Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்த முருகேசனாரும் ஆறுமுகநாவலரும்

Featured Replies

கந்த முருகேசனாரும் ஆறுமுகநாவலரும் - இளங்கோ (இலண்டன்)

இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டியிருந்தது. பிறப்பினால் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிக்கும் சாதி என்பது மிகக் கேவலமான ஒன்று. ஆனால் ஈழத்தமிழர்களின் சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான விடுதலைப் போர் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சிங்கள அரசு தமிழர்களை ஈவிரக்கம் அற்று படுகொலை செய்துவரும் இன்றய கண்ணீர் யுகத்தில் சாதியத்திற்கு எதிரான இந்தப் பதிவு தேவையா என்பதே எனது யோசனையின் காரணம்.

ஒரு காலத்தில் ஈழத்தில் மிகக் கொடுமையான சாதிய அடக்குமுறை இருந்தது. இலங்கை பொதுவுடைமைக் கட்சிகள் அதற்கு எதிராகப் போராடியிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் கொடுமையை தணித்திருக்கிறது. சாதியத்தையும் சீதனத்தையும் தமிழீழ அரசு சட்டம் கொண்டு வந்து ஒழித்தது மிக நல்ல முயற்சி.

2002 ஆம் ஆண்டு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த மாநிலத்தின் தமிழ் கூடல் மாநாட்டின் போது தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்த விடுதலைச் சிறுத்தைகளின் பொதுச் செயலாளர் திருமாவளவன் அவர்கள் பேசும்போது தமிழீழத்தில் சாதி இருக்குமா என்ற தனது ஆதங்கத்தை முன்வைத்தார். இறுதியாக பேச வந்த கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் திருமாவளவனின் கருத்துக்கு பதிலளிக்கும் போது எங்கள் தமிழீழத்தில் நிச்சயமாக சாதி இருக்காது அப்படி சாதி இருக்கும் என்றால் இந்தத் தமிழீழமே எங்களுக்குத் தேவையில்லை என உறுதியாகக் கூறினார்.

எனவே நாளை மலரப்போகும் தமிழீழத்தில் சாதி இருக்காது என நாங்களும் உறுதியாக நம்புகின்றோம். அதே வேளை புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் இன்றளவும் சாதிப் பற்றுடன் வாழ்வது வியப்பையும் வேதனையையும் அளிக்கிறது. சாதிய நஞ்சு இன்றைய இளைய தலைமுறையினரிடமும் பரவியிருப்பதை நான் உணர்ந்து இருக்கிறேன். எனது தோழி ஒருத்தி தான் காதலிக்கும் ஆண் நல்ல சாதியா என என்னிடம் கேட்ட போது பெற்றவர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு தொற்றும் சாதி நோயின் கொடூரத்தை உணர முடிந்தது.

சாதியத்தின் தோற்றுவாய் எது?

நிச்சயமாக இது இந்து மதம் கற்பித்த இழிவேயன்றி வேறொன்றும் இல்லை.

கிறிஸ்தவமோ, இஸ்லாமோ பிறவி ஏற்றத் தாழ்வுகளைக் கற்பிக்க வில்லை. பிறவி ஏற்றத்தாழ்வைக் கற்பித்த ஒரேயொரு மதம் இந்து மதம் தான். பார்ப்பனியம்தான் அதனை இயக்கும் கருவி.

சைவம் என்றால் என்ன?

பார்ப்பனியத்தின் தமிழ் வடிவம்தான் அது.

ஈழத்தில் ஆதிக்க சாதியினராக இருக்கும் வெள்ளாளர்கள் யார்?

வேறுயாருமில்லை பார்ப்பனியத்தின் தமிழ்க் காவலர்கள்தான் அவர்கள்.

இங்கு ஒரு விடயத்தை வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். வெள்ளாள சமூகத்தில் பிறந்தாலும் அந்த சாதிப் பற்றை அறவே ஒழித்து சமதர்ம நோக்கோடு வாழும் உயர்ந்த உள்ளங்கள் இந்த வட்டத்தில் அடங்கமாட்டார்கள். மாறாக தங்களை உயர் சாதிக் குடிகள் என்றும் பிராமணர்களுக்கு அடுத்தவர்கள் என்றும் சாதி வெறியைக் காட்டுபவர்களே இங்கு விமர்சிக்கப் படுகிறார்கள்

அப்படி என்றால் ஆறுமுக நாவலர் யார்?

பார்ப்பனச் சமூகத்தில் பிறந்து நால் வருணக்கோட்பாட்டைக் கட்டிக்காத்த சாங்கராச்சாரி போன்ற இந்து வெறியர்களுக்கு சற்றும் குறையாத வெள்ளாள சமூகத்து சைவ வெறியர்தாம் இந்த ஆறுமுக நாவலர். ஆனால் இந்து மதமோ வெள்ளாளர்களுக்கும் சூத்திரப் பட்டம்தான் கட்டுகிறது. இதைப் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத நாவலர் வெள்ளாளர்களுக்கு சற்சூத்திரர்கள் என்ற புதிய கௌரவப் பட்டத்தைக் கொடுத்தார். எரிகின்ற விளக்கில் எண்ணையை ஊற்றுவதுபோல் நாவலரின் சாதி வெறி வெள்ளாளர்களின் ஆதிக்கத்தை தூண்டி விட்டது.

ஆதிக்க சாதியினரான வெள்ளாளர்களின் கொடுமை தாங்காமல் அடக்குமுறைக்கு உள்ளாக்கப் பட்ட தாழ்த்தப் பட்ட பிற சமூகத்தினர் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறினர். அப்போதும் நாங்கள் எல்லோரும் சமம் என்று அந்தச் சாதி வெறியரால் கூற முடியவில்லை. நாவலர் கிறிஸ்தவத்தை மட்டும் எதிர்க்கவில்லை அன்பே சிவம் என்ற தத்துவத்தைப் போதித்து வந்த சமதர்மத் துறவி வள்ளலார் இராமலிங்க அடிகளாரையும் மூர்க்கமாக எதிர்த்து வந்தார். இதலிருந்து நாவலருக்கு சைவப் பற்றைக் காட்டிலும் சாதி வெறியே மேலோங்கி நின்றிருந்தது என்பது தெளிவாகிறது. இந்த நாவலரை வெள்ளாள மேட்டுக்குடியினர் கோபுரத்தில் இருத்தி வைத்துக் கொண்டாடினர்.

உண்மையில் தமிழ்ப் பண்பாடு என்பது பிறவி ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரானது. வள்ளுவர், ஒளவையார், தமிழ்சித்தர்கள் போன்றவர்கள் சாதியத்தை மிகக் கடுமையாக எதிர்த்தார்கள். அனால் இந்த பண்புகள் சிறிதும் இல்லாமல் இருந்த ஆறுமுக நாவலரை தலையில் தூக்கி வைத்த ஆதிக்க வர்க்கம், சமத்துவத்தை இறுதிவரை கடைப் பிடித்து உண்மைத் தமிழராக வாழ்ந்த ஒர் அறிஞரை வரலாற்றிலிருந்து மறைத்தது. அவர் வேறு யாரும் இல்லை அவர்தான் தமிழ் தாத்தா என்று அழைக்கப்பட்ட கந்த முருகேசனார் அவர்கள்

தென் புலோலியில் பிறந்தவர். ஆறுமுக நாவலரின் சாதியக் கோட்பாடுகளை மறுத்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலரின் கருத்தை வலியுறுத்தினார். மனிதனை மனிதானாக மதிக்க வேண்டும் அதுதான் தமிழர் பண்பாடு என்று கூறி உண்மையான மெஞ்ஞானத் துறவியாக வாழ்ந்து வந்தார். அவர் குடியிருந்த இடம் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய சோலை. காக்கைக் குருவி எங்கள் சாதி கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று பாரதி பாடியதைப் போல் விலங்குகளிடத்திலும் அன்பு காட்டி அவைகளை பராமரித்து வந்தார்.

அந்தச் சோலையில் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தை நிறுவி மாணவர்களுக்கு தமிழ் நெறி கற்பித்து வந்தார். ஏராளமான தமிழ் இலக்கியச் செய்யுள்களையும், இலக்கண நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மிகச் சிறந்த தமிழ்ப் புலவர் ஆனால் தனது சமத்துவக் கொள்கைகளுக்காக பல விதமான எதிர்ப்புக்களுக்கு உள்ளானார். இருப்பினும் தனது மனிதநேயக் கொள்கையிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. இப்படி ஒரு பெருமகனார் நமது ஈழத்தில் வாழ்ந்திருக்கிறார் என்பதை நினைக்கும் போது மனம் குளிர்கிறது. அவரை ஈழத்து வள்ளலார் என்று அழைப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

ஆறுமுக நாவலர் இணையற்ற தமிழ்ப் புலமை கொண்டவர்தான் ஆனாலும் அவரது அப்பட்டமான உயர் சாதி வெறி அவரை மிகக் கீழான இடத்திற்கு தள்ளி விட்டது.

Edited by சபேசன்

  • தொடங்கியவர்

சைவசமயிகள் என்று பெயர் இட்டுக்கொண்டு, அநேக மூடர்கள், உயிர்ப்பலி ஏற்கிற துட்ட தேவதைகளையும், காடன், மாடன், சுடலைமாடன், காட்டேறி, மதுரை வீரன், கறுப்பன்,பதினெட்டாம்படிக் கறுப்பன், சங்கிலிக்கறுப்பன், பெரிய தம்பிரான், முனி, கண்ணகி, பேய்ச்சி முதலானவர்களையும் வணங்குகிறார்கள். இந்தியாவில் அநேக மூடர்கள் முகமதியருடைய பள்ளிவாசலைச் சேவிக்கிறார்க்ள். இலங்கையில் அநேக மூடர்கள் ரோமன் கத்தோலிக்கருடைய மரியை கோயிலுக்குக் காணிக்கை செலுத்துகிறார்கள். இவர்கள் எல்லாருஞ் சிவத்துரோகிகள்; இவர்களே அஞ்ஞானிகள்.

சைவசமயத்தைத் தமிழ்ச் சமயம் என்றும், சைவ சமயக் கோவிலைத் தமிழ்க் கோயில் என்றும், அறிவில்லாத சனங்கள் வழங்குகிறார்கள். தமிழ் என்பது ஒரு சமயத்தின் பெயரன்று; ஒரு மொழியின் பெயர்.

இது ஆறுமுகநாவலரின் சைவ சமயம் என்று நூலில் இருந்து சில பகுதிகள்

  • தொடங்கியவர்

31.போசன பந்திக்கு யோக்கியர் ஆவார் யாவார்?

மதுபானமும், மாமிச போசனமும் இல்லாதவராகவும், சமசாதியாராயும், ஆசாரம் உடையவராயும் உள்ளவர்.

32.எவர்கள் இடத்திலே போசனம் பண்ணல் ஆகாது?

தாழ்ந்த சாதியார் இடத்திலும், கள்ளுக் குடிப்பவர் இடத்திலும், மாமிசம் புசிப்பவர் இடத்திலும், ஆசாரம் இல்லாதவர் இடத்திலும் போசனம் பண்ணல் ஆகாது.

33. இவர்கள் காணும்படி போசனம் பண்ணலாமா?

போசனம் பண்ணல் ஆகாது.

ஆறுமுகநாவலரின் சைவ வினா விடை நூலில் இருந்து ஒரு பகுதி

ஐயா தமிழ் தாத்தா கந்தமுருகேசனாரிடம் தமிழ்கற்ற அவரது மாணவர் தனது வலை பதிவிலே கந்த முருகேசனாரைப்பற்றி நிறையத் தகவல்களை எழுதியிருக்கிறார்

Edited by navam

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி கற்றவன் எல்லாம் கல்வி பெற்றவன் என்றாகிவிட முடியாது மிஸ்டர் சபேசன். சிலவேளை வாத்தியாரட்ட அடிவாங்கின கோவத்தில இணையத்தில என்ன குப்பையும் எழுதலாம் என்றதுக்காக கண்டவன் போனவன் எல்லாம் எழுதிறதை கல்வி அறிவால எழுதிறது என்று காட்ட முடியாதுங்கோ..! எழுத்தின் தன்மையை வைத்து எழுத்தாளரை இனங்காண முடியும்.

மிஸ்டர் இளங்கோ வழமையான தனது சைவ விரோத குணத்தோட ஆறுமுகநாவலரை அணுகி இருக்கிறார். பாவம் அவருக்குப் புரியல்ல ஊருக்கு வந்த பிரித்தானியனே ஆறுமுகநாவலரின் திறமையை மெச்சி இருக்கிறான். இப்ப நீங்கள் எல்லாம் பிரித்தானியா வந்து காங் வைச்சு செய்யுற தொண்டிருக்கே அது போல பிரபல்யத்தை அவர் உண்டு பண்ணேல்லத்தான். அதுக்காக...சாதியை அவர் பெயரை வைச்சுத்தான் காக்க வேணும் என்றது வேடிக்கையா இருக்குது. பாவம் அந்த மனிசன் இறந்து பல தசாப்தங்கள் கடந்த பின்னும் சாதி இருக்குது.. ஆறுமுகநாவலர் செய்த பல நற்பணிகள் இருக்க சாதி பார்த்தது மட்டும் முன்னால தூக்கிப் பிடிக்கக் காரணம்.. சாதி அழிப்புக்காக இல்ல பத்திரப்படுத்தலுக்கா..?! :unsure::rolleyes::rolleyes:

உண்மையான தமிழ் அடையாளத்தையும் தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சார விழுமியங்களையும் தமிழர் மெய்யியலையும் தேடிய அந்த மனிதர் தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் கந்த முருகேசனாராகும்.

தென் புலோலியை பிறப்பிடமாகக் கொண்ட அவர் ஆறுமுகநாவலரின் சற்சூத்திரக் கோட்பாட்டை நிராகரித்து ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதை வலியுறுத்தினார். ‘அன்பே சிவம்’ என்பது தான் அவரது மெஞ்ஞானமாக இருந்தது. ‘மனிதர்கள் எல்லோரும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு செலுத்தவேண்டும்’ என்றும் ‘ஒவ்வொரு மனிதனும்; அடுத்தவரை நேசிப்பதிலும் அடுத்தவர்களுக்குரிய மரியாதையை கொடுப்பதிலும் தான் மனிதம் என்ற சொல்லுக்குரிய அர்த்தம் வெளிப்படுகிறது’என்றும் கூறிவந்தார்.

மனிதனை மனிதன் பிறப்பைக் கொண்டு இழிவுபடுத்தும் இந்துத்துவ வர்ணக் கோட்பாட்டை கடுமையாக விமர்சித்த அவர், இது தமிழர்களதுஅடையாளமோ பண்பாடோ இல்லை என்றும் அடித்துச் சொன்னார்.

‘சாதி இரண்டொழிய வேறில்லை, சாற்றுங்கால்நீதி வழுவா நெறி முறையின்-மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி….’ என்பதே உண்மையான தமிழர் மரபு என்றும் வலியுறுத்தி வந்தார்.

“பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்இச்சை பல சொல்லி இடித்து உண்கை - சீச்சிவயிறு வளர்க்கைக்கு மானம் அழியாதுஉயிர் விடுகை சால உறும்” என்ற ஒளவையாரின் நல்வழி வெண்பாவை அவர் எப்போதும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு உதாரணமாகச் சொல்வதுண்டு.

இன்று தமிழ் தாத்தா கந்த முருகேசனார் என்று கேட்டால், அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ஒரு சிலரையும் அவருடைய உறவினர்களையும் தவிர மற்றவர்கள் தெரியாது என்றே செல்வர்கள். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சி மந்திகை பகுதியில் பருத்தித்தித்துறை யாழ்ப்பாணம் நெடுஞ்சாலை அருகே நிறுவப்பட்டள்ள அவரது சிலையும்,தென் புலோலியில் உபய கதிர்காமத்துக்கு அண்மையில் அவர் வாழ்ந்த வீடிருந்த பகுதிக்குச் செல்லும் கந்த முருகேசனார் வீதி என்ற பெயரும் தான் இன்று அவர் ஞாபகார்த்தமாக இருக்கின்றன.

ஏராளமான செய்யுள்களையும், இலக்கண நூல்களையும், தமிழர்; மெய்யியல் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளையும் அவர் எழுதிய போதிலும் அவை எதுவுமே வெளியே வரவில்லை. அவரது பெயர் யாழ்ப்பாணப் புலவர் மரபிலிருந்து திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்பட்டதைப் போல அவரது எழுத்துக்களும் யாழ்ப்பாண அதிகார வர்க்கத்தின் கருத்தியல் வறுமைக்கு இரையாகிவிட்டன.

தமிழ் மக்களின் அறிவுக் கண்ணை திறப்பதற்காக அவர் நடத்தி வந்த திண்ணைப் பள்ளிக் கூடத்தில் மூன்று மாதங்கள் கல்வி கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து.

அந்த மூன்று மாதங்களில் அவர் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் இப் போது 45 வருடங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் அதே வீச்சோடு என்னுள் ஆளமாகப் பதிந்திருக்கிறது.

அந்த அற்புதமான மனிதரை நான் சந்தித்த முதல் சந்திப்பே ஒரு சுவாரசியமான சந்திப்பாகும்.
அதாவது நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட 1962 ம் ஆண்டு மார்கழி மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை காலையில் எனது அம்மாவும் அப்பாவும் என்னை அந்த திண்ணைப் பள்ளிக் கூடத்தில் சேர்த்து விடுவதற்காக அழைத்துச் சென்றனர்.

புது உடுப்பு, புதுச் செருப்பு, புதுச் சிலேட்டு, புதுப் பென்சில், புதிய பாலபோதினி 3 ம் வகுப்பு தமிழ் புத்தகம், புதுப் புத்தகப் பை என்று எல்லாமே புதிதாக கிடைத்த சந்தோசத்தோடு நான் அப்பாவின் கையை பிடித்துக் கொண்டு உற்சாகமாக நடந்து சென்றேன்.

எங்கள் வீட்டிலிருந்து அந்தப் பள்ளிக்கூடம் ஒரு அரை மைல் தூரத்திலேயே இருந்தது.எழுவாக்கை எனப்படும் வயல் வெளியின் வடக்குப் பக்கத்தினுடாகவே இந்தப் பள்ளிக் கூடத்துக்கு செல்ல வேண்டும். (வல்லிபுரக் கோவிலுக்கு இந்த வயல் வெளியின் கிழக்கப் பக்கமாகச் செல்லவேண்டும்.) நாங்கள் சென்ற போது சூரிய மேலே வந்துவிட்டதால் அதிகாலையில் அந்த வயல் வெளிக்கு அப்பால் உள்ள ஆனை விழுந்தான் வெளியில் பார்த்த கொள்ளிவால் பேய்களின் பயம் இப்போது இருக்கவில்லை.

ஆனால் ‘அந்த புதுப் பள்ளிக் கூடத்தில் வாங்கில்லை அல்லது கதிரையில இருந்து படிக்க விடுவார்களோ? என்ற ஏக்கமும் கதிர்காமர் வாத்தியாரைப் போல யாராது வாத்தியார் என்னுடைய புது உடுப்பை வாழைத் தடலாலை அடிச்சி ஊத்தையாக்கிப் போடுவாரோ?’ என்ற பயமுமே அப்போது இருந்தது.

நாங்கள் அந்தப் பள்ளிக் கூடத்தை அண்மித்த போது… ‘அறங்செய்ய விரும்பு’ ‘ஆறுவது சினம்’ ‘இயல்வது கரவேல்’ ஈவது விளக்கேல்’ என்ற ஒளவையாருடைய ஆத்தி சூடியையும் ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’’ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்ற கொன்றை வேந்தனையும் அங்கு படிக்கின்ற பிள்ளைகள் உரத்த குரலில் கூட்டாகச் செல்வது காற்றில் மிதந்து வந்தது.

நாங்கள் அந்தப் பள்ளிக் கூடத்துக்காகச் சென்ற அந்த வீதியின் ஒரு திருப்பத்தில் மா மரங்கள் பால மரங்கள், தென்னை மரங்கள், பனை மரங்கள், கமுகு (பாக்கு) மரங்கள் வாழை மரங்கள் என்ற பல்வகை மரங்களும் செம்பரத்தை மணி வாழை ரோஜா மல்லிகை கனகாம்பரம் என்று நிறைய பூமரங்களும்; நிரம்பிய ஒரு சோலை இருந்தது. அந்தச் சோலையைத்தான் நான் படிக்கப் போகும் புதுப் பள்ளிக் கூடம் என்று எனது பெற்றொர் எனக்குக் காண்பித்தனர்.

‘பள்ளிக் கூடம் என்ற பெரிய கட்டிடங்கள் இருக்கும். கதிரை மேசைகள் இருக்கும்’என்று எண்ணிக்கொண்ட சென்ற எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.

அந்தச் சோலையின் நடுவே ஒரு பெரிய மால் என்ற சொல்லுகின்ற ஒரு ஓலைக் கொட்டகையும் அதற்கு அருகே ஒரு சிறு குடிசையும் இருந்தன. ஆங்காங்கே உயரமாக வளாந்திருந்த மாமரம் பலா மரங்களுக்கு இடையே சிறு சிறு வட்டக் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. அந்தக் குடில்களின் தரையில் கடற்கரை மணல் போடப்பட்டிருந்தது.அந்த மணலில் இருந்து தான் பிள்ளைகள் பாடம்படித்துக் கொண்டிருந்தார்கள். பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியைப் பாத்தவுடன் என்னுடைய ஏமாற்றம் இன்னும் அதிகரித்தது.

‘சே! இந்தப்பள்ளிக் கூடத்திலையும் நிலத்தில் இருந்துதான் படிக்க வேண்டி இருக்கிறதே!’ என்று நான் சலித்தக்கொண்டேன். ஆனால் எல்லோருமே நிலத்தில் இருந்து படித்ததை பார்த்த போது நான் எற்கனவே படித்துக் கொண்டிருக்கும் மந்திகை பள்ளிக் கூடத்தை விட பறவாயில்லை என்ற திருப்தி ஏற்பட்டது.

இதேவேளை அந்தப் பள்ளிக் கூடம் இருந்த அந்த சோலைக் காணிக்குள் அங்காங்கே தடுப்பு வேலிகள் போடப்பட்ட பகுதிக்கள் நான்கு ஐந்து மான்களும் பல முயல்களும் மேயந்துகொண்டிருந்தன..
இன்னொரு புறத்திலே பல மயில்களும் ஏராளமான புறாக்களும் பஞ்சவர்ணக் கிளிகள் உட்பட பல வகையான கிளிகளும் இருந்தன. இந்த மான்களையும் மயில்களையும் பஞ்சவர்ணக் கிளிகளையும்; நான் அதுவரை பாலபோதினி பாடப்புத்தகத்தில் இருந்த படங்களில் தான் பார்த்திருக்கிறேன். அவற்றையெல்லாம் நேரில் பாhர்த்த போது எனக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. எனது பெற்றோர் அந்த மிருகங்களையும் பறவைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னை அழைத்துக் கொண்டு அந்தச் சோலையின் நடுப்பகுதியில் இருந்த மாலை (பெரிய கொட்டகை) நோக்கிச் சென்றனர்.

அந்த மாலின் முன்பகுதியின் இரண்டு பக்கத்திலும் இரண்டு முளம் (ஏறக்கறைய ஒரு மீட்டர்) உயரத்தக்கு பெரிய விசாலமான மண்ணாலான திண்ணைகள் அமைக்கப்பட்டிருந்தன. வலது பக்க திண்ணையில் ஒரு பாய் விரிக்கப்பட்டு அதில் எராளமான ஏட்டுச் சுவடிகளும் பல புத்தகங்களும் வைக்கப்பட்டிருந்தன. இடது பக்கத் திண்ணையிலே மான் தோல் விரிக்கப்பட்டு அதன் மேல் தமிழ் தாத்தா என்று அழைகக்ப்பட்ட கந்த முருகேசனார் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.

நல்ல சிவந்த நிறம்.பஞ்சு போன்று வெள்ளையாக நரைத்த தலை மயிர். அதே நிறத்திலான நிண்டதாடி. இடுப்பில் மட்டும் நான்கு முள வேட்டி. நெற்றியல் தீருநீற்றுப் பூச்சு அகண்ட மர்பிலும் அடத்தியான சௌ;ளi முடி என்று அவரது தோற்றத்தையும் அவர் அமர்ந்திருந்த விதத்தையும் நான் முதல் முதலாக பார்த்த போது, ஒரு சில விநாடிகள் எனக்கு பயத்தில் நெஞ்சு அடைத்து, தொண்டைத் தண்ணிர் வற்றி, பேச்சோ அழுகையோ வராத ஒருவிதமான திகில் நிலைக்கு தள்ளப்பட்டேன்.

அம்மா எனக்கு அடிக்கடி கூறும் புராணக் கதைகளில் வரும் முனிவர்களுடைய ஞாபகம் தான் வந்தது. ‘புளிய மரத்தில் முனி இருக்கும், முனியடிக்கும் ஆட்களை கொண்டு பேயிடும்’ என்கின்ற கதைகளெல்லாம் எனக்கு அந்தக் கணத்தில் நினைவுக்கு வந்தது.

‘நான் குழப்படி செய்யிறதால அம்மாவும் அப்பாவும் பள்ளிக் கூடத்தக்கு என்று பொய் செல்லி முனியிட்டை பிடிச்சுக் கொடுக்கிறதுக்கு கூட்டிவந்திருக்கினம்’ என்று நினைத்து அம்மாவை கட்டிப் பிடித்துக்கொண்டு கண்ணீர்விட்டுக் கதற ஆரம்பித்தேன்.
‘ஐயோ நான் இனி மேல் குழப்படி செய்ய மாட்டன். என்னை முனியிட்டை பிடிச்சுக் கொடுக்காதையுங்கோ. ஐயா..ஐயா (அப்பாவை நான் ஐயா என்று தான் கூப்பிடுவது வழக்கம்) அம்மாவிட்டை சொல்லணை. என்னை பிடிச்சசுக் குடுக்க வேண்டாம் எண்டு. நான் இனிமேல் குழப்படியே செய்யமாட்டன்’ என்று நான் கதறின கதறலால் அங்கே பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்களும் மாணவர்களும் பாடத்தை நிறுத்திவிட்டு எங்களையே பார்த்தார்கள்.

“அப்பன் அழாதையடா அவர் முனி இல்லை. அவர் பெரிய வாத்தியார் .அவர் மனிசன் தான் பயப்பிடாதை. ஐயாவும் அம்மாவும் உன்Nhடை கூட இருக்கிறம்’ என்று அம்மா என்னை சமாதானப் படுத்தி எனது பயத்தை தெளிய வைக்க முயற்சித்தா.

கந்த முருகேசனாருக்கு நான் ஏன் அப்படி கத்தி அழுகிறேன் என்பது புரிவில்லை. அவர் எனது அப்பாவிடமும் அம்மாவிடமும் அதற்கான காரணத்தை கேட்டுத் தெரிந்து கொண்டதும் “பேய் பிசாசு முனி என்று பிள்ளையை நல்லா பயப்பிடுத்திப் போட்டியள். இப்படிச் சின்ன வயதிலேயெ அதுகளை பயப்பபடுத்தினால் எப்படி அதுகளுக்கு தன்னம்பிக்கை வரும்?” என்று அவர் அவர்களை கடிந்து கொண்டார்.
அத்தோடு என்னை தூக்கி தான் அமர்ந்திருந்த திண்னையில் இருத்தும்படி அம்மாவுச் சொன்னார்.

‘நான் மாட்டன்.நான் மாட்டன் என்னை விடுங்கோ’ என்று நான் அம்மாவை இன்னும் இறுக்கி கட்டிப்பிடித்துக் கொண்டு கத்தி அடம்பிடிக்க அவர் தனது உதவியாளை அழைத்து எனது வயதுள்ள இரண்டு பொடியளை கூட்டி வந்து தனக்கு பக்கத்தில் இருத்தும்படி கட்டளையிட்டார்.

அவர்கள் வந்து இருந்ததும் ‘இப்ப பாத்தியே உன்னை போல பொடியள் அவருக்குப் பக்கத்தில இருக்கிறாங்கள்;. நீயும் பயப்பிடாமல் ஏறி இரு” என்ற அம்மா தைரியம் சொல்ல, நான் அவவை கட்டிப்பிடித்த பிடியை விடாமல் கழுத்தை திருப்பி அந்தப் பொடியளைப் பாத்தேன் . கொஞ்சம்; பயம் குறைந்தது.

அதை தெரிந்து கொண்ட அம்மா மெதுவாக என்னைத் தூக்கி அந்தத்திண்ணையில் இருத்தினா. அழுகை நின்றாலும் விம்மல் நிக்காத நிலையில், நான் அவவின் கையை பிடித்தக் கொண்டு தலையை குனிந்தவாறு அமர்ந்து கொண்டிருந்தேன். கந்த முருகேசனாரை நிமிர்ந்து பார்க்க எனக்கு தைரியம் வரவில்லை.

அவர் மொதுவாக எனது கையை பிடித்து இழுத்து என்னத் தூக்கி தனது மடியில் இருத்திக் கொண்டார். எனக்கு மறுபடியும் பயம் அதிகமாகிவிட்டது. விம்மி விம்மி அழுமை பீறிட்டு வரும் போல் இருந்து.

அவர் என்னை தடவி “பயப்பிடாத உன்ரை அப்பாவும் அம்மாவும் பக்;கத்தில் தான நிற்கினம். எதுக்கு பயப்பிட வேணும்” என்று சொல்லி ஆறுதல் படுத்தியதுடன், தான் சாப்பிடுவதற்கு வைத்திருந்த முந்திரிகைப் பழத்தை எடுத்து எனக்கு ஊட்டி விட்டார்.

ஏறக்குறைய 10 நிமிடங்களுக்கு மேல் நடந்த இந்தச் சம்பவங்களை அங்கிருந்த ஆசிரியர்களும் மாணவர்களும் பாடம் படிப்பிப்பதையும் படிப்பதையும் விட்டு விட்டு பார்த்துக்கொண்டிருந்தனர்.

கந்த முருகேசனார் அவர்களை ஒரு அதட்டுஅதட்டி விட்டு என்னப் பார்த்து “சின்னப் பொடியனின் (எனது தந்தையின்; பெயர் அது) சின்னப் பொடியா! நாங்கள் பாடம் படிக்கலாமோ?” என்ற கேட்டார்.


---சிவா சின்னப்பொடி 

Edited by navam

  • கருத்துக்கள உறவுகள்

சைவசமயிகள் என்று பெயர் இட்டுக்கொண்டு, அநேக மூடர்கள், உயிர்ப்பலி ஏற்கிற துட்ட தேவதைகளையும், காடன், மாடன், சுடலைமாடன், காட்டேறி, மதுரை வீரன், கறுப்பன்,பதினெட்டாம்படிக் கறுப்பன், சங்கிலிக்கறுப்பன், பெரிய தம்பிரான், முனி, கண்ணகி, பேய்ச்சி முதலானவர்களையும் வணங்குகிறார்கள். இந்தியாவில் அநேக மூடர்கள் முகமதியருடைய பள்ளிவாசலைச் சேவிக்கிறார்க்ள். இலங்கையில் அநேக மூடர்கள் ரோமன் கத்தோலிக்கருடைய மரியை கோயிலுக்குக் காணிக்கை செலுத்துகிறார்கள். இவர்கள் எல்லாருஞ் சிவத்துரோகிகள்; இவர்களே அஞ்ஞானிகள்.

சைவசமயத்தைத் தமிழ்ச் சமயம் என்றும், சைவ சமயக் கோவிலைத் தமிழ்க் கோயில் என்றும், அறிவில்லாத சனங்கள் வழங்குகிறார்கள். தமிழ் என்பது ஒரு சமயத்தின் பெயரன்று; ஒரு மொழியின் பெயர்.

இது ஆறுமுகநாவலரின் சைவ சமயம் என்று நூலில் இருந்து சில பகுதிகள்

முட்டாள் மக்கள் அல்ல நீங்களே. சுய நிர்ணய உரிமைக்கான அடிப்படைகளில் மொழி மதம் கலாசாரம் தொடர்சியான நிலம் என்பன பாரம்பரியமாக இருந்திருக்க வேண்டும். தமிழர்கள் இனத்தவர்கள். வெறும் மொழி மட்டும் தமிழர்களுக்கு இனத்துவ அடையாளத்தைத் தராது.

உங்களுக்கு ஏலவே சொன்னது போல சைவம் பற்றிய அடிப்படை அறிவு எதுவுமே கிடையாது. தெரிஞ்சதெல்லாம் சமயத்துக்குள் பெரியார் போன்ற கிறுக்குகளால் செருகப்பட்ட தூசணங்கள் மட்டுமே..! :P :rolleyes::rolleyes:

Edited by nedukkalapoovan

முட்டாள் மக்கள் அல்ல நீங்களே. சுய நிர்ணய உரிமைக்கான அடிப்படைகளில் மொழி மதம் கலாசாரம் தொடர்சியான நிலம் என்பன பாரம்பரியமாக இருந்திருக்க வேண்டும். தமிழர்கள் இனத்தவர்கள். வெறும் மொழி மட்டும் தமிழர்களுக்கு இனத்துவ அடையாளத்தைத் தராது.

உங்களுக்கு ஏலவே சொன்னது போல சைவம் பற்றிய அடிப்படை அறிவு எதுவுமே கிடையாது. தெரிஞ்சதெல்லாம் சமயத்துக்குள் பெரியார் போன்ற கிறுக்குகளால் செருகப்பட்ட தூசணங்கள் மட்டுமே..! :P :rolleyes::rolleyes:

ஓம் ஐயா நீர் குட் பிப்பிள் பாட் பீப்கிள் என்ற வரையறுத்த மேதை அல்லவா உமது சமய அறிவு யாருக்கு வரும் . தயவு செய்து உம்முடைய எழுத்துக்களை நீரே ஒருதடவை யாழ்ப்பாணக் குடாநாட்டில் கோவில் கட்டிக் கும்பாபிசேகம் செய்து சைவத்துக்கு பெருந்; தொண்டாற்றுகிற டக்களஸ் ஐயாவின் வின் இணையத் தளத்தில இருக்கிற எழுத்துக்களோடு ஒப்பிட்டுப்பாரும். ஏதோ தூண்டில் போட்டு மீன்பிடிக்கப் பாக்கிறீர் என்று நான் நினைக்கிறேன்

ஒரு தேசிய இனம் என்பதற்கு பொதுவான மொழி பொது நிலப்பரப்பு பொதுப் பண்பாடு பொதுவான பொருளாதாரக்கட்டமைப்பு என்பவை தான் அடிப்படை.பெதுப்பண்பாட்டுக்க

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ஐயா நீர் குட் பிப்பிள் பாட் பீப்கிள் என்ற வரையறுத்த மேதை அல்லவா உமது சமய அறிவு யாருக்கு வரும் . தயவு செய்து உம்முடைய எழுத்துக்களை நீரே ஒருதடவை யாழ்ப்பாணக் குடாநாட்டில் கோவில் கட்டிக் கும்பாபிசேகம் செய்து சைவத்துக்கு பெருந்; தொண்டாற்றுகிற டக்களஸ் ஐயாவின் வின் இணையத் தளத்தில இருக்கிற எழுத்துக்களோடு ஒப்பிட்டுப்பாரும். ஏதோ தூண்டில் போட்டு மீன்பிடிக்கப் பாக்கிறீர் என்று நான் நினைக்கிறேன்

ஒரு தேசிய இனம் என்பதற்கு பொதுவான மொழி பொது நிலப்பரப்பு பொதுப் பண்பாடு பொதுவான பொருளாதாரக்கட்டமைப்பு என்பவை தான் அடிப்படை.பெதுப்பண்பாட்டுக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெஸ் நாவலர் மிருகவதை செய்பவர்களை பாட் பீப்பிள் என்று ஒதுக்கினார். அப்படி ஒதுக்கப்பட்டதற்குக் காரணம் அவர்கள் தவறுகளை உணர்ந்து திருந்த வேண்டும் என்பதாகக் கூட இருக்கலாம்..! :rolleyes::rolleyes:

அப்ப ஏன் நெடுக்கு

மனிதக் கொலைகளைச் செய்த நாயன்மார்களை (கோட்புலி, சிறுத்தொண்டர், இயற்பகை ............) சைவம் உயர்த்திப் பிடிக்கிறது. நாவலர் இதை அறியாதவரா????

Edited by இளங்கோ

அப்படியா சார்.. அப்படின்னா தமிழ் பேசும் முஸ்லீம்கள் எப்படி சார் தனி இனத்துவ அடையாளம் கோருறாங்க சார். எதுக்கும் ஐநா விதிகளை வாசிங்க சார்.

ஜெஸ் நாவலர் மிருகவதை செய்பவர்களை பாட் பீப்பிள் என்று ஒதுக்கினார். அப்படி ஒதுக்கப்பட்டதற்குக் காரணம் அவர்கள் தவறுகளை உணர்ந்து திருந்த வேண்டும் என்பதாகக் கூட இருக்கலாம்..! :rolleyes::rolleyes:

சுய நிர்ணய உரிமை மற்றும் தெசிய தேசிய இனங்களுக்கான வரையறை தொடர்பான பொது கோட்பாடுகளைத்தான் ஐநா ஏற்றுக்கொண்டிருக்கிறது.

முஸ்லீம்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற வரையறைக்கள் அடங்காதவர்கள் என்பது டக்களஸ் ஐயாவாலும் சிங்களமாத்தயாமாராலும் தான் அதுவும் தமிழ் தாயகத்தை பிரிப்பதற்காக ஏற்றுக்கொண்டிருக்கிறது. முஸ்லீம் தனித்துவமான அடையாளத்தை கொண்ட மதச் சிறுபான்மையினர் என்பதுதான் ஐயா இலங்கையில் அவர்களது அரசியல் அடையாளம்.அது போல மலையக மக்கள் மொழிச் சிறுபான்மையினர் என்பது அவர்களது அடையாளம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஏன் நெடுக்கு

மனிதக் கொலைகளைச் செய்த நாயன்மார்களை (கோட்புலி, சிறுத்தொண்டர், இயற்பகை ............) சைவம் உயர்த்திப் பிடிக்கிறது. நாவலர் இதை அறியாதவரா????

நாயன்மாரின் வரலாற்றில் பல திரிபுகளை காலத்துக்கு காலம் வேற்று மதத்தினர் செருகியுள்ளனர். நாயன்மாரின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்று உண்மைகளைக் காட்ட சரியான சான்றுகள் இல்லை. அவர்களின் சமயப்பணி மட்டுமே பொதுவாழ்வில் அவர்களை நிலைநிறுத்தி உள்ளன.

சைவம் சாதியத்துக்கு அப்பால் ஆனது என்பதற்கு பல சான்றுகளை எளிமையாகச் சொல்கிறது. நந்தனார் வரலாறு.. கண்ணப்பன் வரலாறு.. என்று பல நாயன்மார்களின் வரலாறுகள் இறைவனின் முன் மனிதர்கள் உயிர்கள் எல்லாம் சமன் என்று போதிக்கின்றன. ஏன் நீங்கள் அவற்றைத் திட்டமிட்டு மறைத்தீர்கள்..என்று சொல்வீர்களா..??!

ஆக நீங்கள் செருக்கப்பட்ட விடயங்களை வைத்து மதத்தின் மீது உங்களுக்குள்ள தனிப்பட்ட வெறுப்பை உமிழ்கிறீர்களே தவிர மதங்கள் கற்பிக்கும் மனித வாழ்வியல் அடிப்படைகளை விளங்கிக் கொள்ளவோ விளக்கவோ முனையவில்லை என்பதே உண்மை. மனிதனை மனிதனாக வாழ மதங்கள் வழிகாட்டுகின்ற தத்துவங்களை கல்வியைப் போதிக்கின்றன என்பதுமிகையல்ல...! சில வன்முறைவாதிகளால் மதத் தீவிரவாதம் பெருவதை உலகில் எந்த மதமும் அங்கீகரிக்கவில்லை..என்ற உண்மையும் இங்கு திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. :rolleyes:

சுய நிர்ணய உரிமை மற்றும் தெசிய தேசிய இனங்களுக்கான வரையறை தொடர்பான பொது கோட்பாடுகளைத்தான் ஐநா ஏற்றுக்கொண்டிருக்கிறது.

முஸ்லீம்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற வரையறைக்கள் அடங்காதவர்கள் என்பது டக்களஸ் ஐயாவாலும் சிங்களமாத்தயாமாராலும் தான் அதுவும் தமிழ் தாயகத்தை பிரிப்பதற்காக ஏற்றுக்கொண்டிருக்கிறது.முஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நந்தனார் கதையைக் காட்டி இந்து மதம் சாதியத்திற்கு எதிரானது என்று கதைகட்டப் பார்க்கிறார்கள்.

நாந்தனார் கதையைச் சற்று அலசுவேம்.

நந்தனாரின் இயற்பெயர் திருநாளைப் போவார். சிறந்த சிவ பக்தர். சிவனைப் பார்க்க முடியாமல் நந்தி மறைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவரை கோயிலுக்குள் நுழைய விடாமல் பார்ப்பனர்கள் தடுத்தனர். உடனே சிவபெருமான் நந்தியை விலக்கி அவருக்கு காட்சியளித்தார்.

இப்போது விசயத்திற்கு வருவோம். இங்குள்ள பிரச்சனை நந்தனார் கோவிலுக்குள் நுழைவதே. ஏனெனில் தாழ்த்தப் பட்டவர்கள் கோவிலுக்குள் நுழைவதை பார்ப்பனர்கள் விரும்பவில்லை. சிவபெருமான் என்ன செய்திருக்க வேண்டும் ( கதையின் படி) பார்ப்பனர்களை கண்டித்து அவரை உள்ளே நுழைய விட்டிருக்க வேண்டும். அதை விடுத்து அந்த சிவமகா பக்தரை வெளியில் நிற்க வைத்து நந்தியை விலக்கியது தீண்டாமையைக் காப்பாற்றும் முயற்சியே.

அது மட்டுமல்ல சேக்கிழாரின் வரிகள் நந்தனாரின் பிறப்பை இழி பிறப்பு என்கின்றன. அவர் தனது இழிபிறப்பை தீக்குள் குதித்து போக்கிக்கொண்டார் என்கிறது பெரிய புராணம்.

அப்பட்டமான தீண்டாமைதான் நந்தனார் கதையில் தெரிகிறது.

Edited by இளங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்டவன் போனவன் எல்லாம்

உது தான் யாழ்ப்பாண வெள்ளாள சைவச் சிந்தனை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் திருஞானசம்பந்தருக்கு என்ன நடந்தது? கலியானப்பந்தலோடு சேர்த்து நெருப்பு வச்சு எரிச்சுபோட்டு, குடுப்பத்தோடு சோதியில் கலந்தார் என்று கதைகட்டி விட இல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

திருஞானசம்பந்தர் பாண்டியனின் வெப்பு நோய் நீங்கத் திருநீற்றுப்பதிகம்பாடி, அனல் வாதம் புனல்வாதமெல்லாம் செய்து சமணரை வென்று பத்தாயிரம் சமணரை கழுவேற்றிக் கொல்லவைத்தார். பல்வேறு உலோகாயித ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்த சமணப் பள்ளிகளையும் தீயிட்டுக் கொழுத்தச் செய்தார். அந்த வஞ்சத்தினால் சமணர்களும் பௌத்தர்களும் அவரைக் குடும்பத்தோடு கைலாயம் சேர வைத்தார்கள். இப்போது சோதியில் கலந்தா என்று விடுகினம் பீலா.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது விசயத்திற்கு வருவோம். இங்குள்ள பிரச்சனை நந்தனார் கோவிலுக்குள் நுழைவதே. ஏனெனில் தாழ்த்தப் பட்டவர்கள் கோவிலுக்குள் நுழைவதை பார்ப்பனர்கள் விரும்பவில்லை. சிவபெருமான் என்ன செய்திருக்க வேண்டும் ( கதையின் படி) பார்ப்பனர்களை கண்டித்து அவரை உள்ளே நுழைய விட்டிருக்க வேண்டும். அதை விடுத்து அந்த சிவமகா பக்தரை வெளியில் நிற்க வைத்து நந்தியை விலக்கியது தீண்டாமையைக் காப்பாற்றும் முயற்சியே.

அது மட்டுமல்ல சேக்கிழாரின் வரிகள் நந்தனாரின் பிறப்பை இழி பிறப்பு என்கின்றன. அவர் தனது இழிபிறப்பை தீக்குள் குதித்து போக்கிக்கொண்டார் என்கிறது பெரிய புராணம்.

அக்காலத்தில் மாமிசம் உண்பவர்களை வெறுப்பாக நோக்கிய காலம் அது. ஆனால், அதையும் விட, நந்தனார் வம்சம், மாட்டை உண்கின்றவர்கள். அதனால் அவர் மீது வெறுப்பிருந்திருக்கலாம். இருப்பினும், அக்காலத்தில் ஐாதி இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் சைவம் நோக்கவில்லை என்பதையே சொல்லவருகின்றேன்.

சைவம் ஐாதி நோக்கியிருந்தால் 63 நாயன்மார்களும், வெவ்வேறு ஜாதியினராக இருந்தபோதும், போற்றப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் மனிதர்கள் தங்களுக்கு ஏற்ற விதத்தில் மேவியதால் தான் இப்பிரச்சனை.

ஆனால், கருவறைக்குள் அனைவரையும் அனுமதிப்பது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதற்கு ஒரு புனிதம் இருந்தால் அதைப் பேண வேண்டும். அக்காலத்தில் கோவிலை மன்னர்மார் கட்டுவித்தாலும், அவர்களும் கருவறைக்குள் செல்வதில்லை. ஏன் என்றால் புனிதம் வேண்டும் என்பதில் அவர்களும் உடன்பாடோடு இருந்தார்கள்.

கதையின் படி, பார்த்தால் கருவறையில் சென்று தான் நந்தனார், இறைவனோடு கலந்தார் என்றே சொல்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

திருஞானசம்பந்தர் பாண்டியனின் வெப்பு நோய் நீங்கத் திருநீற்றுப்பதிகம்பாடி, அனல் வாதம் புனல்வாதமெல்லாம் செய்து சமணரை வென்று பத்தாயிரம் சமணரை கழுவேற்றிக் கொல்லவைத்தார். பல்வேறு உலோகாயித ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்த சமணப் பள்ளிகளையும் தீயிட்டுக் கொழுத்தச் செய்தார். அந்த வஞ்சத்தினால் சமணர்களும் பௌத்தர்களும் அவரைக் குடும்பத்தோடு கைலாயம் சேர வைத்தார்கள். இப்போது சோதியில் கலந்தா என்று விடுகினம் பீலா.

அன்று பாண்டியன் வெப்புநோய் தீர்க்கும் சந்தர்ப்பத்தில் சிலவேளை ஞானசம்பந்தர் தோற்றுப் போயிருந்தால், சம்பந்தரும், அவரோடு இருந்த பல்லாயிரம் பேர்களும் கழுமரம் ஏற்றி சமணர்களால் கொல்லப்பட்டிருப்பார்கள். அது தான் ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்திற்கு சமணர்கள் உடன்பட்ட பின்னர், ஒரு தரப்பை மட்டும் குற்றம் சொல்லமுடியாது. ஏன் என்றால் சம்பந்தரும் தன் கடவுள் மீத நம்பிக்கை வைத்தார். அவ்வாறே சமணர்களும் வைத்தனர். ஆனால் கடைசியில் சூது தோற்றுப் போய்விட்டது.

இறுதியில் சோதியில் கலந்த விடயத்தை சணமர்களும், பெளத்தர்களும் செய்த கொலை வெறி என்பதை ஒப்புக் கொண்டமைக்கு நன்றி. அவ்வாறே கழுமரத்தில் ஏற்றியதில் தப்பில்லை என்பதையும் புரிந்து கொண்டால் சரி.

ஏதோ, கழுமரத்தில் ஏற்றின கதையை, அப்பாவிச் சமணர்களைச் செய்யது போலல்லவா பிதற்றுகின்றினம்.

  • தொடங்கியவர்

திருஞான சம்பந்தர் குறித்து கரு கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.

திருஞானசம்பந்தரை கொன்றது பார்ப்பனர்களாகத்தான் இருக்க வேண்டும். திருஞான சம்பந்தர் தமிழை வளர்க்க போராடி வந்தார். சேக்கிழார் திருஞான சம்பந்தர் தமிழை உலகப் பொது மொழி ஆக்கப் பிறந்தவர் என்று புகழ்கின்றார்.

சம்பந்தர் எவ்வளவு தூரம் சமணத்தை எதிர்த்தாரோ, அதே அளவு வடமொழியில் வழிபாடு செய்வதையும் எதிர்த்தார். ஆலயங்களிற்கு சென்று தமிழில் வழிபாடு செய்தார். தன்னுடைய பதிகங்களில் தமிழைப் பற்றி பாடினார்.

அதனால் அவர் பார்ப்பனர்களால் எரித்துக் கொல்லப்பட்டார் என்றுதான் நான் நம்புகின்றேன். அவரை சமணர்கள் கொன்றிருந்தால், அது பற்றி கட்டாயம் பார்ப்பனர்கள் எழுதி வைத்திருப்பார்கள். அதன் மூலம் சமணர்கள், பௌத்தர்கள் மீது நடந்து கொலைகளை நியாயப்படுத்தி இருப்பார்கள்.

ஆனால் சோதியில் கலந்தார் என்று எழுதி வைத்திருப்பதால், அதற்குள் அவர்களின் கைவரிசை நிச்சயம் இருக்க வேண்டும்.

நாயன்மார்களின் தமிழ் தேவாரப் பாடல்கள் சிதம்பரத்தில் வைத்து பார்ப்பனர்கள் பூட்டி, அதை கரையான் புற்றுக்குள் அழிய விட்டதை சிந்தித்துப் பாருங்கள்.

சில உண்மைகள் புரியும்.

தூயவன்! கருவறைக்குள் மற்ற சாதியினர் போகக்கூடாது என்று எழுதி நீங்கள் யார் என்று காட்டி விட்டீர்கள்.

தமிழில் ஞானசம்பந்தனார் தேவாரம் பாடியதுதான் அவர் குடும்பத்துடன் பரலோகம்போக ஏதுவான காரணம், தமிழிற்கு யார் எதிரி, தமிழ் யாருக்கு நீசமொழி உய்த்தறிந்து கொள்க. :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களை யாரும் மறந்து விட முடியாது. ஆங்கிலேயரின் பொருளாதாரத்தை அசைத்து ஆட்டங்காணச் செய்த தீரர் அவர். நான் மிகவும் மதிக்கும் மனிதர்களில் அவரும் ஒருவர். அவரும் ஒரு சாதி மறுப்பாளர். இங்கு தேவை ஏற்படுவதால் அவரது சாதியை நான் இங்கு குறிப்பிடுகிறேன். அவர் சைவ வேளாள சமூகத்தைச் சேர்ந்தவர். என்னதான் இந்தியத் தேசியவாதியாக இருந்தாலும் தமிழ்த் தேசியத்தை அதற்குள் அடகு வைக்கும் தவறை அவர் செய்யவில்லை. அவர் கடவுள் நம்பிக்கையாளர்.

சைவம் பற்றி அவர் கூறிய கருத்தை இங்கு தருகிறேன். கொழும்பிலிருந்து வெளியான இந்தியத் தேசியமும் தமிழ்த் தேசியமும் என்ற நூலிலிருந்து எடுக்கப் பட்டது. இதோ வ.உ.சி. எழுதுகிறார்

இந்து மதம் எவ்வாறு பார்ப்பன ஆதிக்கத்தை வலுப்படுத்தியதோ அதே போன்று சைவமும் வேளாள ஆதிக்கத்தை வலுப்படுத்தியிருக்கிறது.

இதை அவர் கவலையுடனே குறிப்பிடுகிறார். மேலும் சைவத்தில் பார்ப்பன ஆதிக்கமும் உள்ளது என்பதை அவர் வெளிப்படையாக எழுதுகிறார்.

இறை நம்பிக்கையாளராக இருந்தாலும் பெரியாரின் சமூகநீதிப் போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வஞ்சத்தினால் சமணர்களும் பௌத்தர்களும் அவரைக் குடும்பத்தோடு கைலாயம் சேர வைத்தார்கள். இப்போது சோதியில் கலந்தா என்று விடுகினம் பீலா.

பெளத்தர்களோ அப்படி செய்து இருக்க மாட்டினமே........

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

திருஞான சம்பந்தர் குறித்து கரு கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.

திருஞானசம்பந்தரை கொன்றது பார்ப்பனர்களாகத்தான் இருக்க வேண்டும். திருஞான சம்பந்தர் தமிழை வளர்க்க போராடி வந்தார். சேக்கிழார் திருஞான சம்பந்தர் தமிழை உலகப் பொது மொழி ஆக்கப் பிறந்தவர் என்று புகழ்கின்றார்.

சம்பந்தர் எவ்வளவு தூரம் சமணத்தை எதிர்த்தாரோ, அதே அளவு வடமொழியில் வழிபாடு செய்வதையும் எதிர்த்தார். ஆலயங்களிற்கு சென்று தமிழில் வழிபாடு செய்தார். தன்னுடைய பதிகங்களில் தமிழைப் பற்றி பாடினார்.

ஞானசம்பந்தர் பிராமணர்களைப் பற்றி கேவலமாகப் பாடியதில்லை. ஆனால் அவர் சமணர்களை எதிர்த்த விதம் வெளிப்படையாக தெரிகின்றபோது, பிராமணிகள் மீது முடிச்சுப் போடுவது மொட்டடைத் தலைக்கும் முழங்காலுக்கும் போடுகின்ற முடிச்சுத் தான்.

அவர் சமயத்தையும், மொழியையும் சிறப்பிக்க முனைந்தாலும், முதலிடம் கொடுத்தது சமயத்திற்கே! அன்று சமணர்களின், பெளத்தர்களின் கொட்டத்தை அடக்குவதற்கே அவர் முயன்றார். அக்காலத்தில் வடமொழிக்கு ஆலயவழிபாட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்குமா என்பது ஐயமே! ஏனென்றால் அக்காலத்தில் சமணர்களும், பெளத்தர்களும் தான் தமிழர்களை ஆக்கிரமித்திருந்தார்கள். கோவிலில் வழிபாடு செய்ய முடியாத நிலமை அப்போது தோற்றுவிக்கப்பட்டிருந்தது

பல ஆலயங்களை மூடி, சிலைகளை ஒளித்து வைத்த சமணர்கள் செய்தபோது, வழிபாட்டிற்கே ஆலயத்தைத் தேட வேண்டிய நிலமையில், அங்கே பிராமணர்களின் ஆதிக்கம் இருந்தாக காட்டுவது மிகவும் தவறானது. அந்த நேரத்தில், தான் நாயன்மார்களும், ஆழ்வார்களும் தங்களுக்குரிய பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்து, சமணர்களை எதிர்த்தார்கள்.

அதனால் அவர் பார்ப்பனர்களால் எரித்துக் கொல்லப்பட்டார் என்றுதான் நான் நம்புகின்றேன். அவரை சமணர்கள் கொன்றிருந்தால், அது பற்றி கட்டாயம் பார்ப்பனர்கள் எழுதி வைத்திருப்பார்கள். அதன் மூலம் சமணர்கள், பௌத்தர்கள் மீது நடந்து கொலைகளை நியாயப்படுத்தி இருப்பார்கள்.

ஆனால் சோதியில் கலந்தார் என்று எழுதி வைத்திருப்பதால், அதற்குள் அவர்களின் கைவரிசை நிச்சயம் இருக்க வேண்டும்.

நாயன்மார்களின் தமிழ் தேவாரப் பாடல்கள் சிதம்பரத்தில் வைத்து பார்ப்பனர்கள் பூட்டி, அதை கரையான் புற்றுக்குள் அழிய விட்டதை சிந்தித்துப் பாருங்கள்.

சில உண்மைகள் புரியும்.

இங்கே உண்மைகளைப் புரிய வேண்டியது நீர் தான். திருமணம் முடித்து, திரு....(பெயர் நினைவில் இல்லை) என்ற கோவில் ஆகமம் வளர்த்து தான் சோதியில் அவரும், குடும்பத்தினரும் சோதியில் கலந்தனர் என்று கூறப்படுகின்றது. அங்கே சோதியில் கலந்தது சம்பந்தர் மட்டுமல்ல, அவர் கூட இருந்த அனைத்து(மனைவி குடும்ப வழியைச் சேர்ந்த) பிராமணர்களும், தான். அதிகளவு பேரைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்ற நாயன்மார் திருஞானசம்பந்தர் என்றே அவர் வரலாறு சொல்கின்றது என்பதிலிருந்து, அவரோடு சோதியில் கலந்த பிராமணர்களின் எண்ணிக்கை தெரியும்.

எரித்துக் கொல்லப்பட்டார் என்று பார்த்தாலும், அத்தனை பிராமணர்களையும் எதிர்க்க வேண்டிய தேவை, பிராமணர்களுக்கில்லை. ஆனால் சம்பந்தரோடு நேரடியாகப் போட்டி போட்டு வெல்ல முடியாத சமணப் பித்துக்கள், பழி தீர்ப்பதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு.

சிதம்பரத்தில் கிடந்த ஓலைச் சுவடிகளை மீட்டு அதைத் திரும்பவும் தமிழனுக்கு கிடைக்கச் செய்த நம்பியாண்டார் நம்பி கூடப் பார்ப்பானரே! சொல்லப் போனால் தமிழனின் அக்கறையின்மையால் தான் பல நூல்களை நாங்கள் இழந்தோம். ஆனால் அந்தக் குற்ற உணர்ச்சி வராமல் தடுப்பதற்கும், தமிழனின் அக்கறையின்மையையும் மறைக்க வேண்டிய தேவையில்லை.

சிதம்பரத்தில் எவருடைய கவனிப்பாரற்றுக் கிடந்த ஓலைச்சுவடிகளுக்கும், தற்போது தமிழகத்தின் பழம்பொருள் சேமிக்குமிடத்தில், அவ்வாறன ஓலைச்சுவடிகள், வெறும் சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருப்பதற்கும், வித்தியாசமில்லை. இன்று தமிழ் சுவடிகளை மூடி வைத்திருப்பது பார்ப்பானரா?

சொல்லப் போனால் எதிர்வு கூறல்கள் மூலம், உங்களின் பிராமணவெறிகளை நியாயம் கற்பிக்க வேண்டா!

தூயவன்! கருவறைக்குள் மற்ற சாதியினர் போகக்கூடாது என்று எழுதி நீங்கள் யார் என்று காட்டி விட்டீர்கள்.

கடைசியாக உமது இறுதியும், வழமையானதுமான தாக்குதல் விதமான, பார்ப்பானச் சாயம் என் மீது பூச முனைகின்றீர் என விளங்குகின்றது.ஆனால் என்னோடு கேஎவ்சியில் சேர்ந்து மாமிசம் புசித்த யாழ்கள நண்பர்கள் பலருக்குத் தெரியும். நான் பிராமணர் அல்ல என்பது.

கருவறைக்குள் கோவில் கட்டுவித்த மன்னர்கள் கூடப் போகாத நிலையில், நாங்கள் போக வேண்டும் என்று ஆசைப்படவில்லை. அவ்வாறே தொண்டமனாறு செல்வச்சந்நிதி தொடக்கம், பல கிராமிய ஆலயங்களில் பிராமணரல்லாதவர்கள் தான் பூசை செய்கின்றார்கள். அங்கும் கூட நான் நுழைய ஆசைப்படவில்லை.

புலால் உண்ணாமை, எம் ஆலயவழிபாடுகளில் முதன்மைப்பட்டுள்ள நிலையில், அவ்வாறே செய்கைகளைச் செய்கின்ற நான் என்றைக்குமே, கருவறையை தரிசிக்க வேண்டும் என்ற மனதோடு இல்லை.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் ஞானசம்பந்தனார் தேவாரம் பாடியதுதான் அவர் குடும்பத்துடன் பரலோகம்போக ஏதுவான காரணம், தமிழிற்கு யார் எதிரி, தமிழ் யாருக்கு நீசமொழி உய்த்தறிந்து கொள்க. :lol::lol::lol:

நீங்களும் சில விடயங்கள் ஊய்த்தறிய வேண்டியது மிக முக்கியம் பிருந்தன். திருஞானசம்பந்தர் ஒரு சமயப் பெரியார்.அதற்கு அடுத்தது தான் தமிழ் வளர்ப்பாளர். அவ்வாறு தான், அப்பர் சுவாமிகள், சுந்தரர், மாணிக்கவாசகர் என்ற நாயன்மார்கள் அனைவரும்.

எனவே சம்பந்தமில்லாமல், ஊய்த்தறிக்கின்றீர்கள் என்பதைத் தான் சொல்ல முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களை யாரும் மறந்து விட முடியாது. ஆங்கிலேயரின் பொருளாதாரத்தை அசைத்து ஆட்டங்காணச் செய்த தீரர் அவர். நான் மிகவும் மதிக்கும் மனிதர்களில் அவரும் ஒருவர். அவரும் ஒரு சாதி மறுப்பாளர். இங்கு தேவை ஏற்படுவதால் அவரது சாதியை நான் இங்கு குறிப்பிடுகிறேன். அவர் சைவ வேளாள சமூகத்தைச் சேர்ந்தவர். என்னதான் இந்தியத் தேசியவாதியாக இருந்தாலும் தமிழ்த் தேசியத்தை அதற்குள் அடகு வைக்கும் தவறை அவர் செய்யவில்லை. அவர் கடவுள் நம்பிக்கையாளர்.

கப்பலோட்டிய தமிழன் தமிழ் எழுச்சி என்ற போராட்டத்தைக் கொண்டு சென்றபோது, சாதிப்பிரியர் பெரியாரால் எதிர்க்கப்பட்டவர் தானே! அப்போது, தனக்குப் போட்டியாக வ.உ.சி வரக்கூடாது என்ற வெறி தானே அந்த மனிதரிடம் இருந்தது. இப்போது என்னவோ, கதையை மாத்துகின்றீர்.

அடிக்கடி சமூக அநீதிகளை எதிர்த்துப் புறப்பட்டவர்கள், அம் மதத்தில் பற்று வைத்திருந்தவர்கள் என்று காட்டுகின்ற உங்களின் போக்கை மதிக்கின்றேன். அவர்கள் மீது எனக்கு மரியாதையுண்டு. பாரதியார், விவேகாநந்தர், இராமகிருஸ்ணர் போன்றவர்கள் மூடநம்பிக்கையைத் தகர்த்து, மதக் கொள்கைகளைத் தெளிவாக்கிய விதம் எனக்கு பிடித்தமானது. அது தான் உண்மையில் சமூகப் போராட்டம்.

சமூதாயத்தில் உள்ள தவறுகளை அதற்குள்ளே இருந்தே நீ்ககுவது. உங்களின் குரு என்ன செய்தார் என்பதை இக்கணத்தில் சிந்திப்பதும் நல்லது. உங்களின் குருவால் ஏன் இப்படி உள்ளிருந்து போராட்டத்தை மேற்கொள்ள முடியவில்லை? ஏனென்றால் அவருக்குள்ள பிரச்சனைகள் வேறு. அதைத் தீர்க்க, பகுத்தறிவு என்பதைப் பாவித்துக் கொண்டார்.

சொல்லப் போனால் கிட்லர் சிறுவயதில் யூதர்களோடு ஏற்பட்ட மனக்கசப்பால், பிற்காலத்தில் நடந்தது போல, உங்கள் தலைவருக்கும் ஏதும் சைக்கோப் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம்.

சைவம் பற்றி அவர் கூறிய கருத்தை இங்கு தருகிறேன். கொழும்பிலிருந்து வெளியான இந்தியத் தேசியமும் தமிழ்த் தேசியமும் என்ற நூலிலிருந்து எடுக்கப் பட்டது. இதோ வ.உ.சி. எழுதுகிறார்.இந்து மதம் எவ்வாறு பார்ப்பன ஆதிக்கத்தை வலுப்படுத்தியதோ அதே போன்று சைவமும் வேளாள ஆதிக்கத்தை வலுப்படுத்தியிருக்கிறது.இதை அவர் கவலையுடனே குறிப்பிடுகிறார். மேலும் சைவத்தில் பார்ப்பன ஆதிக்கமும் உள்ளது என்பதை அவர் வெளிப்படையாக எழுதுகிறார்.இறை நம்பிக்கையாளராக இருந்தாலும் பெரியாரின் சமூகநீதிப் போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்தவர்.

யாழ்பாணத்து வேளாளர் சமுதாயம் எவ்வளவு தூரம் அடக்குமுறைகளைக் கொண்டிருந்தது பற்றிய உங்களின் கருத்தினை ஊக்கப்படுத்துகின்றேன். அவ்வாறு தான், யாழ்பாணத்தில் புறப்பட்ட பகுத்தறிவு சிங்கங்கள், ஏன் பிராமண எதிர்ப்பை மட்டுமே, செய்தன என்றும், வேளாள எதிர்ப்பைச் செய்யவில்லை என்பது குறித்தும் கேட்ட உதவியாக இருக்கும்.

பெரியாரை நியாயப்படுத்த வ.உ.சியையும் இழுக்கின்றீர்களா? ஹிஹிஹி. சொல்லப் போனால், திராவிடத்துக் கொள்கை என்று வெளிக்கிட்ட பெரியார் தான்,முதலில் எதிர்த்துப் பார்த்து, வழியில்லாமல் கடைசியில் வ.உ.சி கொண்டிருந்த தமிழ் தேசியப்பாதைக்கு வர வேண்டிய நிலமைக்குத் தள்ளப்பட்டார்.

Edited by தூயவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.