Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`காதலனைக் கொல்லு! மகளைக் கட்டிக்கோ!'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞர். மும்பையைச் சேர்ந்த வினோத்குமார் சிங்கேஸ்வர் சிங்குக்கு இளம்பெண் சங்கீதா மீது பைத்தியமான காதல். `எனக்கு 24 உனக்கு 19' என்று காதல் வானில் சிறகடித்துத் திரிந்த இந்த ஜோடி, ஒரு கட்டத்தில் திருமண பந்தத்தில் இணைய முடிவெடுத்தனர்.

அதற்கு பெற்றோர்களின் சம்மதம் வேண்டுமே? வினோத்குமார் வீட்டுத் தரப்பில் பிரச்சினையில்லை. பெண்ணின் அம்மா சம்மதத்தைப் பெற்றால் போதும். வினோத்குமாரும் தைரியமாகச் சென்று சங்கீதாவின் அம்மா மீனா லாலு பஞ்சாபியிடம் பெண் கேட்டார். `நான் சொல்கிற `நிபந்தனைக்கு' சரி என்றால் எனக்குச் சம்மதம்' என்றார் மீனா. சந்தோஷத்துடன் தலையசைத்தார் வினோத்குமார். ஆனால் அடுத்து மீனா விதித்த நிபந்தனை திடுக்கிட வைத்தது அவரை. அதாவது,

``நான் சொல்லும் ஆளை நீ காலி செய்தால் போதும். என் மகளை தாராளமாக நீ கட்டிக்கலாம்!'' என்றார் மீனா.

முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் காதலுக்காக கொலை செய்யவும் தயாராகிவிட்டார் வினோத்குமார். மீனா, கைகாட்டிய நபர் சுனில் வசந்த தோப்கார் என்ற ஆட்டோ டிரைவர். மீனாவின் கள்ளக் காதலர் அவர். நீர்வாழ் பிராணி போல எப்போதும் `தண்ணீரில்' மிதப்பவர். குடிக்கக் காசு கேட்டு அடிக்கடி மீனாவை தொந்தரவு செய்து வந்தார். அதனாலேயே அவரது கதையை முடிக்க முடிவெடுத்துவிட்டார் மீனா. அதற்கு சரியான ஆளையும் பிடித்துவிட்டார்.

வினோத்குமார் தனது நண்பர்கள் அஷ்ரப், சந்தீப் சூர்யநாராயணன் சகானே ஆகியோருடன் சென்று ஆட்டோ டிரைவர் தோப்காரைச் சந்தித்தார். அவருடன் நைசாகப் பேசி மால்வானி தானா பாணி பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு தோப்காருக்கு `தீர்த்த அபிஷேகம்' நடைபெற்றது. அவர் தெளியத் தெளிய மதுபானம் ஊற்றிக் கொடுத்துக் கொண்டே இருந்தனர். தோப்காரும் வெகு குஷியாய் வாங்கி கவிழ்த்துக் கொண்டார். ஆனால் மதுபானத்தில் வினோத்குமார் அண்ட் கோ கலந்திருந்த தூக்க மாத்திரைகள் வேலை செய்தது. தூக்கத்தில் துவண்டார் தோப்கார்.

உடனே சற்றும் தாமதிக்காமல் அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்த வினோத்குமார் கும்பல், உடலை ஒரு சிற்றோடையில் தள்ளிவிட்டு ஓடிவிட்டது.

இந்தக் கொலை வழக்கில் குற்றவாளிகள் யார் என்று மோப்பம் பிடிக்க முடியாமல் சுவரில் முட்டிக் கொண்டு நின்றது மும்பை போலீஸ். இந்நிலையில் கான்ஸ்டபிள் பிரகாஷ் சங்கர் மொஹித்துக்கு ஓர் `இன்பார்மர்' மூலம் வினோத்குமார் கோஷ்டியைப் பற்றிய தகவல் கிடைத்தது. உடனே தேடுதல் வேட்டையை நடத்திய போலீசார், வினோத்குமார், நண்பர்களை சுற்றி வளைத்துப் பிடித்துவிட்டனர்.

அவர்களிடம் போலீசார் `முறைப்படி' விசாரித்ததில், அட்சரம் பிசகாமல் உண்மையை ஒப்பித்து விட்டனர். தோப்காரின் சடலத்தைப் போட்ட இடத்துக்கு அழைத்துச் சென்று, எப்படி கொன்றோம் என்பதை நடித்தும் காண்பித்து விட்டனர். அங்கிருந்து தோப்கார் உடல் பகுதிகளையும், எலும்புகளையும் மீட்டிருக்கிறது போலீஸ்.

காதலியைக் கரம் பற்றி மாமியார் வீட்டில் விருந்து சாப்பிடத் திட்டமிட்ட வினோத்குமார், இப்போது மாமியாருடனே `மாமியார் வீட்டில்' சப்பாத்தி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

Thanks to:Muthucharam

சங்கீதா இப்போது, எங்கு, யாருடன் இருக்கிறார்? வினோத்குமாருக்கு தன் காதலி சங்கீதாவுக்கு பதிலால மாமி மீனாவுடன் வாழ வேண்டிவந்துவிட்டதே!

What a turning point! :huh::huh::huh::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பு என்ன விடிஞ்சுட்டுதா? அல்லது தெளிஞ்சுட்டுதா? :huh::huh::huh: :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒய் மப்பு நோட் பன்னி வையிங்க..உங்க சீரியல்ல யூஸ் பன்னிக்கலாம்

மாப்பு என்ன விடிஞ்சுட்டுதா? அல்லது தெளிஞ்சுட்டுதா? :huh::huh::huh: :P

ஒய் மப்பு நோட் பன்னி வையிங்க..உங்க சீரியல்ல யூஸ் பன்னிக்கலாம்

சிரிக்கப்படாது. உலகத்தில் இப்போது மகளை கட் பண்ணிவிட்டு மருமகனும், மாமியும் ஒன்றாக வாழும் சம்பவங்களும் நடைபெறவில்லையா?

அண்மையில் சிறீகாந்த் நடித்த ஒரு படத்தில் அண்ணிக்காரி புருசன் தம்பியை விரும்புவதாய் கதை காட்டவில்லையா?

ஆனால் பல பெரியவர்கள் பார்க்கும் நமது செல்வன் மெகாசீரியலில் இப்படியான குழப்பகரமான கதைகளையெல்லாம் நான் போடமாட்டேன்! We are decent people! :P

சங்கீதா இப்போது, எங்கு, யாருடன் இருக்கிறார்? வினோத்குமாருக்கு தன் காதலி சங்கீதாவுக்கு பதிலால மாமி மீனாவுடன் வாழ வேண்டிவந்துவிட்டதே!

What a turning point! :blink::icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen:

மாப்பிள்ளை என்ன இப்பவும் மாமியார் இருக்கிற வீட்டில பெண் எடுக்க போறா??????????????? களி தாண்டி உனக்கு :P

ஹேஹே..இப்போதேல வாழ்க்கையில நடப்பதெல்லாமே சினிமா போல வருதே..நடிகைகள் பெயர் வேற. வினோத்குமாருக்கு பதில அஜித்குமார்..இன்னும் பொருத்தமான இருந்திருக்கும். :blink:

ஆனால் பல பெரியவர்கள் பார்க்கும் நமது செல்வன் மெகாசீரியலில் இப்படியான குழப்பகரமான கதைகளையெல்லாம் நான் போடமாட்டேன்! We are decent people! :P

அப்பிடி சொல்லுங்க!!!!

இப்போதேல புதுசு புதுசா கதை வேணும் எண்டதுக்காக..நல்ல உறவுகளை கொச்சப்படுத்தி படம் எடுக்கிறாங்க. :angry:

Edited by ப்ரியசகி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹேஹே..இப்போதேல வாழ்க்கையில நடப்பதெல்லாமே சினிமா போல வருதே..நடிகைகள் பெயர் வேற. வினோத்குமாருக்கு பதில அஜித்குமார்..இன்னும் பொருத்தமான இருந்திருக்கும். :o

அப்பிடி சொல்லுங்க!!!!

இப்போதேல புதுசு புதுசா கதை வேணும் எண்டதுக்காக..நல்ல உறவுகளை கொச்சப்படுத்தி படம் எடுக்கிறாங்க. :angry:

என்ன நக்கலா? உதாரணம் சொல்ல எங்கட தலை தான் கிடைச்சிச்சா?

என்ன நக்கலா? உதாரணம் சொல்ல எங்கட தலை தான் கிடைச்சிச்சா?

எல்லாம் ஒரு ஆசையில் தானே :P

தல இருப்பவன் எல்லாம் தலைOne அல்ல...

தகுதி இருப்பவனே தல ஆகலாம்.. :rolleyes::rolleyes: :P

தல இருப்பவன் எல்லாம் தலைOne அல்ல...

தகுதி இருப்பவனே தல ஆகலாம்.. :rolleyes::rolleyes: :P

தலை பெருத்தவன் எல்லாம் தலைவன் இல்லை

தகுதி இருப்பதக நினைப்பவனும் தலைவன் இல்லை

தலைக்குள் இருப்பவனால் மட்டுமே தலைவன் ஆக முடியும்................

இப்ப சொல்லுங்க...அஜித்குமார் தல யா? :rolleyes::rolleyes:

(அடிக்க வர போறாங்க ..நான் எஸ்கேப்...)

வியைய் தளபதியா இருக்கும் போது அஜித்தால தலயா இருக்கமுடியாத சகி அக்கா.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தல இருப்பவன் எல்லாம் தலைOne அல்ல...

தகுதி இருப்பவனே தல ஆகலாம்.. :rolleyes::blink: :P

எண்டாலும் எங்கட யாழ் கள தலையை இப்பிடி சொல்லி இருக்க கூடாது சகி

  • கருத்துக்கள உறவுகள்

எண்டாலும் எங்கட யாழ் கள தலையை இப்பிடி சொல்லி இருக்க கூடாது சகி

உங்களுக்கு இப்ப யாரையும் முடிஞ்சுவிடுறதயே வேலையா போச்சு,வயசு போக எண்டாலும் எங்கட யாழ் கள தலையை இப்பிடி சொல்லி இருக்க கூடாது சகி

போக இப்படிதான்

:rolleyes::blink:

சுண்டலை சொல்லிட்டு..நீங்களும் அதையே தப்பாமல் செய்றீங்களே புத்தன் ஐயா...

நான் தல அண்ணா போட்ட அந்த வரிகளை பாவித்தேனே தவிர..அவரை நக்கல் பண்ணலப்பா...சுண்டலுக்கு இதே வேலையா போச்சு!!!!

வீண் வம்புக்கு தலை போறது இல்லை

ஆனா வந்த வம்பை விடுறதும் இல்லை இப்ப பாருங்கள் வாங்கி கட்ட போறாங்கள் சகி அவர்கள்

தலை உங்கள் கோவம் நியாயமானது தான் அதுக்காக சகியை கண்ட படி பேச வேண்டாம் பாவம்............

ஏதொ தெரியா பிள்ளை அறியாமல் உங்களை இதுக்குள்ளே இழுத்துட்டா..........

தலை விடவேண்டாம் உங்களை தான் மீன் பன்னிட்டு இப்ப அஜித் (தலை) என்று சொல்லுவா..

அடக் கடவுளே..எல்லாரும் ஒரு முடிவோட தான் இருக்கீங்களா? :D எனக்கு யாரும் உதவி இல்லை..அனீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ :D:D

அனீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

அவங்கள எதுக்கு கூப்பிடிறீங சகி அக்கா .....? :P

ம்ம்...கேசரி செய்து சாப்பிட தான்.. :angry:

(இதுதான் சின்ன பிள்ளைகளை எல்லாம் கூட்டு சேர்க்க கூடது என்றது :D நய் நய் எண்டிக்கிட்டு இருப்பாங்க :angry: )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன சகி ஈஈய கூப்பிறா? :D:D

ம்ம்...கேசரி செய்து சாப்பிட தான்.. :angry:

ம்ம் கூப்பிடுங்க அப்புறம் கேசரி சாப்பிட்ட ஈ சொல்ல பல்லிருக்காதுதனே :D:D:lol::lol: :P :P

என்னப்பா எல்லாரும் சகிய கிண்டல் பண்ணுறீங்கள் ஆஆஆ.... :angry:

சகி சொன்னதில என்ன தப்பு இருக்கு

தல இருப்பவன் எல்லாம் தலைOne அல்ல...

தகுதி இருப்பவனே தல ஆகலாம்..

அதாவது குதிரை ஓட்டுவதில் நம்ம சகோதரம் தல ய ஜெயிக்கேலுமோ ஆரும் ? அது தான் சகி சொல்லிருக்கா சும்மா குதிரை ஓடத்தெரியும் எண்டு சொல்லுறவையெல்லாம் தலை இல்லை ... அதை செய்யத் தெரிந்தவரே தல எண்டு .... இப்ப விளங்கிச்சோ ...... ;) ;)

என்னப்பா எல்லாரும் சகிய கிண்டல் பண்ணுறீங்கள் ஆஆஆ.... :angry:

சகி சொன்னதில என்ன தப்பு இருக்கு

தல இருப்பவன் எல்லாம் தலைOne அல்ல...

தகுதி இருப்பவனே தல ஆகலாம்..

அதாவது குதிரை ஓட்டுவதில் நம்ம சகோதரம் தல ய ஜெயிக்கேலுமோ ஆரும் ? அது தான் சகி சொல்லிருக்கா சும்மா குதிரை ஓடத்தெரியும் எண்டு சொல்லுறவையெல்லாம் தலை இல்லை ... அதை செய்யத் தெரிந்தவரே தல எண்டு .... இப்ப விளங்கிச்சோ ...... ;) ;)

அவக்கு வக்காளத்து வாங்க் இவ வந்திட்டா, உங்க 2பேருக்கும் தலதான் இருக்கு உள்ளே ஒன்டும் இல்லை

:P

எங்களுக்கு தலயாவது இருக்கு..... உங்களுக்கு அதாவது இருக்கா :lol::D:D:D

சரி நான் போய்ட்டு வாறன்... இனும உங்க கூட சேர்ந்த்து அரட்டை அடிக்க நேரம் இல்லை :D:D

Edited by அனிதா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.