Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாண சபையில் இன்று பரபரப்பு அமர்வு

Featured Replies

வடக்கு மாகாண சபையில் இன்று பரபரப்பு அமர்வு

 
 
வடக்கு மாகாண சபையில் இன்று பரபரப்பு அமர்வு
 

வடக்கு அமைச்­சர்­கள் இரு­வர் பதவி வில­க­வேண்டும் என்று பரிந்­து­ரைத்த விசா­ர­ணைக் குழு­வின் அறிக்கை தொடர்­பான சிறப்பு அமர்வு பெரும் பர­ப­ரப்­பான – எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு மத்­தி­யில் இன்று காலை 11.30 மணிக்கு, கைத­டி­யி­லுள்ள வடக்கு மாகாண சபை­யின் பேர­வைச் செய­ல­கத்­தில் நடை ­பெ­ற­வுள்­ளது.

கொழும்­பி­லி­ருந்து இன்று காலை யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தரும்

முத­லமைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் இந்த அமர்­வில் கலந்து கொண்டு சிறப்­புக் கூற்று விடுத்து உரை­யாற்­ற­வுள்­ளார்.

வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர்­கள் மீதான விசா­ரணை அறிக்கை, ஜூன் 6 ஆம் திகதி சபை­யில் சமர்ப்­பிக்­கப்­ப­டும் என்று வடக்கு முத­ல­மைச்­சர் கடந்த மாதம் நடை­பெற்ற சபை அமர்­வில் தெரி­வித்­தி­ருந்­தார். இதற்­கி­டை­யில் அந்த அறிக்­கை­யின் பரிந்­து­ரை­கள் கசிந்து வெளி­யா­கின. மாகாண சபை­யின் தற்­போ­தைய அமைச்­சர்­க­ளான பொ.ஐங்­க­ர­நே­சன் மற்­றும் த.குரு­கு­ல­ராசா இரு­வ­ரும் பதவி வில­க­வேண்­டும் என்று அதில் பரிந்­து­ரைத்­துள்­ளது.

இதற்­கி­டை­யில் வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அவ­ரது நெருங்கி உற­வி­ன­ரின் இறு­திக் கிரி­யை­யில் பங்­கேற்­ப­தற்கு நேற்று முன்­தி­னம் காலை, கொழும்­புக்­குப் புறப்­பட்­டி­ருந்­தார். இத­னால் நேற்­றைய சபை அமர்­வில் அவர் கலந்து கொள்­ள­வில்லை. அறிக்­கை­யும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

வடக்கு மாகாண சபை­யின் அமர்வு நடை­பெ­று­வ­தற்கு முன்­பாக, அவைத் தலை­வ­ரு­டன் சபை நட­வ­டிக்­கைக் குழு உறுப்­பி­னர்­க­ளும், மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளும் கலந்­து­ரை­யா­டி­னர். இதன்­போது இன்­றைய அமர்­வில் (நேற்று) விசா­ர­ணைக் குழு அறிக்கை விட­யம் சபைக்கு எடுப்­ப­தில்லை என்று முடி­வெ­டுத்­தி­ருந்­த­னர்.

இதன் பின்­னர் அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நாளை (இன்று) சிறப்பு அமர்­வைக் கூட்­டு­மா­றும் தான் அதில் கலந்து கொள்­வ­தா­கக் கூறி­ய­தா­க­வும் தெரி­வித்­தார். இதற்கு அமை­வா­கச் சிறப்பு அமர்வு 11 மணிக்கு நடை­பெ­றும் என்று அவைத் தலை­வர் சபை­யில் அறி­வித்­தார்.

இதன் பின்­னர் உறுப்­பி­னர்­கள் கேட்­டுக் கொண்­ட­தற்கு அமை­வாக, சபை அமர்வு முற்­ப­கல் 11.30 மணிக்­குப் பின் நகர்த்­தப்­பட்­டது.

மாகாண சபை­யின் இன்­றைய அமர்­வில், வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் கலந்து கொண்டு சிறப்பு கூற்று அறிக்­கையை வெளி­யி­ட­வுள்­ளார். இத­னு­டன் இணைத்து விசா­ரணை அறிக்­கையை சபைக்­குச் சமர்ப்­பிப்­பார் என்று பெரி­தும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை, வடக்கு மாகாண சபை­யில் அங்­கம் வகிக்­கும் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் உறுப்­பி­னர்­க­ளுக்­கான கூட்­டம் இன்று காலை 9.30 மணிக்கு நடை­பெற ஏற்­பா­டா­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

http://uthayandaily.com/story/5460.html

  • தொடங்கியவர்

மாகாண சபை உறுப்பினர்களுக்கு தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில் கூட்டம்

 
மாகாண சபை உறுப்பினர்களுக்கு தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில் கூட்டம்
 

வடக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு, மார்டின் வீதியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் கூட்டம் இடம்பெற்று வருவதாகத் தெரிய வருகின்றது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுவதாகவும், சற்று முன்னர் வரையில் 6 மாகாண சபை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளதாகவும் அறிய முடிகின்றது. அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டுள்ளார் என்று தெரிய வருகின்றது.

வடக்கு மாகாண சபையின்அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை சபையில் இன்று பெரும்பாலும் சமர்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே, இந்தக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.

http://uthayandaily.com/story/5474.html

  • தொடங்கியவர்

வடக்கு அவைக்கு வந்தார் ஐங்கரநேசன்

 
வடக்கு அவைக்கு வந்தார் ஐங்கரநேசன்
 

வடக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வில் கலந்து கொள்வதற்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சற்று முன் வருகை தந்தார்.

விசாரணை அறிக்கையில், அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பதவி விலக வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://uthayandaily.com/story/5495.html

தமிழ் அரசுக் கட்சி அலுவலகக் கூட்டம் முடிந்தது

தமிழ் அரசுக் கட்சி அலுவலகக் கூட்டம் முடிந்தது
 

வடக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கின்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் இடையில் நடைபெற்ற கூட்டம் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது.

http://uthayandaily.com/story/5488.html

  • தொடங்கியவர்

ஐங்கரநேசன், குருகுலராசா அவைக்கு வந்தனர்

ஐங்கரநேசன், குருகுலராசா அவைக்கு வந்தனர்
 

வடக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வில் கலந்து கொள்வதற்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராசா சற்று முன் வருகை தந்தார்.

விசாரணை அறிக்கையில், அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராசா பதவி விலக வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3-1-720x400.jpg

2-1-720x400.jpg

http://uthayandaily.com/story/5495.html

வடக்குச் சிறப்பு அமர்வு ஆரம்பம்

வடக்குச் சிறப்பு அமர்வு ஆரம்பம்
 

வடக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வு சற்று முன்னர் ஆரம்பமானது.

அமர்வில் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பில் சிறப்பு அமர்வு இன்று நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தமைக குறிப்பிடத்தக்கது.

 

19021682_1394464837267767_852677769_n-72

http://uthayandaily.com/story/5507.html

  • தொடங்கியவர்

முதலமைச்சர் அறிக்கை வாசிப்பு ஆரம்பம்

முதலமைச்சர் அறிக்கை வாசிப்பு ஆரம்பம்
 

வடக்கு மாகாண சபையின் அமர்வில் விசாரணை அறிக்கையை சமர்பிப்பதற்கான உரையை முதலமைச்சர் ஆரம்பித்தார்.

வடக்கு மாகாண சபையின் அமைச்சர் டெனிஸ்வரனுக்கு எதிராக 4 குற்றச்சாட்டுக்களும், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்துக் எதிராக 5 குற்றச்சாட்டுக்களும், கல்வி அமைச்சருக்கு எதிராக 9 குற்றச்சாட்டுக்களும், விவசாய அமைச்சருக்கு எதிராக 10 குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.555-720x400.jpg

http://uthayandaily.com/story/5511.html

 

சபையின் கருத்தைக் கேட்டே முடிவு

 
சபையின் கருத்தைக் கேட்டே முடிவு

வடக்கு அமைச்சர்களை பதவி நீக்க பரிந்துரைத்தமை தொடர்பில், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின் கருத்துக்களையும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கருத்துக்களையும் கேட்டே முடிவு எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

http://uthayandaily.com/story/5514.html

 

 

அறிக்கையின் பிரதி சபைக்கு கையளிக்கப்பட்டது

 
 

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையை சபைக்கு கையளிப்பதாகத் தெரிவித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் அதனை அவைத் தலைவரிடம் ஒப்படைத்தார்.

http://uthayandaily.com/story/5516.html

விவாதத்தை ஒத்திப் போடுங்கள்: முதலமைச்சர் தெரிவிப்பு

 
 

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை 9 ஆம்திகதிநடத்துங்கள் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

http://uthayandaily.com/story/5518.html

விசாரணைக்குழு மீது அமைச்சர்கள் குற்றச்சாட்டு முதலமைச்சர் சபையில் தெரிவிப்பு

 

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணைக் குழு  அறிக்கை தொடர்பில் விவாதம் நடந்து வருகின்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்த விசாரணைக் குழு தமது சில கருத்துக்களை கேட்கவில்லை அல்லது கவனத்தில் கொள்ளவில்லை என்று அமைச்சர்கள் குற்றம் சுமத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

http://uthayandaily.com/story/5520.html

  • தொடங்கியவர்

வடக்கு அலுவலர்கள் குழப்பத்தில்: சபையில் கூறினார் சி.வி.விக்னேஸ்வரன்

 

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணைக் குழுவின் அறிக்கை தொடர்பிலான விவாதத்தை விரைவில் நடத்த வேண்டும். ஏனெனில், அமைச்சர்கள் தொடர்பில் வெளியான செய்திகளால் அந்த அமைச்சு அதிகாரிகள் குழப்பத்தில் இருக்கின்றனர். அதனால்தான் விரைந்து நடத்த வேண்டும் என்று கேட்பதாக, முதலமைச்சர் சபையில் தெரிவித்தார்.

http://uthayandaily.com/story/5524.html

  • தொடங்கியவர்

ஊடகங்களை வெளியேற்றுங்கள்

விசாரணை அறிக்கை மீதான சபை அமர்வில் இருந்து ஊடகங்களை வெளியேற்ற வேண்டும். எமது விடயங்களை, நாங்கள் பேசிக் கொள்ளலாம். இதனால் சபையில் ஊடகங்கள் இருக்க வேண்டியதில்லை. இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இதற்கு வடக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா, ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் எதிர்த்தனர். ஊடகங்களை வெளியேற்றி விட்டு சபையை நடத்தினால் மக்களுக்கு சந்தேகம் அதிகமாகும் என்று குறிப்பிட்டனர்

Uthayan

  • தொடங்கியவர்

விசாரணை முறையாக நடந்தது: விக்கி சபையில் தெரிவிப்பு

வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு சரியாகத்தான் செயற்பட்டது.

அமைச்சர்கள், விசாரணைக் குழு முன்பாக தங்களது குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்வதற்கு அவகாசம் வழங்கப்பட்டது. விசாரணைக் குழு உரிய முறையில்தான் செயற்பட்டது என்று, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

Uthayan

விவசாய அமைச்சருக்கு எதிராக 10 குற்றச்சாட்டுகள்!

வடக்கு மாகாண சபையின் அமர்வில் விசாரணை அறிக்கையை சமர்பிப்பதற்கான உரையை முதலமைச்சர் ஆரம்பித்தார்.

வடக்கு மாகாண சபையின் அமைச்சர் டெனிஸ்வரனுக்கு எதிராக 4 குற்றச்சாட்டுக்களும் , சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்துக் எதிராக 5 குற்றச்சாட்டுக்களும் கல்வி அமைச்சருக்கு எதிராக 9 குற்றச்சாட்டுக்களும், விவசாய அமைச்சருக்கு எதிராக 10 குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.

மேலும் விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை 9 ஆம்திகதி நடத்துங்கள் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

http://thuliyam.com/?p=70046

குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள் தமது விளக்கத்தை அளிக்க வடமாகாண முதலமைச்சர் அழைப்பு!

 

குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்;கள் தமது விளக்கத்தை அளிக்க வடமாகாண முதலமைச்சர் அழைப்புவிடுத்துள்ளார்.

நேர்மையான ஆட்சியொன்றை எதிர்பார்த்தே மக்கள் எமக்கு வாக்களித்துள்ளனர்.அவ்வகையினில் மக்களது எதிர்பார்ப்பின் அடிப்படையினிலேயே விசாரணைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றமற்றவர்கள் முதலில் கல் எறியவாருங்கள் என அழைப்பு விடுத்துள்ள முதலமைச்சர் விவாதத்தை எதிர்வரும் 9ம் திகதி வெள்ளிக்கிழமை முன்னெடுக்கவும் அழைப்புவிடுத்துள்ளார்.

இதேவேளை தவறவிடப்பட்ட சாட்சியாளர்கள் வரவின்மையால் நடைபெறாத விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்

http://thuliyam.com/?p=70038

 

 

  • தொடங்கியவர்

அறிக்கை மீதான விவாதம் 14 ஆம் திகதியே

 

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பில் எதிர்வரும் 14 ஆம் திகதியே விவாதம் நடத்துவதற்கு அவை தீர்மானித்துள்ளது

Uthayan

ஊழல், முறைகேடுகள் போன்றவற்றை செய்த அமைச்சராக இருந்தாலும் அதிகாரியாக இருந்தாலும் தயவு, தாட்சனியம் இன்றி  வெளியே தூக்கி வீசப்பட வேண்டியவர்கள் என்பதே எமது எதிர்பார்ப்பு.

 

 

  • தொடங்கியவர்

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை 14 ஆம் திகதியே

 
 
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை  14 ஆம் திகதியே
 

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கவென மீண்டும் எதிர்வரும் 14 ஆம் திகதி புதன்கிழமை மாகாண சபை கூடவுள்ளது.

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

விசாரணைகளை மேற்கொண்ட குழு தனது அறிக்கையை தயாரித்ததுடன் அவ் அறிக்கையில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் சில நிருபிக்கப்பட்டுள்ளன. எனவே இரு அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என விசாரணைக் குழு பரிந்துரை செய்தது.

குறித்த விசாரணை அறிக்கையை வடக்கு மாகாண முதலமைச்சர் கடந்த அமர்வில் சமர்ப்பிப்பார் என எதிர்பக்கபபட்ட போதிலும் அது இடம்பெறாததால் குறித்த அறிக்கையை முதலமைச்சர் சமர்ப்பிக்கவென சிறப்பு அமர்வு இன்றையதினம் இடம்பெற்றது.

இந்த நிலையிலையே வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பில் எதிர்வரும் 14 ஆம் திகதி விவாதம் நடத்துவதற்கு அவை தீர்மானித்துள்ளது.

http://uthayandaily.com/story/5562.html

  • தொடங்கியவர்

தார்மீகப் பொறுப்பேற்பதே தர்மத்தின் வழியாகும்

 

வடக்கு மாகாண சபை அமைச்­சர்­க­ளான பொ.ஐங்­க­ர­நே­சன் மற்­றும் த.குரு­கு­ல­ராசா இரு­வ­ரும் பதவி விலக­ வேண்­டும் என்று ஊழல், மோசடி தொடர்­பில் விசா­ரணை நடத்­திய முத­ல­மைச்­சர் நிய­மித்த குழு பரிந்­து­ரைத்த விட­யம் தற்­போது பெரி­தும் பேசு­பொ­ரு­ளா­கி­யுள்­ளது. அந்­தப் பரிந்­து­ரையை அடுத்­தும், அமைச்­சர்­கள் இரு­வ­ரும் தமது பத­வி­யில் இருந்து தாமா­கவே வில­கிச் செல்­வ­தற்­குத் தயா­ராக இல்லை என்­பது இந்த விவா­தத்தை இன்­னும் சூடாக்­கி­யுள்­ளது.

இத­னால், முத­ல­மைச்­சர் அவர்­கள் இரு­வ­ரை­யும் பதவி நீக்­கித் தனது நீதி­யை­யும் நேர்­மை­யை­யும் நிலை­நாட்­டு­வாரா என்­கிற எதிர்­பார்ப்பு எல்­லோ­ரி­ட­மும் ஏற்­பட்­டுள்­ளது.

முத­ல­மைச்­சர் நிய­மித்த விசா­ர­ணைக் குழு­வின் அறிக்கை வெளியே கசிந்­ததை அடுத்து, அது ஓர் அர­சி­யல் சார்­புக் குழு என்று அதன் நியாய வலு­வைத் தர­மி­றக்­கும் வகை­யி­லான கருத்­துக்­கள் அமைச்­சர்­கள் தரப்­பி­லி­ருந்து கூறப்­பட்டு வரு­கி­றது. இது மிக­வும் கவ­லைக்­கு­ரி­யது. அவ்­வா­றான அதி­ருப்தி இருந்­தி­ருக்­கு­மா­யின் விசா­ர­ணைக்கு முன்­னரே அவர்­கள் அதனை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­க­வேண்­டும்.

அதை­வி­டுத்து அறிக்­கை­யும் வெளி­யான பின்­னர் விசா­ர­ணைக் குழு­வில் குறை­சொல்­வ­தும் பிழை பிடிப்­ப­தும் ஏற்­பு­டை­யது அல்ல.
விசா­ரணை அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ள­வற்­றுக்­குப் பதில­ ளிப்­ப­­­தற்கு அமைச்­சர்­க­ளுக்கு அவ­கா­சம் வழங்­கப்­ப­ட­வேண்­ டும் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­த­ரன் தெரி­வித்­தி­ருக்­கி­றார். ஆனால், அமைச்­சர்­கள் பதி­ல­ளிப்­ப­தற்­கான போதிய அவ­கா­சத்­தை­யும் வாய்ப்­பை­யும் விசா­ர­ணைக்­குழு வழங்­கியே இருந்­தது.

அந்­தக் குழு­வின் முன்­பாக, நீதி­ப­தி­க­ளின் முன்­பா­கத் தமது எதிர் வாதத்தை வைத்து தம்மை நியா­யப்­ப­டுத்த முடி­யாத அமைச்­சர்­கள் மக்­கள் முன்­பாக நியாய வாதம் வைப்­பது என்­பது ஏற்­பு­டை­ய­தல்ல. அது மக்­களை ஏமாற்­றும் செயல்.

தம்­மைக் குற்­ற­வா­ளி­கள் என்று விசா­ர­ணைக் குழு ஒன்று அறி ­வித்த பின்­னர் அதனை ஏற்­றுக்­கொண்டு பத­வி­யி­லி­ருந்து வில ­கிக்­கொள்­வதே பொறுப்­பான அமைச்­சர்­கள் செய்­யக்­கூ­டிய பொறுப்­பான செயல். அவர்­கள் தமக்கு அநீதி இழைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கக் கரு­தி­னால் அது குறித்து மேன்­மு­றை­யீடு செய்­ய­லாம் அல்­லது மற்­றொரு நீதி விசா­ர­ணைக் குழுவை நிய­மிக்­கும்­படி கோர­லாம். ஆனால், அறிக்கை தயா­ரிக்­கப்­ப­டும் வரை விசா­ர­ணைக் குழுவை ஏற்­றுக்­கொண்­டி­ருந்­து­விட்டு அறிக்கை தமக்­குச் சாத­மற்­ற­தாக வந்­த­தும் விசா­ர­ணைக் குழு­வைத் தூற்­று­வது ஏற்­பு­டை­ய­தல்ல.

அவர்­கள் அப்­ப­டிச் செய்­வது வடக்கு மாகாண முத­ல­ மைச்­ச­ருக்­கும் கடும் நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்­தும். தான் நிய­மித்த அமைச்­சர்­க­ளைத் தானே பதவி நீக்­கம் செய்­யும் நிலை ஏற்­ப­டு­வதை அவர் விரும்­ப­மாட்­டார். அது மிக­மோ­ச­மான ஓர் அர­சி­யல் நிலைப்­பா­டாக அமைந்­து­வி­டும்.

தான் நிய­மித்த விசா­ர­ணைக் குழு அமைச்­சர்­கள் இரு­வ­ரைக் குற்­ற­வா­ளி­க­ளா­கக் கண்டு அவர்­கள் பதவி வில­க­வேண்­டும் என்று பரிந்­து­ரைத்த பின்­னர் அவர்­க­ளைப் பத­வி­யில் நீடிக்க அனு­ம­திப்­பது முத­ல­மைச்­ச­ரின் நிர்­வாக நேர்த்­தி­யைக் கேள்­ விக்­கு­றி­யாக்­கி­வி­டும்.

அமைச்­சர் ஐங்­க­ர­நே­ச­னுக்கு எதி­ராக மாகாண சபை­யில் குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­பட்­ட­போது ‘‘அவர், பனங்­ காட்டு நரி, சல­ச­லப்­பு­க­ளுக்கு அஞ்­ச­மாட்­டார்’’ என்று பொது இடத்­தில் உரை­யாற்­றி­அ­வ­ரைக் காபந்து பண்­ணி­ய­வர் முத­ல­மைச்­சர். அந்­த­ள­வுக்கு அவர் நம்­பிக்கை வைத்­தி­ருந்த ஒரு­வரை, அவர் நிய­மித்­தி­ருக்­கும் குழுவே குற்­ற­வாளி என்று கண்­ட­றிந்த பின்­னும் அவ­ரைத் தொடர்ந்­தும் பத­வி­யில் நீடிக்க அனு­ம­திப்­பது முத­ல­மைச்­ச­ரின் நம்­ப­கத்­தன்­மை­யையே கேள்­விக்­கு­றி­யாக்­கி­வி­டும்.­

இதற்­குத் தீர்­வாக, அமைச்­ச­ர­வை­யையே முற்­று­மு­ழு­தாக மாற்­றி­ய­மைக்­கு­மாறு ரெலோ அமைப்­பின் செய­லா­ளர் சிறி­ காந்தா கேட்­டி­ருக்­கி­றார். இப்­போது அப்­படி முழு­தாக மாற்றி­ யமைப்­ப­தும் நியா­ய­மா­னது அல்ல. அப்­ படி நடந்­தால் குற்­ற­வா­ளி­யோடு சேர்ந்து நிர­ப­ரா­தி­யும் தண்­டிக்­ கப்­ப­டு­வ­து­தான் நீதி என்­றா­கி­வி­டும்.

இப்­ப­டிப்­பட்ட சிக்­கல்­கள் எல்­லா­வற்றை­ யும் தவிர்க்க அமைச்­சர்­கள் இரு­வ­ரும் அறிக்­கை­யின் கண்­ட­டை­வு­க­ளுக்­குத் தார்­மீ­கப் பொறுப்­பேற்று பதவி வில­கு­வதே நல்­லது. அதன் பின்­னர் அவர்­கள் தமக்­கான நியா­யத்­தைத் தேடி முழு­மை­யா­கப் போரா­ட­லாம்.

http://uthayandaily.com/story/5564.html

  • தொடங்கியவர்

கருத்துக்கள்

 

சண்­மு­க­ராசா வடி­வேலு

வட­மா­காண அமைச்­சர்­க­ளான ஐங்­க­ர­நே­சன், குரு­கு­ல­ராஜா ஆகி­யோர் மீதான ஊழல் மற்­றும் நிர்­வாக மோசடி குற்­றச்­சாட்­டுக்­கள் நிரூ­பிக்­கப்­பட்ட நிலை­யில் அவர்­களை பதவி வில­கு­மாறு முத­ல­மைச்­சர் அமைத்த விசா­ர­ணைக்­குழு பரிந்­து­ரைத்­துள்­ளது.

#செய்தி

இன்று (05.06.2017) சுற்­றா­டல் தின­மா­கும். சூழ­லுக்கு ஒவ்­வாத கேடு­கெட்ட கழி­வு­களை உரிய முறை­யில் அகற்­று­வோம். தொடர்ந்­தும் எஞ்­சி­யுள்ள நச்­சுக் கழி­வு­களை அகற்றி சூழலை சுத்­த­மாக வைத்­தி­ருப்­ப­தற்கு உறுதி பூணு­வோம்!
#தினம்

மது­ரைக்கு வந்த சோதனை!!!

அப்ப பாண்­டிய மன்­னர் என்ன செய்­யப்­போ­றார்?
மறு­ப­டி­யும் கண்ணை மூடிக்­கொண்டே “பாலைக்­கு­டிப்­பாரா!” மன்­னாதி மன்­னர்?
மன்­னாதி மன்­ன­ரின் அர­ச­வை­யில் உள்ள இன்­னொரு பெரு­ம­க­னின் “தேருக்­கா­ன”­அ­னு­ம­திப்­பத்­திர மோச­டி­யும் வெளிப்­பட்­டுள்­ளது.
(இந்தப் பேப்­பரை வடிவாய் பாருங்கோ)
“மன்­னாதி மன்னா” நீவிர் ஆழ்ந்த நித்­தி­ரை­யில் இருந்து முழிக்­க­ வேண்­டும்!
#தமிழ்­பொ­டி­யன்

—-ஐங்­க­ர­நே­சன், குரு­கு­ல­ரா­ஜாவை பதவி நீக்­கி­னால் மட்­டும் போதாது…. ஊழல், மோச­டி­கள் மீது சரி­யாக விசா­ரித்து உரிய தண்­டனை வழங்க வேண்­டும். வலி­கா­மம் பிர­தே­சத்­தில் 2 இலட்சத்­துக்கு மேற்­பட்ட மக்­கள் பாதிக்க கார­ண­மான குடி­நீ­ரில் கழி­வோ­யில் பிரச்­சி­னை­யின்போது சுன்­னா­கம் நொதேர்ன் பவ­ரு­ட­னான டீலை அமைச்­சர் ஐங்­க­ர­நே­சன் தெளி­வு­ப­டுத்த வேண்­டும்
Watercrisisjaffna

கிழிஞ்­சது தமி­ழர் அரசு! வடக்­கின் முத­லா­வது மாகாண சபை­யும் அதன் முதல் அமைச் சர்­க­ளும் என்ற பெரு­மை­யோடு இது­வும் சேர்ந்­து­கொள்­ளும்.
முரு­கையா தமிழ்ச் செல்­வன்

இரு­வ­ரும், முத­ல­மைச்­சர் இல்­லாதபோது பதில் முத­ல­மைச்­ச­ராகக் கட­மை­யாற்­றி­ய­வர்­கள் என்­பது இன்­னும் சிறப்பு
கே.கே.சந்­தி­ர­கு­மார்.

மாகாண சபைக்கே இந்தப் பாடாய் இருக்கு. தனி நாடு கிடைச்சா நல்­லாத்­தான் இருக்­கும்.
செல்­வ­ராஜா டினே­சன்.

இவர்­கள் மீதான நட­வ­டிக்கை உண்மை எனின் மின்­கம்­பத் தண்­டனை வழங்­க­வேண்­டும்!
சயானா ரமேஸ்

சில வரு­டங்­க­ளுக்கு முன்­னர் நான் எனது முகப்­பக்­கத்­தில் எழு­தி­ய­போது பெரு­ம­ள­வில் செம்­பு­கள் பலர் வந்து வசை­பா­டி­னார்­கள். சில செயற்­திட்­டங்­கள் நிறுத்­தி­வைக்­க­வேண்டி வந்­தது.
இப்ப இதற்கு என்ன சொல்­லப்­போ­கி­னம்? உண்­மை­கள் என்­றும் சாவ­தில்லை. பதி­ல­ளித்­துத்­தான் ஆக­வேண்­டும்!!!
புலோ­லி­யூர் யோகீ­சன்.

முதல் அமைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் இந்த அமைச்­சர் நீக்­கத்தை அனு­ம­திக்­க­மாட்­டார். இதில் சுரேஷ் இற்­கும் முத­ல­மைச்­ச­ருக்­கும் ‘முறு­கல்’ ஏற்­ப­டுமா…?
சிவா முரு­குப்­பிள்ளை

http://uthayandaily.com/story/5569.html

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசிக்கும் போது  
அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
கதை நினைவுக்கு வந்து தொலைக்குதே
ராசா

 

8 hours ago, நவீனன் said:
 

சபையின் கருத்தைக் கேட்டே முடிவு

வடக்கு அமைச்சர்களை பதவி நீக்க பரிந்துரைத்தமை தொடர்பில், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின் கருத்துக்களையும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கருத்துக்களையும் கேட்டே முடிவு எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவரே அதன் பரிந்துரைகளை ஏற்காவிடின்
அப்ப
என்ன ***க்கு விசாரணை குழுவை
அமைத்தார்?

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறவுகள்

கடைசில அப்பம் தட்டி கூழாக்கின கதை மாதிரிதான்  இவங்கள் கதை மக்களுக்கு சேவைக்கென வந்த பணங்கள் வந்த வழி தெரியாமல் சென்றது இப்படித்தானோ.

 ஊழல்ல வந்து நிற்கிறது எதிர்காலம் பாவம் பட்ட மக்கள் என்றால் அது எம் தமிழ் மக்கள் தான் 

  • தொடங்கியவர்

விசாரணை குழுவின் அறிக்கை அந்தரங்கமானது. ஊரறிய கூறுவது மாகாண சபைக்கு இழுக்கு. – சி.வி.

northern1.jpg
வடமாகாண சபை உறுப்பினர்கள் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் அறிக்கையின் பிரதியை சபைக்குக் கையளிக்கின்றேன். இந்த அறிக்கை அந்தரங்கமானது. ஊரைக்கூட்டி உங்கள் உரைகளை ஊரறிய ஊடகங்களுக்குக் கையளிப்பது எமது வடக்கு மாகாணசபைக்கே இழுக்கை ஏற்படுத்தும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபையின் 95 வது அமர்வு மாகாணப் பேரவைச் செயலக சபா மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. அதன் போது விசாரணை குழுவின் அறிக்கையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

 

பலவிதமான குற்றச்சாட்டுக்கள் எமது அமைச்சர்களுக்கு எதிராகக் கிடைத்ததன் விளைவாக நாம் ஒரு விசாரணைக்குழுவை அமைத்தோம். அதில் இருவர் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஒருவர் இளைப்பாறிய இலங்கை நிர்வாக சேவையின் ஒரு சிரேஸ்ட அதிகாரியாவார். விதிமுறைக் குறிப்புக்கள் கொடுக்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் மூடிய அறையில் விசாரணைகள் நடைபெற்றன.

ஊடகங்களுக்கு தகவல்கள் வழங்கப்படாது என்ற நிபந்தனையின் பேரில் விசாரணைகள் நடைபெற்றன. தற்போது அவர்களின் அறிக்கை பெறப்பட்டுள்ளது.

மீன்பிடி, போக்குவரத்து ,வர்த்தக, வாணிபம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சருக்கு எதிராக 4 குற்றச்சாட்டுக்களும் சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சருக்கு எதிராக 5 குற்றச்சாட்டுக்களும், கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர், விவகார அமைச்சருக்கு எதிராக 9 குற்றச்சாட்டுக்களும் விவசாய கமநலசேவை, கால்நடை அபிவிருத்தி, நீர்வழங்கல், உணவு வழங்கல் விநியோகித்தல், சுற்றாடல் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருக்கு எதிராக 10 குற்றச்சாட்டுக்களும் கிடைக்கப்பெற்றன.

நான்கு அமைச்சர்களும் குழுவின் அதிகாரத்தை ஏற்று சாட்சியமளித்துள்ளார்கள். சாட்சியமளிக்க அவர்கள் பின்நிற்கவில்லை. குறித்த குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமான அறிக்கையை இச் சபை முன் சமர்ப்பிக்க முன் சில விடயங்களைப் பகிர்ந்து கொள்வது நன்மை பயக்கும் என்று நம்புகின்றேன்.

விசாரணைக்குழு அங்கத்தவர்கள் வடமாகாணசபையின் நடவடிக்கைகள் பற்றியும் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் அவர்கள் கருத்துப்படி எமக்கிருக்கும் மிகக் குறுகிய அதிகாரங்கள் பற்றியும் ஆளுநரின் அதிகாரங்கள் பற்றியும் பல்வேறு கருத்துக்களைத் தம் அறிக்கையில் முன் வைத்துள்ளார்கள். அவை எம்மால் பரிசீலிக்கப்பட வேண்டியவை.

முறைப்பாட்டாளர்கள் வராததால் சில அமைச்சர்கள் பேரிலான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக சாட்சியம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்கள். மற்றையவர்கள் சம்பந்தமான தவறுகள் பல எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

உதாரணத்திற்கு அதிகாரத் துஸ்பிரயோகம் பற்றிக் கூறியுள்ளார்கள். பணவிரயம் பற்றிக் கூறியுள்ளார்கள். அதிகார வரம்பை மீறியுள்ளதாகக் கூறியுள்ளார்கள். மேலும் பல தவறுகள் பற்றிக் கூறியுள்ளார்கள்.

பொதுவாகக் குற்றச்சாட்டுக்கள் எமது உறுப்பினர்களாலேயே முன் வைக்கப்பட்டுள்ளன. உறுப்பினர்கள் நால்வரான அமைச்சர்கள் மீது மற்றைய சில உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி அவை சம்பந்தமாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

விதப்புரைகளையும் விசாரணைக் குழுவினர் தந்துள்ளார்கள். அறிக்கையின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி நானே தீர்மானிக்க வேண்டும். எனினும் நான் தீர்மானிக்க முன் சபையினரின் கருத்தை அறிய ஆவலாய் இருக்கின்றேன்.

அத்துடன் அறிக்கையில் இருப்பவை பற்றி சம்பந்தப்பட்டவர்கள் சபையில் விளக்கமளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அபிப்பிராயப்படுகின்றேன். ஏனென்றால் சில விடயங்கள் விசாரணைக் குழுவினால் கவனத்திற்கு எடுக்கப்படவில்லையென்றோ தவறான முடிவுக்கு அவர்கள் வந்து விட்டார்கள் என்றோ பாதிக்கப்பட்டவர்களால் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நாங்கள் ஈடுபட்டுள்ள இந்தச் செயல்முறை பொது வாழ்வில் உள்ளவர்கள் வெளிப்படைத்தன்மைக்கும் பொறுப்புக்கூறலுக்குந் தம்மை முன்னிறுத்த முன்வரவேண்டும் என்ற கருத்தை முன்னிலைப் படுத்துவதாக அமைந்துள்ளது.

மக்கள் எம்மைத் தேர்ந்தெடுக்கும் போது எங்கள் மீது அவர்களுக்கு பல எதிர்பார்ப்புக்கள் இருந்தன. நேர்மையான, ஊழலற்ற, பக்கசார்பற்ற, கண்ணியமான ஒரு நிர்வாகத்தை நாம் அவர்களுக்குக் கொடுப்போம் என்ற எதிர்பார்ப்பே அது.

புதிய ஒரு அமைப்பான வடக்கு மாகாணசபையைக் கையேற்றபோது நாம் ஒரு நம்பிக்கைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டோம். ஆகவே நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் என்ற முறையில் நேர்மை, பக்கசார்பற்ற தன்மை, பொறுப்புக் கூறல், பொறுப்பாக நடந்து கொள்ளல் மற்றும் மக்களின் நலன்களைப் பாதுகாப்பது போன்ற குணாதிசயங்களை மக்கள் எங்களிடம் எதிர்பார்த்துள்ளார்கள்.

அந்த நம்பிக்கையை நாங்கள் மழுங்கடிக்கும் வண்ணம் நடந்து கொள்ளக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தவே மேற்படி விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. எம்மிடம் குறைபாடுகள் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்யவே இந்த விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. எம்மை நாமே ஒழுக்கப்படுத்த அல்லது எமது நடவடிக்கைகளை மீளாய்வு செய்ய இந்த வழிமுறை உதவியது.

மத்திய அரசாங்கமும் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் தமது நிர்வாகத்தில் உள்ளடக்குவதாகவே கூறி பதவிக்கு வந்தது. அந்த வகையில் எங்கள் வடமாகாணம் வேறெந்த குறைகள் இருப்பினும் அடிப்படை விடயங்களில் சறுக்கிவிடக் கூடாது. அதிகாரத்துஸ்பிரயோகம், பணவிரயம், அதிகார வரம்புமீறல், பக்கசார்பான நடவடிக்கைகள் போன்றவை எமது நிர்வாகத்தைக் கேள்விக் குறியாக்கி விடுவன.

நாம் எமது குறைபாடுகளை சீர்செய்ய வேண்டும். ஆனால் அதே நேரம் விசாரணைக்குழுவின் அறிக்கையில் முன்கூறியவாறு பல குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு நான் வருகைதராத ஒரு கூட்டத்திற்கு நான் சென்றிருந்தேன் என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான பல விடயங்கள் சம்பந்தமாக எமது அமைச்சர்கள் கேள்விகளை எழுப்பவோ விளக்கமளிக்கவோ நாம் இடமளிக்க வேண்டும். எந்த விடயத்திலும் மேன் முறையீடு செய்ய வசதி அளிக்கப்படும். அதையெட்டியே இந்த கோரிக்கையை விடுக்கின்றேன்.

அத்துடன் முறைப்பாட்டாளர்கள் வருகை தராததால் கைவிடப்பட்ட விசாரணைகளை மீண்டும் உயிர் கொடுக்க வேண்டுமென்றால் அதனைச் செய்யவும் நாங்கள் தவறக்கூடாது. சபையின் கௌரவத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. எந்த ஒரு விவாதமும் தனிப்பட்ட ரீதியாக எவரையுந் தாக்குவதாக அமையக்கூடாது. ஒரு விடயம் நடந்ததா இல்லையா என்பதை அறிவதே எமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில் எவரையுந் தாக்குவதையும் அவர்கள் மனத்தைப் புண்படுத்துவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இனியாவது தனிப்பட்ட முறையில் உறுப்பினர்களைத் தாக்குவதைத் தவிர்ப்போமாக!

உங்கள் அனைவரிலும் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் அறிக்கையின் பிரதியை சபைக்குக் கையளிக்கின்றேன். இந்த அறிக்கை அந்தரங்கமானது. ஊரைக்கூட்டி உங்கள் உரைகளை ஊரறிய ஊடகங்களுக்குக் கையளிப்பது எமது வடக்கு மாகாணசபைக்கே இழுக்கை ஏற்படுத்தும்.

குற்றமற்றவர்களே மேரி மக்டெலின் மீது முதற்கல் எறிய முன்வாருங்கள் என்றார் இயேசு கிறீஸ்து நாதர். குற்றஞ்சாட்டுவதால் அரசியல் இலாபம் பெற விழைவோர் தமது நடவடிக்கைகளை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த முன்வர வேண்டும். நடைமுறைப்படுத்தப்படும் செயல்பாடுகள் எம் ஒவ்வொருவரையும் உள்ளடக்கியது என்பதை மறவாது இருப்போமாக!

இது சம்பந்தமான விவாதத்தை வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறான விடயங்களை நீடிப்பதால் அலுவலகங்களில் வேலைகள் தடைப்பட்டுப் போய் விடுவன. ஆகவேதான்  விவாதத்திற்கு நியமிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். பாதிக்கப்பட்ட அமைச்சர்கள் அறிக்கை பற்றிய தமது விளக்கங்களை உடனேயே எழுத்து மூலந் தரவேண்டும். சபையினர் அனைவருக்கும் அறிக்கையும் அந்த விளக்கங்களும் தாமதமில்லாது கையளிக்கப்பட வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

https://globaltamilnews.net/archives/29188

  • தொடங்கியவர்

அமைச்சர்களைக் காப்பாற்ற சயந்தன் பகீரதப் பிரயத்தனம்

அமைச்சர்களைக் காப்பாற்ற சயந்தன் பகீரதப் பிரயத்தனம்
 

விசா­ர­ணைக் குழு­வின் அறிக்­கையை வைத்து அமைச்­சர்­கள் இரு­வர் மீதும் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நட­வ­டிக்கை எடுக்க முடி­யாது. இவ்­வாறு ஆளும் கட்சி உறுப்­பி­னர் கேச­வன் சயந்­தன் தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண சபை­யின் சிறப்பு அமர்வு நேற்று நடை­பெற்­றது. இதில் கருத்­துக் கூறு­கை­யி­ லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

இந்த விசா­ர­ணைக் குழு என்ன நோக்­கத்­துக்­காக நிய­மிக்­கப்­ப­டு­வ­தாக சபைக்கு அறி­விக்­கப்­பட்­டதோ அந்த நோக்­கத்தை மாத்­தி­ரம் செயற்­ப­டுத்­த­வேண்­டும். அதற்கு மேல­தி­க­மாக நட­வ­டிக்கை எடுக்க முடி­யாது. அமைச்­சர்­கள் மீது நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு இந்த விசா­ரணை அறிக்கை சான்­றா­தா­ர­மாக அமைய முடி­யாது. அமைச்­ச­ர­வையை மாற்­று­வ­தற்கு அர­ச­மைப்­பில் முழு­மை­யான சிறப்பு அதி­கா­ரம் முத­ல­மைச்­ச­ருக்­குத்­தான் உண்டு.

இந்த அறிக்­கை­யைப் பயன்­ப­டுத்தி அடுத்த கட்ட விசா­ரணை மேற்­கொள்­வ­தாக இருந்­தால், விசா­ர­ணைக் குழு தொடர்­பில் ‘போஸ்ட்­மோ­டம்’ (உடற்­கூற்­றுப் பரி­சோ­தனை) செய்­ய­வேண்டி ஏற்­ப­டும். முத­ல­மைச்­சர் அமைச்­சர்­க­ளி­டம் தன்­னிலை விளக்­கம் கோரு­கின்­றார். அதில் அவ­ருக்­குத் திருப்தி என்­றால் பேசா­மல் விட­லாம். திருப்தி இல்லை என்­றால் நட­வ­டிக்­கைக்­குப் போக­லாம்.

இது அவ­ருக்­குள்ள உரிமை. இந்த விவ­கா­ரம் ஆளும் கட்சி விவ­கா­ர­மாக கையா­ளப்­ப­ட­வேண்­டும். விசா­ர­ணைக் குழு­வின் இந்த அறிக்கை தீர்­மா­னம் எடுக்­கின்ற, குற்­றம் காணு­கின்ற அறிக்­கை­யாக இருக்க முடி­யாது. இது முத­ல­மைச்­ச­ருக்கு முதல்­நிலை அறிக்­கை­யா­கத்­தான் இருக்க முடி­யும்.

கொலைக் குற்­றத்­துக்கு மேல் நீதி­மன்­றத்­தி­னால்­தான் தண்­டனை வழங்­கப்­ப­டும். நீதி­வான் நீதி­மன்­றில், சுருக்­க­மு­றை­யற்ற விசா­ர­ணையை வைத்­துக் கொண்டு தண்­டனை வழங்க முடி­யாது. அது­போன்­று­தான் இந்த அறிக்­கையை வைத்து முடிவு எடுக்க முடி­யாது.

இந்த அறிக்கை, முத­ல­மைச்­ச­ருக்­குச் சில காண்­பிப்­புக்­க­ளைச் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. அத­னைப் பிர­மாண அடிப்­ப­டை­யி­லான விதி­மு­றை­க­ளின் ஊடாக ஆராய்ந்து நட­வ­டிக்கை எடுக்க முடி­யும் – என்­றார்.

http://uthayandaily.com/story/5580.html

  • தொடங்கியவர்

வீட்­டுக்கு வாக்­க­ளித்­தோர் ஏக்­கம் என்­கி­றார் தவ­நா­தன்

 
வீட்­டுக்கு வாக்­க­ளித்­தோர் ஏக்­கம் என்­கி­றார் தவ­நா­தன்
 

வடக்கு அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரான விசா­ரணை அறிக்கை வருமா ? என்று வீட்­டுக்கு வாக்­க­ளித்­த­வர்­கள் இன்று வீடு­க­ளில் எதிர்­பார்த்து இருக்­கின்­றார்­கள். இவ்­வாறு வடக்கு மாகாண சபை­யின் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர் தவ­நா­தன் தெரி­வித்­தார்.

வடக்கு மாகா­ண­ச­பை­யின் சிறப்பு அமர்­வில் நடை­பெற்ற விவா­தத்­தில் கருத்­துக் கூறு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார்.

இந்த விசா­ரணை அறிக்கை வருமா என்று வீட்­டுக்கு வாக்­க­ளித்­த­வர்­கள் இன்று வீடு­க­ளில் எதிர்­பார்த்­துக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். அறிக்கை வெளி­வ­ர­வேண்­டும். விசா­ரணை அறிக்கை விட­யம் விரை­வில் முடி­வுக்கு வர­வேண்­டும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

‘ஊட­கங்­க­ளில் அறிக்கை வெளி­வந்­துள்­ள­தால் பர­ப­ரப்­பான சூழ்­நிலை ஏற்­பட்­டுள்­ளது. அடுத்து என்ன நடக்­கும் என்ற எதிர்­பார்ப்பு ஏற்­பட்­டுள்­ளது. அரச தலை­வர், தலைமை அமைச்­ச­ரி­டம் இப்­படி அறிக்­கை­கள் கைய­ளிக்­கப்­பட்­டால், ஒன்­றும் நடக்­காது.

அதைப்­போன்று எமது விசா­ர­ணைக் குழு­வின் அறிக்­கைக்­கும் நடக்­கக் கூடாது. நாங்­கள் குற்­றம் செய்­த­வர்­க­ளைக் காப்­பாற்­று­கின்­றோம் என்ற சந்­தே­கம் வரக் கூடாது. மிக விரை­வில் இந்த விட­யத்தை முடிக்க வேண்­டும்’ என்று ஆளும் கட்சி உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் குறிப்­பிட்­டார்.

ஆளும் கட்­சி­யின் மற்­றொரு உறுப்­பி­ன­ரான அஸ்­மின், முத­ல­மைச்­சர்­தான் முடிவு எடுப்­பார். ஒரு மாதம் வரை நாம் அவ­கா­சம் கொடுக்­க­வேண்­டும். விரை­வில் அமர்வை நடத்தி அது இழு­பட்டு நிதியை வீண் விர­யம் செய்­யக்­கூ­டா­து-­என்­றார்.

‘அரச தலை­வர் மற்­றும் தலைமை அமைச்­சர் ஆகி­யோர் அறிக்கை கிடைத்­தால் அவர்­கள்­தான் முடி­வெ­டுப்­பார்­கள். அதைப்­போன்­று­தான் முத­ல­மைச்­ச­ரும் முடி­வெ­டுக்க வேண்­டும். இதற்­குப் பகி­ரங்க விவா­தம் நடத்­து­வது சரி­யல்ல.

உறுப்­பி­னர்­க­ளும், அமைச்­சர்­க­ளும் எழுத்து மூலம் முத­ல­மைச்­ச­ருக்கு தங்­கள் விளக்­கங்­களை அனுப்­பப்­பட்­டும். முத­ல­மைச்­சர் தான் நிய­மித்த விசா­ர­ணைக் குழு­வு­டன் அதனை ஆராய்ந்து முடி­வெ­டுக்­கட்­டும்’ என்று ஆளும் கட்சி உறுப்­பி­னர் ஜி.ரி.லிங்­க­நா­தன் குறிப்­பிட்­டார்.

http://uthayandaily.com/story/5577.html

  • தொடங்கியவர்

மீளச் சந்­தர்ப்­பம் தந்­தால் சாட்­சி­க­ளு­டன் வரு­வேன்

ஜெனிவா விவ­கா­ரத்­தால் விசா­ர­ணைக்கு வர முடி­ய­வில்லை என்­கி­றார் அனந்தி

 
மீளச் சந்­தர்ப்­பம் தந்­தால் சாட்­சி­க­ளு­டன் வரு­வேன்
 

ஜெனிவா விவ­கா­ரத்­தால் விசா­ர­ணைக் குழு முன்­பாக முன்­னி­லை­யாக முடி­ய­வில்லை. மீண்­டும் சந்­தர்ப்­பம் வழங்­கி­னால், சாட்­சி­க­ளு­டன் வரத் தயார் என்று வடக்கு மாகாண சபை­யின் ஆளும் கட்சி உறுப்­பி­னர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண சபை­யில், விசா­ரணை அறிக்கை மீதான விவா­தம் நடை­பெற்­ற­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

விசா­ர­ணைக் குழு தனது அறிக்­கை­யில், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் திரு­மதி அனந்தி சசி­த­ரன், குற்­றச்­சாட்­டுக்­களை மேற்­கொண்டு விசா­ர­ணைக்கு வருகை தர­வில்லை என்று குறிப்­பிட்­டுள்­ளது. இவ்­வா­றான நிலை­யில் அவர் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் கூறி­ய­தா­வது,

அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரான விசா­ர­ணைக் குழு­வில் நானும் முறைப்­பா­டு­க­ளைத் தெரி­வித்­தி­ருந்­தேன். விசா­ரணை நடை­பெற்ற காலப் பகு­தி­யில் ஜெனிவா அமர்வு விவ­கா­ரம் இருந்­த­மை­யால் என்­னால் முன்­னி­லை­யாக முடி­ய­வில்லை. எனது குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்­குச் சாட்­சி­யா­கச் சில அரச அலு­வ­லர்­கள் முன்­னி­லை­யாக வேண்­டி­யி­ருந்­தது.

அவர்­கள் விசா­ர­ணைக் குழு­வில் முன்­னி­லை­யா­கிச் சாட்­சி­ய­ம­ளித்­தால் பழி வாங்­கப்­ப­டு­வார்­களோ என்ற அச்­சம் இருந்­தது. அவர்­கள் பாது­காக்­கப்­ப­டு­வார்­கள் என்ற உறு­தி­மொழி வழங்­கு­மாறு விசா­ர­ணைக் குழுவை கேட்­டி­ருந்­தேன். அவர்­கள் பதில் வழங்­க­வில்லை.

தற்­போது மீளச் சந்­தர்ப்­பம் வழங்­கி­னால் எனது சாட்­சி­யங்­களை நான் கொண்டு வரத் தயார் – என்­றார்.

http://uthayandaily.com/story/5605.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.