Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜி

Featured Replies

A good and important request. All tamils (if u really..) should hear this.

  • Replies 351
  • Views 34.8k
  • Created
  • Last Reply
sivagijs7.jpg
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் சிவாஜி படத்தை திரையிடுவதற்கு போட்டியாக இருக்க, ஐரோப்பாவிலும் சிவாஜியை திறந்துவிட மன்னிக்கவும் திரையிட சில மப்பு மாபியாக்கள் மன்னிக்கவும் விஐபியள் போட்டி இடுவதாக தெரியவருகிறது அந்த வகையில் ஏ.வி.எமிடருந்து...

சுவிசில் அப்படத்தை திரையிட திரு.சின்னப்பு என்பவர் ரூபா 34.90 பைசாவுக்கும்.

பிரான்சில் திரையிட திரு.ஆட்டுக்கால் அப்பாஸ் சாத்திரி 29ரூபா 30 பைசாவுக்கும்..

அவுஸ்ரேலியாவில் திரையிட சேர்.ஹந்தப்பு 28 ரூபா 32 பைசாவும்..

மேலும் மாப்பு, கொழுப்பு, உறைப்பு ஆகிய விஐபியள் ஒன்றினைந்து உலகமெங்கும் அவ் திரைப்படத்தினை திரையிட ரூபா 40, 99 பைசாவுக்கு சங்கரிடமிருந்து படத்தை வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலை கொமடி இணையத்தளமான தேனி.கொம் இணையத்தளம் உறுதிப்படுத்தி உள்ளது. :blink::(

உதெல்லாத்தையும் யாழில போட்டால் கணக்க காசு இருக்குது என்று கொழும்புக்கு போகும் போது ஆராவது என்னைக் கடத்தினால் ?

ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஒரு பாடல் காட்சி. முழுக்க கண்ணாடியிலான பல லட்சம் மதிப்புள்ள அரங்கு. ரஜினியும் ஸ்ரேயாவும் கண்ணாடி அரங்கில் ஆடி முடிந்ததும், அரங்குக்கு பயன்படுத்தப்பட்ட கண்ணாடிகளை கவனமாக பிரித்து மீண்டும் விற்பனை செய்ததில் ஏவிஎம் நிறுவனத்துக்கு செலவு செய்த பணத்தில் சில லட்சம் திரும்ப கிடைத்தது.

அதேபோல் பல லட்ச ரூபாய்க்கு வாங்கி அதே அளவுக்கு செலவு செய்து ஹைடெக்காக மாற்றிய சொகுசு பேருந்தையும் விற்பனைக்கு விடுகிறார்கள். 'சிவாஜி' படத்தில் இந்த பேருந்து ஒரு கேரக்டராகவே வருகிறது.

படத்தில் வில்லன் ஆட்கள் ரஜினியின் குடும்பத்தை கொன்று விடுகிறார்கள். ரஜினிக்கும் குண்டடி படுகிறது. அவரை காப்பாற்றுகிறார் ரகுவரன். சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு சென்றால் வில்லன் ஆட்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என ரஜினிக்கு சிகிச்சை அளிப்பதற்கென்றே பிரத்யேகமாக ஒரு பேருந்தை உருவாக்குகிறார். வெளியே சாதாரண சொகுசு பேருந்தை போல் தோன்றும் இதன் உள்அமைப்பு அசாதாரணமானது. கழிவறை, ஆபரேஷன் தியேட்டர், கான்பரன்ஸ் ஹால் என ஹை-டெக் வசதிகள் கொண்டது.

சென்னை நகரில் இப்பேருந்து தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்க, பேருந்தினுள்ளே ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

படத்தில் ரஜினியை காப்பாற்றும் இந்த பேருந்து விற்பனைக்கு வருகிறது. ஹை-டெக் வசதிகளுடன் 'சிவாஜி'யில் நடித்த பெருமையும் இருப்பதால் செலவு செய்த பணத்திற்கு மேல் பேருந்து விலை போனாலும் ஆச்சரியமில்லை!

:):)

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு பாட்டும் இணையத்தில் வந்திருக்காம்.. எங்கேயென்றுதான் தெரியல.. :lol:

1. Athirade...mp3

2. Balleilakka....mp3

03. Sahaanaa...mp3

04. Sahaaraa.mp3

05. Style...mp3

06. The Boss...mp3

07. Vaaji vaaji vaa.....mp3

எவனோ கோடிக்கணக்கில் வாங்குகிறான். விமானநிலையத்தில் சாதாரண மனுசனுக்கு வரக்கூடிய நியாய உணர்வு கூட இல்லாமல் நடந்து கொள்கிறவனின் பாடல்கள் என்ன.. படமே திருட்டுப்போனாலும் நமக்கென்ன...

எங்களுக்காக உழைத்தவர்கள் மரணிக்கிறார்கள்.. அதையிட்டு கண்ணீர் வடித்தாலும் ..நியாயம்

:angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏழு பாட்டும் இணையத்தில் வந்திருக்காம்.. எங்கேயென்றுதான் தெரியல.. :lol:

1. Athirade...mp3

2. Balleilakka....mp3

03. Sahaanaa...mp3

04. Sahaaraa.mp3

05. Style...mp3

06. The Boss...mp3

07. Vaaji vaaji vaa.....mp3

http://mp3.tamilwire.com/index.php?dir=Sivaji/

இணையதளத்தில் 'சிவாஜி' பாடல் வெளியான ரகசியம்!

'சிவாஜி' ஆடியோ ஏப்ரல் 4-ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது (இப்போது இந்த தேதியை மாற்றிவிட்டார்கள்). அதற்குள் ஆறரை கோடி தமிழர்களும் பாடல்களை கேட்டு விட்டார்கள். இருந்தாலும் இந்த ஆடியோ பைரஸியை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

'சிவாஜி' யில் மொத்தம் ஐந்து பாடல்கள். இதில் மூன்று பாடல்கள் இணையதளத்தில் வெளியாயின. 'ஒரு கூடை சன் லைட்...' 'சஹாரா பூக்கள்...', 'ஜி.... சிவாஜி...' என்ற அந்த மூன்று பாடல்களின் திருட்டு ஆடியோ சி.டி.க்கள் கன ஜோராக வியாபாரமாகின்றன.

சின்னதாக செய்தி கசிந்தாலே சிலிர்த்தெழும் 'சிவாஜி' யூனிட் இந்த ஆடியோ விஷயத்தை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. இது அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை எழுப்பியுள்ளது.

ஆனால், இணையதளத்தில் பாடல்கள் வெளியானது பட தயாரிப்பாளர்களின் ஒப்புதலுடன்தான் என்கிறார்கள். படத்தின் மூன்று பாடல்களை லம்பாக ஒரு அமெளண்டுக்கு குறிப்பிட்ட இணையதளத்திற்கு விற்றிருக்கிறார்கள். ஏன் மூன்று பாடல்கள் மட்டும்? மொத்த பாடல்களையும் வெளியிட்டால் எதிர்பார்ப்பு கம்மியாகி விடுமாம். எனவே முறைப்படி ஆடியோ வெளியிட்டப் பிறகு மீதி இரு பாடல்களும் அந்த இணையதளத்திற்கு வழங்கப்படுவதாக ஒப்பந்தம்.

சின்னச் சின்னதாக இப்படி இன்னும் எத்தனை சாதனைகளை செய்யப் போகிறதோ தெரியவில்லை 'சிவாஜி!'

அப்படிக்கேளுங்க பொன்னியின் செல்வன். நாங்க கால் கடுக்க திரையருங்களில் நின்ற அதே வீலிங் தான் இங்கயும் இவர்களுக்கு இருக்கு. ஆனா உந்த மனுசன் ரஜனிக்கு மட்டும் தெரியாது இவர்களினை எப்படி தங்க வைத்துக்கொள்ளுறது எண்டு. நாளை என்னுமொரு ஆள் வந்து ரஜினியினை முந்தினா இவர்கள் ரஜினியினை மறந்து விடுவார்கள்.

....... விமானநிலையத்தில் சாதாரண மனுசனுக்கு வரக்கூடிய நியாய உணர்வு கூட இல்லாமல் நடந்து கொள்கிறவனின் பாடல்கள் என்ன.....

:angry:

இதன்.... விரிவு அல்லது விளக்கம் அறிய ஆவல்.. :lol: நன்றி.

அத்தனை பாடல்களையும் மகிழ்வுடன் திருட :P

http://www.minnalstar.com/index1.html

ஜானா

அப்படிக்கேளுங்க பொன்னியின் செல்வன். நாங்க கால் கடுக்க திரையருங்களில் நின்ற அதே வீலிங் தான் இங்கயும் இவர்களுக்கு இருக்கு. ஆனா உந்த மனுசன் ரஜனிக்கு மட்டும் தெரியாது இவர்களினை எப்படி தங்க வைத்துக்கொள்ளுறது எண்டு. நாளை என்னுமொரு ஆள் வந்து ரஜினியினை முந்தினா இவர்கள் ரஜினியினை மறந்து விடுவார்கள்.

நன்றி..உங்களுக்கு.. :

:P

Edited by Ponniyinselvan

இதன்.... விரிவு அல்லது விளக்கம் அறிய ஆவல்.. :lol: நன்றி.

சென்னை விமானநிலையத்தில் ஒரு தமிழ் பெண்மணிக்கு அநியாயம் இழைக்கப்பட்டபோது கண்டும் காணாதது போனார். இந்த சிவாஜிராவ் ..

:angry:

93431752pa5.jpg

ரஜனிக்கே இது ஓவரா தெரியலையா

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனிக்கே இது ஓவரா தெரியலையா

ஒவராப் போட்டா ஒண்ணுமே தெரியாது :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணையத்தில் உலாவும் சிவாஜி எனும் தலைப்பில் வர்ணப்படங்களுடன் பாடல்கள் ஏழும் கேட்கும் வசதியுடன் இச்சுட்டியில் உள்ளது http://www.ekalamm.net.ms/

ரஜனிக்கே இது ஓவரா தெரியலையா

இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

ஒவராப் போட்டா ஒண்ணுமே தெரியாது :lol:

:angry: :angry:

எங்கெங்கு நோக்கினும் ‘சிவாஜி’மயமாக இருக்கும் இந்த நேரத்தில், திடீரென்று ரஜினிக்கு எதிராகக் கொதித்தெழுந்திருக்கிறார், லட்சிய தி.மு.க&வின் தலைவரும் நடிகருமான விஜய டி.ராஜேந்தர்.

‘‘அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் டிக்கெட் விலையை விட கூடுதலான விலையில் ‘சிவாஜி’ பட டிக்கெட் விலையை விற்க அரசு அனுமதித்தால், அதை லட்சிய தி.மு.க. வேடிக்கை பார்க்காது’’ என்று நெல்லையில் வெளிப்படை யாக சவால் விட்டிருக்கிறார் விஜய டி.ராஜேந்தர். இந்த சவால்... கோடம்பாக்கத்தை ரொம்பவே உசுப்பேற்றி யிருக்கிறது. ‘சிவாஜி படத்துக்கும், டிக்கெட் விலைக்கும் என்ன சம்பந்தம்? இதில் எங்கிருந்து விஜய டி.ராஜேந்தர் வந்தார்?’ என்ற கேள்விகளுடன் கோடம்பாக்கத்தை வலம் வந்தோம். நம்மிடம் முதலில் பேசிய தமிழ் சினிமாவின் சீனியர் ஒருவர், ‘‘ரஜினி நடித்து வெளிவரவிருக்கும் ‘சிவாஜி’ படம், தமிழ் சினிமாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு வியாபாரரீதியான பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெரிய அளவில் முதலீடு செய்து படத்தை வாங்கியிருக்கும் விநியோகஸ்தர்கள் தாங்கள் முதலீடு செய்திருக்கும் பணத்தை உடனடியாக எடுக்க பெரும் தடையாக இருப்பது தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட சினிமா டிக்கெட் தொடர்பான கட்டண விவரங்கள்தான். கிராமப்புறங்களில் உள்ள திரையரங்கு களில் நான்கு ரூபாயிலிருந்து இருபத்தைந்து ரூபாய் சினிமா கட்டணம் என்றும், நகர்ப்புறங்களில் ஆறு ரூபாயிலிருந்து முப்பது ரூபாய் என்றும் அறிவித்த தமிழக அரசு, நகர்ப்புறங் களில் இருக்கும் ஏ.சி. தியேட்டர்களில் இந்தக் கட்டணங்கள் ஐம்பது ரூபாய் வரை இருக்கலாம் என்று நிர்ணயித்திருக்கிறது.

சென்னை மாநகரில் இருக்கும் ஒன்றிரண்டு தியேட்டர் களில் மட்டும் ரசிகர்களுக்கு கூடுதலான வசதிகளைச் செய்து கொடுத்து நூறு அல்லது நூற்றியிருபது ரூபாய்வரை கட்டணம் வசூல் செய்து கொள்ளலாம் என்று தனியாக ஒரு அறிவிப்பையும் செய்தது. இந்தக் கட்டணங்களை வைத்துப் பார்த்தால் ‘சிவாஜி’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தாங்கள் போட்ட பணத்தை எடுக்க ஒரு வருடத்திலிருந்து இரண்டு வருடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலைமை வரும். ஆனால் தமிழக அரசு, சினிமா கட்டணங்களை முறைப்படுத்துவதற்கு முன்பு ரஜினி, கமல், விஜய் போன்ற பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் ரிலீஸாகும்போது முதல் பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு சினிமா டிக்கெட்டுகள் நூறு ரூபாயிலிருந்து முந்நூறு ரூபாய் வரை விற்கப்படும். இதனால் ஒரே மாதத்தில் விநியோகஸ்தர்கள் போட்ட பணத்தை எடுத்து விடுவார்கள். தற்போது ‘சிவாஜி’ படம் ரிலீஸாகும் தியேட்டர்களில் கூடுதலாக கட்டணங்கள் வசூலித்தால் அதை கண்டுகொள்ளாமல் விட முடியுமா என்று ஆட்சியாளர்களிடம் சிவாஜி படக் குழுவினர் தூது போகத் துவங்கியிருக்கிறார்களாம். இதற்கு இதுவரை ஆட்சியாளர்களிடமிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. இந்த விஷயம் வெளியில் கசிந்து, ‘தனிப்பட்ட நபர்களுக்காக அரசாங்கம் தனது கொள்கையை மாற்றிக் கொள்ளக் கூடாது’ என்ற கோஷங்கள் சினிமா உலகிற்குள்ளேயே ஒலிக்கத் துவங்கியிருக்கிறது. அதில் ஒன்றுதான் ராஜேந்தருடைய கோஷம்’’ என்றார் அந்த சீனியர்.

இந்நிலையில், கடந்த வாரம் தனது கட்சியான லட்சிய தி.மு.க&வின் நிகழ்ச்சிகளுக்காக நெல்லை வந்த விஜய டி.ராஜேந்தர் நீண்ட நாட்களுக்குப் பிறகு கட்சிக்காரர்களிடம் சூடான அரசியல் பேசினார். குறிப்பாக, தமிழக அரசின் பட்ஜெட்டை வெகுவாகப் பாராட்டிய ராஜேந்தர், நிருபர்கள் சந்திப்பில் ரஜினியையும், விஜயகாந்தையும் ஒரு பிடிபிடித்தார். ‘‘தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் தரக் கூடாது என்று கர்நாடகாவில் உள்ள நடிகர்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஒட்டுமொத்த கர்நாடக திரையுலகமும் ஓரணியில் திரண்டு இந்த விஷயத்தில் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். மத்திய அமைச்சராக இருந்த நடிகர் அம்பரீஷ் தனது பதவியையே ராஜினாமா செய்திருக்கிறார். ஆனால் இங்குள்ள ‘சூப்பர் ஸ்டார்’ வாய் திறந்து பேசினாரா? தமிழகத்தில் சம்பாதிப்பது, கர்நாடகத்தில் சொத்து வாங்குவதுதான் அவருடைய வேலை. அவர் நடித்திருக்கும் ‘சிவாஜி’ பட டிக்கெட் விலையை ஏற்றினால் லட்சிய தி.மு.க. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது’’ என்று ரஜினிக்கு எதிராக பொங்கியெழுந்தார் ராஜேந்தர்.

நிருபர்கள் சந்திப்பிலேயே இப்படிக் கொதித்தெழுந்த ராஜேந்தர், தனது கட்சி நிர்வாகிகளிடம் பேசும் போது பேச்சில் இன்னும் காரத்தைக் கூட்டிக் கொண்டாராம். ‘‘எங்க பார்த்தாலும் சிவாஜி... சிவாஜின்னு பேசிக்கறாங்க.. ஆனா அந்தப் படத்தை சாமானி யன் பார்க்க முடியுமா? நடுத்தர மக்கள் சினிமா தியேட்டர் பக்கம் வரணும்னுதான் தமிழக அரசு டிக்கெட் விலையை குறைச்சு அதை உத்தரவாவே போட்டிருக்கு. ஆனா இவங்க கோடிக்கணக்குல செலவு செஞ்சு படத்தை எடுத்துட்டு அந்தப் பணத்தை ஒரே ரிலீஸ்ல எடுத்துடணும்னு நினைக் கறாங்க. அதுக்காக அரசாங்கம் அறிவிச்ச டிக்கெட் விலையையே மாத்த முயற்சி செய்யறாங்கன்னு எனக்குத் தகவல் வருது. அப்படி செஞ்சா நம்ம கட்சி சார்பா பெரிய அளவுல போராட்டம் நடத்தணும். இவங்க கொண்டாடுற ‘சிவாஜி‘க்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு, அந்தப் படத்துக்காக அரசாங்க உத்தரவுகளையே மாத்தணுமா? காவிரி பிரச்னையில ரஜினி என்ன நிலையைக் கடைபிடிக்கறாருங்கறதையும் ஊருக்கு சொல்லணும்’’ என்று உணர்ச்சிவசப்பட்டாராம் ராஜேந்தர்.

நீண்ட நாளைக்குப் பிறகு தங்கள் தலைவர் முழு வேக அரசியல்வாதியாக மாறியதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த அவரது தொண்டர்கள் அடுத்து வரும் மதுரை மேற்கு தொகுதி தேர்தலைப் பற்றிக் குறிப்பிட, ‘‘அங்க நாம நின்னுடலாம்யா.... தனிச்சு நின்னு நம்ம பலத்தைக் காட்டலாம்யா, இது சம்பந்தமா விரிவாப் பேசிட்டு தொகுதியில கால்வெச்சு வெற்றிக் கனியைப் பறிச்சுடலாம்யா’’ என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினாராம் ராஜேந்தர்.

திடீரென்று ரஜினி மீது பாய்ச்சல் ஏன்? என்ற கேள்வியோடு ராஜேந்தரைத் தொடர்பு கொண்டோம். ‘‘இனிமேல் அரசியலில் அறுபது சதவிகிதமும், சினிமாவில் நாற்பது சதவிகிதமும் செயல்பட முடிவெடுத்திருக்கிறேன். தமிழக மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்த மாநிலம் முழுக்கவும் சுற்றுப்பயணம் செய்ய தீர்மானித்திருக்கிறேன். குறிப்பாக காவிரி விஷயத்தில் தமிழன் எப்படி ஏமாற்றப்பட்டிருக்கிறான்... அவனுக்காக யாரெல்லாம் போராட வரவில்லை என்பது குறித்து எடுத்துச் சொல்ல என் பயணத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறேன். இதுபற்றி என் கட்சிக்காரர்களிடமும், என் நலம் விரும்பிகளிடமும் விரிவாக விவாதித்துக் கொண்டிருக்கிறேன்.

காவிரி விவகாரத்தில் ரஜினியின் நிலை, ‘சிவாஜி’ பட விவகாரம் ஆகியன குறித்தெல்லாம் ஒருசில நாட்களில் நான் மக்கள் மன்றத்துக்கு சில விஷயங்களைக் கொண்டு வரப்போகிறேன். ‘சிவாஜி’ பட விவகாரத்தில் அரசாங்க கொள்கைகளில் தனி மனிதர்களுக்காக விலக்கு அளிக்கப்பட்டால் அதை இந்த ராஜேந்தர் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டான்’’ என்று தன் பாணியில் குரல் உயர்த்தினார் ராஜேந்தர்.

ஆக, ரஜினி பற்றிய அடுத்த சர்ச்சைக்கு பிள்ளையார்சுழி போட்டு விட்டார் ராஜேந்தர்!

நன்றி: விகடன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவுசெய்து இந்த கழிசடையைப் பற்றி பேசுவதை தவிருங்கள்!

- கப்பல்பயணி

அடிச்சு அதகளம் பண்ணுவதற்கு அட்டகாசமான உதாரணம் 'சிவாஜி' ஆடியோ. நேற்று விற்பனைக்கு வந்த ஆடியோ ஒரே நாளில் லட்சக்கணக்கில் விற்று புதிய சாதனை படைத்திருக்கிறது.

கேசட்டுகளின் மொத்த விற்பனை கடைகள் சென்னை ரிச்சி தெருவில் உள்ளன. நேற்று 'சிவாஜி' ஆடியோ ரிலீஸ் என்பதால் கேசட்டுகளையும் சி.டி.க்களையும் வாங்க முதல் நாள் இரவே வெளியூர் வியாபாரிகளும் ரசிகர்களும் குவிந்து விட்டனர். விடியற்காலையிலே ரிச்சி தெருவில் ஜே ஜே என கூட்டம்.

மினி லாரிகளில் வந்த சி.டி. களும் கேசட்டுகளும் அடுத்த நிமிடமே மாயமாயின. சில்லறை விற்பனை கடைகளில் நேற்று பெரிய விற்பனை. ஆடியோவை வாங்க கடைதோறும் கணக்கில்லாத ரசிகர்கள். ரஜினி படத்துக்கு பாலாபிஷேகம், ஆராத்தி எடுத்தல் என திருவிழாவாக ஆடியோ ரிலீஸை ரசிகர்கள் கொண்டாடினர்.

இணையதளத்தில் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் 'சிவாஜி' ஆடியோ இவ்வளவு பெரிய வரவேற்பை பெற்றது ஆடியோ உலகில் ஒரு சாதனை. ஏ.வி.எம். நிறுவனம் நேற்று இரண்டு லட்சம் சி.டி.க்கள் மற்றும் இரண்டு லட்சம் கேசட்டுகளை கடைகளுக்கு அனுப்பி வைத்தது. மதியத்திற்குள் அனைத்து சி.டி.களும் கேசட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. இந்திய ஆடியோ மார்க்கெட் இதுவரை கண்டிராத அதிசயம் இது.

'சிவாஜி' யில் ரசிகர்கள் ஆடிக்களிக்க இரண்டு பாடல்களும், பாடி ரசிக்க இரண்டு பாடல்களும், கேட்டு உருக இரண்டு பாடல்களும் இடம் பெற்றுள்ளது.

'ஒரு கூடை சன் லைட், ஒரு கூடை மூன் லைட்....' பாடலும் 'சச்சின் அடிச்சா சிக்ஸர் தாண்டா சிவாஜி அடிச்சா பஞ்சர் தாண்டா....' பாடலும் ஆட வைக்கும் ரகம். 'சஹாரா பூக்களும்...', 'வாஜி வாஜி வாஜி என் ஜீவன் நீ சிவாஜி' யும் ஹம் பண்ண வைக்கும் மெலடிகள். 'சூரியனோ சந்திரனோ யாரிவனோ' பாடல் மனசை கரைய வைக்கும் ரகம்.

ஆடியோ விற்பனைக்கு முதல் நாள் இரவே எல்லா எப்.எம். களிலும் ஆக்ரமித்து விட்டது 'சிவாஜி' பாடல். ஏப்ரல் 17 ரிலீஸாகயிருக்கும் 'சிவாஜி' படத்துக்கான 'சின்ன' வரவேற்பு இது என்றார் ரஜினி ரசிகர் ஒருவர். அப்படியானால் 'சிவாஜி' வெளியாகும் நாள் எப்படியிருக்கும்?

இமேஜின் பண்ணவே முடிலையே தலைவா!

:rolleyes::o

  • தொடங்கியவர்

நம்ம சூப்பர்ஸ்டாரா இல்ல கொக்கா...

நம்ம சூப்பர்ஸ்டாரா இல்ல கொக்கா...

அப்படி போடு அவர் யார் சூப்பர்ஸ்டார் ஆச்செ

:rolleyes:

பாபா படம் வெளியான போதும் ரஜினி பற்றி இத்தைகய பிம்பங்கள் உறுவாக்கப்பட்டன,கடையில் படம் அட்டர் பிளாப்பனதோடு படப்பெட்டியையையும் தாயாரிப்பு தரப்பால் திருப்பி எடுக்க முடியாத படி பல கட்சிக்காரர்களும் பெட்டியை தூக்கிக் கொண்டு ஒடி விட்டாரக்ள்.

ஈழத்தமிழர்கள் கொண்டாடும் அளவுக்கு ரஜினியோ ரஜினியின் படங்களோ புனிதமானானவை அல்ல.கன்னட நடிகர் ராக்குமாரை வீரப்பன் கடத்திய போது நெடுமாறன் அய்யாஅ எல்லோரும் போய் ராஜ்குமாரை மீட்டார்கள்.ஆனால் மீட்டதும் பழ.நெடுமாறனுக்கு நன்றி சொன்ன ரஜினி.கர்நாடகாவுக்குப்போய் வீரப்பனை சம்காரம் செய்யவேண்டும் என்றூ பெசியதன் எதிரொலியாகத்தான் அன்று பாபா பெட்டியை தூக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.அன்றைக்கு வாய் சவடாலகள் ஸ்டைல்கள் ரசிகர் படைகள் எவனும் தமிழகத்தில் வாலாட்ட முடியவில்லை.இன்று அதே ரஜினுக்கு ''சிவாஜி"படம் மிகப்ப்பெரிய ஏவிஎம் நிறுவனம் நூற்றுக்கணக்கான கோடிகளை பார்க்கத்துடிப்பதன் விளைவுதான் சிவாஜியை சுற்றி உலவும் இட்டுக்கட்டப்பட்ட கதைகள்.உண்மையில் சிவாஜி பட கேசட்டுளோ ஆடியோ சிடிகளோ அப்படி ஒன்றும் வேகமாக விறப்னையாக வில்லை.அதெல்லாம் சும்மா விசிலடிச்சான் கூட்டங்கள் பறப்பிவிடுதுகள்....ரஜினி என்பது ஒரு மாயை....ஆமாம் தமிழர் விரோத மாயை....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.