Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது சிங்களவர்களின் நாடு : அதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் : அமைச்சர் மனோவிடம் அதிகார தொனியில் இனவாதமாக பேசிய ஞானசார : தகாத வார்த்தைகளும் பாவிப்பு (Video)

Featured Replies

இது சிங்களவர்களின் நாடு : அதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் :  அமைச்சர் மனோவிடம் அதிகார தொனியில் இனவாதமாக பேசிய ஞானசார : தகாத வார்த்தைகளும் பாவிப்பு (Video)

 

 

'இந்த நாடு யாருடையது? சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை நீங்கள் ஒத்து கொள்கின்றீர்களா?' என ஞானசார தேரர் அமைச்சர் மனோ கணேசனிடம் அதிகார தொனியில் கேள்வி கேட்க அதற்கு அமைச்சர், 'தேரரே இந்த நாடு சிங்கள, தமிழ் முஸ்லிம்..' என பதிலளிக்க முற்பட்டபோது இடைமறைத்த தேரர், 'இல்லை இல்லை இந்த நாடு யாருக்கு சொந்தமானது?' என கேட்க, அமைச்சர் 'இந்த நாட்டில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்று கூற முற்பட்ட போது, கோபமடைந்த தேரர் முறையற்ற சொற்களை பாவித்து இந்த நாடு பௌத்தர்களுக்கு சொந்தமானது என்று தெரியாமல் எப்படி நல்லிணக்கத்தை ஏற்படுத்து முடியும் என்றார்.

 

பிரச்சினை தொடர்பாக வீட்டு உரிமையாளரிடம் கதைக்காமல் வீட்டில் கூலிக்கு இருப்பரிடம் கதைப்பது எவ்வாறு நியாயமாகும். இந்த நாடு எங்களுக்கு சொந்தமானது. வந்து குடியேறிய தமிழ், முஸ்லிம்களே எங்கள் மொழி, எமது கலாசாரம் வரலாறு என்பவற்றை அறிந்துகொள்ள வேண்டும். சிங்கள மொழியை இவர்களே கற்றறிய வேண்டும். அதைவிடுத்து நாங்கள் எதற்காக தமிழை கற்க வேண்டும் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அமைச்சர் மனோ கணேசனிடம் இனவாதமாக பேசினார்.

மேலும் இந்த அமைச்சு பதவிக்கு நீங்கள் தகுதியற்றவர் எனவும் தேரர் தெரிவித்தார். அதற்கு அமைச்சர் மிகவும் பொறுமையான முறையில் பதிலளித்தார்.

 

 

இன்று முற்பகல் இராஜகிரியவில் உள்ள அமைச்சர் மனோ கணேசனின் காரியாலயத்துக்குள் நுழைந்த ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினேரே இவ்வாறு முறையற்ற தனமாக நடந்துள்ளனர்.

குறித்த காணொளி பின்வருமாறு 

 

 

 

http://www.virakesari.lk/article/20089

  • தொடங்கியவர்

மனோ கணேசனுக்கும் ஞானசார தேரருக்கும் இடையில் நேரடி வாதப்பிரதிவாதம்

 

DSC_5070.jpg

சிங்கள நாட்டில், தமிழ் நாட்டு முதலைமைச்சர் போன்ற நடந்துக்கொள்ள வேண்டாம்; இது சிங்கள-பெளத்த நாடு; சிங்களவர் சொந்தக்காரர்கள்; ஏனையோர் வெளியிலிருந்து வந்தோர்; சிங்களவரின் நல்லெண்ணத்தால் நீங்கள் வாழ்கிறீர்கள்; இந்நாட்டு மொழி சிங்களம் மட்டுமே; எல்லோரும் சிங்களம் படிக்க வேண்டும்; மகாவம்சத்தில் பொய்களும் உள்ளன. சகவாழ்வு அமைச்சை சிங்களவருக்கு கொடுக்க வேண்டும்.

  • அமைச்சர் மனோ கணேசனிடம் ஞானசார தேரர்

இது சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடு; எல்லோரும் இந்நாட்டுக்கு சொந்தக்காரர்கள்; சிங்களவரும் இந்தியாவிலிருந்து வந்தோர் என்றே மாகாவம்சம் கூறுகிறது; அமைச்சு பொறுப்புகளை தீர்மானிப்பது ஜனாதிபதி; சிங்களவர் மத்தியில் பிறந்து வாழ்கிறேன்: எனக்கு சிங்கள மக்களை பற்றி எவரும் எடுத்து கூற அவசியமில்லை; மும்மொழி இந்நாட்டு மொழிச்சட்டம்; சிங்களமும், தமிழும் ஆட்சி மொழிகள், ஆங்கிலம் இணைப்பு மொழி; அதுதான் அரசியலமைப்பு சட்டம்; அதை எவரும் மாற்ற முடியாது.

  • ஞானசார தேரரிடம் மனோ கணேசன்  

இன்று காலை, இராஜகிரியவில்  அமைந்துள்ள தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சுக்கு தனது ஆதரவாளர்களுடன் நேரடியாக வந்த பொதுபல சேனையின் செயலாளர் ஞானசார தேரருக்கும், அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன.   

பொதுபல சேனையின் செயலாளர் ஞானசார தேரர், கடந்த வாரம் கோரியதன் பேரில், இன்று காலை 10 மணிக்கு தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு அலுவலகத்தில் அமைச்சர் மனோ கணேசனை சந்திக்க, தேரருக்கு நேரம் ஒதுக்கி தரப்பட்டு இருந்தது. எனினும் நேற்று திடீரென நடத்திய ஊடக மாநாட்டில் அமைச்சர் மனோ கணேசனை, ஞானசார தேரர் கடும் விமர்சனம் செய்து, இந்த சகவாழ்வு அமைச்சை ஒரு சிங்கள அமைச்சருக்கு கொடுக்கவேண்டும் எனக்கூறியிருந்தார். இதையடுத்து அமைச்சர் மனோ கணேசன் இன்றைய சந்திப்பை இரத்து செய்திருந்தார். இந்த அமைச்சை தமிழர் வகிக்கக்கூடாது எனக்கூறும் நிலையில், சந்திப்பில் பயன் இருக்க போவதில்லை என்ற அமைச்சரின் செய்தி,  இன்று காலை ஞானசார தேரருக்கு அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்தே  ஞானசார தேரர், தனது ஆதரவு பிக்குகளையும் அழைத்துக்கொண்டு, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சுக்கு காலை 10 மணிக்கு வந்தார். இது அமைச்சர் மனோ கணேசனுக்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, முற்பகல் 10.45 மணியளவில் அமைச்சர் மனோ கணேசன், தனது அலுவலகத்துக்கு வந்து  ஞானசார தேரரை சந்தித்தார்.

இதன் போது ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களின் போது,  ஞானசார தேரர், அமைச்சர் மனோ கணேசனிடம்,  இந்த சிங்கள நாட்டில், தமிழ் நாட்டு முதலைமைச்சர் போன்ற நடந்துக்கொள்ள வேண்டாம்; இது சிங்கள-பெளத்த நாடு; இந்நாட்டுக்கு சிங்களவர் மட்டுமே சொந்தக்காரர்கள்; ஏனையோர் வெளியிலிருந்து வந்தோர்; சிங்களவரின் நல்லெண்ணத்தால்தான் நீங்கள் இங்கு வாழ்கிறீர்கள்; இந்நாட்டு மொழி சிங்களம் மட்டுமே; இங்கே வாழவேண்டுமென்றால், எல்லோரும் சிங்களம் படிக்க வேண்டும்; மகாவம்சத்தில் விஜயன் இந்தியாவில் இருந்து வந்தான் என்று எழுதப்பட்டுள்ளது பிழை; மகாவம்சத்தில் பொய்களும் உள்ளன. இந்த சகவாழ்வு அமைச்சை பெரும்பான்மை சிங்களவருக்கு கொடுக்க வேண்டும் என்று  கூறினார்.   

தேரர் கூறியவைகளை அமைதியாக செவிமடுத்த அமைச்சர் மனோ கணேசன், தான் கூறிவதையும் செவிமடுக்கும்படி தேரரிடம் கூறிவிட்டு,  இது சிங்கள, தமிழ், முஸ்லிம், பெளத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க நாடு; எல்லோரும் இந்நாட்டுக்கு சொந்தக்காரர்கள்; சிங்களவரும் இந்தியாவிலிருந்து வந்தோர் என்றே மாகாவம்சம் கூறுகிறது; விஜய இளவரசன் இந்தியாவில் இருந்து இந்நாட்டுக்கு வந்து இறங்கி, ஆதிவாசி குவேனியை மணந்து, பின் அவளை விட்டுவிட்டு, தென்னிந்திய பாண்டிய நாட்டில் இருந்து, இளவரசியை அழைத்து வந்து, மணந்துக்கொண்ட பிறகே சிங்கள இனம் உருவாகியது என்றே மகாவம்சத்தில் நான் படித்துள்ளேன். எங்கள் அமைச்சு பொறுப்புகளை தீர்மானிப்பது ஜனாதிபதி; நாங்கள் மக்கள் ஆணையை பெற்றே ஆட்சிக்கு வந்துள்ளோம். சிங்களவர் மத்தியில் நான் பிறந்து வாழ்கிறேன்: எனக்கு சிங்கள மக்களை பற்றி எவரும் எடுத்து கூற அவசியமில்லை; மும்மொழி சடம்மும், கொள்கையும் இந்நாட்டு மொழிச்சட்டம், மொழிக்கொள்கை; சிங்களமும், தமிழும் ஆட்சி மொழிகள், தேசிய மொழிகள், ஆங்கிலம் இணைப்பு மொழி; அதுதான் அரசியலமைப்பு சட்டம்; அதை எவரும் நினைத்த மாதிரி மாற்ற முடியாது; சட்டத்தை மாற்ற மக்கள் வரமும், வாக்குகளும், தேர்தலில் வெற்றியும் பெற வேண்டும் எனக்கூறினார்.

இறுதியில் இந்நாட்டில், சிங்கள பெளத்த மற்றும் தமிழ் இந்து மக்கள் எதிர்நோக்கும் விபரங்களை பட்டியலிட்டு அமைச்சரிடம் தருவதாகவும், அவை தொடர்பில் நடவடிக்கை எடுத்து, இந்நாட்டில் சகவாழ்வை உறுதி செய்யுமாறு கூறிவிட்டு, ஞானசார தேரர், தனது ஆதரவு பிக்குகளையும் அழைத்துக்கொண்டு, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு கட்டிடத்தில் இருந்து வெளியேறினர்.    

DSC_5016.jpgDSC_5046.jpgDSC_5076.jpg

 

https://globaltamilnews.net/archives/27083

  • கருத்துக்கள உறவுகள்

இது சிங்களவர்களின் நாடு : அதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் :  அமைச்சர் மனோவிடம் அதிகார தொனியில் இனவாதமாக பேசிய ஞானசார : தகாத வார்த்தைகளும் பாவிப்பு (Video)

 

'இந்த நாடு யாருடையது? சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை நீங்கள் ஒத்து கொள்கின்றீர்களா?' என ஞானசார தேரர் அமைச்சர் மனோ கணேசனிடம் அதிகார தொனியில் கேள்வி கேட்க அதற்கு அமைச்சர், 'தேரரே இந்த நாடு சிங்கள, தமிழ் முஸ்லிம்..' என பதிலளிக்க முற்பட்டபோது இடைமறித்த தேரர், 'இல்லை இல்லை இந்த நாடு யாருக்கு சொந்தமானது?' என கேட்க, அமைச்சர் 'இந்த நாட்டில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்று கூற முற்பட்ட போது, கோபமடைந்த தேரர் முறையற்ற சொற்களை பாவித்து இந்த நாடு பௌத்தர்களுக்கு சொந்தமானது என்று தெரியாமல் எப்படி நல்லிணக்கத்தை ஏற்படுத்து முடியும் என்றார்.

 

பிரச்சினை தொடர்பாக வீட்டு உரிமையாளரிடம் கதைக்காமல் வீட்டில் கூலிக்கு இருப்பரிடம் கதைப்பது எவ்வாறு நியாயமாகும். இந்த நாடு எங்களுக்கு சொந்தமானது. வந்து குடியேறிய தமிழ், முஸ்லிம்களே எங்கள் மொழி, எமது கலாசாரம் வரலாறு என்பவற்றை அறிந்துகொள்ள வேண்டும். சிங்கள மொழியை இவர்களே கற்றறிய வேண்டும். அதைவிடுத்து நாங்கள் எதற்காக தமிழை கற்க வேண்டும் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அமைச்சர் மனோ கணேசனிடம் இனவாதமாக பேசினார்.

மேலும் இந்த அமைச்சு பதவிக்கு நீங்கள் தகுதியற்றவர் எனவும் தேரர் தெரிவித்தார். அதற்கு அமைச்சர் மிகவும் பொறுமையான முறையில் பதிலளித்தார்.

 

 

இன்று முற்பகல் இராஜகிரியவில் உள்ள அமைச்சர் மனோ கணேசனின் காரியாலயத்துக்குள் நுழைந்த ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினேரே இவ்வாறு முறையற்ற தனமாக நடந்துள்ளனர்.

குறித்த காணொளி பின்வருமாறு 

 

 

 <அமைச்சர் மனோ கணேசனுக்கும், பொதுபல சேனையின் செயலாளர் ஞானசார தேரருக்கும் இடையில் நேரடி வாதப்பிரதிவாதம்>

இந்நாட்டுக்கு சொந்தக்காரர் சிங்களவர்; ஏனையோர் வெளியார்; சிங்களவரின் நல்லெண்ணத்தால் நீங்கள் வாழ்கிறீர்கள்; இந்நாட்டு மொழி சிங்களம் மட்டுமே; எல்லோரும் சிங்களம் படிக்க வேண்டும்; 

- ஞானசார தேரர்

இது சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடு; சிங்களவரும் இந்தியாவிலிருந்து வந்தோர் என்றே மகாவம்சம் கூறுகிறது; சிங்களமும், தமிழும் ஆட்சி மொழிகள் என்பது அரசியலமைப்பு சட்டம்; அதை எவரும் மாற்ற முடியாது:;- மனோ கணேசன்

இன்று காலை, இராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சுக்கு தனது ஆதரவாளர்களுடன் நேரடியாக வந்த பொதுபல சேனையின் செயலாளர் ஞானசார தேரருக்கும், அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன.

பொதுபல சேனையின் செயலாளர் ஞானசார தேரர், கடந்த வாரம் கோரியதன் பேரில், இன்று காலை 10 மணிக்கு தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு அலுவலகத்தில் அமைச்சர் மனோ கணேசனை சந்திக்க, தேரருக்கு நேரம் ஒதுக்கி தரப்பட்டு இருந்தது.

எனினும் நேற்று திடீரென நடத்திய ஊடக மாநாட்டில் அமைச்சர் மனோ கணேசனை, ஞானசார தேரர் கடும் விமர்சனம் செய்து, இந்த சகவாழ்வு அமைச்சை ஒரு சிங்கள அமைச்சருக்கு கொடுக்கவேண்டும் எனக்கூறியிருந்தார்.

இதையடுத்து அமைச்சர் மனோ கணேசன் இன்றைய சந்திப்பை இரத்து செய்திருந்தார். இந்த அமைச்சை தமிழர் வகிக்கக்கூடாது எனக்கூறும் நிலையில், சந்திப்பில் பயன் இருக்க போவதில்லை என்ற அமைச்சரின் செய்தி, இன்று காலை ஞானசார தேரருக்கு அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்தே ஞானசார தேரர், தனது ஆதரவு பிக்குகளையும் அழைத்துக்கொண்டு, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சுக்கு காலை 10 மணிக்கு வந்தார். இது அமைச்சர் மனோ கணேசனுக்கு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முற்பகல் 10.45 மணியளவில் அமைச்சர் மனோ கணேசன், தனது அலுவலகத்துக்கு வந்து ஞானசார தேரரை சந்தித்தார்.

இதன் போது ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களின் போது, ஞானசார தேரர், அமைச்சர் மனோ கணேசனிடம்;

இந்த சிங்கள நாட்டில், தமிழ் நாட்டு முதலைமைச்சர் போன்ற நடந்துக்கொள்ள வேண்டாம்; இது சிங்கள-பெளத்த நாடு; இந்நாட்டுக்கு சிங்களவர் மட்டுமே சொந்தக்காரர்கள்; ஏனையோர் வெளியிலிருந்து வந்தோர்; சிங்களவரின் நல்லெண்ணத்தால்தான் நீங்கள் இங்கு வாழ்கிறீர்கள்; இந்நாட்டு மொழி சிங்களம் மட்டுமே; இங்கே வாழவேண்டுமென்றால், எல்லோரும் சிங்களம் படிக்க வேண்டும்; மகாவம்சத்தில் விஜயன் இந்தியாவில் இருந்து வந்தான் என்று எழுதப்பட்டுள்ளது பிழை; மகாவம்சத்தில் பொய்களும் உள்ளன. இந்த சகவாழ்வு அமைச்சை பெரும்பான்மை சிங்களவருக்கு கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

தேரர் கூறியவைகளை அமைதியாக செவிமடுத்த அமைச்சர் மனோ கணேசன், தான் கூறிவதையும் செவிமடுக்கும்படி தேரரிடம் கூறிவிட்டு;

இது சிங்கள, தமிழ், முஸ்லிம், பெளத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க நாடு; எல்லோரும் இந்நாட்டுக்கு சொந்தக்காரர்கள்; சிங்களவரும் இந்தியாவிலிருந்து வந்தோர் என்றே மாகாவம்சம் கூறுகிறது; விஜய இளவரசன் இந்தியாவில் இருந்து இந்நாட்டுக்கு வந்து இறங்கி, ஆதிவாசி குவேனியை மணந்து, பின் அவளை விட்டுவிட்டு, தென்னிந்திய பாண்டிய நாட்டில் இருந்து, இளவரசியை அழைத்து வந்து, மணந்துக்கொண்ட பிறகே சிங்கள இனம் உருவாகியது என்றே மகாவம்சத்தில் நான் படித்துள்ளேன். எங்கள் அமைச்சு பொறுப்புகளை தீர்மானிப்பது ஜனாதிபதி; நாங்கள் மக்கள் ஆணையை பெற்றே ஆட்சிக்கு வந்துள்ளோம். சிங்களவர் மத்தியில் நான் பிறந்து வாழ்கிறேன்: எனக்கு சிங்கள மக்களை பற்றி எவரும் எடுத்து கூற அவசியமில்லை; மும்மொழி சடம்மும், கொள்கையும் இந்நாட்டு மொழிச்சட்டம், மொழிக்கொள்கை; சிங்களமும், தமிழும் ஆட்சி மொழிகள், தேசிய மொழிகள், ஆங்கிலம் இணைப்பு மொழி; அதுதான் அரசியலமைப்பு சட்டம்; அதை எவரும் நினைத்த மாதிரி மாற்ற முடியாது; சட்டத்தை மாற்ற மக்கள் வரமும், வாக்குகளும், தேர்தலில் வெற்றியும் பெற வேண்டும் எனக்கூறினார்.

இறுதியில் இந்நாட்டில், சிங்கள பெளத்த மற்றும் தமிழ் இந்து மக்கள் எதிர்நோக்கும் விபரங்களை பட்டியலிட்டு அமைச்சரிடம் தருவதாகவும், அவை தொடர்பில் நடவடிக்கை எடுத்து, இந்நாட்டில் சகவாழ்வை உறுதி செய்யுமாறு கூறிவிட்டு, ஞானசார தேரர், தனது ஆதரவு பிக்குகளையும் அழைத்துக்கொண்டு, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு கட்டிடத்தில் இருந்து வெளியேறினர்.

http://www.virakesari.lk/article/20089

  • கருத்துக்கள உறவுகள்

நோ நோ.. அப்பாவி சிங்கள மக்கள் இந்தியாவில் இருந்து வந்தனர். ஆனால்.. உவர் தேரர் தரவழி.. ஏலியன்கள். நேரா வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்து சொறீலங்காவில் வீழ்ந்துள்ளனர். tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

18555875_2052345191458150_25545487362415

  • தொடங்கியவர்

இலங்கை சிங்­கள, பௌத்த நாடு நாமே இதன் சொந்­தக்­கா­ரர்கள்

02-b200befda29f7627b35cfd5266b5ce53d8beb7d5.jpg

 

ஞான­சார தேரர் கருத்து; நேரில் மறுத்­து­ரைத்து சக­ல­ருக்கும் நாடு சொந்­த­மென விளக்­கிய அமைச்சர் மனோ கணேசன்
(க.கம­ல­நாதன்)

இலங்கை சிங்­கள பௌத்த நாடாகும். சிங்­க­ள­வர்­களே இந்த நாட்டின் சொந்­தக்­கா­ரர்கள். இங்கே வாழ­வேண்டும் என்றால் எல்­லோரும் சிங்­களம் படிக்க வேண்டும்.

சிங்­க­ள­வர்­களின் நல்­லெண்­ணத்­தினால் தான் சிறு­பான்­மை­யினர் இங்கு வாழ்­கின்­றனர் என்று பொது­பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நேரில் வாதிட்­ட­போ­திலும் அதனை மறுத்­து­ரைத்த அமைச்சர் மனோ­ க­ணேசன் இந்த நாடு சிங்­கள, தமிழ், முஸ்லிம், பௌத்த, இந்து, இஸ்லாம், கத்­தோ­லிக்­கர்­க­ளுக்கு சொந்­த­மான நாடாகும். எல்­லோரும் இந்­நாட்­டுக்கு சொந்­தக்­கா­ரர்கள். சிங்­க­ள­வர்­களும் இந்­தி­யா­வி­லி­ருந்தே வந்­த­வர்­க­ளாவர் என்று அழுத்தம் திருத்­த­மாக தெரி­வித்­தி­ருக்­கிறார்.

பொது­பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கும்  அமைச்சர் மனோ கணே­ச­னுக்கும் இடையில் நேற்று இடம்­பெற்ற சந்­திப்­பின்­போது நேரடி வாதப்­பி­ர­தி­வாதம் இடம்­பெற்­றது. 


இதன்­போதே ஞான­சார தேரரின் கருத்­துக்­க­ளுக்கு அமைச்சர் மனோ கணேசன் உட­ன­டி­யா­கவே மறுப்புத் தெரி­வித்து வாதிட்டார். இதனால் இரு­வ­ருக்­கு­மி­டையே கடும் வாக்­கு­வாதம் இடம்­பெற்­றது.

பொது­பல சேனாவின் செய­லாளர் ஞான­சார தேரர், கடந்த வாரம் கோரி­யதன் பேரில், நேற்று காலை 10 மணிக்கு தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு அலு­வ­ல­கத்தில் அமைச்சர் மனோ கணே­சனை சந்­திக்க, தேர­ருக்கு நேரம் ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் நேற்று முன்­தினம் திடீ­ரென நடத்­திய ஊடக மாநாட்டில் அமைச்சர் மனோ கணே­சனை, ஞான­சார தேரர் கடும் விமர்­சனம் செய்து, இந்த சக­வாழ்வு அமைச்சை ஒரு சிங்­கள அமைச்­ச­ருக்கு கொடுக்க வேண்டும் எனக்­கூ­றி­யி­ருந்தார். இதை­ய­டுத்து அமைச்சர் மனோ கணேசன் நேற்­றைய சந்­திப்பை இரத்து செய்­தி­ருந்தார். இந்த அமைச்சை தமிழர் வகிக்­கக்­கூ­டாது எனக்­கூறும் நிலையில், சந்­திப்பில் பயன் இருக்­கப்­போ­வ­தில்லை என்ற அமைச்­சரின் செய்தி, நேற்றுக் காலை ஞான­சார தேர­ருக்கு அமைச்­சரின் பிரத்­தி­யேக செய­லாளர் மூலம் தெரி­விக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்தே ஞான­சார தேரர், தனது ஆத­ரவு பிக்­கு­க­ளையும் அழைத்­துக்­கொண்டு, தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்­சுக்கு நேற்றுக் 10 மணிக்கு வந்தார். இது அமைச்சர் மனோ கணே­ச­னுக்கு அறி­விக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து, முற்­பகல் 10.45 மணி­ய­ளவில் அமைச்சர் மனோ கணேசன், தனது அலு­வ­ல­கத்­துக்கு வந்து ஞான­சார தேரரை சந்­தித்தார்.

இந்தச் சந்­திப்­பின்­போது கருத்துத் தெரி­வித்த ஞான­சார தேரர், இலங்கை சிங்­க­ள­வர்­க­ளுக்கே உரித்­து­டை­ய­தாகும். ஏனை­ய­வர்கள் வேறு பகு­தி­யி­லி­ருந்து வந்து குடி­யே­றி­ய­வர்கள். எனவே சிங்­க­ள­வர்­களை நாட்டின் உரி­மை­யா­ளர்கள் என்று ஏற்­றுக்­கொண்டால் மாத்­தி­ரமே நல்­லி­ணக்க துறை­சார்ந்த அமைச்­சுக்கு நீங்கள் பொருத்­த­மா­ன­வ­ரா­வீர்கள்.

இந்த சிங்­கள நாட்டில், தமிழ் நாட்டு முத­லை­மைச்சர் போன்று நடந்­து­கொள்ள வேண்டாம். இது சிங்­க­ள-­பெ­ளத்த நாடு இந்­நாட்­டுக்கு சிங்­க­ளவர் மட்­டுமே சொந்­தக்­கா­ரர்கள். ஏனையோர் வெளி­யி­லி­ருந்து வந்தோர். சிங்­க­ள­வரின் நல்­லெண்­ணத்­தால்தான் நீங்கள் இங்கு வாழ்­கி­றீர்கள்.

இந்­நாட்டு மொழி சிங்­களம் மட்­டும்தான். இங்கே வாழ­வேண்­டு­மென்றால், எல்­லோரும் சிங்­களம் படிக்க வேண்டும். மாறாக இன்று சிங்­க­ள­வர்கள் தமிழ் படிக்க நேரிட்­டுள்­ளது.

மகா­வம்­சத்தில் விஜயன் இந்­தி­யாவில் இருந்து வந்தான் என்று எழு­தப்­பட்­டுள்­ளது பிழை; மகா­வம்­சத்தில் பொய்­களும் உள்­ளன. இந்த சக­வாழ்வு அமைச்சை பெரும்­பான்மை சிங்­க­ள­வ­ருக்கு கொடுக்க வேண்டும். வடக்­கிலும் கிழக்­கிலும் பெளத்த சிலை ஒன்று வைக்க அனு­ம­திக்­காத வகையில் இன்று நல்­லி­ணக்கம் வளர்ச்சி கண்­டுள்­ளது. இரண்டு கிழ­மைக்கு முதல் அம்­பா­றைக்கு சென்றேன். அங்கு புத்த சிலை வைக்க முடி­யாத அள­விற்கு தடைகள் ஏற்­பட்­டுள்­ளது.

ஏன் புத்தர் சிலை வைக்க அனு­ம­தி­யில்லை என ஆணை­யா­ள­ரிடம் வின­விய பொது புத்த சிலை வைத்தால் முஸ்­லிம்­களின் மனம் நோகின்­ற­தாக அவர் கூறு­கின்றார். புத்தர் சிலையை பார்த்தால் முஸ்­லிம்­க­ளுக்கு மனம் நோகின்­றது என்றால் நாட்டின் நாலாப்­பக்­கமும் முஸ்லிம் பள்­ளி­களை வைத்து வழி­படும் போது எமது மனம் நோக­வில்­லையே. நாம் முரண்­ப­டவும் இல்­லையே.

எம்­முடன் பேசுங்கள்

உண்­மை­யான நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்ப முயற்­சிக்கும் போது சந்­தி­ரி­காவை இணைத்­துக்­கொண்டு சர்­வ­தேச அமைப்­பு­க­ளு­டனும், அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளு­டனும் கைகோர்த்து நல்­லி­ணக்­கத்தை ஒரு­போதும் காண முடி­யாது. நல்­லி­ணக்கம் உரு­வாக்­கப்­ப­டு­வது தொடர்பில் எம்­முடன் கதைக்க வேண்டும். நாம் தான் இந்த நாட்டின் சிங்­கள மக்­களின் பிரச்­சி­னைகள், அவர்கள் மீதான திணிப்­புகள் மற்றும் அழிப்­புகள் தொடர்­பி­லான உண்­மை­யான கார­ணி­களை முன்­வைக்கும் நபர்கள். ஆனால் இது­வ­ரையில் எம்­முடன் எந்­த­வித பேச்­சு­வார்த்­தையை கூட நீங்கள் எவரும் முன்­னெ­டுக்­க­வில்லை. நூறு நாட்கள் நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் சரி இந்த இரண்டு ஆண்­டுகள் ஆட்­சி­யிலும் சரி எம்­முடன் நீங்கள் எந்­த­வித பேச்­சு­வார்த்­தை­யையும் முன்­னெ­டுக்­க­வில்லை.

பொது பல­சேனா ஒரு இன­வாத அமைப்பு, நாம் பௌத்தம் பேசி ஏனைய மக்­களின் மனங்­களை கஷ்­டப்­ப­டுத்­து­கின்றோம். எங்­களை கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என சிலர் கூறும் கருத்­துக்­க­ளுக்கு நாம் பயப்­ப­ட­வில்லை. எமக்கு இந்த நாட்­டுக்குள் மிகப்­பெ­ரிய பிரச்­சினை ஒன்று உள்­ளது. சிங்­க­ள­வர்கள் சிறு­பான்­மை­யாக வாழும் சகல பகு­தி­க­ளிலும் தாக்­கப்­ப­டு­கின்­றனர். ஆகவே இந்த விட­யங்கள் தொடர்பில் பேசவே நாம் உங்­களை சந்­திக்க முயற்­சித்தோம்.

இந்த அடக்­கு­முறை விட­யங்கள் மற்றும் உண்­மை­யான நல்­லி­ணக்கம் ஒன்றை உரு­வாக்க கலந்­து­ரை­யாடல் ஒன்றை முன்­னெ­டுக்கும் நோக்­கத்­தி­லேயே நாம் சந்­திப்பை மேற்­கொள்ளத் திட்­ட­மிட்டோம். பேச்­சு­வார்த்­தை­களின் மூலம் நகர்­வ­தனால் மாத்­தி­ரமே இந்த கேள்­வி­க­ளுக்கு விடை தேட முடியும். அவ்­வாறு இல்­லாது பாரா­ளு­மன்­றத்தில் கருத்து தெரி­விப்­பதால், ஊட­கத்­திலும், அர­சியல் மேடை­க­ளிலும் கருத்­துக்­களை முன்­வைப்­பதால் இந்த பிரச்­சி­னைக்கு தீர்வு காண முடி­யாது. அதேபோல் பெரும்­பான்மை சிங்­கள மக்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தாது நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்க முடி­யாது.

சிங்­கள மக்­களின் பிரச்­சி­னை­களை பிற்­போட்­டு­விட்டு ஏனைய மக்கள் கூட்­டத்தின் பிரச்­சி­னை­களை கையில் எடுத்து அலட்­டிக்­கொண்­டுள்­ளீர்கள். ஆகவே இது தொடர்பில் விரை­வான தீர்வு ஒன்றை நோக்கி செயற்­பட வேண்டும். முஸ்லிம் தலை­மை­க­ளுடன் பேச வேண்டும். தமிழ் இந்து மக்­க­ளுடன் எனக்கு எந்த பிரச்­சி­னையும் இல்லை.

அவர்கள் இங்கு இருந்­த­வர்கள், ஆனால் முஸ்லிம், கிறிஸ்­தவ மக்கள் இங்கு இருந்­த­வர்கள் அல்ல. இந்த மண்­ணுக்கு சொந்­தக்­கா­ரர்கள் அல்ல. இந்த நாட்டில் 500 கிறிஸ்­தவ அடிப்­ப­டி­வாத இயக்­கங்கள் செயற்­பட்டு வரு­கின்­றன. இவர்கள் பெளத்­தர்­களை மாற்­று­கின்­றனர். தமி­ழர்­க­ளையும் மாற்­று­கின்­றனர். கிறிஸ்­தவ தமி­ழர்கள் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றனர். இந்த கிறிஸ்­தவ தமி­ழர்கள் தான் நாட்டில் பிரி­வி­னை­வாத செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து செல்­கின்­றனர். இந்­துக்கள் அல்ல.

அம்­பா­றையில் பெளத்த சதுக்கம் ஒன்றை உரு­வாக்க முயற்­சித்த பொது முஸ்­லிம்கள் எமது சதுக்­கத்தை தடுக்­கின்­றனர். அந்த இடத்­தையும் பிடித்­துக்­கொள்­கின்­றனர். பெளத்த நிலத்தை பிடித்­துக்­கொண்டு முஸ்லிம் மக்­களின் செயற்­பா­டு­க­ளுக்கு தடை­யாக பௌத்தம் அமை­வ­தாக கூறி நல்­லி­ணக்­கத்தை தடுக்க முயற்­சி­கின்­றனர் என கூறு­கின்­றனர். அந்த இடத்தை விட்­டுக்­கொ­டுத்தால் வேறு இடம் தரு­மாறு கோரு­கின்­றனர். இவ்­வாறு செயற்­ப­டு­வதால் பெளத்த மக்­களே பாதிக்­கப்­ப­டு­கின்­றனர்.

எம்­மீது தாக்­குதல்

நல்­லி­ணக்கம் என்­பது மிகவும் பெறு­ம­தி­யான ஒரு வார்த்­தை­யாகும். நல்­லி­ணக்­கத்­துக்­கான உதா­ரணம் காட்­டக்­கூ­டிய மிகவும் தகு­தி­யான நாடு இலங்கை. இலங்­கையில் பெளத்த சிங்­கள மக்கள் பொறுமை காப்­பதை போன்று உலகில் எந்­த­வொரு இனமும் பொறுமை காக்க மாட்­டார்கள். இலங்கை மீதொட்­ட­முல்ல குப்பை தொட்­டியை போன்­றது. இங்கு யார் வேண்டும் என்­றாலும் வர முடியும், விரும்­பிய மதத்தை அனுஷ்­டிக்க முடியும். அதற்கு பெளத்த சிங்­கள மக்கள் முரண்­படும் இனம் அல்ல. ஆனால் பெளத்த சிங்­கள மக்­க­ளான எம்மை இலக்கு வைத்தே அனை­வரும் செயற்­பட்டு வரு­கின்­றனர். எமது சட்­ட­திட்­டத்­துக்கு எதி­ராக, எமது கலா­சா­ரத்­திற்கு எதி­ராக தாக்­குதல் நடத்­தப்­ப­டு­கின்­றது, எமது நிலப்­ப­ரப்பை ஆக்­கி­ர­மிக்கும் செயற்­பாடு இடம்­பெற்று வரு­கின்­றது. மத வாதத்தில் எம்மை தாக்­கு­கின்­றனர். இவ்­வாறு புற்­றுநோய் போன்று பரவி செல்­கின்­றது. இலங்­கையில் பெளத்த சிங்­கள பெரு­மை­களை பற்றி குறிப்­பி­டாது ஒரு­போதும் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்க முடி­யாது. இது தொடர்பில் உட­ன­டி­யாக முஸ்­லிம்­க­ளுடன் பேச்­சு­வார்­தைக்கு செல்ல வேண்டும்.

இங்கு பௌத்­தர்­களின் தலைவர் வழிக்­காட்டி புத்த பெருமான். இந்த உலகில் அதர்மம் தலை­தூக்­கு­கின்­றது எப்­போது என்றால் இந்த நாட்டில் ஆடு, மாடு எப்­போது கொல்­லப்­ப­டு­கின்­றதோ அப்­போதே அதர்மம் உரு­வா­கின்­றது என புத்த பெருமான் அவ­ரது வார்த்­தை­களில் கூறி­யுள்ளார். அது­வ­ரையில் மக்­க­ளுக்கு மூன்று நோய் மாத்­தி­ரமே இருந்­தது. அதன் பின்னர் 98 நோய்கள் பரவும் என கூறு­கின்றார். இந்த நாட்டில் சுமார் 50ஆண்­டு­க­ளுக்கு முன்னர் நாட்டில் மாடு ஆடு வெட்டக் கூடாது என சிங்­கள, தமிழ் மக்கள் தலை­வர்கள் கூறி­னார்கள், ஆனால் அதை தடுக்க முடி­யாது போய்­விட்­டது.

 இதன் விளைவு என்­ன­வாக உள்­ளது. அன்று தொழு­வத்தில் மாட்டை வெட்­டி­ய­வர்கள் இன்று வீட்­டுக்குள் மாட­றுக்கும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இது சட்­டத்­திலும் தடை­செய்­யப்­பட்­டுள்­ளது. ஆனால் சட்­டத்தில் தடை இருந்தும் இவர்கள் அதை செய்­கின்­றனர். இதைக்­கூட நாம் பொறுத்­துக்­கொண்­டுள்ளோம். மாட­ருப்பு ஒரு புண்­ணியம் என தெரி­விக்­கின்­றனர். மாட­றுப்பு எப்­படி புண்­ணி­ய­மாகும். அதேபோல் தேசிய வனங்கள், புனித பூமி பிர­தேசம், தொல்­பொருள் பூமி என அனைத்தும் யுத்­தத்தின் பின்னர் அழிக்­கப்­பட்­டுள்­ளது.

எமது சிங்­கள மக்கள் 1980களில் கிழக்கில் வாழ்ந்­தனர். 3000 ஆயிரம் சிங்­கள குடும்­பங்கள் இருந்­தனர். அவர்­களை மீண்டும் அந்த இடங்­களில் குடி­ய­மர்த்த தமி­ழர்கள் தடுக்­கின்­றனர். சிங்­க­ள­வர்கள் வாழலாம் என வார்த்­தையில் நன்­றாக கூறு­கின்­றார்கள். ஆனால் செயலில் இல்லை. இந்த பேச்­சு­வார்த்­தையில் ஒரு தீர்வு தர முடி­யுமா உங்­களால். முடி­யு­மானால் இலங்­கையில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட அனைத்து ஊட­கங்­க­ளையும் வர­வ­ழைத்து எம்­மையும் வர­வ­ழைத்து நல்­லி­ணக்கம் தொடர்­பி­லான கலந்­து­ரை­யாடல் ஒன்றை நடத்­துங்கள்.

சிங்­களம் கற்­க­வேண்டும்

அமைச்சர் என்ற வகையில் உங்­க­ளுக்கு அந்த அதி­காரம் உள்­ளது. முடிந்தால் இதை செய்து காட்­டுங்கள். இலங்­கையில் சிங்கள் மொழியை அனை­வரும் கற்­றுக்­கொள்ள வேண்டும். இலங்­கையில் மட்டும் அல்ல, எந்த நாட்­டுக்கு போனாலும் அந்த அந்த நாட்டின் மொழியை கற்­றுக்­கொள்ள வேண்டும். ஆனால் இங்கு என்ன நடந்­துள்­ளது.

சிங்­கள மக்கள் இந்த நாட்டில் தமிழ் மொழியை கற்­றுக்­கொள்ள வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. முதலில் தமி­ழர்கள் முஸ்­லிம்கள் இந்த நாட்டின் சிங்­களம், பௌத்­தத்தை புரிந்­து­கொள்ள வேண்டும். இலங்­கையின் உண்­மை­யான கலா­சார தொன்­மை­களை கற்­றுக்­கொள்ள வேண்டும். வடக்­கிலும், கிழக்­கிலும் நல்­லி­ணக்கம் என்ற பெயரில் சிங்­க­ள­வர்கள் தாக்­கப்­ப­டு­கின்­றனர். இந்து மக்­களும் தாக்­கப்­ப­டு­கின்­றனர். அழிக்­கப்­ப­டு­கின்­றனர். அவர்­களை பாது­காக்க ஒரு தமிழ் தலை­வர்­களும் இல்லை. அம்­பா­றையை எடுத்­துக்­கொண்டால் கல்­முனை வைத்­தி­ய­சா­லைக்கு ஒரு கோடியே 40 இலட்சம் ரூபா ஒதுக்­கப்­ப­டு­கி­றது. தமிழர்க் வாழும் அக்­க­ரைப்­பற்று வைத்­தி­ய­சா­லைக்கு ஒரு கொங்­கிறீட் அமைப்­ப­தற்கு 10 இலட்சம் ரூபா கூட ஒதுக்­கப்­ப­டு­வ­தில்லை. இதே­போன்று கல்­முனை அபி­வி­ருத்தி செய்­யப்­ப­டு­கின்­றது. ஆனால் தமிழ்ப் பகு­திகள் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­டு­வ­தில்லை.

கிழக்கில் முஸ்­லிம்கள் தனி இராச்­சியம் நடத்­து­கின்­றனர். இந்து மக்­களை மாற்றும் மிகப்­பெ­ரிய திட்டம் நிகழ்த்­தப்­ப­டு­கின்­றது. இந்து மக்­க­ளுக்­கா­கவும் நாம் தான் குரல் கொடுக்க வேண்­டி­யுள்­ளது.

அண்­மையில் இந்­தியப் பிர­தமர் மோடி இலங்­கைக்கு வந்­தி­ருந்­த­போது கொழும்பு பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்­திற்குள் கத்­தி­யுடன் நுழைய முயன்ற நபர் ஒருவர் கைது­செய்­யப்­பட்டார். அவர் முஸ்லிம் என்­பதால் அங்­கொ­டைக்கு அனுப்­பப்­பட்­டுள்ளார். சிங்­க­ள­வ­ராக இருந்­தி­ருந்தால் வெலிக்­க­டைக்கு அனுப்­பப்­பட்­டி­ருப்பார். இவ்­வா­றான நிலைதான் இங்கு நில­வு­கி­றது என்று சுட்­டிக்­காட்­டினார்.

மறுத்­து­ரைத்த மனோ கணேசன்

தேரர் கூறி­ய­வை­களை அமை­தி­யாக செவி­ம­டுத்த அமைச்சர் மனோ கணேசன், தான் கூறி­வ­தையும் செவி­ம­டுக்­கும்­படி தேர­ரிடம் கூறி­விட்டு, இது சிங்­கள, தமிழ், முஸ்லிம், பெளத்த, இந்து, இஸ்லாம், கத்­தோ­லிக்க நாடு; எல்­லோரும் இந்­நாட்­டுக்கு சொந்­தக்­கா­ரர்கள்; சிங்­க­ள­வரும் இந்­தி­யா­வி­லி­ருந்து வந்தோர் என்றே மாகா­வம்சம் கூறு­கி­றது; விஜய இள­வ­ரசன் இந்­தி­யாவில் இருந்து இந்நாட்டுக்கு வந்து இறங்கி, ஆதிவாசி குவேனியை மணந்து, பின் அவளை விட்டுவிட்டு, தென்னிந்திய பாண்டிய நாட்டில் இருந்து, இளவரசியை அழைத்து வந்து, மணந்துக்கொண்ட பிறகே சிங்கள இனம் உருவாகியது என்றே மகாவம்சத்தில் நான் படித்துள்ளேன். எங்கள் அமைச்சு பொறுப்புகளை தீர்மானிப்பது ஜனாதிபதி; நாங்கள் மக்கள் ஆணையை பெற்றே ஆட்சிக்கு வந்துள்ளோம்.

சிங்களவர் மத்தியில் நான் பிறந்து வாழ்கிறேன்: எனக்கு சிங்கள மக்களை பற்றி எவரும் எடுத்துக்கூற அவசியமில்லை; மும்மொழி சட்டமும், கொள்கையும் இந்நாட்டு மொழிச்சட்டம், மொழிக்கொள்கை; சிங்களமும், தமிழும் ஆட்சி மொழிகள், தேசிய மொழிகள், ஆங்கிலம் இணைப்பு மொழி; அதுதான் அரசியலமைப்பு சட்டம்; அதை எவரும் நினைத்த மாதிரி மாற்ற முடியாது; சட்டத்தை மாற்ற மக்கள் வரமும், வாக்குகளும், தேர்தலில் வெற்றியும் பெற வேண்டும் எனக்கூறினார்.

இறுதியில் இந்நாட்டில், சிங்கள பெளத்த மற்றும் தமிழ், இந்து மக்கள் எதிர்நோக்கும் விபரங்களை பட்டியலிட்டு அமைச்சரிடம் தருவதாகவும், அவை தொடர்பில் நடவடிக்கை எடுத்து, இந்நாட்டில் சகவாழ்வை உறுதி செய்யுமாறு கூறிவிட்டு, ஞானசார தேரர் தனது ஆதரவு பிக்குகளையும் அழைத்துக்கொண்டு, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு கட்டடத்தில் இருந்து வெளியேறினர்.    

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-18#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.