு, வீடுகளில் இருந்த சொத்துடமைகள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் வெறுமையாகவே காணப்பட்டன.

இதனால் மீண்டும் தாம் வாழ்வதற்கான வீடுகளை அமைத்து, வீட்டிற்கான பொருட்களை தேடி பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். மக்களை குடியேற்றிய நல்லாட்சி அரசாங்கமும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை இன்றுவரை ஏற்படுத்த தவறி வருகின்றமை கவலை தரும் விடயமாகும்.

குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக பணம் வழங்குவதாக குறிப்பிட்டும் அவை இன்று வரை வழங்கப்படவில்லை என்றதான குற்றச்சாட்டை அரசாங்கத்தின் மீது குறித்த பகுதி வாழ் மக்கள் சுமத்திவருகின்றனர்.

அவற்றினை அரசாங்கம் கண்டுகொள்ளவதாகத் தெரியவில்லை.அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சர்வோதயநகர், கித்துள், உறுகாமம், மரப்பாலம், கற்பானை போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்றுவரை களிமண் வீடுகளுடனும், மலசல கூடம் மற்றும் நீர்வசதி இன்றியும், தமது வாழ்வினை கொண்டு சென்றுகொண்டிருக்கின்றனர்.

இவர்கள் வாக்களித்து அரியனை அரசாங்கமும், அரசியல்வாதிகளும் இவர்களை கண்டுகொள்ளவில்லை என்பதே இம்மக்களது ஆதங்கங்களாக இருக்கின்றன.

இங்கு வாழ்கின்ற மக்களில் அநேகமானோர் வரக்காப்பொல, நுவரெலியா, எட்டியாந்தோட்டை, பதுளை, மாத்தளை போன்ற பகுதிகளில் இருந்து மட்டக்களப்பில் குடியேறிய மக்களாகவே காணப்படுகின்றனர்.

1968,1977ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழ், சிங்கள கலவரத்தினால் தமது உயிரை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் அங்கிருந்து வெளியேறி மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் குடியேறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இம்மக்கள் தற்போது குறித்த பிரதேசத்தில் குடியேறி 40வருடங்களுக்கு மேலாக இப்பிரதேசத்திலே வாழ்கின்ற போதிலும் தமக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவில்லை என்றும் அனுமதிப்பத்திரம் இன்றியே தாம் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இம்மக்கள் கூறுகின்றனர்.

அங்கு சென்று அவர்கள் மத்தியில் உரையாடி அவர்களது பிரச்சினைகளை ஆராயுமிடத்து பல்வேறு பிரச்சினைகள் மற்றும் போராட்டங்களின் மத்தியில் வாழும் சமூகமாக இப்பிரதேசம் விளங்குகின்றமையினை அறியக் கூடியதாகவுள்ளது. அந்தவகையில்,

நீரைப் பெறுவதில் போராட்டம்

கித்துள் பகுதியில் இருந்து 3 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள உன்னிச்சை குளத்தில் இருந்து குடிநீரை 32 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மட்டக்களப்பு, காத்தான்குடி, பாசிக்குடா போன்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்.

ஆனால் அண்மையில் உள்ள இப்பிரதேசத்து மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதனால் இம்மக்கள் குடிநீருக்காக கொட்டுகளைப் பதித்தும், குளங்களின் அருகே பூவல்களை தோண்டியும், பொதுக்கிணறுகள் உள்ள இடங்களுக்கு சென்றும் நீரைப்பெற்றுக் கொள்கின்றனர்.

இதனைப் பெறுவதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலையும் இப்பிரதேசத்து மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றன. சில மாத காலப்பகுதியில், குறிப்பாக மே மாதத்திற்கு பிறகு செப்டெம்பர் மாதம் வரை கிணறுகளிலும் நீர்வற்றி, நீருக்காக போராடும் மக்களாக இப்பகுதி மக்கள் வாழ்கின்றனர்.

உன்னிச்சையில் இருந்து குடிநீர் திட்டத்தினை கொண்டு செல்வதற்கு முன்பாக ஆயித்தியமலையில் நீர்சுத்திகரிப்பு நிலையத்தினை அமைப்பதாகவே அங்கு வாழும் மக்களிடம் கூறப்பட்டள்ளது.

இதனால் தமக்கும் நீர் கிடைக்குமென்ற மகிழ்ச்சியில் மக்கள் இருந்துள்ளனர். மக்களிடம் கூறிய கூற்றுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளாமால் வவுணதீவில் சுத்திகரிப்பு நிலையத்தினை அமைத்து நகர்ப்புறத்திற்கு நீரை கொண்டு சென்றிருக்கின்றனர்.

இதனால் நீரைப் பெறுவதிலும் ஏமாற்றப்பட்ட சமூகமாக இப்பிரதேசத்து மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். நகரில் உள்ளவர்கள் குறித்த நீரைப்பயன்படுத்தி தமக்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கின்ற போதும், குடிப்பதற்கு நீரின்றி ஆர்ப்பாட்டங்களை நடாத்தும் மக்களாக மட்டுமே மாற்றப்பட்டுள்ளனர்.

கித்துள் கிராமத்தில் 280 குடும்பங்கள் வாழ்கின்ற போதும், இங்கு 40 முஸ்லிம் சகோதரத்துவ குடும்பங்களும் வாழ்கின்றனர். இப்பிரதேசத்திலே ஒரு நீர்தாங்கியை அமைத்து அதன்மூலமாக 40முஸ்லிம் குடும்பங்களுக்கும் நீர்வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்பயனாக ஒரு சில தமிழ் குடும்பங்களுக்கும் இந்நீர்வசதி கிடைத்திருக்கின்றது. பல வருடங்களாக தமிழ் மக்கள் இங்கு வாழ்கின்ற போதும் தமக்கான குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகள் முன்வரவில்லையென்ற மனஆதங்கம் அங்கு வாழும் தமிழ் மக்கள் மத்தியிலே இன்றும் இருந்து கொண்டிருக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் யாரேன்றே தெரியாத மக்களாகவும் சிலர் காணப்படுகின்றனர். வாக்கு கேட்டு வருகைதந்த போதிலும் நன்றி சொல்லக்கூட எம்மிடம் வரவில்லை.

இந்த நிலையில் எவ்வாறு எமது குறைகளை ஆராய்ந்து இவர்கள் தீர்த்து வைப்பார்கள் என்ற வெறுப்பிலும் வாழ்கின்ற மக்களாகவே இவர்கள் தோற்றமளிக்கின்றனர். 2012ஆம் ஆண்டு கற்பானை குளத்தில் இருந்து நீர் தருவதாக கூறி பல இட்சம் ரூபாய் செலவில் குளத்திற்கு கீழே கிணறு அமைக்கப்பட்டது.

அவ்விடத்தில் கிணறு அமைப்பது பொருத்தமற்றது. குளத்துக்குள்ளே கிணற்றினை அமையுங்கள் எனக்கூறினோம். எங்களது கருத்தினை பொருட்படுத்தாமல் அவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுத்ததாக அப்பகுதி மக்கள் கூறினர்.

ஆனால் இன்று அவை பயன்படாத நிலையில் தோல்வி கண்டுள்ளது. இதனால் பல ரூபாய் பணம் வீண்விரயமாக்கப்பட்டுள்ளது. மேலும் நீரின்றிய பிரச்சினையினால் தாம் கலாச்சார சீர்கேடுகளை எதிர்கொள்வதாகவும் அதாவது பொது இடங்களில் குளிக்கின்ற நிலைமையினால் பல பெண்கள் பல்வேறு சிரமங்களையும் எதிர்கொள்கின்றதாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றமை மனவேதனைக்குரியதே.

அடிப்படை வசதியின்மையால் அல்லல் (வீடு மற்றும் மலசல கூட வசதியின்மை)

நியாப், யூ.என்.கபிராட், நேப், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நிறுவனங்களினால் இப்பகுதியில் உள்ள சில குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன.

அதே போன்று மலசலகூடங்களும் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும் பலவிடத்தில் இன்றும் களிமண்வீடுகளே இக்கிராமங்களில் அதிகம் காட்சி கொடுக்கின்றன.

களிமண் வீடுகளினுள்ளே புற்றும் மேலெழுந்துள்ளது. பாம்புகளின் நடமாட்டமும் இருந்துகொண்டு தான் இருக்கின்றன. இறைவனின் நம்பிக்கையிலே வாழ்ந்து கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

வீட்டின் கூரைக்கு தகரமும், சில இடங்களில் ஓலைமட்டையும் வேயப்பட்டிருக்கின்றன. தகரவீட்டிலே கொழுத்தும் வெயிலில் குடியிருக்க முடியவில்லையென்ற கவலையையும் அப்பகுதி மக்கள் வெளியிடுகின்றனர்.

களிமண் வீடுகளை வளைத்துள்ள சுவர்ப்பகுதிகளில் குழிகளும் காட்சி கொடுக்கின்றன. இந்த நிலையில் பாதுகாப்பாற்ற வீட்டில் மற்றும் சூழலிலேயே தங்களது வாழ்வை கொண்டு செல்கின்றனர்.

விரைவில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக அதிகாரிகள் கூறுகின்றனரே தவிர இதுவரை எந்தக் குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கற்பானைக் கிராமத்தில் 56 குடும்பங்கள் வாழ்கின்ற போதும், இங்கு 36 குடும்பங்கள் மலசலகூட வசதி இன்றி பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்தே வாழ்கின்றனர். மலசல கூடங்களாக தமது இருப்பிடங்களுக்கு அண்மையில் உள்ள பற்றைக்காடுகளை இவர்கள் பயன்படுத்தினர்.

தற்போது அவை இல்லாமலாக்கப்பட்ட நிலையில் நல்லாட்சியில் கூட இப்பகுதி மக்கள் மலசலகூட வசதிக்காக பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றமை நல்லாட்சிக்கு ஆரோக்கியமானதா என்பதை நல்லாட்சியே உணர்ந்து கொள்ளவேண்டும்.

தொடரும் அனர்த்தங்களால் பாதிப்பு (குளங்கள் உடைப்பும், வெள்ளமும்)

குறித்த பிரதேசத்தில் அதிகமாக மழைபெய்கின்ற காலப்பகுதியில், இப்பகுதியில் குறிப்பாக கற்பானைக்குளம் நிரப்பி குளம் உடைப்பெடுக்கின்ற சம்பவங்களும் அதிகம் இடம்பெறுகின்றன.

இதனால் மக்கள் குறித்த காலப்பகுதியில் இடம்பெயர்வதுடன், வீதிகளின் போக்குவரத்து தடைப்படுவதுமே கடந்த கால அனுபவங்களாக அப்பகுதிமக்கள் கூறுகின்றனர்.

இக்குளத்திற்கு வான்கதவுகள் இல்லாமையே இவ்வாறு உடைப்பெடுப்பதற்கு காரணமாக அமைகின்றன. அவற்றினை அமைக்கின்ற போது வருடாந்தம் இப்பகுதியிலே நடைபெறும் வெள்ள அனர்த்தத்தினை குறைக்க முடியும் என்பது அப்பகுதி மக்களின் கருத்தாக இருக்கின்றது.

தொழில்வாய்ப்பின்றிய வாழ்க்கைச் சூழல்

மீன்பிடி, கூலிவேலை, கால்நடை வளர்ப்பு, மேட்டுநிலப் பயிர்ச்செய்கை போன்ற பல வேலைகளை இப்பகுதி மக்கள் மேற்கொண்டுவருகின்றனர்.

கல்வித்துறையில் சிறிது, சிறிதாக வளர்ச்சி அடைகின்ற மக்களாக இருக்கின்ற பிரதேசமாக காணப்படினும் தமது பிள்ளைகளின் கல்வி எதிர்காலத்தை செவ்வனே நிறைவேற்றுவதற்கு முடியாத சமூகமாகவே காணப்படுகின்றது.

எனினும் பிள்ளைகளை கற்பிக்க வேண்டுமென்பதில் அதிக அக்கறையாக செயற்படுகின்றமையும் பெற்றோரின் பேச்சுக்களில், செயற்பாடுகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது.

ஆனாலும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு என்பது சிறிதளவும் இல்லாத நிலையே காணப்படுகின்றது. இக்கிராமங்களை அண்டிய பகுதியில் கரடியநாறு விவசாய பண்ணை அமைந்துள்ள போதிலும், அங்கு இக்கிராமங்களைச்சேர்ந்த குறிப்பிட்ட அளவிலான நபர்களே வேலை செய்கின்றனர்.

இங்கு சம்மாந்துறை, அக்கரைப்பற்று மகாஓயா எனும் தூர பிரதேசங்களை சேர்ந்தவர்களே அதிகம் வேலை செய்வதாகவும், தம்மை அண்டிய பகுதியில் பண்ணை அமைந்துள்ளமையினால் தமது பகுதியினைச் சேர்ந்தவர்களையே இதில் வேலை செய்வதற்கு நியமனம் செய்திருக்க வேண்டும் என்ற கருத்தும் இங்குவாழ்கின்ற மக்களிடம் நிலவுகின்றன.

அதேபோன்று தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு அவற்றின் ஊடாக வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டுமென்பதும் அவர்களது எதிர்பார்ப்புக்களாக இருக்கின்றன. மீன்பிடியில் ஈடுபடும் விவசாயிகள், அலங்கார மீன்களினால் பாதிப்பினை எதிர்கொண்டிருக்கின்றனர்.

வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அலங்கார மீன் இனங்கள் குளங்களிலே இடப்பட்டுள்ளமையினால், அவை பெருகி அவ்வாறான மீன்களே வலைகளில் பிடிபடுகின்றது.

இதனால் வலைகள் சேதமாக்கப்படுவதுடன் கைகளிலே புண்கள் ஏற்படுவதுமே தொழில் பிரதிபலிப்பாகியுள்ளது. 10கிலோ கிராம் மீன் பிடிப்பட்டால் ஒரு கிலோகிராம் மீன்தான் உள்ளூர் மீன்கள் பிடிபடுகின்றன.

அலங்கார மீன்களை உண்பதற்கும் யாரும் விரும்புவதில்லை, வேறு தேவைக்கு பயன்படுத்துவதற்கு இதனை கொள்வனவு செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை. தொடர்ச்சியாக இதனது இனப்பெருக்கத்தின் ஊடாக எமது உள்ளூர் மீன்கள் அருகிக்கொண்டே செல்லும் நிலையும் ஏற்படுகின்றது என்பதும் அம்மக்களின் கருத்துக்களாக இருக்கின்றன.

கருங்கல், ஆற்றுமண், கிறவல் போன்ற கனியவளங்கள் இப்பகுதியிலே அதிகம் காணப்படுகின்றன. இங்கிருந்து அவ்வாறான வளங்கள் பிற இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.

இவற்றினை ஏற்றிச்செல்வதற்கு அதிகமாக பிற பிரதேசங்களை சேர்ந்தவர்களுக்கே அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஒருசிலருக்கும் அவ்வாறான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், எமது பகுதியினைச் சேர்ந்தவர்களுக்கே அதிகம் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இப்பகுதி மக்களிடையே வேண்டப்படுகின்றன.

யானையின் தாக்கமும், பாதுகாப்பு இன்மையும்

பெரும்பாலும் வனத்தை அண்டிய இப்பகுதியில் மக்கள் வாழ்கின்றமையினால், காட்டு யானைகளின் தாக்கம் அதிகம் இடம்பெறுகின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கு மின்சார வேலிகள் ஒழுங்காக அமைக்கப்படவில்லை.

அமைப்பதற்காக கொண்டு வரப்பட்ட பொருட்கள் கித்துள் குளத்தின் நீர்பாசன திணைக்கள வளாகத்திற்குள்ளே அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக எந்த நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டுக்களையும் இப்பகுதி மக்கள் முன்வைக்கின்றனர்.

இவ்வாறான வேலைத்திட்டங்களை விரைவாக முன்னெடுத்து தமக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதே இம்மக்களின் கோரிக்கைகளாவும் இருக்கின்றன.

கிராமப்புறங்களின் அபிவிருத்திகளில், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பின் நிற்கின்றமையே இந்த நாட்டிலே கிராமப்புறங்கள் பலதுறைகளில் வளர்ச்சியடையாமல் இருப்பதற்கான பிரதான காரணங்களாக இருக்கின்றன.

கிராமப்புறங்களில் உள்ள வளங்கள் பலவற்றினை அனுபவிப்பவர்களாக நகர்ப்புறமக்கள் காணப்படுகின்றனர். ஆனால் அதே வளங்களைக் கொண்டிருந்தும் அனுபவிக்க முடியாதவர்களாக கிராம மக்களே வாழ்கின்றனர்.

தேர்தல்கள் இடம்பெறுவதற்கு முன்பு அனைத்து கிராமங்கள் தோறும் செல்லும் மக்கள் பிரதிநிதிகள், தாம் வெற்றியடைந்த பின்பு அவற்றினை திரும்பிப் பார்க்கவில்லை என்று கூறுகின்றமை கவலையளிக்கின்ற விடயமேயாகும்.

கிராமப்புறங்கள் என்றால் எதையும் செய்து கொள்ளமுடியும், பார்ப்பதற்கு, கேட்பதற்கு யாரும் இல்லையென நினைக்கும் ஒருசில அதிகாரிகள் தமக்கானதை அம்மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டு, அவர்களுக்கான வேலைகளை செய்துகொடுக்காமால் ஏமாற்றுவதும் நிறைவுபெற்றதாகவில்லை.

அர்ப்பணிப்போடும், சேவை உணர்வோடும் மக்களுக்காக சேவையாற்றும் அதிகாரிகள் பலரும் ஒருசில அதிகாரிகளின் செயற்பாடுகளினால் இழுக்கை எதிர்கொள்ள நேரிடுகின்றது. இப்பகுதி மக்களும் ஆடு, மாடு, உணவு, பணம், ஏனைய பொருட்கள் என பலவற்றையும் ஒரு சில அதிகாரிகளுக்கு கொடுத்து ஏமாற்றமடைந்து நிற்பதாகவும், சிலர் பயனடைந்துள்ளதாகவும் அம்மக்கள் குறிப்பிட்டனர்.

நகர்ப்புறங்களை நாடியும், நிகழ்வுகளில் கலந்து கொள்வதிலும் அதிகம் ஆர்வம் காட்டும் அரசியல்வாதிகள் கிராமப்புறங்களை நாடிச்சென்று மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டும்.

20 நபருக்கு 05 ஏக்கர் காணி பிரதேச செயலாளரினால் இப்பகுதியில் வாழும் வறிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அக்காணி ஒருசகோதர இனத்தினை சேர்ந்தவருடையது எனக்கோரி அவரினால் வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவ்வழக்கு தாக்கல் இன்றுவரை முடியாத நிலையில் அன்றாட வாழ்வினை களிப்பதிலே சிரமங்களை எதிர்கொள்ளும் மக்கள் நீதிமன்றம் வரை சென்று வருகின்ற நிலையும் இருப்பதாக கூறி ஆதங்கப்படுகின்றனர்.

தமது குடும்பத்தினை வழி நடத்திச் செல்வதற்கு வசதியின்மையினால் நஞ்சை அருந்தி இறப்பதற்கு முற்பட்ட முதியவர் ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

எனவே இவ்வாறான வறுமையின் பிடியிலும், காணி அனுமதிபத்திரம் இன்றியும், பல அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாமலும், மாவட்டத்தின் எல்லைப்பகுதியிலும், காட்டுப்பகுதியிலும் வாழ்வை வழிநடத்திச் செல்லும் மக்கள் தொடர்பிலும் அதிகாரிகளின் கவனமும், அரசியல்வாதிகளின் அயராதசேவையும் இடம்பெறவேண்டும் என்பதே அப்பகுதிவாழ் மக்கள் உட்பட அனைவரதும் விருப்பமாகும்.

http://www.tamilwin.com/articles/01/142815?ref=view-latest

  • கருத்துக்கள உறவுகள்

இது படுவாஙக்ரையின் மறு பக்கம்   கண்டு கொள்வார் யாரும் இல்லை செங்கலடிச்சந்தியில் இருந்து சென்றால் இதில் கூறப்பட்ட சில ஊர்க்களை காணாலாம்  உன்மையை அறிந்து கொள்ள அறிக்கை விடும் மட்டக்களப்பு அரசியல் வாதிகள் கண்டு கொள்ள வேண்டும்  இதில்  மாகாண சபை உறுப்பினர் கருணாகரம் (ஜனா) அடிக்கடி இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் ஆன உதவிகள் செய்வதைகேள்வி பட்டிருக்கிறேன் 

7 minutes ago, முனிவர் ஜீ said:

இது படுவாஙக்ரையின் மறு பக்கம்   கண்டு கொள்வார் யாரும் இல்லை செங்கலடிச்சந்தியில் இருந்து சென்றால் இதில் கூறப்பட்ட சில ஊர்க்களை காணாலாம்  உன்மையை அறிந்து கொள்ள அறிக்கை விடும் மட்டக்களப்பு அரசியல் வாதிகள் கண்டு கொள்ள வேண்டும்  இதில்  மாகாண சபை உறுப்பினர் கருணாகரம் (ஜனா) அடிக்கடி இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் ஆன உதவிகள் செய்வதைகேள்வி பட்டிருக்கிறேன் 

தமிழ் மக்கள் எந்த உதவியும் செய்வதில்லை

சில வருடங்களில் இவர் எல்லாம் முஸ்லிமாக்க மாறியிருப்பார்கள்.

அதுக்கு பிறகு முஸ்லீம் மதம் மாற்றுகிறான் என்று ஒப்பாரி வைக்க வேண்டியது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Dash said:

தமிழ் மக்கள் எந்த உதவியும் செய்வதில்லை

சில வருடங்களில் இவர் எல்லாம் முஸ்லிமாக்க மாறியிருப்பார்கள்.

அதுக்கு பிறகு முஸ்லீம் மதம் மாற்றுகிறான் என்று ஒப்பாரி வைக்க வேண்டியது.

ஏறாவூர் சித்தாண்டி பகுதிகளில் சில ர் மதம் மாறி விட்டார்கள் இன்னொரு விஷயம் காத்தான் குடியிலுள்ள முஸ்லீம் மக்கள் அங்குள்ள நிலங்களை , வீடுகளை பல கோடிகளுக்கு விற்று தற்போது நாவலடி  வாழைச்சேனை தாண்டிய பகுதிகளில் குடியேறி வருகிறார்கள்  கிழக்கு அரிக்கப்படுகிரது என்று சொல்லாம் 

55 minutes ago, முனிவர் ஜீ said:

ஏறாவூர் சித்தாண்டி பகுதிகளில் சில ர் மதம் மாறி விட்டார்கள் இன்னொரு விஷயம் காத்தான் குடியிலுள்ள முஸ்லீம் மக்கள் அங்குள்ள நிலங்களை , வீடுகளை பல கோடிகளுக்கு விற்று தற்போது நாவலடி  வாழைச்சேனை தாண்டிய பகுதிகளில் குடியேறி வருகிறார்கள்  கிழக்கு அரிக்கப்படுகிரது என்று சொல்லாம் 

இவ்வாறு மதம் மாறியவர்களை மீண்டும் மதம் மாற்ற முடியாத ?

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für மேயர் சிவகீதா பிரபாகரன்  Bildergebnis für மேயர் சிவகீதா பிரபாகரன்

Ähnliches Foto

Bildergebnis für மேயர் சிவகீதா பிரபாகரன் 

Bildergebnis für மேயர் சிவகீதா பிரபாகரன்

மக்களின் அவலத்தை கவனிக்காமல்.... மட்டுநகர் முன்னாள் மேயர் சிவகீதா, 
விபச்சார விடுதி நடத்தி கைது செய்யப்பட்டது,  பெரும் அவமானம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.