Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணச்சாதியும்-ஈழத்தமிழரும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீறல்

இப்படியொரு பதிவு போடும் துரதிஸ்டமான நிலையில் நாம் இன்றைக்கும் இருக்கிறோம் என்பது வேதனையானதுதான். அழுக்கு வெளிப்படையாகக் தெரியும் கீழைத்தேய மனிதர்களைத் தாண்டி வாசனைகளால் நாற்றம் மறைக்கும் மேலையத்தேயத்தில் இருந்து கிளம்பும் ஈழத்தமிழரின் சாதிய நாத்தம் சென்னைத் தமிழன் மூக்குவரை வருகிறது.

இன்றைக்குப் பெண்ணியம் பேசுவதும் சாதியம் பேசுவதும் தங்களைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்கும் பிரபல்யப்படுத்துவதற்குமானவ

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்தின் அடிநாதத்தில் ஜாதி வாதம் இருக்கின்றது என்பதை மறுகக்வில்லை. ஆனால் அந்த ஐாதி வாதம் அழிய வேண்டும் என்று பலர் விரும்புகின்ற வேளையில் போராட்டத்திற்கு ஆதரவு என்ற நிலையைக் காட்டியபடி அதைத் தூபம் போட்டு வளர்க்கும், ஈனச்செயலாகவே இக்கட்டுரையைக் காண்கின்றேன். உணர்வுகள் இணையம் மீது தனிப்பட்ட வெறுப்பு இருந்தால் அதை நேரடியாகக் கொட்டிக் கொள்வது தானே! அதை விடுத்து விட்டு, ஜாதி வாதம் என்று தன் கருத்தை நியாயப்படுத்துவது எங்கனம் சரியானது?

ஈழப் போராட்டம் என்பதே யாழ்ப்பாணத்து உயர் சைவ வெள்ளாளர்களால் ஆரம்பிக்கப் பட்ட ஒன்றுதான் என்பதை வரலாறு தெரிந்த யாரும் மறந்து விட மாட்டார்கள்.சைவமும் தமிழும் தனது இரு கண்கள் என்று சொன்ன நவலரும் சிங்களவர்களுக்காக வாதாடி சுதந்திரமும் பெற்றுக் கொடுத்த சேர்.பொன்.அருணாசலம்,சேர்.பொன்.

மீனவக் கிறிஸ்தவர்கள் மற்றைய கிறிஸ்தவர்களுக்குள் மணம் முடிக்காது சாதியத்தை பேணுவதற்கும் கிறிஸ்தவத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

அவர்கள் முதலில் இந்துக்களாக இருந்த பொழுது கொண்டிருந்த சாதியத்தை கிறிஸ்தவ மதத்திற்கு மாறிகின்ற போதும் கொண்டு சென்றார்கள் என்பதுதான் உண்மை.

சாதியத்தை இந்து மதம் மிக ஆழமாக மனங்களிற்குள் புதைத்து வைத்திருக்கிறது. அந்த சாதியம் வேறு மதத்திற்கு போனாலும், வேறு நாட்டிற்கு போனாலும், மாறாது இருப்பதற்கு அதுதான் காரணம்.

என்ன காவடி திரும்பவும் பழைய குப்பைகளைக் கிளறத் தொடங்கீட்டீங்கள்?

உதுகளை நம்மட சனங்கள் மறந்தாலும் நீங்கள் துரத்தி துரத்தி நினைவுபடுத்திக் கொண்டு இருக்கிறீங்கள்? சண்டையை தொடக்கிவிட்டு வேடிக்கை பார்க்கின்ற நோக்கமா? :blink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதுகளை நம்மட சனங்கள் மறந்தாலும் நீங்கள் துரத்தி துரத்தி நினைவுபடுத்திக் கொண்டு இருக்கிறீங்கள்?

ஓ.. மறந்து விட்டார்களா..? அப்ப என்னத்துக்காம் அண்ணை அங்கையும் சரி இங்கையும் சரி பேப்பருகளில கல்யாணம் எண்டு வந்தவுடனை சாதியைப் போட்டுத் தேடுகினம். சாதியை ஒளித்து வைக்கிறது என்பது இல்லையென்பதல்ல. கலப்பு மணங்கள் மற்றும் சாதிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள தொழில்களை அனைவருக்கும் பொதுவாக்கிப் பரவலாக்குதல் என்பதனூடாகவே சாதி இல்லாதொழியும்.

சாதீயத்தை விடப்பயங்கரமான இனவாதத்திற்கு 4 மணித்தியாலத்திற்கு ஒரு தமிழன் பலியாகிக் கொண்டுள்ள போது இந்த விவாதம் தேவையற்றது.

எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றி உயிர்களை கருக்கி குளிர்காயும் சுபாவம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப நாங்கள் சாதியப் போராட்டத்தை முதலில் முன்னெடுக்க முனைவது புத்திசாலித்தனமற்றது. ஆனால், புலிகள் சாதியம் இன்னும் இருக்கிறது என்பதை விளங்கி சரியான நடவடிக்கை எடுத்தாகவேண்டும். அதற்குப் புலிகளுக்கு ஆலோசனை சொல்ல வேண்டும். முக்கியமாக அவர்கள் அந்த ஆலோசனைகளை உள்வாங்க வேண்டும்.

காவடி அவர்களே, வன்முறை, அடக்குமுறை என்ற அளவில் சாதியம் யாழ்ப்பாணத்திலோ அல்லது ஏனைய தமிழ்ப் பகுதிகளிலோ புலிகள் நிலைக்க விடவில்லை. தற்போது ஈழத்தில் சாதியம் என்பது திருமணம் என்ற ஒன்றில் மட்டுமே நிலைத்து நிற்கிறது அதுவும் உடைந்து போகக்கூடிய வகையில் கலப்புத் திருமணங்கள் நடை பெறுகிறது.

சமூகத்தில் வன்முறை, அடக்குமுறை என்பன சாதியத்தினால் இல்லாத நிலையில் திருமணத்தில் மாத்திரம் நிலைத்திருக்கும் சாதியத்தை எப்படி புலிகள் தடுப்பது? பெற்றோரால் தமது பிள்ளைகளிற்கு தமது சாதியைச் சேர்ந்தவருக்கு திருமணம் செய்து வைக்கும் போது அதனைத் தடுக்க வேண்டுமென எதிர்பார்கிறீர்களா?

எப்படி அதனைத் தடுக்கிறது??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் மணாம் முடித்தவரா (மன்னிக்கவும்) உங்கள் சாதி என்னவோ அதுவே உங்கள் மனைவின் சாதியாக இருந்தாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை அலுவலகத்தில் போராளிகளுடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது.

'இங்கு ஈழத்தில் சாதிய உணர்வு மேலோங்கி நிற்பதாகச் சொல்கிறார்கள். ஒவ்வொருவரும் சாதியத் தன்னிலையை உள்ளுக்குள்ளும், செயல்முறைகளிலும் வைத்துக்கொண்டு நடமாடுவதாகக் கூறப்படுகிறது. உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்ப் பகுதிகளில் சாதிய செயல்பாடுகள் வெளிப்படுகிறபோது, என்ன நடவடிக்கை எடுக்கிறீர்கள்? புலிகள் இயக்கத்திலேயே சாதிய வேறுபாடு இருக்கிறதா?"

இன்குலாப் கேட்டார்...

'நான் மலைநாட்டிலிருந்து வந்தவள். எனக்கு என் சாதி தெரியாது, இங்கிருக்கிற யாருக்கும் நான் எந்த சாதியைச் சேர்ந்தவள் என்று தெரியாது. இதோ இருக்கிறாளே தமிழ்விழி, இவள் ஒரு போராளியைத்தான் திருமணம் செய்துகொண்டிருக்கிறாள். அவர் இவளுடைய சாதி என்னவென்று அறியார். எமது இயக்கத்துக்குள்ளே சாதி பாராட்டுவதில்லை. சாதி பாராட்டுகிறவர்கள் இயக்கத்துக்குள்ளே இருக்கமுடியாது."

அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் தமிழினி தெளிவாகப் பேசினார். சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமற்ற நடைமுறையின் மீதான விளக்கமாக இருந்தது அவர் பேச்சு.

'இயக்கத்துக்கு வெளியே உங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சாதி வித்தியாசம் நிலவுகிறதாக கூறப்படுகிறதே?"

'வெளியே இருப்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். எங்களைப் போலவே, மக்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. எங்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் பிரச்சினைகளில் சாதிப் பிரச்சனை தலையெடுக்குமானால், முதலில் அதைக் களைவதுதான் எங்கள் வேலை. அதை நாங்கள் அனுமதிப்பதில்லை."

தமிழினி குறிப்பிட்டதுபோல சாதி பாராட்டக்கூடாது என்ற உணர்வு புலிகள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு வந்திருக்கிறது. அவர்கள் கவனத்திற்கு வருகிறபோது, அங்கு போய் நின்று போராளிகள் கடுமையான நிலைபாடு எடுக்கிறார்கள். சமூகநீதியை உருவாக்காமல் சமத்துவ ஈழம் உருவாகாது என அவர்கள் நம்புகிறார்கள்.

மாநாட்டில் நான்காம் நாள் நிகழ்வில் மாலையில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவன் உரை நிகழ்த்தினார். 'தனி ஈழம் அமைகிறபோது, புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழுகிற தமிழர்கள் திரும்பி வருவார்கள். அவர்கள் தங்களுக்குள்ளே சாதிய உணர்வுகளைக் காப்பாற்றி வைத்துக் கொண்டிருப்பவர்கள். அந்தந்த நாடுகளில் தமக்குள்ளே ஊட்டி வளர்த்துக்கொண்ட சாதியுணர்வையும் தம்மோடு அழைத்து வருவார்கள். அந்த உணர்வோடு இன்ன மதம், இன்னசாதி என்ற உணர்வோடுதான் செயல்படுவார்கள். இதை நாம் எப்படி எதிர் கொள்ளப் போகிறோம்?

நாங்கள் தான் இராமனைக் கடவுளாக, இராவணனை அரக்கனாகப் பார்க்கிறோம். இராமனைப் புனிதனாக, இராவணனைத் தீயவனாக சித்தக்கிற பார்வை எங்களுக்கு இருக்கிறது. நீங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். இராவணன் இந்த மண்ணின் மைந்தன். மண்ணின் மைந்தர்களாகிய நீங்களும் இராவணனை தீயவனாக எப்படிக் காணமுடிகிறது? வரலாற்றை மாற்றி எழுதுவதற்காக நிற்கிற நீங்களும் வரலாற்றை எப்படி மாற்றி உணருகிறீர்கள் என்பதைக் காணுகிற போதுதான் ஆச்சரியாக இருக்கிறது. இதற்கெல்லாம் அடிப்படை நமக்குள் ஆழமாக வேரூன்றியிருக்கிற இந்துத்துவாக் கருத்துக்கள் தாம். இந்துத்துவாக் கருத்துக்களிலிருந்து விடுபடாமல் ஈழவிடுதலை சாத்தியப்பட்டாலும் உண்மையான அர்த்தத்தில் அது விடுதலையாக இருக்குமா?

ஈழத் தமிழர்கள் தங்களை இந்துக்களாக உணரக்கூடாது. இந்துமத, வர்ணாசிரமக் கோட்பாட்டில் தான் சாதி வாழ்கிறது. சிங்களவர்கள் தங்களை பௌத்தர்களாக உணர்கிறார்கள் என்பதாலேயே தமிழர்கள் தங்களை இந்துக்களாக உணரக்கூடாது. தமிழர்கள் தமிழர்களாகத்தான் உணரவேண்டும்."

- என்று குறிப்பிட்டுப் பேசினார்.

திருமாவளவனின் சிறப்புரைக்குப் பின் மாநாட்டுப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் நிறைவுரை - திருமாவளவன் எழுப்பிய ஐயங்களுக்குப் பதிலுரையாக அமைந்தது.

'நாங்கள் ஆயுதந் தாங்கி களத்தில் நிற்கிறோம். நாங்கள் ஆயுதங் தாங்கியது எதற்காக? ஈழத்தின் எல்லைகளை விடுதலை செய்வதற்காக மட்டுமேயல்ல. எமது தேசியத் தலைவர் ஆயுதம் ஏந்தத் சொன்னது முழுமையான விடுதலையைக் காண்பதற்காக. முழுமையான விடுதலை என்பது சாதியற்ற தமிழீழம். சமத்துவம் உருவாக்கப்படுகிற தமிழீழ விடுதலையே எங்கள் எல்லை.

'போராளிகளிடம் சாதிய உணர்வு சிறிதளவும் இல்லை. இருந்தால் போராளிகளாக முடியாது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தித் தருவதற்காக போராளிகள் இரவும் பகலும் உழைத்தார்கள். அவர்கள் இந்த அரங்கத்தை கூட்டிப் பெருக்கினார்கள். நாற்காலிகளைத் துடைத்தார்கள். இவர்கள் அவைரும் இயக்கத்தில் இடைநிலைத் தளபதிகள். அதற்கடுத்த நிலைத் தளபதிகள், எல்லோரும் போராளிகள்.

போராளிகள் 150 பேர் உங்களுக்கு உணவு பரிமாறினார்கள். கழிவறைகளைக் கழுவினார்கள். இவர்கள் சாதி பார்த்து தொழில் செய்யவில்லை. சாதி தெரியாமலே, சாதி எதுவென உணராமலே கடமை செய்தார்கள்.

அவர்களுக்கு நான் நன்றி சொல்லமாட்டேன். அது அவர்களுக்குப் பணி. இன்று இந்தப் பணி முடிந்துவிட்டால், நாளைக்கு அடுத்த பணிக்குச் சென்று விடுவார்கள்.

திருமாவளவன் கருதுவது போன்ற தமிழீழம் அமைந்தால் அது மக்களுக்குச் செய்கிற மிகப்பெரிய துரோகம். வரலாற்றுத் துரோகம். சாதிப் பிரிவினைகள் பாராட்டுகிற தமிழீழம் அமையுமென்றால் அந்தத் தமிழீழம் எங்களுக்கும் வேண்டாம். உங்களுக்கும் வேண்டாம்."

புதுவை இரத்தினதுரையின் வாசகம், விடுதலை இயக்கத்தை, விடுதலைப்போரை எதற்காக, எதை நோக்கியதாக எடுத்துச் செல்கிறார்கள் என்பதின் தெளிவான விடையாக அமைந்திருந்தது.

எழுபது தொடக்கத்தில் இருந்த ஈழம் அல்ல, அந்த ஈழம் என்றைக்கோ எங்கேயோ காணாமல் போய்விட்டது. இது புதிய ஈழம்.

நன்றி: ஈழக்கதவுகள்

இனியும் புலிகளுக்கு சாதிப்பிரச்சினை பற்றி ஆலோசனை சொல்ல அதி மேதாவிகளுக்கு யோசனை இருந்த தொடர்ந்து பேசலாம்...! ஆனால் இன்னோரு விடையத்தையும் சொல்ல வேண்டும், இந்த வலைப்பதிவாளர்கள், சாதியத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால், ஜனநாயகம், வன்முறை, அது இது என்று இவர்களும் ஒப்பாரி வைக்க தயங்க மாட்டார்கள் என்னை பொறுத்த வரை இவர்களை தவிர்துவிடுவது நல்லது... ஏனெனில் நிலையான கொள்கையில்லாத கூட்டம்

Edited by Nitharsan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் அமைப்பிடம் சாதியில்லை. அவர்கள் கலப்புத் திருமணம் செய்து கொள்கிறார்கள். சாதிகளுக்கு என ஒதுக்கப்பட்ட தொழில்களை தாங்களே செய்து கொள்கிறார்கள். விதயம் அதுவன்று.

விடயம் மக்கள் தொடர்பானது.

அடக்குமுறைகள் எதுவுமில்லையாயினும் சாதிய எண்ணக் கரு கொண்ட மக்கள் சமூகமே தமிழ்ச் சமூகம். (ஆங்காங்கே சில மேலாதிக்கங்கள் புலிகள் காலத்திலும் நிகழ்ந்தன. அண்மைக்காலங்களிலும் நிகழ்ந்தன. அவற்றை விட்டு விடுவோம் .)

தாழ்த்தப்பட்ட சாதிக்காரருக்கு என ஒதுக்கப்பட்ட தொழில்களை சாதி வேறுபாடின்றி செய்யக் கூடிய சமூகமா எங்களது.? அந்த முன்னேற்றம் கண்டு விட்டோமா..? நேரடியாகச் சொன்னால் கள்ளிறக்கும் தொழிலை வெள்ளாளர் என சொல்லப்படுபவர்கள் இயல்பாக அது ஒரு சம தொழில் எனக் கருதிச் செய்யும் காலம் கனிந்து விட்டதா..?

சாதிய அடிப்படையில் கோவில்களில் திருவிழா நடக்கும் வழமை இப்பொழுதும் யாழ்ப்பாணத்தில் நடைமுறையில் உள்ளது.

புலிகள் என்ன செய்ய போகிறார்கள் என்பதை விடுவோம். இவ்வாறான சமூக விழிப்புணர்வுகளுக்குக் கூடவா அவர்களை எதிர்பார்த்து நிற்க வேண்டும். சாதிய எண்ணக் கரு ஒழிய செயற்திட்டத்தில் என்ன செய்யலாம்.? அது பற்றிப் பேசாமல் விடலாம் என்பது சரியானதல்ல. அது ஒளித்து வைப்பது போன்றது. ஒழிப்பதில்லை

சாதிய அடிப்படையில் கோவில்களில் திருவிழா நடக்கும் வழமை இப்பொழுதும் யாழ்ப்பாணத்தில் நடைமுறையில் உள்ளது.

அப்படியென்றால் என்ன? விளக்கமாக கூற முடியமா?

நேரடியாகச் சொன்னால் கள்ளிறக்கும் தொழிலை வெள்ளாளர் என சொல்லப்படுபவர்கள் இயல்பாக அது ஒரு சம தொழில் எனக் கருதிச் செய்யும் காலம் கனிந்து விட்டதா..?

அவனவன் விண்வெளிக்கு போகபோட்டி போட்டுக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், நீர் இந்த பனை மரத்தில் புதிய ஆட்களை ஏற்ற முனைவது வேடிக்கையாக இல்லையா? இப்போது பனைமரத்தில் ஏறி கள்ளு இறக்குவதற்கு பல இயந்திரங்கள் வந்துவிட்டதே? இவ்வாறு சாதிகளை உடைக்கூடிய மாற்றுத் தொழிலாக குறிப்பிடுவதற்கு சிகை அலங்காரக் கலையே சிறப்பானது. வெளிநாடுகளில் நம்மவர் பலர் கூடுதலான வருமானம் வருவதால் கல்லூரிகளில் பயிற்சி எடுத்துவிட்டு சிலையலங்காரத் தொழிலில் ஈடுபடுகின்றார்கள்!

காசு கொட்டினால் நம்மவர்கள் எவ்வாறான தொழிலும் செய்வார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோவில்களில் 10 நாட்கள் திருவிழா நடக்கும். அதில் ஒவ்வொரு குறித்த சில திருவிழாக்களை குறிப்பிட்ட சில சாதிக்காரர்களுக்கு என ஒதுக்குவார்கள். அந்தக் கோவில் யாருடைய ஆளுகைக்குள் இருக்கிறதோ அவர்கள் பெரும்பான்மையான திருவிழாக்களை செய்வார்கள். நானறிந்த வரை சுழிபுரம் வட்டுக்கோட்டை பகுதிகளில் இந்த நடைமுறை உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியென்றால் என்ன? விளக்கமாக கூற முடியமா?

முதலாம் திருவிழா: கோவிலுக்கு வடக்கால் இருக்கும் பகுதியினர்

இரண்டாம் திருவிழா: மேற்குப் பகுதி

மூன்றாம் திருவிழா: தெற்குப் பகுதி

...

......

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாதிக்கு/பிரிவிற்கு பிரித்து வழங்கப்பட்டிருக்கின்றது.. ஒரு பகுதி இரண்டு சிகரம் கட்டினால் மற்றது மூன்று கட்டும்.. ஒரு பகுதி நாலு கூட்டு மேளம் பிடித்தால், வேறோர் பகுதி எட்டுக் கூட்டு மேளமும் பிடிக்கும்.. சின்ன மேளமும் பிடிக்கும்...

ஆச்சரியமாக இருக்கிறது. எங்களது பராமரிப்பிலும் ஊரில் ஒரு பெரிய கோயில் இருந்தது. ஆனால் இவ்வாறான நிகழ்வுகள் இருக்கவில்லை. நான் அப்போது சிறுவனாக இருந்தபடியால் இதைபற்றி விரிவாகத் தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வாறு சாதிகளை உடைக்கூடிய மாற்றுத் தொழிலாக குறிப்பிடுவதற்கு சிகை அலங்காரக் கலையே சிறப்பானது.

ஆம் அது நல்ல ஒரு முன்னுதாரணம். குறிப்பிட்ட சாதிக்கென ஓதுக்கப்பட்ட தொழில்களை தொழிற்கல்விகளாக்கிப் பரவலாக்க வேண்டும். மாப்பிளை சொன்ன நவீன முறைகளும் உள்ளடக்கப்பட வேண்டும். கள்ளிறக்குதல் என்பது கூட தனியே கள்ளுக்கானதாக அன்றி அதனைப் பயன்படுத்தி வேறு உற்பத்திப் பொருட்கள் தயாரிக்க வேண்டும்.

இதனால் கள்ளிறக்கும் ஒருவர் கண்டிப்பாக இந்த சாதியைச் சேர்ந்தவர் என்ற நிலை மாற வேண்டும். சாதி எண்ணக் கருவை மக்கள் மனங்களில் இருந்து அகற்றுவதற்கான பிரதான வழிமுறைகளில் இதுவும் ஒன்று. பரவலான கலப்புத் திருமணங்களும் நடாத்தப்பட வேண்டும். இதனைப் புலிகள் தான் மேற்கொள்ள வேண்டும் என்று இல்லை. பேச்சுத் திருமணம் என்றால் கூட பெற்றோர் சாதியை முன்னிறுத்தி பேசுகையில் அவ்வாறு வேண்டாம். கலப்புத் திருமண ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என இளந்தலைமுறை பெற்றோரைக் கோர முடியாதா..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவனவன் விண்வெளிக்கு போகபோட்டி போட்டுக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், நீர் இந்த பனை மரத்தில் புதிய ஆட்களை ஏற்ற முனைவது வேடிக்கையாக இல்லையா? இப்போது பனைமரத்தில் ஏறி கள்ளு இறக்குவதற்கு பல இயந்திரங்கள் வந்துவிட்டதே? இவ்வாறு சாதிகளை உடைக்கூடிய மாற்றுத் தொழிலாக குறிப்பிடுவதற்கு சிகை அலங்காரக் கலையே சிறப்பானது. வெளிநாடுகளில் நம்மவர் பலர் கூடுதலான வருமானம் வருவதால் கல்லூரிகளில் பயிற்சி எடுத்துவிட்டு சிலையலங்காரத் தொழிலில் ஈடுபடுகின்றார்கள்!

காசு கொட்டினால் நம்மவர்கள் எவ்வாறான தொழிலும் செய்வார்கள்.

:lol::lol::o:o:o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலாம் திருவிழா: கோவிலுக்கு வடக்கால் இருக்கும் பகுதியினர்

இரண்டாம் திருவிழா: மேற்குப் பகுதி

மூன்றாம் திருவிழா: தெற்குப் பகுதி

...

......

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாதிக்கு/பிரிவிற்கு பிரித்து வழங்கப்பட்டிருக்கின்றது.. ஒரு பகுதி இரண்டு சிகரம் கட்டினால் மற்றது மூன்று கட்டும்.. ஒரு பகுதி நாலு கூட்டு மேளம் பிடித்தால், வேறோர் பகுதி எட்டுக் கூட்டு மேளமும் பிடிக்கும்.. சின்ன மேளமும் பிடிக்கும்...

எந்தச்சாதிக்காரர் எத்தனை கூட்டு மேளம் உபயமளித்தாலும் சரி அல்லது சின்னமேள உபயமாயிருந்தாலும் சரி இவர்களெல்லாம் வெள்ளாள வீடுகளில் மாத்திரம் தான் இராப்போசனம் எடுப்பார்கள்.அதுவும் நல்ல தண்ணி,நல்ல கறி சோறு வேண்டும்.

காவடி, நீங்கள் இங்கு கூறும் சமுதாய மாற்றங்களில் அது பற்றிய விளிப்புணர்ச்சியை மட்டும் தான் இப்போதைக்கு இக் களத்தின் வாயிலாக வெளிக் கொண்டுவரலாமே தவிர உண்மையான மாற்றங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லையே என்று இப்போதே ஆதங்கப் பட்டுக்கொள்வதற்கு நேரம் இதுவல்ல. எமக்குமுன் இதைவிட முக்கிய வேலைகள் எத்தனையோ கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை இனங்கண்டு கொண்டு போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக செயற்படுங்கள். இன்றைய காலகட்டத்தில் இவ்வாறான தலைப்பொன்றுடன் கருத்தாடல் செய்வது அனைத்து மக்களையும் சென்றடையும் என்றும் நான் நம்பவில்லை.

இவ்வாறு சாதிகளை உடைக்கூடிய மாற்றுத் தொழிலாக குறிப்பிடுவதற்கு சிகை அலங்காரக் கலையே சிறப்பானது.

ஆம் அது நல்ல ஒரு முன்னுதாரணம். குறிப்பிட்ட சாதிக்கென ஓதுக்கப்பட்ட தொழில்களை தொழிற்கல்விகளாக்கிப் பரவலாக்க வேண்டும். மாப்பிளை சொன்ன நவீன முறைகளும் உள்ளடக்கப்பட வேண்டும். கள்ளிறக்குதல் என்பது கூட தனியே கள்ளுக்கானதாக அன்றி அதனைப் பயன்படுத்தி வேறு உற்பத்திப் பொருட்கள் தயாரிக்க வேண்டும்.

இதனால் கள்ளிறக்கும் ஒருவர் கண்டிப்பாக இந்த சாதியைச் சேர்ந்தவர் என்ற நிலை மாற வேண்டும். சாதி எண்ணக் கருவை மக்கள் மனங்களில் இருந்து அகற்றுவதற்கான பிரதான வழிமுறைகளில் இதுவும் ஒன்று. பரவலான கலப்புத் திருமணங்களும் நடாத்தப்பட வேண்டும். இதனைப் புலிகள் தான் மேற்கொள்ள வேண்டும் என்று இல்லை. பேச்சுத் திருமணம் என்றால் கூட பெற்றோர் சாதியை முன்னிறுத்தி பேசுகையில் அவ்வாறு வேண்டாம். கலப்புத் திருமண ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என இளந்தலைமுறை பெற்றோரைக் கோர முடியாதா..

நிச்சயமாக சாதிப்பிரச்சனை சுதந்திர தமிழீழம் மலரும் போது தமிழீழத்திலிருந்து முற்றாக அகற்றப்பட்டுவிடும். வெளிநாடுகளிலும் நம்மவரிடையே உள்ள சாதிப்பாகுபாடு புதிய, புதிய சந்ததிகள் தோன்றும் போது முற்றாக அழிந்துவிடும். 1970, 1980, 1990, 2000, 2010 என்ற காலகட்டங்களை எடுத்து உற்றுநோக்குவீர்களானால் இந்த சாதிக்கோளாறுகள் எவ்வாறு அருகிவிட்டன, அழிந்து கொண்டுவருகின்றன என்பது விளங்கும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவடி, நீங்கள் இங்கு கூறும் சமுதாய மாற்றங்களில் அது பற்றிய விளிப்புணர்ச்சியை மட்டும் தான் இப்போதைக்கு இக் களத்தின் வாயிலாக வெளிக் கொண்டுவரலாமே தவிர உண்மையான மாற்றங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லையே என்று இப்போதே ஆதங்கப் பட்டுக்கொள்வதற்கு நேரம் இதுவல்ல. எமக்குமுன் இதைவிட முக்கிய வேலைகள் எத்தனையோ கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை இனங்கண்டு கொண்டு போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக செயற்படுங்கள். இன்றைய காலகட்டத்தில் இவ்வாறான தலைப்பொன்றுடன் கருத்தாடல் செய்வது அனைத்து மக்களையும் சென்றடையும் என்றும் நான் நம்பவில்லை.

ஆமாம். அப்படிச் சாதியத்தை ஒழிக்கத்தான் போகிறீர்கள் என்றால், புலம்பெயர்ந்து நாம் வாழும் தேசங்களில் சாதியம் எவ்வாறு வாழ்கிறது அதனை இங்கு எப்படி ஒழிக்கலாம் என்று விவாதியுங்கள். இங்கு இருந்துகொண்டு யாழ்ப்பாணத்தில் கள் இறக்குவது எப்படி என்று யோசிக்காதீர்கள். ஆதனால் ஒரு புண்ணியமும் இல்லை. போகிற போகில் உள்ள எல்லாப் பனைமரமும் மல்ரிபரல் அடியில் வட்டுடன் இறங்கப்போகிறது. பிறகு கள் இறக்கும் வேலையே இராது.

இங்கு சாதியம் பல வழிகளில் செத்துவிட்டது. இருந்தாலும் கொஞ்ச நஞ்சுக்கூட்டம் வேறுபல விடயங்களில் வளர்க்கப்பார்க்கிறார்க்ள்.

முதலாவதாக இங்கு என்னென்ன நடைமுறைகளில் சாதியம் வாழ்கிறது என்ற தகவல் தேவை (ஒன்று திருமணம், வேறு எவை?) பிறகு அதை செயல்முறையில் எவ்வாறு ஒழிக்கலாம் என்ற விவாதம் தேவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமணம் என்பது ஒருவனின் அல்லது ஒருத்தியின் உட்ச பட்ச்ச "தனி மனித" சுதந்திரம். இதில் போய் கலப்புதிருமணம்தான் செய்யணும் என்று கூற யாருக்கும் உரிமை இல்லை.

நீங்கள் சொல்வது போல் எல்லாம் சாதியை ஒடுக்க முனைந்தால் கடைசியில் போல் பொட்டின் கம்போடியா போலத்தான் ஆகும்.

ஈழத்தில் சாதியின் பெயரால் யாருக்கும் அடிப்படை உரிமைகள் மறுக்கப் படக்கூடாது என்பதே உண்மை.

திறமை அடிப் படையில் கல்வி, வேலை, வாழ்க்கையில் வாய்ப்புகள் கொடுத்தாலே போதுமானது.

ஒருவன், வெள்ளா பிள்ளையைதான் கட்டுவன் என்பது மிக மோசமான ஒரு மனோநிலை ஆனால் அதை செய்யும் உரிமை அவனுக்கு இருக்கவேண்டும்.

புலிகள்/தமிழீழ அரசு வேன்டுமானால் கலப்பு திருமனத்தை ஊக்குவிக்கலாம், உதாரனமாக வரிச்சலுகை வழங்கலாம், பாடத்திட்டத்தில் சாதியத்தின் தீய விலைவுகலை பற்றி போதிக்கலாம்.

மேற்க்குலகில் எப்படி இனவெறி தடுப்பு சட்டங்கள் உள்ளனவோ அப்படி சாதி வெறி தடுப்பு சட்டங்கள் கொண்டுவரலாம்.

ஆனால் ஒருவனை கலப்புதிருமணம் செய்ய வற்புருத்துவதோ அல்லது இன்னொரு சாதிக்காரன் வீட்டில் சென்று சாப்பிடும் படி கேட்ப்பதோ சர்வாதிகாரம்.

இங்கே கூச்சல் போடும் எத்தனை பேர் கலப்பு திருமணம் செய்துள்ளீர்கள்?

அட்ட்லீஸ்ட் உங்கள் நெருங்கிய உறவினர் யாராவது வேறு சாதியினரா?

விவேகானந்தர் சொன்னதாக கனகரத்தினத்தின் அண்ணா கோப்பி பைக்கற்றில் போட்டிருக்கும், "உன்னை நீ திருத்திகொள்,சமூகம் தானாகவே திருந்தும்"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போ எம்முன்னே இருக்கும் பாரிய பிரதான வேலை தேசத்தின் நிலப்பரப்பை மீட்டு, அதை தொடர்ந்தும் பாதுகாப்பதன் மூலம் எம் மக்களின் இறையாண்மையையும் உயிர் வாழ்தலையும் உறுதி செய்வதே.

சாதிய ஒழிப்பு, சீதனம், பிரதேச வாத ஒழிப்பு போன்ற இறன்டாம் நிலை விடயங்கள் எமது "பிரையோரிட்டி" இல்லை.

அவை பிண்ணணியில், கால ஓட்டத்தில் படி படியாக மாறும்.

எல்லா முனைகளிலும் போரை தொடங்குவது போல, எல்லா விடயங்களையும் ஒன்றாக கையாண்டால்....அப்புறம் ரத்வத்தை அகல கால்வைச்சது போலத்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமணம் என்பது ஒருவனின் அல்லது ஒருத்தியின் உட்ச பட்ச்ச "தனி மனித" சுதந்திரம். இதில் போய் கலப்புதிருமணம்தான் செய்யணும் என்று கூற யாருக்கும் உரிமை இல்லை.

நீங்கள் சொல்வது போல் எல்லாம் சாதியை ஒடுக்க முனைந்தால் கடைசியில் போல் பொட்டின் கம்போடியா போலத்தான் ஆகும்.

ஈழத்தில் சாதியின் பெயரால் யாருக்கும் அடிப்படை உரிமைகள் மறுக்கப் படக்கூடாது என்பதே உண்மை.

திறமை அடிப் படையில் கல்வி, வேலை, வாழ்க்கையில் வாய்ப்புகள் கொடுத்தாலே போதுமானது.

ஒருவன், வெள்ளா பிள்ளையைதான் கட்டுவன் என்பது மிக மோசமான ஒரு மனோநிலை ஆனால் அதை செய்யும் உரிமை அவனுக்கு இருக்கவேண்டும்.

புலிகள்/தமிழீழ அரசு வேன்டுமானால் கலப்பு திருமனத்தை ஊக்குவிக்கலாம், உதாரனமாக வரிச்சலுகை வழங்கலாம், பாடத்திட்டத்தில் சாதியத்தின் தீய விலைவுகலை பற்றி போதிக்கலாம்.

மேற்க்குலகில் எப்படி இனவெறி தடுப்பு சட்டங்கள் உள்ளனவோ அப்படி சாதி வெறி தடுப்பு சட்டங்கள் கொண்டுவரலாம்.

ஆனால் ஒருவனை கலப்புதிருமணம் செய்ய வற்புருத்துவதோ அல்லது இன்னொரு சாதிக்காரன் வீட்டில் சென்று சாப்பிடும் படி கேட்ப்பதோ சர்வாதிகாரம்.

இங்கே கூச்சல் போடும் எத்தனை பேர் கலப்பு திருமணம் செய்துள்ளீர்கள்?

அட்ட்லீஸ்ட் உங்கள் நெருங்கிய உறவினர் யாராவது வேறு சாதியினரா?

விவேகானந்தர் சொன்னதாக கனகரத்தினத்தின் அண்ணா கோப்பி பைக்கற்றில் போட்டிருக்கும், "உன்னை நீ திருத்திகொள்,சமூகம் தானாகவே திருந்தும்"

அராஜகம் செய்து தான் சாதியை ஒழிக்கப்போறம் எண்டு ஆர் சொன்னது? நீங்களே அஸ்ஸூம் பண்ணிக்கொண்டு துள்ளினா எப்படி?

ஒவ்வொண்டா செய்வம் எண்டு இதை (நான் எமக்குள் இருக்கிற சாதியம் உட்பட்ட எல்லாப் பிரிவினைக்ளையுமே சொல்லுறன்) விட்டால் பிறகு போராட்டத்தை எங்கடை பிரிவினை திண்டுவிடும்.

இதை எப்பவோ புலிகள் உணர்ந்து விட்டனர். அங்கும் கலப்புத் திருமனம் செய்யவேண்டுமென்று யாரும் யாரைய்ம் கட்டயப்ப்டுட்தவில்லை. வேறு பல வழிக்ள், நீங்கள் குறிப்பிட்ட சில உட்பட, நடைமுறையிலுள்ளது.

இங்கும் நாங்கள் விழிப்படைய வேண்டும்.

அனைவரும் ஒன்றுபட வேண்டும்

ஒன்றுபட்டால்

உண்டு வாழ்வு

ஒற்றுமை இன்றேல்

அனைவர்க்கும் தாழ்வு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.