Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமை மனவருத்தத்தையளிக்கிறது"// என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

Featured Replies

"முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமை மனவருத்தத்தையளிக்கிறது"// என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

 

 

"வடமாகாணத்தின் மிகப் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் மக்களைக் கொண்ட எருக்கலம்பிட்டிக் கிராம மக்கள் 1990ஆம் ஆண்டில் இப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் நாட்டின் நாலா பக்கங்களிலும் சிதறுண்டு வாழ்ந்து வருவது மனவருத்தத்திற்குரியது" என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று   மாலை இடம் பெற்ற ஹஜ் பெருவிழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

Local_News.jpg

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"எருக்கலம்பிட்டியிலிருந்து வெளியேறிச் சென்ற மக்களில் கணிசமான தொகையினர் மீள தமது பிரதேசங்களுக்கு வந்து குடியமர்ந்துள்ள போதிலும் குறிப்பிட்ட தொகையினர் இடம் பெயர்ந்து சென்று வாழ்ந்த இடங்களில் தமக்கென இருப்பிடங்களைத் தயாரித்துக் கொண்டு அப் பகுதியிலேயே தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர்.

IMG_0050__2_.jpg

ஒரே குடும்பம் போன்று இந்த எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர்கள் வாழ்ந்து வந்த போதிலும் 1990ல் ஏற்பட்ட குழப்ப நிலைமைகள் அவர்களின் சிதறுண்ட வாழ்க்கை அமைப்பை உருவாக்கி விட்டது.

எருக்கலம்பிட்டி வாழ் முஸ்லிம் மக்கள் பற்றி நான் ஓரளவு அறிவேன், இவர்கள் பகைமை உணர்வு அற்றவர்கள், அனைத்து மதத்தவர்களையும் சகோதரர்களாக கருதுபவர்கள், இவர்களின் வாழ்வு இன்று சிதறுண்டு கிடக்கின்ற போதும் இஸ்லாமிய மக்களின் 5வது இறுதிக் கடமையாகிய ஹஜ் விழா நிகழ்விலாவது எருக்கலம்பிட்டி வாழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் இங்கு வந்து ஒன்று கூடி தமது அன்பையும் மகிழ்வையும் தெரிவித்து இஸ்லாத்தின் அதி உயர் கடமைகளை சிறப்புற ஆற்ற வேண்டும் என்ற கொள்கையில் 2002ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வானது இந்த வருடமும் சிறப்புற கொண்டாடப்படுவது மகிழ்விற்குரியது.

இந்து சமயத்தில் ஒரு இறையடியார் சரிதம் உண்டு, சிறுத் தொண்ட நாயனார் என்ற ஒரு அடியவர் தினமும் தான் உணவு உண்பதற்கு முன்பதாக ஒரு சிவனடியாரை அழைத்து வந்து உணவு அருந்தச் செய்து அவர் உணவு அருந்திய பின்பே தாம் உணவு அருந்தும் வழக்கத்தை கொண்டிருந்தார். 

ஒரு நாள் அவர் எங்கு தேடியும் ஒரு சிவனடியாரைக் காண முடியவில்லை, அத் தருணம் அருகே உள்ள சிவன் கோவில் மண்டபத்தில் ஒரு சிவனடியாரைக் கண்டு உணவருந்த வருமாறு அழைக்கின்றார், மாறு வேடத்திலிருந்த இறைவன் இவரைச் சோதிப்பதற்கு திருவுளம் கொண்டு நான் உணவருந்த வருவதாயின் நர பலி உணவு படைக்க வேண்டும் அதுவும் இளம் பாலகனின் உடலைக் கறி செய்து தர வேண்டும் என உத்தரவிடுகிறார், ஒரு கனம் கலங்கிய சிறுத்தொண்ட நாயனார் பக்தி மேலீட்டினால் வீட்டிற்கு ஓடிச் சென்று மனைவியாரிடம் இவ் விடயத்தை கூறி பதிலுக்குக் காத்திராமல் பாடசாலைக்கு ஓடிச் சென்று தமது சிறிய பாலகனை அழைத்து வந்து பன்னீரால் குளிப்பாட்டி ஆரத்தழுவி அறுத்துக் கறி சமைத்து சிவனடியாருக்கு உணவு படைத்த போது இவர்களின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த இறைவன் மீண்டும் இவர்களின் பாலகனை உயிர் பெறச் செய்து மீள ஒப்படைத்ததாக சிறுத்தொண்ட நாயனார் வரலாறு கூறுகிறது.

இஸ்லாத்தின் 5வது இறுதிக் கடமையும் இந்து சமயத்தின் சிறுத் தொண்ட நாயனார் கதைக்கு ஒப்பானதே. ஈத் அல் அதா என்பது தியாகத் திருநாளாகும்.  நபிமார்கள் பட்டியலில் இருந்த இப்ராகிம் - காஜரா உம்மா தம்பதிகள் இந்த தியாகத் திருநாளின் 8வது பிறையில் கனவு காண்கிறார்கள்.

சைத்தானின் தூண்டுதலால் ஏற்பட்ட கனவின் படி 100 ஒட்டகங்களை அறுத்து அல்லாவுக்குக் காணிக்கையாக அளிக்கின்றார்கள். ஒன்பதாவது நாளும் மீண்டும் அதே கனவு காண்கிறார்கள். இப்போது 200 ஒட்டகங்களை அறுத்து அல்லாவுக்கு காணிக்கையாக்குகின்றார்கள். மீண்டும் 10ம் நாள் அதே கனவு. அல்லாவிடம் என்ன செய்ய வேண்டும் என இரந்து கேட்கின்றார்கள். 

அவர்கள் யாரை மிகவும் நேசிக்கின்றார்களோ அவரை அறுத்து காணிக்கையாக செலுத்த வேண்டும் என அருள் வாக்கு கிடைக்கப்பெறுகின்றது. இத் தம்பதியினர் 96 வயதிலேயே ஒரு அரிய மகனைப் பெற்று இஸ்லாத்தின் வழியே அன்புடன் வளர்த்து வருகின்றார்கள். ஆண்டவனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு 6 வயது நிரம்பிய இஸ்மாயிலை அறுக்கத் துணிகின்றார்கள். இஸ்மாயிலும் அன்புடன் ஏற்றுக் கொள்கின்றான்.

தன்னை அறுக்கும் போதும் தந்தை கலங்கக் கூடாது என்பதற்காக அவரை கறுப்புத் துணியினால் முகத்தை மூடிக் கொண்டு அல்லது தன்னைக் குப்புற இட்டு அறுக்குமாறு கூறுகின்றான். துயர மிகுதியுடன் பிள்ளையை அறுக்கின்றார்கள். அறுக்க முடியவில்லை. அந்தக் கத்தியால் பாறாங்கற்களை வெட்டுகின்றார்கள். அவை தூள் தூளாக உடைந்து நொருங்குகின்றன. 

ஆனால் பிள்ளையின் கழுத்தை அறுக்க முடியவில்லை. அப்போது நபி அவர்களின் தூதுவரிடமிருந்து ஒரு செய்தி கிடைக்கின்றது, ஒரு ஆட்டைப் பலியிட்டு இந்த இறை கடமையை நிறைவேற்று என்று, அவ்வாறே அக்கடமை நிறைவேற்றப்படுகின்றது.

இந்த நிகழ்வை நினைவுறுத்தும் வண்ணமே தியாகத் திருநாளன்று ஒரு மிருக பலி இடப்பட்டு அதன் மூன்றில் ஒரு பங்கு ஏழை எளியவர்களுக்கும் அடுத்த மூன்றில் ஒரு பங்கு உற்றார் உறவினருக்கும் மிகுதிப் பங்கு குடும்பத்தாருக்கும் பங்கிடப்படுகின்றது. 

இந்த இரண்டு சம்பவங்களும் இந்து சமயத்திலும், இஸ்லாம் மதத்திலும் முழு நம்பிக்கையுடன் ஒழுகக்கூடியவர்களுக்கு ஏற்படக் கூடிய சோதனைகளையும் அவர்களின் மன உறுதியைக் கண்டு அவர்களை இறைவன் ஆட்கொள்கின்ற தன்மையையும் எடுத்துக் கூறுகின்றன. எனவே எல்லா மதங்களும் அன்பையும் இறைவனை நேசிக்கும் தன்மையையும் பிறரிடத்தில் அன்பு செலுத்துகின்ற மார்க்கங்களையுமே எடுத்துரைக்கின்றன. 

ஆனால் தியாகமே மார்க்க வழி, தியாகத்தையே இறைவன் விரும்புகின்றான். அதை எங்கள் இரு மதங்களுமே வலியுறுத்துகின்றன. யாழ்ப்பாணத்திலிருந்து எருக்கலம்பிட்டியைச் சென்றடைவதற்கு வெவ்வேறு  பாதைகள் உண்டு.

பூநகரி சங்குப்பிட்டியூடாக ஒரு பாதை, வவுனியா செட்டிகுளம் ஊடாக இன்னோர் பாதை, மதவாச்சி முருங்கன் ஊடாக இன்னோர் புகையிரதப் பாதை இவை போன்றதே எமது சமய வழிகாட்டல் பாதைகள். இந்து சமயத்திற்கு ஒரு பாதை, இஸ்லாம் சமயத்திற்கு இன்னொரு பாதை, கிறிஸ்தவ சமயத்திற்கு மற்றொரு பாதை. 

ஆனால் தொடக்கம் முடிவு இரண்டும் நிரந்தரமானவை செல்கின்ற பாதைகள் மட்டுமே  வெவ்வேறானவை.

எனவே இன்றைய இந்த ஹஜ் விழா நிகழ்வுகளில் என்னையும் கலந்து கொண்டு இவ் விழாவை சிறப்பிக்க வேண்டும் என றயீஸ் விரும்பியதால் உங்கள் அனைவர் சார்பான அழைப்பினை ஏற்று பல கடமைகளைப் பின் போட்டுவிட்டு இன்று இங்கே வருகை தந்திருக்கின்றேன். இந்த நல்ல நிகழ்வில் இறை பக்தர்களான உங்கள் நிகழ்வில் கலந்துகொண்டு ஒரு புதிய உணர்வைப் பெற்றிருக்கின்றேன். 

இறைவனின் படைப்பிலே ஆறறிவு கொண்ட ஒரு உயிரினமாக விஷேடமாகப் படைக்கப்பட்டது மனித குலம். ஆனால் அதே மனித குலம் மதத்தின் பெயரால் அடித்துக் கொண்டு சாவதும், பிரிந்து நிற்பதும் எமது அறியாமை, இதனை அனைத்து மதங்களும், மதத் தலைவர்களும் இடித்துரைக்கின்ற போதும் அதனை நாம் கேட்பதாக இல்லை.

இந்து சமுத்திரத்தின் முத்தென விளங்குகின்ற இந்த ஈழமணித் திருநாட்டில் வாழ்கின்ற மூவின மக்களும் பகைமைகளை மறந்து சகோதரர்களாக வாழத் தலைப்பட்டால் இந்த நாட்டுக்கு இணை இந்த நாடு மட்டுமே இருக்க முடியும்.

எனவே காலங்கடந்த இந்த நிலையில் கூட எமது மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒருமித்து இந்த நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கு முயற்சிக்க வேண்டும். சமஷ்டிப் பாதையே அந்த ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

அதுவே எமக்கு நிலையானதும், நிரந்தரமானதுமான ஒரு தீர்வாக அமையும் எனத் தெரிவித்து இஸ்லாம் மதத்தின் இந்த உன்னத நாளில் இஸ்லாம் சகோதர சகோதரிகள் அனைவரையும்  உளமார வாழ்த்தி எனது உரையை நிறைவு செய்கின்றேன் "என தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/24062

  • தொடங்கியவர்

மதத்தின் பேரால் அடிபட்டு சாவதும், பிரிந்து வாழ்வதும் எமது அறியாமையே; ஒன்றுபட்டு நாட்டை முன்னேற்றுவோம் – வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

(வாஸ் கூஞ்ஞ தலை­மன்னார் நிருபர்)

மதத்தின் பேரால் அடி­பட்டு சாவதும், பிரிந்து நிற்­பதும் எமது அறி­யா­மை­யாகும். இதை அனைத்து மதங்­களும் மதத் தலை­வர்­களும் இடித்து உரைக்­கின்­ற­போதும் அதை நாம் கேட்­ப­தாக இல்லை.  மூவின மக்­களும் பகை­மை­களை மறந்து சகோ­த­ரர்­க­ளாக வாழத் தலைப்­பட்டால் இந்த நாட்­டுக்கு இணை இந்த நாடுதான் மட்­டுமே இருக்க முடியும். எனவே, காலம் கடந்த நிலையில் எமது மக்கள் அனை­வரும் ஒன்­று­பட்டு ஒரு­மித்து இந்த நாட்டை முன்­னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல முயற்­சிக்க வேண்டும் என வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் கூறினார்.

DSC_2369மன்னார் எருக்­க­லம்­பிட்­டியில் பத்­தா­வது ஹஜ் பெரு­விழா வெகு­வாக மூன்று தினங்கள் அதா­வது கடந்த ஞாயிறு  தொடக்கம் பல விளை­யாட்டு நிகழ்­வுடன் நடை­பெற்­றது.

இவ்­வி­ழாவின் இறுதி நாளா­கிய செவ்வாய் கிழமை வட மாகாண சபை உறுப்­பினர் எச்.எம்.றயீஸின் ஏற்­பாட்டில் அழைக்­கப்­பட்ட வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் பிர­தம விருந்­தி­ன­ராக கலந்த கொண்டு பேசு­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

செட்­டிக்­குளம் மக்கள் வங்கி முகா­மை­யாளர் அப்துல் ஹக் முகமட் ஆரூஸ் தமையில் நடை­பெற்ற இறுதி நிகழ்­வின்­போது முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் இங்கு தொடர்ந்து பேசு­கையில், வட மாகா­ணத்தில் மிகப் பெரும் எண்­ணிக்­கை­யி­லான முஸ்லிம் மக்கள், கிராம பகுதி மக்கள் 1990ம் ஆண்டு இப்­ப­கு­தி­யி­லி­ருந்து வெளியேற்­றப்­பட்டனர். நீங்கள் நாட்டின் நாலா பக்­கங்­க­ளிலும் சித­றுண்டு வாழ்­வது மிகவும் மன­வ­ருத்­தத்­துக்­கு­ரி­யது.

இவ்­வாறு வெளியேறிச் சென்ற மக்­களில் கணி­ச­மான தொகை­யினர் மீள தமது பிர­தே­சத்தில் வந்து மீள்­கு­டி­யே­றி­ய­போ­திலும் குறிப்­பிட்ட தொகை­யினர் இடம்­பெ­யர்ந்த இடங்­களில் தமக்­கென இடங்­களை தயா­ரித்துக் கொண்டு அப்­ப­கு­தி­யிலே தொடர்ந்து வாழ்ந்து வரு­கின்­றனர்.

ஒரே குடும்­பம்­போன்று இந்த எருக்­க­லம்­பிட்டி முஸ்லிம் சகோ­த­ரர்கள் வாழ்ந்த பொதிலும் 1990 இல் ஏற்­பட்ட குழப்ப நில­மைகள் அவர்களுக்கு சித­றுண்ட வாழ்க்கை அமைப்பை உரு­வாக்கி விட்­டது. எருக்­க­லம்­பிட்டி வாழ் முஸ்லிம் மக்கள் பற்றி நான் ஓர­ளவு அறிவேன்.

இவர்கள் பகைமை அறிவு அற்­ற­வர்கள். அனைத்து மதத்­தி­ன­ரையும் சகோ­தர்­க­ளாக கரு­து­ப­வர்கள். இவர்­களின் வாழ்வு என்றும் சித­றுண்டு கிடக்­கின்­ற­போதும் இஸ்­லா­மிய மக்­களின் ஐந்­தா­வது இறுதி கட­மை­யான ஹஜ் விழா நிகழ்­வா­னது, எருக்­க­லம்­பிட்டி முஸ்லிம் மக்கள் அனை­வரும் வந்து இங்கு ஒன்­று­கூடி தமது அன்­பையும் மகிழ்­வையும் தெரி­வித்து, இஸ்­லாத்தின் அதியுயர் கடமைகளை சிறப்பற ஆற்ற வேண்டும் என்ற கொள்கையில் 2002 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்வானது இவ்வருடமும் சிறப்புற கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரியது எனவும் கூறினார்.

http://metronews.lk/?p=13099

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இப்படிச் சொல்வது மிக இலகு.

அன்று அதைச் செய்யாமல் விட்டிருந்தால்.. வடக்கும் கிழக்குப் போல்.. தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு.. இனசுத்திகரிப்புகுள்ளாகி.. தீவிர இஸ்லாமிய அடிப்படைவாத முஸ்லீம் பயங்கரவாதிகளால் பறிக்கப்பட்டிருக்கும். 

அன்றைய நாளில்.. யாழில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் பாஸ்போட்டுகளுக்கும்.. வீடுகளுக்கு நடுவில் அமைக்கப்பட்டிருந்த கிடங்கறைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் பணத்துக்கு பின்னால் இருந்த காரணங்கள் என்ன..??!

விக்கி ஐயா விளக்குவாரா..??!

சும்மா.. கதை விடக்கூடாது.. உண்மை புரியாமல்.

முஸ்லீம்கள் தொடர்பில்.. நாம் அவதானமாகவே நகர்வுகளை செய்ய வேண்டியது மிக மிக அவசியம். காரணம்.. அவர்களிடையே.. தீவிர இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதம் நன்கு திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, nedukkalapoovan said:

இப்ப இப்படிச் சொல்வது மிக இலகு.

அன்று அதைச் செய்யாமல் விட்டிருந்தால்.. வடக்கும் கிழக்குப் போல்.. தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு.. இனசுத்திகரிப்புகுள்ளாகி.. தீவிர இஸ்லாமிய அடிப்படைவாத முஸ்லீம் பயங்கரவாதிகளால் பறிக்கப்பட்டிருக்கும். 

அன்றைய நாளில்.. யாழில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் பாஸ்போட்டுகளுக்கும்.. வீடுகளுக்கு நடுவில் அமைக்கப்பட்டிருந்த கிடங்கறைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் பணத்துக்கு பின்னால் இருந்த காரணங்கள் என்ன..??!

விக்கி ஐயா விளக்குவாரா..??!

சும்மா.. கதை விடக்கூடாது.. உண்மை புரியாமல்.

முஸ்லீம்கள் தொடர்பில்.. நாம் அவதானமாகவே நகர்வுகளை செய்ய வேண்டியது மிக மிக அவசியம். காரணம்.. அவர்களிடையே.. தீவிர இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதம் நன்கு திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. :rolleyes:

பிழையைப் பிழை என்று ஏற்றுக்கொள்வதற்கு பின்வாங்கக்கூடாது.
உலகமெங்கும் இடம்பெறும் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செயல்களிற்காக  உலகமெங்கும் வாழும் அப்பாவி  இஸ்லாமியர்களை வெளியேற்றுவது என்பது மூடச்செயல்

கோத்தபாய கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றிய பொது
நாம் எல்லாம் என்ன நினைத்தோம். அந்தச் செயல் ஒரு நகைப்பிற்குரிய செயலாக இருந்ததே........ அதே போலத்தான் இந்த முஸ்லிலிம்களின் வெளியேற்றமும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, வாத்தியார் said:

பிழையைப் பிழை என்று ஏற்றுக்கொள்வதற்கு பின்வாங்கக்கூடாது.
உலகமெங்கும் இடம்பெறும் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செயல்களிற்காக  உலகமெங்கும் வாழும் அப்பாவி  இஸ்லாமியர்களை வெளியேற்றுவது என்பது மூடச்செயல்

கோத்தபாய கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றிய பொது
நாம் எல்லாம் என்ன நினைத்தோம். அந்தச் செயல் ஒரு நகைப்பிற்குரிய செயலாக இருந்ததே........ அதே போலத்தான் இந்த முஸ்லிலிம்களின் வெளியேற்றமும். 

உண்மையான தமிழன்/தமிழர்கள் இதே கொள்ளகையை கடைப்பிடித்ததால் தான் இன்று நாம் சந்திக்கு சந்தி தெருவுக்கு தெருவாக நிர்க்கதியின்றி நிற்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வாத்தியார் said:

பிழையைப் பிழை என்று ஏற்றுக்கொள்வதற்கு பின்வாங்கக்கூடாது.


உலகமெங்கும் இடம்பெறும் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செயல்களிற்காக  உலகமெங்கும் வாழும் அப்பாவி  இஸ்லாமியர்களை வெளியேற்றுவது என்பது மூடச்செயல்

கோத்தபாய கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றிய பொது
நாம் எல்லாம் என்ன நினைத்தோம். அந்தச் செயல் ஒரு நகைப்பிற்குரிய செயலாக இருந்ததே........ அதே போலத்தான் இந்த முஸ்லிலிம்களின் வெளியேற்றமும். 

இதே கருத்தை.. நீங்கள் முஸ்லீம்களின் வாயில் இருந்து.. கல்முனை.. மூதூர்.. அம்பாறை.. பெரிய நீலாவணை.. மீராவோடை.. என்று பாரம்பரிய தமிழ் கிராமங்களும்.. நகர்களும்.. தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டு.. விரட்டி அடிக்கப்பட்டு.. இஸ்லாமிய மயமாக்கப்பட்டதை வெளிப்படையாகப் பிழை என்று ஏற்கச் செய்யுங்கள். தமிழ் மக்களை அச்சமின்றி மீளக் குடியேற அனுமதிக்கக் கோருங்கள்...  

அதைச் செய்துவிட்டு.. இந்தப் பாவமன்னிப்பை பற்றிக் கதைப்பது தான் அழகு.

எம்மை அழிக்க நினைக்கிறவனிடம்.. நாம் பாவமன்னிப்பும்.. இரக்கமும் காட்டினால்.. அது எமது ஒட்டுமொத்த அழிவாகவே இருக்கும்.

இதனை உலகம் உணர்ந்து தான்..  ஏறத்தாழ முஸ்லீம்களை ஒவ்வொருவராக கண்காணித்து வருகிறது. அவர்களுக்கு அந்த வசதி இருக்கு செய்கிறார்கள். நமக்கு அன்று அது இல்லை... சாத்தியமானத்தை செய்ய வேண்டி இருந்தது.

எங்களை கேட்டால்.. சிங்களப் பேரினவாதப் பயங்கரவாதத்திற்கு எந்த வகையிலும் இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதம் சளைத்ததில்லை. அது மீது காட்டும்.. ஈவு இரக்கம் எமது அழிவாகவே அமையும். எமது அழிவில்.. கிரிபத் கொடுத்துக் கொண்டாடிய.. அடிப்படை மனிதப் பண்பற்ற.. ஒரு கேடு கெட்ட.. கூட்டம்.  அதனை மன்னிக்க எம்மால் முடியாது.. அவர்களாக உளப்பூர்வமாக திருந்தும் வரை. மத வெறியில் இருந்து வெளியேறும் வரை. :rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எமது பார்வையில்....முஸ்லிம்களும் மனிதர்கள் தான்!

அவர்களது பார்வையில்....நாங்கள் எப்போதும்... Infidels. (சரியான தமிழ் தெரிந்தால் ...யாராவது மொழி பெயர்த்து விடுங்கள்) !

 

ஆறாம் நூற்றாண்டின் மூட நம்பிக்கைகள்...இருபத்தொராம் நூற்றாண்டுக்குப் பொருந்தாது என்பதை அவர்கள் என்றும் புரிந்து கொள்ளப்போவதில்லை!

'Brotherhood" என்ற வட்டத்தை விட்டு...அவர்கள் என்றும் வெளியே வரப்போவதில்லை!

வேண்டுமானால் முதல்வர் அந்த வட்டத்துக்குள் நுழையலாம்...ஆனால் அவர்கள் முதல்வரின் வட்டத்துக்குள் என்றுமே வரப்போவதில்லை!

அது தான் அவர்களின் மதத்தின் போதனை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.