Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரும்­பான்மை இன மக்கள் தொடர்ந்தும் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வின் பக்­கமே உள்­ளனர்....கூட்­ட­மைப்பு புரிந்­து­கொள்­ள­ வேண்டும் என்­கிறார் கோத்தா

Featured Replies

பெரும்­பான்மை இன மக்கள் தொடர்ந்தும் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வின் பக்­கமே உள்­ளனர்

01-d1eda872e0414f2d7615509571207bb3bd94d818.jpg

 

கூட்­ட­மைப்பு புரிந்­து­கொள்­ள­ வேண்டும் என்­கிறார் கோத்தா
(எம்.எம்.மின்ஹாஜ்)

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான பணி­களை அர­சாங்கம் உடன் நிறுத்த வேண்டும். ஒற்­றை­யாட்­சியை பாது­காப்­ப­தாக அர­சாங்கம் கூறினால் காணி அதி­காரம், ஆளுநர் அதி­காரம், சட்­ட­வாக்க அதி­கா­ரத்தின் ஊடாக ஒற்­றை­யாட்­சியை உறு­திப்­ப­டுத்த வேண்டும் என முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தபாய ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

எனது எலிய அமைப்பு இன­வாத அமை ப்பு அல்ல. நல்­லி­ணக்கம் என்ற பெயரை பயன்­ப­டுத்தி புதிய அர­சி­ய­ல­மைப்­பினை கொண்டு வந்து நாட்டை பிள­வு­ப­டுத்த வேண்டாம். மேலும் வடக்கு மாகாண சபை தமிழ் மக்­களின் உண்மை பிரச்­சி­னைக்கு முக்­கி­யத்­துவம் அளிப்­பது கிடை­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

எலிய அமைப்பின் பொது­கூட்டம் நேற்று கண்டி ஒக்ரே ஹோட்­டலில் நடந்­தது. அங்கு கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை கொண்டு வரு­வ­தற்கு எதிர்ப்பு தெரி­விப்­ப­தற்­கா­கவே எலிய அமைப்­பினை உரு­வாக்­கினோம். இந்த அமைப்பு இன­வாத அமைப்பு அல்ல. அர­சி­யலமைப்பு தொடர்பில் மக்­களை தெளி­வு­ப­டுத்­து­வதே எமது பிர­தான காரி­ய­மாகும். இந்த அமைப்பில் இன­வா­திகள் இல்லை. பயங்­க­ர­வாதம் இருக்கும் போது யுத்­தத்­தினால் புலி­களை அழிக்க முடி­யாது. பேச்­சு­வார்த்தை மூலமே பிரச்­சி­னையை தீர்க்க முடியும் என்று கூறி செயற்­பட்ட அதே தரப்­பி­னர்தான் தற்­போது புதிய அர­சி­ய­ல­மை­ப்பை உரு­வாக்க முன்­னிலை வகித்து செயற்­ப­டு­கின்­றனர். புலி­க­ளுக்­காக சர்­வ­தேச நாடு­க­ளுக்கு பல்­வேறு தக­வல்­களை வழங்­கிய புலம்­பெயர் அமைப்­பினர் தானே அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிக்க வேண்டும் என்­பதில் முன்­னி­லையில் உள்­ளனர். இவர்­களின் நோக்கம் என்ன? நாட்டை பிள­வு­ப­டுத்­து­வ­தாகும்.

இதன்­கா­ர­ண­மாகவே இதன் உண்மைத் தன்மையை தெளி­வுப­டுத்­து­வ­தற்­காக எலிய அமைப்­பினை தோற்­று­வித்தேன். இந்த நாட்டில் வாழும் மூவின மக்­க­ளுக்கு இந்த நாட்டில் கெள­ர­வ­மான பிர­ஜை­யாக வாழும் உரிமை உள்­ளது. அதற்கு சிங்­கள மக்கள் ஒரு­போதும் தடை­யாக இருக்­க­மாட்­டார்கள் எதிர்க்­கவும் மாட்­டார்கள். அவ்­வாறு எதிர்த் ததும் இல்லை.

தமிழ் மக்­களை பொறுத்­த­வ­ரையில் வடக்கு, கிழக்கிற்கு அப்பால் பெரும்­பான்­மை­யினர் தெற்­கில்தான் வாழ்­கின்­றனர். எனினும் அவர்கள் மிகவும் சந்­தோ­ஷ­மாக வாழ்­கின்­றனர். 1983 ஆம் ஆண்டு கல­வரம் ஏற்­பட்­டது. அதன்­போது ஏற்­பட்ட அவ­லங்­களை நான் ஏற்­றுக்­கொள்­கின்றேன். இந்த கல­வ­ரத்­திற்கு 13 இரா­ணுவ வீரர்­களின் கொலை கார­ண­மா­னது.

எனினும் அப்­போது முல்­லைத்­தீவில் ஆயி ரக்கணக்கில் இரா­ணுவ வீரர்கள் கொலை செய்­யப்­பட்ட போது எமது மக்கள் அவ்­வாறு செயற்­ப­ட­வில்லை. அத்­துடன் இந்த பகு­தி­களில் வாழும் தமிழ், முஸ்­லிம்கள் எந்த பிரச்­சி­னையும் இல்­லாமல் கல்வி பயில்­வ­தற்கும் பல்­க­லை­க்க­ழகம் சென்று மருத்­து வர், சட்­ட­த்த­ர­ணி­யாக செயற்­ப­டு­வ­தற்கும் சிங்கள மக்­க­ளினால் இடை­யூறு உள்­ளதா? நான் எட்டு வருடங்கள் பாது­காப்பு செய­லா­ள­ராக இருந்தேன். எனக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­ப­ட்ட வழக்­கொன்றின் போது எனது எதிர் தரப்பு சட்­ட­த்த­ர­ணி­யாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ரனே வாத­மிட்டார். எனவே இவ்­வா­றான தொழிலை செய்­வ­தற்கு அவ­ருக்கு உரிமை உள்­ளது. அவர்­க­ளுக்கு அந்த சுதந்­தி­ரத்தை நாம் வழங்­கி­யுள்ளோம். அத்­துடன் 30 வரு­ட­கால யுத்­தத்­தினால் வடக்கில் இருந்து வந்த பலர் பம்­ப­ல­ப்பிட்டி, வெள்­ள­வத்தை ஆகிய பகு­தி­களில் வந்து குடி­யே­றினர். இதன்­போது சிங்­கள மக்கள் எதிர்த்­த­னரா?

எனவே நாட்டில் மூவின மக்­களும் ஒற்­று­மை­யாக இருந்து வாழ முடியும். நான் கூறி­யவை அதற்கு சிறந்த எடுத்துக்காட்­டாகும். அத்­துடன் தற்­போது விடு­தலைப் புலி­களும் இல்லை. ஆகவே நல்­லி­ணக்­கத்தை சிறப்­பான முறையில் ஏற்­ப­டுத்த முடியும். மூவின மக்­களும் ஒற்­று­மை­யாக வாழக்கூடிய சூழல் இருக்கும் போது ஏன் புதிய அர­சி­ய­ல­மைப்பினைக் கொண்டுவர துடிக்­கின்­றீர்கள்?

எனினும் வடக்கு, கிழக்கில் வாழும் மக்­க­ளுக்கு பிரச்­சினை உள்­ளது என்­ப­தனை நான் ஒப்­புக்­கொள்­கின்றேன். அந்த பிரச்­சினை வேறு. அங்­குள்ள மக்கள் யுத்­த­த்தினால் மிகவும் துயரம் கொண்­டனர். யுத்தம் கார­ண­மாக அபி­வி­ருத்தி ஏற்­பட முடி­யாமல் போனது. எனினும் யுத்தம் நிறை­வ­டைந்த பின்னர் நாம் வடக்கு பகு­திக்கு அதிக நிதி ஒதுக்­கீ­டுகள் செய்து அபி­வி­ருத்­தியை துரி­தப்­ப­டுத்­தினோம். மின்வசதி, வீதி நிர்­மாணம், ரயில்வே போக்­கு­வ­ரத்து வச­தி­களை வழங்­கினோம். அத­னையும் விட ஜன­நா­ய­கத்தை வழங்­கினோம். எனினும் இன­வா­தத்தை கக்கும் தமிழ் அர­சி­யல்­வா­திகள் இதனை பற்றி பேசு­வது கிடை­யாது.

யுத்­தத்தின் பின்னர் வடக்கு பகு­தியில் ஆயுத புழக்கம் இருப்­ப­தனை தெரிந்­தி­ருந்தும் அப்­ப­கு­தியில் உள்­ள­வர்­க­ளிடம் இருந்து ஆயு­தங்­களை மீள­ப்பெற்று வடக்கு மாகாண சபை தேர்­தலை நடத்­தினோம். இந்த தேர்­தலை நடத்த வேண்டாம் என பல தரப்­பினர் கோரிய போதும் நாம் தேர்­தலை நடத்­தினோம். அத்­துடன் யுத்­தத்தின் போது சுவீக­ரித்த காணிகள் அனைத்­தையும் நாம் மக்­க­ளுக்கு வழங்­கினோம். அது­மாத்­தி­ர­மின்றி அந்த பகு­தியின் அபி­வி­ருத்­திக்­காக தனியார் நிறு­வ­னங்­க­ளிடம் தொழிற்­சா­லை­களை ஆரம்­பிக்­கு­மாறு கோரினோம். எனினும் எவரும் முன்­வ­ர­வில்லை. என்­றாலும் ஒரிரு நிறு­வ­னங்­களை எம்மால் ஆரம்­பிக்க முடிந்­தது.

இந்­நி­லையில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் கருத்து தெரி­வித்­துள்ளார். இதன்­படி தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் இலங்கை ஒற்­றை­யாட்சி நாடு கிடை­யாது. இது பல்­லி­னத்­த­வர்­களின் நாடாகும் என கூறி­யுள்ளார்.

தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் பெரும்­பான்மை சிங்­கள பகு­தி­களில் அதி­க­ளவில் வாக்­கு­களை பெற்­றவர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­ ஆவார். அதற்கு அப்பால் ஏனைய பகு­தி­களில் சில பிரச்­சி­னைகள் கார­ண­மாக வாக்­குகள் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு சென்­றன. வடக்கு, கிழக்கு வாக்­குகள் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கே சென்­றன. எனவே பெரும்­பான்மை இன மக்கள் தொடர்ந்தும் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வின் பக்­கமே உள்­ளனர். அப்­ப­டி­யாயின் பெரும்­பான்மை மக்­களின் அனு­ம­தி­யு­டனேயே அர­சி­ய­ல­மைப்பு தீர்­மா­னிக்­கப்­படும். எனினும் இன­வா­தி­களின் கோரிக்­கை­களை நிறை­வேற்­றவே புதிய அர­சி­ய­ல­மைப்­பினை அர­சாங்கம் கொண்டு வரப்­போ­கின்­றது.

இந்­நி­லையில் புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக ஒற்­றை­யாட்­சியை நீக்கமாட்டோம் என கூறு­கின்­றனர். அப்­ப­டி­யாயின் ஒற்­றை­யாட்­சிக்­கு­ரிய பிர­தான அம்­சங்­களை நீக்கக் கூடாது. அதா­வது ஆளு­நரின் அதி­காரம் தொடர்ந்து ஆளு­நரின் வசமே இருக்­க­வேண்டும். மேலும் பாரா­ளு­மன்­றத்­திற்கே சட்­ட­வாக்க அதி­காரம் இருக்க வேண்டும்.மாகாண சபை­க­ளுக்கு அது சென்றால் அது நாடு ­பி­ள­வு­ப­டு­வ­தற்கு கார­ண­மா­கி­விடும். மேலும் காணி உரிமை தொடர்ந்து மத்­திய அர­சாங்­கத்­திடம் இருக்க வேண்டும். இந்த காணி அதி­கா­ரத்தை மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கினால் அதனை ஒற்­றை­யாட்­சி­யாக கருத முடி­யாது.

 ஒற்­றை­யாட்­சிக்­கு­ரிய பிர­தான அம்­சங்­க­ளான இந்த மூன்று கார­ணிகள் நீக்­கப்­ப­டாது என்­ப­தனை அர­சாங்கம் உறு­திப்­ப­டுத்த வேண்டும். மேற்­குறித்த பிர­தான விட­யங்களை மாற்றம் செய்யமாட் டோம் என அர­சாங்கம் உறு­தி­ய­ளிக்க வேண்டும்.

ஒற்­றை­யாட்சி வார்த்­தையில் மாத்­திரம் இருந் தால் போதாது. அர­சி­ய­ல­மைப்பு உட்­கட்­ட­ மைப்பில் தெளி­வாக கூற வேண்டும். நல்­லி­ணக்­கத்தின் பெய­ரினால் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான கார­ணங்­களை முன்­னெ­டுக்க வேண்டாம். நாட்டை பிள­வு­ப­டுத்தி நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடி­யாது. இதற்கு இந்­தியா -– பாகிஸ்தான் உதாா­ர­ண­மாகும்.

இந்த நாட்டில் வாழும் மக்கள் ஒற்­று­மை­யாக வாழ்­வ­தனை தடுப்­பது எமது நோக்கம் இல்லை. சிறு தரப்­பி­னரின் கோரிக்கை நிறை­வேற்­றப்­பட்டால் அது பார­தூ­ர­மாக அமையும்.

மொழிதான் தமிழ் மக்களின் பிரச்சினை என்றால் அதனை தீர்க்க முடியும். இதற்கு அரசியலமைப்பு பதில் கிடையாது. எனவே புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற் கான பணிகளை உடன்நிறுத்துங்கள். வட க்கு, கிழக்கு பகுதிகளில் பிரச்சினை இருந் தால் அபிவிருத்தியை தொடர்ந்து கொண்டு செல்லுங்கள். தனியார் முதலீடுகள் மூலம் பதில் வழங்குங்கள்.

வடக்கிலுள்ள மக்கள் பல துயரங்களை எதிர்நோக்குகின்றனர். எனினும் வடக்கு மாகாண சபை மக்களின் பொதுவான பிரச்சி னைகளை பற்றி பேசுவது கிடையாது. அரசி யலமைப்பின் மூலம் அதிகாரத்தை பெறுவது பற்றிதான் இவர்கள் பேசுகின்றனர். சாதா ரண மனிதர்களின் பிரச்சினைகளை பேசு வதில்லை. தமிழ் தலைவர்களின் தமது இய லாமையை எடுத்துக்காட்டுகின்றனர். நாம் பாரிய அபிவிருத்தியை செய்தோம். எனவே இந்த அரசாங்கமும் வடக்கிற்கான அபிவி ருத்திகளை தொடர வேண்டும் என்றார்.

http://epaper.virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களது திட்டமே, அரசியலமைப்பு மாத்தப்படாமல் இருக்கவேண்டும். ஏதோ வகையில் மீண்டும் ஜனைதிபதியாகி, wholesale வெள்ளை வான் மூலம் ஆளவேண்டும்.

அதுக்குத் தான் இந்த பிரசங்கம்...

தமிழ் மக்கள் தமிழீழமே குறைந்தபட்ச தீர்வு என்று விரும்புவதை பயங்கரவாதி கோத்தபாய விளங்கிக்கொள்ள வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
On 10/31/2017 at 2:35 AM, நவீனன் said:

இந்த அமைப்பு இன­வாத அமைப்பு அல்ல. அர­சி­யலமைப்பு தொடர்பில் மக்­களை தெளி­வு­ப­டுத்­து­வதே எமது பிர­தான காரி­ய­மாகும்

சொல்லுறது ஏதோ உண்மைதான். ஆனா செயல் அப்பிடி இல்லீங்களே.

 

On 10/31/2017 at 2:35 AM, நவீனன் said:

முல்­லைத்­தீவில் ஆயி ரக்கணக்கில் இரா­ணுவ வீரர்கள் கொலை செய்­யப்­பட்ட போது எமது மக்கள் அவ்­வாறு செயற்­ப­ட­வில்லை

செயற்பட்டிருந்தால்  அவர்கள்  வீரம் தெரிந்திருக்கும். அதனால பொத்திக்கொண்டு இருந்தினம்.

 

On 10/31/2017 at 2:35 AM, நவீனன் said:

பெரும்­பான்மை மக்­களின் அனு­ம­தி­யு­டனேயே அர­சி­ய­ல­மைப்பு தீர்­மா­னிக்­கப்­படும்.

பெரும்பான்மை அனுமதி இருந்தும் உங்களால் ஆட்ச்சியமைக்க முடியவில்லையே, அவர்கள் அனுமதி இல்லாமலேயே எங்களின் அனுமதியுடன் உங்களில் ஒருவர் ஆட்ச்சி அமைத்துள்ளார். நாங்கள் விதி மாதிரி எங்களுடன் விளையாடாதீர்கள். உங்கள் மதியையே மாற்றி வைப்போம்.

 

On 10/31/2017 at 2:35 AM, நவீனன் said:

எனக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­ப­ட்ட வழக்­கொன்றின் போது எனது எதிர் தரப்பு சட்­ட­த்த­ர­ணி­யாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ரனே வாத­மிட்டார்.

எங்கள் பெலயீனமே இங்கு தான் நிற்குது

 

On 10/31/2017 at 2:35 AM, நவீனன் said:

1983 ஆம் ஆண்டு கல­வரம் ஏற்­பட்­டது. அதன்­போது ஏற்­பட்ட அவ­லங்­களை நான் ஏற்­றுக்­கொள்­கின்றேன். இந்த கல­வ­ரத்­திற்கு 13 இரா­ணுவ வீரர்­களின் கொலை கார­ண­மா­னது.

 அதற்கு முதற் காலங்களில் ஏற்பட்ட  கலவரங்களுக்கு  என்ன காரணமோ 

 

On 10/31/2017 at 2:35 AM, நவீனன் said:

அத்­துடன் 30 வரு­ட­கால யுத்­தத்­தினால் வடக்கில் இருந்து வந்த பலர் பம்­ப­ல­ப்பிட்டி, வெள்­ள­வத்தை ஆகிய பகு­தி­களில் வந்து குடி­யே­றினர். இதன்­போது சிங்­கள மக்கள் எதிர்த்­த­னரா?

சும்மா அனிஞாயத்துக்கு புழுக்கூடாது. அனிஞாய விலையில் உங்கள் உதவாத காணிகளை வாங்கி திருத்தி இருக்கிறார்கள். உங்களிடம் இருந்து ஒன்றையும் பலவந்தமாக புடுங்கி குடியேறவுமில்லை, குடியேற்றவுமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.