Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திரா காந்தியும், எம்.ஜீ.ஆரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தனர் –கே.பி.

Featured Replies

இந்திரா காந்தியும், எம்.ஜீ.ஆரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தனர் –கே.பி.

kp.jpg
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அமரர் இந்திரா காந்தியும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜீ.ராமசந்திரனும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத்  தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவுமாறு இந்திய உளவுப் பிரிவான றோவிற்கு இந்திரா காந்தி பணித்திருந்தார் எனவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எம்.ஜீ.ஆர் நிதி உதவிகளை வழங்கியிருந்தார் எனவும் அவர்  தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தியை படுகொலை செய்வதற்கான வெடிபொருட்களை சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு குமரன் பத்மநாதன் அனுப்பி வைத்தார் என  முன்னாள் சீ.பி.ஐ உயர் அதிகாரியொருவர் குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/27593

  • தொடங்கியவர்

புலிகள் அமைப்பிற்கு எம்.ஜி.ஆர். பாரிய நிதி உதவிகளை வழங்கினார் : பல புதுத் தகவல்களை வெளியிட்டார் கே.பி. (காணொளி இணைப்பு)

 

 

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கியதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். 

அதேபோல் தற்கொலை குண்டுதாரிகளின் செயற்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க அன்டன் பாலிசிங்கம் உள்ளிட்டவர்கள் முற்பட்ட போது அந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்ததென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கியிருந்தார். அந்த நிதித் தொகை ஆயுதக்  கொள்வனவுக்கே பயன்படுத்தப்பட்டது.

லெபனான் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டது.  தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் எழுச்சிக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகளும் கூட போதுமான வாய்ப்புகளை வழங்கியிருந்தது.

 

http://www.virakesari.lk/article/20234

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஏன் இப்போ திடீரென அறிக்கை ஒன்றை விடுகிறார்? இவர் கூறிய அனைத்தும் முன்பு அறிந்தவைகளே. திரும்ப இவரால் ஏன் தூசு தட்டப்படுகிறது என விளங்கவில்லை.

கைநீட்டி காசு வாங்கி வாழும் இவர் தனது எஜமானர்களுக்கு விசுவாசமாக செயல்படுகிறார்! எப்ப இவர்களின் கால்களை வாரிவிடுவாரோ தெரியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.