Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு எதிரான யுத்த குற்றச்சாட்டு தொடர்பில் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விளக்கம்

Featured Replies

ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு எதிரான யுத்த குற்றச்சாட்டு தொடர்பில் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விளக்கம்

 

 

ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு எதிரான யுத்த குற்றச்சாட்டு தொடர்பில் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விளக்கம்
 

ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக சர்வதேச மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் யுத்த குற்றச்சாட்டு தொடர்பில் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று விளக்கமளித்தார்.

 

காணொளியில் காண்க…

http://newsfirst.lk/tamil/2017/09/ஜெனரல்-ஜகத்-ஜயசூரியவிற்க/

  • தொடங்கியவர்

ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக சாட்சியமளிக்க நான் தயார் : பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா

Published by Priyatharshan on 2017-09-02 09:52:05

 
 

பிரே­சி­லுக்­கான முன்னாள் இலங்கை தூது வர் ஜெனரல் ஜகத் ஜய­சூ­ரிய தொடர்­பாக முறை­யான விசா­ரணை ஒன்றை ஆரம்­பித்தால்  அது­தொ­டர்­பாக சாட்­சி­யாக முன்­வந்து நீண்ட விளக்­கத்தை அளிப்பேன். அவ­ரது செயற்­பா­டு­க­ளுக்கு  அன்­றி­ருந்த பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் மற்றும் ஆட்­சி­யா­ளரின் ஆசிர்­வாதம் இருந்­த­மைக்கு என்­னிடம் தகவல் இருக்­கின்­றது என பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் பீல் மார்ஷல் சரத்­பொன்­சேகா தெரி­வித்தார்.

sarath-fonseka-jagath-jayasuriya.jpg

கூட்­டுப்­ப­டை­களின் தலைமை அதி­காரி அட்­மிரல் ரவிந்­திர விஜே­கு­ண­வர்­தன மற்றும் புதிய கடற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் சின்­னையா ஆகி­யோரை நேற்று வெள்­ளிக்­கி­ழமை அவ­ரது அமைச்சில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய பின்னர் ஊட­கங்­க­ளிடம் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே   அவர் இவ்­வாறு கூறினார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

எனக்கு பின்னர்   இரா­ணுவ தள­ப­தி­யாக ஜகத் ஜய­சூ­ரிய  நிய­மிக்­கப்­ப­டுவார் என நான் எதிர்­பார்க்­க­வில்லை. அவர் அந்த பத­விக்கு பொருத்­த­மா­னவர் அல்ல. அவரை தள­ப­தி­யாக்க வேண்டாம் என மஹிந்த ராஜ­பக்ஷ்­விடம் தெரி­வித்தேன். பல சிரேஷ்ட அதி­கா­ரிகள் இருக்கும் நிலை­யி­லேயே  அவர் இரா­ணுவ தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்டார். மஹிந்த ராஜ­ப­க்ஷவும் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவும் அவர்­களின் தேவைக்கே அவரை தள­ப­தி­யாக்­கி­னார்கள். அதன் பெறு­பே­றா­கவே என்னை இழுத்­துக்­கொண்டு சிறை­யி­ல­டைக்க அவர் தலை­மைத்­துவம் வகித்தார்.

வவு­னி­யாவில் கட்­ட­ளைத்­த­ள­ப­தி­யாக ஜகத் ஜய­சூ­ரிய  செயற்­பட்டார். ஆனால் அவர் யுத்த களத்தில் ஈடு­ப­ட­வில்லை. இரா­ணு­வத்­துக்கு தேவை­யான வச­தி­களை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுப்­பதே அவரின்   பொறுப்­பாக இருந்­தது. அந்த காலப்­ப­கு­தியில் அவர் சில குற்­றச்­செ­யல்­களில் ஈடு­ப­டு­வ­தாக எனக்கு தகவல் கிடைத்­தது. அதா­வது, யுத்­தத்­தின்­போது கைது­செய்­யப்­ப­டுட்டு அவ­ருக்கு கீழ் இருப்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக  குற்றம் செய்­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது . 

அத்­துடன் அவர் இரா­ணுவ தள­ப­தி­யான பின்­னரும்  அந்த குற்­றச்­செ­யற்­பாட்டை தொடர்ந்து மேற்­கொண்டார் என்றே நான் நினைக்­கின்றேன். அவ­ரது குற்­றங்கள் தொடர்­பாக என்­னிடம் தக­வல்கள் இருக்­கின்­றன. முறை­யான விசா­ரணை ஒன்றை ஆரம்­பித்தால் அப்­போது அது­தொ­டர்­பாக சாட்­சி­யாக முன்­வந்து நீண்ட விளக்­கத்தை அளிப்பேன்.

அதனால் ஜகத் ஜய­சூ­ரிய என்­னி­ட­மி­ருந்து இவ்­வா­றான பதிலை  எதிர்­பார்த்­தி­ருக்­க­மாட்டார். அவர் குற்றம் செய்­தி­ருந்­த­மையை நான் அறிந்­தி­ருந்தேன். இது தொடர்­பாக விசா­ரணை ஒன்றை நடத்த ஆரம்­பித்தேன். அதன் முதற் கட்­ட­மாக  அவ­ரது பிர­தான உத­வி­யா­ள­ராக இருந்த லெப்­டினன் ஒரு­வரை கைது­செய்தேன். அந்த விசா­ர­ணை­களை ஆரம்­பிக்­கும்­போது என்னை இரா­ணுவ தள­ப­தியில் இருந்து நீக்­கி­னார்கள்.

எனவே ஜகத் ஜய­சூ­ரி­யவின் குற்­றங்­க­ளுக்கு அன்றிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் ஆட்சியாளரின் ஆசிர்வாதம் கிடைத்தமைக்கு என்னிடம் தகவல் இருக்கின்றது. அதனால் குற்றமிழைத்த இராணுவ வீரர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதன் மூலம் 2இலட்சம் இராணுவ வீரர்களின் நற்பெயரை பாதுகாத்துக்கொள்ளலாம் என்றார்.

http://www.virakesari.lk/article/23889

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றவாளிகளை தண்டிக்காவிடின் அனைத்துலக சமூகம் அதைச் செய்யும் – சரத் பொன்சேகா

 

sarath-fonsekaஜெனரல் ஜெகத் ஜயசூரிய குற்றங்களை இழைத்தார் என்பதை நிரூபிப்பதற்குத் தேவையான தகவல்கள் தன்னிடம் இருப்பதாவும்,  அவருக்கு எதிராக  சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாகவும், சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட அவர்,

“நான் இராணுவத் தளபதியாக இருந்த போது, ஜெனரல் ஜயசூரிய,  வவுனியாவில் விநியோகம் மற்றும் புனர்வாழ்வு வேலைகளுக்குப் பொறுப்பாக இருந்தார்.

போர்க்களத்தில் பல இராணுவ டிவிசன்கள் இருந்தன. அவை எனது நேரடியான  கட்டளையின் கீழ் இயங்கின.  அவை ஜெனரல் ஜயசூரியவின் கீழ் இருக்கவில்லை.

அவர் வன்னி படைகளின் தலைமையக தளபதியாக மாத்திரம் இருந்தார். வவுனியாவின் முன்னரங்க நிலைகளை பாதுகாப்பதே அவருக்கான பணியாக இருந்தது.

போரில் ஈடுபட்ட படையினருக்கான விநியோகங்களை மேற்கொள்ளும், காயமடைந்த படையினரை வெளியேற்றும் பொறுப்பும் மாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

அப்போது அவர் தனது பதவியை தவறாகப் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது.  எனினும், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல்,  பாதுகாப்பு அளித்திருந்தார் அப்போதைய பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

வன்னிப் படைகளின் தளபதியாக இருந்த போது, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய பல்வேறு குற்றங்களை இழைத்தார்

iகைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படடிருந்தவர்கள் தொடர்பாக, ஜெனரல் ஜயசூரிய குற்றங்களை இழைத்தார் என்று எனக்கு முறைப்பாடுகள் கிடைத்தன. அவர் இராணுவத் தளபதியாக பதவி உயர்வு பெற்ற பின்னரும் அதே உத்தியைக் கையாண்டார்.

யார் குற்றங்களை இழைத்தார்கள் என்பது தொடர்பாக என்னிடம் நிறையத் தகவல்கள் உள்ளன. முறையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக விளக்கமளிக்கத் தயாராக இருக்கிறேன்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், ஜெனரல் ஜயசூரியவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்க முயற்சித்தேன். விசாரணை தொடங்கப்பட்ட போது, நான் இராணுவத் தளபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டேன்.

அவர் குற்றங்களைச் செய்தார் என்று அறிந்து, விசாரணைகளைத் தொடங்க முயற்சித்தேன். அதன் ஆரம்ப நடவடிக்கையாக ஜெனரல் ஜயசூரியவின் உதவியாளரை கைது செய்தேன். ஆனால் அந்த விசாரணையை நிறைவு செய்ய நான் அனுமதிக்கப்படவில்லை.

குற்றங்கள் குறிப்பிட்ட சில இடங்களில் நடந்துள்ளதாக பதிவாகியுள்ளன. விசாரணைகள் தொடங்கப்பட்டு, இத்தகைய குற்றங்களை இழைத்தவர்களை கண்டறியப்பட்டு, நாட்டினதும், இராணுவத்தினதும் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும்.

இவை இராணுவம் கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டிய குற்றங்களல்ல. சில தனிநபர்களால் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள். இந்தச் சம்பவங்களை நாங்கள் வெளிக்கொண்டு வர வேண்டும். சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க வேண்டும்.

உள்நாட்டில் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், அனைத்துலக பிரகடனங்களின் படி, ஐ.நா மற்றும் பாதுகாப்புச் சபை என்பன அவ்வாறு செய்ய முடியும்.

ஏதாவது குற்றங்கள் இடம்பெற்றால், அதில் தொடர்புடையவர்கள் மீது இராணுவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

அனைத்துலக நீதிமன்றத்தில், ஜெனரல் ஜயசூரியவுக்கு எதிராக சாட்சியம் அளிப்பதா என்பதை, அரசாங்கம் தான் முடிவு செய்யும்.

ஜெனரல் ஜயசூரியவை இராணுவத் தளபதியாக நியமிக்க வேண்டாம் என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் நான் கோரியிருந்தேன். ஆனால், மூத்த அதிகாரிகள் 17 பேர் இருந்த போது, ஜெனரல் ஜயசூரியவை தளபதியாக நியமித்தார்.

எனக்குப் பின்னர், இராணுவத் தளபதியாக பொறுப்பேற்க ஜெனரல் ஜயசூரிய தகுதியானவர் என்று நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதும், ஜெனரல் ஜயசூரிய, பாதுகாப்புச் செயலரின் தாளத்துக்கு ஆடினார். என்னை சிறைக்குள் இழுத்துச் செல்ல இராணுவத்தை அவர் வழி நடத்தினார்.

அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கான நுழைவிசைவைப் பெற்றுக் கொள்வதில் நானும், இன்னும் பல இராணுவ அதிகாரிகளும் நெருக்கடிகளை சந்திக்கிறோம்.

ஏனென்றால், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த அதிகாரிகள் மீது உள்நாட்டில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால்,  அனைத்துலக சமூகம் அதனைச் செய்ய நிர்ப்பந்திக்கப்படும்.

தவறு செய்த அதிகாரிகளை தண்டித்தால், போரில் பங்கெடுத்த இரண்டு இலட்சம் படையினர், போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவர்.

சிறிலங்கா இராணுவத்துக்கு சரியான அங்கீகாரம் தேவைப்படும் போது, சிறிலங்கா இராணுவம் விமர்சிக்கப்படுவதை கேட்கின்ற போது ஏமாற்றமாக உள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2017/09/02/news/25670

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சேகாவே வன்னி நடவடிக்கைக்கு கட்டளையிட்டார்- ஜகத் ஜயசூரிய

 

16

யுத்தக் குற்றச் செயலில் ஈடுபட்டதாக தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களினால் தனது நற்பெயருக்கு பாரிய அபகீர்த்தி ஏற்படுத்தப்படுவதாகவும், அரசாங்கம் உடன் தலையிட்டு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சின் செயலாளரைச் சந்தித்து தனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வன்னி இராணுவ முன்னெடுப்புக்களின் போது படையினருக்கு கட்டளைகளைப் பிறப்பித்தது, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தான் என்பது அனைவரும் அறிந்த விடயம் எனவும், இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் சரத் பொன்சேகா இதுபற்றி தெரிவித்து வந்துள்ளார் எனவும் ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார். 

http://www.dailyceylon.com/135393

  • தொடங்கியவர்

போரின் போது ஜகத் ஜயசூரிய குற்றங்களில் ஈடுபடவில்லை – மகிந்த சமரசிங்க

 
போரின் போது ஜகத் ஜயசூரிய குற்றங்களில் ஈடுபடவில்லை – மகிந்த சமரசிங்க
 

போர் இடம்பெற்றபோது ஜகத் ஜயசூரிய குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவித்தாவது-

அரசு எப்போதும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்காகச் செயற்படும். அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாகும். அது கட்சியின் பொது கருத்து அல்ல.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைச்சரவையில் இது குறித்து கலந்தாலோசிக்கப்படவில்லை. இராணுவத்தினர் எந்த சந்தர்ப்பத்திலும் காட்டிக்கொடுக்கப்பட மாட்டார்கள்.- என்றார்.

இதேவேளை அமைச்சர் சரத் பொன்சேகா முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக சாட்சியமளிக்க தயார் என்று நேற்று கூறியிருந்தார்.

http://newuthayan.com/story/25052.html

  • தொடங்கியவர்

பொன்சேகா கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து – ருவான் விஜேவர்த்தன

 
பொன்சேகா கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து – ருவான் விஜேவர்த்தன
 

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தொடர்பில் முன்வைத்த கருத்து அவரது தனிப்பட்ட கருத்து.

இவ்வாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரிடமும் உள்ள கருத்து வேறுபாடே இதற்குக் காரணம். அதை அரச தலைவர் தலையீட்டில் சமரசம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

ஜெகத் ஜெயசூரியவுக்கு எதிராக சாட்சியமளிப்பேன் என்று சரத் பொன்சேகா நேற்றுக் கூறியிருந்தார். அது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

http://newuthayan.com/story/25194.html

  • கருத்துக்கள உறவுகள்

இவங்க.. ஆளுக்காள் அடிபடுவதால்.. சில நன்மைகள் நமக்கு விளையுமா.. அல்லது அமெரிக்கனும்.. கனடியனும் நல்லெண்ணம் என்ற போர்வையில்.. எல்லாருக்கும் நல்லெண்ணை தடவி தமிழரை அழித்ததை ஒழிப்பாய்ங்களா. :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, nedukkalapoovan said:

இவங்க.. ஆளுக்காள் அடிபடுவதால்.. சில நன்மைகள் நமக்கு விளையுமா.. அல்லது அமெரிக்கனும்.. கனடியனும் நல்லெண்ணம் என்ற போர்வையில்.. எல்லாருக்கும் நல்லெண்ணை தடவி தமிழரை அழித்ததை ஒழிப்பாய்ங்களா. :rolleyes:tw_angry:

இவங்க ஆளாளுக்கு அடிபட்டாலும் பேசினாலும் நம்ம ஆட்கள் அப்படி ஒன்றும் நடக்கவில்லையென்று சொல்லுவார்கள்  நம்ம ஆட்கள் என்று சொன்னது நம்ம செம்புகள்தான் பாருங்க

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நவீனன் said:

இராணுவத்தினர் எந்த சந்தர்ப்பத்திலும் காட்டிக்கொடுக்கப்பட மாட்டார்கள்.- என்றார்.

 இங்கேயேயே உண்மையை ஒப்புக்கொண்டு  விட்டீர்கள் ஐயா. நீங்கள் எல்லோருமே குற்றவாளிகள்தான். இதில் யார் அதிகம் குற்றமிழைத்தார்கள், யார் குறைவு என நீங்களே எடை போட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள்.

  • தொடங்கியவர்

காட்டிக் கொடுத்து விட்டார் பொன்சேகா – குமுறுகின்றார் விமல்!!

 
காட்டிக் கொடுத்து விட்டார் பொன்சேகா – குமுறுகின்றார் விமல்!!
 

இராணுவம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவால் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச.

கொழும்பில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவித்தாவது-

பொன்சோகாவுக்குக் கீழ் பணியாற்றிய இராணுவ வீரர்களை அவர் காட்டிக்கொடுத்து விட்டார். இராணுவத்தினர் அரசியல் வேறுபாடுகளின்றி நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக போராடியவர்கள்.- என்றார்.

http://newuthayan.com/story/25357.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.