Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

hi

good morning

i am writing in english so u can remove it becuse it will hurt sonme people

some one has told me srilankan tamils are psychopeople now i finded out from sivaji issue

my question to srilankan tamils

does all people are not using srilankan products

does all people are rejecting televison which supports srilankan products

does people are rejecting murali who told that match will solve the conflict as there is no problem between

sinhaklese and tamils--only terrorism exists in srilanka

it is a joke that money for sivaji comes from foreign countries

chandramukhi collected 70 crores in tamilnadu and 20 crores in andhra

sivaji cds and casettes sold in tamilnadu within two hrs of release is 2 lakhs

first u people should reject people who support srilanka and also u should not use srilankan manufactured products

i consider those who use freedom struggle for their publicity should instead use their family for profit

cool cool cool

why u people are not rejecting gods and godess,jesue whop does not do anything for srilankan tamils

can u reply

  • Replies 351
  • Views 34.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

hi

good morning

i am writing in english so u can remove it becuse it will hurt sonme people

my question to srilankan tamils

does all people are not using srilankan products

does all people are rejecting televison which supports srilankan products

does people are rejecting murali who told that match will solve the conflict as there is no problem between

sinhaklese and tamils--only terrorism exists in srilanka

it is a joke that money for sivaji comes from foreign countries

chandramukhi collected 70 crores in tamilnadu and 20 crores in andhra

sivaji cds and casettes sold in tamilnadu within two hrs of release is 2 lakhs

first u people should reject people who support srilanka and also u should not use srilankan manufactured products

i consider those who use freedom struggle for their publicity should instead use their family for profit

cool cool cool

cool cool cool

why u people are not rejecting gods and godess,jesue whop does not do anything for srilankan tamils

can u reply

Edited by raja.m

  • தொடங்கியவர்

என்னப்பா சிவாஜி திரி 12 பக்கத்தை தாண்டிட்டுதா................?

அதுவும் நானா ஆரம்பிச்சேன்?

  • தொடங்கியவர்

இருங்கப்பு நாங்க வைக்கிறம் ஆப்பு

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி படத்தினை விமர்சனம் செய்த சினி சவுத் இணையத்தளம் இப்படத்தை 'சிவாஜி' - ஆறிப் போன பஜ்ஜி என்று விமர்சித்துள்ளார்கள். இப்படத்தின் திரைக்கதையில் குறைபாடு உள்ளதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தை நான் திரை அரங்கில் சென்று பார்க்க மாட்டேன்.

  • தொடங்கியவர்

கவலை வேணம் கந்தப்பு யாழில நாங்க போடுவம்

அப்போ பாருங்க

  • தொடங்கியவர்

சிவாஜி விமர்சனம்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் டைரக்ஷன், பல கோடி ரூபாய் செலவு, ரஜினியின் துடிப்பான நடிப்பு, ஸ்ரேயாவின் கிளுகிளுப்பு நடனம், விவேக்கின் நச் காமெடிகள் என்று பல ப்ளஸ் பாயிண்ட்களுடன் வெள்ளித்திரையை அலங்கரிக்க வந்துள்ளது சிவாஜி.

ஒரு ரூபாயை வைத்துக் கொண்டு உலகமே போற்றும் அளவுக்கு ரஜனி உயர்வதுதான் படத்தின் கதை. எக்ஸ்பிரஸ் வேகத்தில் தொடங்கும் படம் நேரம் ஆக ஆக ஜெட் வேகத்தில் நகர்கிறது.

ரஜினியின் அறிமுக காட்சியிலேயே ஷங்கரின் பிரமாண்டம் தெரிகிறது. வெளிநாட்டில் பெரும் பணக்காரராக இருக்கும் ரஜினி, தன்னை வளர்த்த தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று துடிக்கிறார். வறண்டு கிடக்கும் கிராமங்களை பசுமையாக்க வேண்டும். கிராமத்தில் இருப்பவர்களுக்கு கல்வியறிவு புகட்ட வேண்டும் என பல கனவுகளுடன் தமிழ்நாட்டுக்கு வருகிறார். சிவாஜி ட்ரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி தனது சேவைக்கு அடிக்கல் நாட்டுகிறார். சிவாஜி ட்ரஸ்ட் சார்பில் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு கட்டிடம் கட்டும் பணி தொடங்கும்போதுதான் சிக்கல் ஆரம்பிக்கிறது. எல்லா எதிர்ப்புகளையும் மீறி மக்களின் எதிர்பார்ப்பை ரஜினி எப்படி பூர்த்தி செய்கிறார்? என்ற கேள்விக்கு பதிலை நறுக்கென்று சொல்லியிருக்கிறார்கள்.

அரசுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்து கொடுத்தே பணத்தையெல்லாம் இழக்கிறார் ரஜினி. வில்லனாக நடித்துள்ள சுமன், ரஜினிக்கு ஒரூ ரூபாய் நாணயத்தை பிச்சையாக போடுகிறார். அந்த நாணயத்தை வைத்து சுமனுக்கு போன் செய்து வருமான வரி ரெய்டு வதந்தியை கிளப்பி விடுகிறார் ரஜினி. சோதனைக்கு பயந்து சுமன், கோடிக்கணக்கான ரூபாய், தஸ்தாவேஜூக்களை ஒழித்து வைக்கிறார். அந்த பணத்தை எடுத்து ஏழைகளுக்கு உதவுவதற்காக பயன்படுத்துகிறார். ஒரு பெரும் புள்ளியிடமே இவ்வளவு கருப்பு பணம் இருக்கிறதே, தமிழ்நாட்டில் உள்ள எல்லா பெரும் புள்ளிகளிடமும் எத்தனை கோடி இருக்கும்? என்று யோசிக்கும் ரஜினி அடுத்தடுத்து ரெய்டு புரளி கிளப்பி விடும் காட்சிகளில் வில்லனாக மாறுவது ரசிக்கும் வகையில் காட்சியாக்கப்பட்டிருக்கிது.

நடிகர் சுமன் வில்லனாக நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட வில்லனாக வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். ரஜினிக்கு நெருக்கடி கொடுக்கும் காட்சிகளில் எல்லாம் வில்லத்தனத்தில் விளாசியிருக்கிறார். பல கல்வி நிறுவனங்கள் நடத்தி வரும் சுமன், சிவாஜி ட்ரஸ்ட் கல்வி நிறுவனத்தால் தனது நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்படும் என கருதி சிவாஜி ட்ரஸ்ட்டை அரசியல் செல்வாக்குடன் அழிக்கும் முயற்சியில் இறங்குகிறார். சிவாஜி ட்ரஸ்ட் கல்வி நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்த காரணத்துக்காக அரசாங்கத்தையே மாற்றும் காட்சியில் அரசியல்வாதிகள் பளிச்சிடுகிறார்கள். அடுத்ததாக வரும் அரசாங்கத்திலும் பணம் பேசுகிறது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் உதவியுடன் சிவாஜி ட்ரஸ்ட் மீண்டும் வளரத் தொடங்குகிறது. இதனால் ஆவேசத்தின் உச்சத்துக்கு செல்லும் சுமன் சிவாஜி ட்ரஸ்ட் கட்டிடங்களை இடித்துத் தள்ள கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்கிறார். அந்த தடையையும் தகர்த்தெரிந்து வெற்றி பெறுகிறார் ரஜினி.

ஒரு கட்டத்தில், போன் மூலம் ரெய்டு வதந்தி கிளப்பி விட்ட குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்படும் ரஜினியை அங்கேயே தீர்த்துக்கட்ட திட்டமிடுகிறார் சுமன். சிறையில் இருந்து கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் வழியில் ரஜினியை கொல்ல தாக்குதல் நடக்கிறது. தந்திரமாக தப்பித்து விடுகிறார் ரஜினி. வில்லனின் சதித் திட்டத்தில் இருந்து தப்பிக்கும் காட்சிகளில் ரசிகர்களின் கரகேஷத்தால் தியேட்டர் அதிர்கிறது. விபத்தில் ரஜினி இறந்து விட்டார் என்று போலீசாரும், ஊர்காரர்களும் நம்புகிறார்கள். நேராக வெளிநாட்டுக்குச் சென்று மொட்டைத் தலையுடன் எம்.ஜி.ஆர். என்ற பெயரில் தமிழகம்

விமர்சனங்களைத் தேடிப்படிக்கதூண்டியிருக்கி

hi

good morning

i am writing in english so u can remove it becuse it will hurt sonme people

some one has told me srilankan tamils are psychopeople now i finded out from sivaji issue

So at last you finded out.. very good..Go and fly a kite like your thalaivar., who always support Kannada people and not Madras tamils like you.

:angry: :angry: :P

Edited by Ponniyinselvan

சிவாஜி பெரும் வெற்றி பெறும்-ரஜினி :D

சிவாஜி மிகச் சிறப்பாக வந்துள்ளது. இப்படம் மாபெரும் வெற்றி பெறும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள ரஜினி ரசிகர்கள் படு ஆவலாக எதிர்பார்த்து வந்த சிவாஜி ஒரு வழியாக வெளியாகி விட்டது. திரையிடப்பட்ட தியேட்டர்களில் எல்லாம் திருவிழாக் கூட்டமாக உள்ளது.

நேற்று இரவு முதலே பெரும்பாலான தியேட்டர்களில் சிவாஜியைத் தொடங்கி விட்டனர். விடிய விடிய பல தியேட்டர்களில் சிவாஜி ஓடிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் சிவாஜி படம் ரிலீஸாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ரஜினிகாந்த் சிறப்புப் பேட்டி அளித்தார்.

அதில், சிவாஜி சிறப்பாக வந்துள்ளது. இப்படம் பெரும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். மீடியாக்கள் உருவாக்கி விட்ட பரபரப்பு ஒருபக்கம் இருந்தாலும் கூட படம் மிகச் சிறப்பாகவே வந்துள்ளது.

ஷங்கர் மிகச் சிறந்த இயக்குநர். கூடவே ஏவி.எம். நிறுவனமும் சேர்ந்துள்ளால் சிவாஜி மிகச் சிறந்த படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் நான் மிகவும் இளமையானவனாக தோன்றுகிறேன். அந்தப் பெருமை ஷங்கருக்கே போய்ச் சேர வேண்டும். என்னை மாற்றியது ஷங்கர்தான். அதுதான் ஷங்கரின் ஸ்பெஷாலிட்டி.

சிவாஜி பெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எனது ரசிகர்கள் பலவித வேண்டுதல்களில் ஈடுபட்டுள்ளதாக அறிந்து நெகிழ்ந்தேன். என் மீது பாசத்தையும், அன்பையும் வைத்துள்ளவர்கள் அவர்கள். மண் சோறு சாப்பிட்டுக் கூட சிலர் வேண்டுதல் செய்துள்ளனர். இவையெல்லாம் என்னை நெகிழ வைத்து விட்டது.

சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் என்னை ஒப்பிட்டு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது என்னைப் பாதித்து விட்டது. அவர் எங்கே, நான் எங்கே. உண்மையில் அவர்தான் எனக்கு குரு, இன்ஸ்பிரேஷன். அவருடன் ஒப்பிடுவதை நான் விரும்பவில்லை என்றார் ரஜினிகாந்த்.

-thatstamil-

சிவாஜி படத்தினை விமர்சனம் செய்த சினி சவுத் இணையத்தளம் இப்படத்தை 'சிவாஜி' - ஆறிப் போன பஜ்ஜி என்று விமர்சித்துள்ளார்கள். இப்படத்தின் திரைக்கதையில் குறைபாடு உள்ளதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தை நான் திரை அரங்கில் சென்று பார்க்க மாட்டேன்.

எப்படிக் கந்தப்பு ஆறிப் போன பஜ்ஜி இப்போ சூடான பஜ்ஜியாக பறிமாறப் படுகின்றது. சிவாஜி யைப் புறக்கணிப்பதாக சொல்லும் நீரே ஓடியோடி சிவாஜி பற்றிய செய்திகளை சேகரிக்கும் விதமே காட்டுகின்றது உமது ஆர்வக்கோளாற்றை. வாழ்க கந்தப்பு. வளர்க உமது புறக்கணிப்பு. :D:D

விமர்சனங்களைத் தேடிப்படிக்கதூண்டியிருக்கி

Edited by Vasampu

சிவாஜி 'பஞ்ச்' - சிம்பு 'பதிலடி'!

சிவாஜி படத்தில் விவேக் பேசியுள்ள பஞ்ச் வசனம் என்னை மட்டும் குறி வைத்துப் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. தனுஷும் கூடத்தான் விரல் வித்தை காட்டுகிறார் என்று சிம்பு கூறியுள்ளார்.

சிவாஜி படத்தில் ஒரு காட்சி வருகிறது. ரஜினி ஒரு வசனம் பேசப் போவார். அப்போது விவேக் குறுக்கிட்டு, என்ன பஞ்ச் டயலாக் பேசப் போறியா.. சிவாஜி என்பார்.

அதற்கு ரஜினி மண்டையை ஆட்ட, இப்பெல்லாம் சின்னப் பசங்க எல்லாம் விரலை மடக்கி வசனம் பேசுறாங்க.. என்பார் விவேக்.

இதையடுத்து பஞ்ச் டயலாக்கை விவேக்கே பேசுவார் (சித்தூர தாண்டுனா காட்பாடி...சிவாஜிய தொட்டா டெட் பாடி, சிக்ஸுக்கு அப்புறம் செவன்டா... சிவாஜிக்கப்புறம் எவன்டா என்பார்).

இந்தக் காட்சியே சிம்புவை மனதில் வைத்துத்தான் சேர்க்கப்பட்டதாக கருத்து எழுந்துள்ளது. காரணம், சிம்புவின் ஆரம்ப காலப் படங்களில் விரல்களை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து பயமுறுத்தினார்.

குறிப்பாக காதல் அழிவதில்லை படத்தில் அவரது விரல்கள் செய்த அலும்புகள் இன்றும் கூட ரசிகர்களுக்கு மறக்க முடியாத பயானுபவமாக உள்ளது.

இந் நிலையில் விவேக் பேசிய வசனம் குறித்து சிம்பு கருத்து தெரிவித்துள்ளார். தேனியில் காளை படத்தின் ஷூட்டிங் உள்ள சிம்பு, படத்தின் இயக்குநர் தருண்கோபி உள்ளிட்டோருடன் அங்குள்ள சுந்தரம் தியேட்டரில் சிவாஜியைப் பார்த்தார்.

படம் பார்க்கப் போனபோது ஜாலியாக சென்ற சிம்பு படம் முடிந்து வெளியே வந்தபோது வாட்டமாக இருந்தார். படம் குறித்து எந்தக் கருத்தும் கூற மறுத்து விட்டார். விவேக் வசனம்தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந் நிலையில் விவேக் வசனம் குறித்து சிம்பு கூறுகையில், விவேக், சின்னப் பசங்க எல்லாம் விரலை மடக்கி பஞ்ச் டயலாக் பேசுறாங்க என்று சொல்லியுள்ளார். அது என்னைத் தாக்கிப் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

சினிமாவில் நான் மட்டும் இளம் நடிகர் இல்லை. தனுஷும் கூட இளம் நடிகர்தான். தனுஷ் நடித்த சுள்ளான் படத்தில் கூட, விரலைக் காட்டி, சுள்ளான் சூடானால் சுளுக்கு எடுத்துடுவான் என்று வசனம் பேசினார்.

என்னைப் போன்று இன்னும் பல இளம் நடிகர்களும் பஞ்ச் டயலாக் பேசுகிறார்கள். அதனால் என்னைத்தான் விவேக் சொல்லியுள்ளார் என்று கூற முடியாது.

யாரை மனதில் வைத்து அவர் டயலாக் பேசினார் என்பது அவருக்கே வெளிச்சம். யாரைத் தாக்கி அவர் பேசினார் என்பதையும் அவரேதான் சொல்ல வேண்டும் என்றார் சிம்பு.

புது வம்புக்கு பிள்ளையார் சுழியா?

-thatstamil-

சிவாஜி மாபெரும் வெற்றி: ஏவிஎம்

சிவாஜி உலகெங்கும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது என்று தயாரிப்பாளர்கள் ஏவி.எம். சரவணன் மற்றும் எம்.எஸ்.குகன் ஆகியோர் சந்தோஷமாக கூறியுள்ளனர்.

உள்ளூரில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் சிவாஜி மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக ஏவி.எம். சரவணன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், படம் ரிலீஸான நாள் முதல் அதிக அளவிலான பிரிண்டுகள் கேட்டு வெளிநாடுகளிலிருந்து ஆர்டர்கள் குவிந்தவண்ணம் உள்ளது.

அமெரிக்காவுக்கு இன்று 7 கூடுதல் டிஜிட்டில் பிரிண்டுகளும், மலேசியாவுக்கு 3 கூடுதல் டிஜிட்டல் பிரிண்டுகளும் அனுப்பியுள்ளோம். ஆனால் இது போதாது, 10 வேண்டும் என்று மலேசிய விநியோகஸ்தர்கள் கோரியுள்ளனர்.

படத்தின் வியாபாரம் குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் மீண்டும் இணைந்து மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்ததற்காக பெருமைப்படுகிறோம்.

எப்போதுமே சினிமாவில் ரஜினிக்கென்று தனி ஆதிக்கம் உள்ளது. அது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

தமிழ் சூப்பர் ஸ்டாராக இதுவரை இருந்து வந்த ரஜினிகாந்த் சிவாஜி மூலம் உலக சூப்பர் ஸ்டாராக மாறியுள்ளார்.

தற்போது சிவாஜியை மலாய், சீன மொழிகளில் டப் செய்யக் கோரிக்கைகள் வந்துள்ளன. ஆனால் இப்போதைக்கு எங்களிடம் அந்தத் திட்டம் இல்லை. இதுகுறித்து இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மானிடம் கலந்து பேசி முடிவெடுக்கவுள்ளோம்.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள எங்களது விநியோகஸ்தர்கள், கூடுதல் தியேட்டர்களில் படத்தைத் திரையிட வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

பல வெளிநாட்டு தியேட்டர்களில் சிவாஜி மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் ஒரு இந்தியப் படம் இந்த அளவுக்கு அதிக காலத்திற்கு திரையிடப்படுவது இதுவே முதல் முறையாகும், இது ஒரு புதிய சாதனையும் ஆகும் என்றார் சரவணன்.

சிவாஜி 30க்கும் மேற்பட்ட நாடுகளில் திரையிடப்பட்டுள்ளதாம். வெளிநாடுகளில் ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு நிகரான கூட்டம் அலைமோதுகிறதாம்.

சிவாஜியின் இந்த மாபெரும் வெற்றி குறித்து கோலிவுட் தரப்பிலிருந்து இதுவரை யாரும் வாயே திறக்கவில்லை. அவர்களுக்கு இது ஒரு புது அனுபவம்.

மலேசியாவில் புதிய வசூல் சாதனை:

மலேசியாவில் 40 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளதாம். 14ம் தேதி இரவிலிருந்தே சிவாஜியை ஓட்ட ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் டிக்கெட் வசூல், புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளதாம்.

முதல் நாளிலேயே ரூ. 60 லட்சம் வசூலாகியுள்ளதாம். இதற்கு முன்பு, இதே ஷங்கரின் ஜீன்ஸ் படம் வசூல் செய்த ரூ. 32 லட்சம்தான் சாதனை அளவாக இருந்தது. அது நடந்தது 1997ம் ஆண்டு. கிட்டத்தட்ட சரியாக 10 ஆண்டுகள் கழித்து அதே ஷங்கரின் சிவாஜி படம் புதிய வசூல் சாதனையைப் படைத்துள்ளது.

முதல் நாளில் கூட்டம் அலைமோதியதாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ரசிகர்கள் திரண்டு விட்டதாலும், மேலும் சில தியேட்டர்களில் படத்தை திரையிட்டுள்ளனர். கூடுதலாக 22 தியேட்டர்களில் தற்போது சிவாஜி ஓடிக் கொண்டிருக்கிறது.

சிவாஜி திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் திருவிழாக் கூட்டம் போல ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது என்று சரவணன் முகம் நிறைய மகிழ்ச்சியுடன் கூறினார்.

-thatstamil-

குட்டி மாமா ரஜனி எனக்கும் சேர்த்து தானோ சொன்னாரோ தெறியவில்லை

:P

சிவாஜி: ஏவி.எம்.முக்கு 60 கோடி லாபம்

சிவாஜி படத்தின் உலகளாவிய விநியோக உரிமை மூலம் ஏவி.எம். நிறுவனத்திற்கு ரூ. 60 கோடி லாபம் கிடைத்துள்ளாம்.

சிவாஜி என்ற பெயருக்கு இந்தியாவில் பெரும் வரலாறு உண்டு. இப்து இந்தியத் திரையுலகில் சிவாஜி படம் தனி இடத்தைப் பெற்று விட்டது.

இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 85 கோடி செலவில் இப்படம் உருவாக்கப்பட்டது. அதில் ரஜினிகாந்த்தின் சம்பளம் மட்டும் ரூ. 25 கோடியாம்.

பிற கலைஞர்களின் சம்பள விவரம்,

இயக்குநர் ஷங்கர்-ரூ. 5 கோடி, ஏ.ஆர்.ரஹ்மான் - ரூ. 1 கோடி. விவேக், ஷ்ரியா உள்ளிட்ட பிற நடிகர், நடிகைகளுக்கு மொத்தமாக ரூ. 5 கோடி.

120 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. அதன் மொத்த தயாரிப்புச் செலவு ரூ. 6 கோடி. செட் போட்ட வகையில், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், பிற செலவீனங்களாக ரூ. 15 கோடி செலவானதாம்.

மொத்தமாக ரூ. 80 கோடியைத் தாண்டியுள்ளது செலவுக் கணக்கு. இந்த நிலையில் படத்தை விற்ற வகையில் ரூ. 60 கோடி லாபத்தை ஏவி.எம். நிறுவனம் சம்பாதித்துள்ளதாம். பட விநியோகம், படத்திற்குக் கிடைத்த ஸ்பான்சர்கள் மூலம் இந்த லாபம் கிடைத்துள்ளது. நமக்குக் கிடைத்த தகவலின்படி படத்தின் மொத்த பிசினஸ் ரூ. 140 கோடி என்று தெரிய வந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய் நடித்த தேவதாஸ் படம் ரூ. 50 கோடி பட்ஜெட்டில் உருவானது. அதுதான் இந்தியாவிலேயே அதிக பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட படமாக இருந்தது. எனவே இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவான ஒரே படம் சிவாஜி மட்டும்தான்.

ஜூன் 15ம் தேதி வெளியான சிவாஜி, தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து தியேட்டர்களில் திருவிழாக் கூட்டம் காணப்படுகிறது. இந்த ஆண்டின் மிகப் பெரிய ஹிட் படம் சிவாஜி என்று அடித்துச் சொல்லலாம்.

சிவாஜியால் படைக்கப்பட்டுள்ள சாதனைகளை முறியடிக்க இன்னொரு ரஜினி படம்தான் வந்தாக வேண்டும். அந்த அளவுக்கு மெகா சாதனைகளைப் படைத்துவருகிறது சிவாஜி.

ரஜினிக்கு இருப்பது போல ரசிகரகள் கூட்டம் இந்தியாவில் வேறு எந்த நடிகருக்கும் இல்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.

சிவாஜி திரைப்படத்தின் காட்சிகளைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யுங்கள்

Edited by Minor Kunju

எம்.ஜி.ஆர், சிவாஜி கலவை ரஜினி-பாலச்சந்தர்

தமிழ் சினிமாவில், எம்.ஜி.ஆர், சிவாஜி இரண்டுமே ரஜினிதான் என்று இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் கூறியுள்ளார்.

நகைச்சுவைத் திலகம் நாகேஷுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது. இதில், கே.பாலச்சந்தர், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாராட்டு விழா என்னவோ நாகேஷுக்குத்தான். ஆனால் நிகழ்ச்சியில் பேசிய அததனை பேரின் கவனமும் 'சிவாஜி'யை சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

நிகழ்ச்சியின் ஹைலைட் கே.பாலச்சந்தரின் பேச்சுதான். நாகேஷுக்கு பாரத ரத்னா விருது கொடுத்து கெளரவிக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்திய கே.பி, பின்னர் டாபிக் மாறினார்.

"இன்றைக்கு உலகம் முழுவதும் பேசப்படுகிற மிகப் பெரிய நடிகராக திகழ்கிறார் ரஜினிகாந்த். சிலர் அவரை தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டார் என்று குறுகிய வட்டத்துக்குள் அடைக்கப் பார்க்கிறார்கள்.

அது வேண்டாம். நமது ரஜினி, சர்வதேச சூப்பர் ஸ்டாராக விஸ்வரூபம் எடுத்துள்ளார். நான்தான் ரஜினியை அறிமுகப்படுத்தினேன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு எப்போதும் இல்லாத பெருமிதம், இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

சிவாஜி படத்தை நானும் பார்த்தேன். அந்தப் படத்துக்குப் பாராட்டி எதைச் சொல்வது, எதை விடுவது என்றே எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் ரஜினியைப் பார்த்து புல்லரித்துப் போனேன்.

படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரும் நான்தான், சிவாஜியும் நான்தான் என்று ரஜினி வசனம் பேசுவார். என்னை பொருத்தவரை அதுதான் உண்மையும் கூட. இப்போது மட்டுமல்ல, எப்போதுமே இனி ரஜினிதான், எம்.ஜி.ஆர்., சிவாஜி. இந்த இரு மாபெரும் மேதைகளில் சரியான கலவை தான் நமது சூப்பர் ஸ்டார்" என்றார் கே.பி.

ரஜினியின் அடுத்த படம் கே.பியின் கவிதாலயா நிறுவனத்துக்குத்தான் என்று ஒரு பேச்சு இப்போதே கோடம்பாக்கத்தில் ரெக்கை கட்டிப் பறந்து வருகிறது. இந்த நிலையில், கே.பியின் இந்தப் பாராட்டு விசேஷ அர்த்தம் பெறுகிறது.

சிவாஜி தியேட்டர்களில் ஐ.டி. ரெய்டு!

ஆந்திராவில் சிவாஜி படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி உலகெங்கும் ஒரே நேரத்தில் திரையிடப்பட்டது. ஆந்திராவில் சிவாஜி படத்தின் தெலுங்குப் பதிப்பு வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. ஆந்திரா முழுவதும் சிவாஜி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டுள்ளது.

கவுண்டர்களில் டிக்கெட் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கு பிளாக்கில் டிக்கெட் விற்கப்படும் நிலை அங்கு காணப்படுகிறது. இந்த நிலையில், வருமான வரித்துறையினர் சிவாஜி படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் அதிரடி ரெய்டு நடத்தியுள்ள்ளனர்.

ஏவூர் என்ற இடத்தில் சிவாஜி படம் திரையிடப்பட்டுள்ள இரண்டு தியேட்டர்களில் அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்தினர். டிக்கெட் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பது குறித்து முக்கியமாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.

ஒவ்வொரு காட்சியிலும் என்ன வசூல் ஆகியுள்ளது என்பதையும் அதிகாரிகள் கேட்டறிந்தனராம். இதேபோல பீமாவரத்தில் உள்ள தியேட்டரிலும் சோதனை நடந்துள்ளது.

சிவாஜி படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்பபடுத்தியுள்ளது.

சிவாஜி படத்தை தனது நண்பரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு ஸ்பெஷலாக போட்டுக் காட்டினார் ரஜினி. அப்போது 3வது அணிக்கு ஆதரவு தருமாறு பகிரங்கமாகவே கோரிக்கை விடுத்தார் நாயுடு.

இந்தப் பின்னணியில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஆந்திராவில் ரஜினியின் சிவாஜி திரையிட்ட தியேட்டர்களில் வருமான வரித்துறை நடத்தியுள்ள ரெய்டு பரபரப்பைக் கூட்டியுள்ளது.

ஜப்பானில் 'சிவாஜி' எப்போ?

ஜப்பான், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இன்னும் ஒரு வாரம் கழித்துத்தான் சிவாஜி படம் ரிலீஸாகிறதாம்.

கடந்த 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் உலகெங்கும் சிவாஜி ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்டு வருகிறது. பல உலக நாடுகளில் சிவாஜி ரிலீஸாகி விட்டாலும் கூட ரஜினிக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ள ஜப்பானிலும், தென் ஆப்பிரிக்காவிலும் இன்னும் அப்படம் ரிலீஸ் ஆகவில்லை.

இந்த இரு நாடுகளிலும் இந்த மாதக் கடைசியில்தான் படம் திரைக்கு வருகிறதாம்.

ஜப்பானில் ரஜினிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். எல்லாம் முத்துவும், படையப்பாவும் சம்பாதித்துக் கொடுத்தவை. ஏராளமான ரசிகர் மன்றங்களும் உள்ளன. ஜப்பானியர்களை ரஜினி வெகுவாக கவர்ந்து விட்டார்.

முத்துப் படத்தைப் பார்த்த பின்னர் ஜப்பானியர்களுக்கு ரஜினி பெரும் மாயாஜால ஹீரோவாக மாறிப்போயுள்ளார்.

முத்து படத்திற்குப் பிறகு ரஜினியின் ஒவ்வொரு படத்தையும் ஜப்பான் ரசிகர்கள் திருவிழா போலக் கொண்டாடுகின்றனர். கடைசியாக வந்த சந்திரமுகி ஜப்பானில் 200 நாட்கள் ஓடி அசத்தியது.

தென் ஆப்பிரிக்காவிலும் அதே கதைதான். சமீபத்தில்தான் தென் ஆப்பிரிக்காவில் சந்திரமுகியின் 250வது நாள் விழாவை விமரிசையாக கொண்டாடினர் ரசிகர்கள்.

இந்த நிலையில் ரஜினியின் சிவாஜியை படு ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர் இரு நாட்டு ரசிகர்களும். திட்டமிட்ட காலத்திற்குப் பின்பே இந்த இரு நாடுகளிலும் சிவாஜியை திரையிட ஏவி.எம் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான பிரிண்டுகளும் இந்த இரு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இங்கு திரையிடும் உரிமையைப் பெற்றுள்ள அய்ங்கரன் நிறுவனம் ஜப்பானில் 60 பிரிண்டுகளையும், தென் ஆப்பிரிக்காவில் 50 பிரிண்டுகளையும் அனுப்பவுள்ளது.

அதேபோல கொரியா, ரஷ்யா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் ஜூலை முதல் வாரத்தில் சிவாஜி ரிலீஸ் ஆகிறதாம்.

இப்படிப் பல நாடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சிவாஜியை, மலாய் மற்றும் சீன மொழிகளில் டப் செய்ய தற்போது ஏவிஎம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டப் செய்யப்பட்ட பின்னர் சீனா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேரடியாக ரிலீஸ் செய்யப் போகிறார்களாம்.

இதற்கிடையே, சிகாகோவில் சிவாஜி திரையிடப்பட்டபோது அதை திருவிழா போலக் கொண்டாடி அசத்தியுள்ளனர் ரஜினி ரசிகர்கள்.

இங்குள்ள புளூமிங்டேல் கோர்ட் தியேட்டரில் சிவாஜி திரையிடப்பட்டது. படத்தைப் பார்க்க ரசிகர்கள் வரிசை கட்டி படு ஆர்வத்தோடு காத்திருந்துப் படத்தைப் பார்த்துள்ளனர்.

சிகாகோ ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் ரஜினிபோலவே உடை அணிந்து படம் பார்க்க வந்திருந்தது படு வித்தியாசமாக இருந்தது.

படம் தொடங்குவதற்கு முன்பு பூசணிக்காயை உடைத்து அசத்தினர் ரசிகர்கள். நேபர்வில்லியில் உயர் நிலைப் பள்ளியில் படித்து வரும் 14 வயதே ஆன அபூர்வா ஆனந்தன் தீவிர ரஜினி ரசிகர்.

படம் பார்க்க வந்திருந்த அபூர்வா கூறுகையில், பிராட் பிட் படம் பார்க்க வந்தது போல உணர்கிறேன் என்று புளகாங்கிதமடைந்து கூறினார். ஒரு மாதத்திற்கு முன்பே டிக்கெட் வாங்கி விட்டாராம் அபூர்வா ஆனந்தன். சிவாஜியைப் பார்த்த அவர் மீண்டும் ஒருமுறை பார்ப்பேன் என்று கூறியுள்ளார்.

சிகாகோ தமிழ் சங்க செய்தித் தொடர்பாளர் ராஜு ரகுராமன் கூறுகையில், சிகாகோவில் 4000 தமிழ் குடும்பங்கள் உள்ளது. அவர்களுக்கு தமிழ்ப் படங்கள் என்பது மிகப் பெரிய நிகழ்ச்சி. அதிலும் சிவாஜி பெரும் திருவிழா போலவே காணப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் தமிழில் உருவான சிவாஜி என்பது இங்குள்ள தமிழர்களுக்குப் பெருமையான விஷயம் என்றார்.

கார்த்திக் மதன் என்பவர் கூறுகையில், ஆசியாவிலேயே பெரிய ஸ்டார் ஜாக்கி சான். அதற்கு அடுத்து ரஜினிதான். ரஜினியின் ஸ்டைல் மற்றும் மானரிசம் உலகப் புகழ் பெற்றது. அவரது படங்களில் பெரும்பாலும் காமெடியும் ஆக்ஷனும் அதி கலக்கலாக இருக்கும் என்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவாஜி படம் இணையத்தில் உலாவந்துவிட்டது

http://www.tamiljothy.net/?mode=movies

  • தொடங்கியவர்

உலகை உலுக்கும் சிவாஜி;பின்னி எடுக்கும் வசூல்!

உலக அளவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. எங்கு பார்த்தாலும் வசூல் மழையாக உள்ளதாம்.

உலக அளவில் இந்திப் படங்களுக்குத்தான் பெரிய அளவில் மார்க்கெட் உள்ளது என்பது பொதுவான கருத்து. ஆனால் அந்தக் கருத்தை சிவாஜி தகர்த்தெறிந்து விட்டது. சிவாஜி மூலம் தமிழ் சினிமாவுக்கே புதிய உலக மார்க்கெட் உருவாகியுள்ளது.

உலக அளவில் ஒரே நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ரிலீஸ் ஆன ஒரே பிராந்திய மொழிப் படம் சிவாஜிதான். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளின் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகியுள்ள சிவாஜி, விரைவில் மலாய், சீன, ஜப்பானீஸ், கொரியன் ஆகிய மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்படவுள்ளது.

உலக அளவில் அய்ங்கரன் உள்ளிட்ட ஐந்து விநியோக நிறுவனங்கள் சிவாஜியை திரையிட்டுள்ளன. 300க்கும் மேற்பட்ட பிரிண்டுகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 340 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளது.

வெளிநாடுளில் இந்தியப் படம் ஒன்று இத்தனை பிரிண்டுகளுடன் திரையிடப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். தமிழிலும் இதுவே முதல் முறை.

90களில் வெளியாகி இந்தியாவையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய ஷாருக்கானின் தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே படத்திற்குக் கூட வெளிநாடுகளில் 60 பிரிண்டுகள்தான் அனுப்பப்பட்டன. அந்த வகையில் சிவாஜி படைத்துள்ள சாதனை இமாலய சாதனையாகும்.

2 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியின் சந்திரமுகி வெளியானபோது, வெளிநாடுகளில் 90 பிரிண்டுகள் அனுப்பப்பட்டன. அப்போது அதுதான் பெரிய தமிழ்ப் பட சாதனையாக இருந்தது. இப்போது சிவாஜி வந்து அதை முறியடித்து விட்டது.

இனி உலக அளவில் சிவாஜி செய்து கொண்டுள்ள சாதனைகளைப் பார்ப்போம்.

இங்கிலாந்து: இங்கிலாந்து சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த நாட்டின் டாப் 10 பட பட்டியலில் சிவாஜியை சேர்த்துள்ளனராம். படத்திற்கு இன்னும் ரேட்டிங் கிடைக்கவில்லை. ஆனால் டாப் 10 பட்டியலில் இந்தியப் படம் ஒன்று இடம் பெற்றிருப்பதே பெரிய சாதனையாக கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் (ஸ்காட்லாந்து உள்பட) மொத்தம் 15க்கும் மேற்பட்ட சென்டர்களில் படம் திரையிடப்பட்டுள்ளாம். லண்டனில் மட்டும் 5 தியேட்டர்களில் சிவாஜி போடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் ஒரு வாரத்திற்கு மட்டும் படத்தை திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கூட்டத்தைப் பார்த்த பின்னர் ஐந்து தியேட்டர்களிலும் வருகிற 28ம் தேதி வரைக்கும் சிவாஜியையே ஓட்ட முடிவெடுத்துள்ளனராம்.

ஸ்காட்லாந்தில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் சிவாஜிதானாம். அங்குள்ள கிளாஸ்கோ நகரில் படம் திரையிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா: அமெரிக்காவில் தமிழ் சிவாஜி 46 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளதாம். அமெரிக்காவில் வழக்கமாக வார இறுதியில்தான் தமிழ்ப் படங்கள் திரையிடப்படும். ஆனால் சிவாஜி விஷயத்தில் இது தலைகீழாக மாறியுள்ளதாம்.

ரெகுலர் காட்சிகளாகவே சிவாஜி அங்கு ஓடிக் கொண்டுள்ளது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கேற்ப சில தியேட்டர்களில் மேலும் சில நாட்கள் சிவாஜியை திரையிட தீர்மானித்துள்ளனராம்.

தலைநகர் வாஷிங்டனில், முதல் முறையாக ஒரு தமிழ்ப் படம் திரையிடப்பட்டுள்ளது (தெலுங்கிலும் இதுவே முதல் முறையாம்) என்ற பெருமை சிவாஜிக்குக் கிடைத்துள்ளது.

பே ஏரியா பகுதியில், சிவாஜி 2 தியேட்டர்களில் ஓடிக் கொண்டுள்ளது. இதில் தமிழ் சிவாஜிக்கு மட்டும் 5000 டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளதாம்.

தமிழர்கள் மட்டுமல்லாமல், பிற மொழி பேசும் இந்தியர்களும், அமெரிக்க வெள்ளையர்களும் கூட சிவாஜியைப் பார்க்க முட்டி மோதிக் கொண்டுள்ளனராம்.

கொலம்பஸ் நகரில் முதல் நாள் முதல் காட்சியன்று உட்கார இடம் கிடைக்காமல் ரசிகர்கள் பலர் நின்று கொண்டே படம் பார்த்தார்களாம்.

அமெரிக்காவில் சிவாஜியைத் திரையிடும் விநியோக உரிமையைப் பெற்றுள்ள வாணி மோகன் கூறுகையில், படம் திரையிடப்பட்ட அனைத்து சென்டர்களிலும் நல்ல ரெஸ்பான்ஸ். பல தியேட்டர்களில் பெரும் திரளான வெள்ளையர்களையும் காண முடிந்தது. ரஜினி ரசிகர்களுடன் சேர்ந்து அவர்களும் ஆடிப் பாடி படத்தை ரசித்தனர்.

சிவாஜி படம் மூலம் எனக்கு 200 சதவீத லாபம் கிடைத்துள்ளது. ரஜினி சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, டிரெண்ட் செட்டரும் கூட என்றார்.

கனடாவில் டொரண்டோ நகரில் 6 தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டுள்ளது. வான்கூவர், ஓண்டாரியோ நகரங்களில் தலா 2 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளது.

எட்மாண்டன் உள்ளிட்ட நகரங்களில் கனடா தமிழ்ச் சங்கம் சார்பில் விசேஷ காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கனடாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட இணைய தளத்தில், இந்த வாரத்தின் நம்பர் ஒன் படமாக சிவாஜியை சிறப்பித்துள்ளனராம். சிவாஜிக்கு 10க்கு 9.7 மார்க் கிடைத்துள்ளதாம்.

மலேசியா, சிங்கப்பூரில் சிவாஜி பெரும் சாதனை படைத்துள்ளது. மலேசியாவில் மட்டும் 40 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளதாம். ஆனால் கூட்டம் பெரும் திரளாக மாறிப் போனதால் கூடுதலாக 20 தியேட்டர்களில் படத்தை திரையிட்டுள்ளனர். 60 தியேட்டர்களிலும் சிவாஜி ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டுள்ளதாம்.

ஜெர்மனியில் தமிழ்ப் படங்கள் ரிலீஸ் ஆவது வெகு அரிதானதாம். ஆனால் சிவாஜி அதையும் தாண்டி, 25 செண்டர்களில் ஓடிக் கொண்டுள்ளது. மூனிச் நகரில் நடந்த 25வது வருடாந்திர திரைப்பட பொருட்காட்சியில், 2 நாட்களுக்கு சிவாஜியை திரையிட்டுள்ளனர். அதிரடி பாட்டுக்கு பல ஜெர்மானியர்கள் ஆட்டம் போட்டு ரசித்துததான் இதில் ரொம்ப விசேஷமானது.

அயர்லாந்திலும் சிவாஜி புகுந்து விட்டது. அங்கு டப்ளின் நகரில் 2 தியேட்டர்களில் 6 காட்சிகளாக சிவாஜி ஓடிக் கொண்டுள்ளது. சிவாஜிதான் ஜெர்மனியில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமாம்.

ஐரோப்பிய நாடுகளில் ஸ்விட்சர்லாந்தில் (5 செண்டர்களில் 20 காட்சிகள்), பிரான்ஸில் (எஸ்பேஸ் சினிமா பாரீஸில் 4 காட்சிகள்), நார்வேயில் (ஓஸ்லோவில் ஒரு காட்சி), போலந்தில் (வார்சாவில் 2 காட்சிகள்), நெதர்லாந்தில் (8 செண்டர்கள்), டென்மார்க்கில் (10 செண்டர்கள்), இத்தாலியில், (இரு நகரங்களில்) என சிவாஜி கலக்கி வருகிறது.

தமிழர்கள் அதிகம் உள்ள ஆஸ்திரேலியாவில் சாதனை அளவாக 25 பிரிண்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. நியூசிலாந்தில் 9 பிரிண்டுகளுடன் சிவாஜி ஓடிக் கொண்டுள்ளது.

மத்திய கிழக்கிலும் சிவாஜிக்கு அமோக வரவேற்பாம். துபாய், அபுதாபி, ஷார்ஜா, கத்தார், பஹ்ரைன் என பல நாடுகளில் சிவாஜி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டுள்ளதாம். ஆகஸ்ட் வரை இங்கு சிவாஜியை ஓட்ட முடிவு செய்துள்ளனராம்.

இலங்கையில் 14 பிரிண்டுகளுடன் 9 மையங்களில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளது. சென்னையைப் போலவே இங்கும் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு டிக்கெட்டுகள் புக் ஆகி விட்டதாம்.

கை வலிக்க வலிக்க அடிச்சாலும் சிவாஜி கதை நீண்டு கொண்டே போகுதப்பா!

நன்றி தற்ஸ்தமிழ்

ஜெர்மனியில் தமிழ்ப் படங்கள் ரிலீஸ் ஆவது வெகு அரிதானதாம். ஆனால் சிவாஜி அதையும் தாண்டி, 25 செண்டர்களில் ஓடிக் கொண்டுள்ளது.

ஓடிக் கொண்டிருக்கவில்லை. ஒரு காட்சி அல்லது 2 காட்சி என ஓடியது... பிறேமனைப் பொறுத்தளவில் 2 காட்சி ஓடியது. கொட்டகையில் அரைப்பங்கு இருக்கைகள் வெறுமையாக இருந்தது என கூறினார்கள். காரணம் பகிஷ்கரிப்பு என்று நினைக்காதீங்க.. சீட்டுக் கட்டணம் அதிகமாம்.. :unsure: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெர்மனியில் தமிழ்ப் படங்கள் ரிலீஸ் ஆவது வெகு அரிதானதாம். ஆனால் சிவாஜி அதையும் தாண்டி, 25 செண்டர்களில் ஓடிக் கொண்டுள்ளது.

ஓடிக் கொண்டிருக்கவில்லை. ஒரு காட்சி அல்லது 2 காட்சி என ஓடியது... பிறேமனைப் பொறுத்தளவில் 2 காட்சி ஓடியது. கொட்டகையில் அரைப்பங்கு இருக்கைகள் வெறுமையாக இருந்தது என கூறினார்கள். காரணம் பகிஷ்கரிப்பு என்று நினைக்காதீங்க.. சீட்டுக் கட்டணம் அதிகமாம்.. :huh: :P

போனகிழமை நானிருக்கிற இடத்திலை ஒரு கலியாணவீடு நடந்தது.அதுக்கு பிறேமனிலை இருந்துதான் சாப்பாடு வந்தது.சாப்பாடு கொண்டந்தவரிட்டை சிவாசி(ஜி)படம் எப்பிடியப்பா எண்டு விசாரிச்சன்.அவர் சொன்னார் சங்கரின்ரை படமெண்டால் தெரியுந்தானே எண்டார்.அப்ப நான் கதை எப்பிடியப்பா எண்டு.அதுக்கு சொன்னார் தான் தியேட்டருக்கு வெளிய வரேக்கையே கதையை மறந்து போனாரம். :blink:

  • கருத்துக்கள உறவுகள்

எப்படிக் கந்தப்பு ஆறிப் போன பஜ்ஜி இப்போ சூடான பஜ்ஜியாக பறிமாறப் படுகின்றது. சிவாஜி யைப் புறக்கணிப்பதாக சொல்லும் நீரே ஓடியோடி சிவாஜி பற்றிய செய்திகளை சேகரிக்கும் விதமே காட்டுகின்றது உமது ஆர்வக்கோளாற்றை. வாழ்க கந்தப்பு. வளர்க உமது புறக்கணிப்பு

உலகக்கிண்ணப்போட்டியில் நான் இலங்கை அணி வெற்றி பெறக்கூடாது என நினைத்து யாழில் கருத்தினை எழுதினேன். அதற்காக இலங்கை தோற்கப்படும் செய்திகளை யாழில் இணைத்தேன். அந்தத் தோல்விச்செய்திகளை இணைப்பது இலங்கை அணிக்கு ஆதரவு என்று பொருள் படுமா?. தமிழீழத்தில் சிங்களப்படை தோற்கவேண்டுமென்றே எல்லாத்தமிழர்களும் விரும்புவார்கள். அதனால் தான் இராணுவத்தில் 50 பேர் பலி என்றவுடன் மகிழ்ச்சியில் யாழில் கருத்துக்கள்/செய்திகள் உடனுக்குடன் தேடி இணைக்கிறோம். சிங்களப்படையின் தோல்வியை யாழில் இணைத்தால் , சிங்களப்படைக்கு நாம் ஆதரவு என்று அர்த்தமா?. நான் சிவாஜி பற்றி யாழில் இணைத்த செய்திகளை மீண்டும் வாசித்துப்பாருங்கள்.

சிவாஜி படத்தினை விமர்சனம் செய்த சினி சவுத் இணையத்தளம் இப்படத்தை 'சிவாஜி' - ஆறிப் போன பஜ்ஜி என்று விமர்சித்துள்ளார்கள். இப்படத்தின் திரைக்கதையில் குறைபாடு உள்ளதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தை நான் திரை அரங்கில் சென்று பார்க்க மாட்டேன்.

சிவாஜி ஆறிப்போன பஞ்சி -அதாவது படம் சரியில்லை. சிவாஜி படத்தை எக்காரணம் கொண்டும் திரை அரங்கில் பார்க்க மாட்டேன். இது உறுதி.

Edited by கந்தப்பு

2)படத்திற்கு ஒருக்கா போக மாட்டேன் என்று சொன்னா அது காணும் தானே அது என்ன போக மாட்டேன் போக மாட்டேன் என்று எத்தனை தரம் தான் சொல்லுறது...................இதை நான் நினைகிறேன் சுயவிளம்பரம் என்று............

கந்தப்பு

நீங்கள் களத்திற்கு ஆரம்பத்தில் வரும் போதே ஐயோ நான் தவறு செய்துவிட்டேன் எனக்கு மன்னிப்பேயில்லை என புலம்பலோடு வந்தவர் தானே. அதே நிலையில் தான் இப்போதும் உள்ளீர்கள். ஒரு விளையாட்டில் இலங்கை தோற்க வேண்டும் என்பதற்கும் ஒரு படத்தைப் புறக்கணிக்கின்றேன் என்பதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா?? நீங்கள் புறக்கணிக்கும் ஒரு படத்தைப் பற்றிய செய்திகளை நீங்கள் ஏன் புறக்கணிக்கவில்லை. வெளியில் புறக்கணிக்கின்றேன் என்று புலம்பினாலும் உங்கள் உள்மனதால் புறக்கணிக்க முடியவில்லை. அதுதான் உண்மை. நீங்கள் படத்தை புறக்கணிக்கின்றேன் என்று ஒருமுறை எழுதினாலே போதும் தானே?? ஆனால் எத்தனை தடவைகள் இங்கு எழுதியுள்ளீர்கள். மேலே ஜமுனா சொன்னது போல் உங்கள் நோக்கம் புறக்கணிப்பல்ல சுயவிளம்பரம் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுகாசினியின் சிவாஜி பற்றிய ஆக்கம்

(45min)

http://tamilvideo.info/view_video.php?view...56240b2ff0100bd

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.