Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடியுடன் எந்தவிதமான பொருளாதார உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட மாட்டாது..!

Featured Replies

மோடியுடன் எந்தவிதமான பொருளாதார உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட மாட்டாது..!

 

harsha_de_silva.jpg

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது எந்தவிதமான பொருளாதார உடன்படிக்கைகளையும் மேற்கொள்ள போவதில்லை. இரு நாடுகளின் நட்புறவு பலமடையும் வகையிலேயே இந்த விஜயம் அமைந்துள்ளது என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கடந்த ஆட்சியில் மேற்கொண்ட மோசமான உடன்படிக்கைகள் இந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்படாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகைதரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உடன்படிக்கை எவையும் மேற்கொள்ள படுமா என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/19905

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

இரு நாடுகளின் நட்புறவு பலமடையும் வகையிலேயே இந்த விஜயம் அமைந்துள்ளது என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

மாமனா மச்சானா நட்புறவு கொண்டாட .....முக்கிய விட்யமே வியாபாரம் தான் ,கைச்சாத்திட வேண்டிய அவசியமில்லை கைச்சாத்திடாமல் வியாபாரம் பண்ணும் அளவுக்கு இந்தியாவி செல்வாக்கு அதிகரித்து வருகின்றது...

  • கருத்துக்கள உறவுகள்

மோடியின்

 இரண்டாவது இலங்கைப் பயணம் இது. இந்தப் பயணத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையே வளர்ச்சி ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இந்த நிலையில், இந்தப் பயணம்குறித்து தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ட்வீட் செய்துள்ளார், மோடி.+

இந்தியா பத்திரிகைகள் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என்று  சொல்கின்றன ஆனால் இலங்கை மந்திரிமார் நட்புறவு மட்டுமே எங்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

 . 

இவங்க சொல்றது ஒண்டு செய்யிறது ஒண்டு GSB கிடைக்காமலே GSB கிடைச்சுட்டுது என்று மேளம் அடிச்சவங்கள். சைனாவை சமாளிக்க இல்லைஎன்பான்கள் பிறகு பின்கதவால் ஒப்பந்தம் முடிந்தபிறகு நாலு ஐந்து மாதம் கழித்து ஒரு மொட்டை இலங்கையை வித்துவிட்டான்கள் இந்தியாவுக்கு என்று அழுது புரளும் அப்பத்தான் நியூஸ் வெளியில் வரும் . 

சிலவேளை இது காரணம் ஆக இருக்கலாம் 

 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப என்னாத்துக்கு இவர் அடிக்கடி சொறீலங்காவுக்கு வந்து போறார். யார் யாருக்கு எவ்வளவு அடகுக்கு விட்டிருக்கென்று கணக்குப் பார்க்கவா..?! இவை யார் வந்து போனாலும்.. ஹிந்தியாவின் செல்வாக்கில் சொறீலங்கா இப்ப இல்லை. அது புலிகளோடு இந்திய நட்புப்பாராட்டிய காலத்தோடு தொலைந்து விட்டது.  tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, putthan said:

மாமனா மச்சானா நட்புறவு கொண்டாட .....முக்கிய விட்யமே வியாபாரம் தான் ,கைச்சாத்திட வேண்டிய அவசியமில்லை கைச்சாத்திடாமல் வியாபாரம் பண்ணும் அளவுக்கு இந்தியாவி செல்வாக்கு அதிகரித்து வருகின்றது...

உண்மை!
புத்தன் நீங்கள் அங்கதமாகச் சொல்லவில்லைத்தானே.

இந்தியாவினது முழுமையான வளைப்புக்குள் வந்துவிட்டநிலையில் சிறுவியாபாரிகள் ஆங்காங்கே புடவை அது இது என்று வீடுகளில் வாடகைக்கு இருந்து  செய்கிறார்கள். இனி சிறிலங்காவால் எதையும் செய்ய முடியாது. அப்படி இவர்கள் ஏதாவது செய்ய முற்படின் அது இவர்களுக்கு அரசியல் மற்றும் அரசியல் உறவுசார் சிக்கல்களைத் தோற்றுவிக்கலாம். மூன்றில் இரண்டுபகுதி கடல்வளத்தைக் கெண்டுள்ள தமிழர்தாயகப் பகுதியைப்(மக்களையல்ல) புறம்தள்ளி சிங்களமோ கிந்தியமோ சிந்திக்க வாய்ப்பில்லை. கிந்தியாவுக்கு அம்பாந்தோட்டையெல்லாம் பெரிய சிக்கலே கிடையாது. அதனுடைய கவனமெல்லாம் திருகோணமலை முதல் மன்னார் வரையே.

சிறிலங்கா  தமிழினத்தைச் சமத்துவமான பங்காளராகவேற்று நிலைமையைச் சரியாகக் கையாண்டிருப்பின் (இப்போதும் காலம் செல்லவில்லை) இலங்கைத்தீவினது இரண்டு பங்காளர்களதும் ஒற்றுமையே போதும் அன்னியச்சுரண்டலைத் தடுத்து நிறுத்திச் சுயதொழில் முன்னேற்றமுடைய நாடாக உலகில் நிமிர. 

எங்கள் தலைவன் சொன்னதுபோல் மகாவம்சமாயையில் உளலும் சிங்களத்தால் சிந்திக்க முடியாது.  ஈழத்தீவிலே மகிந்தவால்(பௌத்தம் அசோக சக்கரவர்த்தியின் மகனாகிய மகிந்தவினால் தேவநம்பிய தீசன் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது)  பரப்பப்பட்ட பெளத்தம் அன்பு கருணை இரக்கம் எளிமை சமத்துவம் போன்ற நற்குணவியல்புகளைப் போதிப்பது. ஆனால் மகாவம்சம் அப்படியானதல்ல. எனவே மகாவம்சத்தை தமது புனித நூலாகக்கொள்ளும் சிங்களம் எப்படியான சிந்தனையில் அல்லது கருத்துநிலையில் இருக்கும் என்பதை ஆய்வு செய்ய வேண்டியதில்லையல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nochchi said:

 

சிறிலங்கா  தமிழினத்தைச் சமத்துவமான பங்காளராகவேற்று நிலைமையைச் சரியாகக் கையாண்டிருப்பின் (இப்போதும் காலம் செல்லவில்லை) இலங்கைத்தீவினது இரண்டு பங்காளர்களதும் ஒற்றுமையே போதும் அன்னியச்சுரண்டலைத் தடுத்து நிறுத்திச் சுயதொழில் முன்னேற்றமுடைய நாடாக உலகில் நிமிர. 

 

அன்னியசுரண்டலின் புதிய பெயர் உலகமயமாக்கல் .இனி அந்த ஆண்டவனாலும் சிறிலங்காவை சொர்க்க புரியாக மாற்றமுடியாது...இந்தியா தோல்வியை சந்தித்தால் சிறிலங்காவில் புரட்சி வெடிக்கும்.மீண்டும் சிறிலங்காவை காப்பாற்ற ஐயா வருவார்..

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

அன்னியசுரண்டலின் புதிய பெயர் உலகமயமாக்கல் .இனி அந்த ஆண்டவனாலும் சிறிலங்காவை சொர்க்க புரியாக மாற்றமுடியாது...இந்தியா தோல்வியை சந்தித்தால் சிறிலங்காவில் புரட்சி வெடிக்கும்.மீண்டும் சிறிலங்காவை காப்பாற்ற ஐயா வருவார்..

உலகமயமாதலில் தமது கடைகளைத்திறப்பதற்கே ஈழத்தில் புலிகள் அழிக்கப்பட்டார்கள். ஏனென்றால் புலிகளின் படைத்துறைப்பலமென்பது நிரந்தரமாகுமானால் எந்தவொரு நாடும் தமிழீழக் கடற்பரப்பிலோ நிலத்திலோ விரும்மிய ஆட்டத்தை ஆடமுடியாதென்பதே. கில்மனைட் கப்பலைத் தாட்டபோதே அமெரிக்க செல்லப்பிள்ளையான யப்பானுக்கும் உலகுக்கும் புலிகளின் நிலைப்பாடு புரிந்திருக்கும். 

இன்று உலகமென்பது சுருங்கிவிட்டது என்பதல்ல. சுருக்கிக் கயிற்றைப்போட்டு இழுத்தவாறு பலம்பொருந்திய நாடுகள் தமது திட்டடங்களை நடைமுறைப்படுத்தகின்றன. இதிலே ஏழைநாடுகள் நாடற்றவர்கள் தாயகத்தை இழந்தவர்கள் நாடிழந்த இனக்குழுமங்கள் அதிக பாதிப்பை எதிர்கொள்கின்றன. இவர்களது உலகமயமாதலில் எதிர்காலத்தில் உலகமே இல்லாது போகப்போகிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.