Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்களுக்குள், பச்சை குத்திக் கொண்ட நபர்.... ஒரே நாளில் பிரபலம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருவிழி இல்லை பச்சை விழி

கண்களுக்குள் பச்சைக் குத்திக் கொண்ட நபர்.... ஒரே நாளில் ஹீரோவான டெல்லி இளைஞர்!

டெல்லியைச் சேர்ந்த கரண் என்ற நபர், தன்னுடைய கண்களுக்குள் பச்சைக் குத்தி கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது. 28 வயது நிரம்பிய இவர் தேர்ந்த பச்சைக் குத்தும் நபர் ஆவார். உடல் நிறைய பச்சைக் குத்தியிருக்கும் இவர் தற்போது கண்களுக்குள்ளும் பச்சைக் குத்தி இருக்கிறார்.

இவர் கண்களில் பச்சைக் குத்தி இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் வைரல் ஆகியுள்ளது. ஒரே நாளில் ட்ரெண்ட் ஆகியுள்ளார் இந்த நபர்.

டெல்லியச் சேர்ந்த கரண் என்ற 28 வயது நிரம்பிய நபர் தேர்ந்த தொழில் முறை பச்சைக் குத்தும் நபர் ஆவார். இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு இவர் பச்சைக் குத்தியுள்ளார் . இதன் மூலம் இவர் நல்ல நிலையான வருமானத்தைப் பெறுவதாக தெரிவித்துள்ளார். தன்னைத் தேடி வரும் மக்களுக்கு பச்சைக் குத்திவிடுவதே இவரது முக்கிய ஹாபி என்று தன்னுடைய பேட்டிகளில் இவர் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய பதினாறு வயதில் பச்சைக் குத்திக் கொள்ளத் தொடங்கிய கரண் கொஞ்சம் கொஞ்சமாக உடல் முழுவதும் பச்சைக் குத்தியுள்ளார். உடலில் எத்தனை பச்சைக் குத்தியிருக்கிறோம் என்பதே தெரியாத அளவுக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பச்சைக் குத்துவதோட நிற்காமல் உடலில் 22 துளைகள் இட்டு அதில் வளையங்களும் மாட்டி இருக்கிறார் இந்த நபர்.

எங்கும் பச்சை

உடல் முழுவதும் பச்சைக் குத்தியதை அடுத்து வேறு எங்கும் பச்சைக் குத்த இடம் இல்லாமல் இவர் தன்னுடைய கண்களில் பச்சைக் குத்த முடிவு எடுத்துள்ளார். மிகவும் சிக்கலான இந்த பச்சைக் குத்தும் முறையை அமெரிக்காவில் செய்து விட்டு வெற்றிகரமாக இந்தியா திரும்பி இருக்கிறார் இவர். தற்போது அந்தப் புகைப்படங்களை நெட்டில் ஏற்றியுள்ளார்.

கணுக்காலில் பச்சைக் குத்துவது மிகவும் கடினமான வேலை என்று இவர் குறிப்பிடுகிறார். ''வலிக்காமல் இருக்க ஊசி போட்ட பின் எந்த நிறம் வேண்டுமோ அந்த நிறத்தில் மிகவும் சூடான கலவையை கண்களில் மெதுவாக பாய்ச்சுவார்கள்'' என்று கூறியுள்ளார். என்னதான் வலிக்காமல் இருக்க ஊசி போட்டாலும் அந்த நேரத்தில் வலி மிகவும் அதிகமாக இருக்குமாம். அதுமட்டும் இல்லாமல் இதைச் செய்வதற்கு லட்சக்கணக்கில் செலவு ஆகும் எனவும் கூறியுள்ளனர்.

இவர் கண்களில் பச்சைக் குத்தியபின் அந்தப் புகைப்படங்களை ஆன்லைனில் ஏற்றியுள்ளார். இன்ஸ்ட்டாகிராமிலும், பல சமூக வலைதள பக்கங்களிலும் இந்தப் புகைப்படம் சிறிது நேரத்திலேயே வைரல் ஆனது. யாருக்கும் தெரியாமல் இருந்த இவரது பச்சைக் குத்தும் கடை ஒரே நாளில் டெல்லியில் பேமஸ் ஆனது. மேலும் இந்தியாவிலேயே முதலில் கண்களில் பச்சை குத்திய நபர் இவர்தான் என்கிறார் பெருமையாக.

- நன்றி  தற்ஸ்  தமிழ். -

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு டவுட்டு கேட்டால் வெட்டுவார்களே tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எனக்கொரு டவுட்டு கேட்டால் வெட்டுவார்களே tw_blush:

கேளுங்கள் வெட்ட முன் பார்த்து விடுகிறோம் .....ரெடி 3....2....1....go .....!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எனக்கொரு டவுட்டு கேட்டால் வெட்டுவார்களே tw_blush:

42 minutes ago, suvy said:

கேளுங்கள் வெட்ட முன் பார்த்து விடுகிறோம் .....ரெடி 3....2....1....go .....!  tw_blush:

மட்டுறுத்தினர்... எல்லாரும், மத்தியான சாப்பாட்டுக்கு போய் விட்டார்கள், போலுள்ளது..
டக்கென்று..... கேளுங்கள். பட்டென்று...... பதில் சொல்கின்றோம். :grin:  :D:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எனக்கொரு டவுட்டு கேட்டால் வெட்டுவார்களே tw_blush:

இந்தியாவிலேயே .......... எல்லா இடமும் குத்துகிறார்கள் ...
ஐரோப்பாவில் இப்போ எமது இளம் பெண் பிள்ளைகள் எல்லாம் 
மார்பு பின் புறம்(கு ...) என்று குத்துகிறார்கள் 

வெள்ளைக்காரர்கள் விட்டு வைக்கவா போகிறார்கள் ?
எல்லா இடமும்தான் குத்துகிறார்கள் 

இதில வெட்ட என்ன இருக்கு ?
பச்சை குத்துற விடயம்தானே 
பச்சையாக .......... குத்துற ...... அப்படி ஏதும் என்றால்தான் 
யோசிக்கவேணும் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

கேளுங்கள் வெட்ட முன் பார்த்து விடுகிறோம் .....ரெடி 3....2....1....go .....!  tw_blush:

4 hours ago, தமிழ் சிறி said:

மட்டுறுத்தினர்... எல்லாரும், மத்தியான சாப்பாட்டுக்கு போய் விட்டார்கள், போலுள்ளது..
டக்கென்று..... கேளுங்கள். பட்டென்று...... பதில் சொல்கின்றோம். :grin:  :D:

அந்த.......................அ.....க்கிள் பகுதிகளை குத்தக்க கூச்சம் வராதா என்ன ?? கமுக்கட்ட சொன்னன் யார் அங்க சிரிக்கிறtw_blush:

1 hour ago, Maruthankerny said:

இந்தியாவிலேயே .......... எல்லா இடமும் குத்துகிறார்கள் ...
ஐரோப்பாவில் இப்போ எமது இளம் பெண் பிள்ளைகள் எல்லாம் 
மார்பு பின் புறம்(கு ...) என்று குத்துகிறார்கள் 

வெள்ளைக்காரர்கள் விட்டு வைக்கவா போகிறார்கள் ?
எல்லா இடமும்தான் குத்துகிறார்கள் 

இதில வெட்ட என்ன இருக்கு ?
பச்சை குத்துற விடயம்தானே 
பச்சையாக .......... குத்துற ...... அப்படி ஏதும் என்றால்தான் 
யோசிக்கவேணும் 

ஹாஹாஹா மருதர் எங்கேயோ போய்ய்டேளே எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை கருத்துக்கு மருதரே பொறுப்பு tw_blush:

கன பிள்ளைகள் தற்போது பச்சை குத்தியவர்களாக திரிகின்றனர் கோவில் திருவிழாக்களில் கூட பச்சை குத்தும் கடைகள்  ஒரு கடையாக நிற்கிது அண்மையின் பான்டிருப்பு துரோபதை அம்மன் ஆலய சடங்கில்  மெயின் வீதியில் இந்த கடை முதல் கடையாக இருந்தது  கன பொடியங்கள் கைகள் தோள் பட்டை நெச்சு  என குத்துவதை கண்டேன் ஆனால் பெண்கள் இல்லை 

பெண்கள் கொழும்பில் நகர் பகுதிகளில் வாழும் அழுகிய சீசீ அழகிய பெண்கள் பேஷனுக்கு குத்திக்கொண்டு திரிந்ததை கண்டிருக்கிறேன்  ஒரு பஸ்ஸுக்க நான் நிற்க இ த ய ம் ஒன்று இதயத்தில் இருந்ததை கண்டு ஷாக் ஆகிட்டன்  ஆனால் அம்பு மட்டும் இல்லை கூர்ந்த அவதானிப்பின் கண்டு பிடித்தது tw_blush:

trisha2-500x500.jpg

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்

அவை ஸ்டிக்கர் பச்சையாய் இருந்திருக்கும். கொஞ்சம் சுரண்டிப் பார்த்திருந்தால் விழுந்திருக்கும்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

அவை ஸ்டிக்கர் பச்சையாய் இருந்திருக்கும். கொஞ்சம் சுரண்டிப் பார்த்திருந்தால் விழுந்திருக்கும்.....!  tw_blush:

தனிக்காட்டுராஜாவுக்கு தர்ம அடியென்று சொல்வார்களே அதான் விழுந்திருக்கும்   போறவாரவன் எல்லாம் அடிச்சிருப்பானே உங்களுக்கு நல்ல சந்தோஷ்மா இருந்திருக்கும் அப்படித்தானே tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அந்த.......................அ.....க்கிள் பகுதிகளை குத்தக்க கூச்சம் வராதா என்ன ?? கமுக்கட்ட சொன்னன் யார் அங்க சிரிக்கிறtw_blush:

ஹாஹாஹா மருதர் எங்கேயோ போய்ய்டேளே எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை கருத்துக்கு மருதரே பொறுப்பு tw_blush:

கன பிள்ளைகள் தற்போது பச்சை குத்தியவர்களாக திரிகின்றனர் கோவில் திருவிழாக்களில் கூட பச்சை குத்தும் கடைகள்  ஒரு கடையாக நிற்கிது அண்மையின் பான்டிருப்பு துரோபதை அம்மன் ஆலய சடங்கில்  மெயின் வீதியில் இந்த கடை முதல் கடையாக இருந்தது  கன பொடியங்கள் கைகள் தோள் பட்டை நெச்சு  என குத்துவதை கண்டேன் ஆனால் பெண்கள் இல்லை 

பெண்கள் கொழும்பில் நகர் பகுதிகளில் வாழும் அழுகிய சீசீ அழகிய பெண்கள் பேஷனுக்கு குத்திக்கொண்டு திரிந்ததை கண்டிருக்கிறேன்  ஒரு பஸ்ஸுக்க நான் நிற்க இதம் ஒன்று இதயத்தில் இருந்ததை கண்டு ஷாக் ஆகிட்டன்  ஆனால் அம்பு மட்டும் இல்லை கூர்ந்த அவதானிப்பின் கண்டு பிடித்தது tw_blush:

trisha2-500x500.jpg

3482e0c3d3dc0a4634a786d276df742b--om-tattoo-inspiration.jpg

hip-tattoos-27.jpg

7162651035_93dcfb535b_z.jpg

girls+tattoo+trend-05.jpg

எனது பேஸ்புக்கில் இன்னும் நிறைய இருக்கு 
குத்தும்போது பெருமையாக எடுத்த படங்கள் 
பரம்பரை மானம் காக்க 
 போட முடியாது உள்ளது 

இப்போ இது ஒரு 18- 28 வயது உள்ள பெண்களுக்குள் 
கொஞ்சம் போட்டியாக போய்க்கொண்டு இருக்கு.

இதுகள் ஒவோன்றும் குத்த இலங்கை காசு 
ஒரு லட்ஷம் முடியும் என்று நினைக்கிறேன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.