Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீருடையில் தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும்! - சரத் பொன்சேகா

Featured Replies

நான் தேசத்துரோகி என்றால் மஹிந்த .?

 

 
 

யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டுவந்து இந்த நாட்டை அமை­தி­யாக்­கிய நான் தேசத் துரோகி என்றால் இந்த நாட்டில் கொலை, கொள்ளை, ஆட்­க­டத்தல், ஊழல்­களை செய்த மஹிந்த தரப்பு யார்? அவர்­களா தேசப்­பற்­றா­ளர்கள் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்­சேகாகேள்வி எழுப்­பினார். இரா­ணுவ வீரர் என்­ப­தற்­கா­கவோ, அதி­காரி என்­ப­தற்­கா­கவோ எவ­ரது குற்­றத்­துக்கும் சிறப்புச் சலு­கைகள் இல்லை.  சீரு­டையில் குற்றம் செய்­தாலும் தண்­டிக்க  வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

கிரி­பத்­கொடை பிர­தே­சத்தில் நேற்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­விற்கு எதி­ராக பொது எதி­ர­ணி­யினர் எதிர்ப்பு ஆர்ப்­பாட்டம் ஒன்றை முன்­னெ­டுத்த நிலையில் அமைச்சர் சரத் பொன்­சே­கா­விற்கு ஆத­ர­வாக  கிரி­பத்­கொடை பிர­தே­சத்தில் நடத்­தப்­பட்ட  நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்­ட­போதே அவர் இதனை தெரி­வித்தார். 

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில் 

என்னை  தேசத் துரோகி என விமர்­சிக்கும் நபர்கள் யார் என்ற கேள்வி எம்­மத்­தி­யிலும் உள்­ளது.  யுத்த கால­கட்­டத்தில் அனு­ரா­த­பு­ரத்தை தாண்­டவே அஞ்­சிய நபர்கள் இன்று என்னை துரோகி என விமர்­சிக்­கின்­றனர். இன்று நாட்டில் இவர்கள் சுதந்­தி­ர­மாக  வாழ்­வதும் , விரும்­பிய இடத்­திற்கு சென்று வரு­வதும் , ஊட­கங்கள் மக்கள் அனை­வரும் தைரி­ய­மாக செயற்­ப­டு­வதும்   என்னால் தான் என்­ப­தனை மறந்­து­வி­டக்­கூ­டாது. நான்  யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்த கார­ணத்­தினால் தான் இன்று அனை­வரும் சுதந்­தி­ர­மாக வாழ முடி­கின்­றது. யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்த நான் தேசத் துரோகி என்றால்   கடந்த பத்து ஆண்­டு­களில் நாட்டில் பாரிய அளவில் ஊழல் மோச­டி­களை செய்த, கொலை கொள்­ளை­களை புரிந்த, நாட்டின் ஜன­நா­ய­கத்தை பறித்து மக்­களின் சுதந்­த­ரத்தை பறித்த மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து செயற்­பட்ட நபர்கள்  தேசப் பற்­றா­ளர்­களா?  இந்த வார்த்­தையில் எனக்கு சந்­தேகம் உள்­ளது. 

அர­சாங்கம் என்ற வகையில் நாம் கருத்­துக்­களை முன்­வைக்கும் போது  மிகவும் பொறுப்­பு­டனும், அவ­தா­ன­மா­கவும் கருத்­துக்­களை முன்­வைக்க வேண்டும். கடந்த காலத்தில் இரா­ணு­வத்தில் குற்­றங்கள் புரிந்த நபர்­க­ளுக்கு விசேட சலு­கைகள் வழங்­கப்­ப­ட­வில்லை. மனம்­பேரி வழக்கு, எம்­பி­லிப்­பிட்­டிய மாணவர் கொலை வழக்­குகள் உள்­ளிட்ட சம்­ப­வங்­களை அனை­வரும் தெரிந்­தி­ருப்­பீர்கள். அப்­போது சீரு­டைக்கு என்று விசேட சலு­கைகள் எவையும் யாருக்கும்  வழங்­கப்­ப­ட­வில்லை.  குற்­றத்­துடன்  சம்­பந்­தப்­பட்ட உயர் அதி­கார்கள் அனை­வரும் சிறை­களில் அடைக்­கப்­பட்­டனர். அப்­போது அர­சாங்கம்  மக்கள் பக்கம் இருந்தே செயற்­பட்­டது. மக்கள் பக்கம் இருந்தே தவறு செய்­த­வர்­க­ளுக்கு தண்­டனை வழக்­கப்­பட்­டது. 

இன்றும் அர­சாங்கம் மக்­களின் பக்கம் இருந்தே செயற்­பட்டு வரு­கின்­றது. மக்கள் பக்கம் நின்று  தவறு செய்­ப­வர்­களை தண்­டித்து செயற்­ப­டு­வதை தவிர்த்து இரா­ணுவ வீரர் என்ற கார­ணத்­திற்­காக, சீருடை அணிந்­தி­ருந்த கார­ணத்­தினால் அவ­ரது குற்­றங்­களை மறைத்­துக்­கொண்டு மக்­களின் நியா­யங்­களை நிரா­க­ரித்தால் அதை மக்கள் ஒரு­போதும் ஏற்றுகொள்ள மாட்டார்கள். இதனை அனைத்து தலைவர்களும், அரச தலைவர்களும் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். ஆகவே எமது நல்லாட்சி அரசாங்கத்தில் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் அவர்களின் இழப்புகளுக்குமே நாம் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம் என்றார். 

http://www.virakesari.lk/article/24000

  • கருத்துக்கள உறவுகள்

சீருடையில் குற்றம் செய்திருந்தால், அதற்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “ அரசியல்வாதிகள் அனைவரும் கருத்துக்களை வெளியிடும் போது பொறுப்புடன் வெளியிட வேண்டும்.

சீருடையில் குற்றம் செய்திருந்தால், அதற்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “ அரசியல்வாதிகள் அனைவரும் கருத்துக்களை வெளியிடும் போது பொறுப்புடன் வெளியிட வேண்டும்.
சீருடையில் குற்றம் செய்திருந்தால், அதற்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “ அரசியல்வாதிகள் அனைவரும் கருத்துக்களை வெளியிடும் போது பொறுப்புடன் வெளியிட வேண்டும்.

   
கடந்த காலங்களில் தவறுகள் செய்த போது எந்த வேறுபாடுகள் இல்லாமல் தவறு செய்த இராணுவ அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதனால், அரசாங்கம் என்ற வகையில் மக்கள் பக்கம் இருந்து கொண்டு சீருடையில் குற்றம் செய்திருந்தால், அதற்கு தண்டனை வழங்க வேண்டும்.

அரச தலைவர்களும் அரசியல்வாதிகளும் தமது கருத்துக்கள் தொடர்பில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். என்னை தேசத்துரோகி என அடையாளப்படுத்தும் நபர்கள் போர் நடைபெற்ற காலத்தில் அனுராதபுரம் மற்றும் பொலனறுவைக்கு அப்பால் செல்ல அஞ்சியவர்கள் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
 

http://www.seithy.com/breifNews.php?newsID=189632&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்

ஜகத் ஜயசூரிய இழைத்த குற்றத்திற்கு நான் பொறுப்பல்ல : சரத் பொன்சேகா

 

ஜகத் ஜயசூரிய இழைத்த குற்றத்திற்கு நான் பொறுப்பல்ல : சரத் பொன்சேகா

குற்றமிழைத்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பதை விடுத்து பாதுகாக்க முற்படக் கூடாது என்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர்  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

போரை முடிவுக்கு கொண்டுவந்த ஸ்ரீலங்கா இராணுவத்தினர் உட்பட அரச படையினரை தண்டிக்க, தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றைய தினம் சூளுரைத்திருந்த நிலையிலேயே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இந்தக் கருத்தை தெரிவித்திருக்கின்றார்.

முன்னாள் இராணுவத் தளபதியும் பிரேசிலுக்கான முன்னாள் தூதுவருமான ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரேசிலில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்த யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, ஜகத் ஜயசூரியவினால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சாட்சியமளிக்கத் தயார் என அறிவித்திருந்தார்.

இதற்கு மஹிந்த அணியினரும் சிங்கள பேரினவாத சக்திகளும் கடும் ஆத்திரம் வெளியிட்டுவருவதுடன் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவின் அமைச்சர் பதவியை பறித்து அவரை கைதுசெய்ய வேண்டும் என்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்தக் கட்சியின் தலைவராக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன போரை முடிவுக்கு கொண்டுவந்த இராணுவம் உட்பட அரச படையினர் மீது யுத்தக் குற்றங்களை சுமத்தவோ அதன் அடிப்படையில் தண்டிக்கவோ ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

கம்பஹா மாவட்டத்தின் களனி பகுதியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட பீல்ட் மார்ஷர் சரத் பொன்சேகா ஜகத் ஜயசூரிய தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக தெரிவிக்கப்படும் கூற்றுக்கள் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் மிகவும் பொறுப்புடன் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

நாட்டில் இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் இராணுவத்தில் இருந்தனர் என்பதற்காக அவர்கள் குற்றமிழைத்தால் தண்டனை வழங்காது அவர்களை பாதுகாக்க முற்படவில்லை என்று குறிப்பிட்ட சரத் பொன்சேகா மனம்பேரி படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட படையினருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அதேபோல் அம்பிலிபிட்டிய மாணவர் படுகொலையுடன் தொடர்புடைய மேஜர் தர அதிகாரிகள் கப்டன்கள் உட்பட அனைத்து அதிகாரிகளும் தண்டிக்கப்பட்டதையும் நினைவுகூர்ந்த சரத் பொன்சேகா அப்போதைய அரச தலைவர்கள் மக்கள் பக்கம் இருந்து கொண்டு செயற்பட்டது போல் தற்போதைய அரச தலைவர்களும் அவ்வாறு பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இராணுவ சீரூடை அணிந்திருந்தனர் என்பதற்காக குற்றங்களுக்கு குற்றமிழைத்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாதுஅவர்களை பாதுகாக்க அரசாங்கமும் அரச தலைவர்களும் முற்படுவார்களானால் அது மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை ஆட்சியில் உள்ளவர்களிடம் நீதியையே நாட்டு மக்கள் எதிர்ப்பார்த்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள சரத் பொன்சேகா அதனை நிறைவேற்றாது அரசாங்கமும் ஆட்சியாளர்களும் மக்களை ஏமாற்றக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மக்களின் வாக்கு வங்கிகளுக்காக போலியான தேசப் பற்றைக் காண்பித்து மக்களை தொடர்ந்தும் ஏமாற்றவும் முடியாது என்பதை அரசியல் வாதிகள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அரசாங்கத்தில் உள்ளவர்கள் மற்றும் எதிரணியினரை எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Criminal-soldiers-should-be-punished

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க சொல்லுங்க  இன்னும் நிறைய எதிர்பார்க்கிரம்.....

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தான் கட்டளை போட்டது என அந்தாள் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 ஐயா!     நீங்கள் எதைச் சொன்னாலும் யாரும் அலட்டிக்கப்போவதில்லை. நீங்கள் தேசத்துரோகி, நாட்டைக்கட்டிக்கொடுத்தவர், புலிகளுக்கு துணைபோனவர் என்று சொல்லி உங்களை சிறையில் தள்ளலாம், கொல்லலாம். அது உங்கள் பாவத்திற்க்கு கிடைப்பது. உங்களுக்கிடையில் உள்ள தனிப்பட்ட பகையை தீர்ப்பதற்கும் தமிழர்கள்தான் கிடைத்தார்கள். இருக்கட்டும். முதலில் நீங்கள் செய்த குற்றங்களை பட்டியலிடுங்கள். ஆதாரங்களை சீக்கிரமே உரிய இடத்திற்கு அனுப்புங்கள் அதுதான் உங்களின் குற்றச் சாட்டுகளின் உண்மைத் தன்மையை காட்டும். அதை விட்டு உங்கள் அரசியலுக்கும், பழிவாங்கல்களுக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தாதீர்கள். எந்தத் தப்பும் செய்யாத எம் இனத்தை தண்டித்தீர்கள். தப்பு செய்த நீங்கள் தண்டனையிலிருந்து    நழுவப்பார்க்கிறீர்கள்.

எங்கட அப்புக்காத்துமார், ராஜதந்திரிகள் நித்திரையால எழும்ப முதல் காரியத்தை முடியுங்கோ. இல்லையெண்டா உங்கட கதையை கந்தலாக்கிப் போடுவினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, பெருமாள் said:

நீங்க சொல்லுங்க  இன்னும் நிறைய எதிர்பார்க்கிரம்.....

3 hours ago, nunavilan said:

நீங்கள் தான் கட்டளை போட்டது என அந்தாள் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை.

25 minutes ago, satan said:

 ஐயா!     நீங்கள் எதைச் சொன்னாலும் யாரும் அலட்டிக்கப்போவதில்லை. நீங்கள் தேசத்துரோகி, நாட்டைக்கட்டிக்கொடுத்தவர், புலிகளுக்கு துணைபோனவர் என்று சொல்லி உங்களை சிறையில் தள்ளலாம், கொல்லலாம். அது உங்கள் பாவத்திற்க்கு கிடைப்பது. உங்களுக்கிடையில் உள்ள தனிப்பட்ட பகையை தீர்ப்பதற்கும் தமிழர்கள்தான் கிடைத்தார்கள். இருக்கட்டும். முதலில் நீங்கள் செய்த குற்றங்களை பட்டியலிடுங்கள். ஆதாரங்களை சீக்கிரமே உரிய இடத்திற்கு அனுப்புங்கள் அதுதான் உங்களின் குற்றச் சாட்டுகளின் உண்மைத் தன்மையை காட்டும். அதை விட்டு உங்கள் அரசியலுக்கும், பழிவாங்கல்களுக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தாதீர்கள். எந்தத் தப்பும் செய்யாத எம் இனத்தை தண்டித்தீர்கள். தப்பு செய்த நீங்கள் தண்டனையிலிருந்து    நழுவப்பார்க்கிறீர்கள்.

எங்கட அப்புக்காத்துமார், ராஜதந்திரிகள் நித்திரையால எழும்ப முதல் காரியத்தை முடியுங்கோ. இல்லையெண்டா உங்கட கதையை கந்தலாக்கிப் போடுவினம்.

 

அது சரி!  சிறிலங்காவிலை என்ன நடந்தது? 

இப்படிக்கு...
நல்லூர் தேருக்கு போய் வந்தவன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. என்று சொல்ல வருகினம்.

தவறு செய்தவனை காப்பாற்றவும், போற்றவும் வேண்டுமென ஒரு நாடு வாதாடுது. இனத்துக்காக இறந்தவர்களை கெளரவிக்க வேண்டுமா என் இனம் யோசிக்குது.........?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.