Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 36
 
குர்திஷ்தான் சர்வசன வாக்கெடுப்பும் தமிழரும்..
 
குர்திஷ்தான் மக்களிடமிருந்து கவனிக்க எடுத்துக்கொள்ளவேண்டிய விடயம்
அவர்களது பொறுமையும் தாயகம் மீதான விடாத பிடிப்பும்.
 
சில வருடங்களுக்கு முன்னர்
அப்படியொரு தேசமே இனி இல்லை என்ற நிலையிலிருந்து
இன்று சர்வசன வாக்கெடுப்புவரை....
 
எமக்கும் காலம் மாறும்.
சர்வதேச சூழல் மாறும்
காத்திருப்போம்.
தியாகங்கள் ஒரு போதும் வீணாவதில்லை.
 
அதுவரை
எமது அரசியல் தலைவர்கள்
எமது மக்களின் தாகத்தை புரிந்து நடக்கணும்.
  • Replies 339
  • Views 51k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 36
 
குர்திஷ்தான் சர்வசன வாக்கெடுப்பும் தமிழரும்..
 
குர்திஷ்தான் மக்களிடமிருந்து கவனிக்க எடுத்துக்கொள்ளவேண்டிய விடயம்
அவர்களது பொறுமையும் தாயகம் மீதான விடாத பிடிப்பும்.
 
சில வருடங்களுக்கு முன்னர்
அப்படியொரு தேசமே இனி இல்லை என்ற நிலையிலிருந்து
இன்று சர்வசன வாக்கெடுப்புவரை....
 
எமக்கும் காலம் மாறும்.
சர்வதேச சூழல் மாறும்
காத்திருப்போம்.
தியாகங்கள் ஒரு போதும் வீணாவதில்லை.
 
அதுவரை
எமது அரசியல் தலைவர்கள்
எமது மக்களின் தாகத்தை புரிந்து நடக்கணும்.

அது வரைக்கும் நாட்டில் தமிழ் மக்கள் இருக்க வேணுமே.tw_anguished:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 36
 
குர்திஷ்தான் சர்வசன வாக்கெடுப்பும் தமிழரும்..
 
அதுவரை
எமது அரசியல் தலைவர்கள்
எமது மக்களின் தாகத்தை புரிந்து நடக்கணும்.

விசுகு.... இதனை எம் உளுத்துப் போன... அரசியல் வாதியிடம்  எதிர் பார்ப்பது,  "கல்லில்.... நார், உரிப்பதற்கு  சமன்." tw_sleepy:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 36
 
குர்திஷ்தான் சர்வசன வாக்கெடுப்பும் தமிழரும்..
 
குர்திஷ்தான் மக்களிடமிருந்து கவனிக்க எடுத்துக்கொள்ளவேண்டிய விடயம்
அவர்களது பொறுமையும் தாயகம் மீதான விடாத பிடிப்பும்.
 
சில வருடங்களுக்கு முன்னர்
அப்படியொரு தேசமே இனி இல்லை என்ற நிலையிலிருந்து
இன்று சர்வசன வாக்கெடுப்புவரை....
 
எமக்கும் காலம் மாறும்.
சர்வதேச சூழல் மாறும்
காத்திருப்போம்.
தியாகங்கள் ஒரு போதும் வீணாவதில்லை.
 
அதுவரை
எமது அரசியல் தலைவர்கள்
எமது மக்களின் தாகத்தை புரிந்து நடக்கணும்.

சிங்களம் சம்பந்தரென்ற கைத்தடியின் உதவியோடு மிகவும் நேர்த்தியாகக் காய்நகர்த்துகிறது. இப்படியொரு நிலையை எதிர்பார்த்தே குடிறே;ற ங்களையும் படைத்துறை வளாகங்களையும் நிறுவிவருகிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, சுவைப்பிரியன் said:

அது வரைக்கும் நாட்டில் தமிழ் மக்கள் இருக்க வேணுமே.tw_anguished:

உண்மைதான்

ஆனால் தலைவர்கள் தூரநோக்கோடு பயணிக்கணும்  சிங்களத்தலைவர்கள் போலவாவது....

தமிழ்மக்கள் எப்பொழுதுமே  தெளிவாகவும்  காலம் வரும் போது தெளிவான தூர  நோக்குடனான  முடிவுகளையே  எடுக்கின்றனர்

எடுத்துள்ளனர்

ஆனால் தலைவர்கள்............??

 

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

விசுகு.... இதனை எம் உளுத்துப் போன... அரசியல் வாதியிடம்  எதிர் பார்ப்பது,  "கல்லில்.... நார், உரிப்பதற்கு  சமன்." tw_sleepy:

அது தான்எனது  பயமே  சிறி

சுயநிர்ணய  உரிமை

சமஷ்டி 

என்றாலே  இன்றைய  தமிழ்த்தலைவர்களுக்கு  

சிங்களத்தலைவர்களைவிட  கசக்கிறது

முடிவு....??

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nochchi said:

சிங்களம் சம்பந்தரென்ற கைத்தடியின் உதவியோடு மிகவும் நேர்த்தியாகக் காய்நகர்த்துகிறது. இப்படியொரு நிலையை எதிர்பார்த்தே குடிறே;ற ங்களையும் படைத்துறை வளாகங்களையும் நிறுவிவருகிறது. 

உடனடியாக விழுங்கிவிடுவார்கள் என  பயத்தை  மக்களுக்கு ஊட்டியபடி

கொஞ்சம் கொஞ்சமாக  விழுங்குவதற்கு

தெரிந்தபடி  தானும் உடந்தையாகிறது தமிழரது தலைமைத்துவம்...

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 37
 
தமிழர் போராட்டமும் சிலரின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுதலும்...
 
தமிழரது போராட்டம் சார்ந்து தமிழர்களுக்கு
அதன் தற்போதைய தலைமையாகிய கூட்டமைப்பின் மீது
கருத்து வேறுபாடுகளும் விமர்சனங்களும் கோபதாபங்களுமுண்டு.
 
ஆனால்
அதில் தம்மை பறைசாற்ற அல்லது
நானென்றால் கிழித்திருப்பன் என கொலர் தூக்கிவிட சிலர் புறப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் தமது முதுகை ஒருமுறை திரும்பிப்பார்ப்பது
அவர்களுக்கும் அவர்களை நம்பியிருக்கும் மக்களுக்கும் நன்மை தரும்.
 
மனோ கணேசன் அவர்கள்
தனது ராஐ மூளையை பாவித்து
தன் வீட்டில் என்ன சாகசங்கள் செய்திருக்கிறார் என்று சொன்னால் நல்லது.
ஆகக்குறைந்தது வருடாவருடம் மண்ணுக்குள் தாண்டு போகும் மக்களுக்காவது
ஒரு ஒதுக்குப்புறத்தை கேட்டுவாங்கிக்கொடுங்கள்.
 
அதைவிடுத்து நாங்கள் வெந்த தணலில் நீங்கள் குளிர் காயவேண்டாமே....
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 37
 
தமிழர் போராட்டமும் சிலரின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுதலும்...
 
தமிழரது போராட்டம் சார்ந்து தமிழர்களுக்கு
அதன் தற்போதைய தலைமையாகிய கூட்டமைப்பின் மீது
கருத்து வேறுபாடுகளும் விமர்சனங்களும் கோபதாபங்களுமுண்டு.
 
ஆனால்
அதில் தம்மை பறைசாற்ற அல்லது
நானென்றால் கிழித்திருப்பன் என கொலர் தூக்கிவிட சிலர் புறப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் தமது முதுகை ஒருமுறை திரும்பிப்பார்ப்பது
அவர்களுக்கும் அவர்களை நம்பியிருக்கும் மக்களுக்கும் நன்மை தரும்.
 
மனோ கணேசன் அவர்கள்
தனது ராஐ மூளையை பாவித்து
தன் வீட்டில் என்ன சாகசங்கள் செய்திருக்கிறார் என்று சொன்னால் நல்லது.
ஆகக்குறைந்தது வருடாவருடம் மண்ணுக்குள் தாண்டு போகும் மக்களுக்காவது
ஒரு ஒதுக்குப்புறத்தை கேட்டுவாங்கிக்கொடுங்கள்.
 
அதைவிடுத்து நாங்கள் வெந்த தணலில் நீங்கள் குளிர் காயவேண்டாமே....

மனோகணேசன்... இப்போது, எந்த அமைச்சுப் பதவியிலும், இல்லை என நினைக்கின்றேன் விசுகு.
அத்துடன்.... அவருக்கு, உள்ள உணர்வு தன்னும்.. 
ஒரு நாட்டின் பிரதமருக்கு சமமான (சம்பளத்திலும்) எதிர்க்  கடசித் தலைவராக உள்ள..
சம்பந்தனுக்கு, அவரின் அல்லக்கை சுமந்திருக்கும் இல்லையே... என்பதுதான்...  கவலை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

மனோகணேசன்... இப்போது, எந்த அமைச்சுப் பதவியிலும், இல்லை என நினைக்கின்றேன் விசுகு.
அத்துடன்.... அவருக்கு, உள்ள உணர்வு தன்னும்.. 
ஒரு நாட்டின் பிரதமருக்கு சமமான (சம்பளத்திலும்) எதிர்க்  கடசித் தலைவராக உள்ள..
சம்பந்தனுக்கு, அவரின் அல்லக்கை சுமந்திருக்கும் இல்லையே... என்பதுதான்...  கவலை.

உண்மை  தான்  சிறி

எனக்கும்  மிகவும் பிடித்த  அரசியல் தலைவர் மனோகணேசன் அவர்கள்

ஆனால்  அதை  சம்பந்தப்பட்ட  தனது சக  தமிழ்  அரசியல்வாதிகளிடம்  கூறி

தமிழர்களுக்கு  ஏதாவது  கிடைப்பதை  உறுதி செய்வதைவிடுத்து

தான் என்றால் என எமது புண்ணில் இவர் வேல் பாய்ச்சவதை  ஏற்கமுடியாது

ஏதோ  சிங்களம் வைத்துக்கொண்டு  தர மறக்கிறது

அல்லது  சர்வதேசம் பறித்து தந்துவிடும் என்பதெல்லாம் வெறும் புலுடா  தானே??

 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, விசுகு said:

உண்மை  தான்  சிறி

எனக்கும்  மிகவும் பிடித்த  அரசியல் தலைவர் மனோகணேசன் அவர்கள்

ஆனால்  அதை  சம்பந்தப்பட்ட  தனது சக  தமிழ்  அரசியல்வாதிகளிடம்  கூறி

தமிழர்களுக்கு  ஏதாவது  கிடைப்பதை  உறுதி செய்வதைவிடுத்து

தான் என்றால் என எமது புண்ணில் இவர் வேல் பாய்ச்சவதை  ஏற்கமுடியாது

ஏதோ  சிங்களம் வைத்துக்கொண்டு  தர மறக்கிறது

அல்லது  சர்வதேசம் பறித்து தந்துவிடும் என்பதெல்லாம் வெறும் புலுடா  தானே??

விசுகு... 
முன்பொருமுறை... மனோ கணேசன், முஸ்லீம்  மக்களுக்காக  பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த போது...
ஒரு முஸ்லீம், கட்சியினர்.... மனோ கணேசன், சுன்னத்து செய்து விட்டு இதனை பேச வேண்டும் என்று, கேலி பேசினார்கள். 
அதற்கு.... தமிழ் எதிர்க்  கட்சித் தலைவர்... சம்பந்து, சுமந்து உட்பட... மிச்ச தமிழ் கோஸ்டிகளெல்லாம், ஒரு வார்த்தை பேசவில்லை. 
அதன் பின்...  தனக்கென்ன வந்தது.. என்று அவர் சும்மா.... இருக்காமல், தன்னால்... முடிந்ததை செய்து கொண்டு இருக்கின்றார்.

அடுத்த தேர்தலிலும் கூட..... மனோ கணேசனுக்கு... வடக்கு, கிழக்கு மாகாணத்தை சேர்ந்த.....

கொழும்பு தமிழ் வாக்காளர்களின்,   வாக்குகள்.. அவருக்கு கிடைக்கும் என்பதில், சந்தேகமில்லை.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 38

முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதென்பது........

நான் வரும்போது சிலர் கறுப்புக் கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் சென்று உங்கள் பிரச்சினை தொடர்பாக பேசித் தீர்வு காண்போம் வாருங்கள் எனறேன்.

மறுத்தனர்.

இப்போதே தீர்வைக் கூறுங்கள் என்றனர்.


ஆர்ப்பாட்டக்கார்களுக்கு நான் ஒன்றைக் கூறுகின்றேன்.

நீங்கள் உயர்த்தவேண்டியது கறுப்புக் கொடிகளை அல்ல.

சமாதானத்திற்கான வெள்ளைக் கொடிகளையே.
சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 
யாழ்.இந்துக்கல்லூரியில்.

சமாதானத்துக்கான வெள்ளைக்கொடி ஏந்தி

உங்களிடம் வந்தவர்களை காணவில்லை என்று தேடித்தான் கறுப்புக்கொடி....

திரும்பவும் முதலில் இருந்தா.....???.

Edited by விசுகு

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 39
 
தாயகத்தில் கடன் தொல்லைகளால் குடும்பமாக தற்கொலை
 
இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்.
போருக்கு பின்னரான காலப்பகுதியில் வங்கிகளும் வெளிநாட்டு முகவர்களும் தனியாரும்
தமது வைப்பிலிலுள்ள பணத்தை
எப்படியாவது போரின் பின் செய்வதறியாது நிற்கும் மக்களின் பணத்தேவையை குறிவைத்து கொடுத்த போதே
அந்த மக்கள் இவர்களின் வலைக்குள் மாட்டிக்கொண்டார்கள்.
 
இன்று தாயகப்பகுதியில்
ஒவ்வொரு மக்களும் மில்லியன் கணக்கான பணத்தை பெற்று
கடனாளிகளாக ஆகி இருக்கிறார்கள்.
 
கொடுத்தவர்கள் தவணைமுடிய
அல்லது தமது பணத்தை இதற்கு மேல் இவர்களிடம் விடமுடியாது என்றநிலைக்கு வரும் போது?????
 
இவ்வாறான அநியாயச்சாவுகள் இனி அடிக்கடி செய்தியாகும் ......
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 40
 
கத்தலோன் (Catalogne) தன்னை தனிநாடாக விடுவித்துள்ளது.
மகிழ்ச்சியான செய்தி மட்டுமல்ல ஈழத்தமிழருக்கு.
 
விடுதலை என்பது ஒரு நீர் ஊற்று.
அதை எவரும் நிரந்தரமாக அடைத்துவிடமுடியாது.
 
ஈழத்தமிழரை நரித்தனமாக முதுகில் குத்தி அழிக்க முயன்று
அதுவும் தமிழரின் தியாகத்தின் முன் வீரத்தின் முன் தோற்றுவிட
தாங்கள் வகுத்த அத்தனை தர்மங்கள் சட்டங்கள் விதிகளையும் மீறி
தமக்குள் எதிரிகளானாலும் தனி நாடு கேட்டால் இது தான் கதியென
எமக்கு மட்டுமல்ல தமக்குள் உரிமை கேட்கும் மக்களுக்கும்
எமது அகோர அழிவைக்காட்டி
பயமுறுத்திச்சொல்லி நின்றவர்கள் இவர்கள் தான்.
 
ஆனாலும் அவர்களையும் மீறி
இன்று அந்த நீறுற்று உடைத்து கிளம்புகிறது.
வரவேற்போம் நம்பிக்கையோடு.
அடுத்தது நாமாக இருப்போம்.
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 41
 
இலங்கையும் சிங்கப்பூர் கனவும்
 
இப்பொழுதெல்லாம் எதெற்கெடுத்தாலும் சிங்கப்பூராக வரப்போகின்றோம்
எமது நகரங்களையும் சிங்கப்பூராக்குவோம் என்ற கோசத்தை பார்க்கமுடிகிறது.
 
50 களில் இதே சிங்கப்பூரின் தந்தை சொன்னது :
இலங்கை மாதிரி நான் சிங்கப்பூரை கொண்டு வரணும் என்று.
 
அந்தாள் எடுத்த ஒரு முடிவு இன்று உலகுக்கு முன்னுதாரணமாக.
 
இலங்கை அந்த முடிவை எடுக்காததால்
இன்று உலகுக்கு முன்னால் சீரளிவுக்கு முன்னுதாரணமாக...
 
இப்பவும் ஒன்றும் காலதாமதமில்லை... ஆனால் தலைவர்கள்......???
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 42
 
சீமானுக்கு பிறந்ததின வாழ்த்து
 
சீமானுக்கான வாழ்த்தும் ஆதரவும் நன்றி மறக்கலாகாது என்பதற்காகத்தான்
 
எமது மக்களின் அழிவை
என்னைவிட அதிகம் பேசியவர்
அநேக மக்களிடம் கொண்டு சென்றவர் சீமான்
 
2009க்கு பின் திராவிட கட்சிகளால் இனி முடிந்தது ஈழமக்களது எழுச்சி
இனி நாம் வாலையும் தலையையும் காட்டி ஆட்சியை கொண்டு செல்வோம் என்ற நயவஞ்சகத்துக்கு
ஆணி அடித்தவர் சீமான்
 
தமிழர்கள் ஒன்று படாமல்
தமிழகம் தமிழர் கையில் வராமல்
இந்திய ஓநாய் எம்மை வாழவிடப்போவதில்லை
அதை தற்போது ஏற்படுத்தாவிட்டாலும்
ஒரு கணக்கெடுக்கப்படும் சக்தியாக உருவாகி இருக்கிறார்கள் நாம் தமிழர்கள்.
 
வாழ்க வளமுடன் சீமான்
நாம் தமிழர்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 43

லக்‌ஷ்மி என்கிற குறும்படம்

ஊரில் என்றால் இதற்கு பெயர் இக்கரைக்கு அக்கரை பச்சை

இதையே ஆண் செய்திருந்தால் அதற்கு பெயர் சின்னவீடு

ஆனாலும் எல்லோரும் எழுதுவது போல அந்த பெண்ணின் நடிப்புக்காக பார்க்கலாம்..
டொட்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 44
 
மீண்டும் சீமான் பற்றி அதிகம் பேசப்படுகிறது. எழுதுபவர்கள் யாரென்று பார்த்தால் சீமான் ஒன்றுமே இல்லை அவரை கணக்கெடுக்கவே தேவையில்லை என்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
 
ஒன்று மட்டும் எழுதலாம்
சீமானது பேச்சுக்களை வரிக்கு வரி உற்று நோக்கி
அவரது ஒவ்வொரு சொல்லுக்கும் அர்த்தம் பிடிப்பவர்கள்
 
மேடைகளில் எழுதிச்செல்லாமல் பேசியதுண்டா??
 
பேட்டிகளுக்கு அதுவும் அதி சாமானியர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துண்டா??
 
செய்து பாருங்கள்
சீமானையும் அவ்வாறே தாண்டிச்செல்லுங்கள்
 
அதுக்குத்தான் தலைவர் அதிகம் பேசுவதில்லை
பேட்டிகள் கொடுப்பதில்லை
வருடத்துக்கு ஒரு உரையுடன் நிறுத்திவிடுவார்
 
அதிலிருந்தாவது சிலவற்றை புரிந்து கொள்ள முயல்வோம்
 
சீமான் செய்வது கத்துவது தான்
அதுதான் அவரது கடமையும் தேவையும் கூட.
 

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 45

புங்குடுதீவு தொடர்பான விபரங்கள் - 2017

Page0001.png

Page0002.png

Page0003.png

நன்றி : மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம்.

 

 

Edited by விசுகு

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 46
 
 
மனச்சாட்சி உள்ளோர் கவனத்துக்கு மட்டும்
புலம்பெயர் தேசங்களில் மாவீரர் நாள்
 
இந்த முறை என்னவோ தெரியவில்லை.
கொத்து ரொட்டிக்கடை அடிபாடு இல்லாமல் போய் பேச்சாளர்கள் பெருமளவில் விவாதிக்கப்படுகிறார்கள்
 
கொத்து ரொட்டிக்கு லைக் விழுவது லைக் குறையுது போல.
 
பேச்சாளர்களாக யாரை அழைப்பது என்பதை நிகழ்வை நடாத்துபவர்களே தீர்மானிக்கணும்.
அவை ஒரு அமைப்பாக இயங்குபவை.
எனவே தனி நபர்களின் முடிவுகளாக அவை இருக்கமாட்டா.
உண்மையிலேயே அவற்றை விமர்சிப்பது அல்லது மாற்றங்களை கொண்டு வருவது நோக்கமென்றால்
நாமும் அதன் செயற்குழுவில் அடுத்த வருடமாவது இருக்க முயற்ச்சிப்போம்.
 
புலத்தில் மாவீரர் நாளை செய்து முடிப்பதென்பது அவ்வளவு சுலபமானதல்ல.
அதற்காக பல நூற்றுக்கணக்கானவர்கள் செய்யும் பணிகளும் நாட்களும் தியாகங்களும் எண்ணில் அடங்கா.
உலகிலேயே மிக அசிங்கமான வேலை என்பது
எதுவும் செய்யாது இருந்து கொண்டு
ஏதாவது செய்பவரை விமர்சிப்பது
அல்லது தடக்கி விடுவது தான்.
 
நன்றி.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 47
 
கூட்டமைப்பின் இன்றையநிலை
 
இன்று ஒவ்வொரு கட்சியாக கூட்டமைப்பிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றன.
மிக தவறான அதே நேரம் சிலரின் திட்டமிட்ட காய் நர்த்துதல்களுக்கு இவர்களே பலியாகும் செயல் இது.
 
கூட்டமைப்பை தாங்கள் கைப்பற்றவேண்டும் என்பதும்
தாங்கள் மட்டுமே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக வீட்டுச்சின்னத்துடன் தமது ஆட்சியை தொடரவேண்டும் என்பதும்
தமிழரசுக்கட்சியின் 2009க்கு பின்னரான திட்டமிடலின் தொடர்ச்சி தான் இன்றைய நிலமை.
 
அவர்களது சூழ்ச்சிக்கு இன்று
ஒவ்வொரு கட்சிகளாக வெளியேறி வலுவூட்டுகிறார்கள்.
 
உண்மையில் இவர்கள் தான் தமிழரசுக்கட்சியை
கூட்டமைப்பிலிருந்து தூக்கி எறிந்திருக்கணும்.
அதுவே தமிழ் மக்களுக்கு நன்மை செய்வதாகவும்
தமிழ் மக்களை சூழ்ச்சியிலிருந்து காப்பதாகவும் இருந்திருக்கும்
 
ஆனால் மாறாக இவர்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி
தமிழ் மக்களை சில காலத்துக்கு தமிழரசுக்கட்சியிடம் அடிமையாக்குகிறார்கள்
வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய செயல் இது.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 48
 
 
வை. கோ அண்ணாவின் கால மாற்றம்?
 
 
வை. கோ அவர்கள் திமுக வை விட்டு வெளியேற்றப்பட்டபோது சொன்னது
மகனை முதல்வராக்க என்னை வெளியேற்றுகிறார் கலைஞர் என்று.
 
இன்று அதே வை. கோ அவர்கள் கருணாநிதியின் மகனை தானே முதல்வராக்கியே தீருவேன் என்கிறார்.
 
பாவம் அவர் அரசியல் தெரியாது முழிக்கிறார்
அல்லது விழுகிறார்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 48
 
 
வை. கோ அண்ணாவின் கால மாற்றம்?
 
 
வை. கோ அவர்கள் திமுக வை விட்டு வெளியேற்றப்பட்டபோது சொன்னது
மகனை முதல்வராக்க என்னை வெளியேற்றுகிறார் கலைஞர் என்று.
 
இன்று அதே வை. கோ அவர்கள் கருணாநிதியின் மகனை தானே முதல்வராக்கியே தீருவேன் என்கிறார்.
 
பாவம் அவர் அரசியல் தெரியாது முழிக்கிறார்
அல்லது விழுகிறார்

எனது கருத்தின்படி வைகோ ஒரு அரசியல் வியாபாரி என்றே நினைக்கின்றேன்.

இவர் மக்கள் நல அரசியல்வாதியாக இருந்திருப்பாராயின் கட்சித்தாவல்களுக்கு சந்தர்ப்பமேயிருந்திருக்காது.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 49
 
விட்டுக்கொடுத்தல்
 
எதை யாருக்கு எதற்காக விட்டுக்கொடுப்பது என்பது மிக மிக முக்கியம்
 
பிழையானவர்களுக்கு விட்டுக்கொடுக்கத்தொடங்கினால்
உனது தலங்களும் அவர்களது சுடுகாடாகும்
 
இன்றைய தலைவர்களுக்கு பேசக்கூட தைரியம் இல்லை
 
இதனால் தான் தேசியத்தலைவர்
எதை யாருக்கு எதற்காக விட்டுக்கொடுப்பது என்பதில் மிக மிகத்தெளிவாகவும்
எம் பாதுகாப்பை நாமே வைத்திருக்கணும் என்பதில் மிக மிக உறுதியாகவும் இருந்தார்.
அதுவே இன்றும் உணரப்படுகிறது.
தீர்க்கதரிசி தான்.

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 50
 
ஆழிப்பேரலை எம் மக்களை அழித்த துயரநாள் இன்று.
 
அழிக்கப்பட்டது எமது மக்களின் உயிர் உடமைகள் மட்டுமல்ல
எமது பாதுகாப்பும் பலமும் தான்.
இதை இன்றுவரை உணராதவர்கள் பலருண்டு எம்முள்.
 
ஆழிப்பேரலை நடந்து 72 மணித்தியாலயத்துள்
அவ்வளவு துயரங்களையும் இழப்புக்களையும் அழிவுகளையும் தாண்டி
வல்லரசு நாடுகளே செய்து முடிக்கமுடியாத துப்பரவு சுகாதாரம்
மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தலை முடித்து
தலை நிமிர்ந்து நின்றது எமது பலமான அமைப்புக்களும் தலைமையும்.
 
அப்பொழுது தான்
முன்னைவிட அதிகமாக
அழிக்கப்படவேண்டியவர்கள் இவர்கள் என முடிவெடுத்தது சர்வதேசம்........☹️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.