Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் பாரிய தாக்குதல் நடத்த படையினர் திட்டமிடுவதாக தெரிவிப்பு

Featured Replies

முல்லைத்தீவில் பாரிய தாக்குதல் நடத்த படையினர் திட்டமிடுவதாக தெரிவிப்பு

முல்லைத்தீவில் பாரிய தாக்குதலைத் தொடுக்க அரச படைகள் திட்டமிட்டு வருவதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்புச் செயலகம் நேற்று திங்கட்கிழமை தெரிவிக்கையில்,

முல்லைத்தீவில் பாரிய தாக்குதலொன்றைத் தொடுக்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. அவர்களது அண்மைக் காலச் செயற்பாடுகள் இதனை நன்கு தெளிவுபடுத்துகின்றன.

இதற்காக இராணுவ விசேட அணிகளும் கருணா குழுவும் திருகோணமலைக்கு வடக்கே புல்மோட்டையிலும் கொக்குத்தொடுவாய் மற்றும் கொக்கிளாய்ப் பகுதிகளிலும் நிலை கொண்டுள்ளன.

முல்லைத்தீவில் பாரிய தாக்குதலைத் தொடுக்கும் நோக்கிலேயே இவ்வாறு படைக்குவிப்பு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழத்திற்கான இறுதிப்போர் ஆரம்பிக்கும் இடமாக முல்லைத்தீவு,மணலாறு இருக்குமோ.. ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழத்திற்கான இறுதிப்போர் ஆரம்பிக்கும் இடமாக முல்லைத்தீவு,மணலாறு இருக்குமோ.. ?

<<<அப்படித்தான் எண்ணத் தோன்றுகின்றது!!...

  • கருத்துக்கள உறவுகள்

கருணா படையினருடன் இணைந்து படை நடத்தக் கூடிய அளவுக்கு அணி வைச்சிருக்கிறார் என்றதைப் புலிகள் ஏற்றுக் கொண்டுள்ளது நல்ல விடயம்.

இராணுவத்தின் சில அணிகள் ஏற்கனவே காட்டுக்குள்ளால் வன்னிக்குள் முன்னேறி உள்ளத்தை தினமும் நடக்கும் கிளைமோர் தாக்குதல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இராணுவம் போல புலிகளும் தங்கள் பகுதிகளுக்குள் இராணுவத்தின் ஊடுருவலைத் தடுக்க முடியாதுள்ளனர் என்பது வெளிப்படையாகியுள்ளது.

வாகரை வெற்றியில் இராணுவத்தின் ரகசிய நகர்வுகள் முக்கிய வெற்றிகளைப் பெற உதவியை இங்கு சுட்டிக்காட்டலாம்.! :)

முகமாலை தாக்குதலுக்கு முன்னர் த.வி.பு இவ்வாறுதான் அறிவித்திருந்தார்கள்.

நடந்தால் ஓடுவார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கிளாயிற்கும், புல்மோட்டைக்கும் இடையில் பாலம் தானா, அல்லது தரைவழிப்பாதை ஏதும் இருக்கின்றதா?

கருணா படையினருடன் இணைந்து படை நடத்தக் கூடிய அளவுக்கு அணி வைச்சிருக்கிறார் என்றதைப் புலிகள் ஏற்றுக் கொண்டுள்ளது நல்ல விடயம்.

இராணுவத்தின் சில அணிகள் ஏற்கனவே காட்டுக்குள்ளால் வன்னிக்குள் முன்னேறி உள்ளத்தை தினமும் நடக்கும் கிளைமோர் தாக்குதல்கள் சுட்டிக்காட்டுகின்றன

இராணுவம் போல புலிகளும் தங்கள் பகுதிகளுக்குள் இராணுவத்தின் ஊடுருவலைத் தடுக்க முடியாதுள்ளனர் என்பது வெளிப்படையாகியுள்ளது.

வாகரை வெற்றியில் இராணுவத்தின் ரகசிய நகர்வுகள் முக்கிய வெற்றிகளைப் பெற உதவியை இங்கு சுட்டிக்காட்டலாம்.! :)

விடுதலையை நேசிப்பவர்களும் விடுதலைக்காக போராடுபவர்களும் நிச்சயம் உண்மையை உள்ளபடி உணர்ந்தாள் தான் அவர்கள் விடுதலை போராளியாக இருக்க முடியும் அத்தோடு தங்களையும் தயார் நிலையில் வைத்து இருக்க முடியும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நெடுக்கால போன உமது எண்ணத்துக்கும் கருத்துக்கும் நன்றி ஆனால் விடுதலைப் புலிகள் எல்லைகள் முழுவதையும் காவல் காத்து இப்போது நிக்க வில்லை ஆனால் விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவுக்கு இந்த நிலை தெரியும் இருந்தும் அவர்கள் விடுதலைப்புலிகளின் படை அணியை தாக்கியது குறைவு ஆனால் அப்பாவித்தமிழர்களை அல்லவா அழிக்கின்றார்கள் இதற்க்கு தமிழ் மக்கள் தங்களின் கிராமங்களை காக்க வெளிக்கிட்டாள் நிறைய பிரச்சனைகளை முறியடிக்களாம் அல்லவா?????????????????

உம்மை போன்றோர் என்னைப்போன்றோர் கூடவே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இராணுவத்தின் எண்ணிக்கை யோடு ஒப்பிட்டுப்பார்த்தாள் விடுதலைப்புலிகள் பல மடங்கு சிறியது ஆனாலும் இராணுவத்திற்க்கு சிம்ம சொற்பணமாக உள்ளனரே இதில் இருந்து என்ன தெரிகின்றது இன்று இந்த நிலையானாலும் காட்டிக்கொடுக்கும் நய வஞ்சகர்கள் கூலிப்பட்டாளங்கள் எட்டப்பர் கூட்டங்கள் தான் இப்படியான ஊடுருவலுக்கு துணை போகின்றனர் அதனால் தான் இந்த நிலை என்பதை நீர் உணர தடைப்பட்டு விட்டீர் என்று என்ன தோன்றுகின்றது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அதுதான் விடுதலைப்புலிகள் ஏற்கனவே சரியான பாடம் புகட்டி விட்டது தெரியவில்லையா? தாங்கள் தந்திரமாக தங்களின் படைக்கட்டுமானத்தையும் படைகளையும் நகர்த்திய பின்புதான் அவர்களால் அந்த இடத்தை பிடிக்க முடிந்தது அப்படி அந்த இடத்தை விடுதலைப்புலிகள் காத்துக்கொள்ள விரும்பினால் அவர்களால் பிடித்து இருக்க முடியுமா என்று நினைத்து பாரும் . அத்தோடு உமது கருத்துகளைப்பார்க்கும் போது பழைய விடையங்கள் அல்லது எமது போராட்ட பரிமாணங்களை மறந்தவர் போல் தெரிகின்றது அல்லது சிறுபிள்ளை சின்னத்தனமாக சிந்திப்பவர் போல் அல்லவா தெரிகின்றது

படைக்கட்டுமானத்தை வைத்து இருப்பவர்க்கு தெரியும் தமிழரையும் தமிழ் மண்ணையும் எப்படி மீட்க வேண்டும் என்று நாம் அவர்களுக்கு ஆறுதல் ஆதரவு அரவணைப்பு அன்பு காட்டினால் அவர்கள் இன்னும் ஆயிரம் ஆயிரம் வெற்றிகளை நல்லசெய்திகளை தர காத்து இருக்கின்றனர்

முதலில் தமிழனாய் வாழ பார்ப்போம்

Edited by Inathant

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரசன்னா,

இந்தச் செய்தி எங்கிருந்து எடுத்து, இங்கு இணைத்தீர்கள்? அதன் இணைப்பையும் கீழ் இணைத்திருக்கலாமே ?

இது பிரசண்ணா இன்டர்னாசனல் நியூஸ் ஏஜென்சியின் -(PINA) செய்தியாக இருக்கலாம்!

முல்லைத்தீவில் பொதுமக்கள் ஊர்தி மீது கிளைமோர் தாக்குதல்.

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பாலைப்பாணி மார்க்கத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் பொதுமக்கள் ஊர்தி மீது கிளைமோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை மாலை மல்லாவியிலிருந்து பொதுமக்களை ஏற்றிக்கொண்டு பாலைப்பாணி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஊர்தி மீதே இக்கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் ஊர்தி சேதமடைந்துள்ளது. பொதுமக்களுக்கு எதுவித சேதங்களும் ஏற்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே வன்னிப் பகுதியில் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான மிக் - 27 ரக விமானங்கள் இன்று மாலையும் வான் தாக்குதலை நடத்தியுள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்திவிட்டுச் சென்றுள்ளன.

இது இவ்வாறிருக்க, முகமாலை பின்தளத்திலிருந்து சிறிலங்காப் படையினர் செறிவான எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தியிருக்கின்றனர்.

-Puthinam-

தாக்குதல் முல்லைத்தீவில், தொப்பிகலகாட்டில் , முகமாலையில்,அம்பாறையில், வவுனியாவில்

எங்கும் ஒரெ நேரெத்தில் உடனடியாக தொடங்கலாம் அல்லது சில இடங்களில் மட்டும்

தொடங்கலாம். நண்டு கொழுத்தால் ------- வெளிக்கிடத்தானே வேண்டும். வைத்தியர்களும் ஆயுத்தம் ஆக இருக்கிறார்கள். என்ன வருத்தத்திற்கு என்ன மருந்துகொடுக்க வேண்டும் என. அதிகமாக இந்த முறை அறுவைச்சிகிச்சை தான் சரிவரும். இது கனகாலமாக மாறாத புற்று நோய் என்று வெளி நாட்டு மருத்துவர்களும் அறிந்துள்ளனர். எனவே வைத்தியருக்குகான தேவைகளை வசதிகளை நாம் எல்லா வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு செயற்படவேண்டிய நேரம். வைத்தியர் பலவீனமாக இருந்தால் புற்று நோய்க்கிருமிகள் வைத்தியரையும் அழித்து மக்களையும் அழித்துவிடும். இந்த முறை வான் பறவைகாச்சலும் மோசமாக இருக்கலாம். அதுக்கும் ஒரு வழி செய்ய வேண்டும். நமக்கில் யார் கூடுதலாக நம்மின விடுதலைக்கு எவ்விததில் உதவிகள் செய்யலம் என்பதில் போட்டியாக இருப்போம். விடுதலை யுத்தத்தின் நியாயங்கைளை ஆதாரங்களுடன் உலகிற்கு கொண்டுபோவோம். தமிழர்கள் ஒன்றாதல் கண்டு எதிரிகள் எங்கோ மறைந்தனர். நம்புங்கள்-------

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முல்லைத்தீவுக்கும் மல்லாவிக்கும் உள்ள தூர வித்தியாசம் கிட்டத்தட்ட 40 கிலோ மீற்றர் என்று நினைக்கிறேன். இதற்க்கும் முல்லைத்தீவில் போர் நடவடிக்கைக்கும் தொடர்பிருக்காது வினோ..

ஆனால் இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஏனேனில் குறிப்பிட்டிருக்கும் களமானது கருணா குழுவுக்கோ, இராணுவத்துக்கோ சாதகமானதல்ல. தாங்களாகவே வந்து மாட்டிக்கொள்ள, எதிரி விரும்ப மாட்டான் என்று நம்ப முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணா படையினருடன் இணைந்து படை நடத்தக் கூடிய அளவுக்கு அணி வைச்சிருக்கிறார் என்றதைப் புலிகள் ஏற்றுக் கொண்டுள்ளது நல்ல விடயம்.

கருணாவின் அணி முன்பும் இராணுவத்துடன் சேந்து தாக்குதலில் ஈடுபட்டது எல்லோருக்கும் தெரியும் :mellow: . பலமாக அடிவாங்கிய பிறகு, இராணுவம் சொன்ன மாதிரி ரைமுக்கு சப்போட்டுக்கு வரவில்லை என்று சொல்லித் திரிஞ்சவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிக்கிற அடியிலை தோல்வியை இராணுவம் தழுவுகிறபொழுது கருணா அணி ஒன்றும் பலமான அணியில்லை என்ற செய்தியை உலகத் தமிழர்களுக்கு சொல்லவேண்டிய தேவை இருக்கிறது.. அதனால்தான் புலிகள் கருணாகுழுவும் அங்கே நிற்கிற விடயத்தையும் அறிவிப்பிலே சேர்த்திருக்கின்றனர் போலும்..

  • தொடங்கியவர்

இது பிரசண்ணா இன்டர்னாசனல் நியூஸ் ஏஜென்சியின் -(PINA) செய்தியாக இருக்கலாம்!

ஆமாம் PINAசார்பாக PINAயின் ஆசிரியர் மாப்பிள்ளை வழங்கிய செய்திதான்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் பகிடிவிட்டுக்கொண்டு இருக்கிறியள் தம்பிமார்

இறுதிப்போர் என்று.

நெஞ்சுக்குள்ள ஏதோ செய்யுது

இந்த உலகம் போரில்லா ஒரு தீர்வை தமிழருக்கு தரணும் என்று இப்பவும் ஒரு நப்பாசையிலை உலகத்தை பார்த்து கும்பிட்டு நிற்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் PINAசார்பாக PINAயின் ஆசிரியர் மாப்பிள்ளை வழங்கிய செய்திதான்

Tamil people in TamilNadu wish LTTE win the war ..... but most of them are afraid to express their views since the govt marks the LTTE supports as terrorists.

Eelam brothers remember Tamil people and TamilNadu with you

  • தொடங்கியவர்

Tamil people in TamilNadu wish LTTE win the war ..... but most of them are afraid to express their views since the govt marks the LTTE supports as terrorists.

Eelam brothers remember Tamil people and TamilNadu with you

:angry:

முல்லைத்தீவு நோக்கிய படைநகர்வுக்கு இலங்கைப் படைகள் கொக்கிளாய் நாயாறு

பகுதிகளில் பெருமெடுப்புடன் தயாராகிக் கொண்டிருப்பதை புலிகளின் புலனாய்வுப் பெறு

பேறுகளின் மூலம் தமிழ்ச்செல்வன் வெளிப்படுத்திய பின்பு ஏன் அதில் சந்தேகம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனாள் இதனில் அரசியள் தந்திரோபயத்தை கையான்டுள்ளார் தமிழ்சௌ;வன் அதற்குகாரனம் அவர்அரசியளோடுதான் அறிக்கையைவிடவேன்டுமள்ளவ

தாக்குதல் நடக்கப் போகும் செய்தியை முற்கூட்டியே வெளிப்படுத்தி நடவடிக்கையைத்

தாமதப்படுத்த முடியுமே தவிர வேறென்ன அரசியல் தந்திரோபாயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.