Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மியன்மார் நடக்கும் இனப்படுகொலையின் நெஞ்சைப் பிழியும் காட்சிகள் - மௌனம் கலைக்காத முஸ்லிம் நாடுகள்

Featured Replies

மியன்மார் நடக்கும் இனப்படுகொலையின் நெஞ்சைப் பிழியும் காட்சிகள் - மௌனம் கலைக்காத முஸ்லிம் நாடுகள்

நாகரீகத்தின் உச்சத்தில் மனிதர்கள் வாழ்வதாக கருதப்படும் இக்கால கட்டத்தில் இப்படியொரு பயங்கரமும் நடைபெறுகின்றதா? என்று சிந்திக்கும் அளவு மியன்மார் – பர்மா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் உச்சத்தை அடைந்திருக்கின்றன.

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், கலவரங்கள் காரணமான ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். பலர் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு கடல் வழியாக தப்பி ஓடுகின்றார்கள்.

இரும்புத் திரை நாடு – மியன்மார் ( மறுபிரசுரம் 2015 )

பௌத்த மதத்தை ஆட்சி மதமாகக் கொண்டுள்ள மியன்மார் உலக நாடுகளினால் “இரும்புத் திரை நாடு” என்று அழைக்கப்படுகின்றது.

பர்மா என்ற பெயரில் அழைக்கப்பட்ட நாடு 1989ம் ஆண்டு மியான்மார் (அல்லது Union of Myanmar) என்று மாற்றியமைக்கப்பட்டது.

 

 

சுமார் 130 இனங்கள் வாழுகின்ற மியன்மாரில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் வட்டார வழக்குகளும் காணப்படுகின்றன.

பல்லாயிரக்கணக்கான பௌத்த விகாரைகள் நாடு முழுவதும் பரவியிருப்பதால், இது ‘Land of Pagodas’ என்றும் அழைக்கப்படுகின்றது.

சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி மியன்மார் இராணுவத்திற்கு எதிராக போராடி, ஜனநாயத்தை வெளிப்படுத்த பாடுபட்டார்.

இதனை எதிர்த்து இராணுவம் மேற்கொண்ட செயல்பாடுகளை விபரிக்கும் விதமாகவே “இரும்புத் திரை நாடு” என்று மியன்மார் அழைக்கப்படுகின்றது.

முஸ்லிம்களுக்கு எதிரான மியன்மார் அரசு

15ம் நூற்றாண்டுகளில் இருந்தே மியன்மாரில் வாழ்ந்து வரும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த தர்மத்தை ஆட்சி மதமாக வைத்துள்ள மியன்மார் மேற்கொள்ளும் தாக்குதல்கள் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதவைகளாகும்.

மதக் கலவரங்கள், தனி மனித தாக்குதல்கள், வர்த்தக நிலையங்களுக்கு எதிரான தாக்குதல்கள், திட்டமிட்ட படுகொலைகள் என்று முஸ்லிம்களுக்கு எதிராக மியன்மாரில் நடைபெரும் தாக்குதல்கள் முடிவில்லாதவையாகும்.

உண்ண உணவின்றி, குடிப்பதற்கு நீராகாரமின்றி, தங்க இடமின்றி கடந்த பல வருடங்களாகவே மியன்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்கள் பலவிதமான அவதிக்கும் உள்ளாகி வருகின்றார்கள்.

2012 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசுத் தலைவர் தெய்ன் செய்ன் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக வெளியிட்ட “முஸ்லிம்களை மூன்றாம் நாடொன்றுக்கு அனுப்பும் திட்டம்” காரணமாக அங்கு முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் இன்னும் வீரியமடையத் தொடங்கின.

அரசுத் தலைவர் அறிவித்த சர்ச்சைக்குரிய திட்டத்தினை ஆதரித்து மியன்மாரின் சர்ச்சைக்குரிய 969 இயக்கத்தின் தலைவரும், பௌத்த மத குருவுமான அசின் விராது தலைமையில் நடத்தப்பட்ட பேரணியைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 43 பேர் கொலை செய்யப்பட்டார்கள்.

அசின் விராதுவின் 969

969 இயக்கம் (969 Movement) என்பது பௌத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மியன்மாரில் இஸ்லாமிய பரம்பலை எதிர்க்க உருவாக்கப்பட்ட ஒரு தேசியவாத அமைப்பாகும்.

மியன்மாரின் சர்ச்சைக்குரிய பௌத்த மதகுரு அசின் விராது தேரர் இதன் தலைவராக இருந்து செயற்படுகிறார்.

இவ்வியக்கம் சர்வதேச மட்டத்தில் பலத்த விமர்சனத்திற்கு உள்ளானது. பன்னாட்டு ஊடகங்கள் இதன் தலைவர் அசின் விராது தொடர்பில் பலத்த விமர்சனைத்தை முன்வைத்தன.

அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை “பௌத்த பயங்கரவாதத்தின் முகம்” என்று இவரை விமர்சனம் செய்திருந்தது.

மியன்மாரில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளின் சூத்திரதாரியாக இருப்பது இவரும், இவருடைய 969 இயக்கமும் தான். மியன்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை இவரே வழிநடத்தி வருகிறார்.

இவருடைய தூண்டுதலில் ஈவிரக்கமின்றி பெண்களும் குழந்தைகளும் கூட கொன்று குவிக்கப்படுகின்றனர்.

முஸ்லிம்களுக்கு எதிராக 969 அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் வன்முறைகளால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த அமைப்பை வழிநடத்தும் அஸின் விராது தேரரை “பர்மாவின் பின்லேடன்” என சர்வதேச ஊடகங்கள் வர்ணிக்கின்றன.

இன்றைய நிலையில், உலகில் பௌத்த தீவிரவாதத்தின் ஆணிவேராக கணிக்கப்படுபவரே அஸின் விராது தேரர். அகிம்சையையும், தர்மத்தையும் போதிப்பதாக கூறப்படும் பௌத்த மதத்தில் இத்தகையதொரு கடும் போக்குவாத அமைப்பு உருவாக்கப்பட்டு வழி நடத்தப்படுவது ஏவ்விதத்தில் சரியானதாக இருக்க முடியும்?

யார் இந்த ரோஹிங்யா முஸ்லிம்கள்.

மியன்மார் அரசு மற்றும் அசின் விராது தலைமையிலான 969 இயக்கத்தினால் தினமும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் ரோஹிங்யா முஸ்லிம்களின் வரலாறு தெளிவானது.

15 ம் நூற்றாண்டு முதல் ரோஹிங்யா முஸ்லிம்கள் மியன்மார் – பர்மாவில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இன்றும் காணக் கிடைக்கின்றன.

பௌத்த பேரினவாத கடும் போக்காளர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகி உள்நாட்டில் வாழ முடியாத நிலையினை எட்டியுள்ள இந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் நாட்டை விடடும் வெளியேற முடிவெடுத்து கடல் வழி பயணத்தில் வேறு நாடுகளை அடைய முற்பட்ட வேலை ஆயிரக் கணக்கானவர்கள் கடலில் வீழ்ந்து மரணித்து விட்டார்கள்.

மௌனம் கலைக்காத முஸ்லிம் நாடுகள்

உயிர் பிழைப்பதற்காக உயிர்ப் பிச்சைக் கேட்கும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு அண்டை நாடுகளான பங்களா தேசம், இந்தோனேஷியா, மலேசியா போன்ற முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் கூட அடைக்கலம் கொடுக்கத் தயங்குகின்றன.

சிலருக்காக கதவைத் திறந்தால் பலருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டி வருமோ என்ற பயத்தின் காரணமாக இந்நாடுகள் மௌனம் காத்து வருகின்றன.

தாய்லாந்தைப் பொறுத்த வரையில் அதுவும் பௌத்தத்தை பெரும்பான்மையாக கொண்ட நாடு என்பதனால் மியன்மாரை பகைத்துக் கொள்ள தாய்லாந்து விரும்பவில்லை என்பதே நிதர்சனமாகும்.

மலேசியா முஸ்லிம் நாடு. அதுவும் செல்வந்த நாடாக இருப்பது தான் அவர்களுக்குரிய பெரும் பிரச்சினையாகும்.

ரோஹிங்யா அகதிகளை தமது நாட்டுக்குள் அனுமதித்தால் உள்நாட்டு மக்களின் வேலைவாய்ப்புக்கு சிக்கலாகி விடும் என்ற காரணத்தினால் மலேசியாவுக்குள் ரோஹிங்யா அகதிகள் உள்வாங்கப்படாமல் விடப்பட்டிருக்கின்றார்கள்.

அத்துடன் அனைத்து மக்களையும் ஏற்றத் தாழ்வின்றி பார்க்கும் இஸ்லாத்தை மதமாக கொண்ட மலேசியா முஸ்லிம்கள். ரோஹிங்யா முஸ்லிம்களை தாழ்த்தப்பட்டவர்களாக நினைப்பதும் இன்னொரு காரணமாக சொல்லப்படுகின்றது.

ஸக்காத், ஸதகா போன்ற ஏழைகளுக்கு வழங்க வேண்டிய உதவித் தொகை தொடர்பாக வலியுறுத்தப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் மலேசிய மக்களின் இது போன்ற செயல்பாடுகள் இஸ்லாத்தின் பார்வையில் மிகவும் கண்டிக்கத் தக்கவையாகும்.

பங்களாதேச அரசும் ரோஹிங்யா முஸ்லிம்களை தமது நாட்டில் இணைத்துக் கொள்வதற்கு விரும்பவில்லை. நாட்டின் சனத்தொகை பெருக்கமாக இருக்கின்ற காரணத்தினால் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு பங்களாதேசத்தில் இடமளித்தால் பாரிய பிரச்சினைகள் தோன்றலாம் என்று கருதி அவர்களை ஏற்றுக் கொள்வதை பங்களாதேச அரசும் தவிர்த்து வருகின்றது.

தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான “ஆசியான்” ரோஹிங்யா முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல வேண்டும் என்று மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்து வந்தாலும் “ஆசியான்” இது தொடர்பில் மௌனமாகவே இருந்து வருகின்றது.

ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளைக் காப்பாற்றுவதை விட மியன்மாருடனான உறவைப் பேணுவதே “ஆசியான்” அமைப்பின் முக்கிய பணியாக அது நினைக்கின்றது.

சர்வதேச சமுத்திரவியல் சட்டம்

சர்வதேச சமுத்திரவியல் சட்டத்தின் பிரகாரம் கடலில் நிர்க்கதியான நிலையில் இருப்போரை மீண்டும் கடலுக்குள் துரத்தியடிப்பது என்பது சட்டவிரோதமான செயலாகும்.

சர்வதேச சமுத்திரவியல் சட்டத்தின்படி ரோஹிங்யா அகதிகளை காப்பாற்றுவது ஒருபுறமிருக்க, சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கே பல காலங்கள் ஆகலாம் என்பதே உண்மையாகும்.

எது எப்படிப் போனாலும் சமுத்திரவியல் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கும் “ஆசியான்” அமைப்பின் ஒத்துழைப்பு அவசியமானதாகும்.

சர்வதேச சமுத்திரவியல் சட்டம், அதை நடைமுறைப் படுத்துவதில் உள்ள சிக்கல்கள் என அனைத்தையும் ஆராய்ந்து “ஆசியான்” போன்ற அமைப்புகள் முடிவெடுப்பதற்குள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு மரணத்தின் விளிம்பில் இருக்கும் ரோஹிங்யா முஸ்லிம்களின் நிலை என்னாகும்?

இலங்கை இறுதி யுத்தத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்கள் தற்போது உயிருக்குப் போராடி வரும் மியன்மார் முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுப்பார்களா?

மியன்மார் முஸ்லிம்களின் வரலாறு

15 ம் நூற்றாண்டு - மியன்மாரில் இஸ்லாமிய எழுத்தோலைகள், நாணயங்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

1799 - மியன்மார் – பர்மா தொடர்பில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் ரோஹிங்யா எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

1871 - மியன்மார் – பர்மாவின் ராகின் மாநிலத்தில் 58000 முஸ்லிம்கள் வாழ்ந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

1911 - மியன்மார் – பர்மாவின் ராகின் மாநிலத்தில் 179000 முஸ்லிம்கள் வாழ்ந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

1977 - மியன்மார் – பர்மாவில் ஏற்பட்ட கலவரம் காரணமாக சுமார் இரண்டு லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேசத்திற்கு இடம் பெயர்ந்தனர். இவர்களில் சுமார் 12000 பேர் பட்டினியால் பங்களாதேசத்தில் உயிரிழந்தனர். பின்னர் இவர்களில் மீதமிருந்தவர்கள் மீண்டும் மியன்மாருக்கு திரும்பி ராகின் மாநிலத்தில் குடியேறினார்கள்.

1982 - ரோஹிங்யா முஸ்லிம்கள் மியன்மார் – பர்மா குடியுரிமையில் இருந்து நீக்கப்பட்டார்கள்.

1989 - பர்மா என்றிருந்த நாட்டின் பெயர் மியன்மார் என்று மாற்றப் பட்டது.

1991 - கலவரம் காரணமாக 250000 க்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேசத்திற்கு இடம் பெயர்ந்தார்கள்.

1992 – 1993 - இடம் பெயர்ந்தவர்களில் 50 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம்கள் பலவந்தமாக மீண்டும் மியன்மாருக்கு செல்ல நிர்பந்திக்கப்பட்டனர்.

2012 ஜனவரி மாதம் - பதிவு செய்யப்பட்ட 29000 ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேசத்தில் வாழ்ந்தார்கள். இவர்கள் 1991ல் பங்களாதேசத்தில் குடியேறியவர்கள். எனினும் பதிவு செய்யப்படாத இரண்டு லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேசத்தில் வாழ்ந்தனர்.

2012 - எட்டு லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் மியன்மாரில் வாழ்வதாக தரவுகள் கூறுகின்றன.

2014 - கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

மியன்மார் அகதிகள் படும் கஷ்டங்கள் – புகைப்படங்கள்

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

http://www.tamilwin.com/world/01/156797?ref=home-feed

  • தொடங்கியவர்

மியான்மரில் 100 இஸ்லாமியர்கள் கொலை - அகதிகளாக ஓடும் மக்கள்!

மியான்மரில் வெடித்த வன்முறையில், 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

மியான்மரில் இஸ்லாமியர்கள் கொலை

மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில், பௌத்தர்களுக்கும் ரோகிஞ்சா இஸ்லாமிய மக்களுக்கும் இடையே, இனமோதல் அதிகரித்துள்ளது. பெரும்பான்மை புத்த மதத்தினரைக் கொண்ட மியான்மரில், 5 சதவிகித முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ராக்கைன் மாநிலத்தில் 2016-ம் ஆண்டு, ஏ.ஆர்.எஸ்.ஏ எனப்படும் Arakan Rohingya Salvation Army உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக இருப்பவர் அதா உல்லா. இந்த அமைப்பு, மியான்மர் ராணுவத்தினர் மற்றும் போலீஸ் படையினர் மீது தாக்குதல் நடத்திவருகிறது. 

ரோகிஞ்சா இஸ்லாமிய மக்களைப் பாதுகாப்பது நோக்கம் என இந்த அமைப்பு கூறுகிறது. அதா உல்லா,  பாகிஸ்தானில் பிறந்து சவுதி அரேபியாவில் வளர்ந்தவர், ஜிகாத் அமைப்புகளுடன் தொடர்புடையவர் என்று மியான்மர் அரசு குற்றம் சாட்டிவருகிறது. மியான்மரில் இருந்து ராக்கைன் மாநிலத்தைப் பிரித்து, தனிநாடாக உருவாக்க முயற்சி செய்வதாக மியான்மர் அரசு இந்த அமைப்பு மீது வைக்கும் மற்றொரு குற்றச்சாட்டு. மேலும், ரோகிஞ்சா மக்கள் வங்கதேசத்திலிருந்து மியான்மருக்குள் அத்துமீறிப் புகுந்தவர்கள் எனக் கூறி, அவர்களுக்கான உரிமைகளை வழங்க மியான்மர் அரசு மறுத்துவருகிறது. 

கடந்த வெள்ளிக்கிழமை, ஏ.ஆர்.எஸ்.ஏ குழுவினர் ராக்கைன் மாநிலத்தில் 30-க்கும் மேற்பட்ட போலீஸ் சோதனைச் சாவடிகள் மீது வெடிகுண்டு வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில்,12 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.  இதையடுத்து, பௌத்த மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளது. ராணுவத்தினரும் ரோகிஞ்சா மக்கள் மீது இயந்திரத் துப்பாக்கியால் தாக்குதல் நடத்திவருகின்றனர். இதில், 92 பேருக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள், ஏ.ஆர்.எஸ்.ஏ குழுவைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்படுகிறது. ரோகிஞ்சா இஸ்லாமிய மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு, மியான்மர் ராணுவத்தினர் தீ வைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

மியான்மரில் இஸ்லாமியர்கள் கொலை

இதையடுத்து, உயிருக்குப் பயந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள்,  வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். மிஷோரத்தில் உள்ள  சிஷா பகுதிக்கு நேற்று வந்த மியான்மர் அகதிகள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 1990-ம் ஆண்டு முதல் ராக்கைன் மாநிலத்தில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வன்முறை நடந்துவருகிறது. ஏற்கெனவே, வங்கதேசத்தில் 4 லட்சம் ரேகிஞ்சா இஸ்லாமிய மக்கள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர்.

 

மியான்மரில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையைக் கட்டுப்படுத்த, ஐ.நா., தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வங்கதேசம் பல முறை கோரிக்கை விடுத்துள்ளது. மியான்மர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை உடனடியாகக் கூட்ட, பிரிட்டன் கோரிக்கை விடுத்துள்ளது. மியான்மர் வன்முறையை செயற்கைக்கோள் புகைப்படங்களைக் கொண்டு ஆராய்ந்துவருவதாக, ஐ.நா. மனித உரிமைக் குழு தெரிவித்துள்ளது. 

http://www.vikatan.com/news/world/100753-100-people-have-been-killed-in-myanmar.html

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, நவீனன் said:

இதில், 92 பேருக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள், ஏ.ஆர்.எஸ்.ஏ குழுவைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்படுகிறது.

 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.....இறந்தவர்கள் எல்லோரும் புலிகள்.....சகல பெரும்பான்மை ஆட்சியாளர்களின் இராணுவ அறிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

இது யாருக்கும் தெரியாமல் நடந்த இனப்படுகொலை 
எமக்கு முன்னமே தொடங்கிவிட்ட்து 
இவர்களுடன் ஒப்பிட்டால் நாம் அதிர்ஷ்டசாலிகள் என்று கூட சொல்லலாம்.

சோஷல் மீடியா ஓடாக இப்போ வெளிவர தொடங்கி இருப்பதால் 
இப்போ மேலை நாட்டு ஊடங்களும் கொஞ்சம் கவனிக்க தொடங்கி இருக்கின்றது.
எம்மை போல இவர்கள் இடமும் பாரிய இயக்கய் கனிம வளங்கள் இல்லை 
என்பதால் யாருடைய ஆதரவும் இல்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தில் நடந்த இன அழிப்பை வேடிக்கை பார்த்த அதே உலகம் தற்போது மியான்மாரை வேடிக்கை பார்க்கிறது!

மத ஓநாய்கள் மனித ரத்தம் குடிப்பதை.....

 

 

ஈழ தமிழன் தீவிரவாதி என்று சொன்னவனுகளுக்கு இப்ப புரியும் எவன் தீவிரவாதி என்று..

புகைபடங்களை பார்க்க இதயம்வெடிக்கின்றது.

எதிரிக்கும் எங்கள் நிலை வரக்கூடாது என்று நினைத்தோம் ....மீண்டும் நடக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

ரொஹிங்கியா முஸ்லீம் கிராமங்கள் மீது மியன்மார் இராணுவம் போர்னா: 200 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

 

 

  • தொடங்கியவர்

 

கடந்த ஒரு வாரத்தில் மட்டும், மியான்மாரிலிருந்து சுமார் நாற்பதாயிரம் ரோஹிஞ்சா சிறுபான்மை முஸ்லிம்கள் அண்டை நாடான வங்கதேசத்துக்கு சென்றுள்ளனர் என்று ஐ நா கூறுகிறது.

  • தொடங்கியவர்

நாதியற்றவர்கள்

 

ரோஹிங்யா  அக­திகள் தொடர்பில்  பேரி­ன­வா­தத்தால் தூண்­டப்­பட்டு செயற்­ப­டு­கி­றாரா ஆங் சான் சூகி?

 

பங்­க­ளா­தே­ஷிற்கு மீன்­பிடிப் படகில் ஆபத்து மிக்க கடல் பய­ணத்தை மேற்­கொண்ட மியன்மார் ரோஹிங்யா முஸ்­லிம்கள் 20 பேர் கடலில் மூழ்கி மரணம். இது நசுக்­கப்­பட்டு ஒடுக்­கப்­பட்ட அந்த சமூகம் குறித்து வெளி­யான பிந்­திய செய்தி.

தாம் காலம் கால­மாக வாழ்ந்த மியன்­மா­ரி­லுள்ள பேரி­ன­வாத சக்­திகள் தம்மை அந்த நாட்டின் அங்­க­மாக ஏற்­றுக்­கொள்ள மறுத்து தமக்கு எதி­ராக வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்து விட்­ட­தை­ய­டுத்து தமது பூர்­வீக அயல்­நா­டான பங்­க­ளா­தே­ஷுக்கு வகை­தொ­கை­யின்றி தப்பிச் செல்லும் நட­வ­டிக்­கையில் ரோஹிங்யா முஸ்­லிம்கள் ஈடு­பட்­டுள்­ளனர்.

 கடந்த வாரம் இடம்­பெற்ற வன்­மு­றை­க­ளை­ய­டுத்து மட்டும் 27,000 பேருக்கும் அதி­க­மானோர் மோதல்கள் இடம்­பெறும் தமது பிராந்­தி­ய­மான ராகைனை விட்டு வெளி­யேறி பங்­க­ளா­தே­ஷுக்கு சென்­றுள்­ளனர். அந்த வன்­மு­றை­களில் 100 பேருக்கும் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர்.

 ஆனால், பங்­க­ளா­தேஷோ அக­தி­களின் அள­வுக்­க­தி­க­மான வரு­கையை தடுக்க அவர்­களை திருப்பி அனுப்பும் நட­வ­டிக்­கையில் தற்­போது ஈடு­பட்­டுள்­ளது.

இதன் கார­ண­மாக தரை வழி­யாக பய­ண த்தை மேற்­கொண்ட பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ரோஹிங்யா அக­திகள் பங்­க­ளாதேஷ் எல்­லை­யி­லுள்ள திறந்த வெளி­களில் வெயி­லிலும் மழை­யிலும் உணவு, உறக்­க­மின்றி வாழும் நிலைக்கு உள்­ளா­கி­யுள்­ளனர். அதே­ச­மயம் கடல் வழிப் பய­ணத்தை மேற்­கொண்­ட­வர்கள் நிலையோ அதை விடவும் பரி­தா­ப­க­ர­மா­னது. அவர்­களில் சிலர் எங்கு செல்­வது என்­பது தெரி­யாது பங்­க­ளாதேஷ் அர­சாங்­கத்தின் தயவை நாடி பட­கு­களில் காத்­தி­ருக்கும் நிலை க்கு தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

தற்­போது மனித உரி­மைகள் என்ற சொற்­ப­தத்தின் பொருள் கால மாற்­றத்­து­டனும் உல­க­ளா­விய ரீதி­யான அறி­வியல் முன்­னேற்­றத்­து­டனும் கூட்­டி­ணைந்து விரி­வு­பட்டு வரு­கின்ற நிலையில், வாழ்­வா­தார அடிப்­படை உரி­மை­க­ளையே அனு­ப­விக்க முடி­யாத துர்ப்­பாக்­கி­ய­வா­தி­க­ளாக மியன்­மாரின் ரோஹிங்யா முஸ்­லிம்கள் உள்­ளனர்.

பல நூற்­றாண்­டு கால­மாக பல தலை­மு­றை­க­ளாக சொந்த நாடென நம்பி வாழ்ந்த நாட்டில் பேரி­ன­வாத சக்­தி­களால் அவர்­க­ளுக்கு ஈவி­ரக்­க­மற்று குத்­தப்­பட்ட முத்­திரை 'நாடற்­ற­­வர்கள்'.

 மியன்­மாரின் பௌத்த பேரி­ன­வாத வல்­லாட்சி சமூ­கத்தால் அடிப்­படை உரி­மை­யான இருப்­பிட உரிமை மறுக்­கப்­பட்­டது மட்­டு­மல்­லாமல் அவர்கள் உள்­நாட்டில் தடுப்பு முகாம்­களில் கடும் கட்­டுக்­கா­வலின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

2012 ஆம் ஆண்டு ராகைன் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற இனக் கல­வ­ரத்தைத் தொடர்ந்து 140,000 க்கும் அதி­க­மான ரோஹிங்யா இனத்­த­வர்கள் உள்­­நாட்டில் இடம்­பெ­யர்ந்து முகாம்­களில் தொடர்ந்து தங்­கி­யுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

யார் இந்த ரோஹிங்­யாக்கள் ?

ரோஹிங்யா இனத்­த­வர்­களின் பூர்­வீகம் தொடர்பில் பல்­வேறு கருத்­துகள் நில­வு­கின் ­றன.

 அவர்­க­ளது அண்­மைக்­கால வர­லாறு பிரித்­தா­னிய கால­னித்­துவ ஆட்­சி­யுடன் இணைந்­த­தாகக் காணப்­ப­டு­கி­றது. அதே­ச­மயம் அவர்­க­ளது பண்­டைய வர­லாறு பல நூற்­றாண்டு காலத்­திற்கு முன் மியன்­மாரை ஆட்சி செய்த பௌத்த மன்­ன­ரான மின் சோ மன் என அறி­யப்­படும் நர­மெ­யிக்­லாவின் ஆட்சி காலத்­தி­லி­ருந்து ஆரம்­பிக்­கி­றது.

அந்த மன்னர் மியன்­மாரில் இடம்­பெற்ற போர்கள் கார­ண­மாக பங்­க­ளா­தே­ஷுக்கு தப்பிச் சென்று அங்கு 24 வரு­டங்­களை கழித்­துள்ளார். அதன் பின் சொந்த நாட்­டிற்கு திரும்­பிய அவர் மன்­ன­ராக பத­வி­யேற்று அரகன் பிராந்­தி­யத்தை தலை­ந­க­ராகக் கொண்டு ஆட்­சி­செய்­துள்ளார். அந்த அரகன் நகரே தற்­போது ரோஹிங்யா இனத்­த­வர்கள் பெரு­ம­ளவில் செறிந்து வாழும் ராகைன் பிராந்­தி­ய­மாக அவர்­க­ளது அடை­யா­ளத்­துவ இட­மாக விளங்­கு­கி­றது.

இந்­நி­லையில் மின் சோ மன், தான் நாடு­க­டந்த நிலையில் வாழ்ந்த காலத்தில் தன்னை ஆத­ரித்த பங்­க­ளா­தேஷைச் சேர்ந்த முஸ்­லிம்­களை மறக்­காது அவர்கள் பலரை தனது நாட்­டுக்கு அழைத்து வந்து ஆலோ­ச­கர்­க­ளா­கவும் ராஜ­சபை உறுப்­பி­னர்­க­ளா­கவும் நிய­மித்து தனது நன்றிக் கடனைச் செலுத்­தினார்.

 இதுவே மியன்மார் ரோஹிங்யா முஸ்­லிம்­களின் வாழ்வில் பொற்­கா­ல­மாக அமைந்­த­துடன் அதுவே அவர்­க­ளது இன்­றைய நாடற்­ற­வர்கள் என்ற நிலைக்கும் வித்­திட்­டுள்­ளது எனலாம்.

இதன் பின்னர் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றங்­களின் போது பங்­களாதேஷ் உள்­ள­டங்­க­லான அயல் நாடு­க­ளுக்கு ரோகிங்யா முஸ்­லிம்கள் இடம்­பெ­யர்­வது வழ­மை­யாக இருந்­தது. எனினும் குறிப்­பிட்ட சொற்ப தொகை மக்கள் தொடர்ந்து ராகைனில் இருந்து வந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அதே­ச­மயம் 1799 ஆம் ஆண்டு வெளி­யான ஆய்­வொன்று ரோஹிங்யா முஸ்­லிம்கள் ராகைன் பிராந்­தி­யத்தின் பூர்­வீகக் குடிகள் என உரிமை கோரு­கி­றது.

 இந்­நி­லையில் ரோஹிங்யா இனத்­த­வர்கள் தொடர்­பான பிந்­திய ஆய்வு பிரித்­தா­னிய கால­னித்­துவ ஆட்­சி­யுடன் இணைந்­த­தா­க­வுள்­ளது.

 1826 ஆம் ஆண்டு ஆங்­கி­லே­ய­ருக்கும் முன்னர் பர்மா என அழைக்­கப்­பட்ட மியன்­மா­ருக்கும் இடையில் இடம்­பெற்ற போரை­ய­டுத்து பிரித்­தா­னிய அர­சாங்கம் பங்­க­ளா­தே­ஷுக்கும் மியன்­மா­ருக்கும் இடை­யி­லி­ருந்த அரகன் பிராந்­தி­யத்தை மியன்­மா­ருடன் இணைத்துக் கொண்­டது.

இதன்­போது பிரித்­தா­னிய அதி­கா­ரி­களால் அந்தப் பிராந்­தி­யத்­துக்கு பங்­க­ளா­தே­ஷி­லி­ருந்து ரோஹிங்யா முஸ்­லிம்கள் பண்ணைத் தொழி­லா­ளர்­க­ளாக அழைத்து வரப்­பட்­ட­தா­கவும் அச்­ச­ம­யத்தில் அந்தப் பிராந்­தி­யத்தில் அவர்­களின் தொகை 5 சத­வீ­த­மாக இருந்­த­தா­கவும் தர­வுகள் தெரி­விக்­கின்­றன.

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்­பா­னுக்கு மியன்­மாரின் உள்­நாட்டு பௌத்­தர்கள் ஆத­ர­வ­ளித்ததால் அந்த பௌத்­தர்­க­ளுக்கு எதி­ராகப் போரா­டு­வ­தற்­காக ரோஹிங்யா இனத்­த­வர்­க­ளுக்கு பிரித்­தா­னியா ஆயு­த­ம­ளித்து அவர்­களை தனது படையில் இணைத்துக் கொண்­டது. இத­னை­ய­டுத்து மியன்­மாரில் அந்த இனத்­த­வர்­களின் சனத்­தொகை பெரு­ம­ளவில் அதி­க­ரித்­தது.

 இதனைத் தொடர்ந்து மியன்மார் 1948 ஆம் ஆண்டு சுதந்­திரம் பெற்ற பின்னர் ரோஹிங்யா முஸ்­லிம்கள் அந்­நாட்டு பௌத்த பேரி­ன­வாத ஆட்­சி­யா­ளர்­களால் மாற்­றான்தாய் மனப்­பான்­மை­யுடன் தொடர்ந்து நடத்­தப்­பட்­டார்கள்.

இந்­நி­லையில் 1982 ஆம் ஆண்டு அந்­நாட்டு இரா­ணுவ ஆட்­சி­யாளர் ஜெனரல் நீ வின்னின் அர­சாங்­கத்தால் முன்­னெ­டுக்­கப்­பட்ட தேசிய சட்­டத்தில் ரோஹிங்யா இனத்­த­வர்­க­ளுக்­கான பிர­ஜா­வு­ரிமை மறுக்­கப்­பட்­டது. இதனால் அந்த சமூ­கத்­தினர் நாடற்­ற­வர்கள் என்ற நிலைக்குத் தள்­ளப்­பட்­டனர்.

அந்­நாட்டு பௌத்த தேசி­ய­வாத ஆட்­சி­யா­ளர்கள் ரோஹிங்யா இனத்­த­வர்­களை தமது நாட்டின் அங்­க­மாக ஏற்­றுக்­கொள்­வ­தற்கு தயா­ராக இல்­லாத நிலை அன்று முதல் இன்று வரை தொடர்­கி­றது. பேரி­ன­வாத போக்கால் உந்­தப்­பட்ட அந்­நாட்டுப் பாது­காப்பு படை­யி­னரால் ரோஹிங்யா இனத்­த­வர்கள் படு­கொலை, பாலியல் வல்­லு­றவு, எதேச்­ச­தி­கார கைதுகள், தடுத்து வைப்­புகள், முறை­யற்ற விதத்­தி­லான நடத்­து­கைகள் மற்றும் சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு காலத்­துக்கு காலம் உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றனர்.

 ராகைன் பிராந்­தி­யத்தில் கட்­ட­விழ்த்து விடப்­பட்ட இன அழிப்பு நட­வ­டிக்­கையின் தொடர்ச்­சி­யாக ரோஹிங்யா மக்கள் வாழ்ந்து வந்த நிலப் பகு­திகள் பேரி­ன­வாத அதி­கா­ரி­களால் பறி­முதல் செய்­யப்­பட்டு அவ்­வி­டங்­களில் நாட்டின் ஏனைய பகு­தி­களைச் சேர்ந்த பௌத்த மக்கள் மீளக் குடி­ய­மர்த்­தப்­பட்­டனர்.

 நாடற்­ற­வர்கள் என்ற ரீதியில் நட­மாடும் உரிமை, உயர் கல்வி கற்­ப­தற்­கான உரிமை, சுகா­தார வச­திகள் உள்­ள­டங்­க­லான சேவை­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான உரி­மை கள் மறுக்­கப்­பட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழ்­வா­தார வச­திகள் எது­வு­மின்றி வாழும் நிலைக்கு ரோஹிங்யா சமூகம் தள்­ளப்­பட்­டது.

 அத்­துடன் ரோஹிங்யா இனத்­த­வர்கள் இரா­ணுவ ஆட்­சி­யா­ளர்­களால் ஊதி­ய­மற்ற கட்­டாய பணிக்கு அமர்த்­தப்­பட்­டனர். இதன் பிர­காரம் அவர்கள் வாரத்தில் ஒருநாள் இரா­ணு­வத்­தி­ன­ருக்­காக பணி­யாற்ற நிர்ப்­பந்­திக்­கப்­பட்­ட­துடன் இரவு நேர காவல் பணியில் ஈடு­ப­டவும் கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்­டனர்.

2012 கல­வரத்­தை­ய­டுத்து தடுப்பு முகாம்­களில் வாழும் ரோஹிங்யா இனத்­த­வர்கள் படு­கொலை, சித்­தி­ர­வ­தைகள், பாலியல் வல்­லு­றவு போன்­ற­வற்­றுக்­குள்­ளாகி வரு­வ­துடன் அவர்கள் சுதந்­தி­ர­மான நட­மா­டு­வ­தற்கும் கல்வி கற்­ப­தற்கும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அவர்கள் அதி­கா­ரி­களின் உத்­தி­யோ­க­பூர்வ அனு­ம­தி­யின்றி பயணம் மேற்­கொள்ள முடி­யாத நிலையில் உள்­ளனர். ஒரு­வ­கையில் அவர்கள் அந்த முகாம்­களில் கைதிகள் போன்றே வாழ்­கின்­றனர்.

2014 ஆம் ஆண்டு மியன்­மாரில் மேற்­கொள்­ளப்­பட்ட சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அந்­நாட்­டி­லுள்ள 135 இனத்­துவக் குழுக்­களின் பட்­டி­யலில் ரோஹிங்யா முஸ்­லிம்கள் உள்­வாங்­கப்­ப­டாமை அவர்கள் நாடற்­ற­வர்கள் என்­பதை உறுதி செய்­வ­தாக அமைந்­தது.

சுதந்­திரம் பெற்­றது முதற்­கொண்டு இரா­ணுவ ஆட்­சி­யா­ளர்­களின் சர்­வா­தி­கார ஆட்­சியின் கீழ் துன்­பப்­பட்டு வந்த ரோஹிங்யா இனத்­த­வர்­களில் பலர் 2005 ஆம் ஆண்டில் பங்­க­ளா­தே­ஷுக்கு தப்பிச் சென்­றனர். அதே­ச­மயம் அவர்­களில் சிலர் தாய்­லாந்து, இந்­தோ­னே­சியா, இந்­தியா, மலே­சியா மற்றும் அவுஸ்­தி­ரே­லியா உள்­ள­டங்­க­லான நாடு­களில் தஞ்­ச­ம­டைந்­தனர்.

மியன்மார் அக­தி­களும் இலங்­கையும்

1951 ஆம் ஆண்டு அக­திகள் உடன்­ப­டிக்­கையின் கீழ் அக­தி­களை ஏற்றுக் கொள்ளும் நாடொன்­றாக இலங்கை வகி­பா­கத்தைக் கொண்­டி­ராத போதும் உள்­நாட்டு யுத்தம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­ட­தை­ய­டுத்து அது மியன்­மா­ரி­லி­ருந்து பட­கு­களில் வரும் அக­தி­க­ளுக்கு ஒரு புக­லி­ட­மாக மாறி­யுள்­ளது.

2013 ஆம் ஆண்டு மியன்­மா­ரி­லி­ருந்து 138 அக­திகள் பட­கு­களில் இலங்­கையை வந்­த­டைந்­தி­ருந்­தனர். தொடர்ந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தாம் மியன்­மா­ரில்­ அ­டக்­கு­மு­றைக்கு உட்­பட்­டுள்­ள­தாக உரிமைகோரி 30 ரோஹிங்யா இனத்­த­வர்­கள் இலங்­கையை வந்­த­டைந்­தி­ருந்­தனர்.

பட­கு­களில் வரு­ப­வர்கள் மனி­தர்கள் என்ற ரீதியில் நடத்­தப்­பட வேண்டும் எனவும் அபா­ய­க­ர­மான கடல் பய­ணத்தை மேற்­கொண்டு வரும் அவர்­க­ளுக்கு புக­லிடம் கொடுக்க அனைத்து நாடு­களும் கட­மைப்­பட்­டுள்­ளன எனவும் ஐக்­கிய நாடுகள் அக­திகள் முகவர் நிலையம் வலி­யு­றுத்தி வரு­கின்ற நிலையில், அக­தி­களை ஏற்றுக் கொள்ளும் ஒரு நாடாக வகைப்­ப­டுத்­தப்­ப­டாத நிலை­யிலும் தார்­மீகப் பொறுப்­புடன் மியன்மார் அக­தி­களை திருப்பி அனுப்­பாது தற்­கா­லிக தங்­கு­மி­டத்தை வழங்க வேண்­டிய கட்­டாயம் இலங்­கைக்கு ஏற்­பட்­டது.

பேரி­ன­வாத ஆதிக்­கத்தில் ஆங் சான் சூகி?

மியன்­மாரில் இரா­ணுவ ஆட்­சிக்கு எதிர்ப்புத் தெரி­வித்து ஜன­நா­யகத்தை நிலை­நாட்டப் போரா­டி­ய­மைக்­காக 1991ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கிக் கௌர­விக்­கப்­பட்ட அந்­நாட்டின் ஜன­நா­யக தலைவர் ஆங் சான் சூகி ரோஹிங்யா முஸ்­லிம்கள் தொடர்பில் உரிய நட­வ­டிக்­கையை எடுக்கத் தவ­றி­யுள்­ளமை சர்­வ­தேச ரீதியில் கடும் கண்­ட­னத்தை தோற்­று­வித்­துள்­ளது.

 மியன்­மாரில் ஜன­நா­யக முறையில் நடை­பெற்ற தேர்­தலில் வெற்றி பெற்று பிர­தமர் பத­ வியை ஒத்த பத­வியை வகிக்கும் ஆங் சான் சூகி, ரோஹிங்யா முஸ்­லிம்கள் விவ­கா­ரத்தில் மெனளம் காப்­ப­தா­கவே குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.

 மியன்­மாரில் ஜன­நா­யக ஆட்சி மலர்ந்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கின்ற போதும் அந்­நாட்டின் ஆட்­சி­ய­தி­கா­ரத்தில் முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரி­களே தொடர்ந்து செல்­வாக்குச் செலுத்தி வரு­வதால் அவரால் அவர்­க­ளது அதி­கா­ரத்தை மீறி நட­வ­டிக்கை எடுக்க முடி­யா­துள்­ளதா என இது­வரை காலமும் ஊகம் நிலவிய நிலையில், அவ­ரது பிந்­திய விமர்­ச­னங்கள் அவர் பௌத்த மதத்தைச் சேர்ந்­தவர் என்ற ரீதியில் பேரி­ன­வா­தத்தால் தூண்­டப்­பட்டு செயற்­ப­டு­கி­றாரா என்ற கேள்­வியைத் தோற்­று­வித்­துள்­ளன.

 கடந்த வாரம் ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த கிளர்ச்­சி­யா­ளர்­களால் ராகைன் பிராந்­தி­யத்­தி­லுள்ள 30 பொலிஸ் நிலை­யங்கள் தாக்­கப்­பட்ட­தை­ய­டுத்து அங்கு வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள்­ளன. அந்தப் பிராந்­தி­யத்­தி­லுள்ள மக்கள் மீது இரா­ணு­வத்தால் கண்­மூ­டித்­த­ன­மாக படு­கொலைத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்ட அதே­ச­மயம் அங்­குள்ள குடி­சைகள் பலவும் தீ வைத்துக் கொளுத்­தப்­பட்­டன.

இதனால் ஏற்­க­னவே போக்­கி­ட­மின்றி வாழும் ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த குழந்­தைகள் மற்றும் பெண்கள் உள்­ள­டங்­க­லான அப்­பாவி மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நாலா­பு­றமும் ஓட வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டனர்.

 இந்­நி­லையில் மேற்­படி வன்­மு­றை­களை ஒரு இனத்­தையே பூண்­டோடு அழிக்கும் இன சுத்­தி­க­ரிப்பு நட­வ­டிக்­கை­யாக சர்­வ­தேச மனித உரி­மைகள் அமைப்­புகள் விமர்­சித்­துள்ள நிலையில், ஆங் சான் சூகி அதற்கு வன்­மை­யாக மறுப்புத் தெரி­வித்­துள்ளார்.

ராகைன் பிராந்­தி­யத்தில் மேற்­கொள்­ளப்­ப­டு­வது இன சுத்­தி­க­ரிப்பு நட­வ­டிக்­கை­யல்ல அது தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­யாகும் என அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

 பேரின ஆதிக்­க­வா­திகள் சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளுக்கு எதி­ராக தம்மால் கட்­ட­விழ்த்து விடப்­படும் வன்­மு­றை­க­ளுக்கு வழ­மை­யாகக் கூறும் சமா­தா­னத்­தை­யொத்­த­தாக அவ­ரது விமர்­சனம் உள்­ளமை மனித உரி­மைகள் தொடர்­பான ஆர்­வ­லர்கள் அனை­வ­ரையும் ஏமாற்­றத்தில் ஆழ்த்­து­வ­தாக இருந்­தது என்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

அதே­ச­மயம், கடந்த வார இறு­தியில் ராகைன் பிராந்­தி­யத்தில் தொண்டு ஸ்தாபன பணி­யா­ளர்கள் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லுக்கு ரோஹிங்யா இனத்­த­வர்­களே காரணம் எனக் குற்­றஞ்­சாட்டும் வகையில் பிராந்­தி­யத்­தி­லுள்ள 'பங்­க­ளா­தேஷை சேர்ந்த தீவி­ர­வா­தி­களே காரணம்' என ஆங் சான் சூகி எது­வித ஆதா­ர­மு­மின்றி தெரி­வித்­தி­ருந்­தமை சர்­வ­தேச ரீதியில் பெரும் சர்ச்­சையைத் தோற்­று­வித்­துள்­ளது.

ரோஹிங்யா இனத்­த­வர்கள் தங்­கி­யி­ருந்த முகாமை தீவி­ர­வாத முகாம் ஒன்­றாகக் குறிப்­பிட்டு அந்த முகா­மொன்றில் ஐக்­கிய நாடுகள் உணவுத் திட்ட பொதி­க­ளுடன் வெட்டிக் கொல்­லப்­பட்ட 3 வயது வந்­த­வர்­க­ளதும் 3 சிறு­வர்­க­ளதும் சட­லங்கள் காணப்­பட்­ட­தாக தகவல் கிடைத்­துள்­ள­தாக தனது முகப் புத்­த­கத்தில் குறிப்­பிட்­டி­ருந்த ஆங் சான் சூகி, அது தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­தாக தெரி­வித்­தி­ருந்தார்.

 அந்த அக­திகள் முகாம்­க­ளுக்கு தொண்டு ஸ்தாபன பணி­யா­ளர்கள் செல்­வ­தற்கு விதிக்­கப்­பட்­டுள்ள கடும் கட்­டுப்­பா­டுகள் கார­ண­மாக அங்­குள்ள 80,000 க்கும் அதி­க­மான சிறு­வர்கள் போஷாக்­கின்றி உள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

 இத்­த­கைய சூழ்­நி­லையில் ஆங் சான் சூகியின் எது­வித ஆதார அடிப்­ப­டை­யு­மற்ற பொறுப்­பு­ணர்­வற்ற முகப் புத்­தக விமர்­சனம் மேற்­படி பிராந்­தி­யத்தில் தீவி­ர­வா­தி­க­ளுக்கு இத்­த­கைய தாக்­கு­தல்­களை முன்­னெ­டுக்க வழி­காட்­டு­வ­தா­கவும் அங்கு செல்­வதை தொண்டு ஸ்தாபன பணி­யா­ளர்கள் முற்­றாக கைவிட வழி­வகை செய்­வ­தா­கவும் உள்­ள­தாக சர்­வ­தேச மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­ப­கத்தின் பிரதிப் பணிப்­பாளர் பில் ரொபேர்ட்ஸன் எச்­ச­ரித்­துள்ளார்.

தீர்வு சாத்­தி­யமா?

உல­கி­லேயே மிகவும் அடக்­கு­மு­றைக்­குள்­ளான சமூ­க­மாக மனித உரி­மைகள் அமைப்­பு­களால் விமர்­சிக்­கப்­ப­டு­கி­ன்ற ரோஹிங்யா முஸ்­லிம்­க­ளுக்கு தீர்­வொன்றை பெற்றுக் கொடுக்க முடி­யாத நிலையில் சர்­வ­தேச சமூகம் உள்­ளது.

 அதற்கு மியன்மார் மனித உரி­மைகள் தொடர்­பான சர்­வ­தேச உடன்­ப­டிக்­கைகள் எதிலும் கைச்­சாத்­தி­டாத நிலையில் உள்­ளதை ஒரு கார­ண­மாகக் கூறலாம்.

ஆனால், ரோஹிங்யா மக்­களின் பூர்­வீக நாடாக கரு­தப்­படும் பங்­க­ளா­தே­ஷா­னது சர்­வ­தேச குடி­யியல், அர­சியல் உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்­டுள்­ளதை அடிப்­ப­டை­யாக வைத்து அந்நாட்டை இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரும் வாய்ப்பு உள்ளது.

அதேசமயம், ஜனநாயக ஆட்சி முறைமைக்கு மாறுவதாக காண்பித்துக் கொள்ளும் மியன்மாரை சர்வதேச மனித உரிமைகள் ஆவணங்களில் கைச்சாத்திட தூண்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சர்வதேச சமூகத்திற்கு சந்தர்ப்பம் உள்ளது. ஆனால், மேற்படி உடன்படிக்கைகள் மியன்மாரில் உண்மையான மாற்றமொன்றைக் கொண்டு வரும் அதிகாரத்துவம் பொருந்தியவை அல்ல என்பதை மறுக்க முடியாது. அதற்கு இலங்கை ஒரு சிறந்த உதாரணம்.

இந்நிலையில் மியன்மார் ஆட்சியாளர்கள் தமது பேரினவாத கொள்கைகளை தாமாக முன்வந்து ஒதுக்கி வைத்து ரோஹிங்யா மக்களை தமது நாட்டின் பிரஜை களாக அங்கீகரிக்காத வரையில் அந்த இனத்தவர்களுக்கு விமோசனம் ஏற்பட முடியாது. இந்த சூழ்நிலை தொடரும் பட்சத் தில் உலகில் நாடற்றவர்களாக ஆள் எவ ரும் இருக்கமுடியாது என வலியுறுத்தும் சர்வதேச மனித உரிமைக்ள பிரகடன உறுப்புரைக்கமைய அந்த மக்களுக்கு வேறு மூன்றாவது தரப்பு நாட்டில் பிரஜாவுரிமையை பெற்றுத் தர வேண்டிய நிர்ப்பந்தம் சர்வதேச சமூகத்திற்கு ஏற்படும்.

ரோஹிங்யா கிளர்ச்சியாளர்களின் போராட் டத்துக்கு மத்திய கிழக்கில் பயிற்சி பெற்ற குழுவொன்று ஆதரவளித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

 உரிமைகள் மறுக்கப்பட்டு நசுக்கப்படும் ஒரு சமூகம் இலகுவாக தீவிரவாதத்தால் தூண்டப்படுவது வரலாற்று ரீதியான நிதர்சனமாகும். இந்நிலையில் ரோஹிங்யா இனத்தவர்களுக்கான உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படும் போது அவர்கள் இலகுவாக சர்வதேச தீவிரவாதிகளின் பால் கவரப்பட்டு உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தல் விடுப்ப வர்களாக ஒரு சமயம் மாறும் அபாயம் உள்ளது என்பதை நிராகரிக்க முடியாது. அதனால் அந்த மக்களின் உரிமைகளை பாதுகாக்க சர்வதேச சமூகம் துரித மாக நடவடிக்கையை எடுக்க வேண் டியுள்ளமை காலத்தின் கட்டாயமா கவுள்ளது.

ஆர். ஹஸ்தனி

 

 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-02#page-4

  • தொடங்கியவர்

ரொஹிஞ்சா கிராமத்தில் 700 வீடுகள் எரிப்பு: செயற்கைக்கோள் படத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டு

மியான்மர்-மியான்மர் பங்களாதேஷ் எல்லையைக் கடந்த பிறகு சேறும் சகதியுமான சாலையில் நடந்து வரும் ரோஹிஞ்சா அகதிகள்.படத்தின் காப்புரிமைREUTERS Image captionமியான்மர்-மியான்மர் பங்களாதேஷ் எல்லையைக் கடந்த பிறகு சேறும் சகதியுமான சாலையில் நடந்து வரும் ரோஹிஞ்சா அகதிகள்.

மியான்மரில் உள்ள ரொஹிஞ்சா முஸ்லிம் கிராமம் ஒன்றில் 700 வீடுகள் எரிக்கப்பட்டிருப்பது செயற்கைக்கோள் படத்தின் மூலம் தெரிவதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்னும் மனித உரிமை அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் வன்முறைகளால் ஏற்பட்டுள்ள சேதாரம் முதலில் நினைத்ததைவிட மிக மோசமாக இருக்கும் என்ற கவலையை இந்தப் படம் தருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மியான்மர் ராணுவத்துக்கும், முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கும் இடையில் நடந்த மோதலை அடுத்து கடந்த வாரம் பல பத்தாயிரம் ரொஹிஞ்சாக்கள் பக்கத்து நாடான பங்களாதேஷுக்கு அகதிகளாக தப்பிச் சென்றுள்ளனர்.

தங்கள் வீடுகளுக்கு ராணுவத்தினர் வேண்டுமென்றே தீ வைத்ததாக அகதிகளாக இடம் பெயர்ந்த மக்கள் குற்றம்சாட்டினர். இந்தக் குற்றச்சாட்டை மியான்மர் அரசு மறுத்தது.

அகதிகளை அனுமதிக்கும் பங்களா போலீஸ்

மியான்மர்-பங்களாதேஷ் எல்லையில் உள்ள முகாம் ஒன்றில் பக்ரித் தொழுகை செய்யும் ரோஹிஞ்சா அகதிகள்.படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionமியான்மர்-பங்களாதேஷ் எல்லையில் உள்ள முகாம் ஒன்றில் பக்ரித் தொழுகை செய்யும் ரோஹிஞ்சா அகதிகள்.

மியான்மர் வன்முறையில் இருந்து தப்பிவரும் அகதிகளை பங்களாதேஷுக்குள் அனுமதிக்கவேண்டாம் என்ற அந்நாட்டு அரசின் உத்தரவை மீறி, பங்களாதேஷ் போலீசார் அகதிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருநாட்டு எல்லை வழியாக மியான்மரின் சிறுபான்மை முஸ்லிம்கள் தப்பி வருகிறார்கள். அவர்கள் எல்லையில் தடுக்கப்படவில்லை என்கிறார் பங்களாதேஷின் காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர்.

அகதிகள் எண்ணிக்கை 58 ஆயிரமாக உயர்வு

இதுவரை 58 ஆயிரம் அகதிகள் எல்லையைக் கடந்து பங்களாதேஷுக்குள் வந்திருப்பதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. ராணுவத்தினரோடு பௌத்தக் குழுக்களும் இணைந்துகொண்டு தங்கள் கிராமங்களைக் கொளுத்துவதாகவும் அகதிகள் கூறுகின்றனர்.

20 காவல் சாவடிகள் மீது கடந்த மாதம் ரொஹிஞ்சா தீவீரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு தங்கள் ராணுவம் எதிர்வினையாற்றுவதாக மியான்மர் அரசு கூறுகிறது.

மேலும் 20,000 ரொஹிஞ்சா மக்கள் எல்லையில் உள்ள நஃப் நதி நெடுகிலும் சிக்கியிருப்பதாகவும், அவர்கள் நீரில் மூழ்கி இறக்கும், நோய் மற்றும் விஷப் பாம்புகள் கடிக்கு ஆளாகும் ஆபத்துகள் இருப்பதாக மனித நேய உதவி அமைப்புகள் கூறுகின்றன.

பல ஆண்டாக நீடிக்கும் துன்புறுத்தல்

வரைபடம்

கலவரம் நடந்துவரும் ரக்கைன், மியான்மரில் மிக ஏழ்மையான பகுதி. இங்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரொஹிஞ்சா சிறுபான்மை மக்கள் வசிக்கிறார்கள். புத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் மியான்மரில் இச்சிறுபான்மையினர் பல பத்தாண்டுகளாக துன்புறுத்தப்படுகிறார்கள். இவர்கள் அந்நாட்டுக் குடிமக்களாகக் கூடக் கருதப்படவில்லை.

மோசமான மோதல்கள் அவ்வப்போது இங்கு வெடிப்பதுண்டு. 2016ம் ஆண்டுக்குப் பிறகு நடந்தவற்றிலேயே மிக மோசமானது தற்போதைய மோதல்கள். இங்கு சமூகப் பதற்றம் இருந்திருக்கலாம். ஆனால், எல்லையோரம் உள்ள காவல் சாவடிகள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 9 போலீஸ்காரர்கள் கொல்லப்படும் வரை தீவிரவாத்ததுக்கான எந்த அறிகுறியும் இருந்ததில்லை. அக்டோபரிலும், ஆகஸ்டிலும் நடத்தப்பட்ட இந்த இரு தாக்குதல்களையும் ஆருக்கன் ரொஹிஞ்சா சால்வேஷன் ஆர்மி (அர்சா) என்ற குழுவே நடத்தியது.

ராணுவம் தவறு ஏதும் நடக்கவில்லை என்று மறுத்தாலும், முறைப்படியான விசாரணை ஒன்றை தற்போது மேற்கொண்டுள்ளது ஐ.நா.

 

http://www.bbc.com/tamil/global-41136746

  • தொடங்கியவர்

மியான்மரை விட்டு வெளியேறிய 73,000 ரொஹிஞ்சா முஸ்லிம்கள்

ரொஹிஞ்சா முஸ்லிம்கள்படத்தின் காப்புரிமைREUTERS

மியான்மரில் தீவிரவாதிகளுக்கு எதிரான பிரசாரத்தை அந்நாட்டு ராணுவத்தினர் தொடங்கிய இரண்டு வாரத்திற்கும் குறைவான காலத்திற்குள், 73,000 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து வங்கதேசம் சென்றுள்ளதாக ஐ.நாவின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்னும் பலர் வந்துகொண்டிருப்பதாக ஐ.நா செய்தி தொடர்பாளர் விவின் டான் பிபிசியிடம் கூறினார்.

இன்று, மேற்கு மியான்மரில் புகை மேலேழும்பி வருவதைப் பார்க்க முடிந்தது. பற்றி எரியும் கிராமங்களில் இருந்து அப்புகை வந்திருக்கலாம்.

ராணுவப் படையினர் தங்களைச் சுட்டதுடன், வீடுகளுக்கும் தீ வைத்ததாக அகதிகள் கூறுகின்றனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை அரசு மறுக்கிறது.

வன்முறைக்குக் காரணமானவர்கள் என அதிகாரிகளால் குற்றம்சாட்டப்படும் ரொஹிஞ்சா முஸ்லிம்களைப் பாதுகாப்பு படையினர் தேடி வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

வங்கதேச எல்லையோரம் உள்ள கிராமங்கள் அகதிகளால் நிரம்பி வழிகின்றன. அங்கு கடுமையான உணவுப்பற்றாக்குறை உள்ளதாக உதவிப் பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

http://www.bbc.com/tamil/global-41141508

  • தொடங்கியவர்

மியன்மார் சென்றுள்ள இந்திய தலைமை அமைச்சர்

மியன்மார் சென்றுள்ள இந்திய தலைமை அமைச்சர்
 

சீனா பயணத்தை நிறைவு செய்யும் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி இன்று மியான்மர் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பயணத்தின் போது ஆங் சாங் சூச்சியுடன் ரோஹிங்யா முஸ்லிம்கள் பிரச்சனைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சீனா பயணத்தைத் தொடர்ந்து மியான்மர் தலைநகர் நேபிடா சென்றுள்ள தலைமை அமைச்சர் மோடி மியான்மர் அரசின் ஆலோசகரான ஆங் சாங் சூச்சியை சந்தித்தார்.

தற்போது மியான்மரில் நூற்றுக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். சுமார் 1 லட்சம் பேர் வங்கதேசம் மற்றும் இந்தியாவுக்கு அகதிகளாக தப்பி ஓடிவந்துள்ளனர்.

இந்தியா 40,000 பேரை மியான்மருக்கு திருப்பி அனுப்புவதாகக் கூறியது. ஆனால் ஐநா அகதிகள் ஆணையம் இதை கைவிட வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் மியான்மர் சென்றுள்ள தலைமை அமைச்சர் நரேந்திர மோடி சூச்சியுடன் ரோஹிங்யா முஸ்லிம்கள் பிரச்சனை குறித்து விவாதிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

2 வாரங்களில் 100,000 ரொஹிங்யர்கள் அகதிகளாக பங்களாதேஷில் தஞ்சம்

ஐ.நா. சபை கவலை

 
 
2 வாரங்களில் 100,000 ரொஹிங்யர்கள்  அகதிகளாக பங்களாதேஷில் தஞ்சம்
 

மியன்மாரில் இருந்து கடந்த இரண்டு வாரங்களில் சுமார் ஒரு லட்சம் ரொஹிங்யர்கள் அகதிகளாக பங்களாதேஷுக்குச் சென்றுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பௌத்த நாடான மியன்மாரில் ரொஹிங்ய இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். அவர்களை மியன்மார் அரசு இனச் சுத்திகரிப்புச் செய்கிறது என்று குற்றம்சுமத்தப்படுகிறது.

கடந்த 25ஆம் திகதி ரொஹிங்ய ஆயுதக் குழுவுக்கும், மியன்மார் அரச படைக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.

இதையடுத்து மியன்மாரில் அப்பாவி ரொஹிங்ய இஸ்லாமியர்கள் கடுமையாகத் தாக்கப்படுகின்றனர். அவர்களை மியன்மார் அரசு இனச் சுத்திகரிப்பு செய்கிறது என்று குற்றம் சுமத்தப்படுகிறது.

இதனால் ரொஹிங்ய இஸ்லாமியர்கள் அயல்நாடான பங்களாதேஷுக்கு அகதிகளாகச் செல்கின்றனர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் ஒரு லட்சம் ரொஹிங்யர்கள் அவ்வாறு அகதிகளாகச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

 

ரொஹிங்யர்களுக்கு சூகியின் பதிலென்ன

மலாலா கேள்வி

 
ரொஹிங்யர்களுக்கு சூகியின் பதிலென்ன
 

மியன்மாரின் ரோஹிங்ய முஸ்லிம்கள் சந்தித்து வரும் இன்னல்களைப் போக்க உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்று உலகம் எதிர்பார்க்கிறது என்று தெரிவித்தார் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா.

‘ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது இராணுவத்தினர் நடத்தும் தாக்குதல் துயரகரமானது மற்றும் வெட்கக் கேடானது.

எனவே ரோஹிங்ய முஸ்லிம்கள் விவகாரம் தொடர்பாக ஆஹ் சாங் சூகி உரிய தீர்வு காண வேண்டும். உங்கள் நடவடிக்கையை உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது’ என மேலும் தெரிவித்தார்.

http://newuthayan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.