Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐங்கரநேசன், குருகுலராசாவை பதவி நீக்குங்கள்! பரிந்துரைத்தது முதலமைச்சர் நியமித்த விசாரணைக் குழு

Featured Replies

ஐங்கரநேசன், குருகுலராசாவை பதவி நீக்குங்கள்!

பரிந்துரைத்தது முதலமைச்சர் நியமித்த விசாரணைக் குழு

 
ஐங்கரநேசன், குருகுலராசாவை பதவி நீக்குங்கள்!
 

வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு தனது அறிக்கையில் இரு அமைச்சர்கள் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராசா மற்றும் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, கூட்டுறவு மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரையே பதவி விலகவேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

அனேகமாக நாளை செவ்வாய்க் கிழமை நடைபெற இருக்கும் வடக்கு மாகாண சபை அமர்வில் இந்த அறிக்கை முன்வைக்கப்படவுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதிகளான எஸ்.தியாகேந்திரன், எஸ்.பரமராஜா மற்றும் ஓய்வு பெற்ற மாவட்டச் செயலர் செ.பத்மநாதன் ஆகியோர் அந்த விசாரணைக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்தக் குழு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது பணியை ஆரம்பித்தது. அதன் இறுதி அறிக்கை கடந்த மே மாதம் 19ஆம் திகதி முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

விசாரணை அறிக்கை 82 பக்கங்களைக் கொண்டுள்ளது. முழுமையாகத் தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவிற்கு வழங்கப்பட்ட ஆணை, விதிமுறை, அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள், கண்டறிவுகள், பரிந்துரைகள் அல்லது விதப்புரைகள், நன்றியுரை என்ற கட்டமைப்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

http://uthayandaily.com/story/5166.html

  • தொடங்கியவர்

பாலியல் குற்றச்சாட்டு: மூடி மறைத்தார் குருகுலராசா

முதலமைச்சர் நியமித்த விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவிப்பு

 
பாலியல் குற்றச்சாட்டு: மூடி மறைத்தார் குருகுலராசா
 
வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர்­கள் மீதான குற்­றச்­சாட் டுக்­களை விசா­ரிப்­ப­தற்­காக முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னால் நிய­மிக்­கப்பட்ட விசா­ர­ணைக் குழு தனது அறிக்­கை­யில் இரு அமைச்­சர்­கள் பதவி வில­க­வேண்­டும் என்று பரிந்­து­ரைத்­துள்­ளது.
 
கல்வி, பண்­பாட்­ட­லு­வல்­கள், விளை­யாட்டு மற்­றும் இளை­ஞர் விவ­கார  அமைச்­சர் தம்­பி­ராசா குரு­கு­ல­ராசா மற்­றும் விவ­சா­ய­மும் கம­நல சேவை­க­ளும், கால்­நடை அபி­வி­ருத்தி, நீர்ப்­பா­சன, கூட்டுறவுத்துறைமற்­றும் சுற்­றா­டல் அமைச்­சர் பொன்­னுத்­துரை ஐங்­க­ர­நே­சன் ஆகி­யோ­ரையே பதவி வில­க­வேண்­டும் என்று அந்த அறிக்கை பரிந்­து­ரைத்­துள்­ளது.
 
அனே­க­மாக நாளை செவ்வாய்க்கிழமை  நடை­பெற இருக்­கும் வடக்கு மாகாண சபை அமர்­வில் முன்­வைக்­கப்­ப­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டும் இந்த அறிக்­கை­யின் முக்­கிய பகு­தி­கள் தற்­போது கசிந்­துள்­ளன. அவற்­றின் விவ­ரங்­களை உத­யன் பத்­தி­ரிகை பெற்­றுள்­ளது.
 
வடக்கு மாகாண சபை­யில் முத­ல­மைச்­சர் உட்­பட 5 அமைச்­சர்­கள் பதவி வகிக்­கின்­ற­னர். அவர்­கள் மீது  ஊழல், மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் சொந்­தக் கட்­சி­யி­ன­ரா­லேயே முன்­வைக்­கப் பட்டு வந்­தன. அது தீவி­ரம் பெற்று விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­ நே­ச­னுக்கு எதி­ராக விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்­டும் என்று வடக்கு மாகாண சபை­யில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது. அதை அடுத்து அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரிக்க சுயா­தீ­ன­மான குழு ஒன்றை நிய­மிக்கின்றேன் என்று முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அறி­வித்­தார்.
 
ஓய்­வு­பெற்ற நீதி­ப­தி­க­ளான எஸ்.தியா­கேந்­தி­ரன், எஸ்.பர­ம­ராஜா மற்­றும் ஓய்வு பெற்ற மாவட்­டச் செய­லர் செ.பத்­ம­நா­தன் ஆகி­யோர் அந்த விசா­ர­ணைக் குழு­வின் உறுப்­பி­னர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­ட­னர். இந்­தக் குழு செப்ரெம்பர் மாதம் 26 ஆம் திகதி நியமிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்­பர்  மாதம் தனது பணியை ஆரம்­பித்­தது. அதன் இறுதி அறிக்கை  கடந்த மே மாதம் 19ஆம் திகதி முத­ல­மைச்­ச­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்­டது.
 
விசா­ரணை அறிக்கை 82 பக்­கங்­க­ளைக் கொண்­டுள்­ளது. முழு­மை­யா­கத் தமிழ் மொழி­யில் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. விசா­ர­ணைக் குழு­வுக்கு வழங்­கப்­பட்ட ஆணை, விதி­முறை, அமைச்­சர்­கள் மீதான குற்­றச்­சாட்­டுக் கள், கண்­ட­றி­வு­கள், பரிந்­து­ரை­கள் அல்­லது விதப்­பு­ரை­கள், நன்­றி­யுரை என்ற கட்­ட­மைப்­பில் அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.
 
கண்­ட­றி­வு­கள், பரிந்­து­ரை­கள் பகு­தி­யில் அறிக்­கை­யில் முக்­கி­ய­மா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
 
(அ) சுகா­தார அமைச்­சர் ப.சத்­தி­ய­லிங்­கம் மீதான குற்­றச்­சாட்­டுக்­கள் ஆதா­ர­பூர்­வமாக நிரூ­பிக்­கப்­ப­ட­ வில்லை. இத­னால் அவர் சகல குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்­தும் விடு­விக்­கப் படு­கின்­றார்.
 
(ஆ) அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் மீது குற்­றச்­சாட்­டுக்­கள் சுமத்­தி­ய­வர் கள், விசா­ர­ணைக்கு சமு­க­ம­ளிக்­க­வில்லை. எனி­னும் குற்­றச் சாட்­டுக்­கள் விசா­ரிக்­கப்­பட்­டன. ஆதா­ரங்கள் இல்­லா­த­தால் அவ­ரும் குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்து விடு­விக்­கப்­ப­டு­கின்­றார்.
 
(இ) கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ராசா கல்­விச் சேவைப் பின்­பு­லத்­தி­லி­ருந்து வந்­த­வர். வடக்­கின் கல்வி வீழ்ச்­சி­ய­டைந்­தி­ருந்­தது. இவ்­வா­றான சூழ­லில் கல்வி அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்­றார். இதன் பின்­ன­ரும் கல்­விப் புலத்­தில் முன்­னேற்­றம் ஏற்­ப­ட­வில்லை.
 
அமைச்­சர் குரு­கு­ல­ராசா அதி­கார  முறை­கே­டு­க­ளில் ஈடு­பட்­டுள்­ளார். கல்வி அமைச்­சின் செய­லா­ள­ரின் அதி­கா­ரத்தை, அமைச்­சர் தனது கையில் எடுத்­துள்­ளார். இட­மாற்­றங்­க­ளின்­போது அர­சி­யல் செல்­வாக்­குச் செலுத்­தப்­பட்­டுள்­ளது. செய­லா­ள­ருக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரத்தை முறை­யற்ற விதத்­தில் அமைச்­சர் பயன்­ப­டுத்த வகை செய்­யும் அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரம் சமர்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இதில் செய­லா­ள­ரும் கையெ­ழுத்­திட்டு உடந்­தை­யாக இருந்­தி­ரு­கி­றார்.
 
இப்­ப­டி­யா­ன­தொரு அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரம் சமர்­பிக்­கப்­பட்­ட­போது தலை­மைச் செய­லா­ள­ரும் அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் இருந்­துள்­ளார். வடக்கு மாகாண சபை திற­னற்­றுச் செயற்­ப­டு­கின்­றது என்ற குற்­றச்­சாட்டு மக்­க­ளால் முன்­வைக்­கப்­பட்டு வரு­வதை ஆமோ­திப்­பது போன்று இது உள்­ளது.
 
மிக முக்­கி­ய­மாக, கிளி­நொச்சி மாவட்­டத்­தில் பாட­சா­லைச் சிறுமி ஒரு­வர் பாட­சாலை அதி­ப­ரால் பாலி­யல் வதைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டார். சம்­ப­வம் குறித்­துக் குரல் எழுப்­பிய பாட­சாலை ஆசி­ரி­யரை, கிளி­நொச்சி வல­யக் கல்­விப் பணிப்­பா­ள­ரு­டன் இணைந்து, கல்வி அமைச்­சர் இட­மாற்­றம் செய்­துள்­ளார். இது மிக மோச­மான மன்­னிக்க முடி­யாத குற்­றம்.
 
எனவே கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ராஜா உட­ன­டி­யா­கத் தனது அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து விலக வேண்­டும். அத்­து­டன் கல்வி அமைச்­சின் செய­லா­ள­ரும் அந்­தப் பத­வி­லி­யி­ருந்து விலக வேண்­டும்.
 
(ஈ) விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சன் மீது பல குற்­றச்­சாட்­டுக்­கள் சுமத்­தப்­பட்­டன. ஆளும் கட்சி உறுப்­பி­ன­ரான ஜி.ரி.லிங்­க­நா­தன், தன்­னு­டன் வடக்கு மாகாண எதிர்­கட்­சித் தலை­வர் சி.தவ­ரா­சா­வு­டன் விசா­ர­ணைக் குழு­வி­டம் முன்­னி­லை­யா­கி­யி­ருந்­த­னர். அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­ச­னி­டம், தவ­ராசா குறுக்கு விசா­ரணை செய்­தி­ருந்­தார். அதி­கார வரம்பு மீறல், முறை­கே­டு­கள், நிதி மோசடி தொடர்­பில் குற்­றச்­சாட்­டுக்­கள் சுமத்­தப்­பட்­டன.
 
மூத்த இலங்கை நிர்­வாக சேவை அதி­கா­ரி­கள் இருக்­கின்ற நிலை­யில், இளை­ய­வ­ரான ம.பற்­றிக்­டி­றைஞ்­சன் இவ­ரது அமைச்­சின் செய­ல­ராக நிய­மிக்­கப்­பட்­டார். இது இவர் செய்­கின்ற மே◌ாச­ட­யான நட­வ­டிக்­கை­க­ளுக்கு இணங்­கிச் செயற்­ப­டு­வ­தற்­கா­கவே மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
 
மரம்­ந­டுகை, பாதீ­னிய ஒழிப்பு, நீர் ஆய்வு விட­யங்­களை சுற்­றா­டல் அமைச்­சர் என்ற கோதா­வில் முன்­னெ­டுத்­துள்­ளார். சுற்­றுச்­சூ­ழல் விட­யம், 13ஆவது திருத்­தச் சட்­டத்­தின் அடிப்­ப­டை­யில் ஒருங்­கி­யைவு நிர­லில் உள்­ளது. இவற்றை கொழும்பு அர­சு­டன் சேர்ந்து திணைக்­க­ளம் உரு­வாக்கி மேற்­கொண்­டி­ருக்­க­வேண்­டும். அப்­ப­டி­யல்­லா­மல் அமைச்­சரை முன்­னி­லைப்­ப­டுத்­தியே இவ­ரது செயற்­திட்­டங்­கள் அமைந்­துள்­ளன.
 
இத்­த­கைய செயற்­றிட்­டங்­க­ளின் தொடக்க நிகழ்­வு­க­ளுக்கு முத­ல­மைச்­சர் அழைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார். அவரே இவற்றை இயக்­கு­வ­தான -, பின்­ன­ணி­யில் இருப்­ப­தான மாயை ஏற்­ப­டுத்­தும் நோக்­கில் செயற்­பட்­டுள்­ளார். அதனை வைத்து தனது கைங்­க­ரி­யங்­களை நிறை­வேற்­றி­யுள்­ளார்.
 
இவ­ரது அமைச்­சுக்கு வழங்­கப்­பட்ட தண்­ணீர் பவு­சர்­களை, உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்கு வழங்­கா­மல் தனது கட்­டுப்­பாட்­டில் வைத்­துள்­ளார்.
விவ­சாய கிணறு புன­ர­மைப்பு, புழு­தி­யாற்று ஏற்று நீர்­பா­ச­னத் திட்­டங்­க­ளில் நிதி முறை­கே­டு­கள் இடம்­பெற்­றுள்­ளன.
 
வடக்கு மாகாண கூட்­டு­றவு ஆணை­யா­ள­ரா­கக் கட­மை­யாற்­றிய திரு­மதி மது­மதி வசந்­த­கு­மார், இவ­ரது அழுத்­தங்­கள் கார­ண­மா­கவே மாகாண சபை சேவையை விட்டு வெளி­யே­றி­னார் என்று விசா­ர­ணைக் குழு கண்­ட­றிந்­துள்­ளது. வட­ம­ராட்சி கிழக்கு கூட்­டு­ற­வுச் சங்­கத் தலை­வரை பதவி நீக்­கம் செய்­தமை உள்­ளிட்ட விட­யங்­க­ளில் அமைச்­சர் நேர­டி­யாக தலை­யீடு செய்து அழுத்­தங்­களை வழங்­கி­யுள்­ளார்.
 
இதே­போன்று யாழ்க்­கோ­வி­லும் தலை­யீடு செய்­துள்­ளார். இத­னால் விசா­ர­ணைக்­குழு விச­ன­ம­டை­கின்­றது. பிந்­திய செய்­தி­யாக, யாழ்கோ பணிப்­பா­ளர் சபை உறுப்­பி­னர்­கள் நிய­ம­னத்­தி­லும் அழுத்­தம் கொடுத்­துள்­ளார் என்று அறி­கின்­றோம்.
திணைக்­கள அதி­கா­ரி­கள் மிரட்­டப்­பட்டு சில நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.
 
இவர் முன்­னெ­டுத்த தன்னை முதன்­மைப்­ப­டுத்­திய செயற்­திட்­டங்­க­ளால் மாகாண சபை நிதி வீண்­வி­ர­யம் செய்­யப்­பட்­டுள்­ளது. அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­ச­னும், அவ­ரது செய­லா­ள­ரு­மான பற்­றிக்­டி­றைஞ்­சன் ஆகி­யோர் பதவி விலக வேண்­டும்.
 
வடக்கு மாகாண சபையை வினைத்­தி­ற­னாக கொண்டு நடத்­து­வ­தற்கு எமது பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்­டும் – என்று அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
 
இதற்­கி­டையே அமைச்­சர்­கள் மீது குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­திய வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளான திரு­மதி அனந்தி சசி­த­ரன், ச.சுகிர்­தன் இரு­வ­ரும் விசா­ர­ணைக் குழு­வின் முன்­பாக ஒரு தட­வை­கூட  முன்­னி­லை­யாகி விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

http://uthayandaily.com/story/5166.html

1 hour ago, நவீனன் said:
மிக முக்­கி­ய­மாக, கிளி­நொச்சி மாவட்­டத்­தில் பாட­சா­லைச் சிறுமி ஒரு­வர் பாட­சாலை அதி­ப­ரால் பாலி­யல் வதைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டார். சம்­ப­வம் குறித்­துக் குரல் எழுப்­பிய பாட­சாலை ஆசி­ரி­யரை, கிளி­நொச்சி வல­யக் கல்­விப் பணிப்­பா­ள­ரு­டன் இணைந்து, கல்வி அமைச்­சர் இட­மாற்­றம் செய்­துள்­ளார். இது மிக மோச­மான மன்­னிக்க முடி­யாத குற்­றம்.
 
எனவே கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ராஜா உட­ன­டி­யா­கத் தனது அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து விலக வேண்­டும். அத்­து­டன் கல்வி அமைச்­சின் செய­லா­ள­ரும் அந்­தப் பத­வி­லி­யி­ருந்து விலக வேண்­டும்.

 

1 hour ago, நவீனன் said:

இவர் முன்­னெ­டுத்த தன்னை முதன்­மைப்­ப­டுத்­திய செயற்­திட்­டங்­க­ளால் மாகாண சபை நிதி வீண்­வி­ர­யம் செய்­யப்­பட்­டுள்­ளது. அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­ச­னும், அவ­ரது செய­லா­ள­ரு­மான பற்­றிக்­டி­றைஞ்­சன் ஆகி­யோர் பதவி விலக வேண்­டும்.

மானங்கெட்ட நான்கு சமூக விரோதிகளும் உடன் பதவி விலக வேண்டும். இல்லை என்றால் விலக்கப்பட வேண்டும்.

  • தொடங்கியவர்

வடமாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சர்கள் மீதான ஊழல்கள் நிரூபணம். பதவி விலக வேண்டும் என விசாரணை குழு பரிந்துரை

 

northern-provice.jpg

 

வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் இரு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் விசாரணைகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. மற்றைய இரு அமைச்சர்கள் மீதான குற்றசாட்டுகள் ஆதாரங்கள் இல்லாதமையால் நிரூபிக்கப்படவில்லை.

 
வடமாகாண சபையின் அமைச்சர்கள் மீதுஊழல் மோசடி  குற்றச்சாட்டுக்களை ஆளும் கட்சி உறுப்பினர்கள் முன் வைத்து வந்த நிலையில் அவற்றை விசாரணை செய்ய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விசாரணை குழு ஒன்றினை கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் நியமித்தார். அக்குழுவில் ஓய்­வு­பெற்ற நீதி­ப­தி­க­ளான எஸ்.தியா­கேந்­தி­ரன், எஸ்.பர­ம­ராஜா மற்­றும் ஓய்வு பெற்ற மாவட்­டச் செய­லர் செ.பத்­ம­நா­தன் ஆகி­யோர் உறுப்­பி­னர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­ட­னர்.
 
குறித்த விசாரணை குழு தனது பணியை கடந்த நவம்பர் மாதம் ஆரம்பித்தது. அக்குழுவின் விசாரணை அறிக்கை 82 பக்­கங்­க­ளைக் கொண்­டுள்­ளது. அது முழு­மை­யா­கத் தமிழ் மொழி­யில் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. விசா­ர­ணைக் குழு­வுக்கு வழங்­கப்­பட்ட ஆணை, விதி­முறை, அமைச்­சர்­கள் மீதான குற்­றச்­சாட்­டுக் கள், கண்­ட­றி­வு­கள், பரிந்­து­ரை­கள் அல்­லது விதப்­பு­ரை­கள், நன்­றி­யுரை என்ற கட்­ட­மைப்­பில் அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அறிக்கை கடந்த மே மாதம் 19ஆம் திகதி முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.குறித்த கண்­ட­றி­வு­கள், பரிந்­து­ரை­கள் பகு­தி­யில் அறிக்­கை­யில் முக்­கி­ய­மா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
 
விவசாய அமைச்சரின் மீதான குற்றசாட்டு. 
 

விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சன் மீது பல குற்­றச்­சாட்­டுக்­கள் சுமத்­தப்­பட்­டன. ஆளும் கட்சி உறுப்­பி­ன­ரான ஜி.ரி.லிங்­க­நா­தன், தன்­னு­டன் வடக்கு மாகாண எதிர்­கட்­சித் தலை­வர் சி.தவ­ரா­சா­வு­டன் விசா­ர­ணைக் குழு­வி­டம் முன்­னி­லை­யா­கி­யி­ருந்­த­னர். அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­ச­னி­டம், தவ­ராசா குறுக்கு விசா­ரணை செய்­தி­ருந்­தார். அதி­கார வரம்பு மீறல், முறை­கே­டு­கள், நிதி மோசடி தொடர்­பில் குற்­றச்­சாட்­டுக்­கள் சுமத்­தப்­பட்­டன.

மூத்த இலங்கை நிர்­வாக சேவை அதி­கா­ரி­கள் இருக்­கின்ற நிலை­யில், இளை­ய­வ­ரான ம.பற்­றிக்­டி­றைஞ்­சன் இவ­ரது அமைச்­சின் செய­ல­ராக நிய­மிக்­கப்­பட்­டார். இது இவர் செய்­கின்ற மோசடியான  நட­வ­டிக்­கை­க­ளுக்கு இணங்­கிச் செயற்­ப­டு­வ­தற்­கா­கவே மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

மரம்­ந­டுகை, பாதீ­னிய ஒழிப்பு, நீர் ஆய்வு விட­யங்­களை சுற்­றா­டல் அமைச்­சர் என்ற கோதா­வில் முன்­னெ­டுத்­துள்­ளார். சுற்­றுச்­சூ­ழல் விட­யம், 13ஆவது திருத்­தச் சட்­டத்­தின் அடிப்­ப­டை­யில் ஒருங்­கி­யைவு நிர­லில் உள்­ளது. இவற்றை கொழும்பு அர­சு­டன் சேர்ந்து திணைக்­க­ளம் உரு­வாக்கி மேற்­கொண்­டி­ருக்­க­வேண்­டும். அப்­ப­டி­யல்­லா­மல் அமைச்­சரை முன்­னி­லைப்­ப­டுத்­தியே இவ­ரது செயற்­திட்­டங்­கள் அமைந்­துள்­ளன.

இத்­த­கைய செயற்­றிட்­டங்­க­ளின் தொடக்க நிகழ்­வு­க­ளுக்கு முத­ல­மைச்­சர் அழைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார். அவரே இவற்றை இயக்­கு­வ­தான -, பின்­ன­ணி­யில் இருப்­ப­தான மாயை ஏற்­ப­டுத்­தும் நோக்­கில் செயற்­பட்­டுள்­ளார். அதனை வைத்து தனது கைங்­க­ரி­யங்­களை நிறை­வேற்­றி­யுள்­ளார்.

இவ­ரது அமைச்­சுக்கு வழங்­கப்­பட்ட தண்­ணீர் பவு­சர்­களை, உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்கு வழங்­கா­மல் தனது கட்­டுப்­பாட்­டில் வைத்­துள்­ளார். விவ­சாய கிணறு புன­ர­மைப்பு, புழு­தி­யாற்று ஏற்று நீர்­பா­ச­னத் திட்­டங்­க­ளில் நிதி முறை­கே­டு­கள் இடம்­பெற்­றுள்­ளன.

வடக்கு மாகாண கூட்­டு­றவு ஆணை­யா­ள­ரா­கக் கட­மை­யாற்­றிய திரு­மதி மது­மதி வசந்­த­கு­மார், இவ­ரது அழுத்­தங்­கள் கார­ண­மா­கவே மாகாண சபை சேவையை விட்டு வெளி­யே­றி­னார் என்று விசா­ர­ணைக் குழு கண்­ட­றிந்­துள்­ளது. வட­ம­ராட்சி கிழக்கு கூட்­டு­ற­வுச் சங்­கத் தலை­வரை பதவி நீக்­கம் செய்­தமை உள்­ளிட்ட விட­யங்­க­ளில் அமைச்­சர் நேர­டி­யாக தலை­யீடு செய்து அழுத்­தங்­களை வழங்­கி­யுள்­ளார்.

இதே­போன்று யாழ்க்­கோ­வி­லும் தலை­யீடு செய்­துள்­ளார். இத­னால் விசா­ர­ணைக்­குழு விச­ன­ம­டை­கின்­றது. பிந்­திய செய்­தி­யாக, யாழ்கோ பணிப்­பா­ளர் சபை உறுப்­பி­னர்­கள் நிய­ம­னத்­தி­லும் அழுத்­தம் கொடுத்­துள்­ளார் என்று அறி­கின்­றோம். திணைக்­கள அதி­கா­ரி­கள் மிரட்­டப்­பட்டு சில நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

இவர் முன்­னெ­டுத்த தன்னை முதன்­மைப்­ப­டுத்­திய செயற்­திட்­டங்­க­ளால் மாகாண சபை நிதி வீண்­வி­ர­யம் செய்­யப்­பட்­டுள்­ளது. அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­ச­னும், அவ­ரது செய­லா­ள­ரு­மான பற்­றிக்­டி­றைஞ்­சன் ஆகி­யோர் பதவி விலக வேண்­டும். வடக்கு மாகாண சபையை வினைத்­தி­ற­னாக கொண்டு நடத்­து­வ­தற்கு எமது பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்­டும்.

கல்வி அமைச்சரின் மீதான குற்றசாட்டு.

கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ராசா கல்­விச் சேவைப் பின்­பு­லத்­தி­லி­ருந்து வந்­த­வர். வடக்­கின் கல்வி வீழ்ச்­சி­ய­டைந்­தி­ருந்­தது. இவ்­வா­றான சூழ­லில் கல்வி அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்­றார். இதன் பின்­ன­ரும் கல்­விப் புலத்­தில் முன்­னேற்­றம் ஏற்­ப­ட­வில்லை.

அமைச்­சர் குரு­கு­ல­ராசா அதி­கார முறை­கே­டு­க­ளில் ஈடு­பட்­டுள்­ளார். கல்வி அமைச்­சின் செய­லா­ள­ரின் அதி­கா­ரத்தை, அமைச்­சர் தனது கையில் எடுத்­துள்­ளார். இட­மாற்­றங்­க­ளின்­போது அர­சி­யல் செல்­வாக்­குச் செலுத்­தப்­பட்­டுள்­ளது. செய­லா­ள­ருக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரத்தை முறை­யற்ற விதத்­தில் அமைச்­சர் பயன்­ப­டுத்த வகை செய்­யும் அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரம் சமர்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இதில் செய­லா­ள­ரும் கையெ­ழுத்­திட்டு உடந்­தை­யாக இருந்­தி­ரு­கி­றார்.

இப்­ப­டி­யா­ன­தொரு அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரம் சமர்­பிக்­கப்­பட்­ட­போது தலை­மைச் செய­லா­ள­ரும் அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் இருந்­துள்­ளார். வடக்கு மாகாண சபை திற­னற்­றுச் செயற்­ப­டு­கின்­றது என்ற குற்­றச்­சாட்டு மக்­க­ளால் முன்­வைக்­கப்­பட்டு வரு­வதை ஆமோ­திப்­பது போன்று இது உள்­ளது.

மிக முக்­கி­ய­மாக, கிளி­நொச்சி மாவட்­டத்­தில் பாட­சா­லைச் சிறுமி ஒரு­வர் பாட­சாலை அதி­ப­ரால் பாலி­யல் வதைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டார். சம்­ப­வம் குறித்­துக் குரல் எழுப்­பிய பாட­சாலை ஆசி­ரி­யரை, கிளி­நொச்சி வல­யக் கல்­விப் பணிப்­பா­ள­ரு­டன் இணைந்து, கல்வி அமைச்­சர் இட­மாற்­றம் செய்­துள்­ளார். இது மிக மோச­மான மன்­னிக்க முடி­யாத குற்­றம்.

எனவே கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ராஜா உட­ன­டி­யா­கத் தனது அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து விலக வேண்­டும். அத்­து­டன் கல்வி அமைச்­சின் செய­லா­ள­ரும் அந்­தப் பத­வி­லி­யி­ருந்து விலக வேண்­டும்.

சுகாதார மற்றும் மீன் பிடி அமைச்சர்களின் குற்றசாட்டு நிரூபிக்கப்படவில்லை.

சுகா­தார அமைச்­சர் ப.சத்­தி­ய­லிங்­கம் மீதான குற்­றச்­சாட்­டுக்­கள் ஆதா­ர­பூர்­வமாக நிரூ­பிக்­கப்­ப­ட­ வில்லை. இத­னால் அவர் சகல குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்­தும் விடு­விக்­கப்படு­கின்­றார்.

அதே போன்று மீன்பிடி அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் மீது குற்­றச்­சாட்­டுக்­கள் சுமத்­தி­ய­வர் கள், விசா­ர­ணைக்கு சமு­க­ம­ளிக்­க­வில்லை. எனி­னும் குற்­றச் சாட்­டுக்­கள் விசா­ரிக்­கப்­பட்­டன. ஆதா­ரங்கள் இல்­லா­த­தால் அவ­ரும் குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்து விடு­விக்­கப்­ப­டு­கின்­றார். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதேவேளை அமைச்­சர்­கள் மீது குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­திய வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளான திரு­மதி அனந்தி சசி­த­ரன், ச.சுகிர்­தன் இரு­வ­ரும் விசா­ர­ணைக் குழு­வின் முன்­பாக ஒரு தட­வை­கூட முன்­னி­லை­யாகி விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

கல்வி மற்றும் விவசாய அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்.

கல்வி, பண்­பாட்­ட­லு­வல்­கள், விளை­யாட்டு மற்­றும் இளை­ஞர் விவ­கார அமைச்­சர் தம்­பி­ராசா குரு­கு­ல­ராசா மற்­றும் விவ­சா­ய­மும் கம­நல சேவை­க­ளும், கால்­நடை அபி­வி­ருத்தி, நீர்ப்­பா­சன, கூட்டுறவுத்துறைமற்­றும் சுற்­றா­டல் அமைச்­சர் பொன்­னுத்­துரை ஐங்­க­ர­நே­சன் ஆகி­யோ­ரையே பதவி வில­க­வேண்­டும் என்று அந்த அறிக்கை பரிந்­து­ரைத்­துள்­ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/archives/29001

  • தொடங்கியவர்

 

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் விசாரணை அறிக்கை விரைவில் சமர்ப்பிப்பு

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஐங்கரநேசன் என்ன செய்தவர்...??!

நிறைய வறிய மாணவர்களுக்கு இலவசமாக தனியார் வகுப்பெல்லாம்.. கொடுக்க உதவிய மனுசன்... காசுக்கு ஆசைப்பட்டிருக்கும் என்று நம்ப முடியவில்லை.

காலம் ஒருவேளை ஆளை மாற்றிவிட்டதா... அல்லது காலத்தால் உள்நுழைக்கப்பட்டவர்கள்.. ஆளை மாற்ற முயற்சிக்கிறார்களா..???! :rolleyes:tw_angry:

1 hour ago, nedukkalapoovan said:

இதில் ஐங்கரநேசன் என்ன செய்தவர்...??!

நிறைய வறிய மாணவர்களுக்கு இலவசமாக தனியார் வகுப்பெல்லாம்.. கொடுக்க உதவிய மனுசன்... காசுக்கு ஆசைப்பட்டிருக்கும் என்று நம்ப முடியவில்லை.

காலம் ஒருவேளை ஆளை மாற்றிவிட்டதா... அல்லது காலத்தால் உள்நுழைக்கப்பட்டவர்கள்.. ஆளை மாற்ற முயற்சிக்கிறார்களா..???! :rolleyes:tw_angry:

கடந்த காலம் எப்படியோ, மிக நீண்டகாலத்தின் முன்னரே ஐங்கரநேசனின் நடவடிக்கைகள் மீது குற்றச்சாட்டுகள் இருந்து வந்துள்ளது. அமைச்சர் ஆனபிறகு பெருமளவு பணத்தை சுருட்டியுள்ளார் என்பது ஊரறிந்த ரகசியம். நிமலன் கார்த்திகேயன் என்பவரும்,  பற்­றிக்­ ரஞ்­சன் என்பவரும் ஐங்கரநேசனுடன் இணைந்து அடித்த கொள்ளைகள் கொஞ்சநஞ்சமல்ல.

இவை முளையிலேயே களையப்பட வேண்டியவை! கடுமையான நடவடிக்கைகள் வடமாகாண அரசியல்வாதிகளை நல்வழிப்படுத்த உதவும்.

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு விடயத்தில் இவர்கள் அடித்த கொள்ளை உலகறிந்தது. 

  • தொடங்கியவர்

இன்றைய அமர்வில் அறிக்கை வராது

இன்றைய அமர்வில் அறிக்கை வராது
 

பெரி­தும் எதிர்­பார்க்­கப்­பட்ட வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர்­கள் மீதான விசா­ரணை அறிக்கை இன்­றைய சபை அமர்­வில் முன்­வைக்­கப் ப­டாது என்று தெரி­கின்­றது.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அவ­ரது நெருங்­கிய உற­வி­ன­ரின் இறப்­புச் சடங்­கில் கலந்­து­கொள்­வ­தற்­காக நேற்­றுக் காலை திடீ­ரெ­னக் கொழும்­புக்­குச் சென்­ற­மை­யி­னால் இன்­றைய அமர்­வில் அவர் பங்­கேற்கமாட்­டார். இத­னால் அறிக்கை இன்று சபை யில் முன்வைக்கப்படாது.

வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்த குழுவின் அறிக்கை, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கடந்த மே மாதம் 19 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

மாகாண சபையின் கடந்த அமர்வில், விசாரணை அறிக்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அடுத்த அமர்வில் (இன்றைய) வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில், விசாரணை அறிக்கையின் முக்கிய விடயங்கள் நேற்றைய தினம் வெளியே கசிந்திருந்தது. கல்வி அமைச்சர் த.குருகுலராசா மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று அதில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை இன்றைய மாகாண சபை அமர்வில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர் சபை அமர்வில் கலந்துகொள்ளமாட்டார் என்பதால், அறிக்கை வெளியிடப்பட மாட்டாது என்று தெரிய வருகின்றது.

வடக்கு மாகாண முதலமைச்சரின் சம்பந்தியான, வர்த்தகர் குணசேகர கொழும்பில் உயிரிழந்தார். அவரது இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ளன. அதில் பங்கேற்பதற்கு நேற்றுக் காலை, கொழும்பு நோக்கி முதலமைச்சர் பயணமானார்.

http://uthayandaily.com/story/5305.html

சரிக்குச் சரி போடுங்கள்; பிழையை சரியாகத் திருத்துங்கள்

 
14796.jpg
ஒரு காலத்தில் நம்மண்ணில் கணக்கியல் துறையில் அழகேசன் என்றொரு பிரபலமான ஆசிரியர் இருந்தார்.
 
கணக்கியல் சார்ந்த நிறையப் புத்தகங்களை எழுதிய பெருமையும் அவருக்கு உண்டு.
 
ஒருமுறை க.பொ.த உயர்தரப் பரீட்சையின் கணக்கியல் (புஉஉலிற்ஐமிவி) விடைத்தாளை திருத்தும் பணி நடைபெற்ற போது, அதன் சிரேஷ்ட விடைத்தாள் திருத்துபவராக அவர் கடமையாற்றினார்.
 
விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திருத்தப்பட்ட விடைத்தாள்களை அவர் மீள்பார்வைக்குட்படுத்துகிறார்.
 
ஒரு மாணவன் செய்திருந்த இலாபநட்டக் கணக்குக்கு ஆசிரியர் ஒருவர் முழுமையாக பிழை போட்டிருந்தார்.
 
அதைப்பார்த்த அழகேசன் அவர்கள் குறித்த  விடைத்தாள் திருத்தியவரை அழைத்தார். எதற்காக இதற்குப் பிழை இட்டீர்கள் என்று கேட்டார். 
 
அதற்கு அந்த ஆசிரியர், சேர்! இந்த மாணவன் பரீட்சை மீதியை, அப்படியே இலாபநட்டக் கணக்கின் வரவுப் பக்கமும் எழுதி செலவுப் பக்கமும் எழுதியுள்ளான் என்றார்.
 
அதற்கு அழகேசன் அவர்கள், அப்படி எழுதினால் உங்களுக்கு என்ன பிரச்சினை? என்று கேட்டார்.
 
இந்தக் கேள்வியால் ஆசிரியர் அதிர்ந்து போனார். பரீட்சை மீதியில் வரவுப் பக்கம் வர வேண்டியது வந்திருந்தால் அதற்குச் சரி போடுங்கள்.
 
செலவுப் பக்கம் வரவேண்டியது செலவுப் பக்கத்தில் இருந்தால் அதற்கும் சரி போடுங்கள்.
 
மாறிப்பதிந்தால் புள்ளிகள் கழிப்பது என்ற நிபந்தனை எதுவும் இல்லை என்பதால், அந்த மாணவனுக்கு கிடைக்க வேண்டிய புள்ளிகளை வழங்குங்கள் என்றார் அழகேசன்.
 
இது எதைக் காட்டுகிறது எனில், சரிக்குச் சரி போடுங்கள். பிழைக்குப் பிழை போடுங்கள் என்பதுதான்.
 
சரிக்குப் பிழையும் பிழைக்குச் சரியும் இடுவது மிகப்பெரும் பாதகத்தை ஏற்படுத்தும். அதேநேரம் பிழையை பிழையாகத் திருத்தம் செய்வதும் மிகப்பெரும் அநீதி.
 
எனவே பிழையையும் சரியாகத் திருத்த வேண்டும் என்பதால், எதிலும் நிதானமாக இருப்பது மிகவும் அவசியம்.
 
வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரால் நியமிக்கப் பட்ட விசாரணைக்குழு தனது பரிந்துரையை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களி டம் கையளித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
 
இந்தப் பரிந்துரைகள் பொதுமக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தப்படும் போது அதில் இருக்கக்கூடிய விடயங்களை பொதுமக்கள் முழுமையாக அறியமுடியும்.
 
அதேநேரம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள், அந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைக்குழு நடத்திய விசாரணை அறிக்கைகள், அவற்றின் முடிவுகள், இதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் முன்வைத்த  தமது தரப்பு நியாயப்பாடுகள் என அனைத்தும் எமது மக்கள் அறியக் கூடியதாக இருத்தல் கட்டாயமானதாகும்.
 
ஏனெனில் குற்றச்சாட்டுக்கள் சரியான முறையில் நிரூபிக்கப்படுவதென்பது மிக மிக அவசியமானது.
 
ஒரு சிலரின் தேவையை அல்லது வேறு நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக எந்த முடிவுகளும் அமையக்கூடாது.
 
அதேநேரம் குற்றச்சாட்டுக்கள் உண்மையானதும் சரியானதும் எனில் அதற்கான தீர்ப்புக்களும் வழங்கப்பட வேண்டும். 
 
எதுவும் பொதுவெளிப்பகிரங்கப்படுத்தலாக இருத்தல் வேண்டும் என்பதுதான் நாம் இங்கு முன்வைக்கும் கருத்து

 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=14796&ctype=news

  • தொடங்கியவர்

திருடி வெளியிட்டது உதயன் ஐங்கரநேசன் கொந்தளிப்பு

 
திருடி வெளியிட்டது உதயன் ஐங்கரநேசன் கொந்தளிப்பு
 

உத­யன் பத்­தி­ரிகை திரு­டிச் செய்தி வெளி­யிட்­டது தொடர்­பில் நான் பதில் கூற மாட்­டேன் என்று நேற்­றுக் கொந்­த­ளித்­தார் வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சன்.

வடக்கு மாகாண அமைச்­சர்­க­ளான பொ.ஐங்­க­ர­நே­சன் மற்­றும் த.குருகுலராசா இருவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமித்த விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த நிலையில் யாழ். நகரில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்த விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம், மேற்படி விடயம் தொடர்பில் உதயன் செய்தியாளர் கருத்துக் கேட்டார்.

‘‘ஊடகத்துக்கு கருத்துக் கூற மாட்டேன். இது முறையல்ல. உதயன் திருடிப் போட்டமை தொடர்பில் கருத்துக் கூற முடியாது. நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டவன் நான்’’ என்று பதிலளித்துள்ளார்.

இதேவேளை, விசாரணை அறிக்கை அமைச்சர்களுக்கு முதலமைச்சரால் அனுப்பப்பட்டுள்ளது என்று தகவலறிந்து அது பற்றி விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கடந்த சனிக்கிழமை பிற்பகல் உதயன் வினவியது.

ஆனால், ‘‘அப்படியெதுவும் நடக்கவில்லை’’ என்று அவர் மறுத்திருந்தார். இந்த நிலையிலேயே உதயன் திருடிச் செய்தி வெளியிட்டது என்று அவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

http://uthayandaily.com/story/5308.html

  • தொடங்கியவர்

ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள வடமாகாண அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?


ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள வடமாகாண அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
 

வட மாகாணத்தின் நான்கு அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு சமர்ப்பித்துள்ள அறிக்கைக்கு அமைய, வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் மாகாண கல்வி அமைச்சர் ரி.குருகுலராசா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இன்றைய தினகரன் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வட மாகாண கல்வி அமைச்சர் ரி. குருகுலராசா அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக முதலமைச்சரின் மூவரடங்கிய குழு தெரிவித்துள்ளதாக இன்றைய தினகரன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் இடமாற்றங்களில் அரசியல் செல்வாக்கை செலுத்தியதாகவும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை முறையற்ற வகையில் கையாண்டதாகவும் குழு சுட்டிக்காட்டியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் சிறுமியொருவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குரல் எழுப்பிய ஆசிரியரை இடமாற்றம் செய்வதற்கு மாகாண அமைச்சர் நடவடிக்கை எடுத்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என மூவரடங்கிய குழு பரிந்துரை செய்துள்ளதாக தினகரன் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, கல்வி அமைச்சின் செயலாளரும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என குழு மேலும் பரிந்துரைத்துள்ளது.

வட மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் மீதும் தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்தன.

இவர் மீது நிதி மோசடி குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மர நடுகை, பாத்தீனிய ஒழிப்பு, நீர் ஆய்வு விடயங்களை சுற்றாடல் அமைச்சர் என்ற போர்வையில் முறையற்ற வகையில் நடைமுறைப்படுத்தியமை நிரூபணமாகியுள்ளதாக அந்தக் குழு தெரிவித்துள்ளதாக தினகரன் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்தத் திட்டங்களை மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடனேயே செய்திருக்க வேண்டும் என குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஐங்கரநேசன் அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள தண்ணீர் பௌசர்களை, உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்காமல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்திருந்தாகும், விவசாயக் கிணறு புனரமைப்பு மற்றும் புழுதியாற்று நீர்பாசனத் திட்டங்களில் நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைக் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தினகரன் பத்திரிகை இன்று வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, வட மாகாணத்தின் நான்கு அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை என கூறப்படும் அறிக்கையொன்று தற்போது ஊடகங்களில் கசிந்துள்ளது.

இதன் பிரதியொன்றும் நியூஸ்பெஸ்ட்டிற்குக் கிடைத்துள்ளது.

எனினும், வடமாகாண சபையில் இந்த அறிக்கை உத்தியோகப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அதிலுள்ள விடயங்களை முழுமையாக அறிக்கையிடுவதற்கு நியூஸ்பெஸ்ட் தயாராகவுள்ளது.

 

http://newsfirst.lk/tamil/2017/06/ஊழல்-குற்றச்சாட்டுக்கள-2/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.