Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சருக்கும் எதிர்க்கட்சித்தலைவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம்!

Featured Replies

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், வடமாகாண சபையின் எதிர்க் கட்சித்தலைவர் தவராசாவுக்கும் இடையில் வடமாகாண சபையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 102 ஆம் அமர்வு இன்று காலை சபா மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இதில் 101ஆம் ஆமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு இன்றைய அமர்வில் முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.

இதன்போது முதலமைச்சரின் கருத்துக்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததுடன், முதலமைச்சரை கை நீட்டி பேசியதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

“எதிர்க்கட்சித் தலைவர் பத்திரிகைகளை நம்பி பொய்யான கருத்துக்களை பரப்புகின்றார், பாப்பரசரைப் போன்று பத்திரிகைகளில் தனது பெயர் வரவேண்டும் என்பதற்காக பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகின்றார்.

தமது எதிர்க்கட்சித் தலைவர் பதவியைதக்கவைத்து கொள்வதற்கு பத்திரிகைகளில் விளம்பரம் தேடுகிறார்.

தன்னை கட்சியை விட்டு தூக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில் என்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றார்.” என முதலமைச்சர் தனது உரையில் தெரிவித்தார்.

முதலமைச்சரின் இந்த கருத்துக்களால் கோபமடைந்த வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, முதலமைச்சருடன் தர்க்கம் புரிந்துள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/155482?ref=home-feed

  • தொடங்கியவர்

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை என சுட்டிய விடயங்கள் தொடர்பான செயற்பாடுகளுக்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை என வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இது மறைமுகமாக முதலமைச்சர் வினைத்திறனற்ற செயற்பாடுகள் தொடர்பான எனது குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்கிறார் என்பதனைத் தெளிவாக்குவதாகவும் கூறியுள்ளார்.

வட மாகாண சபையின் 102 ஆம் அமர்வு இன்று காலை சபா மண்டபத்தில் நடந்த போது, 101ஆவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு இன்றைய அமர்வில் முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.

இதன்போது, முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், எதிர்க்கட்சித்தலைவர் தவராசாவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

வட்டுக்கோட்டைக்குப் போகும் வழி எதுவென்றால் துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்பது போல் அமைந்துள்ளது.

முதலமைச்சரின் இன்றைய வட மாகண சபை அமர்வின் போதான உரை.

கடந்த 21.07.2017 ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வில் வட மாகாண சபை 3 வருடங்கள் 9 மாதங்களில் சாதித்தது என்ன என்ற மீளாய்வு வாதத்தினை ஆரம்பித்து வைத்து, வட மாகாண சபையின் செயல் திறனற்ற செயற்பாடுகள் தொடர்பாக ஆதாரங்களுடன் எடுத்தியம்பினேன்.

இது தொடர்பாக இன்று முதலமைச்சரினால் அவையில் கூறப்பட்ட பதில்கள் என்னால் முன்வைக்கப்பட்ட வினைத்திறனற்ற செயற்பாடுகளைத் திசை திருப்பும் வகையில் அமைந்திருக்கின்றதே அன்றி, ஆக்க பூர்வமான பதில்களாக அவை அமைந்திருக்கவில்லை.

உதாரணத்திற்குப் பளையில் அமைக்கப்பட்ட மின் காற்றாலை சம்பந்தமான ஒப்பந்தத்தில் சபையின் செயலாளரைக் கையொப்பமிட வைத்தது ஓர் மிகத் தவறான செயல் என நான் சுட்டிக்காட்டினேன். அத்துடன் சபையின் செயலாளரிற்கும், நிறைவேற்று அதிகார செயற்பாட்டிற்கும் உள்ள தொடர்பு குறித்தும் வினவியிருந்தேன்.

அத்துடன் அதன் முதல் வருடத்தில் அந்த மின் காற்றாலையை நிறுவிய நிறுவனங்களிடமிருந்து கொடையாக நிதியைப் பெற்று வடக்கு மாகாண சபையின் வரவிற்கு உட்படுத்தப்பட்டு மாகாண சபையின் பாதீட்டினூடாகவே செலவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதனை எடுத்துக் காட்டியிருந்தேன்.

அதனை விடுத்து அவர்களிடமிருந்து நேரடியாக வாகனங்களைப் பெற்றது தவறான செயல் என்பதனையும் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆனால் இதற்கு பதிலளிக்காமல் 2015, 2016ஆம் ஆண்டுகளில் அவர்களிடமிருந்து கொடையாகப் பெற்ற நிதியின் கணக்கினையே சபையில் சமர்ப்பித்திருந்தார் முதலமைச்சர்.

அதேபோல் ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதித்தேவைகள் மதிப்பீடு தொடர்பாக முதலமைச்சரினால் ஓர் ஆலோசகரின் பெயர் குறிப்பிட்டு, ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதிக்குச் சிபாரிசு செய்ததன் விளைவாகத்தான் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிற்கும், மாகாண சபைக்கும் இடையே அன்று விரிசல் ஏற்பட்டதென்பதனை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதியினால் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு 16.10.2015ஆம் திகதியிடப்பட்டு எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதென்பதனை ஆதாரபூர்வமாகக் காட்டியிருந்தேன்.

அதற்குப் பதிலளிப்பதனைத் தவிர்த்து முதலமைச்சர் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதி என்ன என்பது தொடர்பான நீண்ட ஓர் விளக்கவுரையினை வழங்கியிருந்தார்.

சுன்னாகம் நிலத்தடி நீரில் தற்போது ஒயில் கலப்பு இல்லை என ஐக்கிய இராச்சிய உயர் ஸ்தானிகரிற்கு முதலமைச்சர் கூறியிருந்தது தொடர்பாக நான் மாகாண சபையில் கேள்வியெழுப்பியிருந்த போது, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களின் ஆய்வு அறிக்கையினை வைத்தே தான் அவ்வாறு கூறியதாகப் பதிலளித்திருந்தார்.

இந்த ஆய்வு அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பதனை அந்த அறிக்கையினை ஆதாரமாகக் காட்டி முதலமைச்சர் தவறாக வழி நடத்தப்படுகின்றார் எனச் சுட்டிக்காட்டியிருந்தேன்.

இந்த கூற்றிற்குப் பதிலளிப்பதனைத் தவிர்த்து சுன்னாகம் நிலத்தடி நீரில் ஒயில் மாசு இருக்கின்றதா என்பது தொடர்பான நீண்டதொரு உரையை முதலமைச்சர் ஆற்றியிருக்கின்றார்.

இவ்வாறாக முதலமைச்சரின் அமைச்சின் வினைத்திறனற்ற செயற்பாடுகள் தொடர்பாக மட்டும் ஏறத்தாழ 20 விடயங்களை நான் எனது 21.07.2017ம் திகதி நடைபெற்ற அமர்வின் போதான உரையில் குறிப்பிட்டிருந்தேன். அந்த இருபது விடயங்களில் பதினொரு விடயங்களிற்கு மட்டுமே இன்று தனது பதிலைத் தெரிவித்த முதலமைச்சர் இரு விடயங்களில் நான் குறிப்பிட்டது சரியென்பதனை ஏற்றுக்கொண்டார்.

ஏனைய விடயங்கள் தொடர்பாக நீண்ட விளக்கவுரையினை ஆற்றியிருந்தும், என்னால் வினைத்திறனற்றவை என சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் தொடர்பான செயற்பாடுகளுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.

இது மறைமுகமாக முதலமைச்சர் வினைத்திறனற்ற செயற்பாடுகள் தொடர்பான எனது குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்கிறார் என்பதனைத் தெளிவாக்குகின்றது.

முதலமைச்சர் தனது உரையில் என்னால் சுட்டிக்காட்டப்பட்ட வினைத்திறனற்ற செயற்பாடுகள், ஊடகங்களின் விளம்பரத்திற்காகக் கூறப்பட்ட விடயங்களென்றும் அத்துடன் குற்றஞ்சாட்டப்பட்ட விடயங்களிற்குப் புறம்பான அரசியல் விடயங்களைக் கூறி முழு விவாதத்தினையுமே திசை திருப்ப முயன்ற வேளையிலே எனது கடும் எதிர்ப்பின் விளைவாக அது கைவிடப்பட்டது என

http://www.tamilwin.com/politics/01/155518?ref=home-feed

  • தொடங்கியவர்
5 hours ago, Rajesh said:

இதன்போது முதலமைச்சரின் கருத்துக்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததுடன், முதலமைச்சரை கை நீட்டி பேசியதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஈ.பி.டி.பி. கட்சியில் இருந்த தவராசாவில் கீழ்த்தர குணங்கள் இருப்பது ஆச்சரியம் இல்லை.

"நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் நாய் நாய் தான்" என்பது தமிழ்ப் பழமொழி.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Rajesh said:

ஈ.பி.டி.பி. கட்சியில் இருந்த தவராசாவில் கீழ்த்தர குணங்கள் இருப்பது ஆச்சரியம் இல்லை.

"நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் நாய் நாய் தான்" என்பது தமிழ்ப் பழமொழி.

ஒரு நல்ல மக்களாட்சி தேவை எனில்.. மக்கள் தெரிவு செய்யும் அரசும்.. எதிர்க்கட்சியும் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் தன்மை உடையதாக இருந்தால் தான் அது மக்களாட்சி. ஈபிடிபி போன்ற சிங்கள அரச ஒட்டுக்குழுக்களை எதிர்கட்சியில் அமர வைத்துவிட்டு.. எப்படி நல்லாட்சி செய்வது. 

எதிர்காலத்தில்.. தமிழ் மக்கள்.. தமது வாக்குகளை சரியாகப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். மேலும்.. மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள்.. ஆட்சியில் மட்டும் தான் அமருவம் என்று நினைக்காமல்.. நல்ல எதிர்கட்சி வரிசையிலும் அமரத் தயாராக இருக்கிறோம் என்ற நம்பிக்கை வளர்க்கப்படுவது அவசியம்.

இங்கிலாந்தில்.. ஆளும் கட்சிக்கு நிகராக எதிர்கட்சியும் மக்களுக்கான திட்டங்களை முன்வைக்கிறது.. ஆலோசனைக்கு.

எம்மிடம் அந்த அரசியல் நாகரிம் இன்னும் வளரவில்லை. மக்களிடம் இது குறித்த அரசியல் அறிவு பரப்பப்படவில்லை. 

ஆனால் தேசிய தலைவர்.. விடுதலைப்புலிகளை முன்னிறுத்தினாலும்.. நல்ல மாற்று அரசியலுக்காக.. தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் உருவாக்கினவர். காரணம்.. அவர் மக்களின்... மண்ணின் நலனில் அக்கறை கொண்டிருந்ததால். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர்கட்சி தலைவர் எண்டால் அதின்ரை அர்த்தம் தெரியாத தலைவர்மார்தான் அங்கையிருக்கினம் போலை கிடக்கு.. Pacifier

தவராசாவின் திறமைகள் அவர் நீண்டகாலம் சார்ந்து இருந்த கட்சி, அண்மையில் உறவுவைத்துள்ள ஊழல் பேர்வழிகளால் மழுங்கிப் போகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.