Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடலுறவு கொள்ளாமையினாலேயே மயில் தேசியப் பறவை : நீதிபதி புதிய விளக்கம்

Featured Replies

உட­லு­றவு கொள்­ளா­மை­யினா­லேயே மயில் ­தே­சியப் பறவை : நீதிபதி புதிய விளக்கம்

 

 

இந்­தி­யாவின் தேசியப் பற­வை­யாக மயில் இருப்­ப­தற்கு காரணம் அது பிரம்­மச்­ச­ரி­யத்தைக் கடைப்­பி­டிக்­கி­றது. ஆண் மயில் பெண் மயி­லுடன் உட­லு­றவு கொள்­வ­தில்லை.அத­னா­லேயே மயில் இந்­தி­யாவின்  தேசியப் பற­வை­யாக அறி­விக்­கப்­பட்­டது என ஒரு விநோத விளக்­கத்தை  ராஜஸ்தான் உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி மகேஷ் சந்­திர ஷர்மா அளித்­துள்­ளமை பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

21144.jpg

ஆசி­யாவின் மிகச்­சி­றந்த பசு பரா­ம­ரி ப்பு மையமான 'ஹிங்­கோ­னியா' ராஜஸ்­தானில் உள்­ளது. கடந்த ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து மே மாதம் வரை 8122 பசுக்கள் உடல்­ந­லக்­கு­றைவு மற்றும் காயங்­களால் இந்த மையத்தில் உயி­ரி­ழந்­துள்­ளன என்று ராஜஸ்தான் அரசு அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளி­யிட்­டது. இது தொடர்­பான வழக்கு, நேற்­று­முன்­தினம்  ராஜஸ்தான் உயர்­நீ­தி­மன்­றத்தில் விசா­ர­ணைக்கு வந்­தது.

வழக்கை விசா­ரித்த நீதி­பதி மகேஷ் சந்­திர ஷர்மா, பசுவைக் கொன்றால் ஆயுள் தண்­டனை விதிக்க வேண்டும்.  பசுவை தேசிய விலங்­காக அறி­விக்க வேண்டும் என மத்­திய மாநில அர­சு­க­ளுக்கு சில முக்­கிய அறி­வு­ரை­களை வழங்­கினார்.  பசுவை ஏன் தேசிய விலங்­காக அறி­விக்க வேண்டும் என செய்­தி­யா­ளர்­களின் கேள்­விக்கு பதி­ல­ளித்த நீதி­பதி, 33 கோடி கட­வுள்கள் பசு­வினுள் வசிக்­கி­றார்கள் என்று நம்­பப்­ப­டு­கி­றது. பசு ஒரு மருத்­து­வ­ம­னை­யையே தனக்குள் கொண்­டுள்­ளது. ஒட்சிசனை உட்­கொண்டு மீண்டும் ஒட்சிசனையே வெளி­யேற்­று­வது பசு மட்­டும்தான். கல்­லீரல், இதயம் உள்­ளிட்­ட­வற்றை கோமியம் பாது­காக்கும் கோமியம் குடிப்­பதால் பூர்வ ஜென்ம பாவங்­களிலிருந்து விடு­தலை கிடைக்கும். இத­னால்தான் பசுவை தேசிய விலங்­காக்க வேண்டும் என்று தெரி­வித்­துள்ளார்.

மேலும், மயில் இந்­தி­யாவின் தேசியப் பற­வை­யாக இருப்­ப­தற்கு காரணம் அது பிரம்­மச்­ச­ரி­யத்தைக் கடைப்­பி­டிக்­கி­றது. ஆண் மயில் பெண் மயி­லுடன் உட­லு­றவு கொள்­வ­தில்லை. ஆண் மயிலின் கண்­ணீரால் மட்­டுமே பெண் மயில் கரு­வு­று­கி­றது. எனவே மயில் புனி­தத்­தன்மை கொண்­டது. அத­னா­லேயே மயில் இந்­தி­யாவின் தேசியப் பற­வை­யாக உள்­ளது என்று கூறி அனை­வ­ரையும் அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்ளார்.

http://www.virakesari.lk/article/20546

  • தொடங்கியவர்

ஒரு நிமிடக் கட்டுரை: பசுநேசர் நீதிபதி சர்மா என்னவெல்லாம் சொன்னார்?

 

 
 
2_3170723f.jpg
 
 
 

மாட்டரசியல் தொடர்பான விவாதங் களை மக்களிடம் கொண்டுசெல்வதில் இப்போதெல்லாம் அரசியல்வாதி களுக்கு இணையான சர்ச்சைகளை நீதிபதிகளும் கிளப்பத் தொடங்கியிருக்கிறார்கள். ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா, தன்னுடைய பணிக் காலத்தின் கடைசி நாளன்று தெரிவித்த கருத்துகள் நாடெங்கும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. அன்னார் தெரிவித்த கருத்துகளில் முக்கியமான சில இங்கே!

$தேசிய பிராணியாகப் பசு அறிவிக்கப்பட வேண்டும். பசுக் கொலைக்கான தண்டனையை 10 ஆண்டு சிறைத் தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக உயர்த்த வேண்டும்.

$பசுவின் சிறுநீரால் கிடைக்கும் 11 நற்பலன்கள், பசு நெய் மற்றும் பஞ்சகவ்யத்தைச் சாப்பிடுவதால் ஏழு அனுகூலங்கள் ஏற்படுகின்றன.

$தாய்ப்பசு ஒன்றுதான் ஆக்சிஜனைச் சுவாசித்து ஆக்சிஜனை வெளியிடுகிறது.

$பசுவில் 33 கோடி தேவர்களும் தேவதைகளும் உறைந்திருக்கின்றனர். பசு மாடு தன் கொம்புகள் வாயிலாக பிரபஞ்ச ஆற்றலை உறிஞ்சுகிறது.

இப்படி பசுவின் சிறப்புகளைப் பற்றிப் பலவிதக் கருத்துகளைத் தெரிவித்த சர்மா, அவற்றின் பாதுகாப்புக்காகப் பலவிதமான வழிகாட்டுதல்களையும் அளித்தார். அவற்றினூடே பசுவின் சட்டரீதியிலான காவலர்களாக அவர் நியமித்தது, மாநில அரசுத் தலைமைச் செயலர் மற்றும் அட்வகேட் ஜெனரல் இருவரையும்.

$தனக்கு வழக்கறிஞர் சங்கத்தால் அளிக்கப்பட்ட வழியனுப்பு விழாவில் பேசிய நீதிபதி சர்மா, தனது தீர்ப்பை ‘ஆன்மாவின் குரல்’ என்று வர்ணித்ததோடு, “பசுவை தேசிய பிராணியாக ஆக்க வேண்டுமென்று ஒவ்வொரு இந்தியரும் விரும்புகிறார்” என்றும் தெரிவித்தார். அதன் பின்னர், ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், மயில் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டதற்கான காரணத்தையும் குறிப்பிட்டார். “ஆண் மயில் வாழ்க்கை முழுவதும் பிரம்மச்சாரியாக வாழ்கிறது. பெண் மயிலுடன் அது உறவு கொள்வதில்லை. ஆண் மயிலின் கண்ணீர் துளிகளைப் பருகியே பெண் மயில் கர்ப்பமாகிறது. அப்படித்தான் மயில் குஞ்சுகள் பிறக்கின்றன” என்று அப்போது சர்மா குறிப்பிட்டார்!

http://tamil.thehindu.com/opinion/columns/ஒரு-நிமிடக்-கட்டுரை-பசுநேசர்-நீதிபதி-சர்மா-என்னவெல்லாம்-சொன்னார்/article9718139.ece

  • கருத்துக்கள உறவுகள்

கெட்டிக்கார நீதிபதி, பென்சன் வாங்கும் போதுதான் தான் லூசு என்டதை வெளியில காட்டியிருக்கார்.

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: பிரம்மச்சாரி மயில்- உசாரய்யா உசாரு!

 

 
 
mayil2_3170351f.jpg
 
 
 

''ஆண் மயில் பிரம்மச்சர்யத்தை பின்பற்றும் பறவை. அது ஒருபோதும் தன் இணையுடன் உறவு கொள்வதில்லை. ஆண் மயிலின் கண்ணீரைப் பருகியே பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது'' என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா செய்தியாளர்களிடம் கூறிய கருத்து இணைய வெளியில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த நெட்டிசன்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Sureshkumar Selvaraj

மொதல்ல ஒரு மயிலிறகை பாடப்புத்தகம், இல்லை நோட்டுப்புத்தகத்துக்குள்ள யாரு கண்ணுலயும் படாம மறைச்சி வைச்சி ஒரு வாரம் கழிச்சுப் பார்த்தா மயில் குட்டி போட்டிருக்கும்! அதுவும் பாவம் பண்ணாதவனுக்கு மட்டும்தான் குட்டி போடுமாம்..!

mayil_3170354a.jpg

Ravi Krishna

இப்படித்தான் சின்ராசு கூட சின்ன வயசுல முத்தம் கொடுத்தாலே பேபி பொறக்கும்னு நினைச்சுட்டு இருந்தான்... அதுக்குன்னு ரிட்டையர்ட் ஆகற வரைக்கும் அப்டியேவா ஜட்ஜய்யா??

Mannar Mannan

மயில் ஒரு பிரம்மச்சாரி...

சப்பாணி இன்னுமா ரிலீஸ் ஆகல?

Elambarithi Kalyanakumar

அறிவியல்படி மற்ற பறவைகளைப்போலவே மயில்களும் உடலுறவின் மூலமே இனப்பெருக்கம் செய்கிறது. இந்த இணைசேருதல்கள் தனித்த இரவுகளில் யாரும் காணா வண்ணம் இருக்கின்றன.

Suresh Seenu

என் கண்ணில் நீர் வழிந்தால்

:

:

:

கொஞ்சம் எச்சரிக்கையாக எட்டியே இருங்கள்!

இவண்,

மயிலாடுதுறை மயில்சாமி!

Boopathy Murugesh

ஆண் மயிலின் கண்ணீர்த் துளிகளை பருகி தான் பெண் மயில் கர்ப்பமாகிறது - ராஜஸ்தான் நீதிபதி.

ச்

Siva Kumar S

மயில் இறகு குட்டி போடும்போது, மயில் கண்ணீர் குட்டி போடாதா போங்க தம்பி சும்மா குசும்பு பண்ணிக்கிட்டு...

திருப்பூர் தீக்குச்சி

நீதிபதி கர்ணனை பற்றி பேசவில்லை., கேரள நீதிபதியின் கேள்வியைப் பற்றிப் பேசவில்லை. ராஜஸ்தான் மயில் நீதிபதியைப் பிடித்துகொண்டார்கள் கண்ணியவான்கள்.

Nambikai Raj

நான் அலகாபாத்ல இருக்கும்போது அங்க ரயில்வே ஸ்டேஷன், ரோடு, வீடு, கடை என எங்க பார்த்தாலும் சிவப்பு சிவப்பா இருப்பதை பார்த்திருக்கேன். எதோ பான்னு சொல்லுவாங்க அந்த பாக்கை போட்டு எல்லா இடத்திலேயும் துப்பி வச்சிருப்பானுக. அது ஏன்னு அப்போ புரியலை ஆனா ராஜஸ்தான் நீதிபதி சொன்ன பிறகுதான் புரியுது.

இப்படில்லாம் கண்ணுமண்ணு தெரியாம எச்சி துப்பி வச்சதாலதான் உத்திரப்பிரதேசம் மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கு.

mayil3_3170352a.jpg

கோமகன்

மாட்டுல இருந்த நம்மள இப்ப மயிலுக்கு டைவர்ட் பண்ணிருக்காய்ங்க!!!

உஷாரு!!!

சாரு நாச்சியார்

செல்லூர் அமைச்சர கலாய்ச்வங்கலாம் வாங்க இப்ப.

ஆண் மயில் உறவு கொள்வதில்லை... அதனால்தான் மயில் தேசிய பறவை - ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி.

#சிரிப்பு வரல... அழுகைதான் வருது... என் முன்னோர்கள் ரத்தம் சிந்தி வாங்கிய சுதந்திர நாட்டில் இப்படி ஒரு நீதிபதி!

Kutty Giri

மயில் காட்டுல நல்லாதான் இருக்கு!

உண்மையில கிளிங்க நாங்கதான் பிரம்மச்சாரி!

கிளிஜோசியம்னு ஒண்டியா அடைச்சி வைச்சிடுறாங்க.

mayil1_3170353a.jpg

நாச்சியாள் சுகந்தி

மயில் நீதிபதியை குற்றம் சொல்லாதீர்கள்.

சூரியன பார்த்தே கர்ப்பம் ஆனாங்க, மஞ்சளையும் அழுக்கையும் திரட்டி புள்ளையார் பொறாந்தாருன்னு சொன்ன ஊருல கண்ணீரக் குடிச்சு மயில் கர்ப்பம் ஆகாதா? புராணங்கள் இப்படித்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது... அந்த யேசுபிரான் பிறப்பு உள்பட.

ஆணும் பெண்ணும் சேர்ந்து புள்ள பொறந்துச்சுன்னு முதல்ல இருந்த எல்லா கதையையும், புராணத்தையும் மாத்துங்க யுவர் ஆனர்.

Rohini Rj

மயில் ஒரு பிரம்மச்சாரி, குயில் ஒரு சோமாரி, காக்கா ஒரு கேப்மாரி! தனுஷ் பாடுனது டங்கா மாரி! இவனுகள வச்சுட்டு நமக்கு ஏது மும்மாரி!

mail1_3170357a.jpg

Yuva Krishna

“மயில் மட்டுமல்ல. தெர்மாக்கோலும் குட்டி போடும்” செல்லூர் ராஜூ ஆவேசம்!

சிற்பன் @SKtwtz

மயில் ஒரு பிரம்மச்சாரி; எனவே அது தேசிய பறவை- ராஜஸ்தான் நீதிபதி.

எந்த மயில் வந்து உங்க கோர்ட்ல சாட்சி சொல்லுச்சு ஜட்ஜ் ஐயா..

கா. விஜய் ஆனந்த்

மயில் விசயத்துல அவர் பேசினத விடுங்க... அவர் எத்தனை கேசுல தீர்ப்பு எழுதி இருப்பாரு... தண்டனை வாங்கினவங்க நிலைமையை யோசிச்சா...???? கிறுகிறுன்னு வருதே....!

Newton‏ @twittornewton

புராணத்திலிருந்தும் கவிதைகளிலிருந்தும் ஏன் விஞ்ஞானம் கற்கக் கூடாது என்பதற்கு இன்னொரு உதாரணம் பிரம்மச்சாரி மயில்.

http://tamil.thehindu.com/opinion/blogs/நெட்டிசன்-நோட்ஸ்-பிரம்மச்சாரி-மயில்-உசாரய்யா-உசாரு/article9717582.ece

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியன்ஸ் அறிவு இப்பிடி இருக்கிறதாலதான் நாங்கள் எல்லாரும் அகதியா ஓட வேண்டி வந்தது. tw_dizzy:

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் சாட்சிகளை வைத்து தீர்ப்பு வழங்குபவர் தானே நீதிபதி இவருக்கு வெளி உலகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை  மூளையை மூடி வச்சிட்டு பேட்டி கொடுப்பார்களோ??

  • தொடங்கியவர்

பெண் மயில்களை ஈர்க்க ஆண் மயில்களின் 'பலே உத்தி' : ஆய்வு

 
 

பெண் மயில்களின் கவனத்தை ஈர்க்க ஆண் மயில்கள் பொய்யான பாலியல் அழைப்பு ஒலிகளை எழுப்புவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பெண் மயில்களை ஈர்க்க ஆண் மயில்களின் அட்டகாச உத்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபெண் மயில்களை ஈர்க்க ஆண் மயில்களின் அட்டகாச உத்தி

பொதுவாக மயில்கள் தங்களது தோகைகளை அசைக்கும் பழக்கமுடைவை, ஆனால், இது பாலியல் ரீதியான அழைப்பு உத்தி என்று கனடா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பல விதங்களில் குரல் எழுப்பும் தன்மை மயில்களுக்கு உண்டு. மேலும், கூடலின்போது மயில்கள் தனித்துவமான பேரொலியொன்றை எழுப்பும்.

பெண் மயில்களை கண்டவுடன் ஆண் மயில்கள் இந்த ஒலியை எழுப்புவதாக பதிவு செய்துள்ள உயிரியலாளர்கள், இந்த ஏமாற்று வித்தை ஆண் மயில்களுக்கு அவற்றின் நோக்கத்துக்கு பலன் கிட்டும் வகையில் அமைவதாக தெரிவித்துள்ளனர்.

ஆய்வாளர்களின் இந்த கண்டுபிடிப்புகள் 'தி அமெரிக்கன் நேச்சுரலிஸ்ட்' என்ற சஞ்சிகையில் பதிப்பாகியுள்ளது.

பார்வையை ஈர்க்கும் தோகை மற்றும் நடையழகால் தனது பாலியல் ஈடுபாட்டை பறைசாற்றும் வகையில் நடந்து கொள்ளும் மயில்கள் விலங்கு மற்றும் பறவையினங்களில் பாலியல் ஈடுபாட்டை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த உதாரணமாகும்.

ஆண் மயில்கள் பலமான ஒலி எழுப்புவதன் காரணமென்ன?

வெற்றிகரமாக பெண் மயிலை ஈர்த்துவிட்ட ஆண் மயில், அதனுடன் கூடலில் ஈடுபடுவதற்கு முன்பு, பெண் மயிலருகே அருகே சென்று தனித்துவமான பேரொலியொன்றை எழுப்பும்.

பெண் மயில்களை ஈர்க்க ஆண் மயில்களின் அட்டகாச உத்தி: ஆய்வுபடத்தின் காப்புரிமைATTILA KISBENEDEK/AFP/GETTY IMAGES

ஆண் மயில்கள் எழுப்பும் இந்த ஒலி ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து கூட கேட்கும் அளவு பலமான ஒலியாக இருப்பதால், இவ்வாறான பலத்த ஒலியை எழுப்பும் ஆண் மயிலுக்கு இதனால் என்ன பலன் என்று ஆராய்ந்தனர்.

இந்த ஆய்வை இணைந்து மேற்கொண்ட கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் ரோஸ்லின் டக்கின் கூறுகையில், ''ஆண் மயில் எழுப்பும் ஒலி மிகவும் பலமாக இருக்கும். தான் கூடவுள்ள பெண் மயிலுக்கு தனது எண்ணத்தை புரிய வைப்பதை தாண்டியும் இந்த ஒலிக்கு பங்குள்ளது'' என்று தெரிவித்தார்.

வட அமெரிக்கவில் உள்ள உயிரியல் பூங்காக்களில் சுதந்திரமாகவும், கூண்டில் அடைக்கப்படாமலும் கூட்டமாக இருக்கும் பறவைகள் குறித்து டக்கின் ஆய்வு மேற்கொண்டார். இப்பறவைகள் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவையாகும்.

60% அளவுக்கு ஆண் மயில்களிடையே பொய்யான அழைப்புகள் இருந்தது வியப்பளிக்கும் வகையில் பொதுவான அம்சமாக டக்கின் கண்டறிந்துள்ளார்.

பெண் மயில்களை ஈர்க்க ஆண் மயில்களின் அட்டகாச உத்தி: ஆய்வுபடத்தின் காப்புரிமை2. YOSHIKAZU TSUNO/AFP/GETTY IMAGES Image captionபெண் மயில்களை ஈர்க்க ஆண் மயில்களின் அட்டகாச உத்தி: ஆய்வு

இந்த ஏமாற்று வித்தையின் மூலம் அந்த ஆண் மயில்களுக்கு பெண் துணை கிடைப்பதாக டக்கின் கண்டறிந்துள்ளார்.

''ஆண் மயில் எழுப்பும் ஒலியின் அளவு அதிகரித்தவுடன், அதனால் ஈர்க்கப்பட்டு அதனருகே பெண் மயில் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உண்டு. ஆனால், இவ்வாறான செய்கையினால் ஆண் மயில்களுக்கு ஏதாவது உடல்தகுதி ரீதியான ஆதாயம் கிடைக்கிறதா என்று இன்னமும் தெரியவில்லை'' என்று டக்கின் மேலும் தெரிவித்தார்.

ஆனால், அதிகப்படியான முறைகள் இவ்வாறான ஒலியை கேட்கும் போது, ஆண் மயில்களின் ஏமாற்று வித்தையை பெண் மயில்கள் முற்றிலுமாக புறக்கணிக்கும் ஆபத்தும் உள்ளது.

http://www.bbc.com/tamil/global-40124623

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.