Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோசை கல்லில் படுக்க வைத்து விசாரணை...ஈழப் போராளுகளுக்கு இந்திய கடற்படை செய்த கொடூரம்

Featured Replies

வெடிமருந்துகள் அடங்கிய விடுதலைப் புலிகளின் படகை பிடித்து துறைமுகத்துக்கு கொண்டு வந்த விவகாரம், கடலோர காவல்படைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

வெடிமருந்துகளை கண்டுபிடிக்கும் நிபுணர்கள் குழுவை கலந்து ஆலோசிக்காமல், துறைமுகத்தில் புலிகளின் படகை எட்டு நாட்கள் நிறுத்தி வைத்தது குறித்து கடலோர காவல் படையினரிடம் விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்திய, இலங்கை கடல் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த "ஸ்ரீ ராமஜெயம்' என்ற படகை, இந்திய கடலோர காவல்படையினர் பிடித்தனர்.

அப்படகு விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்புலிகள் பிரிவுக்கு சொந்தமானது. அப்படகில் ஏராளமான சமையல் பொருட்களுடன், ஏ.கே.56 ரக துப்பாக்கியும் அதற்கான குண்டுகளும் இருந்தன. இதுதவிர கையெறி குண்டுகள், மனித வெடிகுண்டுக்காக பயன்படுத்தப்படும் "பெல்ட் பாம்,' எட்டு பேரல்கள் கொண்ட திரவ ரசாயனங்கள் இருந்தன.பிடித்த படகையும், அப்படகில் இருந்த ஐந்து பேரையும் கடலோர காவல்படையினர் சென்னைக்கு கொண்டு வந்தனர். படகை எந்தப் பகுதியில் பிடித்தாலும், அப்பகுதியில் உள்ள போலீசாரிடம் கடலோர காவல் படையினர் ஒப்படைப்பது தான் வழக்கம்.இந்த முறை, கடலோர காவல்படையினர் சற்று மாறுபட்ட நடவடிக்கையில் இறங்கினர். புலிகளின் படகையும், ஐந்து விடுதலைப் புலிகளையும் சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.

புலிகளின் படகில் இருந்த பொருட்கள் கடலுõரில் இறக்கப்பட இருந்ததாக பத்திரிகையாளர்களிடம் கடலோர காவல்படையினர் தெரிவித்து விட்டனர்."கடலுõருக்கு "பெல்ட் பாம்' எதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது? அது பெரும் விசாரணைக்கு உரியது' என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்ததும், தமிழக போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பிடிபட்ட புலிகளை விசாரித்த போது "நாங்கள் தமிழகத்துக்கு வரவில்லை. எங்களை இந்திய கடல் எல்லைக்கு அப்பால் தான் கடலோர காவல் படையினர் பிடித்தனர்' என்று கூறினர். ஆனால், தமிழக போலீசார் அவர்கள் கூறியதை நம்பவில்லை. "உங்கள் படகில் எதற்காக "பெல்ட் பாம்' எடுத்து வந்தீர்கள்?' என்று துருவித் துருவி விசாரித்தனர். "நாங்கள் எடுத்து வந்த "பெல்ட் பாம்' பற்றியே கேட்கிறீர்கள். அதை விட அதிர்ச்சியான தகவல் இருக்கிறது. நாங்கள் வந்த படகே, "சூசைட் போட்' தான். அந்த படகின் சுவர்களில் டி.என்.டி., வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதை "டைம் டிவைசர்' வைத்து படகையே வெடிக்கச் செய்ய முடியும். இலங்கை கடற்படையின் கப்பல்களை தாக்கவே, அப்படகு வடிவமைக்கப்பட்டுள்ளது' என்று கூறியதும் தமிழக போலீசாருக்கு துõக்கி வாரிப் போட்டது.

அடுத்து சில நிமிடங்களில், மத்திய உள்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கடற்படையின் வெடிகுண்டு நிபுணர்கள் படை களம் இறங்கியது. அப்படகில் வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டது.அப்படகை நடுக்கடலில் வெடிவைத்து தகர்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படியே புலிகளின் படகு வெடிக்க வைத்து துõள் துõளாக்கப்பட்டது. இந்த விவகாரம் கடலோர காவல்படைக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.புலிகளின் அபாயகரமான படகை, கடலோர காவல் படையினர் எதற்காக சென்னை துறைமுகத்தில் எட்டு நாட்களாக நிறுத்தி வைத்திருந்தனர் என்று விசாரணை நடத்தும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வெடிமருந்துகள் அடங்கிய படகை, முழுவதுமாக சோதிக்கவும் இல்லை. அப்படகை பற்றி எந்தவித தகவலும் தெரிந்து கொள்ளாமல், துறைமுகத்துக்கு எடுத்து வந்தது தவறு என்று கூறப்படுகிறது.அடுத்து அப்படகில் இருந்த வெடிமருந்துகளையும், "பெல்ட்பாம்' போன்றவற்றை துறைமுகத்தில் இருந்தபடியே கடலோர காவல்படையினர் துõக்கி காண்பித்தது இரண்டாவது தவறு. அந்த நேரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால், துறைமுகமே சர்வ நாசமாகி இருக்கும். இதை கடலோர காவல்படையின் ஐ.ஜி., எப்படி அனுமதித்தார் என்ற கோணத்திலும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அப்படகில் துறைமுகத்தில் நிறுத்தியதும், வெடிமருந்து நிபுணர்கள் குழுவினரை அனுப்பி சோதனையிடாதது ஏன் என்றும் கடலோர காவல் படையினரை விசாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தோசை கல்லில் படுக்க வைத்து விசாரணை...:புலிகளின் படகை பிடித்த கடலோர காவல் படையினர் நடந்து கொண்ட விஷயமும் பெரும் பிரச்னையை உருவாக்கியுள்ளது. அப்படகில் இருந்தவர்களை விசாரணை என்ற பெயரில் கடுமையான முறையில் கடலோர காவல்படையினர் நடந்து கொண்டது அம்பலமாகியுள்ளது. பிடிபட்டவர்களை இந்திய கப்பலில் உள்ள சமையல் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரோட்டா செய்வதற்கு வைக்கப்பட்டுள்ள தோசைக்கல்லில் படுக்க வைத்து விசாரித்துள்ளனர். இரவு நேரத்தில் சூடான தோசைக்கல்லில் படுக்க வைத்து விசாரணை நடத்தியது தொடர்பாகவும் கடலோர காவல்படையினரிடம் விசாரிக்கப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனwww.dinamalar.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் கொடுமையை வெளிக்கொணர்ந்த பத்திரிகைக்கு நன்றிகள். மேலும், இந்த படகுக் கதை புலனாய்வுத் துறையின் வேலையா என்றகோணத்திலும் அவர்கள் சிந்தித்து தமிழக மக்களுக்கு உண்மையை எடுத்துக் கூறவேண்டும்.

இந்தியாவின் சிறைச்சாலைகள் காவல்நிலைங்களில் பல விதப்பட்ட சித்திரவதைகள் பாலியல் வல்லுறவுகள் சாதாரண குற்றங்களை செய்த இந்தியர்களே எதிர்நோக்கிறார்கள். இது வழமையான விடையம். அதற்காக அவை சரி என்று வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் அவர்களது நாட்டவர்களிற்கு நடக்கும் சட்டத்திற்கு புறம்பான விசாரணை முறைகள் பற்றி வராத கரிசனை அக்கறை பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிறநாட்டவரில் திடீர் என்று ஏன் ஏற்பட்டது?

இந்தளவு அக்கறை அனுதாபம் ஈழத் தமிழரில் இருந்ததற்கான எந்த ஆதாரங்களும் உந்த ஊடகங்களில் கடந்த கால நடத்தையில் காண முடியாது. உதாரணத்திற்கு அகதி முகாங்களில் உள்ள அப்பாவிகளின் அவலங்கள் அவர்களிற்கு நடந்தேறும் அவலங்கள் பற்றியே அக்கறை செலுத்தியது இல்லை.

அப்படி பட்ட ஊடகங்கள் ஆயுதங்களுடன் வெடிமருந்துகளுடன் பிடிக்கப்பட்டவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களை தமது காவல்துறை தவறாக நடத்துகிறது சித்திரவதை செய்து விசாரிக்கிறது என்ற கூச்சலின் நோக்கம் வெறும் மனிதாபிமானம் அல்ல அதையும் தாண்டிப் புனிதமானது. அவதானமாக விளிப்பாக மிகவும் தெளிவாக இருக்க வேண்டிய காலத்தில் அனைத்து ஈழத்தமிழரும்.

இந்திய அரசிற்கு எதிராக செயற்படுவதில்லை என புலிகள் சொல்லிலும் செயலிலும் காட்டிய பின்னரும், இந்திய அரசிற்கு எதிரான சம்பவமல்லாத இதற்காக `ஒப்பரேஷன் தாஷா' வை ஆரம்பித்துள்ள இந்திய அரசு (திவயினவின் கூற்றுப்படி), 60 பேர் கொல்லப்பட்ட ரயில் குண்டு வெடிப்பிற்குப் பின்னரும் இந்தியாவிற் கெதிராகப் போராடும் பாக்கிஸ்தான் மற்றும் அதன் ஆதரவு போராளி அமைப்புகள் மீது எந்த ஒரு நடவடிக்கையையாவது மேற்கொண்டதா? மாறாக பாக்கிஸ்தான் வெளியுறது அமைச்சரை சந்தித்து இது ஒற்றுமையை குலைக்கும் நடவடிக்கை நாம் ஒற்றுமையாக இருப்போம் என அறிக்கை விட்டுள்ளார்.

சொந்த மக்களின் நலனில் அக்கறை கொள்ளாத இந்திய அரசின் கபட நாடகத்தை இந்திய சகோதரர்கள் புரிந்து கொண்டால் சரி.

Edited by saanakiyan

நடந்த சம்பவத்தாலை புலிகள் ஆத்திரம் அடைந்துவிடக்கூடாது ! எண்ட கரிசனையை காட்டுறது மாதிரித்தானே இந்திய மத்திய அரசின் நடவடிக்கை எண்டு செய்ய வெளிக்கிட்டது சொல்லுது....

இப்படி புலிகள் கைது சம்பந்தமான விசாரணை என்பது புலிகளை கைது செய்யாதே, வீண் விளைவுகளை கொண்டுவரும் எண்ட ரீதியில், கரையோர கண்காணிப்புபடைக்கு சொல்வதாகத்தான் செய்தி சொல்கிறது...! அதுவும் மத்திய அரசின் செயற்பாடுகளின் மூலம்... சொன்னதை இந்திய அரசு செய்யும் எண்டு இல்லை.. ஆனால் ஜெயலலிதாவின் வாயை அடைக்க போதுமானது... அதோடை புலிகள் இந்திய கரையிலே வெடிக்க வைக்க கொண்டு வந்தது வெடி இல்லை எண்டதையும் படகில் வந்தவர்கள் படகை அப்புறப்படுத்த வேண்டிய முக்கியமான தகவலை கொடுத்தார்கள் எண்று சொன்னதனால், அவர்களுக்கு இந்தியாவில் இருந்த கரிசனையையும் காட்டி, அவர்கள் இந்திய எதிரிகள் இல்லை என்பதை அறிவித்து இருக்கிறார்கள்...

இதிலை என்ன தெரியுது எண்டால் கலைஞர் தன் பழுத்த அனுபவத்தை ஜெயலலிதா எண்ட மூஞ்சூறுக்கு எதிராக பாவித்து இருக்கிறார்...! அவ்வளவுதான்.

Edited by Thala

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா என்ன திறந்த வீடே? இந்திய எல்லைகுள்ள ஆயுதத்தோட போனா பிடிக்காம என்ன செய்வார்கள்? இதுக்குள்ள வயித்துகுத்து, காதுகுத்து என்று மிக மோசமான துவேசம் வேற கக்குறியள்.

முதலில் நீங்கள் தமிழனை தெற்கத்தியான், கிழக்கத்தியான் வடக்கத்தியான் என்று பிரித்து துவேசம் பேசுறதை விடுங்கோ.

பிறகு உலக தமிழனை திருத்திறத பற்றி யோசிக்கலாம்

ஈழத்துக்கு வந்து இந்தியப் படைகள் செய்த கொடுமைகளை விடவா..?! மறப்போம் மன்னிப்போம் என்றாலும் விடமாட்டார்கள் போல இருக்கே..?! :rolleyes::lol::lol:

ஈழத்தமிழர்களனைவறுக்கும் வணக்கம்,

இங்கே நெடுகுளப்போவன் போன்றவர்கள் பேசுவது ஆச்சர்யமாக இருக்கிறது, தமிழ நாட்டையே சுடுகாடக மாற்றியவர்கள் விடுதலைப்புலிகள், அப்படிபட்ட நீங்கள் இந்தியா எல்லைக்குள் ஆயுதத்துடன் ழுழைந்தால் பிடித்து விசாரனை செய்யாமல் கொஞ்சி குலாவுவார்களா, இந்தியா போன்ற சுதந்திர நாட்டில் எதைபற்றிவேண்டுமானாலும் எழுதாலாம் ஆனால் ஈழத்தில் என்ன நடக்கிறது, எதிற்த்து பேசினால் துரோகி துப்பாக்கி முனைதான் பேசும், அப்படி பாட்டவர்களுக்கு வக்காலத்து வாங்கும் உங்களைபோன்றவர்கள் பேசுவது சிரிப்பை வரவழைக்கிறது,

இந்தியாவில் மீண்டும் வாலாட்டினால் சுத்தமாக வாலை ஒட்ட நறுக்கிவிடுவோம் ஆமாம்

சார்,

உங்களுக்கு அரசியல் தெரிய வேணாம். கொஞ்சம் அறிவு வேணாமா? அவர்கள் விடுதலைப் புலிகள் தான் என்று யார் சொன்னது? ஏதாவது நீதி மன்றில் நிரூபித்து விட்டார்களா? இந்தியாவில் என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம் செய்யலாம் சார். ஆணைப்பெண்ணென்று சொல்லலாம். பெண்ணை ஆணென்று சொல்லலாம்.. அது தான் எப்பவோ சொன்னேன். இது அரசியல், உங்களுக்கு புரியவில்லை என்றால் விட்டுவிடுங்கள். தெரிந்தவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

உங்களுக்குப் புரியும் மொழியில் கதைத்தாலும் பதில் சொல்கிறீர்கள் இல்லையே சார்? இன்னா நைனா? நான் எப்பவோ எய்தின மாட்டருக்கு பதிலே சொல்ல மாட்டேங்கிறியே? இன்னா கொயுப்பா?

அத்த வுடுங்க சார். என்னா நம்ம தலைவரு படம் இந்த பொங்கலுக்கும் ரிலீசாக மாட்டாது போலருக்குங்களே? போங்க சார் காத்திருந்து காத்திருந்து எனக்கு கவலையில அழுகையே வரும் போல இருக்கு. நான் முடிவு எடுத்திட்டேன் சார், இந்த தீபாவளிக்கும் வராவிட்டால் நான் ஜெமினி தியேட்டர் வாசலில் தீக்குளிக்கப் போகிறேன். யாருக்கும் சொல்லிடாதீங்க சார். தலைவருக்குத்தெரிந்தால் ரொம்ப feel பண்ணுவார். ஆனாலும் சாகிறதுக்கு முன்னம் எனக்கு சி்வாஜி பாத்துரனும் போலருக்கு சார். ரொம்ம்ப நல்லாப் பண்ணிருக்காங்களாம். சங்கர், ரகுமான், தலவர் காம்பினேஷனில இதுக்கு முன்னதா எப்பவுமே பாண்ணினதில்ல சார். இது பழைய ரெக்கார்டு எல்லாத்தையுமே முந்திடும்னு நினைக்கிறேன். இந்திய அளவிலை புது ரெக்கார்டு பண்ணலாம். பண்ணணும்!

Edited by balapandithar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மறப்போம் மன்னிப்போம் என்றவையெல்லாம் எங்க போட்டினம் மறப்பதுக்கு இந்தியன் ஒன்றும் பெரிய அவதார புருசன் அல்ல பிடிபட்டவர்கள் போராளிகளோ இல்லையோ என எமக்கு தெரியாது ஆனால் அவர்கள் தமிழர்களே

ஐயா,

சிங்களவன் பூசா தடுப்பு முகாமிலும், வெலிக்கடையிலும் செய்த கொடூரங்களினுடன் ஒப்பிடும் பொழுது இது எவ்வளவோ பரவாயில்லை.

உயிருடன் இருக்கும் போதே கண்ணைத் தோண்டுதல்

உயிருடன் எரித்தல்

விரல், நகங்களைப் புடுங்குதல்

தலை கீழாகக் கட்டி சாகும் வரை விடுதல்

போன்றவை ஒரு இரு தமிழனுக்கு நடந்தவையல்ல. கூட்டங்கூட்டமாக தமிழனை சிங்களச் சிறைகளில் சி்த்திரவதை செய்த விடயங்கள். இதுகளுடன் ஒப்பிடும்போது இது எவ்வளவோ மேல்.

மற்றது, பிடிபட்டவர்கள் சிங்கள உளவுத்துறையால் அமர்த்தப்பட்ட கூலிப்படயாக இருக்கலாம். தோசைக்கல்லுக்கதை நம்மவரையும் தமிழகத் தமிழர்களையும் "மூட்டி" விட்டுக் கூத்துப்பார்க்கும் உளவுப்படை வேலையாகவும் இருக்கலாம்.

தமிழ்கத்தில் எத்தனையோ தலைவர்கள் ஈழத்தமிழருக்காக தமது ஆட்சியையே இழந்த, சிறையில் இருந்த, உயிர்விட்ட வரலாறுகள் உள்ளன. ஈழத்தமிழனுக்கும் தமிழகத்தமிழனுக்கும் உள்ள உறவு தொப்புள்கொடி உறவு. அதை எந்த உளவுப்படையாலும் அறுக்கமுடியாது ஐயா.

Edited by balapandithar

ஒரு நாள் தொப்புள் கொடி உறவு என்னும் பாசம்! மறுநாள் வடக்கத்தியான் என்ற துவேசம்?!! இந்திய வம்சாவளி தமிழர்களின் வாக்குரிமையை பறித்து, அந்த ஏழை தொழிலாளர்களின் பிரஜாவுரிமை மறுப்புக்கு, சிங்கள ஆட்சிக்கு அன்று துணை போன ஜி.ஜி போன்ற நீங்கள் சொல்லும் அதே முன்னோர்களின் துரோகத்திற்கு என்ன பெயர் சூட்டுவது?

ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டால் பொடாவில் கைது செய்யப்பட்டு ஒருவருடம் சிறைவாசம் செய்த வைகோவும் நெடுமாறனும் கூட நீங்கள் சொல்லும் அதே வடக்கத்தியார் தான். ஆரம்ப கால போராட்டத்திற்கு அள்ளி வழங்கினார் என்று தலைவராலேயே புகழப்பட்ட மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர் கூட நீஙகள் சொல்லும் வடக்கத்தியார் தான்.

உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்த துரோகி கருணாவும், இனத்தை விற்று ஈனப் பிழைப்பு நடத்தும் டக்ளசும் ஈழத்தமிழர்கள் தான். வயிற்றுக்குத்து வந்தால் போய் மருந்து எடுங்கள். வாயில் வந்ததை பேசி,

துவேசம் கக்கி, தமிழரை வடக்கன் என்றும் கிழக்கன் என்றும் வெள்ளாளான் என்றும் பறையன் என்றும் பிரித்து பலவீனப்படுத்தாதீர்கள்.

நீங்கள் சொல்லும் தமிழரை பிளவு படுத்தும் இந்த கேவலமான பழமொழியை கிழக்கில் இருந்தோ கொழும்பில் இருந்தோ ஒரு தமிழர் சொன்னால், அப்போது வடக்கு யாரை குறிக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.

நீங்கள் சொன்ன அதே முன்னோர்களின் அரசியல் திருவிளையாடல்கள் தான் தமிழர்களை அரசியல் அநாதைகள் ஆக்கி இருக்கிறது. கலாச்சார, இன. மொழி பாதுகாப்புக்கு ஒரு பல்லின நாட்டில் சமஷ்டி ஆட்சி முறையின் அவசியத்தை வலியுறித்தி 1948 முன்பே பெற்றுக் கொள்ள தெரியாத அரசியல் கோமாளிகள் அவர்கள்.

தலைவர் மட்டும் இல்லையென்றால் தமிழர்கள் வாழைப்பழக் கடை நடத்தவும், அலுவலகத்தில் கணக்கு பார்க்கவும் மட்டுமே தெரிந்த, குட்ட குட்ட குனியும் இனம் என்று சிங்களவர் என்றோ முடிவு செய்திருப்பார்கள்.

வாராது வந்த மாமணி போல் வந்த தலைவரின் காலத்தில் தமிழர் அனைவரையும் ஒன்று திரட்டி போராட்டத்தை முன்னெடுக்கும் பணி ஏதாவது செய்ய முடிந்தால் செய்யுங்கள். இல்லையென்றால் வாயை இறுக மூடிக்கொள்ளாவாவது கற்றுக்கொள்ளுங்கள்.

இணையத்தில் நீங்கள் கக்கும் துவேசத்தை ஈழப்போராட்டத்திற்காக அயராது பாடுபடும் வைகோ அண்ணன், நெடுமாறன் ஐயா, கஸ்பர் அடிகளார் போன்றோரும் கூட வாசிக்க நேரிடலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

எமக்கெதிரி தாய்தமிழக தமிழர் அல்ல அவர்களே எமது தொப்பிள் கொடி உறவு வேறு எவருமல்ல அவர்களை மதிக்கின்றோம் அதில் நான் தெளிவாக இருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர்த்துப் பேசினால் துரோகி என இங்க யாரும் இல்லை நியாயத்தின் பக்கமே புலிகள்

தமது மக்க்களை உயிரினும் மேலாக போற்றும் விடுதலைப்புலிகளே இந்தியப்படைகள் கொடுமை செய்த கொடுமைகளைப் பற்றி பேசியதை நான் என்றுமே கேள்விப்பட்டதில்லை. அதன் அர்த்தம் அவர்கள் மன்னித்து மறந்துவிட்டார்கள் என்பது தானே?

ஈழத்தமிழர்களனைவறுக்கும் வணக்கம்,

இங்கே நெடுகுளப்போவன் போன்றவர்கள் பேசுவது ஆச்சர்யமாக இருக்கிறது, தமிழ நாட்டையே சுடுகாடக மாற்றியவர்கள் விடுதலைப்புலிகள், அப்படிபட்ட நீங்கள் இந்தியா எல்லைக்குள் ஆயுதத்துடன் ழுழைந்தால் பிடித்து விசாரனை செய்யாமல் கொஞ்சி குலாவுவார்களா, இந்தியா போன்ற சுதந்திர நாட்டில் எதைபற்றிவேண்டுமானாலும் எழுதாலாம் ஆனால் ஈழத்தில் என்ன நடக்கிறது, எதிற்த்து பேசினால் துரோகி துப்பாக்கி முனைதான் பேசும், அப்படி பாட்டவர்களுக்கு வக்காலத்து வாங்கும் உங்களைபோன்றவர்கள் பேசுவது சிரிப்பை வரவழைக்கிறது,

இந்தியாவில் மீண்டும் வாலாட்டினால் சுத்தமாக வாலை ஒட்ட நறுக்கிவிடுவோம் ஆமாம்

விடுதலைப்புலிகள் தமிழகத்தை சுடுகாடாக்கவில்லை. உங்கள் இந்திய இராணுவம் தான் யாழ்ப்பாணத்தை பிணக்காடாக்கியது.

இந்திய இராணுவம் என்பதற்காக தமிழ் பெண்களை கற்பழித்து, குழந்தைகளை கூட ஈவிரக்கமின்றி கொல்லும் போது ஜெய் இந்த் என்று சொல்லி கை கட்டி பார்த்து நிற்க தமிழர்கள் ஒன்றும் விபச்சாரத்தில் பிறந்தவர்கள் அல்ல. இதில் உங்களுக்கு நெற்றிக் கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற வாய் வீச்சு வேறு.

அப்பனே சசிதா! சுடுகாட்டு டென்டரில் கூட ஊழல் செய்த பெருச்சாளிகளும் மரம் விட்டு மரம் தாவும் அரசியல் குரங்குகளும் தமிழகத்தில் தான் நிறைய இருக்கிறர்கள். முடிந்தால் அவர்களின் வாலை நறுக்குங்கள். தமிழகம் ஏழைகளின் சுடுகாடாகமல் தப்பித்துக் கொள்ளும்.

நாம் யார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்!!!

வடக்கத்தையான் என்று இங்கு எம்மவர்கள் குறிப்பட்டது தமிழ்நாட்டிற்கு அப்பால் இருப்பவர்களை என்று எடுத்துக்கொள்வோம்.

தமிழ்நாடும் தமிழீழமும் தமிழர்களின் தாயகங்கள். தமிழீழத்தவர் "வடக்கத்தையர்" என்று குறிப்பிடுவது தமிழ்நாட்டவரை அல்ல.

The current Sri Lankan government is not like previous governments. It is doing a lot of cunning work to weaken the Tamil community not only in Tami Eelam but also around the world. Sri Lanka gov. wants Tamil Nadu shoud be divided and weak so that they will keep their mouth shut even Sri Lanka State Terrorism wipes out Tamils from Tamil Eelam. This gun boat drama is a part of it. Tamils around the world should understand this. It is now learnt that the recent split in the MMDMK is also a work of the Sri Lankan government with the help of some politicians in Nadu and North India. Central government also supported this to reduce the pressure cause by MMDMK which rallied the Tami Nadu people against India's policy towards SL. Now you can't hear any voice of Vaiko. Recently Karunanithi started to increase the tone on this case. His daughter also participated in some rallies gave interviews. Now this is a warning for him. His government can be dissolved again like before by showing a reason of LTTE threads. In the future you will see that MK will change his tone. The gun boat issue have not cause any damage on the political ground but it at least on yarl.com. See the discussion page. People alreay divided! This is Tamilan

ஈழத்தமிழர்களனைவறுக்கும் வணக்கம்,

இங்கே நெடுகுளப்போவன் போன்றவர்கள் பேசுவது ஆச்சர்யமாக இருக்கிறது, தமிழ நாட்டையே சுடுகாடக மாற்றியவர்கள் விடுதலைப்புலிகள், அப்படிபட்ட நீங்கள் இந்தியா எல்லைக்குள் ஆயுதத்துடன் ழுழைந்தால் பிடித்து விசாரனை செய்யாமல் கொஞ்சி குலாவுவார்களா, இந்தியா போன்ற சுதந்திர நாட்டில் எதைபற்றிவேண்டுமானாலும் எழுதாலாம் ஆனால் ஈழத்தில் என்ன நடக்கிறது, எதிற்த்து பேசினால் துரோகி துப்பாக்கி முனைதான் பேசும், அப்படி பாட்டவர்களுக்கு வக்காலத்து வாங்கும் உங்களைபோன்றவர்கள் பேசுவது சிரிப்பை வரவழைக்கிறது,

இந்தியாவில் மீண்டும் வாலாட்டினால் சுத்தமாக வாலை ஒட்ட நறுக்கிவிடுவோம் ஆமாம்

வடக்கத்தையான் என்று இங்கு எம்மவர்கள் குறிப்பட்டது தமிழ்நாட்டிற்கு அப்பால் இருப்பவர்களை என்று எடுத்துக்கொள்வோம்.

தமிழ்நாடும் தமிழீழமும் தமிழர்களின் தாயகங்கள். தமிழீழத்தவர் "வடக்கத்தையர்" என்று குறிப்பிடுவது தமிழ்நாட்டவரை அல்ல.

இல்லை இது ஒரு காலத்தில் இந்திய தமிழரை குறித்தே சொன்னது தான். யாராவது அறுபதை கடந்தவரிடம் கேட்டு பாருங்கள். இந்த திசையால் பிரியும் பலவீனம் இனியும் வேண்டாம். மேலும் எல்லா திசையிலும் நல்லவர்களும் துரோகிகளும் கலந்தே இருப்பார்கள்.

யாரோ ஒரு சிறுபுத்தி கொண்டவன் உளறியதை பழமொழியாக்கி நாமும் உளறுவது பலவீன மொழி

The gun boat issue have not cause any damage on the political ground but it at least on yarl.com. See the discussion page. People alreay divided!

:rolleyes:

தமிழ் தேசிய ஆதரவாளர்கள் "தேசியம்" என்பதன் சரியான அர்த்தத்தை புரிந்து கொண்டு சிந்தித்து பேசுவது, செயலாற்றுவது நல்லது. மாற்றுக் கருத்துக்காரர்களை இல்லாதொழிப்பதற்கு அவர்கள் மீது வசை பாடுவது பாதகமான விளைவுகளை மட்டுமே தரும். மாறாக அவர்களின் கருத்தை உண்மையான, நியாமான கருத்தால் எதிர் கொண்டு எம்மவராக்குவதன் மூலமே அவர்களை அழிக்க (அவர்களின் மாறான கருத்தை) முடியும். சில சமயம் அவர்களின் கருத்து சரியானதாகவிருக்கும் பற்சத்தில் அதனை ஏற்றுக் கொண்டு எம் தவறுகளை திருத்தியும் அவர்களை எம்முடன் இணைத்துக் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.

அதன் மூலமே இந்த நீண்ட பெரும் அழிவுகளை தந்த தந்து கொண்டிருக்கின்ற போராட்டத்தை சாதகமாக நிறைவு செய்ய முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரோ ஒரு சிறுபுத்தி கொண்டவன் உளறியதை பழமொழியாக்கி நாமும் உளறுவது பலவீன மொழி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா போன்ற சுதந்திர நாட்டில் எதைபற்றிவேண்டுமானாலும் எழுதாலாம்

அப்போ ஏன் வைகோ, நெடுமாறன் போன்றோரை 18 மாதம் சிறையிலடைத்தீர்கள்?

ஐயோ ஐயோ! லூசுப் பையா! நான் அப்பவே சொன்னேன். உனக்குத் தெரியாத விடயத்தைப் பற்றிப்பேசப்படாதுண்ணு. போய்க் குஷ்புவுக்குக் கோயிலக்கட்டுவியா ...அத்த வுட்டுட்டு வந்துட்டாரு இஞ்ச அரசியல் பறயறதுக்கு.

பையா உனக்கு வேற செக்சன் இருக்குதில்லே .... அங்க வந்தாக் கதைப்போமில்ல

உனக்கு 18 வயதிலும் குறைவுன்னா இங்க என்ன எங்கயும் வரப்புடாது சொல்லிப்புட்டேன் ஆமா

Edited by balapandithar

இந்தியாவில் மீண்டும் வாலாட்டினால் சுத்தமாக வாலை ஒட்ட நறுக்கிவிடுவோம் ஆமாம்

அதுக்கு முதல் வாராந்திரம் ரயில்களிலு, பொது இடங்களிலையும் குண்டுகள் வைக்கிறவையை ஒட்ட நறுக்க பாக்கலாமே...!

அதுக்கு வக்கில்லை... வாய் வீரம் மட்டும் அளவில்லாமல் இருக்கு...!

இந்தியாவில் மீண்டும் வாலாட்டினால் சுத்தமாக வாலை ஒட்ட நறுக்கிவிடுவோம் ஆமாம்
:(:(:o:unsure::unsure::unsure::unsure::unsure::unsure:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்களனைவறுக்கும் வணக்கம்,

இங்கே நெடுகுளப்போவன் போன்றவர்கள் பேசுவது ஆச்சர்யமாக இருக்கிறது, தமிழ நாட்டையே சுடுகாடக மாற்றியவர்கள் விடுதலைப்புலிகள், அப்படிபட்ட நீங்கள் இந்தியா எல்லைக்குள் ஆயுதத்துடன் ழுழைந்தால் பிடித்து விசாரனை செய்யாமல் கொஞ்சி குலாவுவார்களா, இந்தியா போன்ற சுதந்திர நாட்டில் எதைபற்றிவேண்டுமானாலும் எழுதாலாம் ஆனால் ஈழத்தில் என்ன நடக்கிறது, எதிற்த்து பேசினால் துரோகி துப்பாக்கி முனைதான் பேசும், அப்படி பாட்டவர்களுக்கு வக்காலத்து வாங்கும் உங்களைபோன்றவர்கள் பேசுவது சிரிப்பை வரவழைக்கிறது,

இந்தியாவில் மீண்டும் வாலாட்டினால் சுத்தமாக வாலை ஒட்ட நறுக்கிவிடுவோம் ஆமாம்

பிராந்தியவாதப் பூசலை தீண்டிவிடுவதற்காக கருத்தெழுதும் கழிவு இது.

இது ஒட்டுக்குளுவின் பாணியில் இதுக்கு வயிறு நனைக்கும் பணி இது.

முதலில் தமிழைப் படி பிறகு கண்டதி எழுதித்துலை.

பிறப்பு உம்மை மனிதனாய் வைத்தும், வயிறு உம்மை மிருகமாய் வாழவைத்து விட்டது.

எச்சில் இலைக்கு அல்லாடும் பதரே! நாலு சொல் தமிழில் சரியாகவே எழுத முடியாத உமது தமிழறிவுக்கு இது எல்லாம் தேவைதானா?

மேலும் பிராந்தியவாதத் துவேசத்தை கருத்தில் கக்கும் கள உறவுகளுக்கு!

எமக்கு வஞ்சனை செய்வது இந்திய அரசே அன்றி தமிழ் நாட்டு மக்கள் அல்ல.

எமது பரிகாசங்களையும், கண்டனங்களையும் மக்கள் மீது தொடுப்பதால் எதுவித பலனும் இல்லை.

அவர்கள் உணர்வுகளை இம்சை செய்யும் கருத்துக்களால் அவர்தம் அநுதாபத்தில் இருந்து எம்மை விலத்தி வைக்கின்ற செயலாகவே அமையும்.

கடுகளவும் உபயோகம் செய்யாத வெட்டித்தனமான வாதங்களை நிறுத்தி ஆரோக்கியமான செயற்பாடுகளின்பால் கவனத்தை செலவிடுங்கள்.

இதை ஊதிவிடுவதற்காகவே எம்மின கோடரிக்காம்புகள் அவர்களின் சார்பில் வஞ்சத்தை கொட்டுகிறார்கள் இங்கே. இதை புரிந்து தெளிவாக நடப்பதே எமது பணி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:(

தமிழ் தேசிய ஆதரவாளர்கள் "தேசியம்" என்பதன் சரியான அர்த்தத்தை புரிந்து கொண்டு சிந்தித்து பேசுவது, செயலாற்றுவது நல்லது. மாற்றுக் கருத்துக்காரர்களை இல்லாதொழிப்பதற்கு அவர்கள் மீது வசை பாடுவது பாதகமான விளைவுகளை மட்டுமே தரும். மாறாக அவர்களின் கருத்தை உண்மையான, நியாமான கருத்தால் எதிர் கொண்டு எம்மவராக்குவதன் மூலமே அவர்களை அழிக்க (அவர்களின் மாறான கருத்தை) முடியும். சில சமயம் அவர்களின் கருத்து சரியானதாகவிருக்கும் பற்சத்தில் அதனை ஏற்றுக் கொண்டு எம் தவறுகளை திருத்தியும் அவர்களை எம்முடன் இணைத்துக் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.

அதன் மூலமே இந்த நீண்ட பெரும் அழிவுகளை தந்த தந்து கொண்டிருக்கின்ற போராட்டத்தை சாதகமாக நிறைவு செய்ய முடியும்.

மாற்றுக்கருத்தாளர் சார்பில் பேச வல்லவர், நல்லவர் சொல்லுறார்.

மேலும் பிராந்தியவாதத் துவேசத்தை கருத்தில் கக்கும் கள உறவுகளுக்கு!

எமக்கு வஞ்சனை செய்வது இந்திய அரசே அன்றி தமிழ் நாட்டு மக்கள் அல்ல.

எமது பரிகாசங்களையும், கண்டனங்களையும் மக்கள் மீது தொடுப்பதால் எதுவித பலனும் இல்லை.

அவர்கள் உணர்வுகளை இம்சை செய்யும் கருத்துக்களால் அவர்தம் அநுதாபத்தில் இருந்து எம்மை விலத்தி வைக்கின்ற செயலாகவே அமையும்.

கடுகளவும் உபயோகம் செய்யாத வெட்டித்தனமான வாதங்களை நிறுத்தி ஆரோக்கியமான செயற்பாடுகளின்பால் கவனத்தை செலவிடுங்கள்.

இதை ஊதிவிடுவதற்காகவே எம்மின கோடரிக்காம்புகள் அவர்களின் சார்பில் வஞ்சத்தை கொட்டுகிறார்கள் இங்கே. இதை புரிந்து தெளிவாக நடப்பதே எமது பணி.

களஉறவுகளுக்கு என்று போலியாக விளிக்கும் இவர் கள உறவுகளை துரோகி எனவும் கோடாரிக் காம்புகள் என்றும் இனம்பிரிக்கும் வல்லவர்.

தமிழில் வரும் எதிர்கருத்துகளுக்கு துர்தமிழில் வசைபாடி தான் மகிழும் செம்மல்.

தன் கருத்தே முடிந்த முடிபென தான் செருக்குற்று அலையும் வள்ளல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:(:(:o:unsure::unsure::unsure::unsure::unsure::unsure:

<<<

எதுக்கு இப்படி யோசிக்கிறியள் நீங்கள்!!...தெளிவா இருக்க வேண்டிய நேரத்திலை குழம்பிக்கொண்டு!!....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களஉறவுகளுக்கு என்று போலியாக விளிக்கும் இவர் கள உறவுகளை துரோகி எனவும் கோடாரிக் காம்புகள் என்றும் இனம்பிரிக்கும் வல்லவர்.

தமிழில் வரும் எதிர்கருத்துகளுக்கு துர்தமிழில் வசைபாடி தான் மகிழும் செம்மல்.

தன் கருத்தே முடிந்த முடிபென தான் செருக்குற்று அலையும் வள்ளல்.

எனது கருத்தில் உள்ள பௌக்குவக் குறைவையும், தெளிவின்மையையும் எடுத்துக் காட்டிய

சாணக்கியனுக்கு முதலில் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

rmsachitha ஒரு இலங்கையனாய் இருந்தும், தன்னை இந்தியனாய் பாவித்து கருத்து எழுதுவதன் நோக்கம்.

இப்படிப் பட்ட பிராந்தியவாதப் பூசலை உருவாக்குவதற்கே! உண்மையில் இவர் போன்ற கோடரிக்காம்புகளின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என்பதே எனது அவா.

மேலும் சாணக்கியனுக்கு!

உமது களப்பெயர் பலபேர் உபயோகத்துக்கு விடப்பட்டுள்ளதா?

இல்லை என்றால் ஏன் இப்படி முன்னுக்கு பின் முரண்பாடு கொண்டதாக உமது கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கிறது:

புலிகளின் பின்வாங்கல்களுக்கு வசைபாடி புலிகள் பதிலடி தொடர்வதே இன்றய தேவை என்று பிதற்றுகிறீர்.

சிலவேளை இப்படி: உங்கள் போர்பித்தம் ஏன் இன்னும் தணியவில்லை சமாதானமே வாழ்வளிக்கும் என்று பிதற்றுகிறீர்.

சிலவேளை இப்படி: மனித உரிமை, மனிதாபிமானம் இவற்றைப் பற்றி எழுதித்தள்ளுகிறீர்.

இன்னும் ஒருசமயம் இப்படி: சிங்கள் மக்கள் பயங்கரவாதத்தால் கொல்லப் படும்போது சந்தோசப் படுகிறீர்.

ஆக உமது கருத்துப் பதிவுகளின் குறிக்கோள், புலிகளுக்கு அவப்பெயரைக் கொடுப்பதற்கு, கருத்துப் போக்கின் எந்தெந்த திசைகள் வசதியோ, அவைதான் தீர்மானிக்கின்றதோ உமது கருத்துருவாக்கத்தின் தன்மையை.

சிங்கத்தின் மடியில் இருந்து எலும்பு நக்கும் உம் புத்திக்கு நாம் என்னத்தால் சாத்த வேண்டும் நீரே சொல்லும் அதை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.