Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸ் - நாவலர் குறும்பட போட்டியில் விருதுபெற்ற படங்கள் !

Featured Replies

பிரான்ஸ் - நாவலர் குறும்பட போட்டியில் விருதுபெற்ற படங்கள் !

 

குறும்பட கலைஞர்களின் எதிர்பார்ப்புக்குரிய குறுந்திரை விழாவான பிரான்ஸ் - நாவலர் குறும்பட போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதில் இலங்கைத்தீவின் போருக்கு பிந்திய வாழ்வினை மையக்கருவாக கொண்டிருந்த இரண்டு குறும்படங்கள் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளன.

இலங்கை உட்பட புலம்பெயர் தேசங்களிலும் இருந்து 25க்கும் மேற்பட்ட குறும்படங்கள் இப்போட்டியில் பங்கெடுத்திருந்தன.

பிரான்ஸ் - நாவலர் குறும்பட போட்டியில் விருதுபெற்ற படங்கள் !

பிரான்ஸ் - புங்குடுதீவு ஒன்றியத்தினால் 8வது ஆண்டாக நடாத்தப்பட்டிருந்த இப்போட்டியில் பிரதான நடுவராக தமிழக திரைஇயக்குனர் ஆர்.கே.செல்வமணி, துணை நடுவர்களாக நோர்வேயிய தேசிய தெலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் இராஜன் செல்லையா, படைப்பாளர் சுதன்ராஜ் (பிரான்ஸ்) ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

போட்டி விதிமுறைகளுக்கு உட்பட்டு நடுவர்களினால் தேர்தெடுக்கப்பட்ட 9 குறும்படங்கள் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகியிருந்தன.

பிரான்ஸ் - நாவலர் குறும்பட போட்டியில் விருதுபெற்ற படங்கள் !

முதன் மூன்று படங்கள் தரவரிசையில் சிறந்த குறும்படங்களாக தேர்வு செய்யப்பட்டு விருதும் பணமுடிச்சும் வழங்கப்படுவதோடு, 13 துணை விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதில் போருக்கு பிந்திய வாழ்வினைப் பேசிய படங்களாக புலம்பெயர் தேச தமிழர் அரசியலை விமர்சனபூர்வமாக அணுகிய வேடம் (பிரான்ஸ்) முதலாம் இடத்தினைப் பெற்றிருந்தது.

பிரான்ஸ் - நாவலர் குறும்பட போட்டியில் விருதுபெற்ற படங்கள் !

தமிழர் தேசத்தின் மீதான சிங்கள அரசின் ஆக்கிரமிப்பினை குறியீட்டுரீதியாக பேசிய ரணம் (தாயகம்)
இரண்டாம் இடத்தினை பிடித்திருந்தது. சாளினி சார்ள்ஸ் எனும் பெண் இயக்குனர் இதனை
இயக்கியிருந்தார்.

ஒரு நீள்படத்துக்குரிய திரைக்கதை முடிச்சுடன் உருவாகியிருந்த உயிருள்ள கனவே மூன்றாம் இடத்தினைப் பிடித்துள்ளது.

பிரான்ஸ் - நாவலர் குறும்பட போட்டியில் விருதுபெற்ற படங்கள் !

https://news.ibctamil.com/ta/cinema/france-naavalar-short-film-festival

  • கருத்துக்கள உறவுகள்

 கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.....  இந்த ஒன்றியம் நிறைய நல்ல பங்களிப்புகள் செய்கிறது.இதற்காக அரும்பாடுபடும் நிர்வாகத்துக்கும் நன்றிகள்.....!

குறூப் படத்தில் அதன் உறுப்பினர்கள் பலரும் ஆண் /பெண் இரு பாலரும் தனித்தனியாக ஒரே மாதிரி ஆடைகள் அணிந்து இருப்பது சிறப்பு.....!   tw_blush:

மேலும் படங்கள் இருந்தால் இணைக்கலாமே....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  நவீனன்  பதிவுக்கு...

வேடம் படம்

2009 க்கு பின்னான இன்றைய எமது போராளிகளின்நிலை

புலம் பெயர்தேசத்துநிலை

பணம் சேர்த்தவர்கள்

அதை  பதுக்கியவர்கள்

வெளியே  வந்தவர்கள் அனைவரும்  தளபதிகள்  என்றநிலை

அதே நேரம்  உண்மையில் போராடிய தளபதிகளின்நிலை என

  மிக  காத்திரமான விமர்சனங்களை முன் வைத்தது

இந்த  விழாவின் தலைவன் என்ற முறையில் இந்தப்படம் தேர்வுக்கு  முன்னர்

 நிர்வாகத்தின் சிறப்புப்பார்வைக்கு  வந்தது

விமர்சனம் பாதையை தெளிவாக்கும்

கல்  எறிதல் பாதையை தடை  செய்யும் என்ற தெளிவான நிலைப்பாட்டுடன் இருக்கும்

France - புங்குடுதீவு மக்கள்  ஒன்றியத்தின் நாவலர்  விருதுக்கான விழாக்குழு

இப்படத்தை  அனுமதிப்பது என்றும்

வரும் தடைகளையும் விமர்சனங்களையும்  எதிர் கொள்வது என்றும் முடிவு  எடுக்கப்பட்டு

அனுமதிக்கப்பட்டது.

யாழ் களத்தில் விவாதித்த பல  விடயங்கள்

மக்கள்  மனதிலிருக்கும் பல கேள்விகளை அது எழுப்பி  நிற்கிறது

மற்றும் ரணம்

2 நிமிடங்களே ஆன  இப்படம் தமிழரின்  அழிவை 

மக்கள் மனதில் விதைத்து செல்கிறது

தாயகத்திலிருந்து வந்த  அதைச்சொல்வது மேலும் காத்திரமானது

ரணம் படம் தமிழருக்கு மட்டுமல்ல எந்த போராட்டத்துக்கும் பொருத்தமானது

நாவலர் குறும்படத்தின் குறிக்கோள்  மற்றும்  அதன் சுமைகளுக்கு  

ஒத்தணம்  கொடுக்கும் படங்களாகவும்  திருப்தி தந்த படங்களாகவும்பல இவை  அமைந்து

குறும்படங்களின் தரத்துக்குள்ளும் வந்ததால்வெற்றியடைந்தன.

படத்தை  வெளியிடும்உரிமை அவர்களுக்கானது

படம் வரும்போது பாருங்கள் உறவுகளே.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

"இஞ்சை" யும், இயக்குனரும் 
========================= 
எந்த ஒரு கலைஞனும் வானில் இருந்து வானவில் வழியாக இறங்கி வருவதில்லை 
காலமும், கடமையும், சமூகமும், தேவையும்.அவனைத் தயாரிக்கிறது. பின்னர் அவன் தன் உழைப்பு என்ற உளி கொண்டு தன்னை அழகாகவும், ஆழமாகவும் சொதுக்கிக் கொள்கிறான். என்பது உண்மை என்றால் " இஞ்சை" இயக்குனரும் உண்மையே.

"இஞ்சை" கால அளவால் வேண்டும் என்றால் குறும்படம் எனலாம். ஆனால் 
கதையால், இசையால், இயக்கத்தால், நடிப்பால், நடிகர்களின் தெரிவால், ஒளிப்பதிவால், ஒளித் தொகுப்பால், காட்சி அமைப்பால்,பிரமாண்டத்தால்.... இன்னும்,இன்னும் பல சிறப்புக்களால்... நிறைவாய் உழைப்பால் "இஞ்சை" ஒரு முழு நீளத் திரைப்படமே. 
என்பதே என் இதயம் சொல்லுகின்ற நிஜம்.

பார்த்தபோது என்னைப் பாதித்த படம், இன்று சில நாட்கள் கடந்தும் கண்ணுக்குள் வசிக்கிறது என்கின்ற உண்மை, ஒளிக்கக் கூடாத உண்மை. என்று நான் உணர்வதால், அனைத்துக் கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். இயக்குனர் தம்பி பிறேம் கதிர் உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

"சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகமாய் குடும்பங்களுக்குள் தான் நடக்கிறது" இது உலக கருத்துக் கணிப்பு. இதனால் பெரும்பாலும் அவை மூடிமறைக்கப் படுகிறது. இந்த கருத்தை செல்வது ஒரு துணிவுதான். அதே நேரத்தில் அந்த பாத்திரத்தில் (எங்களின் சமூகத்தில் ) ஒரு பெண்ணை நடிக்க வைப்பதும் மிகவும் கடினம் தான். இந்த விடயங்களில் இயக்குனர் ஒரு வீரியம் உள்ள விதையின் பலன் என்றே நான் பார்க்கிறேன்.. 
இதற்காக தம்பி என்றாலும் தலைவணங்குகிறேன்..

ஈழத்து சினிமா சிகரம் தேடத் தொடங்கி விட்டது. அது வளர்வதுக்கான உரம் எங்கள் படைப்பாளிகளின் வேர்வை உப்பில் இருந்து தயாராகி விட்டது என்பதை நாங்கள் இனி நம்பலாம். என்பதை புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் நடாத்திய நாவலர் விருதுக்கான விருந்தில் உணர்ந்தேன்.

என் இதயம் நிறைந்த பாராட்டுகள் "இஞ்சை" படைப்பாளிகள் அனைவருக்கும். இவர்களை பாராட்ட மறந்தால், மறுத்தால், மறைத்தால். நான் பாதிமனிதன்....

ஆனாலும் பொதுவாய் எங்களின் கலைஞர்கள் ஒன்றை உணர வேண்டும் 
"சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாமல் தவித்து நின்று பார். தாய்மொழியின் அருமை புரியும். வெளிநாட்டில் இருந்து பார். தாய்நாட்டின் அருமை புரியும், அதேபோல் உன்னை வளர்த்த தாயை உதைவதும், வந்த வழியை மறுப்பதும். உன்னை நீயே நிர்வாணப் படுத்தும் இழிய செயல. ( இது உங்களுக்கு அல்ல புரிந்தவர்கள் புரிந்தது கொள்ள)
நன்றி....
26/10/2017.
தம்பிராஜா ஜஸ்ரின்.

படத்தைப் பார்ததில் இருந்து என் இதயத்தின் சுவர்களில் இரத்தத்தை பசையாக்கி ஒட்டிக் கொண்டுவிட்டது "வேடம்" சொன்ன கரு.
அந்த குறும்படத்தின் முடிவு. பெரிய, பெரிய மின்சார அலைகளை என் மூளைக்குள் இறக்கி விட்டது. 
இந்த தவிர்க்க முடியாத நிலையில்தான், நான் முடிவுகளை, ஒரு அறிவிப்பாளனாய் அறிவிக்க தயாரானேன். 
"சிறந்த கதை" " சிறந்த இயக்குனர்" இந்த விருதுகளை அடுத்து, 8வது " நாவலர் விருது" எந்த குறும்படத்துக்கு? என்னும் முடிவை அறிக்க வேண்டும்! ( என் மனதுக்குள் மல்லிகையின் தேனில் குளித்து விட்டு நடந்து வரும் தென்றல் போல்) இருந்த என் மனம் பாறைபோல் இறுகத் தொடங்குகிறது காரணம் (முடிவுகளை முன் கூட்டியே அறிந்து கொண்டு அறிவிக்கும் பழக்கம் இல்லாததால்) இருந்தாலும் இந்தத் தடவை என் விரதத்தை முறிந்துக் கொண்டு முடிவை அறிகிறேன். கரணம் கதையின் கரு.. 
எனவே நடுவர்கள் மட்டும் அல்லாமல் மக்களும் அதே தீர்ப்பை வழங்கினார்கள் என்பதை நிருபிக்க என் அறிவிப்பில் பல முயற்சிகளை செய்கிறேன் கடைசியாக " வெற்றி பெறப்போகும் படத்தின் இயக்குனரை நீங்கள் தோழில் தூக்கி வர முடியுமா? அவர் தூக்க கூடியவரா" என்கிறேன்.. அப்போதும் சபையில் உள்ளவர்கள் " வேடம்" என்றும் "அமல்" என்றும் குரல் எழுப்புகிறார்கள். தம்பியின் பிரசவவலியின் பின்னரான சுகத்தை இந்த வேளையில் நான் அடைகிறேன்.. "அவன் செதுக்கியது ஒரு கல்லில் சிலை அல்ல, எங்களின் கல்லாமையில் ஒரு உளியின் மருத்துவம் என்பதை உணர்ந்தேன். வாழ்த்துக்கள் " வேடம்" அணியாத கலைஞர்களே.. எங்கள் தலைவன் பிரபாகரன் காட்டியது போல் துணிவை தூய்மையுடன் காப்போம்....
நன்றி ... 
என்று என் அன்புக்கும், மதிப்புக்குரிய "புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்" உங்களுக்கு இந்த தருணத்தில் மீண்டும் என் இதயம் நிறைந்த நன்றி இவ்வாறு அழகிய, ஆழமான தருணங்களை எனக்கு வழங்குகிறமைக்கு மீண்டும் சந்திப்போம் நன்றி வணக்கம்...

Aucun texte alternatif disponible.
L’image contient peut-être : texte
Aucun texte alternatif disponible.
 
 

https://www.facebook.com/justin.thambirajah.5?hc_ref=ARSeWTRJYBiwqaTCUU2P_Do1mKU0jyIJ5mjxZJpTy4_W8dbybTTfFdN0V8Zdz2l9mLc&fref=nf

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

 கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.....  இந்த ஒன்றியம் நிறைய நல்ல பங்களிப்புகள் செய்கிறது.இதற்காக அரும்பாடுபடும் நிர்வாகத்துக்கும் நன்றிகள்.....!

குறூப் படத்தில் அதன் உறுப்பினர்கள் பலரும் ஆண் /பெண் இரு பாலரும் தனித்தனியாக ஒரே மாதிரி ஆடைகள் அணிந்து இருப்பது சிறப்பு.....!   tw_blush:

மேலும் படங்கள் இருந்தால் இணைக்கலாமே....! tw_blush:

நன்றியண்ணா

அது  ஒன்றிய  உறுப்பினர்கள்.

ஊரில் மக்கள் சேவையிலிருக்கும்  ஒருவரை  விழாவுக்கு  வரவழைத்து

அங்குள்ள  நிலமை

அவர்களின் தேவை  கருதி  பேச்சுவார்த்தை  நடாத்துவதுண்டு

அந்தவகையில்  இந்தமுறை ஊரிலே பல வேலைத்திட்டங்களை  செய்து  வரும்

கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்  விந்தன் கனகரத்தினம் அவர்கள்  வந்திருக்கிறார்

பேச்சுவார்த்தை  நடந்தவண்ணமுள்ளது

நல்லது  நடக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் குறும்பட விழாவில் விருதுகளை வென்ற கலைஞர்கள் படைப்பாளிகள் !

 

பிரான்ஸ் புங்குடுதீவு ஒன்றியத்தினால் 8வது ஆண்டாக நடாத்தப்பட்ட நாவலர் குறும்பட விழாவில் 13 கலைஞர்கள் படைப்பாளிகள் விருதுகளை வென்றுள்ளனர். தவிர முதன் மூன்று குறும்படங்களும் விருதுகளையும் பணமுடிச்சினையும் வென்றுள்ளது.

இப்போட்டியில் 25க்கும் மேற்பட்ட குறும்படங்கள் புலம்பெயர் தேசங்களிலில் இருந்தும் இலங்கையில் இருந்தும் பங்கெடுத்திருந்தன.

முதன்மை நடுவராக தமிழக திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பங்கெடுத்திருக்க, துணை நடுவர்களாக நோர்வேஜிய தேசிய தொலைக்காட்சியில் தயாரிப்பாளராக இருக்கின்ற இராஜன் செல்லையா, படைப்பாளியும் ஊடகவியலாளருமாகிய சுதன்ராஜ் ஆகியோர் பங்காற்றியிருந்தனர்.

பிரான்ஸ் குறும்பட விழாவில் விருதுகளை வென்ற கலைஞர்கள் படைப்பாளிகள் !

பங்கெடுத்திருந்த மொத்த குறும்படங்களில் இருந்து நடுவர்களினால் அகம் புறம்(நோர்வே), ரணம்(இலங்கை), கீறல்(பிரான்ஸ்), ஆலவாயான்(பிரான்ஸ்),உயிருள்ள கனவே(பிரித்தானியா),வேடம்(பிரான்ஸ்),எஸ்.ஓ.எஸ்(இலங்கை), இஞ்சை(பிரித்தானியா), சிறகிழந்தாள்(பிரான்ஸ்) ஆகிய 9 குறும்படங்களும் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகி இருந்தன.

முதன் மூன்று படங்கள் தர வரிசையில் சிறந்த குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதும் பணமுடிச்சும் வழங்கப்பட்டிருந்ததொடு, 13 துணை விருதுகளும் பணமுடிச்சும் வழங்கப்பட்டுள்ளன.
இதன் விபரங்கள் :

பிரான்ஸ் குறும்பட விழாவில் விருதுகளை வென்ற கலைஞர்கள் படைப்பாளிகள் !

சிறந்த நடிகர் : ஆர்.கே.டினோ (உயிருள்ள கனவே)
சிறந்த நடிகை : மயீனா சியானி (இஞ்சை)
சிறந்த கதை : அமல் (வேடம்)
சிறந்த திரைக்கதை : ஜீ.எ.ஜிலான் (உயிருள்ள கனவே)
சிறந்த குழந்தை நட்சத்திரம் : ஜஸ்மினா(சிறகிழந்தாள்)
சிறந்த துணை நடிகர் : கோணேஸ் (ஆலவாயான்)
சிறந்த ஒலியமைப்பாளர் : பிரியன் தம்பிராஜா (ரணம்)
சிறந்த கலை இயக்குனர் : செல்வா (சிறகிழந்தாள்)
சிறந்த காட்சிப்படிமங்கள் : பிரசன்னா அந்தோனி (எஸ்.ஓ.எஸ்)
சிறந்த ஒளிப்பதிவாளர் : அன்ரன் முகேஸ் (உயிருள்ள கனவே)
சிறந்த படத்தொகுப்பாளர் : பிரசன்னா அந்தோனி (எஸ்.ஓ.எஸ்)
சிறந்த இசையமைப்பாளர் : ஈஸ்வர்குமார் (வேடம்)
சிறந்த இயக்குனர் : அமல் (வேடம்)

பிரான்ஸ் குறும்பட விழாவில் விருதுகளை வென்ற கலைஞர்கள் படைப்பாளிகள் !

இதேவேளை இத்திரைவிழாவில் வேடம், ரணம், உயிருள்ள கனவே ஆகிய குறும்படங்கள் தரவரிசையில் சிறந்த குறும்படங்களாக விருதுகளை வென்றிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

 

https://news.ibctamil.com/ta/cinema/naavalar-short-film

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கும், படங்களின் இணைப்புக்கும் நன்றி விசுகு.....!

யு ஆர் வெறி ஸ்மார்ட்  யா,ஐ லைக் இட் ....! tw_blush: 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

தகவல்களுக்கும், படங்களின் இணைப்புக்கும் நன்றி விசுகு.....!

யு ஆர் வெறி ஸ்மார்ட்  யா,ஐ லைக் இட் ....! tw_blush: 

அந்த கறுத்த கோட் சூட் போட்டிருக்கிற ஆளா அண்ணtw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அந்த கறுத்த கோட் சூட் போட்டிருக்கிற ஆளா அண்ணtw_blush:

எல்லோருமே கருப்பு கோட் சூட் தான் போட்டிருக்கிறார்கள், நீங்கள் யாரைக் குறிப்பிடுகின்றிர்கள்.....!

இப்பெரும் விழாவை : 

முன்னின்று நடத்தியவர்

முன்னாலே இருப்பவர் 

ஒன்றியத்துக்கே காப்பரணாய் 

காப்புடன் வாழ்ந்திடுவார்.....!  tw_blush:

இதுக்கு மேல கேட்டால் அழுதுடுவன்.....!

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

எல்லோருமே கருப்பு கோட் சூட் தான் போட்டிருக்கிறார்கள், நீங்கள் யாரைக் குறிப்பிடுகின்றிர்கள்.....!

இப்பெரும் விழாவை : 

முன்னின்று நடத்தியவர்

முன்னாலே இருப்பவர் 

ஒன்றியத்துக்கே காப்பரணாய் 

காப்புடன் வாழ்ந்திடுவார்.....!  tw_blush:

இதுக்கு மேல கேட்டால் அழுதுடுவன்.....!

 

சரிரெண்டு பேரும் ஒரே நாடுதானே வாழ்த்துக்களையும் ஆளை கேட்டதாகவும் சொல்லி விடுங்கள் என்ன சரியோ tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனிக்காட்டு ராஜா said:

சரிரெண்டு பேரும் ஒரே நாடுதானே வாழ்த்துக்களையும் ஆளை கேட்டதாகவும் சொல்லி விடுங்கள் என்ன சரியோ tw_blush:

பக்கத்துலதான் நிக்கிறார்.நீங்களே சொல்றது..... , அங்கன போனால் பாரத்தில ஒரு டீ வாங்கித் தருவார், அதுக்கும் ஆப்பு வைக்கிற பிளான் போலக்  கிடக்கு......!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, suvy said:

எல்லோருமே கருப்பு கோட் சூட் தான் போட்டிருக்கிறார்கள், நீங்கள் யாரைக் குறிப்பிடுகின்றிர்கள்.....!

இப்பெரும் விழாவை : 

முன்னின்று நடத்தியவர்

முன்னாலே இருப்பவர் 

ஒன்றியத்துக்கே காப்பரணாய் 

காப்புடன் வாழ்ந்திடுவார்.....!  tw_blush:

இதுக்கு மேல கேட்டால் அழுதுடுவன்.....!

என்ன  செய்வதண்ணா?

நாம  ஒதுங்கினால்  எல்லாம் படுத்து  விடுகிறது

மீண்டும்  மீண்டும்  பொறுப்புக்களை சுமக்கவேண்டும்

அல்லது எல்லாம் வீணாகிவிடும் நிலை

யாழிலும்  உதவிக்கோரிக்கை  வைத்து 

தாயகத்துக்கு  ஏதாவது  செய்து  எத்தனை  நாளாச்சு

யாராவது  தொடங்கினால் உறவுகள்  வருவார்கள்  தருவார்கள்

காத்திருப்பதைவிட  நானே தொடங்கலாம் என்றிருக்கின்றேன்

ஆனால்  நேரம்.....???

ஆனால்  இந்த  வருடம்  ஏதாவது  செய்வோம்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

"ரணம்"
சுட்டெரிக்கும் சூரியனுக்கு எதிராய் தரையில் இருந்து தீப்பந்தம் ஏந்தும் போராட்டம் அல்ல.
சூரியனில் நின்றுகொண்டு சூரியனுக்கே தீவைக்கும் போராட்டம்.
உங்கள் துணிச்சலைப் பார்த்து முதலில் தலைவணங்குகிறோம்.. வாழ்த்துக்கள்...
= = = = = = = = = = = = = = = = = = = = = = =
கடுகுக்குள் கடலைப் புகுத்திய கடும் முயற்சி "ரணம்"

இரண்டு நிமிடங்களில், எங்களின் இதயங்களை தன் பக்கம் இடம் மாற்ற இவள் எங்கே கற்றாள் பயிற்சி! என வியக்கவைத்த முயற்சி "ரணம்"

எங்களின் ஒட்டுமொத்த வலிகளையம் கூட்டியள்ளி ஒற்றைக் கூடைக்குள் போட்டு எதிரியிடம் நீட்டி நீதி கேட்ட பெரும் முயற்சி "ரணம்"

எறியும் கல் வீரியமான கல்லாய் இருந்தால், எதிரிக் கடலும் கலங்கும் என்பதை எமக்கெல்லாம் உணர்த்திய முயற்சி "ரணம்"

பார்த்தேன்,வியந்தேன், பாராட்டுகிறேன் 
படக்குழுவினர்களையும், அதன் இயக்குனரையும்....

"நான் ஒரு பெண் என்பதால் உள்ளத்துக்குள் எரியும் தீயையும், விழிகளில் வந்து விழும் தீப்பொறிகளையும், உதட்டுச் சாயம் பூசி மறைத்தும். விழிமடல் மூடி அழுதும். கடந்து போவேன் என்று நினைத்தாயோ?"

"உன் இனத்தின் சாயம் வெளுக்கும் வரை என் இனத்தின் காயம் காயும் வரை
உன் முகமூடி கிழிப்பேன், அந்த மகிழ்ச்சியில் களிப்புற்று மட்டும் கிடப்பேன் என்று நினைக்காதே. விழிப்புற்று நடக்க என் இனத்தை அழைப்பேன் என் படைப்பால்"

என்று கூறும் படைப்புக்களை வழங்கும் என் சகோதரி Shalini Charls அவர்களுக்கை(இயக்குனர் "ரணம்" குறும்படம்) மீண்டும் வாழ்த்துக்கள் கூறி..

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் நடாத்திய 8வது நாவலர் விருதுக்கான குறும்படப் போட்டியில் "ரணம்" இரண்டாம் இடத்தை வென்றது. என்னும் செய்தியை பகிர்ந்து கொண்டு இப்போது விடைபெறுகிறேன் .
(மீண்டும் திரையிடுவார்கள் என்பதனால் படங்களின் கதைகளை இங்கே பதிவிடவில்லை) 
நன்றி.
28/10/2017
அன்புடன்.. தம்பிராஜா ஜஸ்ரின்.

L’image contient peut-être : texte
L’image contient peut-être : 2 personnes
L’image contient peut-être : texte
 
  • கருத்துக்கள உறவுகள்

வேடம் 
காலத்தின் தேவைகளையும் 
ஞாலத்தின் உண்மைகளையும் உரக்க சொல்லவும் 
உண்மைகளை மறைத்து நிற்கும் போலிகளை 
சுட்டு விரல் காட்டி நிற்கிறது -அச்சம் தாண்டிய தேவை-

L’image contient peut-être : 5 personnes, texte
 
  • கருத்துக்கள உறவுகள்

எங்கும் இணைய வழியாக இந்த படங்களை பார்க்க முடியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Maruthankerny said:

எங்கும் இணைய வழியாக இந்த படங்களை பார்க்க முடியுமா ?

அவர்கள்  வெளியிடும் போது மட்டுமே

எமக்கு அதற்கான அனுமதி  கிடையாது

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

அவர்கள்  வெளியிடும் போது மட்டுமே

எமக்கு அதற்கான அனுமதி  கிடையாது

நான் நினைத்தேன் 
வெளிவந்து விட்டது என்று

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Maruthankerny said:

நான் நினைத்தேன் 
வெளிவந்து விட்டது என்று

நாவலர் விருதின் விதி முறைப்படி

நாவலர் விருதுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருக்கக்கூடாது

(நாவலர் விருதுக்கு வந்த 29 படங்களில் 6 படங்கள் இந்த விதியை  மீறியதால் தெரிவுக்கு வரமுடியாது போனது) 

அதன் பின்னர் அவர்களுக்கே  அந்த உரிமை

உதாரணம் எச்சம்

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

வேடம்
சரியான படம்.
போலி புலம்பெயர் முதளைகளின் முதுகில்
ஏறி சவாரி செய்து இருக்கிறார் இயக்குனர்
அமலன் அவர்கள். 
சண்டையிட்டாய் ஏன் சாகவில்லை என்று
கேட்டுக்கொண்டிருக்கிறது உலகம் என்பதை
மிகவும் ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.
கேலிகள் கிண்டல்கள் போராடியவர்களுக்கு
நாம் கொடுத்த பரிசு யாருக்காக போராடினார்கள் என்ற கேள்வியை கேட்க மறந்து விட்டீர்களே! என்பதை ஆதங்கத்துடன்
போட்டு உடைத்து இருக்கிறார்.
படத்தை பார்ததில் இருந்து 
குளிர் 
இடைவெளியை நிரப்ப அவ்வப்போது மழை
மனதிற்குள் இரு நிலைகளையும் ரசித்து
நகரமுடியாத ஒரு அந்தரம் கிடந்து புரள்கிறது.
சுய விமர்சனம்
இன்றைய காலத்தின் தேவை
அது எம் இனத்தின் நலனில் எவ்வளவு
அக்கறை காண்பிக்கிறது என்பதை
கொண்டே அம்பிற்கு சொந்தக்கார்களை
கண்டு கொள்ளலாம்.
ஈழ அரசியல் இளைஞர்கள் கைகளில் போய்
சேரும் நாள் வரவேண்டும் முதியவர்களுக்கு
ஓய்வூதியம் வழங்கிடவேண்டும்.
மீண்டும் நண்பன் அமலன் அவர்கட்கும்
வேடம் குறும்படக் குழுவினருக்கும்
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி...

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

செல்வராகவனுடைய பேச்சு வெறும் பேச்சு என்று தாண்டிப் போக முடியாது.  ஒரு செய்தியைக்கூட ஒதுக்கி விட முடியாதபடி ஈழத்தவர்களுக்கான, கலைஞர்களுக்கான காத்திரமான செய்திகள்.....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.