Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைதிக்குப் பெயர்தான் சாந்தி....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைதிக்குப் பெயர்தான் சாந்தி....

'சாந்தி எழும்பு பிள்ளை' றோட்டில ஒரே சனநடமாட்டமாக் கிடக்கு. என்ன பிரச்சினையோ தெரியாது.' என்றபடி படலையைத் திறந்து தெருவை நோட்டமிட்டாள் மலர்.
'என்னக்கா என்ன பிரச்சினை?' என்று பக்கத்து வீட்டு மனோகரியை கேட்டாள்.
'என்னவோ தெரியாது. எல்லோரும் வெளிக்கிட்டுப் போகினம். ஆமி இறங்கீற்றுதெண்டு கதைக்கினம். உண்மையோ தெரியாது' என்றபடி மனோகரியும் தன் வீட்டு படலையை பூட்டினாள்.
வீதியில் செல்பவர்கள் பதட்டத்துடனும் அவசரத்துடனும் ஓடிச்செல்வதனைக் காணக்கூடியதாய் இருந்தது.
மலரின் மனதுக்குள் நிறையக் குழப்பங்கள்.
கணவன் மாணிக்கத்தை நினைக்க என்ன செய்வதென்று தெரியால் திகைத்தாள்.
இப்படி ஒவ்வொரு முறையும் ஒடிப்போய்விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்த சந்தர்ப்பங்கள் ஏராளம்.
ஓவ்வொரு முறையும் மாணிக்கம் மலருடன் சண்டை போட்டு பெரிய அட்டகாசப் படுத்தி விடுவான்.
இம்முறை எப்படியோ?
வளர்ந்த மூன்று பிள்ளைகள் வீட்டிலிருக்கிறார்கள். மலருக்கு மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பதுபோல இருந்தது.
சங்கர் சுந்தர் இருவரும் 17 வயதைத் தாண்டியவர்கள். சாந்தி சென்ற மாதம்தான் மலர்ந்த புத்தம் புதுமலர்.
வீட்டிற்குள் ஓடிச் சென்ற மலர் ஒன்றிரண்டு மாற்றுடைகளைச் சேகரிக்கத் தொடங்கவும் மாணிக்கம் கோவத்துடன் கத்தவும் சரியாக இருந்தது.
'இதுகளுக்கு வேற வேலை இல்லை. அங்க ஆமியும் இறங்க இல்லை ஒண்டும் இல்லை. சும்மா சும்மா ஓடிறதும் வாறதுமே இதுகளுக்கு வேலையாப் போச்சு.'
'ஏய் மலர் நீ சும்மா வீட்டுக்குள்ள இரு பாப்பம். ஏத்தனை தடவை இப்படிப் போயிற்று வந்திருக்கிறாய்'
கணவனின் பேச்சு அவளை அவளது அவசரத்தை நிறுத்தியது.
ஊரோடினா ஒத்தோடு எண்டுசு;மாவா சொல்லியிருக்கினம். மனதுக்குள் மறுகியபடி
இந்த மனுசனோட மல்லுக்கட்ட ஏலாது. சரி. நடப்பது நடக்கட்டும் என்று நினைத்தபடி 'நாங்க இருப்பம் பரவாயில்லை. மூத்தவன்கள் இரண்டு பேரையும் சைக்கிள எடுத்துக்கொண்டு கோயிலடிக்கு போகச் சொல்லுவம்' என்றாள் ஆற்றாமையுடன்.
'உனக்கென்ன விசரா? நாங்க பக்கத்தில இருந்தாத்தான் பிள்ளையளுக்கப் பாதுகாப்பு. அதுகள தனிய விட்டா எவனாவது பிடித்துக்கொண்டு போகவா? என்றுஉரத்துக் கத்தவும் மலர் அடங்கிப் போனாள்.
ஊரெல்லாம் ஓடிக்கொண்டிருக்க வானில் இரும்புப் பறவைகள் இரைதேடிப் பறக்கத் தொடங்கின.
திடீரென்று குண்டுகள் கொட்டவும் வெடியோசை கேட்கவும் ஆரம்பித்தன.
மலர் கணவன் பிள்ளைகளுடன் ஏற்கனவே ஆயத்தமாக இருந்த பங்கருக்குள் சென்று பாதுகாப்புத் தேடிக்கொண்டனர்.
அப்பொழுது அந்த வீதியால் ஓடி வந்துகொண்டிருந்த பாக்கியம் அதற்கு மேலும் ஓடமுடியாமல் மலர் வீட்டுப் படலை திறந்திருப்பதைக் கண்டதும் அவசரமாக ஓடிவந்து அந்த பங்கருக்கள் அவர்களுடன் அடைக்கலமானாள்.
வெடியோசைகள் காதைப் பிளந்தன.
சத்தங்கள் வரவர அண்மித்துக் கொண்டு வருவதை அவதானித்த மலர் தன் இஸ்டதெய்வங்களையெல்லாம் மானசீகமாக மனதில் நிறுத்தி கும்பிடத் தொடங்கினாள்.
காலடியோசைகளும் வெடியோசைகளும் அண்மித்து வருவது துல்லியமாகக் கேட்டது.
புரியாத மொழியில் சத்தம்போட்டுக் கதைப்பதும் கூப்பாடு போடுவதும் கும்பல் கும்பலாக சிங்கள இராணுவம் தம் தெருவுக்குள் வருவதை உணர முடிந்தது.
வேலிகளையெல்லாம் வெட்டி வீழ்த்தும் ஓசைகளும் கூச்சலும் அங்கே ஓரு பயங்கரமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.
அவர்கள் அடைக்கலமாகி இருந்த பங்கருக்கு மேல் சப்பாத்துக் கால்களின் காலடித் தடங்கள் நெருங்கி வந்திருப்பதை உணர்ந்த அனைவரும் பயத்தில் உறைந்து போய் இருந்தனர்.
துப்பாக்கி முனைகள் பங்கரை நோக்கி நீட்டியபடி சிங்களமொழியில் அனைவரையும் வெளியே வரும்படி கட்டளை அதிகாரமாக வெளிப்பட்டது கர்ணகடூரமாக வெளிப்பட்ட அந்த குரலைக்கேட்டதும் ஒவ்வொருவராக வெளிப்பட ஆரம்பித்தனர்.
அங்கு நின்ற இராணுவத்தினர் துப்பாக்கியுடன் ஆயத்த நிலையில் நிற்க அவர்களை அண்டியபடி நின்ற ஒரு பெரிய குழுவினர் பார்ப்பதற்கே பயங்கரமான தோற்றத்துடன் காட்சியளித்தனர்.
அவர்கள் அணிந்திருந்த ஆடைகளில் மனித மண்டையோடு வரைந்திருந்தது.
தலையில் சிவப்புப் பட்டிகள் கட்டப்பட்டிருந்தது.
முகத்திதல் பல வர்ணக் கோடுகள் கண்கள் மட்டும் கொள்ளிவாய்ப் பசாசுகள்போல பளபளத்துக்கொண்டிருந்தன.
அந்த விழிகளில் தெரிந்த வெறியுடன் கைகளில் பெரிய கத்திகள் பொல்லுகள் இரும்புக்கம்பிகள்
பேய்களைப் பற்றி கதைகளிலும் கற்பனைகளிலும்தான் இதுவரை கண்டுவந்தவர்கள் இப்பொழுது நேரிலேயே பார்த்துவிட்ட பயத்தில் வாயடைத்துப் போய் 'கடவுளே கடவுளே என்று மனதுக்குள் கடவுளை மட்டுமே அவ்வேளையில் துணைக்கழைக்க முடிந்தது.
அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற அங்கலாய்ப்பு மட்டுமே அவர்களை நிலை குலைய வைத்தது.
முதலில் வெளியே வந்த இரண்டு வாலிபர்களைக் கண்டதும் அவர்கள் விழிகளில் கொலைவெறி. ஏதேதோ தம் மொழியில் சத்தமிட்டு கொக்கரித்த வண்ணம் கூச்சலிட்டவர்கள் அடுத்து செப்புச்சிலைபோல அந்தப் புத்தம் புது மலரைக் கண்டதும் விழி விரிய விரசம் வழியும் வினோதமான பார்வையுடன் அவளது கைகளைப் பற்றி இழுத்தனர்.
இந்நிலையில் வாய் திறந்து கத்தக்கூட திராணியற்றவர்களாய் பெற்றவர்கள் பார்த்திருக்க அச் சிறுமியை கதறக் கதற இழுத்துச் சென்றனர். 'அம்மா அப்பா அண்ணா என்ற கதறல் அந்த இடத்தில் எதிரொலிக்க அவள் அண்ணாக்களில் ஒருவன் அவர்களின் பிடியிலிருந்து திமிறி தங்கையை நோக்கி ஓட எத்தனிக்க சடசட என்ற துப்பாக்கி ரவை அவனது மார்பைத் துளைக்க அய்யோ அம்மா என்ற கதறலும் அனைவரின் கதறல் ஒலியும் அங்கு சூழ்ந்திருந்த பேய்களின் அட்டகாசமான சிரிப்பொலியும் அந்த இடத்தின் பயங்கரத்தை அதிகமாக்கியது.
அடுத்ததாக மற்றைய வாலிபனின் கதறலொலி அவனது முடிவையும் பறைசாற்றியது.
கண்முன் இரு அண்ணாமாரும் சுருண்டு விழுந்து கிடப்பதைப் பார்த்து விக்கித்து நின்ற சாந்தியை வீட்டின் மண்டபத்திற்கு இழுத்துச் சென்ற பேய்கள் சுற்றிவர நின்று இச்சையுடன் அவளது ஆடைகளை கிழிக்கத் தொடங்கினர்.
அங்கு அதன்பிறகு நடந்ததை வார்த்தைகளில் எழுதமுடியாது.
இங்கு ஒரு கூட்டம் இப்படியான கொடுமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க பெற்றவர்கள் பங்கரை விட்டு வெளியே வர முடியாதபடி அடைத்தபடி நின்ற இராணுவத்தினர் தாமும் அந்த மண்டபத்தில் நடக்கும் களியாட்டத்தில் பங்குபெற எண்ணி கிரைனைட் கிளிப்பைப் கழட்டி பங்கருக்குள் எறிந்தனர்.
பங்கருக்குள் இருந்த மூவரும் உடல் சிதறி அதற்குள்ளேயே சமாதியாகினர்.
அந்தச் சின்ன மலரை இதழிதழாகப் பிய்த்து உருக்குலைத்து உயிரற்ற உடலை வெற்றுடம்பாக வீசி எறிந்து விட்டு வீட்டிலும் அயலிலும் கையிலகப்பட்ட ஆடு கோழி முதலியவற்றை சமைத்து விருந்துண்டு வெற்றிக்களிப்போடு அடுத்த வேட்டைக்க வெளிக்கிட்டனர். இப்படியான பல சோகக் கதைகள் தொண்ணூறில் எம் ஊரில் நடைபெற்றாலும் சில கதைகளே வெளி உலகிற்கு தெரிந்தன. பல கதைகள் இன்றுவரை காற்றோடு கலந்து கடலலையோடு சங்கமமாகி விட்டன.

                                                            -------------------------xx------------------------xx-------------------------------xx----------------------

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு கதை.மொத்தத்தில் தமிழர்கள் அனுபவித்த சோகக் கதை.இப்படியான சம்பவங்களால் போராளியாக சேர்ந்த பலர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் பட்ட துன்பத்தில் ஒன்று  கதையாக நினைவுகள் மட்டுமே மீட்டுசெல்கின்றன வாழ்வை

  • கருத்துக்கள உறவுகள்

ஞாபகப் பதிர்வுக்கு நன்றி அக்கா

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் நாளாந்தம் செத்து செத்து அமைதியை முற்றாக  இழந்திருந்தோம் அமைதிப் படையால்.....!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது போல் பல சோக  கதைகள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிப் போனது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.