Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

511z452da6L._SX355_.jpg

தமிழைக் கட்டாயப் பாடமாக எப்போது அறிவிக்கும் தமிழக அரசு?

தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்று அம்மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். தெலுங்கு கற்பிக்காமல் எந்த ஒரு பள்ளிக்கூடமும் தெலுங்கானாவில் இயங்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். அடிப்படைக் கல்வியில் தாய்மொழியைத் தவிர்க்கக் கூடாது என்ற கல்வித் துறை சார்ந்த காரணங்களைத் தாண்டி, பிராந்திய மொழிகளைப் பாதுகாக்க வேண்டிய அரசியல் முக்கியத்துவமும் இந்த உத்தரவில் அடங்கியிருக்கிறது.

ஏற்கெனவே, ஏப்ரல் மாதத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் 10-ம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மலையாளம் ஒரு பாடமாக இருக்க வேண்டும், மலையாளத்தைக் கற்றுக்கொடுக்காத பள்ளிகளின் அனுமதி ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். மேற்கு வங்கப் பள்ளிகளிலும் வங்க மொழியைச் சமீபத்தில் கட்டாயமாக்கியிருக்கிறார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. பள்ளிகளில் வேறு எந்த மொழியை யும் கற்றுக்கொடுப்பதைத் தடுப்பதல்ல இந்த உத்தரவுகளின் நோக்கம். தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதே. மத்திய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகள் கொடுக்கும் பதிலடியாகவும் இந்த உத்தரவுகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பள்ளியில் படிக்கும் ஒரு மாணவர் அவர் விரும்பும் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், அடிப்படைக் கல்வி தாய்மொழியில்தான் கற்பிக்கப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள். என்றாலும், கல்வி என்பது வேலைவாய்ப்புக்கான தகுதி மட்டுமே என்று பெற்றோர் கள் கருதும் வரையிலும் தாய்மொழிக் கல்வியை மாணவர்களுக்குக் கட்டாயமாக்க முடியாது. இந்நிலையில், குறைந்தபட்சம் தாய்மொழி ஒரு பாடமாகவேனும் கட்டாயமாகப் பள்ளிக் கூடங்களில் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

மொழியுரிமை குறித்து கர்நாடகம், கேரளம், தெலுங்கானா என்று நமது பக்கத்து மாநிலங்கள் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. ஆனால், மொழியுரிமைப் போராட்டத்தில் இந்தியாவிலேயே முன்னோடி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கும் தமிழகம், இந்த உரிமைப் போராட்டத்தில் பின்தங்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. காரணம், மொழியுரிமை என்பது மாநில உரிமையின் அடையாளம் என்கிற புரிதலும் அக்கறையும் தமிழக ஆட்சியாளர்களுக்கு அறவே இல்லை என்பதுதான். தாய்மொழியைக் கல்வியின் மொழியாக நிலை நிறுத்தவில்லையென்றால், அதன் எதிர்காலம் அஞ்சத்தக்கதாகிவிடும் என்பது கல்வியாளர்களின் கருத்து.

கேரளம், மேற்கு வங்கம், தெலங்கானா அரசுகள் விழித்துக்கொண்டுவிட்டன.

என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

இந்து

  • Like 1
Posted

வன்னியன் சார்,

தமிழ அரசு ஒன்று ஏற்கனவே  சில ஆண்டுகளுக்கு முன்னர்,  இவ்வாறு தமிழ் மொழிக் கல்வியை கட்டாயம் ஆக்கி உத்தரவிட, பின் அதனை எதிர்த்து ஒருவ, நீதிமன்றம் செல்ல, நீதிமன்றமும் அவ் உத்தரவை தடை செய்தது என்று எப்பவோ வாசித்த மாதிரி ஒரு நினைவு. அப்படி நடந்ததா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, நிழலி said:

வன்னியன் சார்,

தமிழ அரசு ஒன்று ஏற்கனவே  சில ஆண்டுகளுக்கு முன்னர்,  இவ்வாறு தமிழ் மொழிக் கல்வியை கட்டாயம் ஆக்கி உத்தரவிட, பின் அதனை எதிர்த்து ஒருவ, நீதிமன்றம் செல்ல, நீதிமன்றமும் அவ் உத்தரவை தடை செய்தது என்று எப்பவோ வாசித்த மாதிரி ஒரு நினைவு. அப்படி நடந்ததா?

ஆம்... நடந்தது,  நிழலி.
அண்ணளவாக.. பத்து வருடங்களுக்கு முன்பு நடந்தது  என நினைக்கின்றேன்.
அந்த நேரம், முதல்வராக இருந்தவர்... கறுப்புக்  கண்ணாடி  அணிந்த படி, 
உலகில் உள்ள...  எட்டுக்  கோடி  தமிழரையும்  காக்க, புறப்பட்ட கட்டு மரம்  என  நினைக்கின்றேன்.

இதில்.. உள்ள  அரசியல் வித்தை என்னவென்றால்.... 
அப்படி ஒரு அறிவித்தலை, வெளியிட்டால்... தமிழ் மக்கள் குளிர்வார்கள். 
தனியார்  ஆங்கில  பள்ளிகள் எல்லாம்.. சம்பந்தப் பட்ட  அரசியல் கட்சிக்கு....
கோடிக் கணக்கான....  பணத்தை, வாரி இறைப்பார்கள். 
பணத்தை.... வாரி, சுருட்டிய பின்....

அந்த முதல்வரின் கட்சியிலிருந்தே... ஒருவன், நீதிமன்றத்துக்கு  போவான்.
இந்திய  நீதி மன்றம்....  கண்ணை மூடிய படி...  அரசியல் வாதி எதிர்பார்த்த  சாதகமான  தீர்ப்பை வழங்கும்.

இப்போ..... மக்களின் வாக்குகளையும், பாடசாலை நிறுவனங்களின்  பணத்தையும்..... அள்ளிய பின்.
தண்ட வாளத்தில் தலை வைத்து படுப்பேன், தமிழுக்காக..... உயிரையும் கொடுப்பேன்....
என்று... சொல்லி,  "பீலா..."  விட்டுக்  கொண்டிருப்பதை... கேட்க வேண்டியதும்....
முட்டாள்....  மக்களின் கடமை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ராசவன்னியன் said:

511z452da6L._SX355_.jpg

தமிழைக் கட்டாயப் பாடமாக எப்போது அறிவிக்கும் தமிழக அரசு?

தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்று அம்மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். தெலுங்கு கற்பிக்காமல் எந்த ஒரு பள்ளிக்கூடமும் தெலுங்கானாவில் இயங்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். அடிப்படைக் கல்வியில் தாய்மொழியைத் தவிர்க்கக் கூடாது என்ற கல்வித் துறை சார்ந்த காரணங்களைத் தாண்டி, பிராந்திய மொழிகளைப் பாதுகாக்க வேண்டிய அரசியல் முக்கியத்துவமும் இந்த உத்தரவில் அடங்கியிருக்கிறது.

ஏற்கெனவே, ஏப்ரல் மாதத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் 10-ம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மலையாளம் ஒரு பாடமாக இருக்க வேண்டும், மலையாளத்தைக் கற்றுக்கொடுக்காத பள்ளிகளின் அனுமதி ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். மேற்கு வங்கப் பள்ளிகளிலும் வங்க மொழியைச் சமீபத்தில் கட்டாயமாக்கியிருக்கிறார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. பள்ளிகளில் வேறு எந்த மொழியை யும் கற்றுக்கொடுப்பதைத் தடுப்பதல்ல இந்த உத்தரவுகளின் நோக்கம். தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதே. மத்திய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகள் கொடுக்கும் பதிலடியாகவும் இந்த உத்தரவுகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பள்ளியில் படிக்கும் ஒரு மாணவர் அவர் விரும்பும் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், அடிப்படைக் கல்வி தாய்மொழியில்தான் கற்பிக்கப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள். என்றாலும், கல்வி என்பது வேலைவாய்ப்புக்கான தகுதி மட்டுமே என்று பெற்றோர் கள் கருதும் வரையிலும் தாய்மொழிக் கல்வியை மாணவர்களுக்குக் கட்டாயமாக்க முடியாது. இந்நிலையில், குறைந்தபட்சம் தாய்மொழி ஒரு பாடமாகவேனும் கட்டாயமாகப் பள்ளிக் கூடங்களில் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

மொழியுரிமை குறித்து கர்நாடகம், கேரளம், தெலுங்கானா என்று நமது பக்கத்து மாநிலங்கள் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. ஆனால், மொழியுரிமைப் போராட்டத்தில் இந்தியாவிலேயே முன்னோடி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கும் தமிழகம், இந்த உரிமைப் போராட்டத்தில் பின்தங்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. காரணம், மொழியுரிமை என்பது மாநில உரிமையின் அடையாளம் என்கிற புரிதலும் அக்கறையும் தமிழக ஆட்சியாளர்களுக்கு அறவே இல்லை என்பதுதான். தாய்மொழியைக் கல்வியின் மொழியாக நிலை நிறுத்தவில்லையென்றால், அதன் எதிர்காலம் அஞ்சத்தக்கதாகிவிடும் என்பது கல்வியாளர்களின் கருத்து.

கேரளம், மேற்கு வங்கம், தெலங்கானா அரசுகள் விழித்துக்கொண்டுவிட்டன.

என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

இந்து

கேள்விக்கு மன்னிக்கவும். தமிழ்நாட்டில் அரசு ஒன்று இருக்கின்றதா?

வருவார் போவார் எல்லோரும் வாய்க்குவந்தபடி கதைத்துக்கொண்டு போகின்றார்கள்... அதுதான் கேட்டேன்.
ஒருவர் ஊழலை காரணம் காட்டி அரசியலுக்கு சுழி போடுகின்றார்.

அவரின் வயதை விட பழமை வாய்ந்தது இந்திய ஊழல் அரசியலும் வாழ்க்கையும் என்பது வேறு விடயம்.

இன்னொருத்தர்  இதுவரை காலமும் கோமாவில் இருந்து விழித்தவர் போல் சிஸ்டம் சரியில்லையென சொல்லி பரிகாசம் செய்கின்றார்.

அந்த இருவரும் தமிழினத்தை பற்றி நியாயபூர்வமாக வாய்திறந்ததாக தெரியவில்லை.

அல்லது....
திரைக்கதைகளுக்கு பஞ்சம் வந்துவிட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, நிழலி said:

வன்னியன் சார்,

தமிழ அரசு ஒன்று ஏற்கனவே  சில ஆண்டுகளுக்கு முன்னர்,  இவ்வாறு தமிழ் மொழிக் கல்வியை கட்டாயம் ஆக்கி உத்தரவிட, பின் அதனை எதிர்த்து ஒருவ, நீதிமன்றம் செல்ல, நீதிமன்றமும் அவ் உத்தரவை தடை செய்தது என்று எப்பவோ வாசித்த மாதிரி ஒரு நினைவு. அப்படி நடந்ததா?

நீங்கள் சொல்வது சரிதான்..நிழலி தமிழக அரசின் உத்தரவிற்கு தனியார் பள்ளிகளின் உரிமையாளரகள், தனிநபர்கள் சேர்ந்து பொதுநல வழக்கு மூலம் உயர்நீதி மனறத்தில் தடை வாங்கியுள்ளனர். முதுகெலும்பு இல்லாத தமிழக அரசியல்வியாதிகள் அதன்பின் இதுபற்றி பேசுவதே இல்லை.

Edited by ராசவன்னியன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரி.... அதை, விட்டுத் தள்ளுங்க......
குஷ்பூ....  இட்டலி, என்ன விலை விக்குது?  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

குஷ்பூ....  இட்டலி, என்ன விலை விக்குது?  

தமிழைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நீங்கள் கேட்பது புரியவில்லை தமிழ்சிறி, இரண்டுக்கும் என்ன சம்மந்தம்..?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, ராசவன்னியன் said:

தமிழைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நீங்கள் கேட்பது புரியவில்லை தமிழ்சிறி, இரண்டுக்கும் என்ன சம்மந்தம்..?

சினிமா...  அரசியல்  வாதிகள், அற்ற   தமிழ்நாடு. 
கடந்த... 50 வருடத்தில்  இல்லை.  வன்னியன்.

நாங்கள்... முயற்சித்தோம்..... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

சினிமா...  அரசியல்  வாதிகள், அற்ற   தமிழ்நாடு. 
கடந்த... 50 வருடத்தில்  இல்லை.  வன்னியன்.

நாங்கள்... முயற்சித்தோம்..... 

'தமிழகத்தில் அதிசயம் ஏதாவது நடந்துவிடாதா..?' என்ற நம்பிக்கை இன்னமும் உள்ளது..

ஈழத்தில் கிட்டிய அரிய சந்தர்ப்பத்தை ஒற்றுமையின்றி தவறவிட்டதுபோல் இங்கே நடக்காது என நம்புகிறேன். :unsure:

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனதா விமுக்தி பெரமுனவினது (JVP)மறுவடிவான ஜாதிய ஜன பலவேகயவினது(NPP) அரசியல் நிகழ் நிரலில் அவர்கள் முதலில் கையிலெடுப்பது 13ஆவது நீக்கமாகவே இருக்கும்.(இது ஏலவே கள உறவுகளால் யாழில் குறிப்பிடப்பட்டது) அவர்கள் அதனை ரில்வின் சில்வாவூடாக நூல்விட்டுப்பார்க்க, எங்கள் இந்திய முகவர்களான தமிழ்த்தலைமைகள் உட்படத் தமிழ்த் தேசியத் தலைமைகளும் வாய்விட்டு கொக்கரித்து நிற்கின்றார்கள். 13கிடையாது என்பதை இந்தியப் பயணத்தின் பின்னர் அனுர அரசு உறுதியாகக் கூறும். அதற்குப்பதிலாக நேரடியாக இந்தியாவோடு  பொருண்மிய மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றைச் செய்து தமிழரது அரசியலை ஒடுக்கிவிடும்.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி      
    • நாலு பக்கமும் கடலால் சூழப்பட்ட தீவு ஒன்றில் உப்புக்கும் தட்டுப்பாடு?? பொருளாதாரச்சிக்கலுக்கு வேறு நாடுகளில் கையேந்திக்கொள்ளலாம் என்ற மனநிலையில்???
    • பேச்சாற்றால் இயல்பாகவும் சிறப்பாகவும் உள்ளது . .......!  👍
    • குருதியாற்றில் மிதந்தமிழ்ந்துபோய் அவலத்துள் வாடும் தமிழீழத்தவரே இன்னும் தமது அரசியலைச் சரியாகப் புரிந்துகொண்டு கடந்த 15 ஆண்டுகளில் கையிலெடுத்தாளவில்லை. இந்தநிலையில், சுயமாகச் சிந்திக்காது  திரைக்கவர்ச்சியில் அள்ளுண்டு வாழும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள தமிழக அரசியலைத் தமிழீழத்தவர் நம்பிப் போராடப் புறப்படவில்லையென்றே நினைக்கின்றேன். தமிழகம் மொழி,கலை மற்றும் பண்பாட்டால் எமது தார்மீகப் பின்தளமாகவும், ஒருகூட்டுணர்வின் அடிப்படையில் தமிழ்த் தேசியத்தின் தூணாகவும் நின்று காக்கவேண்டிய கடமையை நேர்மையோடு எந்தவொரு தமிழக அரசியல் தலைமைகளும் அணுகவில்லை. ஜோ.பெர்னாண்டஸ் போன்றோ, தமிழக முதல்வராயிருந்த ம.கோ.இராமச்சந்திரன் போன்றோ தற்துணிவோடு எவரும் அணுகவில்லை. இன்று இருப்பதைத் தக்கவைக்கவே தமிழினம் போராடவேண்டிய புறநிலையைத் தமிழகத்திலுள்ள, தமிழீழத்தவர்மீது உண்மையான அக்கறையுள்ள தலைவர்கள் தமது கட்சியரசியலைக்கடந்து சிந்திப்பதாகவும் இல்லை. இந்தநிலை தமிழகத்தில் மாறப்போவதில்லை. தமிழீழ ஆதரவு அமைப்பென்று மு.கருணாநிதி தலைமையில் தமது சுயநல அரசியலுக்காக 1985இல் தொடங்கப்பட்ட அமைப்பினது செயற்பாடுகளைத் திரும்பிப்பார்த்தாலே புரிந்தககொள்ளமுடியும்.  தமிழீழ மக்கள் முதலில் தம்மைத் தாம் நம்பவேண்டும். தற்போதுள்ள சூழலை எப்படி எதிர்கொள்வதென்பதை சிந்திக்க வேண்டும். தாயகக்கட்சிகள் ஒரு பொதுவேலைத்திட்டத்தில் ஒருங்கிணைய (அண்மைய சிறீதரன் மற்றும் கயேந்திரகுமார் சந்திப்பு) தமிழ் உறவுகள் அழுத்தம் கொடுத்து ஒன்றிணைக்க வேண்டும். அதற்கான புறநிலையாக அண்மைய தேர்தலைத் தமிழ்த் தலைமைகள் நோக்குவதோடு, சுயபுராணப் பந்தாக்களைக்களைந்து ஆரோக்கியமான அரசியலை நோக்கிச்செல்ல முனையாவிடின் தமிழர் தாயகத்தில் மாற்றுச் சக்திகள் பலம்பெறுவது தவிர்க்கமுடியாததாகும். தமிழினத்தின் அழிவையும் தடுக்க முடியாது போகும். தமிழின விடுதலைக்கான குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டுள்ள தமிழக அரசியலுள் எம்மால் ஏதாவது செய்ய முடியுமா? இல்லைத்தானே. ஆதரவு தருவோரை அரவணைத்தவாறு நாம் அதனைக் கடந்துசெல்வதே சரியானது.   தமிழர் தயாகத்தில் இனி இரத்த ஆறு ஓடாது. ஒரே பிரித்தோதும் சத்தமே கேட்கும் நிலையாகும்.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி    
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.