Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் மனிதப் புதைகுழி: நீதவானுக்கு எதிராக நீதிச்சேவை ஆணைக்குழுவில் மனுத்தாக்கல்

Featured Replies

மன்னார் மனிதப் புதைகுழி: நீதவானுக்கு எதிராக நீதிச்சேவை ஆணைக்குழுவில் மனுத்தாக்கல்

மன்னார் மனிதப் புதைகுழி: நீதவானுக்கு எதிராக நீதிச்சேவை ஆணைக்குழுவில் மனுத்தாக்கல்
 
திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி வழக்கில் மன்னார் மாவட்ட நீதவானுக்கு எதிராக விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் நீதவான் ஆசீர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஐா, பாதிக்கப்பட்டவர்களுக்கு சார்பாக செயற்படுவதாக தெரிவித்தே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீதவான் ஆசீர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஐா குற்ற விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாகவும், இந்த வழக்கை விசாரணை செய்த முன்னாள் நீதவானின் செயற்பாடுகளுக்கு பிறழ்வான விடயங்களை இவர் மேற்கொள்வதாகவும் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் இந்த வழக்கை பிறிதொரு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு குற்ற விசாரணைப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் அடிப்படையில், இன்று பிறப்பிக்கப்படவிருந்த கட்டளையை ஒத்தி வைத்துள்ளார் நீதவான் கிரேசியன் அலெக்ஸ்ராஐா.

இதேவேளை, இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் தமது நிலைப்பாட்டை நீதவான் இன்று திறந்த நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பகுதியிலிருந்து மாந்தை பகுதிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான அகழ்வுப் பணிகளை மேற்கொண்ட போது, கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து, நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது 84 மனித மண்டையோடுகளும் மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களின் பாதுகாப்புக் கருதி, நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, பகுப்பாய்வு செய்யும் வரை அவை அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

மனித எச்சங்களை பகுப்பாய்வு செய்யும் இடம், நிறுவனம் மற்றும் மனிதப் புதைகுழி தொடர்பில் இன்று கட்டளை பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், நீதி சேவை ஆணைக்குழுவிற்கு செய்யப்பட்டுள்ள மனுவின் அடிப்படையில், ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய அடுத்தகட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதவான் ஆசீர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஐா அறிவித்துள்ளார்.

http://newsfirst.lk/tamil/2017/07/மன்னார்-மனிதப்-புதைகுழி-6/

On 7/29/2017 at 0:55 AM, நவீனன் said:

நீதவான் ஆசீர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஐா குற்ற விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாகவும், இந்த வழக்கை விசாரணை செய்த முன்னாள் நீதவானின் செயற்பாடுகளுக்கு பிறழ்வான விடயங்களை இவர் மேற்கொள்வதாகவும் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் இந்த வழக்கை பிறிதொரு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு குற்ற விசாரணைப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையின் நீதித்துறை எவ்வளவு கறை படிந்தது என்பதற்கு இதற்கு மேலும் சான்றுகள் வேண்டுமா? சிங்களர்களை கொண்ட எந்தவொரு அரச துறையும் தமிழர்களுக்கு நியாயங்களை வழங்காது.

சிங்கள அரச பயங்கரவாத இயந்திரத்தின் குற்றப்புலனாய்வுப் பயங்கரவாதிகள் அரச இனப்படுகொலையை மறைக்க படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மைகளை மறைக்க முயன்ற சிங்கள-பௌத்த குற்றப்புலனாய்வுப் பயங்கரவாதிகளின் செயலுக்கு நீதிபதியின் நேர்மையான செயற்பாடு தடையாக இருப்பதால் சிங்கள-பௌத்த குற்றப்புலனாய்வுப் பயங்கரவாதிகள் இந்த வழக்கை வழமைபோல் சிங்கள-பௌத்த கொலைக்காரர்களுக்கு சாதகமாக தீர்ப்புக்களை கூறிவரும் அனுராதபுரம் நீதிமன்றுக்கு வழக்கை மாற்ற நினைக்கிறார்கள்!

நடுநிலையான நீதிபதிகளைக் கொண்ட சர்வதேச நீதிமன்ற விசாரணைகள் மட்டுமே தமிழர்களுக்கு நீதி, நியாயத்தை வழங்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

நடுநிலையான நீதிபதிகளைக் கொண்ட சர்வதேச நீதிமன்ற விசாரணைகள் மட்டுமே தமிழர்களுக்கு நீதி, நியாயத்தை வழங்கும்

இதனை நாங்களும் கடந்த 8 வருசமாச் சொல்லிக்கிட்டு தான் வாறம். சர்வதேசத்தால்.... அடிக்கிறவன்.. கொல்லுறவனோடு.. நல்லிணக்கமாக வாழ் என்று கட்டாயப்படுத்தும் கொடுமை தான் தமிழர்களுக்கு வழங்கப்படும் திணிப்பு நீதியாக இருந்து வருகிறது. இந்தளவு மோசமாக இருக்குது சர்வதேசத்தின் நீதி நிலைமை. இதில.. எங்க போய் யாரட்ட நீதி கேட்கிறது...சிங்களவன்.. பூந்து விளையாடுறான். tw_angry::rolleyes:

Edited by nedukkalapoovan

28 minutes ago, nedukkalapoovan said:

இதனை நாங்களும் கடந்த 8 வருசமாச் சொல்லிக்கிட்டு தான் வாறம். சர்வதேசத்தால்.... அடிக்கிறவன்.. கொல்லுறவனோடு.. நல்லிணக்கமாக வாழ் என்று கட்டாயப்படுத்தும் கொடுமை தான் தமிழர்களுக்கு வழங்கப்படும் திணிப்பு நீதியாக இருந்து வருகிறது. இந்தளவு மோசமாக இருக்குது சர்வதேசத்தின் நீதி நிலைமை. இதில.. எங்க போய் யாரட்ட நீதி கேட்கிறது...சிங்களவன்.. பூந்து விளையாடுறான். tw_angry::rolleyes:

தமிழனும் தனது எதிரிகளுக்கு எதிராக மதிநுட்பத்துடன் பூந்து விளையாடுவதே இப்போதிருக்கும் வழியாக தோன்றுகிறது.

:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.