Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அசைவப் பிரியர்களுக்கு ஸ்டார் ஓட்டல் உணவு செய்முறைகள் (ஸ்டார் ஓட்டல்களின் செஃப் சஞ்சீவ் ரஞ்சன் , சீதாராம்பிரசாத் மற்றும் ரவி சக்சேனா )

Featured Replies

அசைவப் பிரியர்களுக்கு..

 

என்னதான் வீட்டில் அற்புதமாக அசைவம் சமைத்தாலும் ஓட்டல்களில்  கிடைக்கும் வித்தியாசமான சுவைக்காக உயர்தரமான அசைவ ஓட்டல்களை நாடிச் சென்று சாப்பிடும் ஆட்கள்தான் நம்மிடையே அதிகம். அங்கு கிடைக்கும் வெரைட்டியான சுவை மட்டுமல்லாமல்  அங்கு கிடைக்கும் வெரைட்டியான வகைகளும்தான் அதற்கு ஒரு காரணம். அப்படி என்னதான் இருக்கு ஸ்டார் ஓட்டல் அசைவ உணவில்?
0.jpg
அதை எப்படி வீட்டில் எளிமையாக செய்து சாப்பிடலாம் என அசைவப் பிரியர்களுக்காக இந்தியாவின் பல மாநிலங்களின் ஸ்பெஷலான அசைவ உணவுகளை சமைத்துக் காட்டி இருக்கிறார்கள் ஸ்டார் ஓட்டல்களின் செஃப்களான சஞ்சீவ் ரஞ்சன் (Courtyard by Marriott Chennai), சீதாராம்பிரசாத் (Grand chennai by grt hotels), ரவி சக்சேனா (Dabha by Claridges). கொண்டாட்டம் தான் இனி. என்ஜாய் பண்ணுங்க மக்களே…

மட்டன் ரோகன் கோஷ்

என்னென்ன தேவை?

தயிர் - 20 கிராம்,
வெங்காயம் - 50 கிராம்,
மட்டன் - 200 கிராம்,
சோம்புத்தூள் - 1/4 டீஸ்பூன்,
குங்குமப்பூ - 1 சிட்டிகை,
இஞ்சி பவுடர் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
காஷ்மீர் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
தனியா தூள் - 2 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலைகள் - 1,
கருப்பு ஏலக்காய் - 2,
ஏலக்காய் - 5,
மட்டன் வேகவைத்த தண்ணீர் - 100 மி.லி.,
நெய் - 20 மி.லி.
3.jpg
எப்படிச் செய்வது?

மட்டனை நன்கு கழுவி துண்டுகளாக வெட்டி, வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், கருப்பு ஏலக்காய், பிரிஞ்சி இலைகள் சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். இதில் மட்டன் வேக வைத்த தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும், அதில் வேகவைத்த மட்டனை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு சோம்புத்தூள் மற்றும் கரம்மசாலாத்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி குங்குமப்பூ தூவி பரிமாறவும்.

http://www.kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=2171&id1=0&issue=20170916

 

 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

சிவகங்கை நெத்திலி மீன் மிளகு வறுவல்

 

என்னென்ன தேவை?

நெத்திலி மீன் - 300 கிராம்,
பொடித்த மிளகு - 35 கிராம்,
எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்,
சோள மாவு - 100 கிராம்,
தனியா தூள் - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 கொத்து,
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 500 மி.லி.,
உப்பு - தேவைக்கு.
25.jpg
எப்படிச் செய்வது?

மீனை நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டி தனியே வைக்கவும். இதில் எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து மீனை போட்டு பொரித்தெடுத்து, வறுத்த கறிவேப்பிலையால் அலங்கரித்து பரிமாறவும்.

http://www.kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=2196&id1=0&issue=20170916

 

பகிர்வுக்கு நன்றி ஆதவன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அலைஅரசி said:

பகிர்வுக்கு நன்றி ஆதவன்

செய்தால் படம்போட்டு காட்டவும் அக்காச்சி  இந்த சாப்பாட்டு வகைகளை :10_wink:

  • தொடங்கியவர்

நாகப்பட்டினம் கனவா மீன் தொக்கு

 

என்னென்ன தேவை?

கனவா மீன் - 300 கிராம்,
வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி - 50 கிராம்,
நறுக்கிய பச்சைமிளகாய் - 5,
கறிவேப்பிலை - 1 கொத்து,
இஞ்சி பூண்டு விழுது - 1½ டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
மிளகுத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
சீரகத்தூள், சோம்பு தூள் - தலா 2 டீஸ்பூன்,
சோம்பு - 1 டீஸ்பூன்.
29.jpg
எப்படிச் செய்வது?

கனவா மீனை கழுவி, சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, சீரகத்தூள், ேசாம்பு தூள், மிளகுத்தூள் ேசர்த்து நன்கு வதக்கவும். பச்சைவாசனை போனதும் மீனை சேர்த்து நன்கு வேகவைத்து இறக்கவும். கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

 

http://www.kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=2200&id1=0&issue=20170916

  • தொடங்கியவர்

குலசேகரப்பட்டினம் சுறா மீன் புட்டு

 

என்னென்ன தேவை?

சுறா மீன் - 300 கிராம்,
நறுக்கிய இஞ்சி - 1½ டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் - 5,
கறிவேப்பிலை - 1 கொத்து,
நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
வெங்காயம் - 100 கிராம்,
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 50 மி.லி.,
உப்பு - தேவைக்கு.
27.jpg
எப்படிச் செய்வது?

சுறா மீனை மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து தோலுரித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு, பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு இதில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் சுறா மீனை சேர்க்கவும். மீன் உதிர்ந்து நன்கு வதங்கியதும் இறக்கி, கொத்தமல்லித்தழையை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.

http://www.kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=2198&id1=0&issue=20170916

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

எல்லக்கட்டி கோழி பிரியாணி

என்னென்ன தேவை?

எண்ணெய் - 100 மி.லி.,
நெய் - 100 மி.லி.,
சிக்கன் - 300 கிராம்,
பாஸ்மதி அரிசி - 150 கிராம்,
வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி - 10 கிராம்,
கரம்மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்,
புதினா - 20 கிராம்,
கொத்தமல்லித்தழை - 20 கிராம்,
தயிர் - 100 மி.லி.,
பச்சைமிளகாய் - 5,
மிளகாய்த்தூள் - 100 கிராம்,
முந்திரி - 50 கிராம்,
இஞ்சி பூண்டு விழுது - 100 கிராம்,
உப்பு - தேவைக்கு,
வாழை இலை - 10.
28.jpg
எப்படிச் செய்வது?

பாஸ்மதி அரிசியை ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து கரம்மசாலாத்தூள், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, தக்காளி, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், தயிர், சிக்கன், பாஸ்மதி அரிசி சேர்த்து நன்கு கலந்து தம் போடவும். பாதி வெந்ததும் மறுபடியும் கலந்துவிட்டு வாழை இலை கொண்டு மூடிவிட்டு வேகவிட்டு எடுக்கவும். வறுத்த முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.

http://www.kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=2199&id1=0&issue=20170916

  • தொடங்கியவர்

கோழி மல்லி குருமா

 

என்னென்ன தேவை?

சிக்கன் லாலிபாப் - 200 கிராம்,
எண்ணெய் - 100 மி.லி.,
கரம்மசாலாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
தேங்காய் - 1,
கொத்தமல்லித்தழை - 1/2 கட்டு,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
பூண்டு - 10 பல்,
இஞ்சி - 1 துண்டு,
தனியா தூள் - 1½ டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
பச்சைமிளகாய் - 5,
கறிவேப்பிலை - 1 கொத்து,
வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி - 50 கிராம்.
30.jpg
எப்படிச் செய்வது?

கொத்தமல்லியை நறுக்கி தனியாக வைக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்துகரம் மசாலாத்தூள், சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் மறுபடியும் எண்ணெய் சேர்த்து அதில் கரம்மசாலாத்தூள், வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதில் சிக்கன் லாலிபாப்பை சேர்த்து சில நிமிடம் வேக விட்டு எடுக்கவும். பிறகு கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

 

http://www.kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=2201&id1=0&issue=20170916

  • கருத்துக்கள உறவுகள்

மிக எளிமையானதும்,சுவையானதுமான அசத்தலான ஆயிட்ட்ங்கள்..... பாராட்டுக்கள் ஆதவன்.....!  tw_blush:

  • தொடங்கியவர்

ஏர்வாடி இறால் சுக்கா

இறால் - 200 கிராம்,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி - 25 கிராம்,
நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
தனியா தூள் - 2 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - 1/2 கட்டு,
கறிவேப்பிலை - 1 கொத்து,
எண்ணெய் - 100 மி.லி.,
பச்சைமிளகாய் - 5,
சோம்பு தூள் - 2 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 2 டீஸ்பூன்.
23.jpg
எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கரம்மசாலாத்தூள், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இதில் பச்சைமிளகாய், இறால், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, சோம்பு தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இறால் நன்கு வெந்து தண்ணீர் சுண்டியதும், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

http://www.kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=2194&id1=0&issue=20170916

 

  • தொடங்கியவர்

காங்கேயம் கடுகு இறால்

என்னென்ன தேவை?

இறால் - 250 கிராம்,
வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி - 50 கிராம்,
பச்சைமிளகாய் - 5,
கறிவேப்பிலை - 1 கொத்து,
தனியா தூள் - 1½ டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
கடுகு தூள் - 2 டீஸ்பூன்,
தேங்காய் விழுது - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 100 மி.லி.,
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
22.jpg
எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி, தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதில் தனியா தூள், மஞ்சள் தூள், கடுகு தூள் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து பச்சைவாசனை போகும் வரை வதக்கவும். பிறகு இறாலை சேர்த்து வெந்ததும் கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

http://www.kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=2193&id1=0&issue=20170916

  • தொடங்கியவர்

பழவேற்காடு நண்டு மசாலா

என்னென்ன தேவை?

நண்டு - 250 கிராம்,
வெங்காயம் - 200 கிராம்,
தக்காளி - 100 கிராம்,
பச்சைமிளகாய் - 5,
கறிவேப்பிலை- 1 கொத்து,
மிளகாய்த்தூள் - 25 கிராம்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
புளி கரைசல் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
சோம்பு - 1 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 100 மி.லி.
21.jpg
எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து அதில் சோம்பு, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு புளி கரைசல் சேர்த்து நன்கு கொதித்ததும், நண்டு சேர்த்து குறைந்த தீயில் வேக விட்டு இறக்கவும். கடைசியாக கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

http://www.kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=2192&id1=0&issue=20170916

  • கருத்துக்கள உறவுகள்

அசைவம் செய்யப் பழகுபவர்களுக்கு இது ஒரு அருமையான பதிவு.....! பத்து மணிக்கு எழுந்து பிரிட்ஜை திறந்து வைத்துக் கொண்டு இன்று என்ன சமைப்பது என்று யோசிப்பவர்களுக்கு மிக நல்ல கையகராதி....!  tw_blush:

  • தொடங்கியவர்

முத்துநகர் மீன் பொரியல்

என்னென்ன தேவை?

எண்ணெய் - 100 மி.லி.,
நெத்திலி மீன் - 250 கிராம்,
வெங்காயம் - 100 கிராம்,
பச்சைமிளகாய் - 5,
பொடியாக நறுக்கிய பூண்டு - 2 டேபிள்ஸ்பூன்,
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்,
காஷ்மீர் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
20.jpg
எப்படிச் செய்வது?

மீனை நன்கு கழுவி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு வேகவைத்த மீன் துண்டுகளை சேர்த்து நன்கு திக்காகும் வரை சமைத்து இறக்கவும். கடைசியாக எலுமிச்சைச்சாறு, கொத்த மல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

http://www.kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=2191&id1=0&issue=20170916

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Athavan CH said:

முத்துநகர் மீன் பொரியல்

என்னென்ன தேவை?

நெத்திலி மீன் - 250 கிராம்,

20.jpg

Bildergebnis für நெத்திலி மீன்

இந்த மீனை இங்கு வாங்கலாம். செய்முறையும்... இலகுவாக உள்ளதால், ஒரு  முறை... செய்து பார்க்க வேண்டும். 
ஆனால் எங்கள் பாரம்பரிய முறைப்படி... ரெண்டு கரண்டி மிளகாய்த்தூள் போட்டு பிரட்டினால் தான், சமைத்தது பத்தியப்படும். :grin:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

கறி முருங்கை குழம்பு.

 

என்னென்ன தேவை?

மட்டன் - 250 கிராம்,
முருங்கைக்காய் - 2,
வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி விழுது - 50 கிராம்,
கரம்மசாலாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
கறிவேப்பிலை - 1 கொத்து,
தேங்காய் விழுது - 1½ டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1½ டேபிள்ஸ்பூன்,
தனியா தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
19.jpg
எப்படிச் செய்வது?

மட்டனை இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து வேகவைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கரம்மசாலாத்தூள், வெங்காயம், தக்காளி விழுது, இஞ்சி பூண்டு விழுது, மற்ற மசாலா பொருட்களை சேர்த்து பச்சைவாசனை போகும் வரை வதக்கவும். பிறகு முருங்கைக்காய் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும். பிறகு அதில் வேகவைத்த மட்டனை சேர்க்கவும். மட்டன் மசாலாவுடன் நன்கு சேர்ந்து வந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.

 

http://www.kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=2190&id1=0&issue=20170916

  • தொடங்கியவர்

பொரிச்ச கோழி

கோழி எலும்பு நீக்கப்பட்டது - 100 கிராம்,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 கொத்து,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
சோள மாவு - 1½ டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - தேவைக்கு,
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்.
18.jpg
எப்படிச் செய்வது?

சிக்கனை நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டி அனைத்து மசாலா பொருட்கள், 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். பிறகு சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.

http://www.kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=2189&id1=0&issue=20170916

  • தொடங்கியவர்

வான்டன் வறுத்த கறி

என்னென்ன தேவை?

சிக்கன் கொத்தின கறி - 100 கிராம்,
வான்டன் அட்டை - 15,
நறுக்கிய வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி விழுது - 50 கிராம்,
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்,
உப்பு, நறுக்கிய கொத்தமல்லித்தழை - தேவைக்கு,
கரம்மசாலாத்தூள் - 3 டீஸ்பூன்,
தேங்காய் விழுது - 1 டேபிள்ஸ்பூன்.
17.jpg
எப்படிச் செய்வது?

சிக்கன் கீமாவில் உள்ள தண்ணீரை வடிகட்டி அதில் பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து வான்டன் அட்டைக்குள் வைத்து மடித்து எண்ணெயில் பொரித்தெடுத்து தனியாக வைக்கவும். கடாயில் எண்ணெயை சேர்த்து அதில் கரம்மசாலாத்தூள், வெங்காயம், தக்காளி விழுது, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் விழுது சேர்த்து பச்சைவாசனை போகும் வரை வதக்கி, பிறகு இதில் வறுத்த வான்டன் அட்டைகளை சேர்த்து மசாலாவை நன்றாக கலந்து விட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்

http://www.kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=2188&id1=0&issue=20170916

  • தொடங்கியவர்

ஆட்டு மூளை முட்டை பணியாரம்

 

என்னென்ன தேவை?

ஆட்டு மூளை - 1,
முட்டை - 3,
உப்பு - தேவைக்கு,
மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் விழுது - 1 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
தனியா தூள் - 2 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
சோம்பு தூள் - 1 டீஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் - 100 கிராம்,
நறுக்கிய தக்காளி - 100 கிராம்,
கறிவேப்பிலை - 1 கொத்து.
16.jpg
எப்படிச் செய்வது?

மூளையை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தூள் போட்டு பிரட்டி தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கரம்மசாலாத்தூள் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மேலே கொடுத்துள்ள மற்ற மசாலா பொருட்களை சேர்க்கவும். வாசனை போகும் வரை வதக்கி மூளையை சேர்த்து இறக்கவும்.

முட்டையில் உப்பு, பச்சைமிளகாய், மிளகுத் தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். பணியாரக் கடாயை சூடாக்கி அதில் எண்ணெய் சேர்த்து முட்டை கலவையை ஊற்றவும். அதில் மூளை மசாலாவை வைத்து இரண்டு பக்கமும் நன்கு வேக விட்டு எடுத்து,கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து சூடாக பரிமாறவும்

 

http://www.kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=2187&id1=0&issue=20170916

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Athavan CH said:

ஆட்டு மூளை முட்டை பணியாரம்

 

என்னென்ன தேவை?

ஆட்டு மூளை - 1,
முட்டை - 3,
உப்பு - தேவைக்கு,
மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் விழுது - 1 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
தனியா தூள் - 2 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
சோம்பு தூள் - 1 டீஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் - 100 கிராம்,
நறுக்கிய தக்காளி - 100 கிராம்,
கறிவேப்பிலை - 1 கொத்து.
16.jpg
எப்படிச் செய்வது?

மூளையை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தூள் போட்டு பிரட்டி தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கரம்மசாலாத்தூள் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மேலே கொடுத்துள்ள மற்ற மசாலா பொருட்களை சேர்க்கவும். வாசனை போகும் வரை வதக்கி மூளையை சேர்த்து இறக்கவும்.

முட்டையில் உப்பு, பச்சைமிளகாய், மிளகுத் தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். பணியாரக் கடாயை சூடாக்கி அதில் எண்ணெய் சேர்த்து முட்டை கலவையை ஊற்றவும். அதில் மூளை மசாலாவை வைத்து இரண்டு பக்கமும் நன்கு வேக விட்டு எடுத்து,கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து சூடாக பரிமாறவும்

 

http://www.kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=2187&id1=0&issue=20170916

பணியாரம் எண்டால் நான் இவ்வளவு காலமும் இனிப்புசாப்பாடு எண்டெல்லே நினைச்சுகொண்டிருந்தன்.....பிரட்டலையும் பணியாரத்துக்கை அடக்கீட்டாங்கள். :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.