Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்ரம் வேதா திரை விமர்சனம் விக்ரம் வேதா திரை விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தரமான நடிகர்கள் இருவர் படம் எப்போது வரும் என பலரும் காத்திருப்பார்கள். அந்த வகையில் விஜய் சேதுபதி, மாதவன் என்ற இரண்டு தரமான நடிகர்கள் இணைந்து நடித்த விக்ரம் வேதா இன்று உலகம் முழுவதும் வெளிவர, இருவருமே மிரட்டினார்களா? பார்ப்போம்.

கதைக்களம்

விக்ரமாக மாதவன் வேதாவாக விஜய் சேதுபதி இருவருக்கும் இடையே நடக்கும் நியாயப்போராட்டமே விக்ரம்வேதா ஒன் லைன். மாதவன் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட், அவரின் ஒரே டார்கெட் வேதா.

எல்லோருமே வேதாவை எதிர்நோக்கி காத்திருக்க, வேதா தானாகவே வந்து போலிஸில் சரண் அடைகிறார். அதை தொடர்ந்து அவர் மாதவனிடம் தன் கதையை கூற ஆரம்பிக்கின்றார்.

அப்படி கூறுகையில் மாதவனுக்கு ஒரு சில விஷயங்கள் புரிய வருகின்றது. வேதாவை நாம் தேடி போகின்றோமா? இல்லை வேதா நம்மை தேடி வந்தானா? அப்படி வந்தால் எதற்காக வந்தான்? என பல சுவாரசிய முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்கின்றது.

படத்தை பற்றிய அலசல்

ஒரு போலிஸ் ஒரு திருடன் என இதுவரை பல படங்களில் பார்த்திருப்போம். அப்படி ஒரு வகை தான் இந்த விக்ரம்வேதா A saw devil, Dark Knight போன்ற படங்கள் போல ஒரு ஆடுபுலி ஆட்டமே இந்த விக்ரம்வேதா.

இதில் டார்க் நைட் சாயல் கொஞ்சம் தூக்கல் தான், மாதவன் இதற்கு பிறகு தான் சிறந்த நடிகர் என்று நிரூபிக்க தேவையில்லை, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டை இதற்கு மேல் நம் கண்முன் யதார்த்தமாக கொண்டு வரமுடியாது.

அவருக்கு கொஞ்சம் கூட குறை வைக்கவில்லை விஜய் சேதுபதி. எப்போதும் மாதவனை தேடி வந்து ஒரு கதை சொல்கிறேன் என ஒரு கதையை ஓபன் செய்து அதிலிருந்து மாதவனுக்கு சில ஐடியா கிடைத்து, அதன் மூலம் விஜய் சேதுபதி தனக்கு தேவையான விஷயங்களை எடுத்துக்கொள்வது என மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய ஒரு திரைக்கதை.

அதிலும் குறிப்பாக தன் மனைவியின் கையில் ஏற்படும் காயம், வரலட்சுமி கையில் இருக்கும் துப்பாக்கியை வைத்தும் மாதவன் கண்டுப்பிடிக்கும் காட்சிகள் சுவாரசியம். ஒரு தருணம் யார் நல்லவன், யார் கெட்டவன், எது தீர்மாணிக்கின்றது என்பதை மிக அழகாக காட்டியுள்ளனர் புஷ்கர்-காயத்ரி.

வினோத்தின் ஒளிப்பதிவு வடசென்னையின் நிழல் உலகத்தை கண்முன் கொண்டு வருகின்றது. சாம் இசையின் பின்னணி மிரட்டல், அதிலும் விஜய் சேதுபதிக்கு வரும் பின்னணி பாடல் பாதி கதையை சொல்கின்றது.

க்ளாப்ஸ்

நடிகர், நடிகைகளின் யதார்த்தமான நடிப்பு.

டெக்னிக்கல் விஷயங்கள், கிளைமேக்ஸ் டுவிஸ்ட்.

படத்தின் வசனம் பெரும் பலம் ‘உன் கையில் ரூ 10 கோடி கொடுத்தால், நீ என்னை இங்கு விட்டு, பிறகு மீண்டும் அந்த ரூ 10 கோடி பணத்தை என்னிடம் கொள்ளையடிக்க தான் வருவாய்’ என மாதவன் விஜய் சேதுபதியிடம் பேசும் பல வசனங்கள் யோசித்தாலே புரியும் வகை.

பல்ப்ஸ்

கொஞ்சம் மெதுவாக நகரும் திரைக்கதை, அத்தனை சுவாரசியம், நுணுக்கமாக செல்லும் படத்தில் கிளைமேக்ஸ் சண்டை கொஞ்சம் யதார்த்தம் விலகி நிற்கின்றது.

மொத்தத்தில் வேதா கதை சொல்ல ஆரம்பித்தால் பரபரப்பாவது விக்ரம் மட்டுமில்லை, ஆடியன்ஸும் தான்.

http://www.cineulagam.com/films/05/100847

  • 3 weeks later...

விக்ரம் வேதா - இந்த வருடத்தின் சிறந்த திரைப்படம்

எப்போதுமே மலையாளப் படங்கள் மேல சினிமா விரும்பிகளுக்கு ஒரு காதல் இருக்கவே செய்யும். இப்போ ரிலிசாகுற மலையாளப் படங்களை தியேட்டர்லயோ அல்லது டவுன்லோடியோ பாத்துரலாம். ஆனா 1980 காலகட்டங்கள்ல வெளியான மோகன்லால் மற்றும் மம்முட்டியுடைய வளர்ச்சியடைந்த காலங்கள்ல வெளிவந்த மலையாளப் படங்களையெல்லாம் பார்க்கனுங்குற ஆவல் இருந்தாலும் பாக்குறதுக்கு முடியாம இருந்தது. அந்த ஆவலுக்குத் தீனி போடுற மாதிரி கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட க்ளாசிக் மலையாளப் படங்கள் ஹாட்ஸ்டார் ஆப்ல ஆங்கில சப்டைட்டில்களோட காணக் கிடைக்குது. அப்படிப் பாத்ததுதான் மம்முட்டியுடைய "ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு". இது ஒரு மர்டர் மிஸ்டரி. சாதாரணமா ஆரம்பிக்கிற படம் சாதாரணமான ஒரு இடைவேளை முடிஞ்சி சிறு சிறு டிவிஸ்ட்களோட மெல்ல மெல்ல முன்னேறி அசாதாரணமான ஒரு க்ளைமாக்ஸ்ல போய் முடியும். ரிலிசான நேரத்துல சென்னையில மட்டும் டப்பிங் செய்யப்படாமலயே ஒரு வருடத்துக்கும் மேல ஓடிருக்கு. சரி இப்போ ஏன் இதெல்லாம் சொல்லிட்டிருக்கேன்... விக்ரம்வேதா படமும் கிட்டத்தட்ட இதே திரைக்கதை அமைப்புடைய ஸ்லோ பாய்சன் வகையறாப் படம்தான்.

madhavan and vijay sethupathi

புஷ்கர்-காயத்ரி இரட்டை இயக்குனர்களின் வியக்க வைக்குற திரைக்கதை மற்றும் மேக்கிங். இறுதிச்சுற்றுல காட்டுன அதே நேர்மையான கோவத்தோட மாதவன். ஜிகர்தண்டாவுல விட்டதைப் புடிக்குற வெறியில விஜய் சேதுபதி. மூனும் சந்திக்குற இடம் ஒரு க்ளாஸ் மூவியை உருவாக்கிடுச்சு.

வேதாளமான விஜய்சேதுபதி போடுற புதிர்களுக்கான விடையை விக்ரமாதித்யனான மாதவன் எப்படிக் கண்டுபுடிக்குறார்ங்குறதுதான் கதை. அது விறுவிறுப்பா இல்லைன்னாலும் படத்தோட முக்கியக் கதாபாத்திரங்களோட கெத்தான நடிப்பு, நல்லவன் யாரு கெட்டவன் யாருன்னு அவிழ்ந்து விழுற முடிச்சுகள் இந்த வருடத்தின் பெஸ்ட் மூவியா விக்ரம்வேதாவை மாத்துது.

மாதவன் விஜய்சேதுபதி ரெண்டு பேரோட ஸ்க்ரீன் பிரசன்ஸே போதுமானதா இருக்கு. விஜய்சேதுபதியோட பெஸ்ட் இன்ட்ரோ இன்னிக்கு தேதி வரை இதுதான். இறுதிசுற்றுல விதைச்ச நம்பிக்கையை மாதவன் ஒருபடி மேல கொண்டுபோய்ட்டாரு (இந்த நேரத்துல "வேட்டை" நினைவுக்கு வந்து பீதியாவதையும் தவிர்க்க முடியல). இரண்டு பெரிய நடிகர்கள் நடிச்சிட்டாங்கங்குறத விட அவங்களைத் தவிர்த்தும் கவனிக்கிறதுக்கு நுணுக்கமான நிறைய விசயங்கள் இருக்கு. அதுதான் படம் முடிஞ்சு வெளிய வரும்போது முழுமையான திருப்தியைக் கொடுக்குது.

மாதவனுடைய மனைவியா வர்ற கன்னட நடிகை ஸ்ரதா. கதிரின் காதலியான வரலட்சுமி. ரெண்டுபேருமே ரெண்டுவிதமான ஒரே அன்பை வெவ்வேறு தளங்கள்ல இருந்து வெளிப்படுத்துறாங்க. அதோட விவேக் பிரசன்னாவை பாத்தாலே காண்டாவுது. அப்படி பெர்ஃபாமன்ஸ்.

ஒரு சின்ன உறுத்தல் என்னன்னா வடசென்னை அடுக்குமாடி குடியிருப்புகள்ல வாழுற மக்களை, குழந்தைகளையும் கூட ரவுடிகளுக்கு துணைபோற மாதிரியும் போதைக் கடத்தலுக்கு உதவுற மாதிரியும் சில காட்சிகள்ல காட்டுனதுதான்.

மாதவனுடைய மனைவியை வேதா உபயோகிக்குற விதம் வேதா ஒரு இன்டலிஜன்ட்டான ரவுடிங்குறதுக்கு ஒரு ஷேம்பிள். இயக்குனர்களோட திறமைக்கும் அது ஒரு ஷேம்பிள்.

பி. கு :நல்ல சினிமாவை சப்போர்ட் பண்ணனும்ங்குற எண்ணமெல்லம் தூள் தூளா உடைஞ்சி போய்டுச்சி. ஜிஎஸ்டிக்கு அப்புறம் பார்த்த முதல் படம் இதுதான். டிக்கெட் விலை 70 ரூபாய்.

http://keetru.com/index.php/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/33523-2017-07-25-04-01-21

நேற்று திரையரங்கம் சென்று இப் படத்தை பார்த்தேன். நல்ல படம். ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக கதை உருவாகி, கதைக்குள் கதைகள் சென்று விறுவிறுப்பாக முடிச்சுகள் அவிழ்ந்து நிறைவுறுகின்றது. தமிழில் இப்படியான கதையமைப்பு கொண்ட படம் வேறு இல்லை என நினைக்கின்றேன்.

ஒரு சிறு காட்சியில் எம் கவனம் தவறினால் கூட படத்தின் அடுத்து வரும் சில காட்சிகளை புரிந்து கொள்ள முடியாமல் போகும். புத்திசாலித்தனமான சினிமா.

விஜய் சேதுபதியின் நடிப்பு அருமை!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

நேற்று திரையரங்கம் சென்று இப் படத்தை பார்த்தேன். நல்ல படம். ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக கதை உருவாகி, கதைக்குள் கதைகள் சென்று விறுவிறுப்பாக முடிச்சுகள் அவிழ்ந்து நிறைவுறுகின்றது. தமிழில் இப்படியான கதையமைப்பு கொண்ட படம் வேறு இல்லை என நினைக்கின்றேன்.

ஒரு சிறு காட்சியில் எம் கவனம் தவறினால் கூட படத்தின் அடுத்து வரும் சில காட்சிகளை புரிந்து கொள்ள முடியாமல் போகும். புத்திசாலித்தனமான சினிமா.

விஜய் சேதுபதியின் நடிப்பு அருமை!

நீங்கள் கூடவா வருவை (வரலட்சுமி) மறந்துவிட்டீர்கள். அந்தப் பார்வை உங்களை பாதிக்க வில்லையா..... வெரி சொறி......!  tw_blush:

 Résultat de recherche d'images pour "varalaxmi vikram vedha"

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களுக்கு பின் நல்ல ஒரு படம் பார்த்த ஓர் உணர்வு. விஜய் சேதுபதி, மாதவன். வரலட்சுமி நடிப்பில் விட்டுக்கொடுக்காமல் செய்கிறார்கள். 

கணவன்  பின் தொடர்கிறார் என தெரிந்தும் சேதுபதியை தொழில் ரீதியாக வாகனத்தில் இருவரும் சந்தித்து சேதுபதி தன்னை ஒப்பிவிக்கும் போது வரலட்சுமியின் நடிப்பு நன்றாக இருந்தது.

 

விஜய் சேதுபதி. மாதவன் நடிப்பு பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பார்கலாமா வேண்டாமா

ஆனால் இங்க தியட்டரில் 400 ரூபா அதான் பஜட் இடிக்க 50 ரூபா சீடி நல்ல சீடிக்காக காத்து கொண்டிருக்கிறன் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள திரை விமர்சன குழு கொடுத்துள்ள றீவியு அமர்க்களமாய் உள்ளது என்பதால் இன்று செல்கிறேன். :)

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Sasi_varnam said:

யாழ்கள திரை விமர்சன குழு கொடுத்துள்ள றீவியு அமர்க்களமாய் உள்ளது என்பதால் இன்று செல்கிறேன். :)

உங்கள் விமர்சனத்தையும் எதிர்பார்த்து 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.